மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி தர வேண்டும் அல்லது கடன் பெற அனுமதிக்கட்டும்: கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்

Update: 2020-05-14 00:30 GMT

மும்பை: நிதி ரீதியாக பெரும் சிக்கலில் இருப்பதாக, கேரளா கூறுகிறது. முன்னதாக, கோவிட்-19 ஐ எதிர்த்து சிறப்பாக போராடுவதற்கான பாராட்டு எங்களுக்கு வேண்டாம், நிதிதான் வேண்டும் என்று கேரள அரசு கூறியது. கேரளா, சுமார் 500-க்கும் குறைவான கோவிட் நோயாளிகளை மட்டுமே கொண்டிருந்தது; மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் புதிய வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. இந்தியாவும் கேரளாவும் கோவிட் தொற்றில் இருந்து வெளியேற போராடிக் கொண்டிருக்கையில், அதற்கான வழிகள் என்ன? கேரள நிதியமைச்சர் டி.எம். தாமஸ் இசாக்குடன் ஒரு நேர்காணல்.

.fluid-width-video-wrapper { display: inherit !important; } Full View

நிதிச்சிக்கல் உள்ளதாக கேரளா கூறுகிறது. ஆனால் நாட்டில் இன்னும் பல மாநிலங்கள் கொரொனாவுடன் போராடிக் கொண்டிருக்கின்ற்ன. அப்படியிருக்க, கேரளாவுக்கு ஏன் முன்னுரிமை தர வேண்டும்?

எனக்கு ஏன் உதவி, ஆதரவு வழங்கப்பட வேண்டும்? அதற்காகத்தானே ஒரு கூட்டாட்சி அரசு உள்ளது. நிதி வளங்கள் பெரும்பாலும் மத்திய அரசின் கைகளில் உள்ளன, பொறுப்புகள் மாநில அரசுகளின் கைகளிலும் தோள்களிலுமே அதிகம் இருக்கிறது. நிதி பரிமாற்றத்திற்கான வழிமுறைகள் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளது. இப்போது, ஒரு அசாதாரண நிலைமை உள்ளது, மாநில அரசுகளின் சாதாரண வருமானம் தடை பட்டுவிட்டது; மத்திய அரசும் நெருக்கடியில் உள்ளது, ஆனால் நிதி ஆதாரங்களை உருவாக்க அதற்கு உரிமை உண்டு. உலகெங்கிலும், அரசுகள் அதைத்தான் செய்கின்றன - அமெரிக்கா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% [மொத்த உள்நாட்டு உற்பத்தியை] போன்றவற்றால் கூடுதல் நிதி கிடைக்கச் செய்துள்ளது. அனைத்து வளர்ந்த நாடுகளிலும் இது பரந்த அளவில் உள்ளது.

இந்திய அரசு நேரடியாக ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெற்று மாநிலங்களுக்கு நிதி கிடைக்கச் செய்யலாம். இல்லையெனில் நீங்கள் "போரை" எவ்வாறு எதிர்த்துப் போராடுவீர்கள்? இந்திய அரசின் செயல், தொற்றுநோயின் முழு சுமையையும் மக்கள் மற்றும் மாநிலங்களின் தோள்களில் வைக்க விரும்புகிறதோ என்று சந்தேகம் உள்ளது. அவர்கள் அதுபற்றி சில பெரிய பொருளாதார பார்வை கொண்டிருக்கலாம் - கோவிட் 19-க்கு பிந்தைய உலகில், அவர்கள் நல்லவர்களாகவும் வலுவாகவும் இருப்பார்கள். ஆனால் தொற்றுநோய்களின் முடிவில் பொருளாதாரமே இல்லை என்று வைத்துக்கொள்வதானால், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

எனது கேள்வி என்னவென்றால்: கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் இப்போது ஒரே படகில் தான் உள்ளன. உங்கள் ஜிஎஸ்டி வசூல் எண்ணிக்கை 2019 ஏப்ரலில் ரூ .1,800-1,900 கோடியாக இருந்தது. இப்போது உங்களுக்கு சுமார் 153 கோடி ரூபாயாக இருக்கலாம். விகிதாசாரப்படி, இது மற்ற எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும், சில மாநிலங்கள் உங்களை விட மோசமாக இருக்கலாம். எனவே மாநிலங்களுக்கு இடையில் மத்திய அரசு எவ்வாறு முன்னுரிமை அளிக்கிறது, ஏன் கேரளா சமமான முன்னுரிமை பெறுபவராக இருக்கக்கூடாது?

ஒன்று, மாநில அரசுகளின் வருவாய் சாதாரண தருணத்தில் 10% மட்டுமே - எல்லா மாநில அரசுகளும் அப்படித்தான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போது, நாம் என்ன செய்கிறோம் - ஒன்று மத்திய அரசு நிதி தருகிறது அல்லது கடன் வாங்க அனுமதிக்கிறது. இப்போது, நாங்கள் கடன் வாங்க முயற்சித்தோம்; கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதில் தீவிரமாக இருந்ததால் நாங்கள் கடன் வாங்குவதற்கு முன்னுரிமை தந்தோம். [நீங்கள்] சொன்ன எண்களின் அர்த்தம் இதுதான். எங்களிடம் இப்போது 34 கோவிட் வழக்குகள் மட்டுமே உள்ளன. ஓரிரு நாட்களில், நாங்கள் ஒற்றை இலக்கத்திற்கு செல்வோம். நாங்கள் இதை தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பதால், அதற்கு நிதி செலவாகும் - அது இலவசமாக வரவில்லை. எனவே, நாங்கள் கடன் வாங்குவற்கு முன்னுரிமை தந்தோம் - அதற்கு நாங்கள் 4.4 ரெப்போ வீதத்துடன் 9% வட்டியை செலுத்த வேண்டியிருந்தது. ஏனெனில் நாங்கள் 6,000 கோடி ரூபாயைக் கேட்டோம். ஒரு குறுகிய காலத்திற்கு, ஒரு சிறிய தொகையை கடன் வாங்க ரிசர்வ் வங்கி எங்களுக்கு அறிவுறுத்தியது.

உங்களுக்குத் தெரியும், மியூச்சுவல் ஃபண்டுகள் சிக்கலில் இருக்கும்போது மத்திய அரசு ஒன்றுக்கு இருமுறை கூட யோசிக்காமல் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியிருந்தது - ரூ .50,000 கோடி தரப்பட்டது. அதே நேரம் மாநிலங்களையும் ஆதரிக்க வேண்டும் என்று அரசு நினைக்கவில்லையே? அவை திவாலானவை. இது மிகவும் விசித்திரமான நடத்தை, இது ஏன் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை.

கேரளாவின் தற்போதைய நிலைமையை எங்களுக்கு விளக்க முடியுமா? சுமார் 250 கோடி வருவாய் மட்டுமே உள்ள நிலையில், மாதத்திற்கு உங்களுக்கு ரூ.3,850 கோடி செலவு ஆகிறது; இதில், ஊழியர் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மட்டும் ரூ.2,500 கோடி என்று நீங்கள் கூறியதாக அறிந்தேன் - அது சரியானதா?

எங்களுக்கு சம்பளத்திற்கு மட்டும் ரூ.2,500 கோடி இருக்கும்; ஓய்வூதியம் மற்றொரு ரூ. 1,000 கோடியாகும். கடந்த மாதம் நாங்கள் வருமான பரிமாற்றம், நிலுவைத் தொகை [மற்றும்] நலவாரிய ஓய்வூதியம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1,000 போன்றவற்றைச் செலவிட்டோம். எனவே, சுமார் ரூ. 8,000 கோடி.

பின்னர் சுகாதார செலவுகள் உள்ளன. இந்த நிதியாண்டின் முதல் கோப்பு மருத்துவப்பொருட்களுக்கானது, இதற்காக ரூ.400 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. இது மிகவும் சிறியது என்று எனக்குத் தெரியும், நாம் இன்னும் ஏதாவது கொடுக்க வேண்டும். ஆகவே, நிதியாண்டின் முதல் நாளில், நான் கையொப்பமிட்ட முதல் கோப்பு மருத்துவப் பொருட்களுக்காக ரூ. 600 கோடிக்காக இருந்தது; இது ஆண்டு முழுவதற்குமான ஒதுக்கீடு, ஒரே நாளில் செய்யப்பட்டது. இதுதான் நாங்கள் செய்ய வேண்டிய செலவு. ஆனால் உங்களுக்கு எவ்வாறு செலவு ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

அடுத்த ஐந்து மாதங்களுக்கு அரசு ஊழியர்களிடம் இருந்து ஒரு மாதத்திற்கு ஆறு நாட்கள் என ஊதியப்பிடித்தம் அல்லது சம்பளத்தை கழிக்கிறீர்கள், அது உங்களுக்கு ஒரு மாதத்திற்கு சுமார் 500 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப் போகிறது. அது சரியானதா?

இதனால் எங்களுக்கு 2,500 கோடி ரூபாய் தரும் என்று சொல்லுங்கள், இது அடுத்த ஆண்டு அல்லது அதற்கு அடுத்த வருடத்தில் [தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு திருப்பித்தர] ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த பணத்தை, ஒத்திவைப்பில் இருந்து ஆறு மாதங்களுக்குள், எப்போது திருப்பித் தரப்படும் என்பதை அரசு சொல்ல வேண்டும் என்று ஒரு ஆணையை கொண்டு வந்துள்ளோம் -தொழிலாளர்கள் / ஊழியர்கள் அதை நன்கொடையாக வழங்கவில்லை, அவர்கள் அத்தொகை பெறுவதை தள்ளிவைக்கின்றனர், மேலும் அரசு ஒரே நேரத்தில் அவர்களுக்கு இந்த தொகையை திருப்பிச் செலுத்தப்படும் என்று அறிவிக்க வேண்டும். எனவே, எந்தவொரு சம்பளத்தையும் குறைப்பு செய்யவும் நாங்கள் மிகவும் தயங்குகிறோம், தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க விரும்புகிறோம். அதே நேரம், உண்மையில் மாநில அரசிடம் நிதி இல்லை. எனவே, நாங்கள் சம்பளத்தில் தொகை ஒத்திவைப்பு முறை கொண்டு வந்தோம்.

புலம் பெயர்வுகளை எதிர்கொள்ளும் மற்ற மாநிலங்களை போல் இல்லாமல், கேரளா தலைகீழாக எல்லை தாண்டிய புலம் பெயர்வுகளை எதிர்கொள்கிறது. செப்டம்பர் 2020ம் ஆண்டுக்குள் சுமார் 3,00,000 மலையாளிகள் கேரளாவுக்கு திரும்பி வருவார்கள் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன. அதன் தாக்கம் எப்படி இருக்கும்?

இந்த எண்ணிக்கை 5,00,000 ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். அது ஒரு பெரிய எண்ணிக்கை மற்றும் அவர்கள் அனைவரும் ஹாட்ஸ்பாட்களில் இருந்து இங்கு வரவுள்ளனர். இப்போது பிரச்சனை என்னவென்றால் 1,00,000 பேர் தங்களது வேலையை இழந்து வருவார்கள். நிச்சயமாக, அவர்கள் அங்கு வசிக்கும் உறவினர்களையும் குடும்பத்தினரையும் அழைத்து வருவார்கள். கேரளா பாதுகாப்பானது என்று அவர்கள் நினைப்பதால் இங்கு அனுப்புகிறார்கள். அது நல்லது, ஆனால் அவர்களை உடனடியாக அழைத்து வருட்வதால் கோவிட் இரண்டாம் கட்ட தாக்கம் என்ற சவால் உண்டாகும். நாம் இப்போது தான் ஒரு வளைவை சரி செய்திருக்கிறோம். அவர்கள் வருகையால் மீண்டும் அது அதிகரிக்கும். எனவே, இதை நிர்வகிக்கக்கூடிய வரம்புகளுக்குள் நாங்கள் இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். அதை ஒழிப்பது என்பதை நாங்கள் யோசிக்கவில்லை, ஆனால் நிர்வகிக்கக்கூடிய வரம்புகளுக்குள், எங்களிடம் உள்ள மருத்துவமனை வசதிகள் இருக்க வேண்டும். நோயுற்றவர்களுக்கு ஐ.சி.யூ படுக்கைகளை வழங்க முடியாத சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்த விரும்பவில்லை. எனவே, எங்கள் உத்திகள் ஒப்பீட்டளவில் மலிவானது. 100, 1,000 அல்லது 1 மில்லியனுக்கு தனிநபர் சோதனைகளின் எண்ணிக்கையை நீங்கள் எடுத்துக் கொண்டால், இந்தியா போன்றே கேரளா (இது தேசிய அளவைவிட சற்று சிறந்தது என்றாலும்) சர்வதேச அளவில் மிகக்குறைவாக உள்ளது.

நீங்கள் சுமார் 33,000 கோவிட் பரிசோதனைகளை செய்துள்ளீர்கள்.

நீங்கள் சொல்வது சரி, ஆனால் மக்கள் தொகை விகிதத்தை எடுத்துக் கொண்டால், சர்வதேச அளவில் இது மிகக் குறைவு. ஆனால் கேரளாவின் விஷயத்தில் அதன் ஆர்.ஓ. (R0-இனப்பெருக்கம் விகிதம்) இருந்த போதும் - 0.4 மிகக்குறைவு. பொதுவாக, ஆரம்ப கட்டங்களில் இது 2, பின்னர் 1. நீங்கள் ஒன்றுக்கு மேல் இருந்தால், அதிவேக வளர்ச்சி உள்ளது. ஒன்றுக்கு கீழே இருந்தால், வளைவு காலப்போக்கில் சரிசெய்யப்படுகிறது. எனவே, இது பரிசோதனைகள் மூலம் மட்டுமின்றி தனிமைப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் மூலமும் எட்டப்பட்டுள்ளது. ஊரடங்கு மட்டும் போதாது; நாம் கண்காணிக்க வேண்டும். அறிகுறியை உருவாக்கும் எந்தவொரு நபரும் பரிசோதிக்கப்பட வேண்டும். மீதமுள்ளவர்களை ரேண்டம் அடிப்படையில் சோதிக்க வேண்டும்.

எங்களிடம் நிதி இல்லை, கிட்களும் இல்லை, முழுமையான பற்றாக்குறை உள்ளது; எனவே, நீங்கள் சோதிக்க விரும்பினாலும், உங்களால் முடியாது. அவற்றை கவனிப்பதே விஷயம். ஊரடங்கை அதிகபட்சமாக 28 நாட்கள் வைத்திருங்கள், அதற்குள் நீங்கள் அறிகுறியற்றவராக இருந்தாலும் கூட உங்கள் உடலில் இருக்கும் வைரஸ் இறந்துவிடும். நீங்கள் நேர்மறை என்று சோதித்தாலும், உங்கள் உடலில் வைரஸ் இறந்திருக்கும்.

நான் பொது விஷயத்தைச் சொல்கிறேன், மருத்துவ ரீதியாக இதை நிரூபிக்க வேண்டும். இது கேரளாவிற்கு முக்கிய பயணமாகும். பாருங்கள், கேரளா அதன் சுகாதார சாதனைகளுக்கு மிகவும் பிரபலமானது மற்றும் இவை ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் அடையப்பட்டுள்ளது. அது ஆச்சரியத்தக்கது. கேரளாவின் சுகாதார சாதனைகள், வளர்ந்த நாடுகளுடன் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்திருக்கின்றன, ஆனால் எங்களது தனிநபர் வருமானம் மிகவும் குறைவாக உள்ளது. எனவே, எஸ்.டி.ஜி இலக்குகளை அடைவதற்கான மிகவும் நிலையான வழி மற்றும் பலவற்றை நான் கூறுவேன்.

கேரளாவின் அனுபவத்தில் இருந்து இதை நான் எடுத்துக்கொள்வேன்: சோதனை, ஆம், அதிக பரிசோதனைகள் உள்ளன. ஆனால் சோதனைகள் மட்டுமே போதாது. எல்லோரையும் சோதித்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை. அறிகுறி உள்ள எவரையும் மாநிலங்கள் தனிமைப்படுத்த வேண்டும். யாராவது கோவிட்+ ஆக இருந்தால், அவர்களின் எல்லா தொடர்புகளையும் கண்டுபிடித்து, அவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

எனவே, மத்திய கிழக்கில் இருந்தும், இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் கேரளாவுக்கு வருவோரை பொறுத்தவரை, நீங்கள் மருத்துவ ரீதியாக உதவ வேண்டும், உங்கள் கவனம் உண்மையில் ஆரோக்கியம் மீதாக இருக்கும், பொருளாதாரம் மீதல்ல என்று சொல்லலாமா?

இல்லை. நாங்கள் எங்கள்து பொருளாதாரத்தை கவனிக்க போகிறோம். அதுவே முதல்படி. அத்துடன், வெளியில் இருந்து வருபவர்களை நாங்கள் தனிமைப்படுத்துவோம். பின்னர், எங்கள் பாதிக்கப்படக்கூடிய மக்கள் அனைவரையும் நாங்கள் தனிமைப்படுத்துவோம் - சுமார் 2 மில்லியன் மக்கள், முதியவர்கள், பாதிக்கப்படக்கூடியவர்கள், வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியிருக்கும்; ஊரடங்கு விலக்கு என்பது அவர்களுக்கு பொருந்தாது. மீதமுள்ளவர்கள் வேலைக்குச் செல்வார்கள். இந்த நபர்களை நாங்கள் நிர்வகிக்கிறோம் - அவர்கள் மற்றும் பலருக்கு அறிகுறிகளை உருவாக்கினால், அவர்கள் கவனிக்கப்பட்டு சோதிக்கப்படுவார்கள்.

நீங்கள் சார்ஸ் கோவி2 உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் - என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும், பின்னர் நெகிழ்வாக இருக்க வேண்டும்; நீங்கள் பச்சை மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலத்திற்கும், சிவப்பில் இருந்து பச்சை மண்டல பகுதிக்கும் நகருவீர்கள். ஆனால் உங்கள் பொருளாதாரம் 50%, 60% அல்லது 70% வரை செயல்படும். பின்னர் நீங்கள் உங்கள் முன்னுரிமைகளை கீழே வைக்க வேண்டும். நீங்கள் என்ன திறக்கவோ, செயல்படுத்தவோ போகிறீர்கள்?

நாங்கள் சில முன்னுரிமைத் துறைகளைப் பற்றி சிந்திக்கிறோம். எங்கள் சுகாதார பிராண்ட் நல்லது; எனவே, கேரள மருத்துவ சாதனங்கள், மருந்துகள் பொதுவான பிராண்டை கொண்டிருப்பதற்கான தொழில்முனைவோரின் கூட்டமைப்பைப் பெறுவதில் கவனம் செலுத்தப் போகிறோம். இரண்டு, எங்கள் சுற்றுலா - உலகின் பாதுகாப்பான இடமாக எங்கள் சுற்றுலாவை வெளிக்கப் போகிறோம். எந்த நவல் கொரொனா வைரசும் உங்களை அண்டாது, நீங்கள் கவனித்து கொள்ளப்படுவீர்கள்.

இது கடவுளின் சொந்த பாதுகாப்பான நாடு…

ஆம்… எனவே எங்களிடம் சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், பின்னர் சாகுபடி உள்ளது. காய்கறிகளை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம், பயிரிடுதல் மற்றும் பல. இப்போது மக்கள் வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கிறார்கள், எனவே இதைச் செய்வோம் - எனவே எங்களுக்கு ஒரு தெளிவான வெளிவரு உத்தி உள்ளது. கொரோனா வைரஸ் உடன் நாம் வாழப் போகிறோம், வெளியே வரப்போகிறோம். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால்: உங்களிடம் பொது சுகாதார அமைப்பு இல்லாவிட்டால் இதை செய்ய முடியாது. எனவே, நாங்கள் எங்கள் பொது சுகாதார அமைப்பிலும் முதலீடு செய்வோம்.

இந்தியாவின் பிற பகுதிகளில், ஒரு சிக்கல் உருவாகப் போகிறது, நோய் மீண்டும் பரவத் தொடங்கும் போது, அதை கட்டுப்படுத்தப்படாவிட்டால், நீங்கள் மீண்டும் தொற்றுநோயுடன் இருக்க வேண்டியிருக்கும். எனவே, கண்டிப்பாக பொது மருத்துவமனைகளை பற்றி இந்திய அரசு சிந்திக்க வேண்டும். சில ரிசார்ட்டுகளை பொது மருத்துவமனைகளாக மாற்றி மருத்துவர்களை நியமித்து வேலைக்கு அமர்த்த வேண்டும். இதற்காக ரூ.15,000 கோடி அல்ல, ஒரு டிரில்லியன் ரூபாய் கூட செலவழிக்க வேண்டும். கோவிட் -19க்கு வெறும் ரூ .15,000 கோடியுடன் போராடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது வெட்கக்கேடானது. அதுவும் மூன்று ஆண்டுகளுக்கு பரவி நிற்கும். இது என்ன சிந்தனை? எப்படியிருந்தாலும், நாங்கள் தொடங்க விரும்புகிறோம்…

கடந்த எட்டு முதல் 10 வாரங்களில் மிகவும் தீவிரமான காலம் இருந்தது. இந்நோயை எதிர்த்துப் போராடுவதற்கான நமது திறனிலும், உயிர் வாழ்வதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும் நம்முடைய சொந்த நம்பிக்கையுடனும் முன்னால் இருக்கும் சில வழிகளில் உங்கள் மனதில் இருக்கும் ஒரு உதாரணம் என்ன?

கேரளாவில் நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் ஆவதை நான் மிகச்சிறந்ததாக கருதுகிறேன். மருத்துவமனைக்கு முன்னால், அவர்களை வழியனுப்பி வைத்திருக்கிறார்கள் - மருத்துவமனை விட்டு நோயாளிகள் புற மருத்துவமனை சுகாதார ஊழியர்கள் அனைவரும் வெளியே வருகிறார்கள், இந்த மக்கள் வெளியேறும்போது அவர்கள் அனைவரும் கைதட்டுகிறார்கள். நாளுக்கு நாள், ஒவ்வொரு மருத்துவமனையிலும் இது மீண்டும் மீண்டும் நடக்கிறது. எங்கள் சுகாதார ஊழியர்கள், நோயாளிகளை கவனித்துக் கொண்ட விதம் நெகிழச்செய்கிறது. நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு நன்றிக் கடன் செலுத்துகின்னர். அது என்னை நகர்த்திய நிகழ்வுகளின் ஒன்று. குறிப்பாக, எங்கள் மலையாள செவிலியர்கள் சிலர், தாங்கள் பணி புரியும் உயர் அடுக்கு மருத்துவமனைகளில் தங்களுக்கு பாதுகாப்பு கருவிகள் இல்லை, மருந்துகள் இல்லை என்கின்றனர். அவற்றுடன் ஒப்பிடும் போது எங்கள் தாலுகா அளவிலான சிறிய மருத்துவமனைகள் மக்களை சிறப்பாக நடத்துகின்றன. அது எனக்கு பெருமை சேர்க்கும் ஒன்று - எங்களுக்கான பாரம்பரியம்.

இரண்டாவதாக, கேரளாவில் கூட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சமமாக கருதப்படுவதில்லை. நாம் அவர்களை விரும்ப வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். கூட்டுறவு சங்கங்கள் உள்ளன, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கோவிட் -19 நெருக்கடியின் போது அவர்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்க முடிந்தது. ஒவ்வொரு ரயிலிலும் வழியனுப்பும் காட்சிகள் இருந்தன - அனைவரும் ஒருவருக்கொருவர் கை அசைந்தனர். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. யாரும் யோசிக்கவில்லை. திரும்பி வாருங்கள், நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம். உங்களுக்கு இங்கே வேலை இருக்கிறது என்கிறோம். அது ஒரு நல்ல உணர்வு.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Load more

Similar News