சுகாதாரத்திற்கு செலவிடுதல் அதிகரிக்க வாய்ப்பிருந்தும் இந்தியாவில் பொது சுகாதார வசதிகள் ஏன் பாதிக்கப்படுகிறது

X

புதுடெல்லி: 2019 பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு, 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ. 52,800 கோடி (பட்ஜெட் திட்ட மதிப்பீடுகள்) என்பது, அடுத்த நிதி ஆண்டில் (2019-20) ரூ. 59,039 கோடியாக 11% அதிகரிக்க வாய்ப்புள்ளது என, மத்திய நிதி அமைச்சகம் 2018 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால செலவு திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி- தே.ஜ.கூ. (NDA) அரசு, தேசிய சுகாதார இயக்கம் (NHM) எனப்படும் தனது பிரதான திட்டத்திற்கான நிதியை வரும் ஆண்டில் 17% அதிகரித்து, 2018-19ல் ரூ.30,634 கோடி என்பது, 2019-20ஆம் ஆண்டில் ரூ.35,962 கோடி என, ரூ.5,328 கோடி அதிகரிக்கக்கூடும்.

அந்த அறிக்கையில், மூன்றாவது பாதுகாப்பு திட்டத்திற்கு (பிரதம மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்‌ஷா யோஜனா - PMSSY) நிதி ஒதுக்கீடு, 2018-19ல் ரூ.3,825 கோடி என்றிருந்தது, 2019-20ஆம் ஆண்டில் ரூ.3,170 கோடியென, 17% குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் பொது சுகாதார உள்கட்டமைப்பு முக்கியம்

பொது சுகாதார உள்கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள் குறைந்து வருவதாக, சுகாதாரத்துறைக்கான திட்டமிடப்பட்ட ஒதுக்கீடு சுட்டிக்காட்டுகிறது. ஏனென்றால், மத்திய அரசு மூன்றாம் தரப்பினரின் பராமரிப்பு செலவில் இருந்து முதல் மற்றும் இரண்டாம்நிலை சுகாதார பாதுகாப்புக்கான வளங்களை ஒதுக்கீடு செய்யக்கூடும்.

சுகாதாரம் மீதான பொதுச் செலவினத்திற்கு குறைவாகவே ஒதுக்கப்படுவதால், அரசு பொது சுகாதார மையங்களில் பல சேவைகள் கிடைப்பதில்லை. பின்தங்கிய மாநிலங்களில் பொது சுகாதார சேவை என்பது மிக மோசமான நிலையிலேயே கிடைக்கிறது. அரசு பொது சுகாதார மையங்களில் வசதிகள் போதிய வசதியின்மை, குறைந்த தரம் கொண்ட சேவையால் நோயாளிகள் பலரும் தனியார் மருத்துவ சேவைகளை நாடு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; இது அவர்களின் செலவினத்தை அதிகரிக்கிறது.

ஒரு உதாரணம்: மருத்துவமனைகளில் பிரசவம் என்ற விகிதம் 2014ஆம் ஆண்டில் 47% ஆக இருந்தது, 2016ல் 78.9% ஆக அதிகரித்ததாக, தேசிய சுகாதார புள்ளி விவரங்கள் 2018 தெரிவிக்கிறது. மருத்துவமனை பிரசவங்கள் எண்ணிக்கையில் பெறும் வளர்ச்சி இருந்தாலும், 52% அரசு பொது சுகாதார மையங்களிலேயே நடக்கிறது; 48% பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளில் நிகழ்கிறது.

சுகாதார சேவைகளில் பயனாளிக்கு கட்டணத்தை அறிமுகப்படுத்தியன் மூலம், அது இனி இலவசம் கிடையாது என்பதாகிறது. இதனால், 2014ஆம் ஆண்டுக்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் கை செலவினம் 16% அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்பின் தற்போதைய நிலை

அரசு அளித்த வாக்குறுதியை திரும்பப் பார்த்தோமேயானால், சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு பற்றாக்குறையை சமாளிக்க, சுகாதாரத்திற்கு செலவிடுவது அதிகரிக்கப்படும் என்று கூறியிருந்தது. நியாயமான அணுகலுக்கான மனித வளங்களை பெருக்கி, மக்களின் மருத்துவ செலவினங்கள் குறைக்கப்படும் என்றும் கூறியிருந்தது. இருப்பினும், பொது வழங்கல் முன்னுரிமை பற்றிய தொடர்ச்சியான புறக்கணிக்கணிக்கப்பட்டு வந்தது, பல்வேறு நிலைகளில் மனித வளங்கள் உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்புகளில் கடும் பற்றாக்குறைக்கு காரணமானது.

கடந்த 2018 மார்ச் 31ஆம் தேதிப்படி, 32,900 துணை சுகாதார மையங்கள் (5,000 மக்கள் தொகை கொண்டது), 6,430 ஆரம்ப சுகாதார மையங்கள் -PHCs (30,000 மக்களுக்கு சேவை அளித்தல்), மற்றும் 2,188 சமுதாய சுகாதார மையங்கள் -CHC (இவை 80,000-120,000 மக்களுக்கு சுகாதார சேவை புரிகிறது) என கிராமப்புறங்களில் பற்றாக்குறை நிலவுகிறது என, கிராம சுகாதார புள்ளி விபரங்கள் (RHS) 2017-18 அறிக்கை தெரிவிக்கிறது.

அசாம், பீகார், ஹரியானா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சுகாதார வசதிகள் பற்றாக்குறை நிலவுகிறது. 37,950 துணை மையங்கள், 980 ஆரம்ப சுகாதார மையங்கள், 19 சமுதாய சுகாதார மையங்கள் இன்னமும் வாடகை கட்டிடங்களில் இயங்குகின்றன.

தற்போது இயங்கும் துணை மையங்களில் 7%, ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் 13% சமுதாய சுகாதார மையங்களே, இந்திய பொது சுகாதாரத் தரநிலை படி (IPHS) செயல்படுகின்றன.

மேலும், ஸ்வச் பாரத் மிஷன் (தூய்மை இந்தியா இயக்கம்) நடைமுறையில் இருந்து வரும் சூழலில் கூட, 42% துணை மையங்கள், 18% ஆரம்ப சுகாதார மையங்கள், மற்றும் 12% சமுதாய சுகாதார மையங்களில் இன்னமும் கழிப்பிட வசதி கூட கிடையாது.

உள்கட்டமைப்பு வசதி பற்றாக்குறை என்பது பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்னும் மோசமாக உள்ளது. அப்பகுதிகளில் 5,935 துணை மையங்கள்; 1,187 ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் 275 சமுதாய சுகாதார மையங்களில் பற்றாக்குறை நிலவுவதாக, கிராம சுகாதார புள்ளி விபரங்கள் (RHS) 2017-18 அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் மக்கள்தொகை -டாக்டர்கள் விகிதம் என்பது, 2017ஆம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் 11,082:1 என்று இருந்தது. இது, உலக சுகாதார அமைப்பு பரிந்துள்ள 10,000 பேருக்கு 25 என்பதைவிட 25 மடங்கு அதிகமாகும்.

அதேபோல் அரசு மருத்துவமனைகளில் மக்கள்தொகை - டாக்டர்கள் விகிதம் மற்றும் மக்கள்தொகை - அரசு மருத்துவமனை விகிதம் முறையே 4% மற்றும் 9% குறைந்துள்ளது; உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுடன் ஒப்பிடும் போது இதில் பெரிய இடைவெளி உள்ளது.

இதேபோல், மக்கள்தொகை - படுக்கை விகிதமானது 2014 மற்றும் 2017க்கு இடையே 1,833இல் இருந்து 1844 இடைப்பட்டு இருந்ததாக, தேசிய சுகாதார பதிவு விவரங்கள் தெரிவிக்கின்றன. முதலீர் குழு பரிந்துரைப்படி 1:1000 என்ற விகிதத்தில் இது இருக்க வேண்டும்.

Change In Population-Doctor-Bed Ratios between 2014 & 2017
Indicators 2014 2017 Rate of Change (%)
Average Population per Doctor at Government Hospitals 11,528 11,082 -4.00
Average Population per Government Hospital Bed 1,833 1,844 0.60
Average Population per Government Hospital 61,011 55,591 -9

Source: National Health Profile

டாக்டர்களுக்கான 3,667 ஒப்புதல் பெறப்பட்ட பணியிடங்கள் மாவட்ட மருத்துவமனைகளில் காலியாகவே உள்ளன. இது துணைப்பிரிவு மருத்துவமனைகளில் இன்னும் அதிகரித்து 7,144 என்றளவில் உள்ளது.

அதேபோல் மாவட்ட மற்றும் துணை மண்டல மருத்துவமனைகளில் ஒப்புதல் பெறப்பட்ட இடங்களுக்கான மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை என்பது முறையே 3,011 மற்றும் 7,456 என்றுள்ளது.

துணை சுகாதார மையங்களில் பற்றாக்குறை என்பது பெண் சுகாதார ஊழியர்கள் (7,194) மற்றும் ஆண் சுகாதார தொழிலாளர்கள் (104,318) என்றளவில் உள்ளது; 10,907 துணை செவிலியர் (ANMs) ஆரம்ப மற்றும் சமுதாய மையங்களிலும்; ஆரம்ப சுகாதார மையங்களில் 3,673 டாக்டர்கள், சமுதாய சுகாதார மையங்களில் 18,422 சிறப்பு வல்லுனர்கள் என, மனிதவள பற்றாக்குறையின் அளவை இது காட்டுகிறது.

சுகாதார ஊழியர் பற்றாக்குறை இருந்த போதும், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHAs), துணை செவிலியர் (ANMs) ஆகியோர் தேசிய சுகாதாரக் கொள்கை 2017ன்படி, தற்காலிக பணியாளர்களாக பணியாற்றுவர் என்று அரசு தெளிவுபடுத்தியது.

சுகாதார உள்கட்டமைப்பில் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன: மக்கள்தொகையில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமானோர் (69%) கிராமப்புறங்களில் வாழ்ந்து வந்தாலும் கிராமப்புற மருத்துவமனைகளுடன் ஒப்பிடும் போது நகர்ப்புற மருத்துவமனைகளில் படுக்கை வசதி அதிகமாக உள்ளது (151,585) என்று தேசிய சுகாதார பதிவு தரவுகள் தெரிவிக்கின்றன.

(மாம்பி போஸ் ஒரு கொள்கை ஆய்வாளர்; நிலாச்சலா ஆச்சார்யா, புதுடெல்லியில் உள்ள நிதிநிலை அறிக்கை மற்றும் நிர்வாக பொறுப்பின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர். mampi@cbgaindia.org ; nilachala@cbgaindia.org என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story