சென்னை மருத்துவமனைகளில் சிக்கலான கோவிட்-19 பராமரிப்பு ‘அதிகபட்சம் சரிசெய்யப்பட்டது’

Update: 2020-07-02 00:30 GMT

மும்பை: சென்னை மீண்டும் ஜூன் 19-30 முதல் ஊரடங்கிற்கு திரும்பிய, இந்தியாவின் முதல் பெரிய நகரம். கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைவருக்கும் - குறிப்பாக அரசு, பொதுக் கொள்கை, பொது சுகாதாரத்துறையினர் மற்றும் இப்போரில் முன் வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள் உட்பட பலரும் கவலை அடைந்துள்ளனர்.

அப்பல்லோ மருத்துவமனைகளின் அவசரகால பராமரிப்பு ஆலோசகரும், சென்னை இந்தியன் சொசைட்டி ஆஃப் கிரிட்டிகல் கேர் மெடிசின் தலைவருமான ரேமண்ட் டொமினிக் சவியோ, மற்றும் சென்னை வாலண்ட்ரி ஹெல்த் சர்வீசஸ் மருத்துவமனையின் தொற்று நோய்கள் மருத்துவ மையத்தின் தலைவரும், இயக்குநருமான என். குமாரசாமி ஆகியோருடன் நேர்காணல் நடத்தினோம். டாக்டர் என். குமாரசாமி, கோவிட்-19 தொடர்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய பணிக்குழுவில், மருத்துவ ஆராய்ச்சி குழுவின் ஒரு பகுதியாக உள்ளார். கோவிட் விவகாரத்தில், கடந்த 60 அல்லது 70 நாட்களில் என்ன நடக்கிறது, மேலும் அதன் நிலைப்பாடு, வளையப்பார்வையில் இருந்து என்ன உள்ளது என்பதை, இன்றைய நேர்காணலில் பார்க்கவுள்ளோம்.

Full View

நேர்காணலின் திருத்தப்பட்ட பகுதிகள்:

டாக்டர் சவியோ, கடந்த 60-70 நாட்களில், நோய் - மற்றும் அதை நன்கு புரிந்து கொண்டு சிகிச்சை அளிப்பதற்கான நமது திறன் - எவ்வாறு முன்னேறி இருக்கிறது?

டாக்டர் ரேமண்ட் டொமினிக் சவியோ: நோய் முன்னேறவில்லை. ஒருவேளை பரவல் அதிகரித்து, நோய் அப்படியே இருந்திருக்கலாம்.ஊரடங்கின் ஆரம்பப்பகுதியில், நாம் சிறப்பாகச் செயல்பட்டது போல் உணர்ந்தோம். அப்போது, மேற்கு நாடுகள் எதிர்கொண்ட நிலமையை நாம் ஒருபோதும் எதிர்கொள்ளப் போவதில்லை; நாம் மையப்பகுதியாக இருக்கக்கூடாது என்றும் நினைத்தோம். ஆனால் அது ஊரடங்கு காலம் ரை மட்டுமே இருந்தது; வெளிப்படையாக சொல்வதானால், ஊரடங்கு இதற்கு பதில் ஆகாது.நிச்சயமாக, வளர்ச்சி என்ற மேலே செல்லும் கோட்டை தட்டையாக்கவே இது உதவியது. இறுதியில், பரவலின் வீதத்தில் நிலையான அதிகரிப்பு - அதாவது நாம் இப்போது காண்பது - நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எந்தவொரு காரணத்திற்காகவும் நமது இறப்பு விகிதம் - அல்லது இறக்கும் நோயாளிகள் - வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு மோசமாக இல்லை என்ற வகையில் நாம் அதிர்ஷ்டசாலி தான். நீங்கள் [அதற்கு] வயதான மக்களின் எண்ணிக்கை போன்ற பல்வேறு காரணங்களை கூறலாம். ஆனால் நமது நோயாளிகளது இறப்பு குறைவாகவே உள்ளது. அதேநேரம் நமது எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாம் ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றல்ல - குறிப்பாக கடந்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் நாம் காணும் விஷயங்கள் தான்.

முன்னோக்கி செல்வதற்கான வழியாக, பல்வேறு கணித மாதிரி எண்கள் கணிக்கப்பட்டுள்ளன. நாம் அவ்வளவு மோசமான நிலையில் இருக்கக்கூடாது; ஆனால் எண்ணிக்கையில் இன்னும் அதிகரிப்பை [பார்க்க] போகிறோம். நாம் மேலும் சில இறப்புகளை காணப்போகிறோம்; அதை கையாள நாம் நியாயமான முறையில் தயாராக இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் இதுவொரு மிகைப்படுத்தப்பட்ட கணிப்பாகவும் இருக்கலாம். விஷயங்கள் எந்த வழியில் செல்லும் என்பது நமக்கு தெரியாது.

நீங்கள் அதிக இறப்பைக் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது ஏன்? வயது ஒரு காரணம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். வேறு ஏதேனும் காரணங்கள் இருக்க முடியுமா?

டாக்டர் ரேமண்ட் டொமினிக் சவியோ: இணை நோய்களின் எண்ணிக்கை, அல்லது இணை நோய், இது வயது அதிகரிப்போடு பெருகும். மேலை நாடுகளில் மக்கள் தொகையில் 60 முதல் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கணிசமாக உள்ளனர்; நமது நிலைமை அப்படியில்லை. இந்த விசித்திரம், கோவிட்டுக்கு மட்டுமானது அல்ல. இது வேறு எந்த தொற்றுநோயை போன்றதுதான். வேறு எந்த நோய்த்தொற்றும் வயதானவர்களிடமும், அதிக நோய்ப்பு பாதிப்பு உள்ளவர்களிடமும் சமநிலையை அசைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைத்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

டாக்டர் குமாரசாமி, இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் - அதாவது பரவல் நிகழ்ந்த விதம், அதற்கு நாம் மேற்கொண்ட நடவடிக்கை - அது இப்போது இருக்கும் வழியில் ஏன் பற்றிக் கொண்டிருக்கிறது?

டாக்டர் என். குமாரசாமி: நாங்கள் வசிக்கும் மற்றும் பயிற்சி செய்யும் தமிழ்நாடு மற்றும் சென்னையுடன் மட்டுமே நான் பற்றி நிற்கிறேன். மாநிலத்தில் கிட்டத்தட்ட 53,000-54,000 கோவிட் பாதித்த நோயாளிகள் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 38,000 பேர் சென்னையில் மட்டுமே உள்ளனர். கடந்த இரு வாரங்களில், ஒவ்வொரு நாளும் மாநில அளவில் தினமும் சுமார் 1,500 க்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தொற்று நேர்மறை உறுதியாகி இருக்கிறது; இதில் கிட்டத்தட்ட 1,200 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இது கவலைக்குரிய ஒரு அம்சம்; மேலும் இது எதிர்காலத்தில் சுகாதார அமைப்பில் ஒரு மோசமான சூழலை ஏற்படுத்தப்போகிறது.

தொற்று விகிதத்தை பார்த்தால், அது மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும். சென்னையில், மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை மற்றும் மிக நெருக்கமாக மக்கள் வாழ்கின்றனர்; இதனால், பரவுதல் அதிகம் நிகழக்கூடும். தமிழ்நாட்டு அளவில் தரவுகளை விரிவுபடுத்தினால், மாநிலத்தின் கோவிட் தொற்று நேர்மறை விகிதம் - இரண்டு மாதங்களுக்கு முன்பு 1% ஆக இருந்தது - தற்போது கிட்டத்தட்ட 10% ஆகும். எங்களது சொந்த மருத்துவமனைகளில், அறிகுறி என்று சந்தேகித்தவர்கள் அல்லது பல்வேறு அறிகுறிகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 25-30% பேர் நேர்மறை சோதனை செய்கிறார்கள். அது கவலைக்குரியது.

இம்மக்கள் எப்படி சிறப்பாக செயல்படுகிறார்கள்? தமிழ்நாட்டில், கோவிட் இறப்பு விகிதம் சுமார் 1% மட்டுமே - இது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 0.6% ஆக இருந்தது. ஆனால் மருத்துவமனைகளில் இறப்பு விகிதத்தை நீங்கள் ஆராய்ந்தால், உண்மையில் நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் வந்து பரிசோதிக்கப்படுகிறார்கள், அது இன்னும் அதிகமாக உள்ளது. ஏனெனில் அவர்களுக்கு அறிகுறி மிதமாகவோ அல்லது கடுமையாகவோ இருக்கும்போது அல்லது அவர்கள் இறுதி கட்டங்களில் வெவ்வேறு மருத்துவமனைகளில் இருந்து விலகப்படும் போது, எங்களது மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். அவர்கள், கோவிட் சிகிச்சை வசதிகள் உள்ள இடத்திற்கு வந்து இறந்து போகின்றனர். ஆனால், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத்துடன் ஒப்பிடும்போது இறப்பு விகிதம் தமிழகத்தில் மிகவும் குறைவு.

இதற்கு பல்வேறு காரணங்களால் இருக்கலாம். தமிழகத்தில் தொற்றுநோயை நாங்கள் [கையாள ] ஆரம்பித்தபோது, சோதனை செய்தவர்களில் கணிசமானவர்கள் நடுத்தர வயதுடையவர்கள். இப்போது, தொற்று பாதிப்புள்ள வயதினர்கள் என்பது, இளையவர்களுக்கும் வயதானவர்களுக்கும் (60-65 வயதுக்கு மேற்பட்டவர்கள்) என்று மாறிவிட்டது. அதாவது, நடுத்தர வயது மக்கள் தொற்றுநோயை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர், அது வயதானவர்களுக்கு பரவுகிறது.

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில், கொமொர்பிடிட்டி குறிப்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் உடல் பருமன் அதிகளவில் உள்ளது. இவை அனைத்தும் கோவிட இறப்பை அதிகரிக்கின்றன. ஆரம்பத்தில் குறைவான இணை நோய்களுடன் இளைஞர்களை பார்த்தோம். கடந்த இரு வாரங்களில், கொமொர்பிடிட்டிகளுடன் கூடிய வயதானவர்கள் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இறப்பு அதிகரித்து வருகிறது.

மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 30% மக்கள் கோவிட் நேர்மறை கண்டறியப்படுவதாக, நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நிபுணர்களிடம் இருந்து நாங்கள் பெற்றுள்ள விவரம் இதுதான். மும்பையில், ஒரு மருத்துவமனைக்குள் சென்று வரும் எவருக்கும் கூட கோவிட் நேர்மறை கண்டறியப்படுவதாக, என்னிடம் மருத்துவர்கள் கூறினர். டாக்டர் குமாரசாமி, இதுபற்றி உங்களது கருத்து என்ன?

டாக்டர் என். குமாரசாமி: மருத்துவமனைக்குச் சென்று வருவோருக்கு கோவிட் நேர்மறை என்பதில், “எல்லோரும்” என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன்.

இது உண்மையில் சொல்வதை காட்டிலும் ஒரு உருவகம் என்று கருதுகிறேன்.

டாக்டர் என். குமாரசாமி: நாங்கள் எல்லோரையும் பரிசோதிப்பதில்லை. வழக்கம் போல், சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் உள்ளவர்களை பரிசோதிக்கிறோம், அல்லது தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள், அல்லது நடைமுறைகள் நடத்தப்படவிருக்கும் வேறு ஏதேனும் அறிகுறிகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை நடக்கிறது. இந்த குழுவில் உள்ள நேர்மறை எண்ணிக்கை, முன்பு இருந்த 10% என்பதில் இருந்து 30% மற்றும் அதற்கு மேல் என உயர்ந்துள்ளது.

அதேநேரம், தமிழ்நாட்டில் சோதனை செய்யப்பட்ட அனைவரில் 30% பேர் நேர்மறையானவர்கள் என்று அர்த்தமல்ல; இது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டநோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது அறிகுறிகள் உள்ளவர்கள், அல்லது பரிசோதிக்க விரும்பும் மக்களிடையே உள்ளது.ஆனால் மீண்டும் எங்களது மாநிலத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளை போலவே எந்தவொரு அறிகுறிகளும் இல்லாத (அறிகுறியற்றவர்கள்) ஏற்கனவே நேர்மறையானவர்கள் உள்ளனர்; ஆனால் சோதனை செய்யப்படாததால் அவர்களின் நிலை அவர்களுக்குத் தெரியாது. அவர்களை சோதித்தால், ஒட்டுமொத்த மக்கள்தொகையின் உண்மையான பாதிப்பு மற்றும் உண்மையான நிகழ்வு வீதத்தை நாம் அறிவோம். அதாவது மொத்த மக்களிடையே புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன.

நமக்கு தெரிந்ததை விட மிக அதிகமான எண்ணிக்கையில் பரவல் உள்ளது அல்லது பதிவாகிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

டாக்டர் என். குமாரசாமி: நிச்சயமாக. எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது இந்தியாவில், [வழக்குகளின் எண்ணிக்கை] கிட்டத்தட்ட 4,00,000 ஐ தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில், கிட்டத்தட்ட 54,000-55,000 [வழக்குகள்] உள்ளன. ஒவ்வொரு நாளும், நாங்கள் கிட்டத்தட்ட 1,500 [மாநிலத்தில் புதிய வழக்குகளை] சேர்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும் மேலும் பரிசோதனைகள் நடக்கிறது, ஒவ்வொரு நாளும் அதிகமான சோதனை ஆய்வகங்கள் அடையாளம் காணப்படுகின்றன. எனவே, மேலும் பரிசோதனை நடக்கும்.

டாக்டர் சவியோ, நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள வயது காரணத்தை தவிர, நீங்கள் காணும் முக்கியமான நிகழ்வுகளில், இந்தியாவின் பிற பகுதிகளிலோ அல்லது உலகின் பிற பகுதிகளிலோ நீங்கள் கேட்கும் விஷயங்களுக்கு எதிராக உங்கள் மருத்துவமனைகளில் காணும் முன்னேற்றத்தில் வேறு ஏதேனும் ஒற்றுமை அல்லது வேறுபாடு உள்ளதா?

டாக்டர் ரேமண்ட் டொமினிக் சவியோ: தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மிகமோசமான நிலைக்கு செல்லும் எண்ணிக்கையில் இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளதா? அது மாநிலங்களுக்கு இடையில் வேறுபட்டதா என்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதாக நான் கருதுகிறேன்.

அது ஒரு விஷயம், மேலும் முன்னேற்றத்தின் தன்மையும்- அது ஒன்றா? கடந்த 60 நாட்களில், மருத்துவர்கள் புதிய அறிகுறிகளைக் காண்கிறார்கள், அவை ஆரம்ப நாட்களில் இல்லை. ஆனால் இப்போது தெளிவாகத் தெரிகிறது.

டாக்டர் ரேமண்ட் டொமினிக் சவியோ: ஒட்டுமொத்த பாதிக்கப்பட்டவர்களில் 30%-க்கும் குறைவானவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் - அவர்களுக்கு ஐ.சி.யூ சேர்க்கை அல்லது உயிர்காக்கும் கருவிகளை சார்ந்திருக்கும் பிரிவின் தேவை இருக்கும் என்று நான் கூறுவேன். நிச்சயமாக, தேசிய அளவில் உண்மையான புள்ளிவிவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், ஐ.சி.எம்.ஆர் உயிர் காக்கும் கருவி சார்ந்த அலகுகள் தேவைப்படும் நபர்களின் சதவீதம் குறித்து விவரம் வெளியிட்டுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. ஐ.சி.எம்.ஆரிடம் இருந்து வந்தால் அது ஒரு பயனுள்ள தகவலாக இருக்கும்.

நான் கவனித்துக் கொள்ளும் நிறுவனங்களில் இருந்து எனது தோராயமான மதிப்பீடு, ஒட்டுமொத்த பாதிக்கப்பட்டவர்களில் 30% க்கும் குறைவாகவே இருக்கும். அதாவது, அவர்களில் பெரும்பாலோர் லேசான நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது அவர்களை வார்டில் நிர்வகிக்க முடியும் என்பதாகும். அவர்களில் பெரும்பாலோர் வீட்டில் இருந்து தனிமைப்படுத்தலாம். ஐ.சி.யு-வில் அனுமதிக்கப்படுவோரில் பலர் மிகவும் மோசமானவர்களாக இருக்கின்றனர்; அவர்களில் சுமார் 10% பேர் வெண்டிலேட்டர் தேவைப்படுவதாக நான் கூறுவேன். இறப்புக்கு உண்மையில் காரணமானவர்கள் அவர்கள். வெண்டிலேட்டர் கருவியால் சுவாசம் தேவைப்படும் இறங்கும் மக்களின் இந்த சிறிய துணைக்குழுவில், இறப்பு மிக அதிகமாக உள்ளது.

வெண்டிலேட்டர் கருவியால் காற்றோட்டம் தேவை என்ற நிலைக்கு முன்னேறாதவர்கள் நிலை மிகவும் சிறப்பாக உள்ளது. மீண்டும், இது அவர்களின் வயது மற்றும் கொமர்பிட் நோய்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடுக்குப்படுத்தப்பட வேண்டும். இதை நாம் உண்மையில் பிரித்து இந்தத் தரவை அறிந்து கொள்ள வேண்டும். இன்னும், அவர்களில் பெரும்பாலோர் அறிகுறியற்றவர்கள் என்று நான் சொல்வேன். அவர்களில் சிலருக்கு வார்டில் சேர்க்கப்படும் தேவை உள்ளது. ஒரு சிறிய சதவீதத்தினருக்கே, ஐ.சி.யூ தேவைப்படுகிறது. அதில், மிகக்குறைந்த சதவீதத்தினர் உறுப்பு ஆதரவு தேவைப்படுவார்கள். அந்த மக்களில் இறப்பு மிக அதிகமான உள்ளது.

வைரஸ் உங்கள் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு எதிராக அல்லது உலகின் பிற பகுதிகளுக்கு எதிராக வித்தியாசமாக செயல்படுகிறது என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

டாக்டர் ரேமண்ட் டொமினிக் சவியோ: இல்லை, உண்மையில் நாங்கள் அப்படி எதையும் பார்க்கவில்லை.

டாக்டர் என். குமாரசாமி: நம் நாட்டில் பரவிய வைரஸ் திரிபு மற்றவற்றில் இருந்து வேறுபட்டது என்பதைக்காட்ட இந்த நேரத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்று நினைக்கவில்லை. ஆரம்பத்தில், ஆசியாவில் பரவும் திரிபு அவ்வளவு கடுமையானதல்ல, [அதனால்தான்] மக்கள் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் [காணப்பட்ட எண்ணிக்கையில்] இறக்கவில்லை என்ற ஊகங்கள் இருந்தன. அதைக்காட்டவும் நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை.

டாக்டர் சவியோ, சிகிச்சை திறனைப் பொறுத்தவரை உங்கள் எண்ணம் என்ன? மும்பை அல்லது டெல்லி போல் அல்லாமல் சென்னை இன்னும் கட்டுப்பாட்டினுள் உள்ளது. மீண்டும் ஊரடங்கிற்கு திரும்பிய நிலையில் அது உதவக்கூடும் என்று கருதுகிறேன். கோவிட் சிகிச்சைக்கான படுக்கை திறன், கிடைக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கை தொடர்பான உங்கள் பதிலின் உணர்வு என்ன?

டாக்டர் ரேமண்ட் டொமினிக் சவியோ: பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் வித்தியாசம் உள்ளது; வார்டுகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை விட முக்கியமானது பராமரிப்பு படுக்கைகளின் எண்ணிக்கை. இரு துறைகளும் ஐ.சி.யூ பராமரிப்பு தேவையில்லாத குறைவான நோயுற்ற நோயாளிகளுக்கு கிடைக்கும் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. எனவே, அந்த நோயாளிகளை எங்களால் நிர்வகிக்க முடியும் என்ற உணர்வு எனக்கு உள்ளது. அந்த நோயாளிகள் பொதுவாக நோயின் குறுகிய காலத்தைக் கொண்ட நோயாளிகள்: அவர்களின் திருப்புமுனை நேரம், அல்லது மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம், ஒரு வாரமாக இருக்கும். எனவே, மோசமாக நோய்வாய்ப்படாத நோயாளிகளுக்கு, இது அதிகரிப்பு வீதமாக இருந்தால், நாம் மேலும் பிழைத்துக் கொள்ளலாம்; தொற்று பரவும் வீதத்தை குறைக்க ஊரடங்கு உதவுகிறது.

இப்போது, அவசரகால சிகிச்சை தேவைப்படுவோருக்கான பராமரிப்பு படுக்கைகள், அதுதான் நமக்கு அதிகபட்சமானது. அரசு பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இடையில், நாம் வேறுபட்ட [காட்சி] ஒன்றை எதிர்கொள்கிறோம். பொது மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. வென்டிலேட்டர்கள் மற்றும் அதிக ஓட்டமுள்ள மூக்கினுள் செலுத்தும் கருவி போன்ற நல்ல எண்ணிக்கையில் உபகரணங்கள் கிடைத்ததாக அவர்கள் கூறினர். படுக்கைகள் மற்றும் உபகரணங்களில் - அவர்கள் முதலீடு செய்ததாகத் தெரிகிறது. ஆனால் சிறப்புப் பணியாளர்களைப் பொறுத்தவரை நாம் அதிக பணியாளர்களை கொண்டிருக்கிறோமா என்று எனக்குத் தெரியவில்லை.

நிபுணத்துவம் பெற்ற பணியாளர்களில் பெரும்பாலோர், படுக்கை வலிமையை இப்போது கிடைப்பதை விட விரிவாக்க முடியாத தனியார் மருத்துவமனைகளில் உள்ளனர். எனவே, நாங்கள் ஒரு பிடிப்புடன் இருக்கிறோம். இன்றைய நிலவரப்படி, நாம் நீட்டிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவசரகால படுக்கைகள் அதிக எண்ணிக்கையில் போடப்படுகின்றன.

மேலும், மோசமான நிலையில் உள்ள நோயாளிகள் ஐ.சி.யுவில் நீண்ட காலம் இருக்க முனைகிறார்கள். அவர்கள் 2-3 வாரங்களுக்கு [ஐ.சி.யூ.வில்] இருக்கலாம்; என்னிடம், ஆறு வாரங்கள் வரை ஐ.சி.யுவில் இருந்த நோயாளிகள் உண்டு; பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். எனவே, அது தங்குவதற்கான சராசரி அதிகபட்ச நாளாகும் என்றால், இயற்கையாகவே நீங்கள் படுக்கைகளின் கூட்டு பயன்பாட்டை கற்பனை செய்து பார்க்கலாம். எனவே, நாம் ஒரு நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது, நாம் ஒவ்வொருவரும் நமது படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம். அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளுக்கு பங்களிக்கும் புதிய மருத்துவமனைகள் உள்ளன. தனியார் துறையில் கிடைக்கும் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் அரசு தீவிரமாக உள்ளது.

இந்த பிரச்சனையை உருவாக்கும் மூன்றாவது சிக்கல், தனியார் மற்றும் பொது மருத்துவமனையை தேர்வு செய்யும் மக்களின் விருப்பம் ஆகும். பொது மருத்துவமனைகளில் கூட, எல்லோரும் தேர்வு செய்யக்கூடிய ஒரு மருத்துவமனை, எப்போதும் நோயாளிகளால் நிரம்பியதாகவே இருக்கப் போகிறது; ஏனென்றால் எல்லோருக்கும் படுக்கைகள் கிடைக்காது என்ற தவறான தகவலும் இல்லை.

ஆறு வாரங்களாக ஐ.சி.யூ.வில் இருந்த நோயாளிகள் இருக்கிறார்கள், பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்கள் என்று சொன்னீர்கள். அப்படியானால், இவ்வாறு நீட்டிப்பதன் மூலம், அது மிகவும் ஊக்கமளிப்பது போல் தெரிகிறதே.

டாக்டர் ரேமண்ட் டொமினிக் சவியோ: இது அனைத்தையும் சார்ந்திருக்கிறது. பல உறுப்பு செயலிழப்பு கொண்ட ஒரு மோசமான நோயாளி, அவர் மருத்துவமனையில் பெற்ற நோய்த்தொற்றுகள் மற்றும் ஐ.சி.யூ.வில் நான்கு முதல் ஐந்து வாரங்கள் தங்கியிருப்பதற்கு உள்ளார்ந்த பிரச்சினைகள் ஆகியவற்றால் இழுக்கப்படுகிறார், இது ஒரு பொதுவான நோயாகும்.நான்கு வாரங்கள் அல்லது ஆறு வாரங்கள் நோய்வாய்ப்பட்ட ஒருவர் இறுதியில் இறந்துவிடுவார் என்பதல்ல. அப்படி எதுவும் இல்லை. இவை அனைத்தும் கிடைக்கக்கூடிய ஆதரவு மற்றும் உள்கட்டமைப்பைப் பொறுத்தது; துரதிர்ஷ்டவசமாக நான் சொல்ல வேண்டியது என்னவென்றால், நிதி ஆதரவு காப்புறுதியும் கூட. இவர்களில் பலருக்கு காப்பீட்டு நிதி ஆதரவு இல்லை, அல்லது அப்ப்படியே இருந்தாலும் கூட, இந்த பெரிய காலத்தை ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே, இதன் மூலம் பயணம் செய்யக்கூடியவர்களும் இருக்கிறார்கள், அவர்கள் நன்றாகச் செய்கிறார்கள்.

டாக்டர் குமாரசாமி, படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் நெருக்கடிகளை நிர்வகிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் கணிப்புகள் என்ன?

டாக்டர் என். குமாரசாமி: பல மாநிலங்களை விட தமிழ்நாட்டில் சிறந்த சுகாதார வசதிகள் உள்ளன… எங்களிடம் சிறந்த தரத்தில் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன. உண்மையில், தமிழ்நாட்டில் உள்ள பொது மருத்துவமனைகள் அவற்றின் உள்கட்டமைப்பு, கிடைக்கும் வசதிகள் மற்றும் நிபுணத்துவம் ஆகியன, மற்ற பல மாநிலங்களை விட மிகச்சிறந்தவை. எனவே, இது தமிழகத்திற்கு கூடுதல் வரப்பிரசாதம். நிச்சயமாக, சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நல்ல தனியார் மருத்துவமனைகளும் எங்களிடம் உள்ளன. அவற்றில் சில, சிறந்த தரம் வாய்ந்த உலகத்தரத்தை கொண்டுள்ளன.

இந்த [வழக்கு கண்டறிதல்] எண்ணிக்கையை நீங்கள் கண்டால், எங்களது எண்ணிக்கை அதிகரித்து மேலே செல்கிறது: தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 1,500 பேர் கோவிட் நேர்மறை என்று கண்டறியப்படுகிறார்கள், அவர்களில் 1,200 பேர் சென்னையில் இருப்பவர்கள். அதில் எத்தனை பேர் மிதமான மற்றும் தீவிர அறிகுறிகளுடன் உண்மையில் நோய்வாய்ப்படுகிறார்கள் மற்றும் படுக்கைகள் தேவைப்படும் என்பதை பொறுத்தது.

உதாரணமாக, எனது மருத்துவமனையில், யாராவது வெளிநோயாளி வந்து நேர்மறையை பரி சோதிக்கும்போது, அவர்கள் லேசான அறிகுறிகளாக இருந்து அல்லது அவர்களை வீட்டிலேயே நிர்வகிக்க முடிந்தால், நாங்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதில்லை. நாங்கள் அவர்களது அறிகுறிகளுக்கேற்ப சிகிச்சை தருகிறோம்; ஆலோசனை வழங்குகிறோம்; அவர்கள் சுயமாக தனிமைப்படுத்துதலை உறுதி செய்கிறோம். அத்துடன், பராமரிப்பாளர்களுக்கும் நாங்கள் ஆலோசனை கூறுகிறோம். இது எங்களது சுகாதார அமைப்புக்கு உண்மையில் உதவக்கூடிய ஒன்று. நேர்மறை கண்டறியப்படும் ஒவ்வொருவரையும் மருத்துவத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று மட்டும் இல்லாமல், நாம் இப்போது நமது சுகாதார அமைப்பையும் பாதுகாக்க வேண்டும்.

மேலும், அரசு இப்போது கோவிட் பராமரிப்பு இல்லங்களை உருவாக்கி வருகிறது, அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தீவிர மேலாண்மை தேவையில்லாத நபர்களை தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்க முடியும். அது சரியானது என்று நான் நினைக்கிறேன், மருத்துவமனைகள் மிதமான மற்றும் தீவிர நிகழ்வுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இப்போது, நகரில் ஏராளமான மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், நம்மிடம் அதிக எண்ணிக்கையிலான கோவிட் அல்லாத பிற நோயாளிகளுக்கான சிகிச்சை சேர்க்கை தேவை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது - ஏனெனில் நீரிழிவு நோய் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது; உயர் இரத்த அழுத்தம், வயதானவர்கள், புற்றுநோய் நோயாளிகள், எச்.ஐ.வி, காசநோய் நோயாளிகளும் உள்ளனர்.நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்ய இடங்களும் தேவை; மகப்பேறு மையங்கள் தொடர்ந்து பிரசவங்களை கவனிக்க வேண்டும். கோவிட் கவனிப்புக்காக மட்டுமே மொத்த மருத்துவமனைகளையும் நாம் முழுமையாக எடுத்துக் கொள்ள முடியாது.

தற்போது, இக்காரணத்திற்காக மொத்த படுக்கை எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30-40% இடங்களை கோவிட்க்கு க்கு ஒதுக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டிய ஒன்று; அத்துடன் அவற்றின் தரங்களை உயர்த்துவது, தொற்று-கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்துதல், உரிய ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகளை தருவிப்பது அவசியமாகும்.

எல்லோரையும் கவனித்துக்கொள்ள உண்மையிலேயே நாம் தயாரா என்பது, உங்களது கேள்வி. ஆனால், எண்ணிக்கை உயரும் விகிதம் பற்றி எனக்குத் தெரியாது. இதே நிலையில் அது சென்றால், ஜூலையை தாண்டும்போது, நாம் நிச்சயமாக சென்னையில் உள்ள மருத்துவமனை படுக்கைகளில் இருந்து வெளியே வந்துவிடுவோம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Load more

Similar News