‘அனைத்து கோவிட்-19 நோயாளிக்குமே ஆண்டிவைரல் தேவையில்லை. வரம்புக்குட்பட்ட புதிய மருந்துகள் டாக்டர்கள் அறிவுரைப்படி பயன்படுத்த வேண்டும்’

Update: 2020-06-30 00:30 GMT

மும்பை: நாடு முழுவதும் நாவல் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, சில நகரங்களும் மாநிலங்களின் சில பகுதிகளும் மீண்டும் ஊரடங்கு நிலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, ஏற்கனவே அதிக வழக்குகளை எதிர்கொண்டுள்ள சென்னை நகரம், இரண்டாவது ஊரடங்கிற்கு திரும்பியுள்ளது. சுகாதார மற்றும் மருத்துவ முறைகளில் சாத்தியமான நெருக்கடிக்களுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறது.

இருந்தாலும் நல்ல செய்தி என்னவென்றால், கோவிட் -19 சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளை சந்தைப்படுத்துவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, சிப்லா லிமிடெட் மற்றும் ஹெட்டெரோ டிரக்ஸ் ஆகியன, அவசரகால கட்டுபடுத்தப்பட்ட பயன்பாட்டிற்கான ஆன்டிவைரல் ரெமெடிசிவிர் மருந்துக்கான அங்கீகாரங்களைப் பெற்றுள்ளன. மும்பை நிறுவனமான க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ், ஆன்டிவைரல் ஃபவிபிராவிர் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஒப்புதல் பெற்றுள்ளது.

கோவிட்-19 உடன் போராடும் மருத்துவ நிபுணர்களின் கைகளில் இந்த மருந்துகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த மருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன? முன்பு அவை பற்றி நாம் அறிந்தவற்றிற்கும், அவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பதற்கும் மாறாக, இன்று நாம் அவை குறித்து என்ன அறிவோம்? கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, அந்த மருந்துகள் எவ்வாறு உதவக்கூடும்? புதுடெல்லியின் மேக்ஸ் ஹெல்த்கேர் உள்மருத்துவத்தின் இணை இயக்குநர் ரோம்ல் டிக்கூ-உடன் இதுபற்றி கலந்துரையாடுகிறோம்.

Full View

திருத்தப்பட்ட பகுதிகள்:

ரெம்டெசிவிர் மற்றும் ஃபவிபிராவிர் இப்போது - அல்லது விரைவில் - முறைப்படி உங்கள் கைகளில் வரப்போகிறது. இதன் பொருள் என்ன?

இப்போதைக்கு, கோவிட்-19 க்கு எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையும் நம்மிடம் இல்லை. நீங்கள் கூறியது போல், அமெரிக்கா போன்ற பிற நாடுகளைப் போலவே, இந்த மருந்துகள் அவசரகால பயன்பாட்டிற்கானது மட்டுமே.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் [டி.சி.ஜி.ஐ- DCGI] அலுவலகம் தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்கான ஃபவிபிராவிர் மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது உண்மையில் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட மருந்து - இது முன்பு பல ஆண்டுகளாக ஜப்பானில் இன்ஃப்ளூயன்சா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது, பின்னர் எபோலா வைரஸின் பரவல் மற்றும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது. இது புதிய மருந்து அல்ல. நிறைய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன; இந்தியா, இங்கிலாந்து, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் 30 க்கும் மேற்பட்ட சோதனைகள் நடந்து வருகின்றன. இப்போது நம்மிடம் அதுபற்றி போதிய தரவு இல்லை. நம்மிடம் தரவு இருந்தாலும் அது மிகக்குறைவானது; அவை, இந்த நாடுகளில் மேற்கொள்ளபப்ட்ட சிறிய ஆய்வுகளில் இருந்து கிடைத்தவை. இவை பெரும்பாலும் சீனா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பயன்படுத்தப்படுகிறது. இந்த தரவுகளை வைத்து நாம் உண்மையில் எதையும் செல்ல முடியாது; இப்போது நடக்கும் பெரிய அளவிலான, சீரற்ற கட்டுப்பாட்டு பரிசோதனைகளில் இருந்து நமக்கு கூடுதல் சான்றுகள் தேவைப்படுகிறது. ஆனால் இந்த சோதனைகளின் திட்டவட்டமான தரவையும் முடிவையும் பெறுவதற்கு சிறிது காலம் ஆகும். அப்போதுதான், இந்த மருந்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து நாம் தீவிரமாக பேச முடியும்.

எனினும், க்ளென்மார்க் பரிசோதனையின் இடைக்கால அறிக்கைகள் (அவை 3ம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் உள்ளன) ஊக்கம் தருவதாக தெரிகிறது. அதனால்தான், மருந்து விற்பனை மற்றும் உற்பத்திக்கு அவர்களுக்கு முன்னோக்கி வழி விடப்பட்டுள்ளது. மேலும், தற்போது வரை போதுமான ஆதாரங்களும் இல்லை.

இந்த மருந்தின் செயல்பாட்டு வழிமுறை, நகலெடுக்கும் நொதியானா ஆர்.என்.ஏ. பாலிமரேஸுக்கு எதிரானது. எனவே, இது நோயின் ஆரம்ப கட்டங்களில் கொடுக்கப்பட வேண்டும். அதேநேரம், இது அனைத்து கோவிட் 19 நேர்மறை நோயாளிகளுக்கும் பொருந்தாது. சிக்கலான நோயாளிகளுக்கு பொருந்தாது, ஏனென்றால் அவர்கள் நோயின் அந்தக் கட்டத்தில் இருக்கும்போது, அவர்களுக்கு ஏற்கனவே போதுமான வைரஸ் பிரதிபலிப்பு நடக்கிறது. அறிகுறியற்ற, லேசான இளம் நோயாளிகளுக்கு, சிகிச்சை தேவையில்லை. எனவே, நீங்கள் - லேசான மற்றும் மிதமான நோயாளியை உண்மையில் தேர்வு செய்ய வேண்டும். இது செயல்திறன் மிக்கது மற்றும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டால், அது தீவிரமான முன்னேற்றத்தைத் தடுக்க உதவும் என்ற பொருளில் இது ஒரு சாத்தியமான மருந்தாக இருக்கலாம்; மேலும் அவை உண்மையில் சிக்கலானதாகிவிடாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படக்கூடாது.

மறுபுறம் மீண்டும் ரெமெடிசிவிர் பற்றி பேசலாம் என்றால், அது குறித்து போதுமான தரவு நம்மிடம் இல்லை. ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம், தற்போது நடக்கும் ஒழுங்கற்ற, மையப்படுத்தப்பட்ட பல விசாரணையின் இடைக்கால அறிக்கை வெளிவந்தது. இது முற்றிலும் நாக்-அவுட் மருந்தல்ல என்று அவர்கள் கூறினர், ஆனால் இது ஒரு மருந்தற்ற மாத்திரையுடன் ஒப்பிடும்போது மீட்பு நேரத்தை 15 நாட்களில் இருந்து 11 நாட்களாக குறைக்கிறது. எனினும், இறப்பின் மீதான தாக்கம் அதிகம் இல்லை: இது [இறப்பு விகிதம்] 11% [மருந்தற்ற மாத்திரை உள்ளவர்களுக்கு] மற்றும் 8% [ரெமெடிசிவர் உள்ளவர்களுக்கு] இருந்தது, இது புள்ளிவிவர அடிப்படையில் குறிப்பிடத்தக்கதாக இல்லை.

எனவே, ரெமெடிவிர் பற்றிய தரவுகளும் நமக்கு தேவை. நிறைய சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன - இந்தியாவில் கூட, சோதனைகள் நடக்கிறது; ஒத்திருக்கும் பல சோதனை நடக்கிறது. ஆனால் நம்மிடம் எந்த மருந்தும் இல்லை, அதேநேரம், இந்த சோதனைகளின் முடிவு வரை நாம் காத்திருக்க முடியாது; உயிர்களை காப்பாற்றியாக வேண்டும்; எனவே, அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கு இதுவே காரணம் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் இந்த நோயாளிகளுக்கு நிறைய விஷயங்கள் பயன்படுத்தப்படுகின்றன: நாங்கள் ரெமெடிவிர், டோசிலிசுமாப் பயன்படுத்துகிறோம், சுறுசுறுப்பான பிளாஸ்மா, ஸ்டெராய்டுகளை பயன்படுத்துகிறோம். எனவே, இதில் இருந்து வெளியேற அவர்களுக்கு என்ன உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியாது. நம்மிடம் உள்ள வரையறுக்கப்பட்ட அனுபவம் மற்றும் மேற்கொள்ளப்படும் வரையறுக்கப்பட்ட ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இது அனைத்தும் ஒரு நிகழ்வு ஆகும்.ஃபவிபிராவிருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ரெம்டெசிவிர் மருந்து நரம்பு வழியே செலுத்தப்படுகிறது. மருத்துவமனை அமைப்பில் இது கொடுக்கப்பட வேண்டும், விலை அதிகம். இது சிக்கலான நிகழ்வுகளுக்கு, மிதமான கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, [நோயாளிகளுக்கு] ஆக்ஸிஜன் தேவை உள்ளவர்கள் மற்றும் ஐ.சி.யுவில் இருப்பவர்களுக்கு தேவை. ஃபவிபிராவிர் என்பது லேசானது முதல் மிதமான வழக்குகள் வரை, நிர்வகிப்பது எளிது. இது மாத்திரைகள் வடிவில் உள்ளது, ஒப்பீட்டளவில் மலிவானது மற்றும் நல்ல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. எனவே, இரண்டு மருந்துகளையும் கையாள வெவ்வேறு வகையான நோயாளிகளை கொண்டிருக்க வேண்டும். ஆனால் செயலின் வழிமுறை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஒரே மாதிரியாக இருக்கிறது; [அவை] ஆர்.என்.ஏ பலிமரேஸில் வேலை செய்கின்றன மற்றும் வைரஸ் நகலெடுத்து பெருகுவதை தடுக்கின்றன. ஆனால் உண்மையில் நீங்கள் சரியான நோயாளியை தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறீர்கள், தொற்று லேசான மற்றும் மிதமான நிலையில், உங்களது சிகிச்சை வெற்றி பெறுகிறது என்று நம்புகிறேன்; அதில் ஃபவிபிராவிர் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இந்த கட்டத்தில் அது என்ன வேலை செய்கிறது என்பதை கூறுங்கள்; அவை விளம்பரப்படுத்தப்பட்டபடி வேலை செய்தால், உங்கள் முயற்சிகளுக்கு அது எவ்வாறு பங்களிக்க முடியும்?

இப்போது, நம்மிடம் குறிப்பிட்ட நோயெதிர்ப்பு மருந்துகள் எதுவும் இல்லை. நாம் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்துகிறோம்; சைட்டோகைன் பயன்படுத்தும் நோயாளிகளில், சிக்கலான நோயாளிகளுக்கு நாம் டோசிலிசுமாப் பயன்படுத்துகிறோம், இது ஒரு வைரஸ் தடுப்பு மருந்து அல்ல. இது சைட்டோகைன் ஆனது அவர்களுக்கு கடும் சுவாசக்குழாய் நோய் அறிகுறி [ARDS], நுரையீரல் செயல்பாடு மற்றும் அனைத்து அழற்சி மாற்றங்களும் இருக்கிறது. அங்கு ஸ்டெராய்டுகள் மற்றும் டோசிலிசுமா பயன்படுத்தப்படுகிறது. நோயாளிகளுக்கு நோய்வாய்ப்படும்போது, காற்றோட்டம் தேவைப்படும் நிலையில், மிதமானது முதல் கடுமையான நிகழ்வுகளில் மிதமான பிளாஸ்மா சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

எனவே, இந்த நேரத்தில் நாம் பயன்படுத்த, குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு மருந்து எதுவும் இல்லை. எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்துகள் மட்டுமே நாங்கள் பயன்படுத்திய ஒரே வைரஸ் தடுப்பு மருந்து; ஆனால் உண்மையில் அது பலன் தந்ததா என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, அவ்வகையில், இவை இப்போது நமக்கு ஆயுதமாக உள்ள இரண்டு முக்கிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் ஆகும். அதன் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும். ஆனால் எத்தகைய வரையறுக்கப்பட்ட தரவுவும், அது நம்பிக்கைக்குரியதாக தெரிகிறது.

கடைசியாக நாம் பேசியபோது, தொற்று நிலவரம் சிறப்பாக கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இன்று பல மருத்துவமனைகள் மிதமிஞ்சிய நோயாளிகளை கொண்டுள்ளன; விஷயங்கள் முற்றிலும் வேறுபட்டு உள்ளன. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இது எப்படியும் எதிர்பார்க்கப்பட்டது. கடைசியாக நாம் பேசியபோது, ஊரடங்கில் இருந்தோம். எனவே அப்போது தொற்று வழங்குகள் குறைவாகவே இருந்தன. ஆனால் பொருளாதாரத்திற்காக ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன், அலுவலகங்களும், பொதுப் போக்குவரத்தும் தொடங்கி, எண்ணிக்கை உயர வேண்டிய கட்டாய்ம் ஏற்பட்டது. இதில், அதிகரிப்பு உள்ளது, குறிப்பாக ஜூன் முதல்.

ஆனால் நாம் இதை சமாளித்தாக வேண்டும், நமது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், படுக்கைகளை அதிகரிக்க வேண்டும்; பரிசோதனைகளை செய்ய வேண்டும். நாம் இப்போது எண்ணிக்கையை கணிக்க முடியாது; எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர்கள். அவை எப்படியும் அதிகரித்து செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாம் இப்போது உயிர்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

கோவிட்-19 நோயால் யாரும் இறக்கக்கூடாது; படுக்கை கிடைக்காததால் மக்கள் ஒரு மருத்துவமனையில் இருந்து இன்னொன்றுக்கு ஓடக்கூடாது. அது எங்களது கவனமாக இருக்கும். படுக்கைகள் கிடைக்கும் விஷயத்தில் அதிக வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அதிகமான படுக்கைகள் இருக்க வேண்டும், ஒவ்வொரு மருத்துவமனையிலும் யாராவது அவர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு ஹெல்ப் டெஸ்க் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்தால், படுக்கை இல்லை, [அல்லது] இது ஒரு கோவிட்டுக்கான குறிப்பிட்ட மருத்துவமனை அல்ல என்றால், நீங்கள் நகரமெங்கும் ஓட வேண்டும் என்று பொருளல்ல. உங்களை, குறிப்பிட்ட கோவிட் சிகிச்சைக்கு ஆம்புலன்சில் அனுப்புவது என, கையாள்வதற்கு சில வழிகள் இருக்க வேண்டும்.

மேலும் [ நமக்கு] ஐ.சி.யூ படுக்கைகள் மற்றும் மருத்துவமனை படுக்கைகளை கூடுதலாக்குவதன் மூலம் ஆக்ஸிஜன் படுக்கைகள் கிடைக்கின்றன; ஏனென்றால் இப்போது பழைய மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தப்படுகிறது. அவர்கள்தான் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள். இளையவர்கள் அந்த பாதிப்புக்கு உள்ளானாலும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; தேவையான சிகிச்சையை எடுக்க வேண்டும்; எங்களுக்கு எந்த குறிப்பிட்ட சிகிச்சையும் தேவையில்லை. எனவே, உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், படுக்கைகளை கூடுதலாக்குவது, வயதானவர்களையும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் காப்பாற்றுவது மற்றும் அதிக உயிர்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள்- முகக்கவசம் சரியாக அணியுங்கள், சமூக இடைவெளியை பராமரித்த மற்றும் கைகளை கழுவுதல் போன்ற - விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.இந்த விஷயங்களைப் பற்றி அவர்கள் குறிப்பாக இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதை சரியாகச் செய்யவில்லை.

. இந்த இரண்டு மருந்துகளை - நோயாளிகள் கேட்பார்களா? அல்லது மருத்துவர்கள் அவற்றை சொந்தமாக கையாள வாய்ப்புள்ளதா? அதற்கு ஒப்புதல் தேவைப்படுமா?

தடைசெய்யப்பட்ட அவசர பயன்பாட்டிற்கான மருந்தை பயன்படுத்த நிச்சயமாக நீங்கள் ஒப்புதல் பெற வேண்டும். நான் ஏற்கனவே சொன்னது போல், இந்த மருந்தை அனைவருக்கும் கொடுக்க முடியாது. இந்த மருந்தை தருவதற்கான அறிகுறி உள்ள நோயாளியை மட்டுமே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு, ஆக்ஸிஜன் தேவை அல்லது ஐ.சி.யுவில் உள்ளவர்களுக்கு ரெமெடிவிர் அதிகம்; மறுபுறம், ஃபவிபிராவிர் லேசான-மிதமான நிகழ்வுகளுக்கானது; அதன் முடிவு மருத்துவரிடம் உள்ளது. யாருக்கு எந்த வகையான சிகிச்சை தேவை என்பதை அவர்தான் தீர்மானிப்பார். அனைவருக்கும் நோயெதிர்ப்பு சிகிச்சை தேவையில்லை, எனவே இவ்விஷயத்தில் மருத்துவரின் பகுப்பாய்வோடு நாம் செல்ல வேண்டும்.

கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும் உங்கள் சமூகம் இந்த நோயை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது என்பதை நீங்கள் இப்போது உணர்கிறீர்களா, அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு நாம் இருந்த இடத்தில்தான் இப்போதும் இருக்கிறோமா?

தொற்று வழக்குகள் அதிகரித்துள்ளன. எனவே, நாங்கள் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை கையாண்டு வருகிறோம், படுக்கைகள், மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதால், அதை கையாளுகிறோம். முன்பு, மிகக்குறைந்த தனியார் மருத்துவமனைகள் [கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ] இருந்தன. இப்போது, அதிகமான மருத்துவமனைகள் உள்ளன. முன்பு குறைந்த எண்ணிக்கையிலான படுக்கைகள் இருந்தன, [இப்போது, நாங்கள்] படுக்கைகளையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே, நாங்கள் இப்போது வரை இதைக் கையாளுகிறோம்; ஆனால் ஒரே ஒரு பிரச்சினை [மேலும்] எண்ணிக்கை அதிகரித்து, மருத்துவமனை நிரம்பி வழியும் போது, அதை நம்மால் கையாள முடியுமா? நம்மிடம் போதுமான மனிதவளம் இருக்கிறதா? உள்கட்டமைப்பை நாம் மேலும் மேலும் அதிகரிக்க முடியுமா? அது ஒரு சவாலாக இருக்கும். இப்போது வரை, நாம் நிர்வகித்து வருகிறோம்; இது கடினமாக இருந்தாலும் நாங்கள் இதை கையாள்கிறோம். ஆனால் அடுத்த சில நாட்களில் அது எவ்வாறு வெளிப்படும் என்பதை காலம் தான் நமக்குத் தெரிவிக்கும்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Load more

Similar News