ஆகஸ்ட் வெள்ளம் ஏற்படுத்திய சுகாதார நெருக்கடிகளில் இருந்து கேரளா தற்காத்து கொண்டது எப்படி?
திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா (கேரளா): அது, 2018 ஆக. 15, பிற்பகல் 2.30 மணி. தேசிய சுகாதார இயக்கத்தின் பதினம்திட்டா மாவட்ட திட்ட மேலாளருக்கு உள்ளூர் நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வருகிறது. மழை வெள்ளம், ரன்னி நகரில் உள்ள மருத்துவமனை வளாகத்தினுள் புகுந்துவிட்டதாகவும், வேகமாக அதிகரிக்கும் வெள்ளத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து என்றும் தகவல் வருகிறது.
25 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனையில், மூன்று கர்ப்பிணிகளும் வேலையாட்களாக உள்ளனர். கடந்த 2018 ஆகஸ்ட் மாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மோசமான மாவட்டங்களில் பதினம்திட்டாவும் ஒன்று. இங்கு 5 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் இடம் பெயர்ந்ததாக மதிப்பிடப்பட்டது.
பதினம்திட்டா பொது மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக, கர்ப்பிணிகள் 3 பேரும் உடனடியாக சூசன் வெளியேற்றினார். அதிர்ஷ்டவசமாக எங்களால் ஆம்புலன்ஸ் வரவழைக்க முடிந்தது என்று கூரும் சூசன், தண்ணீர் மேலும் அதிகரித்தால் நோயாளிகளை பத்திரமாக வெளியேற்றுவதற்கான திட்டம் வகுத்தோம் என்றார்.
கேரளா மாநில சுகாதார அதிகாரிகள் துரிதமான யோசனை மற்றும் செயல்பாடுகளால் தடுக்கப்பட்ட பல மருத்துவ நெருக்கடிகளில் ஒன்றாக, இது இருந்தது. பிரளயம் போன்ற இத்தகைய வெள்ளம், அச்சத்தை ஏற்படுத்துகிறது. மற்றும் காலரா, லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்), ஹெபடைடிஸ் ஏ, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவக் காரணமாகிறது. உதாரணத்துக்கு 1998 ஜூலையில் மேற்கு வங்கம் மால்தா மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது காலரா நோய் தொற்று பரவி, தொடர்ந்து வயிற்றுப்போக்கு காரணமாக, 276 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், கேரள மாநிலத்தில் மற்றொரு பெரிய சுகாதார நெருக்கடி என்னவெனில், இம்மாநிலம் இந்தியாவில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் நோயாளிகளை அதிகம் (5 மில்லியன் பேர்) கொண்டிருப்பதாகும். நாள்பட்ட நோயாளிகள் பலரும் வீடுகளை இழந்து தங்களது தினசரி மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். தொற்று அல்லாத நோய்கள் (NCDs) கேரளாவில் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கிறது. கேரளாவில் ஆண்டுக்கு 1,00,000 நீரிழிவு சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுவதாகவும்,கடந்த 5 ஆண்டுகளில் நீரிழிவு சிகிச்சை மையங்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், 2018, ஏப். 29-ல் மாத்ருபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
கேரளாவில் வலுவான மேம்பட்ட சுகாதார கட்டமைப்பு உள்ளது. இங்கு பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம், 1,00,000 பேரில் 61 ஆக (இந்தியாவின் சராசரி 167) உள்ளது. பிரசவத்தின் போது குழந்தை இறப்பு விகிதம், 1000ம் பேரில் 6 ஆக இருக்கிறது. ஆனால், அண்மை வெள்ளம் சுகாதாரத்துறை கட்டமைப்பில் ரூ.325 கோடிக்கு சேதத்தை ஏற்படுத்தி முடக்கியது.
அப்படியென்றால் அரசு எவ்வாறு சமாளித்தது? மாநில மற்றும் மாவட்ட அளவிலான நோய்கள் மற்றும் மருத்துவ பிரச்சனைகள் திட்டம் வகுத்து கண்காணிப்பு சிகிச்சை அளித்தால், இறப்பு விகிதம் குறைந்து சுகாதார நெருக்கடியை கட்டுப்படுத்த உதவியது என்பது எங்கள் விசாரணையில் தெரிய வந்தது. அரசு சிவப்பு நாடா முறையை விலக்கி கொண்டதால், இப்பணியில் தன்னார்கள் பெரும்பங்காற்றினர்.
“இயற்கை சீற்றத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது” என்று நினைவுகூறும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் சதானந்தன், நிபா வைரஸ் பரவியபோது செயல்பட்ட அனுபவம் உதவியது என்றார். ”நிபா வைரஸ் பற்றி தெரியாத நிலையில் அதை கட்டுப்படுத்துவது பெரும் மன அழுத்தத்தை தந்தது. இங்கே எங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” என்றார்.
கேரளா முழுவதும் மனிதவள மற்றும் மருந்துகள் வழங்குதல், தளவாடங்களை ஒருங்கிணைப்பதற்கு தலைநகரான திருவனந்தபுரத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அரசு அமைத்தது. தொடர்புள்ள நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு, முகாம்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. நாள்பட்ட நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் கிடைப்பதை சுகாதார தன்னார்வலர் குழு உறுதிப்படுத்தி கண்காணித்து வந்தது.
Source: Directorate of Health Services (here, here, and here)
Note: Data for 2018 is as of September 2018
வெள்ளச்சேதத்திற்கு பின் கேரளா எவ்வாறு தன்னை கட்டமைத்துக் கொண்டது என்ற 3 பகுதிகளை கொண்ட தொடரின் இந்த நிறைவுப்பகுதியில் (முதல் பகுதியை இங்கேயும், இரண்டாவது பகுதியை இங்கேயும் நீங்கள் படிக்கலாம்) இம்மாநிலத்தின் 14 மாவட்டங்களில் 8-ல் கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனினும் சுகாதார சிக்கல்களில் இருந்து அம்மாநிலம் தன்னை எப்படி தற்காத்துக் கொண்டது என்பதை, இது விவரிக்கிறது.
இந்தியா ஸ்பெண்ட் குழு பயணம் செய்த 4 மாவட்டங்களில், பதினம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்கள் ”மிகவும் பாதிக்கப்பட்டவை” என, மறுகட்டமைப்பு பணியை எளிதாக மேற்கொள்ள டி.எச்.எஸ். வகைபடுத்தியுள்ளது.
தினசரி கண்காணிப்பு பணி எப்படி நடக்கிறது.
அது, செப்டம்பர் 10, 2018. திருவனந்தபுரத்தில் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகத்தில் மதிய உணவுக்கு பிந்தைய சிறிது நேரம். நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் (ஹர்த்தால்) அலுவலகம் வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால், அதன் முதல் தளத்தில், பெரும்பாலும் டாக்டர்களை கொண்ட 60 பேர் கொண்ட குழு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வெள்ளத்துக்கு பிந்தைய நிலையை, 2018, ஆக. 18ல் ஏற்படுத்தப்பட்ட 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை கண்காணித்து வந்தது.
A review meeting including the nodal officers, minister of health, and senior officials in the health department at the DHS office in Thiruvananthapuram.
கட்டுப்பாட்டு அறையில் பொது சுகாதாரம், மருந்துகள் மற்றும் உபகரணங்கள், சேத மதிப்பீடு, மனிதவள மேலாண்மை, ஆவணமாக்கல், ஊடக கண்காணிப்பு உள்ளிட்ட பலவற்றைக் கொண்ட 10 குழுக்களுக்கு டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
"அன்றைய தினம் காலை சந்தித்து பணிகளை திட்டமிடும் குழுக்கள், மாலையில் செய்த பணிகளை மறுபரிசீலனை செய்கின்றன" என்று சுகாதார சேவைகள் இயக்குனர் சரிதா ஆர்.எல். தெரிவித்தார். ”மாலையில் நடைபெறும் மதிப்பீடு கூட்டங்களில் பொதுவாக சுகாதார அமைச்சர், சுகாதாரச் செயலாளர்கள் பங்கேற்று, அறிக்கைகளை மதிப்பீடு செய்தது” என்றார் அவர்.
ஆரம்ப கட்ட பணிகளின் போது மருந்துகள், மருத்துவ உதவிகள் மற்றும் சுத்தமான நீர் உள்ளிட்டவை முகாம்களையும், பாதிக்கப்பட்ட வீடுகளையும் தேவைக்கேற்ப அனுப்பிவைக்கப்பட்டன. மருந்துகள் மற்றும் உபகரண மேலாண்மை மற்றும் மனிதவளக் குழுக்கள் இதை உறுதிசெய்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து டாக்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உரிய, தேவையான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். முகாம்களுக்கான மருந்து மாத்திரைகளின் இருப்பு சரிபார்க்கப்பட்டு தேவைப்படும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டதும், தினமும் மாலை 4 மணிக்கு மின்னஞ்சல் வழியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவலும் தெரிவிக்கப்பட்டது.
Rajeev Sadanandan, additional chief secretary, health and family welfare, said that with Nipah the government was handling a virus it did not know. But with the flood, they knew what to expect despite the scale.
எர்ணாகுளத்தில், ஒரு அழைப்பு மையம் உள்பட ஐந்து மேசைகளுடன் ஒரு கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட சுகாதார சேவைகள் அமைத்தது. வெள்ளத்தால் பாதிக்கப்படாத இந்த தகவல் மையம் ஆரம்பத்தில் கொல்லத்தில் இருந்து இயக்கப்பட்டது). “அழைப்புகள் அதன் அவசரத்தேவைக்கேற்ப வண்ணங்களாக பிரிக்கப்பட்டு, அப்பகுதிகளுக்கு தன்னார்வலர்கள் டாக்டர்கள் அனுப்பப்பட்டனர்” என்று, கட்டுப்பாட்டு அறை முதன்மை அதிகாரி ஆஷா விஜயன் தெரிவித்தார்.
2018, ஆக. 22ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் கட்டுப்பாட்டு அறைக்கு 4,266 அழைப்புகள் வந்தன; அதில் 77% வெற்றிகரமாக பணி செய்து முடிக்கப்பட்டது, இந்தியா ஸ்பெண்ட்டிற்கு கிடைத்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இக்குழுவிற்கு வாட்ஸ் அப் வாயிலாக, 3,411 தகவல்கள் கிடைக்கப்பெற்றன. ”இது ஒரு வாட்ஸ் அப் நிர்வகித்த பேரிடர்” என்று சதானந்தன் தெரிவித்தார். இப்பணியில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான அதிகாரிகள் பங்கெடுத்தனர். வாட்ஸ் அப் குழுக்கள் மக்களால் நிரம்பி வழிந்த போது வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டவர்களுக்கு அவர்கள் உதவினர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் தமிழகத்தை சேர்ந்த டாக்டர்கள் குழு, 2015 சென்னை வெள்ளத்தின் போது பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தொழில் நுட்ப உதவிகளை வழங்கி உதவினர்.
மஞ்சள் காமாலை பரவும் அபாயம்
மஞ்சள் காமாலை அல்லது தண்ணீரால் பரவக்கூடிய பிற நோய்களை தடுப்பது தான் சுகாதார இயக்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. இடம் பெயர்ந்த மக்களில் பலர் தொற்று கிருமி பரவிய குடிநீர் பருகும் வாய்ப்பு இருந்ததே இதற்கு காரணம்.
வெள்ள காலத்தின் போது தண்ணீரில் மஞ்சள் காமாலை பரவுவதற்காக தொற்று (பாக்டீரியா) கலந்து சிறுநீரில் வெளியேறுகிறது; அது மஞ்சள் காமாலைக்கு வழி வகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் கடும் வெள்ளத்தின் போது பிரேசில் (1983, 1988 மற்றும் 1996), நிகரகுவா (1995), க்ரனோடர் பகுதி, ரஷ்யா கூட்டமைப்பு (1997), சாண்டா பே, யு.எஸ்.ஏ. (1998), ஒடிசா, இந்தியா (1999) மற்றும் தாய்லாந்து (2000) ஆகிய நாடுகளில் மஞ்சள் காமாலை பரவியது.
கடந்த 2018 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் இடையே கேரளாவில் 1084 பேருக்கு மஞ்சள் காமாலை அறிகுறி தென்பட்டது; அதில் 39 பேர் உயிரிழந்தனர். அதேபோல், டெங்குவுடன் அனுமதிக்கப்பட்ட 568 பேரில் இருவர் உயிரிழந்ததாக டி.ஹெச்.எஸ். இணையதள புள்ளி விவரங்கள் தெரிவித்தன. ஆனால், இந்நெருக்கடி கட்டுக்குள் இருந்தது.
எர்ணாகுளத்தில் ஏறத்தாழ 2.3 மில்லியன் டாக்ஸிசைக்லைன் மாத்திரைகள் 100 மில்லி கிராம் அளவில் -- மஞ்சள் காமாலை தடுக்கும் வகையில் -- வெள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களால் வழங்கப்பட்டது என்பதை, உலக சுகாதார அமைப்பின் இந்தியாவுக்கான மருத்துவ ஆலோசகர் ஷிபு பாலகிருஷ்ணன் நினைவு கூர்ந்தார். மஞ்சள் காமாலைக்கான இந்த தடுப்பூசி திட்டம் பெரிய சாதனையாக இருக்கும் என்றார் அவர்.
மருத்துவர்கள், மருத்துவர் அல்லாத பணியாளர்கள் என 10 குழுக்கள் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரன்னி, சித்தார், சீத்தாதொடு உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். “நாங்கள் காலையில் முகாம்களுக்கு சென்று பார்வையிடுவோம்; மதியம் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டதை உறுதி செய்வோம்” என்று, ரன்னி தாலுகா மருத்துவ இளநிலை ஆய்வாளர் அனில்குமார் தெரிவித்தார். "சுகாதார தொடர்பான புகார்களை அளிக்க எங்களால் அடையாளம் காணப்பட்ட சமூக உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம்" என்று அவர் கூறினார்.
தாலுகா மருத்துவமனைகளுக்கு வந்த நோயாளிகளுக்கு டாக்சிசீசிலின் மருந்து கொடுக்கப்பட்டன. அவர்கள் பகுதி தண்ணீரால் சூழப்பட்டிருந்தால், உடனே மாத்திரைகளை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டன. ”வீட்டை சுத்தம் செய்வதற்காக அங்கு சென்றவர்கள் பாதிக்கப்படுவார்களோ என்று நாங்கள் கவலை கொண்டோம். மாத்திரைகள் பரிந்துரைக்கும் வழிமுறைகளுக்கு நாங்கள் காத்திருக்கவில்லை” என்று ரன்னியை சேர்ந்த வைஷாக் வி.ஆர்.தெரிவித்தார்.
The health team in Ranni taluk hospital including Vaishakh VR and Anil Kumar, junior health inspector, who went to camps to ensure doxycycline tablets and other medical needs were available.
”ஆகஸ்ட் 21-ல் நான் எர்ணாகுளம் சென்றடைந்த போது, சவாலை சுகாதாரத்துறை நன்றாக கையாண்டு கொண்டிருந்தது. குறிப்பாக நீர் மற்றும் டாக்ஸிசைக்லைன் பரவலாக வழங்கப்பட்டது” என்று, உலக சுகாதார அமைப்பின் இந்தியாவுக்கான மருத்துவ ஆலோசகர் ஷிபு கூறினார்.
தன்னார்வலர்களை பயன்படுத்தியது எப்படி?
மஞ்சள் காமாலை நோய் பரவலை தடுப்பதில் தன்னார்வலர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. கேரள வறுமை ஒழிப்பு திட்ட உறுப்பினர்கள் ஜாஸ்மின் பால்பின், சஜிதா உள்ளிட்டோர், ஏற்கனவே முதல் பகுதியில் நாம் குறிப்பிட்டது போல் மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் முக்கிய பங்கு வகித்தனர். இருவரும், எர்ணாகுளத்தின் கோதுருத் பகுதியில், பேரிடருக்கு பிந்தைய நிகழ்வை கண்காணிக்கு ஸ்ரத்தா அமைப்பின் மாவட்ட அமைப்பிற்காக பணி புரிகின்றனர்.
இத்திட்டத்தில் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் --அதேபகுதியின் அருகாமையில் -- கண்காணிப்பதற்கும், மஞ்சள் காமாலை தடுப்பு மருந்து வழங்கவும், 40 வீடுகள் ஒதுக்கப்பட்டன. “நாங்கள் வீடுகள் தோறும் சென்று கிணற்று நீரில் குளோரின் மருந்து தூவப்பட்டதையும், எலிக்காய்ச்சல் குறித்த விவரங்களை தெரிவித்து, மஞ்சள் காமாலை தடுப்பு மருந்து இருப்பு, நுகர்வு குறித்தும் விசாரித்தோம்” என, பால்பின் தெரிவித்தார்.
அதே செயல்பாடுகளை மீண்டும் மேற்கொள்வதற்காக இக்குழுகள், மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் வீடுகளுக்கு சென்றன. ”ஏதேனும் வீடுகளில் தொடர் காய்ச்சல் இருப்பின், அங்கு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டோம்” என, கோதுருது ஆரம்ப சுகாதார நிலைய மருத்து அலுவலகர் கே.எஸ். மஞ்சு தெரிவித்தார்.
The checklist created for health volunteers to ensure household-level measures and precautions were taken avoid a health epidemic.
சுகாதாரப்பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும், தொற்று நோய் பரவலை தவிர்க்கவும் சுகாதார தன்னார்வலர்கள் பட்டியல் தயாரித்து பணிகளை மேற்கொண்டனர்.
“ஆரம்ப கட்டத்தில் தன்னார்வலர்கள் கிடைப்பது கடினமாக இருந்தது; என்னை போல் பலரும் பாதிக்கப்பட்டதே காரணம்” என்ற கூறின ஆரம்ப சுகாதார நிலைய இளநிலை சுகாதார ஆய்வாளர் ரேத்தம்மா கூறினார். “ஆனால், ஒவ்வொரு வீட்டிற்கும் செல்ல ரூ.5 ஊக்கத்தொகை என்பது உதவிகரமாக இருந்தது” என்றார்.
ஆனால், தொற்று நோய்கள் மட்டுமே கேரளாவுக்கு சவாலானது அல்ல.
மருந்துகள், இன்சுலின், நீரிழிவு சிகிச்சையை உறுதி செய்தல்
வெள்ளத்தின் போது பதினம்திட்டா முகாமில் இருந்த நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதால் குளிரூட்டி இல்லாமல், வெப்பநிலை கட்டுப்பாடு கொண்ட இன்சுலீனை வைத்திருப்பதில் சிரமம் ஏற்பட்டது. முகாம்களில் தங்கியிருந்த சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வாய்வழி நீரிழிவு மருந்த மருத்துவ அலுவலர்கள் வழங்கினர். “நீரிழிவு கடுமையாக இருந்தவர்களுக்கு இம்முறை அவ்வளவு பலனை தராது என்றாலும், இதைத்தவிர மாற்று வழி அந்நேரத்தில் இல்லை” என்றார் சூசன்.
மின்தடையால் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்து வழங்கல் தடைபட்டு, அவர்கள் மீதான பராமரிப்பில் மற்றொரு சிக்கலை ஏற்படுத்தியது. ஆரம்ப சுகாதார நிலைய இளநிலை ஆய்வாளர் (JHI), ஆரம்ப சுகாதார நிலைய இளநிலை பொது ஆய்வாளர் (JPHI), ஆஷா (ASHA) பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், முகாம்களில் இருந்த நோயாளிகளை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டனர். இரு மருத்துவமனைகளில் 18 நீரிழிவு சிகிச்சை கருவிகளே இருந்த நிலையில், மூன்று ஷிப்ட் வீதம் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை நோயாளிகளுக்கு சிகிச்சை தரப்பட்டது. சுத்திகரிப்பு உபகரணங்களை கொண்டு நீரிழிவு நோயாளிகளுக்கு சுத்தமான தண்ணீர் வழங்கலை அதிகாரிகள் உறுதி செய்து கொண்டனர்.
மாநில சுகாதாரத்துறை அளித்த வழிகாட்டுதலின் அடிப்படையில் சிகிச்சை தடைபட்ட நோயாளிகளுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கியது. எர்ணாகுளத்தில், நோய்த்தடுப்பு பாதுகாப்பு செவிலியர்கள்,உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக வியாதி, நீரிழிவு போன்ற தொற்றாத நோய் உள்ளவர்களை அடையாளம் காண உதவினர்.
கையடக்க தொழில்நுட்பம்
ஆலப்புழாவின் குட்டநாடு பகுதி, மிக தாழ்வான பகுதியில் உள்ளது. தண்ணீரால் சூழப்பட்டுள்ள இப்பகுதியில், அதுதொடர்பான நோய் பாதிப்புகள் உள்ளன. “இதற்கு நாங்கள் மொபைல் போனில் “கோபோ” செயலியை (புள்ளி விவரம் சேகரிப்பு கருவி) பயன்படுத்தி, தொடர்புள்ள நோயாளி விவரங்களை பெற்றோம்” என்று வெலியநாடு வட்டார மருத்துவ அலுவலர் அனில்குமார் தெரிவித்தார். செயலி வரைபடக்கருவி கொண்டு நோயாளிகளின் இருப்பிடம் அறிந்து, வெள்ளத்துக்கு பிறகும் கண்காணித்தோம்” என்று அவர் கூறினார்.
அருகில் உள்ளவர்களுக்கான சுகாதாரப்பிரச்சனைகளை சுகாதார பணியாளருக்கு உடனே தெரிவிக்கும் வகையில் தன்னார்வலர்களை கொண்டு ஒரு வலுவான கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
எர்ணாகுளத்தில் கோபோ செயலியை கொண்டு தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் விவரங்களை மருத்துவ நிர்வாகம் பெற்றது. ஒருங்கிணைந்த நோயாளிகள் கண்காணிப்பு திட்டத்தின் பெரும்பாலான தகவல்கள் அரசு மருத்துவமனைகளில் இருந்தன.
மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இடையே ஒரு தற்காலிக ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டதாக கூறிய பாலகிருஷ்ணன், ”செயலியை பயன்படுத்தி, தனியார் மருத்துவமனைகளில் உள்ள மஞ்சள் காமாலை உள்ளிட்ட தொடர்புள்ள நோயாளிகளை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது” என்றார். சந்தேகத்திற்கிடமான எந்த நோயேனும் எவருக்கும் உள்ளதா என்பதை அறிய பதிவேடுகள், ஆவணங்களோடு சென்று, நோயாளிகள் கண்டறியப்பட்டால், அவசர சிகிச்சை எனில் உடனடியாக தெரிவிக்க, தனியார் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.