உலக சுகாதார பாதுகாப்பை பா.ஜ.க., காங்கிரஸ் ஆதரிக்கையில் தரவுகள் வாக்காளர் விருப்பத்தை வெளிப்படுத்தலாம்

உலக சுகாதார பாதுகாப்பை பா.ஜ.க., காங்கிரஸ் ஆதரிக்கையில் தரவுகள் வாக்காளர் விருப்பத்தை வெளிப்படுத்தலாம்
X

புதுடெல்லி: அரசு மிகவும் தாமதமாக மார்ச் 2019இல் தேசிய குறிக்காட்டி வடிவமைப்பு (NIF) மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDG) அதிகாரபூர்வ அறிக்கையின் தற்காலிக பதிப்பை வெளியிட்டது. 2030ஆம் ஆண்டு காலக்கெடு மூலம், இந்தியாவின் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் முன்னேற்றம், 2015 ஆம் ஆண்டிற்கான தேசிய குறிக்காட்டி வடிவமைப்பின் அடிப்படை அறிக்கையை கொண்டு கண்காணிக்கப்படும்.

இது இந்தியாவின் பெரிய அளவில் கண்காணிப்பு கட்டமைப்பை உள்ளடக்கியுள்ளது. நிலையான வளர்ச்சி இலக்குகள் ஒன்று முதல் 16 க்குள்306 புள்ளியியல் குறிகாட்டிகள் உட்பட - இதில் இலக்கு 17 கருதப்படவில்லை - பொருளாதார வளர்ச்சி, சமூக சேர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.

சிறந்த அளவீட்டு, அதிக ஆதாரம் மற்றும் தகவல் தொடர்பு அறிக்கை ஆகியன சமூகத்துறை செயல்திறனை கண்காணிக்கவும், வாக்காளர் விருப்பத்தை அறிவிக்கவும் முடியும். உண்மையில், இன்னும் பல சான்றுகள், கணக்கெடுப்புத் தரவு வடிவத்திலும் நிதி ஆயோக் மற்றும் ஐ.நா. போன்ற நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சில முயற்சிகள், வரவிருக்கும் தேர்தலுக்கு முன்பு உள்ள ஆதாரங்களாக உள்ளன.

புள்ளி விவரங்கள் காட்டுவது என்ன

நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்கு அடிப்படையிலான அறிக்கை நாடெங்கிலும் சுகாதார சேவைகளை மேம்படுத்துதல், சமச்சீரற்ற தன்மையை உயர்த்துவதை காட்டுகிறது. சுகாதார நிலையான வளர்ச்சி இலக்கின் முதல் செயல்பட்டாளர்களின் இரண்டு மாநிலங்கள் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் அதன் கூட்டணியால் ஆட்சி செய்யப்படுகின்றன. மூன்று காங்கிரஸ் மற்றும் கூட்டணிகளாலும், ஐந்து பிராந்திய கட்சிகளாலும் ஆட்சி செய்யப்படுகின்றன.

மறுபக்கம், கீழேயிருந்து முதல் 10 செயல்பாட்டாளர்களில் ஏழு பா.ஜ.க. மற்றும் கூட்டணிகளின் ஆட்சி, காங்கிரஸ் மற்றும் கூட்டணி ஆட்சி ஒன்று மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் (மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டாட்சி பகுதிகள்).

Source: SDG India Index Baseline Report, 2018

கடந்த 2018 சுகாதார குறியீட்டு முன்முயற்சியானது அரசின் நிதி ஆயோக் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக தலைமையில், இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதாரத் துறை செயல் திறனை அளிக்கும் வகையில் மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைகளை வழங்கியது. தரவுத்தளமானது மாநில அளவிலான செயல்திறன் பற்றிய ஆழமான பகுப்பாய்வுகளை செயல்படுத்துகிறது.

பெரிய மாநிலங்களில் கேரளா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஐஎம்ஏ தலைமையிலான கூட்டணியின் ஆட்சி), பஞ்சாப் (காங்கிரஸ் +),மற்றும் தமிழ்நாடு (அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) ஒட்டுமொத்த செயல்திறன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டது.

Source: Niti Aayog

இதில் உத்திரப்பிரதேசம் (பா.ஜ.க.), ராஜஸ்தான் (காங்கிரஸ்), பீகார் (பா.ஜ.க. +) ஆகியன மோசமானவை.

சிறிய மாநிலங்களில் மிசோரம் (மிசோ தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணி, அல்லது எம்.என்.எப் +), மணிப்பூர் (பா.ஜ.க.) மற்றும் மேகாலயா (பா.ஜ.க.) ஆகியன சிறப்பாகவும், அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா மற்றும் நாகாலாந்து (அனைத்திலும் பா.ஜ.க. +) ஆகியன மோசமாகவும் உள்ளன.

சுகாதார குறியீட்டின் பல்வேறு கூறுகள் சுவாரசியமான மாநில அளவிலான முறைகளை வீசியுள்ளன. கேரளா (சி.பி.ஐ.எம்.+), பஞ்சாப் (காங்கிரஸ் +),தமிழ்நாடு (அ.இ.அ.தி.மு.க.) மற்றும் மகாராஷ்டிரா (பா.ஜ.க. +) ஆகியன தேசிய சுகாதாரக் கொள்கை (NHP) 2017-ன்படி, 2025ஆம் ஆண்டில் பிறந்த குழந்தை இறப்பு விகிதம் 1000 நோயாளிகளுக்கு 16 என்பதை ஏற்கனவே எட்டிவிட்டன. கேரளாவில் (சி.பி.ஐ.எம். +) நிலையான வளர்ச்சி இலக்கு -2030 1000 பிரசவத்திற்கு 12 என்பதை எட்டிவிட்டன.

எனினும் ஒடிசா (பிஜு ஜனதாதளம் அல்லது பி.ஜே.டி), மத்திய பிரதேசம் (காங்கிரஸ் +), உத்திரப்பிரதேசம் (பா.ஜ.க. +), ராஜஸ்தான் (காங்கிரஸ் +) மற்றும்பீகார் (பா.ஜ.க. +) மிக அதிகமான பிரசவத்தின் போது குழந்தை இறப்பு விகிதத்தை இன்னும் கொண்டுள்ளன.

சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான எண்ணிக்கை விவரம் இன்னும் கிடைக்கவில்லை.

பீகார் (பா.ஜ.க.+), மத்திய பிரதேசம் (காங்கிரஸ் +), ஜார்கண்ட் (பா.ஜ.க. +), சத்தீஸ்கர் (காங்கிரஸ் +) மற்றும் மணிப்பூர் (பா.ஜ.க. +) ஆகிய மாநிலங்கள் முதன்மையான சுகாதார மையங்களின் மருத்துவர் விகிதம் மிக மோசமாக காட்டியுள்ளன. எவ்வாறெனினும், ஒட்டுமொத்த குறியீட்டிற்குள் சிறந்த செயல்பாடுகளை மணிப்பூர் (பா.ஜ.க. +) ஒன்றாக உள்ளது.

துண்டிக்கப்பட்ட தரவுகள், அருணாச்சல பிரதேசம் (பா.ஜ.க. +), சத்தீஸ்கர் (காங்கிரஸ் +), ஹரியானா (பா.ஜ.க. +), அசாம் (பா.ஜ.க. +) மற்றும் நாகாலாந்து (பா.ஜ.க. +) ஆகியன குறைந்தபட்ச மதிப்பெண் பெற்ற போதும் 100% பிறப்பு விகிதத்தை பதிவு செய்துள்ளதை இது காட்டுகிறது.

வாக்காளர் தேர்வை தெரிவித்தல்

சமீபத்திய ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய தொகுதி வாரியான பகுப்பாய்வு, சுகாதார குறிகாட்டிகள், இந்த தேர்தலில் முன்னணி பெற எத்தகைய பொறுப்பை கொண்டிருக்கும் என்பதை காட்டியதாக, மார்ச் 22, 2019 அன்றைய இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.

அரசியல் அலைக்கற்றையில் மூத்த தேசிய தலைவர்களின் தொகுதிகளில் கூட, பல்வேறு வகையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்சம் மக்களவையில் அதன் ஆதிக்க இருப்பு பிரதிபலிப்பு (268இல் காங்கிரஸ் 45); பாரதீய ஜனதா கட்சி, அதன் கூட்டணி கட்சிகள் அனைத்திலும் ஆனால், 10 மக்களவை தொகுதிகளில் இரண்டின் செயல்பாடு மோசமான ஊட்டச்சத்து திறனை கொண்டிருந்தன.

Gulbarga, Amethi, Guna And Varanasi Worst Performers On Stunting
Parliamentary Constituency Member of Parliament Political Party Stunting Prevalence (In %)
Gulbarga Mallikarjun Kharge Indian National Congress 49.7
Amethi Rahul Gandhi Indian National Congress 43.6
Guna Jyotiraditya Madhavrao Scindia Indian National Congress 43.2
Varanasi Narendra Modi Bharatiya Janata Party 43.1
Gwalior Narendra Singh Tomar Bharatiya Janata Party 43
Vidisha Sushma Swaraj Bharatiya Janata Party 40.4
Lucknow Rajnath Singh Bharatiya Janata Party 40.3
Azamgarh Mulayam Singh Samajwadi Party 40.1
Rae Bareli Sonia Gandhi Indian National Congress 37.7
Jaipur Rural Rajyavardhan Rathore Bharatiya Janata Party 35.7
Ghaziabad V K Singh Bharatiya Janata Party 35.5
Chhindwara Kamal Nath Indian National Congress 34
Bangalore (North) Sadanand Gowda Bharatiya Janata Party 29.6
Nagpur Nitin Gadkari Bharatiya Janata Party 28.3
Arunachal Pradesh West Kiren Rijiju Bharatiya Janata Party 26.6
Baramati Supriya Sule Nationalist Congress Party 24.3
Hyderabad Asaduddin Owaisi All India Majlis-E-Ittehadul Muslimeen 20.6
Thiruvananthapuram Shashi Tharoor Indian National Congress 18.5

Source:State of Nutrition Among Children, Lok Sabha

இந்தியாவில் முதல்முறையாக தேர்தலில் சுகாதார கொள்கையானது முக்கிய இடத்தை பெற்றுள்ளது; ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) அரசு பெரிய மருத்துவ திட்டமான ஆயுஷ்மன் பாரத், தாக்கம் ஏற்படுத்தியது. அனைத்து இந்திய குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% சுகாதாரத்திற்கு செலவழிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இரு பெரிய தேசிய கட்சிகளும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்புக்கு கணிசமான முயற்சிகள் மேற்கொள்ள ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளன; இது இப்பிரச்சனையை தீர்க்க இந்தியாவுக்கு ஒரு வரலாற்று வாய்ப்பை வழங்குகிறது.

அதே நேரம், முன்எப்போதுமில்லாத சுகாதார தகவல்கள் அணுகல் திட்ட தடத்திற்கு உதவுகிறது, தாக்கத்தை மதிப்பீடு செய்ய முடியும். இந்தியாவில் ஒட்டுமொத்த சுகாதாரத் தகவல் முறைகளின் தரமும் சமமாக இல்லை என்றாலும், அரசு பணிகளை செய்ய வேண்டும்.

எனினும், கொள்கை விவாதங்கள் குறைவாக உள்ளன; சான்றுகள் மற்றும் தொடர்புடைய எண்ணிக்கை மூலம் அறியப்படாமல் அர்த்தமுள்ள கொள்கை உரையாடல்களை பாதிக்கும் போலி செய்திகளின் ஆபத்து அதிகரிக்கும்.

ஆதாரங்களை வழங்குதல்

அதேபோல், நிதி உடல்நல குறியீட்டு தரவுத்தளம், 24 குறிகாட்டிகளால் மாநில அளவிலான தரவரிசை, கருப்பொருள்கள், அதேபோல் ஒரு கூட்டு சுகாதார குறியீட்டிற்கும் அனுமதிப்பது ஒரு ஊக்கமளிக்கும் ஆதாரமாக உள்ளது. திறம்பட அதை பயன்படுத்த மற்றும் தரவு தகவல் கொள்கை விவாதங்கள், வரவிருக்கும் பொதுத்தேர்தல்,ஊடகங்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் சிறந்த ஒரு வாய்ப்பாகும்.

இந்தியா ஸ்பெண்டின் மூன்று தொடர்ச்சியான கட்டுரைகள், அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் நிதி உடல்நலம் குறியீட்டு தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்டது; அத்துடன் மற்ற ஆதாரங்களாக பல்வேறு சுகாதார களங்களில் மாநில சுகாதார செயல்திட்டங்களை நாம் ஆராய்வோம்.

இத்தொடரில், முதன்மை பகுதியானது நிலைமை, இறப்பு மற்றும் சுகாதார சேவை வழங்கல் ஆகியவற்றில் மாநில அளவிலான தரவு மற்றும் தரவரிசைகளை விவரித்தது. இந்தியாவில் சுகாதாரத்திற்கான அதிகமான வளங்களை விடுவிப்பதற்கு குடும்ப கட்டுப்பாட்டில் இருந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கான ஆதாரங்களை தற்போது இது வழங்குகிறது.

அடுத்த பகுதியானது நிர்வாகப் பிரச்சினைகள், சில உடல்நலம் குறித்த முடிவுகள் மற்றும் மத்திய-மாநில அரசுகள், உள்துறை ஆகியன எவ்வாறு சுகாதார விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை விளக்கவுள்ளது. இத்தொடரின் இறுதிப்பகுதியானது, முக்கிய உள்ளீடுகளையும் செயல்களையும் குறிப்பாக மனித வளங்களின் அடிப்படையில் முன்னோக்கிகள், வழிகாட்டல்களை சுட்டிக்காட்டும்.

(குரியன், அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் சுகாதார முன்னெடுப்பில் ஒரு நபராவார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story