நுரையீரல் நோய் நெருக்கடியை சமாளிக்க இந்தியா ஏன் போராடுகிறது

நுரையீரல் நோய் நெருக்கடியை சமாளிக்க இந்தியா ஏன் போராடுகிறது
X

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார்க் பகுதி அசல்புரா கிராமத்தை சேர்ந்த விவசாயி மங்கல்லால் (70), நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் - சி.ஓ.பி.டி. ஆல் அவதிப்படுகிறார். வாழ்நாள் முழுவதும் பீடியை புகைத்து வந்த லால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதை கைவிட்டார். "நான் சுல்ஹாவில், நானே சமைத்து உண்கிறேன்," என்று அவர் கூறினார்.

புதுடெல்லி, புனே, பெங்களூரு, மைசூரு: 2014இல் இந்தியாவின் முன்னணி சுவாச நோய் பற்றிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், மத்திய சுகாதார செயலாளரை சந்தித்து, இந்தியாவில் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் - சிஓபிடி (COPD) ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் தமது மூலோபாயம், விளக்கி, நோயாளிகளை கண்காணித்து நிர்வகிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்திய அரசுடன் அடிக்கடி ஒருங்கிணைந்து பணியாற்றும் அந்த நிபுணர், தமது பெயர் குறிப்பிட விரும்பவில்லை.

இது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற சுகாதார செயலாளருக்கு, அந்த நோயை பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை என்று தோன்றியது. தனது தொழில்நுட்ப ஆலோசகரிடம் அவரிடம் சுருக்கமாகக் கேட்டார். "சிஓபிடி, வாஹி பிமாரி ஜோ பச்சன் மெயின் ஹோதி ஹை (அந்த நோய் குழந்தைகளையும் பாதிக்கும் நோய்)" என்று மருத்துவர் ஆலோசகர் கூறினார்.

இந்தியாவில் சி.ஓ.பி.டி. நெருக்கடி ஈர்ப்பு விசையை இந்தியா எவ்வாறு அறிந்திருக்கவில்லை என்பதை அவரது “விளக்கம்” பிரதிபலித்தது - இதய நோய்க்கு பிறகு நாட்டில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் இரண்டாவது பொதுவான நோய் இது. புகையிலை பயன்பாடுஅல்லது நிலக்கரி, மரம் அல்லது பசுங்சாணம் மற்றும் பிறவற்றை எரிக்கும் போது வெளிப்படும் புகையால் சி.ஓ.பி.டி. பாதிப்பு ஏற்படும் நிலையில், நோயாளிகள் பொதுவாக 40 வயதுக்கு மேல் இருப்பார்கள்.

ஐந்து ஆண்டுகளில், இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் மேம்பட்டுள்ளது; எனினும், அதன் பரவலை தடுப்பது கையாள்வதற்கான ஒரு மூலோபாயத்தை இந்தியா இன்னும் உருவாக்கவில்லை. 1990 ஆம் ஆண்டில் இந்தியாவில் 2.81 கோடி சிஓபிடி நோயாளிகள் இருந்தனர்;இது 2016 இல் 5.53 கோடியாக அதிகரித்துள்ளது என்று தி லான்செட் குளோபல் ஹெல்த் பத்திரிகையில் செப்டம்பர் 2018இல் வெளியான ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. உலக மக்கள்தொகையில் 18% கொண்டுள்ள இந்தியாவில், உலகளாவிய சிஓபிடி சுமை, 32% ஆக உள்ளது.

இந்த கட்டுரை தொடரின் முதல் பகுதியில், இந்தியா ஸ்பெண்ட் மார்ச் 2019 கட்டுரையில் தெரிவித்தபடி, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் இறப்புகளுக்கு சிஓபிடி பொறுப்பாகிறது. இரண்டாவது பகுதியானது இந்தியாவில் சிஓபிடிக்கு நிலக்கரி, மரம் மற்றும் சாணத்தில்எரிக்கப்படும் பாரம்பரிய அடுப்புகளின் பங்கை விளக்கியது. மூன்றாவது பகுதி, நாட்டின் நச்சுக் காற்று, ஆபத்தான பழக்க வழக்கங்கள், ஒரு மனிதன் மெதுவாக ஆள்கொள்வதும், முன்பை விட அதிகமான இந்தியர்களைக் கொன்றது பற்றியும் குறிப்பிட்டது.

இந்த நான்காவது பகுதியில், சிஓபிடி சவாலுக்கு இந்தியா ஏன் வேகமாக செயல்பட்டு பதிலடி தரவில்லை என்பதைப் பார்க்கிறோம். எங்கள் விசாரணையில் நாங்கள் பல காரணங்களைக் கண்டறிந்தோம்: ஸ்பைரோமெட்ரி - சிஓபிடியைக் கண்டறிவதற்கான தங்கத் தர சோதனை - பொதுவாக மருத்துவர்களால் பயன்படுத்தப்படுவதில்லை; ஏனெனில் அவர்களால் முடிவுகளை அறிய இயலாது. மேலும், தேசிய தொற்றாத நோய் திட்டம் சிஓபிடி நோயாளிகளை கண்காணிக்காது. இந்தியாவின் சிஓபிடி சுமைகளில் பாதிக்கும் மேலானது காற்று மாசுபாடு காரணமாகும், இதை தீர்க்க இந்தியா சிரமப்பட்டு வருகிறது.

அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால், சிஓபிடி ஆனது நோயாளிகளின் நிதி ஆதாரங்களை உறிஞ்சிவிடுகிறது. ஆண்டுதோறும், இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க இந்தியா ரூ .32,000 கோடியை செலவிடுகிறது; 2005 ஆம் ஆண்டின் தேசிய பொருளாதார மற்றும் சுகாதார ஆணையத்தால் வெளியிடப்பட்ட மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் -எம்.ஓ.எச்.எப். டபிள்யூ (MOHFW) நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தேசிய சுகாதார பணிக்காக சுகாதார அமைச்சகம் 2019-20 (ரூ .33,651 கோடி) ஒதுக்கிய தொகைக்கு அருகில் உள்ளது; இது தேசிய கல்வித் திட்டத்திற்கான (ரூ. 38,547 கோடி) ஒதுக்கீட்டை காட்டிலும் சற்று குறைவாகவும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கான தேசிய வீட்டுத் திட்டமான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (ரூ. 25,953 கோடி) திட்ட ஒதுக்கீட்டைவிட சற்று அதிகமாக இருக்கும்.

தேசிய கண்காணிப்பு பணியின் ஒரு பகுதியாக சிஓபிடி இல்லை

புற்றுநோய், நீரிழிவு நோய், இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டம் என்.பி.சி.டி.சி.எஸ் (NPCDCS), , 2010 ஆம் ஆண்டில் இந்தியாவின் 21 மாநிலங்களில் 100 மாவட்டங்களில், பெரிய தொற்றா நோய்களை - என்.சி.டி (NCDs) தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தொடங்கப்பட்டது. உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதோடு, சுகாதார மேம்பாடு, ஆரம்பகால நோயறிதல், மேலாண்மை மற்றும் வழக்குகளை பரிந்துரைத்தல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய மையமாக இருந்தது.

அதேநேரம், இறப்பு மற்றும் நோய்களுக்கான முக்கிய காரணமாக வயிற்றுப்போக்கு, மலேரியா, நிமோனியா போன்ற தொற்றுநோய்கள் அல்ல; நீரிழிவு, இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்கள் தான். 2016ஆம் ஆண்டில், பத்து இறப்புகளில் ஆறு பேரின் இறப்புக்கு தொற்றாநோயே காரணம் என்று, 2017 நவம்பரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

ஆனால், 1990 மற்றும் 2016 க்கு இடையில், நோய் சுமைக்கு எட்டாவது பெரிய காரணியாக இருந்த சிஓபிடி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது; எனினும், 2010 குறித்து என்.பி.சி.டி.சி.எஸ் இல் எந்த குறிப்பும் இல்லை. இது, நாள்பட்ட சிறுநீரக நோய் வழிகாட்டுதல்களுடன், 2016 இல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் பொது சுகாதார அமைப்பில் இந்த நோய்க்கு அதிகமான நோயாளிகளை பரிசோதிக்கவோ அல்லது நிர்வகிக்கவோ எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டில், இந்தியா முதன்முதலில் ஆயுஷ்மான் பாரத் என்று அழைக்கப்படும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 50 கோடி பேருக்கு சுகாதார பாதுகாப்பு வழங்குவதோடு, 150,000 துணை ஆரம்ப சுகாதார மையங்களை, சுகாதார மையங்களாக -எச்.டபிள்யூ.சி (HWCs) மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த மையங்கள் சமூக அளவில் சுகாதார மேம்பாட்டுடன் விரிவான முதன்மை பராமரிப்பை வழங்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக, பொதுவான தொற்றா நோய்களை வெகுஜன கண்காணிப்பு, தடுப்பு மற்றும் நிர்வகிப்பதற்கான ஒரு திட்டம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018இல் 10,000 க்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் வாயிலாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாய், மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள் தொடர்பாக, 1.3 கோடி மக்கள் பரிசோதிக்கப்பட்டனர்.ஆனால், இந்த கண்காணிப்பு தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சிஓபிடி இல்லை. 2016 ஆம் ஆண்டில், நீரிழிவு, காசநோய், மலேரியா மற்றும் மார்பக புற்றுநோயை விட அதிகம் பேர் சிஓபிடி- ஆல் இறந்தனர் என்று, ஜூலை 2019 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கு உள்ளது போல், சிஓபிடியை எதிர்த்து போராட, கட்டமைக்கப்பட்ட திட்டம் இந்தியாவில் இல்லை என்று, புனேவில் உள்ள மார்பு ஆராய்ச்சி அறக்கட்டளை இயக்குனர் சுந்தீப் சால்வி தெரிவித்தார்.

"தொற்றாநோய் என்சிடி கொள்கை அறிக்கையில் சிஓபிடி பற்றி ஒரு குறிப்பு இருந்தாலும், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கு உள்ளது போல், சிஓபிடியை எதிர்த்து போராட, கட்டமைக்கப்பட்ட திட்டம் இந்தியாவில் இல்லை” என்று, புனேவில் உள்ள நெஞ்சக ஆராய்ச்சி அறக்கட்டளை இயக்குனர் சுந்தீப் சால்வி தெரிவித்தார். இது, நுரையீரல் சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் ஒரு ஆராய்ச்சி நிறுவனமாகும். "என்சிடி-களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு சிஓபிடி நோயாளிகளை கண்காணிப்பது, கண்டறிவது மற்றும் நிர்வகிப்பது எப்படி என்று தெரியவில்லை என்பதே இதற்கு காரணம் என்று நான் நம்புகிறேன்" என்றார் அவர்.

என்.பி.சி.டி.சி.எஸ். வழிகாட்டுதல்களில் (2013-17) சிஓபிடி பற்றி ஒரு குறிபு காண்கிறது; ஆனால் நீரிழிவு நோய் 87 முறை குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது இரண்டு முறை மட்டுமே உள்ளது.

"நாங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கருவிகளுக்கு ரூ.150,000 மற்றும் என்.பி.சி.டி.சி.எஸ். திட்டத்தின் கீழ் மருந்துகளுக்கு ரூ. 250,000 பட்ஜெட்டில் வழங்குகிறோம்," என்று, மத்திய சுகாதார அமைச்சகத்தின் தொற்றா நோய் பிரிவு இயக்குனர் ராஜிவ்குமார் தெரிவித்தார். "மாநிலங்கள் இந்த பட்ஜெட் நிதி கொண்டு ஸ்பைரோமெட்ரி பெறுவதன் மூலம் அல்லது வென்டிலேட்டர்கள் அல்லது ஆக்ஸிஜன் வினியோகிப்பதன் மூலம் சிஓபிடிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்" என்றார்.

சிஓபிடி-க்கான புதிய மருத்துவ வழிகாட்டுதல்களை அரசு கொண்டு வருகிறது; இது விரைவில் வழங்கப்படும் என்றார். "புதியதாக அமையும் அனைத்து எய்ம்ஸ் [அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்] மையங்களில் சிஓபிடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய நுரையீரல் துறை இருக்கும்," என்று அவர் கூறினார்.

புதிய சுகாதார மையங்கள் ஏன் சிஓபிடி நோயாளிகளை கண்காணிக்கவில்லை? என்பதற்கு, நாங்கள் எல்லா நோய்களையும் ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியாது.இப்போது தான் தொடங்கி இருக்கிறோம். எங்களுக்கும் நேரம் தரப்பட வேண்டும்" என்று குமார் கூறினார். காசநோய்க்காக பரிசோதிக்கப்படும் நோயாளிகளுக்கு அவர்களின் புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள் குறித்து கேட்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்; மேலும் இவை சிஓபிடி பாதிப்புக்கு காரணிகளாகும்.

சிஓபிடி-யை கண்டறிவதில் சிரமம் உள்ளது

என்.பி.சி.டி.சி.எஸ். வழிகாட்டுதல்களில் சி.ஓ.பி.டி. இல்லை என்பதில் ஆச்சரியமில்லை; ஏனெனில் அதன் நோயறிதல் சவாலானது. இதற்கு ஸ்பைரோமெட்ரி எனப்படும் ஒரு சோதனை தேவைப்படுகிறது, இது இந்தியாவில் உள்ள கிளினிக்குகள், மருத்துவமனைகள் அல்லது பொது சுகாதார மையங்களில் பொதுவாக கிடைக்காது. நோயாளி ஒரு செவ்வக கருவியுடன் இணைக்கப்பட்ட ஒரு குழாயில் ஊத வேண்டும்; இது ஒரு வரைபடம் போன்ற அறிக்கையை அளிக்கிறது. இது ஒரு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநரால் விளக்கப்பட வேண்டும்.

ஸ்பைரோமெட்ரி இல்லாமல் நோயாளியின் வரலாறு மற்றும் மருத்துவ அறிகுறிகளை மட்டுமே வைத்து நோயை கண்டறிவதால், கிட்டத்தட்ட 60% நோயாளிகள் சரியாக கண்டறிதலில் இருந்து விடுபௌட்கின்றனர். இவர்களில் 44% பேர் கடும் நோயுடன் இருப்பவர்கள் என்று, நோயாளியின் தரவு குறித்து அமெரிக்காவில் 2003 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு காட்டியது.

இந்தியாவில், ஸ்பைரோமெட்ரியின் ஒட்டுமொத்த பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. ஏறக்குறைய 30% நெஞ்சக மருத்துவர்கள், 70% பொது மருத்துவர்கள், 90% பொது பயிற்சியாளர்கள் மற்றும் 80% குழந்தை மருத்துவர்கள் 2013 இல் ஆஸ்துமா மற்றும் சிஓபிடி போன்ற காற்றுப்பாதையை தடை செய்யும் நோயை கண்டறிய ஸ்பைரோமெட்ரியை பயன்படுத்தவில்லை என, நெஞ்சக ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்தது. 2005 ஆம் ஆண்டுடன் உடன் ஒப்பிடும்போது அனைத்து வகை பிரிவிலும் இந்த விகிதம் அதிகரித்தாலும், நோயின் அதிக சுமையை கருத்தில் கொண்டு பார்த்தால் இது இன்னும் குறைவாகவே உள்ளது.

மருத்துவர்களால ஸ்பைரோமெட்ரியை பயன்படுத்தாததற்கு காரணங்கள்: நேரமின்மை (32%), நோயாளிகளுக்கு மலிவானதாக இல்லாதது (29%), உபகரணங்கள் செலவுகள் (28%), செய்முறையில் சிரமம் (10%) மற்றும் நோயறிதலை விளக்குவது (8%) என்பனவாகும்.

மருத்துவக் கல்லூரிகளில் சுவாசம் தொடர்பான மருத்துவம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது என்பதே பிரச்சினையின் வேர் என்று, பெங்களூரு நாராயணா ஹெல்த் நுரையீரல் நிபுணர் பி வி முரளி மோகன் கூறினார். "நான் ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் [மருத்துவ இளங்கலை, அறுவை சிகிச்சை இளங்கலை] கற்பிக்கப்பட்ட போது, தேர்வில் இருதயவியல் மற்றும் நரம்பியல் ஆகியவற்றில் தான் அதிக கவனம் செலுத்தப்பட்டது," என்று அவர் கூறினார்.

உதாரணமாக, எம்.டி அல்லது மருத்துவ மருத்துவருக்கான பாடத்திட்டத்தில், நீண்ட நேரம் நோயாளி -- ஒரு மாணவருக்கு பரிசோதனை மற்றும் நோயறிதலுக்காக ஒரு மணி நேரத்திற்கு ஒரு நோயாளி அமர்த்தப்படுவார் - பொதுவாக நரம்பியல் தொடர்பான மற்றும் சுவாசத்தை உள்ளடக்கிய மருந்து சில முறை மட்டுமே தரப்படுகிறது. அப்போதும் கூட, ஒருபோதும் காசநோய், ஆஸ்துமா அல்லது சிஓபிடியாக இருக்காது என்று, மோகன் மேலும் கூறினார்.

"எம்.டி. படிப்பு அளவில், பெரும்பாலான மாணவர்கள் முதல் நாளில் இருந்து ஈ.சி.ஜி. பற்றி படிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்படையாக ஈ.சி.ஜி வாசிப்பின் தரம் மிகவும் நல்லது," என்று அவர் சுட்டிக்காட்டினார். "ஆனால் அவர்களில் பெரும்பாலோர் ஒரு ஸ்பைரோகிராமை விளக்கி அடையாளம் காண முடியாது." ஸ்பைரோகிராமை விட ஈ.சி.ஜி படிப்பது எளிதானது என்ற நிலையில் இதுதான் உள்ளது என்றார் அவர்.

ஸ்பைரோமெட்ரிக்கு மாற்று இருக்கிறதா? என்றால், "இல்லை, இந்த நேரத்தில் சிஓபிடியைக் கண்டறிய ஸ்பைரோமெட்ரி மட்டுமே வழி" என்று சால்வி கூறினார்.

மூன்றாம் நிலை மையங்களுக்கான பரிந்துரைகளுக்கு பலவீனமான நுரையீரல் செயல்பாட்டை கொண்ட நோயாளிகளை அடையாளம் காண்பதற்கான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை அளவில், நபரின் நுரையீரல் செயல்பாட்டை மதிப்பீடு செய்யக்கூடிய மலிவான கையடக்க சாதனம் - உச்ச ஓட்ட மீட்டர்களை பயன்படுத்தவும் அரசு திட்டமிட்டு உள்ளது என்று, சுகாதார அமைச்சின் ராஜீவ் குமார் கூறினார்.

"சிஓபிடியை கண்டறிவதற்கு இது தொடர்ச்சியான உச்சநிலை மீட்டர் சோதனைகள் மற்றும் பல வாரங்கள் பின்தொடர்வதை எடுக்கும்" என்று மைசூரு ஜே.எஸ்.எஸ் மருத்துவக் கல்லூரி காசநோய் மற்றும் சுவாச மருத்துவத்துறை தலைவர் பி.ஏ. மகேஷ் பதிலளித்தார். "ஸ்பைரோமெட்ரிக்கு எதிராக அவற்றின் செயல்திறனை சோதிக்க எந்த சோதனைகளும் இல்லை" என்றார் அவர்.

புகை பிடிக்காதவர்களுக்கும் இந்தியாவில் ஆபத்து

48 வயது லட்சம்மா, எல்.பி.ஜி. எரிவாயு அடுப்புக்கு மாறுவதற்கு முன், 30 ஆண்டுகளாக பாரம்பரிய அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு சிஓபிடி இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இதுவரை மருத்துவ உதவியை அவர் நாடவில்லை.

48 வயது லட்சம்மா, தனது நாளை அதிகாலை 4:00 மணிக்குத் தொடங்கி, தனது மாடுகளுக்கு பால் கறந்து, மைசூரு நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள பெலவாடி என்ற கிராமத்தின் குறுக்கே உள்ள வீடுகளுக்கு பால் வழங்குகிறார். அவள் மெதுவாக கிராமம் முழுவதும் 5 கி.மீ தூரத்திற்கு நடந்து சென்று வினியோகிக்க, சிறிய இடைவெளிகளை எடுத்துக் கொண்டார்; ஆனால் ஒருபோதும் பால் வழங்கத் தவறவில்லை. மைசூரு ஜே.எஸ்.எஸ் மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் குழு, முத்ரா என்ற நுரையீரல் சுகாதார திட்டத்திற்காக அவர் மற்றும் பிராந்தியத்தில் உள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த 1,084 பேர் கொண்ட குழு மீது நுரையீரல் செயல்பாடு பரிசோதனையை நடத்தியபோது, லட்சம்மாவுக்கு சிஓபிடி இருப்பது கண்டறியப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு எல்பிஜி எரிவாயுவுக்கு மாறுவதற்கு முன்பு லட்சம்மா, 30 வருடங்களாக மண் அடுப்பு அல்லது சுல்ஹா அடுப்பு கொண்டு சமைத்தார். மரம், நிலக்கரி அல்லது சாணத்தை எரிப்பதில் இருந்து சுல்ஹாக்களில் இருந்து வரும் புகை, இந்தியாவில் சிஓபிடிக்கு ஒரு பெரிய ஆபத்து காரணியாகும்; இது புகையிலை புகைப்பதை விட அதிகம். புகைபிடிப்பவர்களை விட இந்தியாவில் அதிகமான மக்கள் சுற்றுப்புற மற்றும் வீட்டு காற்று மாசுபாட்டால் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இந்தியாவில் சிஓபிடிக்கான ஆபத்து காரணிகள், 2016

Source: The Lancet Global Health

ஏனென்றால், 70% இந்திய வீடுகள் மோசமான காற்றோட்டமான சமையலறைகளில் சமையல் மற்றும் வெப்ப நோக்கங்களுக்காக உயிரி எரிபொருளைப் பயன்படுத்துகின்றன. தனது வாழ்நாளில், ஒவ்வொரு நாளும் 2-3 மணி நேரம் சமைக்கும்போது, ஒரு சராசரி பெண் 25 மில்லியன் லிட்டர் மிகவும் மாசுபட்ட காற்றை சுவாசிக்கிறாள் என்று, 2012 அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2016 ஆய்வில், 10 ஆண்டுகளுக்கும் மேலான பயோமாஸ் சமையல் அடுப்பு கொண்ட 2,068 பெண்களை ஆய்வு செய்ததில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு (18%) சி.ஓ.பி.டி.ஆல் கண்டறியப்பட்டது. ஆய்வில் இடம்பெறாத கண்டறியப்படாத சி.ஓ.பி.டி. உடன் கூடிய பெண்களின் சராசரி வயது 47 ஆண்டுகள். குறைந்த கல்வி, உயிரி அடுப்பு எரிப்பு அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது பற்றிய தவறான அறிவு காரணமாக நோய் கண்டறிதல் ஆகியன மோசமாக இருந்தது.

லட்சம்மா ஒரு மருத்துவர் இல்லை. ஆனால் இப்போது ஆறு ஆண்டுகளாக அவரது நிலை பற்றி அறிந்திருக்கிறார். "இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது," என்று மருத்துவமனையில் இருந்து வந்த குழுவினரிடம் தெரிவித்ததாக, அவரது வீட்டில் சந்தித்த எங்கள் நிருபரிடம் அவர் கூறினார். அதன் ஆரம்ப கட்டங்களில், சிஓபிடி பொதுவாக கடுமையான மார்பு அசவுகர்யத்தை ஏற்படுத்தாது; ஆனால் வயதுடன் ஒப்பிடும் போது, லட்சம்மா அதன் தாக்கத்தை உணருவார். பீடி புகைப்பிடிப்பவரான அவரது கணவர் சிவண்ணாவுக்கு 2006 ஆம் ஆண்டில் சிஓபிடி இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் அவர் ஒரு மருத்துவரையும் கலந்தாலோசிக்கவில்லை.

மாசுபடுத்திகளின் வெளிப்பாட்டின் முக்கியமான அளவுகள்

சிஓபிடி-யின் உண்மையான பரவலை மதிப்பிடுவதற்கும், 2006 மற்றும் 2010 க்கு இடையில் கிராமப்புறங்களில் ஆபத்து காரணிகளை ஆய்வு செய்வதற்கும் முத்ரா திட்டம் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதிக்கப்பட்டவர்கள் ஐந்து ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் நுரையீரல் செயல்பாடு சோதனைக்காகப் பின்தொடரப்பட்டனர். இந்த ஆய்வு நடத்தப்பட்டது ஏனெனில் சிஓபிடியின் முந்தைய ஆய்வுகள் கேள்வித்தாளை அடிப்படையாகக் கொண்டவை; ஸ்பைரோமெட்ரி அல்ல, மேலும் நோய் மற்றும் உயிரி எரிபொருள் வெளிப்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான டோஸ் மறுமொழி உறவை ஆராயவில்லை.

1,085 பேரில், ஆண்களில் 1% மற்றும் 0.6% பெண்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட வரையறையின்படி சிஓபிடியைக் கொண்டுள்ளனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் அவர்களில் பாதி பேருக்கு நுரையீரல் செயல்பாடு குறைவாகவே உள்ளது. ஒரே வயதிற்குட்பட்ட ஆண்களுடன் ஒப்பிடும்போது, 40 வயதிற்கு குறைவான பெண்கள் சமைப்பதற்காக மர எரிபொருட்களை வெளிப்படுத்தினர்.

பின்தொடர்தலுக்குப் பிறகு, குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஆண்டுக்கு மூன்று மாதங்களாவது இருமல் பாதிக்கப்பட்டவர்களில் 12.6% பேர் இறந்தனர்; இறக்காதவர்களுடன் ஒப்பீடு 5.7% ஆகும். வருடத்திற்கு சில மாதங்கள் இருமல் இருந்தால் கூட, பரிசோதிக்க வேண்டும் என்ற உண்மையை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

"நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி சிஓபிடியின் ஒரு பகுதியாகும், இது ஒரு எளிய மருத்துவ வரலாறு மற்றும் இடர் மதிப்பீடு கொண்டு கண்டறியப்படலாம்," என, ஜே.எஸ்.எஸ் மருத்துவக் கல்லூரி காசநோய் மற்றும் சுவாச மருத்துவத்துறை தலைவர் பி எ மகேஷ் கூறினார்.

"நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி சிஓபிடியின் ஒரு பகுதியாகும், இது ஒரு எளிய மருத்துவ வரலாறு மற்றும் இடர் மதிப்பீட்டைக் கொண்டு கண்டறியப்படலாம்," என திட்டத்தின் பின்னால் இருக்கும், ஜேஎஸ்எஸ் மருத்துவக்கல்லூரி காசநோய் மற்றும் சுவாச மருத்துவத்துறை தலைவர் பி.எ. மகேஷ் கூறினார். ஸ்பைரோமெட்ரிக் அணுகல் கிடைக்காதது சமூகத்தில் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியை அடையாளம் காண்பது முக்கியம். "இந்த வழக்குகளில் பல சிஓபிடியை உருவாக்க முன்னேறுகின்றன; மேலும் சிஓபிடியை உருவாக்காமல் இறக்கும் அபாயமும் உள்ளது" என்றார் அவர்.

பயோமாஸ் சமையல் மற்றும் சிஓபிடியின் வெளிப்பாடு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பை நிறுவுவதற்கும் முத்ரா ஒத்துழைப்பு காரணமாக இருந்தது. முந்தைய ஆய்வுகள், நோயை ஏற்படுத்துவதற்கு தேவையான சிகரெட் புகைப்பழக்கத்தின் குறைந்தபட்ச வெளிப்பாடு, ஆண்டுக்கு 10 பாக்கெட்டுகள் அல்லது ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகள் என 10 ஆண்டுகளுக்கு என்று தெரியவந்துள்ளது. சிஓபிடியை ஏற்படுத்துவதற்கு உயிர்ம வெளிப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், நோய்க்கான ஆபத்து அதிகரிக்கும் குறைந்தபட்ச வெளிப்பாடு தெளிவாக இல்லை. சண்டிகரின் முதுகலை கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த டி பெஹெரா என்பவரால் முதன்முதலில் உயிர் எரிபொருளின் வெளிப்பாட்டின் அளவு விவரிக்கப்பட்டது மற்றும் வெளிப்பாடு குறியீட்டை ஒரு நாளைக்கு எத்தனை மணிநேர வெளிப்பாடு மற்றும் வெளிப்பாடு ஆண்டுகளின் எண்ணிக்கை என புரிந்து கொள்ள முடியும்.

நாள்பட்ட நுரையீரல் நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்க, குறைந்தபட்ச உயிரியக்க வெளிப்பாடு குறியீட்டு எண் 60 தேவை என்று குழுவின் கண்டுபிடிப்பைப் பற்றி மகேஷ் கூறினார். எனவே நான்கு மணி நேரம் சமைக்கும் ஒரு பெண்ணுக்கு 15 ஆண்டுகள் வெளிப்பாடு ஆபத்தில் இருக்க வேண்டும், மூன்று மணி நேரம் சமைக்கும் ஒரு பெண்ணுக்கு 20 ஆண்டுகள் வெளிப்பாடு தேவைப்படும்.

கிராமப்புறங்களில் பிற ஆபத்துகள்

உயிரி எரிபொருளின் அதிக பயன்பாடு காரணமாக, கிராமப்புறங்களில் நகர்ப்புறங்களைப் போலவே சிஓபிடி பாதிப்பு உள்ளது, இல்லாவிட்டால். தகவல்தொடர்பு நோய்களைக் காட்டிலும் குறைவான தொற்றுநோயற்ற நோய்களைக் கொண்ட குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட மாநிலங்கள் - அதாவது குறைந்த தொற்றுநோயியல் நிலைமாற்ற நிலை - ஈ.டி.எல் (ETL) - சிஓபிடியால் அதிக நோய்கள் பரவுகின்றன என்று லான்செட் குளோபல் ஹெல்த் இதழ் கண்டறிந்துள்ளது.

உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் சிஓபிடி மற்றும் ஆஸ்துமா நோய்களுக்கான அதிக நோய் சுமை உள்ளது மற்றும் பஞ்சாப், கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற உயர் ஈ.டி.எல். உள்ள மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான நோய்கள் ஆகும்.

68 வயது ஆர்.தேவராஜ் இந்த ஆண்டு சிஓபிடியுடன் கண்டறியப்பட்டார். அவர் புகைப்பிடிப்பவர் அல்ல; மைசூரு மாவட்டத்தில் விவசாயி இருக்கிறார்.

"நான் மிகவும் வலுவாக இருந்தேன், இவ்வளவு வேலைகளை ஒற்றைக் கையால் செய்தேன். இப்போது, என்னை பாருங்கள், நான் மிக பலவீனமாக இருக்கிறேன்; என்னால் ஒரு பைக் கூட ஓட்ட முடியாது,” என்று 68 வயது ஆர்.தேவராஜ் கூறினார்; இந்த ஆண்டு அவருக்கு சிஓபிடி இருப்பது கண்டறியப்பட்டது. ஆர் தேவராஜ் புகைப்பிடிப்பவர் அல்ல; மைசூரு மாவட்டத்தில் விவசாயியாக இருக்கிறார்.

பூச்சிக்கொல்லிகளில் உள்ள தூசி மற்றும் ரசாயனங்கள் காரணமாக விவசாயம் என்பது சிஓபிடி வருவதற்கான ஆபத்துக்கு காரணம் என அறியப்படுகிறது என்றார் மகேஷ். சுரங்கம், உருக்குதல், கால்நடை வளர்ப்பு, ரசாயன தொழிற்சாலைகள் போன்றவற்றில் வேலை செய்வது போன்ற மற்ற தொழில்களிலும் இந்த அபாயங்கள் உள்ளன.

காற்று மாசுபாடு (53.7%) மற்றும் புகைபிடித்தல் (25.4%) ஆகியவற்றிற்குப் பிறகு, தொழில் அபாயங்கள் இந்தியாவில் சிஓபிடிக்கு மூன்றாவது முன்னணி ஆபத்து காரணமாகும்.

"சுற்றுப்புற காற்று மாசுபாட்டை எவ்வளவு வெளிப்படுத்துவது நோய்க்கு வழிவகுக்கும் என்பது பற்றி நாங்கள் உறுதியாக சொல்ல முடியாது," என்று மகேஷ் கூறினார். "இதற்கான பதில்களை கண்டறிய எங்களுக்கு அதிக நிதி மற்றும் ஆராய்ச்சி தேவை" என்றார் அவர்.

நோயைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு மகேஷ் ஒரு எளிய செய்தியை வைத்திருக்கிறார்: "அத்தகைய இருமலை புறக்கணிக்காதீர்கள்." ஒரு வருடத்திற்கு மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் தொடர்ச்சியான இருமல் உள்ளவர்களுக்கு இறப்பு விகிதம் இரு மடங்காக இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. உயி எரிபொருளில் இருந்து தூய்மையான எரிபொருட்களுக்கு மாறுவதன் மூலம் கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான சிஓபிடி நோய்களை குறைக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம். புகைபிடிப்பதை தவிர்ப்பது பாதிக்கப்படக்கூடிய மக்களை கண்காணிக்க உதவும்.

இறுதியில், விழிப்புணர்வு அதிகரித்திருப்பது இந்தியா நோயை வெல்ல உதவும் என்று மகேஷ் கூறினார்.

Solutions Box

Switching from biomass fuels to LPG: Switching from biomass fuels to cleaner fuels like LPG will play an important role in reducing the COPD burden due to household air pollution. Pradhan Mantri Ujjwala Yojana--that provides support for LPG connection to poor families--has provided connection to 70 million households till date. “In the south, we have already seen the benefits of switching to LPG, in the north also we will see the impact soon,” said P A Mahesh of JSS medical college, Mysuru.

Improving ventilation: Poorly ventilated kitchens worsen the impact of smoke and adding even one more window can help ease the discomfort, said Sundeep Salvi, director of Chest Research Foundation of India. Adding chimneys and exhaust fans can also create better air quality in kitchens.

Trainings for physicians: Most patients go to primary healthcare physicians with early complaints. So, it is important to improve awareness and understanding of COPD among physicians. This is why Public Health Foundation of India (PHFI) and Narayana Health and Chest Research Foundation have began training doctors for a Certificate Course in Management of COPD and Asthma. The course is taught in 25 centres across the country by experts in chest medicine. So far, 600 doctors have been trained to conduct spirometry and good inhalation practices among other skills. “State governments of Gujarat, West Bengal, Orissa, Assam, Tripura and the municipal corporation of Kolkata have included the course for their medical officers,” said Sandeep Bhalla, director, training, PHFI.

Screening for at-risk groups: COPD takes many years to develop and by the time the patient experiences discomfort, a lot of irreversible damage would have occurred in the lungs. Patients over the age of 30 with risk factors like smoking and with exposure to biomass smoke and various occupational hazards should undergo screening once a year, said Mahesh of JSS medical college.

Exercise and pulmonary rehabilitation: For COPD patients, access to pulmonary rehabilitation can help improve the quality of life. “Exercise reduces chance of exacerbation, hospitalisation, improves symptoms and even may reduce mortality,” said H B Chandrashekar, heading the department of pulmonology at the Bhagwan Mahaveer Jain Hospital, Bengaluru.

இது, நான்கு பகுதிகள் கொண்ட தொடரின் இறுதி பாகம் ஆகும். முதல் பகுதியை இங்கே, இரண்டாவது இங்கே மற்றும் மூன்றாவது பகுதியை இங்கே படிக்கலாம்.

இந்த கட்டுரை, தொற்றாத நோய்கள் குறித்த ரீச் லில்லி மீடியா பெல்லோஷிப் திட்டத்தால் ஆதரவோடு எழுதப்பட்டது.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story