வளரிளம் பருவ சுகாதார வசதிகள், விழிப்புணர்வில் ஜார்க்கண்ட், ராஜஸ்தான் கிராமங்கள் தடுமாற்றம்: சமூக தணிக்கை

Update: 2019-12-02 00:30 GMT

புதுடில்லி: ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் தணிக்கை செய்யப்பட்ட 85 கிராமங்களில் ஏழு மட்டுமே, வளரிளம் பருவத்தினருக்கு உகந்த சுகாதார சேவைகளை கொண்டிருந்தன; 11 கிராமங்களில் எல்லா வளரிளம் பெண்களும் அணுகத்தக்க சுகாதார நாப்கின் வசதிகள் இருந்தன. பாதிக்கும் குறைவான (37) கிராமங்களின் அரசு பள்ளிகளில் சிறுமியருக்கு சுத்தமான, பயன்படுத்தக்கூடிய தனி கழிப்பறைகள் இருந்தன. ஐந்து கிராமங்களில் குழந்தை திருமணம் மற்றும் இளம்பருவ கர்ப்பத்தின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு இருந்ததாக, ஜூலை- செப்டம்பர் 2019 இல் நடத்தப்பட்ட சமூக தணிக்கைகளில் தெரிய வந்துள்ளன.

நவம்பர் 2017 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது போல், இந்தியா நிலையான மேம்பட்ட இலக்குகளை அடைவதற்கும், நாட்டின் வயதுவந்தோரின் சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதற்கும், உற்பத்தி திறனுள்ள தொழிலாளர் தொகுப்பை அதிகரிக்கவும், வளரிளம் வயது ஆரோக்கியத்தில் முதலீடும் அக்கறையும் காட்டுவது மிக முக்கியமானது.

ஜார்கண்டின் ஆறு மாவட்டங்களில் 63 கிராமங்களையும்; ராஜஸ்தானின் மூன்று மாவட்டங்களில் 22 கிராமங்களையும், 300 சிறுமியர் அடங்கிய குழு பார்வையிட்டது. குழந்தை திருமணம், பாலியல் ஆரோக்கியம், கல்வி, பாதுகாப்பு மற்றும் பருவ வயது சிறுமியரின் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ‘ஆப் மேரி பாரி’ என்ற பிரச்சாரம், 2019இன் முற்பகுதியில், இந்தியாவில் வளரிளம் பருவத்தினரின் பிரச்சினைகள் குறித்த சேவை வழங்கும் இலாப நோக்கற்ற அமைப்புகளின் குழுவான 10-19 அடோல்செண்ட்ஸ் கொலாபிரேடிவ் சார்பில் தொடங்கப்பட்டது.

மும்பையை சேர்ந்த தஸ்ரா தலைமையிலான குழு, 10-19 அடோல்செண்ட்ஸ் கொலாபிரேடிவ் உடன் இணைந்து, 3,296 கி.மீ தூரம் பயணித்து ஆரம்ப சுகாதார ஊழியர்கள், மருத்துவ அதிகாரிகள், அரசு சுகாதார அதிகாரிகள் மற்றும் சக பருவ வயது சிறுமியருடன் உரையாடியது. விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள இக்குழு உத்தரபிரதேசத்திற்கு சென்றது. ஆனால் அங்கு சமூக தணிக்கை நடத்தப்படவில்லை.

வளரிளம் பருவத்தினர் ஜார்கண்டின் மக்கள் தொகையில் 22.2%, ராஜஸ்தானில் 22.9% மற்றும் உ.பி.யில் 24.5% ஆக உள்ளனர்.இந்தியாவின் 25.3 கோடி இளம் பருவத்தினரில், இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் 28.5% (7.2 கோடி) பேர் உள்ளனர்.

குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பம்

கடந்த 2015-16இல், 20-24 வயதுடைய இந்தியப் பெண்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் 18 வயது அடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டனர்; மேலும் 15-19 வயதுடைய வளரிளம் பருவ பெண்களில் 8% ஏற்கனவே தாயாகவோ அல்லது கர்ப்பமாக இருந்தனர் என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 2015-16 (என்.எஃப்.எச்.எஸ் -4) தரவு தெரிவிக்கிறது.

இளம்பருவ திருமணமானது இளம் வயது தாய்மை, குடும்ப மற்றும் பாலியல் அதிகம் நிகழ்வதற்கும் வழிவகுக்கிறது. இளம்வயது கர்ப்பங்கள் எக்லாம்ப்சியா (கர்ப்ப கால வலிப்பு நோய்), குறைந்த எடையுடன் குழந்தை பிரசவம், பிறந்த பின் குழந்தை இறப்பு மற்றும் பிறவி குறைபாடு போன்ற பாதகமான கர்ப்ப விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

இளம் வயது கர்ப்பிணிகள் பள்ளியை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது அவர்களது மற்றும் அவர்களின் குடும்ப எதிர்காலத்தை பாதிக்கிறது என்று, இந்தியா ஸ்பெண்ட் 2019 ஜனவரி 12 கட்டுரை தெரிவித்துள்ளது.

கடந்த 2010இல், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், நாட்டின் 200 மாவட்டங்களில் வளரிளம் சிறுமியரை மேம்படுத்தும் திட்டமான சாப்லாவை (SABLA) அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டமும் வளரிளம் பருவ திருமணத்தை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்த வேண்டும்.

ஆனாலும், இடைவெளிகள் உள்ளன.

கடந்த 2015-16இல், ஜார்கண்டில் 15-19 வயதுடைய தாய்மை அடைந்த அல்லது கர்ப்பமான வளரிளம் பெண்களின் விகிதம், நாட்டில் 5வது மிக உயர்ந்ததாக (12%) இருந்தது. ராஜஸ்தான் 18வது அதிகபட்சம் (6.3%) என்று என்.எஃப்.எச்.எஸ் -4 தரவு தெரிவிக்கிறது.

இதேபோல், ஜார்கண்ட் 20-24 வயதுடைய பெண்களில் 3வது மிக உயர்ந்த விகிதத்தில் (38%) 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டார், ராஜஸ்தான் 4வது மிக உயர்ந்த (36%), தரவு காட்டுகிறது. இதேபோல், ஜார்கண்டில் 20-24 வயதுடைய பெண்களில் 3வது மிக உயர்ந்த விகிதம் (38%) இருந்தது, அவர்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டனர். இதில் ராஜஸ்தான் 4வது அதிகபட்சம் (36%) கொண்டிருந்ததாக தரவு காட்டுகிறது.

எனினும், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் தணிக்கை செய்யப்பட்ட 85 கிராமங்களில் 80இல் குழந்தைத் திருமண பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இல்லை என்று, ஜூலை மற்றும் செப்டம்பர் 2019 க்கு இடையில் நடத்தப்பட்ட சமூக தணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு, ஆதரவு

ஜார்க்கண்டின் சிம்டேகா மாவட்டம் பராஸ்லோய் கிராமத்தை சேர்ந்த 16 வயதான சுவாதி குமாரி, 12ஆம் வகுப்பு மாணவி. அவரது தோழி நைனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 14 வயதில் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டார். நைனா, பள்ளிப்படிப்பை துறந்து குடிகார கணவருடன் வாழ்க்கையை தொடங்கினார். அவருக்கு விரும்பம் இல்லாத போதும் மாமியாரின் கட்டாயத்தால் 15 வயதுக்குள் குழந்தைக்கு தாயானார். "இளம் வயதிலேயே இவ்வளவு நெருக்கடிகளை சந்தித்ததால், மனரீதியாக அவர் பலவீனம் அடைந்தார்" என்று சுவாதி குமாரி கூறினார். 2018 ஆம் ஆண்டில், நைனா தற்கொலை செய்து கொண்டார்.

நைனாவின் அனுபவம் சுவாதி குமாரிக்கு பாடமானது. அவர் இப்போது ஆப் மேரி பாரி பிரச்சாரக்குழுவில் உள்ளார். அணியில் உள்ள மற்றவர்களுடன் (‘சாம்பியன்கள்’ என்று குறிப்பிடப்படுகிறார்) தெரு நாடகங்கள் மூலம் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வை பரப்புகிறார்.

சமூக தணிக்கை நடந்த ஜார்க்கண்டின் 63 கிராமங்களில் 47இல்உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தை திருமணம், இளம்வயது கர்ப்பம், அது தொடர்பான ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்றன.

மூன்று கிராமங்களில் மட்டுமே, இந்த தகவல்கள் முன்கூட்டியே பகிரப்பட்டு வழக்கமான பிரச்சாரங்கள் மூலம் விளக்கப்பட்டன. 10 கிராமங்களில், விழிப்புணர்வை நிகழ்ச்சி நடக்காததை குழு கண்டறிந்தது.

ராஜஸ்தானிலும் இதே நிலைமையே இருந்தது.

தணிக்கை செய்யப்பட்ட 22 கிராமங்களில் இரண்டில் மட்டுமே குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பம் அதன் அபாயங்கள் குறித்து அங்கன்வாடி மையங்களால் வழக்கமான விழிப்புணவு பிரச்சாரங்களை மேற்கொண்டன.

"நான் 7-8 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டேன். தொடர்ந்து என் பெற்றோருடன் வாழ்கிறேன்" என்று ராஜஸ்தானின் உதய்பூர் கெரா கிராமத்தில் வசிக்கும் 19 வயது சீமா ஜாட் கூறினார். "எனது குடும்பத்தினர் ஆதரவால் எனது படிப்பைத் தொடர்கிறேன். ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது" என்றார்.

சீமா ஜாட்டின் நண்பர் மாயாவும் இதே வயதில் திருமணம் செய்து கொண்டார். "அவளுடைய‘ கவுனா’ முடியும்முன்பே [மணமகனின் குடும்பத்துடன் வாழ மணமகள் அனுப்பப்படுகிறார்], 12ஆம் வகுப்பில், ஒரு பெண்ணை அவர் பெற்றெடுத்தார்,” என்று சீமா ஜாட் கூறினார். "அவளது படிப்பு நிறுத்தப்பட்டது; கணவனும் அவளை ஆதரிக்கவில்லை" என்றார்.

வளரிளம் பருவத்திற்கு உகந்த சுகாதார சேவைகள்

ஜார்க்கண்டில் தணிக்கை செய்யப்பட்ட 63 கிராமங்களில் 19 கிராமங்களில் மட்டுமே, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டம் மற்றும் சிறார் நீதி (குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாத்தல்) சட்டம் போன்றவை குறித்து வளரிளம் பெண்களுக்கு மருத்துவமனைகள் அல்லது சமூக சுகாதார மையங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு இருந்தன. 41 கிராமங்களில், இந்த சட்டங்கள் குறித்து வளரிளம் பருவத்தினர் இடையே எவ்வித விழிப்புணர்வோ, தகவல்களை பரப்பும் குழுவோ காணவில்லை.

மேலும், 63 கிராமங்களில் 37இல் வளரிளம் பருவத்தினருக்கான பாலியல் நோய் பரவல் மற்றும் எய்ட்ஸ் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டன. ஐந்து கிராமங்களில் மட்டுமே அவர்களுக்கு பாலியல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன.

ராஜஸ்தானில் தணிக்கை செய்யப்பட்ட 22 கிராமங்களில் இரண்டில் தான், பள்ளி ஆசிரியர்கள் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் பற்றிய தகவல்கள் குறித்த வழக்கமான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். ஆறு கிராமங்களில், இந்த தகவல் மாணவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது; ஏழு கிராமங்களில் இது தகவலாக மட்டுமே காட்டப்பட்டுள்ளது. ஐந்து கிராமங்களில் அதுவும் கூட இல்லை.

பாலியல் வன்முறை வழக்குகளில் குறை தீர்க்கும் தகவல்கள் குறித்த பிரச்சாரங்கள் எந்த கிராமங்களிலும் இல்லை. 10 கிராமங்களில் மட்டுமே, இது வெறும் தகவலாக காட்டப்பட்டது.

சுகாதார நாப்கின், தனி கழிப்பறைகள்

ஜார்க்கண்டில் தணிக்கை செய்யப்பட்ட 63 கிராமங்களில் ஒன்பது இடங்களில் மட்டுமே அனைத்து வளரிளம் பெண்களும் அணுகக்கூடிய வகையில் சுகாதார நிலையங்களில் தரமான சுகாதார நாப்கின்கள் கிடைத்தன. 17 கிராமங்களில், அனைவருக்கும் சானிட்டரி நாப்கின் என்ற அணுகல் இல்லை. இரண்டு கிராமங்களில் சானிட்டரி நாப்கின் தரமற்று இருந்தன; 35 கிராமங்களில் அதுவும் கூட கிடைக்கவில்லை.

அங்கன்வாடி மையங்கள் அல்லது சுகாதார மையங்களில் சானிடரி நாப்கின் கிடைக்கவில்லை என்று, ஜார்க்கண்டின் தியோகர் மாவட்டம் குஞ்சோரா கிராமத்தை சேர்ந்த குமாரி பிரியங்கா பாண்டே, 21, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். இருப்பினும், அவரது கிராமத்தில் உள்ள பள்ளியில் மாணவியருக்கு இது வழங்கப்படுகிறது. "நாப்கின் வாங்க நாங்கள் கிராமத்திற்கு வெளியே செல்ல வேண்டும்," என்று பாண்டே கூறினார்.

ஆப் மேரி பாரி குழு சாம்பியனான சுவாதி குமாரியும் கூட, ஜார்க்கண்டின் சிம்டேகா மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தில் சுகாதார நாப்கின் வாங்க வெளியே சென்று ஒவ்வொரு பாக்கெட்டிற்கும் ரூ.35- 40 செலவிட வேண்டும். "எங்கள் ஊர் பள்ளியிலும் நாப்கின் வழங்கப்படுவதில்லை; அங்கன்வாடி மையத்தில் அது கிடைக்கவில்லை" என்று, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் அங்கன்வாடி மையங்களில் சானிட்டரி நாப்கின் சீராக வழங்கப்படவில்லை. ஆறு கிராமங்களில், அங்கன்வாடி மையங்களில் நாப்கின் கிடைக்கும் என்பதை மக்கள் அறிந்திருக்கவில்லை. ஐந்து கிராமங்களில், மக்கள் இதை அறிந்திருந்தனர்; ஆனால் சானிட்டரி நாப்கின் கோரவில்லை. ஏழு கிராமங்களில் மட்டுமே மக்கள் அங்கன்வாடிகளில் நாப்கின் கோரினர்.

பெரும்பாலும், மாதவிடாய் தொடங்கியவுடன், வளரிளம் பெண்கள் பள்ளியில் இருந்து வெளியேறுகிறார்கள் அல்லது குறைவாக செல்கிறார்கள் - ஏனெனில் சுகாதாரமான கழிப்பறைகள், தண்ணீர் இல்லாதது மற்றும் பள்ளிகளில் நாப்கின் அழிப்பு முறை இருப்பதில்லை. கிராமப்புற இந்தியாவில், 23% பெண்கள் பள்ளியை தொடராமல் போனதற்கு முக்கிய காரணமாக மாதவிடாயை குறிப்பிட்டதாக, இந்தியா ஸ்பெண்ட் ஜூன் 2017 கட்டுரை தெரிவித்தது.

ஜார்க்கண்டில் தணிக்கை செய்யப்பட்ட 63 கிராமங்களில் 25 இல், அரசு பள்ளிகளில் சிறுமியருக்கு தனித்தனி கழிப்பறைகள் சுத்தமாக, பாதுகாப்பாக மற்றும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தன. 10 கிராமங்களில், அனைத்து சிறுமியருக்கும் தனி கழிப்பறைகள் கிடைக்கவில்லை. 13 கிராமங்களில் சிறுமியருக்கான தனி கழிப்பறைகள் சுத்தமாகவோ பயன்படுத்தக்கூடியதாகவோ இல்லை. 15 கிராமங்களில், சிறுமிகளுக்கு தனி கழிப்பறைகள் இல்லை.

ராஜஸ்தானில், தணிக்கை செய்யப்பட்ட 22 கிராமங்களில் 12 இல் உள்ள அரசு பள்ளிகளில் சிறுமியருக்கு தனி கழிப்பறைகள் இருந்தன. இரண்டு கிராமங்களில், தனி கழிப்பறைகள் சுத்தமாகவோ பயன்படுத்தக்கூடியதாகவோ இல்லை.

Solutions suggested by the team under the ‘Ab Meri Baari’ campaign:

  • There should a proper health centre for adolescents in every block.
  • Health centres should educate adolescent girls about family planning, sexually-transmitted diseases, contraceptive methods and medicines.
  • A separate, safe and secure toilet should be provided to girls in government schools. All adolescent girls and pregnant girls should get nutritious food.
  • Sanitary pads should be available in anganwadi centres.
  • Along with awareness about issues such as child marriage, laws related to sexual abuse should also be openly discussed with adolescent girls--including in schools. Adolescent girls need to have an important role in the village-level child protection committees.

(திவாரி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Load more

Similar News