2022ம் ஆண்டுக்கான ஊட்டச்சத்து இலக்கை இந்தியா ஏன் தவறவிடக்கூடும்

2022ம் ஆண்டுக்கான ஊட்டச்சத்து இலக்கை இந்தியா ஏன் தவறவிடக்கூடும்
X

புதுடெல்லி: தற்போதுள்ள முன்னேற்ற விகிதத்தை பார்க்கும் போது, இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கும் தேசிய ஊட்டச்சத்து இயக்கம் மிஷன் - என்.என்.எம் (NNM) தனது 2022 ஆண்டுக்கான இலக்குகளை பூர்த்தி செய்ய முடியாது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. இது 2017 வரையிலான 27 ஆண்டுகளில் இந்தியா அடைந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைத்த போதிலும்.

கடந்த 2017மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடையில், என்.என்.எம். அல்லது போஷன் அபியான் திட்டம் குறைந்த பிறப்பு எடை மற்றும் குழந்தைகளின் எடை குறைவு ஆகியவற்றின் வருடாந்திர 2 சதவீத புள்ளி குறைப்பை குறிவைத்த நிலையில், குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு 25% வீழ்ச்சி மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ரத்த சோகை பாதிப்புக்கு 3 சதவீத புள்ளிகள் என ஆண்டு சரிவு இருந்தது.

ஆனால் 2022 இலக்குகளுடன் ஒப்பிடும்போது தற்போதைய வேகத்தில் என்எம்எம் தொடர்ந்து முன்னேறினால், குறைந்த எடை கொண்ட பிரசவம் 8.9% அதிகப்படியான பாதிப்பு இருக்கும், வளர்ச்சி குறைபாடு 9.6%, எடை குறைபாடு 4.8%, குழந்தைகள் இரத்த சோகை 11.7%, மற்றும் பெண்கள் மத்தியில் இரத்த சோகை 13.8% என்று, செப்டம்பர் 17, 2019 தி லான்செட் சைல்ட் அண்ட் அடல்ஸ் ஹெல்த் இதழ் செய்தி வெளியிடப்பட்டது.

2017 ஆம் ஆண்டில் ஒவ்வொரு இந்திய மாநிலத்திலும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் இறப்புக்கான முக்கிய காரணியாக ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தது, அந்த வயதினரின் மொத்த இறப்புகளில் 68.2% இது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

அனைத்து வயதினருக்கும் சுகாதார இழப்புக்கான முக்கிய ஆபத்து காரணி ஊட்டச்சத்துக் குறைபாடாகும், இது இயலாமை காரணமாக இழந்த வாழ்க்கையின் சாத்தியமான ஆண்டுகளைக் குறிக்கும் மொத்த இயலாமை-சரிசெய்யப்பட்ட வாழ்க்கை ஆண்டுகளில் (DALYs) 17.3% காரணமாகும்.

இந்தியா தனது 2025 ஊட்டச்சத்து இலக்கை - பூஜ்ஜியம் பேர் பட்டினி- என்பதை அடைய பாதையில் இல்லை என இந்தியா ஸ்பெண்ட் டிசம்பர் 2018 கட்டுரை தெரிவித்திருந்தது.

லான்செட் ஆய்வறிக்கையானது, குழந்தை மற்றும் தாய்வழி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் நோய் சுமை மற்றும் ஒவ்வொரு இந்திய மாநிலத்திலும் 1990 முதல் 2017 வரை ஊட்டச்சத்து குறைபாடு குறிகாட்டிகளின் போக்குகள் குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய பொது சுகாதார அறக்கட்டளை, சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் இணைந்து சுகாதார, குடும்ப நல அமைச்சகம் மற்றும் நிபுணர்களுடன் இணைந்து, 100-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களில் இருந்து நடத்திய மாநில அளவிலான நோய் சுமை முயற்சி ஊட்டச்சத்து குறைபாட்டின் ஒரு பகுதியாகும்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவலான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது: 10 பேரில் நான்கு பேர் குன்றினர் (39.3%), 10 பேரில் மூன்று பேர் எடை குறைந்தவர்கள் (32.7%), ஐந்தில் மூன்று பேர் இரத்த சோகை (59.7%).

மேலும், ஒரு புதிய ஊட்டச்சத்து பிரச்சினையின் அறிகுறிகள் - ஒவ்வொரு 10 குழந்தைகளில் ஒருவர் அதிக எடை கொண்டவர் (11.5%) ஆக இருந்தன.

குழந்தைகளில் அதிக ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் மிகப்பெரிய காரணிகளை - குறைந்த பிறப்பு எடை மற்றும் மோசமான பிரத்தியேக தாய்ப்பால் என, இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. ஐந்து குழந்தைகளில் ஒருவர் (21.4%) பிறக்கும் போது குறைந்த எடையுடன் அல்லது 2.5 கிலோவிற்கு கீழ் இருந்தவர்கள் மற்றும் அனைத்து குழந்தைகளில் பாதி பேர் (53.3%) மட்டுமே பிரத்தியேகமாக தாய்ப்பால் புகட்டப்பட்டனர்.

"இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு குறைந்துவிட்டதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது, ஆனால் குழந்தை இறப்புகளுக்கான முக்கிய ஆபத்து காரணியாக இது தொடர்கிறது. இது குழந்தை இறப்புகளை நிவர்த்தி செய்வதில் அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று இந்தியாவின் மாநில அளவிலான நோய்ச்சுமை குறைப்பு முன்முயற்சியின் இயக்குனர் லலித் தண்டோனா, அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிரசவத்தின் போது எடை குறைபாடு குறித்து, இந்தியாவில் குறிப்பிட்ட கொள்கை கவனம் தேவை; ஏனெனில் இது அனைத்து ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகளிலும் குழந்தை இறப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது, மேலும் அதன் வீழ்ச்சி விகிதம் மிகக் குறைவானது.

உலகின் 15.6 கோடி வளர்ச்சி குன்றிய ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் வாழ்கின்றனர். 2016 ஆம் ஆண்டில், ஐந்து வயதிற்குட்பட்ட இந்தியாவின் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இழந்த பள்ளிப்படிப்பு மற்றும் பொருளாதார உற்பத்தித்திறன் 37.9 பில்லியன் டாலர் - 2.7 லட்சம் கோடி அல்லது கல்விக்கான மத்திய அரசின் 2019-20 பட்ஜெட்டைவை விட மூன்று மடங்கு -செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது.

உ.பி., பீகார், அசாம், ராஜஸ்தான் ஆகியன மிக மோசம்

25 வயதுக்கு குறைவான பெண்களின் தனிநபர் வருமானம், கல்வி மற்றும் கருவுறுதல் வீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட சமூக, மக்கள்தொகை குறியீடு - எஸ்.டி.ஐ (SDI) அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

ஊட்டச்சத்து குறைபாடு சரிசெய்யப்பட்ட வாழ்க்கை ஆண்டுகளின் (DALYs) வீதம் மற்ற குழுக்களை விட குறைந்த எஸ்.டி.ஐ. கொண்ட மாநிலங்களில் அதிகமாக இருந்தன. இது 2017 ஆம் ஆண்டில் மாநிலங்களில் ஆறு முதல் எட்டு மடங்கு வரை மாறுபட்டது, மேலும் ஆய்வின்படி, உத்தரபிரதேசம், பீகார், அசாம் மற்றும் ராஜஸ்தானில் இது மிக அதிகமாக இருந்தது.

குறைந்த எஸ்.டி.ஐ கொண்ட மாநிலங்களில் ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் நடுத்தர எஸ்.டி.ஐ குழுவோடு ஒப்பிடும்போது 1.8 மடங்கு அதிகமாகவும், உயர் எஸ்.டி.ஐ குழுவை விட 2-4 மடங்கு அதிகமாகவும் இருந்தது.

அனைத்து வயதினருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, சரிசெய்யப்பட்ட வாழ்க்கை ஆண்டுகளின் (DALYs) விகிதம் மாநிலங்களில் ஆறு மடங்கு மாறுபடுகிறது. குறைந்த எஸ்.டி.ஐ மாநிலங்களில், இது நடுத்தர எஸ்.டி.ஐ மாநிலங்களால் அறிவிக்கப்பட்ட விகிதத்தை விட இரு மடங்காகவும், உயர் எஸ்.டி.ஐ மாநிலங்களை விட இரண்டு முதல் ஏழு மடங்கு அதிகமாகவும் இருந்தது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு இயலாமை-சரிசெய்யப்பட்ட வாழ்க்கை ஆண்டு வீதம், 2017

Source: The Lancet Child and Adolescent Health

‘மிதமாக’ மட்டுமே குறைக்க ஊட்டச்சத்து குறைபாடு

2017 இல் இறந்த ஐந்து வயதுக்குட்பட்ட 10.4 லட்சம் குழந்தைகளில் 7,06,000 அல்லது 68.2% பேர், நாம் முன்னர் குறிப்பிட்டது போல ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருந்தனர். 1990 முதல் 2017 வரை, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு “மிதமாக” - 70.4% முதல் 68.2% வரை - குறைந்துள்ளதை ஆய்வு காட்டியது. இதேபோல், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில்சரிசெய்யப்பட்ட வாழ்க்கை ஆண்டுகளின் விகிதம் 70.1% இல் இருந்து 67.1% ஆக மட்டுமே குறைக்கப்பட்டுள்ளன.

ஏறக்குறைய அனைத்து குறிகாட்டிகளிலும், 2022 ஆம் ஆண்டிற்கான திட்டமிடலின் போது வீழ்ச்சி விகிதம் என்என்எம் இலக்குகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை.

2010-17 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த தடுமாற்றம் கணிசமாகக் குறைந்தது, ஆனால் இந்த குறைவு என்என்எம் 2022 இலக்கை அடைய தேவையான 8.6% வருடாந்திர குறைப்பைக் காட்டிலும் மிகவும் குறைவாக இருந்தது. இதேபோல், வளர்ச்சியின்மிய, எடை குறைவு மற்றும் இரத்த சோகைக்கு, தற்போதைய முன்னேற்ற விகிதத்தில், என்.என்.எம் இலக்குகள் பூர்த்தி செய்யப்பட வாய்ப்பில்லை.

நாங்கள் முன்பு கூறியது போல், 2022 இலக்குகளுடன் ஒப்பிடும்போது குழந்தைகளில் குறைந்த பிறப்பு எடை, தடுமாற்றம், எடை குறைவு மற்றும் இரத்த சோகை ஆகியவற்றுக்கான அதிகப்படியான பாதிப்பு இருக்கும்.

‘துணிச்சலான ஆனால் அடையக்கூடிய’ இலக்குகள் தேவை

வரும் 2022-க்கான என்.என்.எம் நிர்ணயித்த ஊட்டச்சத்து குறைபாடு குறிகாட்டிகள் "உயர் லட்சியம்” மற்றும் அவற்றை அடைவதற்குத் தேவையான முன்னேற்ற விகிதம், காணப்பட்ட விகிதத்தை விட மிக அதிகம் மற்றும் குறுகிய காலத்தில் அடைய "கடினமாக" இருக்கலாம் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. "இந்த மெதுவான முன்னேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும், இதனால் எதிர்காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு குறிகாட்டிகளின் பரவலானது, இதுவரையிலான போக்குகளின் அடிப்படையில் எங்கள் கணிப்புகளை விட சிறந்தது" என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

இலக்குகளை சரிசெய்தல் அல்லது மீட்டமைத்தல் இதற்கு முன்னர் உலக அளவில் செய்யப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு அதன் உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளை 2025-க்குள் ஆறு குறிகாட்டிகளை அடைய வைத்தது. ஆனால் 2018 மதிப்பாய்வில் இந்த இலக்குகள் மிக அதிகமாக இருந்தன என்பதும், “இலக்குகள் மிகவும் லட்சியம் வாய்ந்ததாக இருந்தால், அவை நம்பத்தகாதவை என்று முத்திரை குத்தப்படலாம், முதலீட்டும் செயலும் குறைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன”. எனவே இலக்குகள் 2030 க்கு மீண்டும் அமைக்கப்பட்டன.

2030 ஆம் ஆண்டில் என்என்எம் "தைரியமான ஆனால் அடையக்கூடிய இலக்குகளை" நிர்ணயிக்க முடியும் என்று அந்த கட்டுரை பரிந்துரைத்தது. போக்குகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்கான தேசிய மற்றும் துணை தேசிய இலக்குகள் இருக்கலாம் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்தது.

இந்தியாவில் அதிக பிறப்பு எடை அதிகம் உள்ளது

குறைந்த எடை பிரசவ குழந்தை மற்றும் குறுகியகால கர்ப்பம் அல்லது முன்கூட்டிய பிறப்பு அல்லது ஊட்டச்சத்து குறைபாடு நோய் சுமைக்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக இருந்தது, 43.6% சரிசெய்யப்பட்ட வாழ்க்கை ஆண்டுகளின் பொறுப்பு என்று அறிக்கை கண்டறிந்தது.

தெற்காசியாவில் இந்தியா மிகப்பெரிய அங்கமாக இருப்பதால், எந்தவொரு பிராந்தியத்திலும் குறைந்த பிறப்பு எடையின் அதிக அளவு இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இது குழந்தையை மட்டுமல்ல, பிற்காலத்தில் நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

2010-17 ஆம் ஆண்டில் இந்தியாவின் 14 மாநிலங்களில் குறைந்த பிறப்பு எடை பாதிப்பு கணிசமாகக் குறைந்தது, ஆனால் அதன் சரிவு - ஆண்டுதோறும் 1.14% - என்என்எம் 2022 இலக்குக்குத் தேவையான 11.8% வருடாந்திர சரிவை விட மிகக் குறைவு.

குறைந்த எடை பிறப்பு பல்வேறு காரணிகளை பொறுத்தது: தாயின் ஊட்டச்சத்து, கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி, பிறந்த நேரத்தில் கால மற்றும் தாய் மற்றும் குழந்தையின் வயதுக்கு இடையிலான இடைவெளி பொறுத்தது.

இந்தியாவில் பெண்கள் எடை குறைவாக - ஐந்து பேரில் ஒருவர்- இருப்பதால் ஆப்பிரிக்காவுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் பிறப்பு எடை குறைவாக இருப்பதற்கு இது ஒரு காரணம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. தாய்மார்களில் நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு குறைப்பிரசவ மற்றும் குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தைகளுக்கு காரணமாகிறது, இது அறியப்படுகிறது.

குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக, தாயின் ஊட்டச்சத்துக்காக இந்தியா முதலீடு செய்யும் என்று, இந்தியா ஸ்பெண்ட் இங்கே மற்றும் இங்கே தெரிவித்துள்ளது.

(யாதவர், இந்தியாஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story