சில இடங்களில் கோவிட்-19 பரவல் அதிகமாக இருப்பது ஏன் என்று உண்மையில் நமக்கு தெரியுமா?
சென்னை:இந்தியாவில் கோவிட்-19 தொற்று பரவி 10 மாதங்களாகிவிட்ட நிலையில், சுமார் 90 லட்சம் பேருக்கு பாதிப்பு மற்றும் 130,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை அது ஏற்படுத்திய பிறகும் கூட, சார்ஸ்-கோவ்- 2 வைரஸ் யாரை பாதித்தது, அது எவ்வாறு பாதித்தது என்பது குறித்து இந்தியாவால் இன்னும் போதுமான அளவுக்கு தெரிந்து கொள்ளவில்லை.
மாநிலங்களுக்கு இடையில் கோவிட்-19 பரவுவதில் பரவலாக வேறுபாடு உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி அதிகம் கொண்ட பகுதிகளில் அதிக தொற்று வழக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் வெவ்வேறு வகையான சோதனை விகிதங்கள், வழக்கு கண்டறிதலை பாதிக்கும். வயதானவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கே தீவிர நோய் மற்றும் இறப்புக்கு அதிக வாய்ப்புள்ள நிலையில், தேசிய சுகாதாரத்தரவை பற்றிய எங்கள் பகுப்பாய்வு, மாநிலங்களுக்கு இடையே இதில் விதிவிலக்குகள் இருப்பதைக் காட்டுகிறது. அதிக சோதனை நடக்கும் போது, அதிக எண்ணிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் சில மாநிலங்கள் இந்த போக்கை மாற்றுகின்றன; கிடைக்கக்கூடிய சான்றுகள் சில குறைவான எண்ணிக்கையை பரிந்துரைக்கின்றன. விரைவான நோயெதிர்ப்பு சோதனையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது, இது 50% வழக்குகளில் தவறான எதிர்மறைகளைதரும் என்று அறியப்படுகிறது; இது வழக்கு கண்டறிதல் மற்றும் பதிவான எண்ணிக்கைகளை மேலும் சிக்கலாக்குகிறது.
சீனாவுடன் தொடர்புடையஇந்த தொற்றானது, எதிர்பார்க்கப்படுவது போல அங்கிருந்து இறக்குமதியாகி, இந்தியாவின் முதல் வழக்கிற்குகாரணமானது. ஆரம்பத்தில் இந்தியாவில் தொற்று பரவல் என்பது இந்திய மாநிலங்கள் மற்றும் நகரங்களில் உள்ள நன்கு அறியப்பட்ட சர்வதேச பாதைகள் வாயிலாகவே நிகழந்ததன் மூலம், அதன் நேரடி விளைவை அறியலாம். ஊரடங்கிற்கு பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியபோது,சில தொற்று பரவல்கள், புலம்பெயர்ந்தோர் இடம் பெயர்ந்தவழித்தடங்களிளும் கண்டறிய முடிந்தது; வழக்குகளின் புதிய தோற்றத்தை வெளிப்படுத்திய கர்நாடகா போன்ற மாநிலங்களில், பெரும்பான்மையானவர்கள், பயணிகள் மற்றும் தொற்று நேர்மறையுள்ள நபர்களின் தொடர்பில் இருந்ததுடன் இணைக்கப்பட்டுள்ளதை, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரைதெரிவித்தது. நவம்பர் மூன்றாவது வார நிலவரப்படி, மொத்தமுள்ள வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றிற்கான மூலம் எது என்று அறியப்படவில்லை. பிற மாநிலங்கள் தங்களது வழக்குகளின் மூலத்தை வெளியிடவில்லை - களத்தில் உள்ள மருத்துவர்கள் சமூகப்பரவல் என்று கூறும்அதே வேளையில், அரசுகளோ இந்த சொல்லை பயன்படுத்துவதையே வெறுத்துஒதுக்குகிறார்கள்.
சமூகப்பரவலின் மூலம் வழக்குகள் பரவுகின்றன என்றால், சில மாநிலங்கள் மற்றவற்றைவிட மிகப்பெரியளவில் தொற்று பரவலை காண்கின்றன என்பது எதை விளக்குகிறது? இந்த மாநிலங்களில் உள்ள வழக்குகளின் விளைவுகளில் உள்ள மாறுபாடுகள் என்ன விளக்குகிறது? முழுகாட்சியையும்தான் நாம் பார்க்கிறோம் என்பது உறுதியாக நமக்குத் தெரியுமா?
இந்தியாவிலும் உலக அளவிலும் இதுவரை ஒருசில பரந்த போக்குகள் உருவாகியுள்ளன; ஒன்று, மேமற்றும் ஆகஸ்ட்மாதங்களில் நடத்தப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் செரோபிரெவலன்ஸ் ஆய்வுகள், கிராமப்புறங்களை விட நகர்ப்புறத்தில் அதிகமாக தொற்று பரவல் இருப்பதைக் கண்டறிந்தன.
நகரங்களின் எந்த சிறப்பியல்பானது, தொற்று பரவலுக்கு அதிக காரணமாகிறது? இதற்கு முக்கிய வரையறை அம்சம், மக்கள் அடர்த்தி என்று தெரிகிறது; உதாரணமாக, மும்பை குடிசைப்பகுதியில் வாழ்வோர் கழிப்பறை பகிர்ந்து கொள்வதும் செரோ-பாசிட்டிவிட்டியின் வலுவான முன்கணிப்பு, இது நகரின் டாடா இன்ஸ்டிடியூட் ஃபார் அடிப்படை ஆராய்ச்சி அமைப்புடன் மாநகராட்சியால் நடத்தப்பட்ட ஒரு செரோ-கணக்கெடுப்புஆகும். நகரங்களுக்குள், அதிக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட குடிசைப்பகுதிகள் இதுவரை அதிகரித்ததவிட அதிகமான நிகழ்வுகளைக் கண்டன.
இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கோவிட்-19 நோயாளிகளின் மோசமான விளைவுகளுடன், அதிக வயது வலுவாக தொடர்புடையது என்பதை, சுகாதார அமைச்சகத்தின் தரவுகாட்டுகிறது. இதன் விளைவாக, குறைந்த சராசரி வயதுள்ளவர்களை கொண்ட மாநிலங்கள் குறைவான இறப்புகளைக் கொண்டிருப்பதை எதிர்பார்க்கலாம், ஆனால் பல வெளிநபர்கள் உள்ளனர் (கீழே உள்ள விளக்கப்படத்தைப் பார்க்கவும்).
தொற்றாத நோய்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் -- அங்கு கோவிட்-19 விஷயத்தில் இணை நோய்களாக மாறுகின்றன -- அதிக இறப்புகள் காண்பதை எதிர்பார்க்கலாம், ஆனால் இதிலும் விதிவிலக்குகள் ஏராளமாக உள்ளன. எங்கள் பகுப்பாய்வு ஆண்களிடையே மட்டும் உயர் இரத்த சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை பயன்படுத்திக் கொண்டது. ஆண்களுக்கு இணை நோய் மற்றும் கோவிட் 19 இறப்புஆகிய இரண்டிற்குமான (இங்கேமற்றும் இங்கே பார்க்கவும்) அதிக ஆபத்து இருக்கிறது.
ஆயினும், இந்த விளக்கங்கள், இக்காட்சியை முடித்துவிடவில்லை.
"இப்போது நம்மிடம் இருப்பது விளக்கத்தின் பகுதிகள் மட்டுமே. நமக்கு தெரியாத நிறைய விஷயங்கள் இன்னும் உள்ளன,” என்று, அசோகா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் உயிரியல் பேராசிரியரும், தொற்றுநோய் மாதிரியாளருமான கவுதம் மேனன், இந்தியா ஸ்பெண்டிடம்தெரிவித்தார். "உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் ஏன் இத்தகைய சில நிகழ்வுகளைக் கண்டன என்பது நமக்குத் தெரியாது" என்றார்.
பிரச்சனையின் ஒரு பகுதி என்னவென்றால், பரிமாற்றத்தின் தன்மை குறித்த மிகச் சிறிய மதிப்பாய்வு செய்யப்பட்ட படைப்புகளே, இதுவரை இந்தியாவில் இருந்து வெளிவந்துள்ளன; சயின்ஸ்இதழில் சமீபத்தில் வெளியான ஒருகட்டுரை, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து தொடர்பு தடமறிதல் தரவுத்தொகுப்புகளைப் பயன்படுத்தி தொற்றின் பரிமாற்றத்தன்மையை ஆய்வு செய்தது: பாதிக்கப்பட்ட நபர்களில் 5% பேர், 80% வழக்குகளுக்கு காரணமாக உள்ளனர்; குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கும் மூன்றில் ஒரு பங்கு வழக்குகள் உள்ளன, 50 முதல் 64 வயது உடையவர்களிடையே இறப்புகள் குவிந்துள்ளன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் சுகாதார உள்கட்டமைப்புமற்றும் வயதான மக்கள்தொகையை சிறப்பாக உருவாக்கியுள்ளதால், கொடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகளை இரண்டு தென் மாநிலங்களுக்கு பொதுமைப்படுத்துவது கடினம் (மேலே உள்ள விளக்கப்படத்தை காண்க).
பீகார் சுகாதாரச்செயலாளர் பிரதியா அம்ரித், மாநிலத்தின் குறைந்த எண்ணிக்கையை (10 லட்சம் பேரில் 1,878 வழக்குகள்) அதன் சோதனை முறைக்கு சாத்தியமற்ற, இயற்கை பரிசோதனையுடன் தொடர்புபடுத்தியுள்ளார். "உங்களுக்கு தெரியும், பீகார் இந்த ஆண்டு பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, இது 84 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதித்தது," என்று அமிர்த் கூறினார். "நாங்கள் 5,50,000 க்கும் அதிகமான மக்களை வெளியேற்ற வேண்டியிருந்தது. எனவே நாங்கள் என்ன செய்ய முடிவு என்றால், மீட்கும் நபர்களை நிவாரண முகாம்களில் இறக்கிவிடுவதற்கு முன்பு, அவர்களின் அறிகுறிகளை சரிபார்த்து, பரிசோதனை நடத்தினோம். அந்த வகையில் எங்களால் ஏராளமான மக்களைச் சோதித்துப் பார்க்க முடிந்தது. நிவாரண முகாம்களிலும் சமூக சமையலறைகளிலும் மக்களிடையே சமூக இடைவெளியை உறுதி செய்யுமாறு, அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பிற நெரிசலான பகுதிகளில் அரசு நோயெதிர்ப்பு பரிசோதனைகளை நடத்தியது, இது அறிகுறியற்ற நபர்களை அடையாளம் காண உதவியதாக அம்ரித் கூறினார்.
ஆயினும்கூட, பீகாரை விட பரவலாக பரிசோதனைகளை செய்த மாநிலங்கள் கூட, வழக்குகளை மாநிலத்திற்குள் வைத்திருக்க முடியவில்லை (கீழே உள்ள விளக்கப்படத்தை காண்க); உண்மையில், அதிக பரிசோதனையானது எண்ணிக்கைகளை அதிகரிக்கிறது என்று, கர்நாடகாவின் கோவிட்-19 கட்டுப்பாட்டு அறைக்கு தலைமை வகிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி முனிஷ் மவுத்கில் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், நோயெதிர்ப்பு பரிசோதனைகள் குறைந்த உணர்திறனைக்கொண்டுள்ளன, இது தவறான எதிர்மறைகளுக்கு வழிவகுக்கிறது. புதிய வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவது “ஊக்கமளிக்கும்”, ஆனால் எந்த வகையான சோதனைக்கு உட்படுத்தப்படுவது என்பது குறித்து நம்மிடம் உள்ள சிக்கல்களால் "உண்மையான வழக்கு எண்ணிக்கைகள் உண்மையில் அன்றாட போக்குகளை துல்லியமாக பிரதிபலிக்கின்றனவா என்பதில் குழப்பம் ஏற்படலாம்" என்று,இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் (PHFI)தலைவர் கே.ஸ்ரீநாத் ரெட்டி, அக்டோபர் மாதம் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
அடுத்து, சமீபத்தில் வழக்குகளில் அதிகரிப்பைகண்ட கேரளாவானது, குறைந்த இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது (10 லட்சம் மக்களுக்கு 55 இறப்புகள்), இது அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் மூன்றில் ஒரு பங்காகும். "கேரளா ஒரு நல்ல, உயர்தரமான மற்றும் நன்கு பரவியுள்ள சுகாதார வலையமைப்பைக் கொண்டுள்ளது; சுகாதாரச்சேவையை கேரள மக்கள் அணுகுவதில், அதிக விகிதத்தை கொண்டுள்ளது" என்று, கேரளாவின் முன்னாள் சுகாதார செயலாளரும், தற்போது கோவிட் -19 தொடர்பாக முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகருமான ராஜீவ் சதானந்தன், இந்தியா ஸ்பெண்டிடம்தெரிவித்தார். "தொற்றுநோய் பரவலின்போது, நான்கு அடுக்கு மருத்துவமனை முறையை நிறுவிய கேரளா, ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கும் கண்காணிக்கப்படுகிறது" என்றார்.
ஆனால் கேரளா தனது கோவிட்-19 தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கையை குறைவாக கணக்கிடுகிறது என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. அருண் என்.மாதவன் என்பவர் பாலக்காட்டில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர். கோவிட்-19 இறப்புகளை தெரிவிக்கும் செய்தி அறிக்கைகள் மற்றும் அது தொடர்புடைய மாநில ஊடகங்களை ஆய்வும் செய்யும் தன்னார்வலர்களின் குழுவை, அவர் வழிநடத்துகிறார். அந்த ஆய்வை, மாநிலத்தின் அதிகாரப்பூர்வ கோவிட் பட்டியலுடன் ஒப்பிட்டு வருகிறார் இப்போது வரை, அவர் கண்டறிந்த கோவிட் இறப்புகளில் 45% கூட, அரசின் அதிகாரபூர்வ பட்டியலில் ஒருபோதும் காட்டப்படவில்லை என்று, அந்தக்குழு தெரிவித்தது.
"கேரளா அதன் தரவு வெளிப்படைத்தன்மையில் எப்போதும் பெருமை கொள்ளும் ஒரு மாநிலமாகும். கோவிட் இறப்புகளாக கணக்கிடப்படாத பல இறப்புகள், இதற்கு முன்பு இருந்தன; எவ்வாறாயினும், இது மோசமான சூழ்நிலையாக இருந்தால், அதாவது அந்த நபருக்கு ஏற்கனவே தீவிர நோய் இருந்து, ஆனால் கோவிட் நேர்மறையாகவும்இருந்தால் மட்டுமே நடக்கிறது,” என்பதை ஒப்புக் கொண்ட சதானந்தன், கோவிட் நேர்மறையால் இறந்த மக்களும் மாநிலத்தில் கணக்கிடப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இங்குள்ள பிரச்சினை, மாநிலங்களுக்கு இடையே ஒப்பீடுகளுடனான ஒரு பரந்த சிக்கலை காட்டுகிறது - மாநிலங்களுக்கு இடையிலான பரந்த வேறுபாடுகள் அவற்றின் திறனிலும் தரவை அளிப்பதற்கான வாய்ப்பிலும் பல மாநிலங்கள் எதிர்மறையான ஊடகங்களையும் அரசியல் கவனத்தையும் ஈர்க்காத வகையில் தரவுகளை குறைவாக அளிக்க அறிக்கை செய்ய முயற்சிப்பதை, இந்தியா ஸ்பெண்ட் விசாரணை காட்டுகிறது. கோவிட்-19 பொருத்தவரை, அசாமின் இறப்பு பீகாரை விடக் குறைவு, ஆனால்மாநிலத்தில் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றால், அதன் இறப்பு தணிக்கைக் குழுக்கள் கோவிட் -19 நேர்மறை நபர்களின் இறப்புகளில் 60% "பிற காரணங்களால் இறப்பு" என்று மறுவகைப்படுத்தி உள்ளன.
"வழங்கப்பட்ட எண்ணிக்கை அடிப்படையில் மாநிலங்களை ஒப்பிட்டு, பின்னர் அதிக எண்ணிக்கையிலான மாநிலங்களை கூறுவது உண்மையில் நியாயமான ஒப்பீடு அல்ல" என்று இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தொற்றுநோயியல் நிபுணர் கிரிதர் பாபு கூறினார்.
இவை விவரிக்க முடியாத அளவிற்கு குறைந்த எண்ணிக்கையில் மற்றும் குறைவான அறிக்கையிடல் சிக்கல்களைக் கொண்ட மாநிலங்களாக இருந்தால், குறிப்பாக சில இடங்களில் இறப்பு ஏன் இயல்பை விட அதிகமாக உள்ளது என்பது பற்றி இன்னும் அறியப்படவில்லை. செப்டம்பர் முதல் வாரம் வரை, குஜராத்தில்இந்தியாவின் மிக உயர்ந்த இறப்பு விகிதம் (CFR) - ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் விகிதம் இறப்புக்கு காரணமாக - இது பஞ்சாபை கடந்து செல்லும் வரை இருந்தது.
குஜராத் (29.28 வயது) மற்றும் பஞ்சாப் (31.96 வயது) ஆகிய இரண்டும் இந்திய சராசரியை விட (28.4 ஆண்டுகள்) வயதானவை, இணை நோய்களின் அதிக விகிதத்தைக் கொண்டிருக்கின்றன, மேலும் நகர்ப்புறமானவை; இருப்பினும், மீண்டும், விளக்கம் முழுமையடையவில்லை. உதாரணமாக, தமிழகம் இந்த அளவுகோல்களை எல்லாம் பூர்த்தி செய்கிறது, ஆனால் குறைந்த இறப்பு விகிதங்களையே கொண்டுள்ளது.
மாநில அளவிலான விளக்கங்கள் பெரும்பாலும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை; கோவிட்-19 தொற்று தொடர்பான பஞ்சாபின் நோடல் அதிகாரி ராஜேஷ் பாஸ்கர், தாமதமான சோதனைக்கு மாநிலத்தின் உயர் சி.எஃப்.ஆர் காரணம் என்று கூறினார். "இது ஜலதோஷம் போன்றது எனவும், யாரும் சோதிக்கப்பட வேண்டியதில்லை என்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின," என்று பாஸ்கர் இந்தியா ஸ்பெண்டிடம்தெரிவித்தார். "நாங்கள் இதை அறிந்ததும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்தினோம். மக்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் பணியில் பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் ஈடுபட்டன. பரிசோதனைகளுக்கான காத்திருப்பு நேரத்தை நாங்கள் 15 நிமிடங்களாகக் குறைத்தோம், இப்போது தினசரி இறப்புகள் ஒரு நாளைக்கு 70 முதல் 10-14 வரை குறைந்துவிட்டன” என்றார். தவறான தகவல் உந்துதல் ஏன் பஞ்சாபிற்கான தனித்துவமாக இருக்க வேண்டும் என்பது தெளிவாக தெரியவில்லை.
உண்மையில், ஒரு மாநிலத்தில் கோவிட் எண்ணிக்கை குறைந்து வருவதுஅரசின் வெற்றிகள் மற்றும் தோல்விகளின் விளைவாக இருக்கலாம் என்று வாதிடலாம். "நாம் காணும் வீழ்ச்சி இரண்டு காரணிகளின் விளைவாக இருக்கலாம்: கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக இருந்தன, வழக்குகள் குறைந்து வருகின்றன, அல்லது வைரஸ் பரவலாக பரவியுள்ளது, இதனால் ஒருவித நோய் எதிர்ப்பு சக்தி பெறப்பட்டுள்ளது, ” என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவன இயக்குனர் மனோஜ் முர்ஹேகர் கூறினார். "நான் தனிப்பட்ட முறையில், பிந்தயதே காரணமே இருக்கும் என்று நினைக்கிறேன் - ஐசிஎம்ஆர் செரோ-கணக்கெடுப்பு மற்றும் பெருநகரங்களில் வெளியிடப்பட்ட பிற செரோ-கணக்கெடுப்புகளில் இருந்து பார்த்தால், வைரஸ் பரவலாக பரவியுள்ளது, அதுவே வீழ்ச்சிக்கும் காரணம் என்று தோன்றுகிறது" என்றார். சில மாநிலங்களில் மற்றவற்றைவிட இது ஏன் பரவலாக பரவியிருக்க வேண்டும் என்ற அவர், இருப்பினும் அதிக ஆய்வு தேவை என்றார்.
வைரஸ் பரவுவது குறித்த இந்தியா கற்றுக் கொள்ள இன்னும் கொஞ்ச தூரம் செல்ல வேண்டும் என்றாலும், நாம் தேடும் அனைத்து பதில்களையும் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. "தொற்று நோய்களைப் பார்க்கும்போது மனதில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அதில் சில அதிர்ஷ்டமும்தான்" என்று மேனன் கூறினார். "நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்தாலும், அது ஒரு நபரை அதிக தொற்றுநோயாகக் கொண்டு, வெளியே வந்து ஒரு சிலரைத் தொற்றிக் கொள்கிறது, பின்னர் நகர்கிறது - இவையே நீங்கள் திட்டமிட முடியாத நிகழ்வுகள்" என்று அவர் கூறினார்.
(எஸ். ருக்மிணி, சென்னையை சேர்ந்த சுதந்திர தரவு பத்திரிகையாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.