பயன்படுத்தப்படாத சுகாதார நிதி; நாடு முழுவதும் 24%-38% சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை

X

மும்பை: நாடு முழுவதும் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை மையங்கள், சமுதாய சுகாதார மையங்களில், 24%-38% சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது என்று, மத்திய தலைமை கணக்காயர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார இயக்கம் (NHM) குறித்த சி.ஏ.ஜி. மதிப்பீன் முதல் பகுதியில், நிதி நிர்வாகத்தின் சிக்கல்களை நாம் கவனித்தோம். இதன் முடிவில் சுகாதார மையங்களில் நிலவும் உள்கட்டமைப்பு வசதிகள், மனிதவள பற்றாக்குறை குறித்து நாம் விரிவாக பார்க்கவிருக்கிறோம்.

இந்த ஆய்வில், கிராமங்களில் 73% துணை சுகாதார மையங்கள் 3 கி.மீ. தொலைவில் இருப்பதும்; 28% மையங்கள் போக்குவரத்து வசதியின்றியும், 17% சுகாதாரமற்றும் இருப்பது தெரிய வந்துள்ளது. 24 மாநிலங்களில் உள்ள மையங்களில், அத்தியாவசிய மருந்துகள் போதிய அளவில் இல்லை. இவற்றில் 8 மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பல மையங்களில், வைட்டமின் – ஏ, கருத்தடை மாத்திரைகள், ரீஹைட்ரஜன் சொல்யூஷன், அத்தியாவசிய மகப்பேறியல் கருவிகள் போன்ற சுகாதார வசதிகள் இல்லை.

கடந்த 2005-ல் தொடங்கப்பட்ட தேசிய சுகாதார இயக்கம் (NHM), உலகளாவிய அணுகலை வழங்கக்கூடிய இந்தியாவின் மிகப்பெரிய சுகாதாரத்திட்டம் ஆகும். இது கிராமப்புற சுகாதார அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் அதன் திறன்களை வலுப்படுத்தும் வகையில், மாநில சுகாதார சங்க நிதியை கொண்டு செயல்படுத்தப்படுகிறது. ஆனால், கட்டுரையில் தொடக்கத்தில் கூறியபடி, மாநில அரசுகள் இதற்கான நிதியை உகந்தமுறையில் பயன்படுத்துவதில்லை; 2016 உடன் முடிந்த 5 ஆண்டுகளில், 29% நிதி பாக்கியை, மாநிலங்கள் விட்டுவைத்துள்ளன. இது, இந்தியாவின் சுகாதார வசதிகளின் கீழ் உள்கட்டமைப்பு மற்றும் மனித வளம் ஆகிவற்றில் இடைவெளியை ஏற்படுத்துகிறது.

சிறப்பு நிபுணர்கள் இல்லாத 77% முதல் 87% சுகாதார மையங்கள்

மருத்துவர்கள், நிபுணர்கள், உதவியாளர்கள், மருத்தாளுனர்கள், செவிலியர்கள், மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஊழியர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தடையின்றி, தரம் வாய்ந்த சுகாதார சேவையை மக்களுக்கும் வழங்க முடியும் என்பதே, தேசிய சுகாதார இயக்கத்தின் நோக்கமாகும். புதிய ஒப்பந்த பணியாளர் நியமனங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க தயாராக உள்ள நிலையில், மாநில அரசுகள் தற்போதுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பீகார், ஜார்கண்ட், சிக்கிம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் ஆகிய ஐந்து மாநிலங்களில் சுகாதார மைய ஊழியர் பற்றாக்குறை என்பது, 50%-க்கும் மேல் இருப்பதாக, சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகார் மாநில சுகாதார மையங்களில், 92% பற்றாக்குறை நிலவுகிறது.

மாநிலங்கள் முழுவதும், 77% முதல் 87% சமுதாய சுகாதார மையங்கள், மகளிர் மருத்துவ வல்லுநர்கள், குழந்தைநல மருத்துவர்கள் போன்ற சிறப்பு மருத்துவர்கள் இல்லாமல் இயங்கி வந்தது, ஆய்வில் தெரிய வந்தது. போதிய பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது; மாநில அரசுகளால் மருத்துவர்களும், வல்லுனர்களும் பகுத்தாய்வு செய்யாமல் பணியமர்த்தப்படுகின்றனர் என்று, அமைச்சகம் இதற்கு பதில் அளித்துள்ளது.

Source: Comptroller and Auditor report

நாட்டின் 13 மாநிலங்களில் அதாவது ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகியவற்றில், 305 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 67 மையங்களில் மருத்துவர்கள் இல்லை.

நாட்டின் 13 மாநிலங்களில் உள்ள சுகாதார மையங்களில், 10% மையங்களில் பெண் பணியாளர்கள் இல்லை; 22 மாநிலங்களில், 65% ஆண் சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. பேறுகால சிகிச்சையின் போது பெண் சுகாதார ஊழியர்களே முதன்மையாக விளங்குகின்றனர். எனினும், ஆண் சுகாதார பணியாளர்கள் தங்கள் சேவையை தொடர்ந்து பூர்த்தி செய்ய முடியும் என்று, 2017 மார்ச் 22-ல் இந்தியா ஸ்பெண்ட் குறிப்பிட்டிருந்தது.

24 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட 236 சமுதாய சுகாதார மையங்களில், 2360 செவிலியர்கள் தேவை என்ற நிலையில், 1,303 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர்.

பயன்படுத்தாத உள்கட்டமைப்புக்கு வழிவகுக்கும் மனிதவள பற்றாக்குறை

20 மாநிலங்களில், 1,285 வேலைகள் செய்து முடிக்கப்பட்டிருந்தாலும் அவை செயல்பாட்டுக்கு வரவில்லை. 17 மாநிலங்களில், அல்ட்ராசவுண்ட், எக்ஸ்-ரே, ஈசிஜி, இதய கண்காணிப்பு கருவி, அறுவை சிகிச்சை தியேட்டர்கள் மற்றும் ரூ.30 கோடி செலவில் ரத்த சேமிப்பு ஆகியவற்றிற்கான 428 உபகரணங்கள் ஆகியன, மருத்துவர்கள் மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட நபர்கள் இல்லாததால் பொருத்தப்படாமல் உள்ளன.

12வது ஐந்தாண்டு திட்டத்தில் சுகாதார வசதிகளின் குறைபாடுகளுக்கு நிதி பற்றாக்குறையே பெரும்பாலும் காரணமாக இருந்தது என்று, அமைச்சகம் குறிப்பிட்டது. ரூ. 1,93,405 கோடிக்கு பதில், ரூ. 91,022 கோடி மட்டுமே கிடைத்தது. இருப்பினும் இந்த பதிலை சி. ஜி.ஏ. ஏற்கவில்லை; ஏனெனில், மாநிலங்களிடம் பயன்படுத்தப்படாத நிதி கணிசமாக இருந்தது.

மின் வசதி, போதிய தண்ணீர், சுகாதார வசதிகளற்ற மையங்கள்; வெளிச்சம் போட்டு காட்டும் தணிக்கை அறிக்கை

மருந்துகள் வழங்கல் உட்பட சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் (NRHM) கீழ் மாநிலங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய மருந்துகளை இலவசமாக வழங்குதல், வலுவான கொள்முதல் முறை, விநியோகி கொள்கைகளைத் தயாரிப்பது மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு என்.ஆர்.எச்.எம். திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு 5% வரை ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.

1,443 துணை மையங்கள், 514 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 300 சமூக நலக்கூடங்கள் மற்றும் 134 மாவட்ட மருத்துவமனைகளில் சி.ஏ.ஜி. நடத்திய ஆய்வில், தேசிய சுகாதார இயக்கத்தின் உத்தரவுகளை மாநிலங்கள் ஏற்று செயல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சுகாதார மையங்கள் ஆரோக்கியமற்றதாகவும், எளிதாக செல்லக்கூடிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் உள்ளன. மோசமான கட்டிடங்கள், போதிய தண்ணீர், மின்சார வசதி இல்லாதது, ஆண், பெண் பயனாளிகளுக்கு தனித்தனி வார்டு இல்லாதது, பணியாளர்களுக்கு அறை இல்லாதது போன்றவை அடங்கும்.

Health Facilities, By State, 2011-2016
Sub Centres Primary Health Centres Community Health Centres District Hospitals
Factors found deficient No. % States /UT No. % States /UT No. % States /UT No. % States /UT
Distance of more than 3 km 1031 73 29 NA NA NA NA NA NA NA NA NA
Not accessible by public transport 404 28 28 104 20 24 NA NA NA NA NA NA
Unhygienic surroundings 236 17 27 96 19 27 78 26 19 40 30 24

Source: Comptroller and Auditor report

சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேசம், மிசோரம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் நடமாடும் மருத்துவ அலகுகள் செயல்படவில்லை; அவை, 10 மாநிலங்களில் பகுதியளவு இயங்கி வந்துள்ளன.

25 மாநிலங்களில் துணை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்; 17 மாநிலங்களில் சமூக சுகாதார மையங்கள் ஆகியவற்றின் கட்டுமானக் குறைபாடு, 32% முதல் 44% வரை இருந்தது. நான்கு மாநிலங்களில் (கேரளா, மணிப்பூர், மிசோரம் மற்றும் உத்திரப் பிரதேசம்) ஆகியவற்றுக்கு ரூ. 2,208 கோடி மதிப்பில், 400 பணிகள் வழங்கப்பட்டன.

Source: Comptroller and Auditor report

எட்டு மாநிலங்களில், ஆம்புலன்ஸ் வாங்க ரூ. 175 கோடி ஒதுக்கப்பட்டதில், ரூ 156 கோடி (89%) பயன்படுத்தப்படாமல் உள்ளது. நிர்வாக தாமதங்கள், கொள்முதலுக்கான டெண்டர் பணிகளை தொடங்காதது, நிதியை வேறு பணிகளுக்கு பயன்படுத்துதல் போன்றவை தணிக்கையில் கண்டறியப்பட்டன.

மருத்துவ உபகரணங்களுடன் அக்‌ஷா தொழிலாளர் பணியிடம் நிரப்பப்படவில்லை

24 மாநிலங்களில் உள்ள மையங்களில், அத்தியாவசியமருந்துகள் கிடைப்பதில்லை என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் எட்டு மாநிலங்களில் அத்தியாவசிய மருந்துகள்/ வைட்டமின் ஏ, கருத்தடை மாத்திரைகள், நீரிழிவு நோய்த்தடுப்புக்கான மருந்துகள், இனப்பெருக்கக் குழாய் தொற்று மற்றும் பாலுறவு நோய்த்தொற்று தடுப்பு மருந்து, அத்தியாவசிய மகப்பேறியல் கருவிகள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பல சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை.

பொது சுகாதார வசதிகளில் அத்தியாவசிய மருந்துகளை இலவசமாக வழங்குவது என்பது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதன்மை சுகாதார வசதிகளில்ம் 58% மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கிடைப்பதாக, ராய்பூரில் உள்ள மாநில சுகாதார வள மையத்தின் ஆய்வை சுட்டிக்காட்டி, 2018 ஜூன் 13-ல் இந்தியா ஸ்பெண்ட் செய்தி வெளியிட்டிருந்தது. இது, நோயாளிகளை வெளியில் அதிக விலை கொடுத்து மருந்துகளை வாங்க கட்டாயப்படுத்துகிறது.

ஒவ்வொரு அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர் (ASHA) ஆஷாவுக்கும், மருந்துகள், உபகரணங்களை கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவை, மிக முக்கியமானவை, ஏனெனில், சமுதாய மக்களின் ஆரோக்கியம் காக்க, ஆஷா சுகாதார பணியாளர்களுக்கு இது உதவுகிறது.

ASHAs Not In Possession Of Item/Medicine
Item Number surveyed Percent of total ASHAs
Disposable delivery kit 3,249 83
Blood pressure monitor 3,170 81
Thermometer 1,060 27
Pregnancy kit 1,428 28
Weighing scale (for newborns) 887 23
Deworming pills 1,299 33
Paracetamol tablets 1,006 26
Iron pills 878 22

Source: Comptroller and Auditor report

ஆஷா திட்டத்தில், ரத்த அழுத்த கருவி, வெப்பமானி, கர்ப்பகால சாதனம், எடை கருவி மற்றும் மயக்க மருந்துகள், பாராசெட்மால் மாத்திரைகள் மற்றும் இரும்பு மாத்திரைகள் போன்றவை, கருத்தரித்தல் மற்றும் குழந்தை நலத்துக்கு அவசியம் வழங்கப்பட வேண்டியவை.

நாட்டின் 10 மாநிலங்களில் (பீகார், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, ராஜஸ்தான், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம்), மருந்து உபகரணங்களை நிரப்புவதில் தாமதங்கள், மற்றும் ஆஷா கருவிகள் கிடைக்காதது போன்றவை தெரிய வந்துள்ளது.

நிர்வாக குறைபாடுகளால், 28 மாநிலங்களில் இரும்புச்சத்து ஃபோலிக் அமில மாத்திரைகள் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது. இதேபோல், நான்கு மாநிலங்களில் (அருணாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் மற்றும் மேகாலயா), டெட்டானஸ் டோக்ஸாய்டு தடுப்பூசிகள் (டிடி1 மற்றும் டிடி2) போடாததால், 50% கர்ப்பிணிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

தற்போது பொது சுகாதாரத்துறையில், மருந்து பயன்பாடு, இருப்பு கையாளுதல் மற்றும் வழங்கும் பணிகளில் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் பயன்பாடு ஊக்குவிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

தேசிய தரக் காப்புறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிறுவன கட்டமைப்பானது, அனைத்து மட்டங்களிலும் அதாவது தேசிய, மாநில, மாவட்டம் வாரியாக, சேவைகளின் தரத்தை உறுதி செய்ய தவறியதாக, இந்த சி.ஏ.ஜி. தணிக்கை குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மாவட்ட மருத்துவமனைகள், சமுதாய மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக, 2013 ஆம் ஆண்டில், இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

19 மாநிலங்களில் 716 திட்டங்கள் இருந்த நிலையில், அதில் 308-ல் மட்டுமே (43%), உள்தர உறுதிப்பாடு குழு அமைக்கப்பட்டது. அதேபோல், 15 மாநிலங்களின் 541 சுகாதார திட்டங்களில், 114 (21%) மட்டுமே, உள்நாட்டு மதிப்பீடு முறை ஏற்படுத்தப்பட்டது.

இத்தொடர் முடிந்தது; நீங்கள் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.

(சால்வி, இந்தியா ஸ்பெண்ட் ஆய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story