'பி.எம். 2.5 உடன் கலந்துவிடும் வைரஸ் துகள்கள் கொடிய விருந்துக்கு வழிவகுக்கிறது'

பி.எம். 2.5 உடன் கலந்துவிடும் வைரஸ் துகள்கள்  கொடிய விருந்துக்கு வழிவகுக்கிறது
X

மும்பை:டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியிருப்பது “காற்று மாசுபாட்டின் நேரடி விளைவு” என்று புதுடெல்லியை சேர்ந்த சர்கங்காரம் மருத்துவமனையில் (SGRH) மார்பு அறுவை சிகிச்சை மையத்தின் தலைவர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

வைரஸ் துகள்கள் காற்றில் உள்ள துகள்களின் வழியே பரவி, நுரையீரலுக்குள் நுழைவதாக விளக்கும் குமார், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றுடன் மாசுபாடு தொடர்புடையது, இவை அனைத்தும் கோவிட்-19 இறப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன என்றார்.

"இந்த கொடிய விருந்து (திருவிழா காலங்களில் மாசுபாடு கிடுகிடுவென உயர்வது) கோவிட் தொற்றில் தாக்கத்தை ஏற்படுத்தினால், நாம் ஒரு பெரிய பரவலை கண்டால், அது மக்களுக்கும் சுகாதாரத்துக்கும் பேரழிவு தரும்; குறைந்தது அனைத்து டெல்லி மருத்துவமனைகளிலும் ஐ.சி.யுக்கள் கிட்டத்தட்ட மூச்சுத் திணற வேண்டியிருக்கும்”என்று குமார் கூறுகிறார்; முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் மற்றும் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், மேலும் மாசுபாட்டைக் குறைக்க வேண்டும் என்பன போன்ற நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.

குமார், சர்கங்காரம் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிறுவனத்தின் இயக்குநராகவும், நுரையீரல் பராமரிப்பு அறக்கட்டளையின் நிறுவனராகவும் உள்ளார்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

நமது முந்தைய உரையாடலில், இத்தாலியின் சில பகுதிகளில் அதிக இறப்புகளை நீங்கள் மாசுபாட்டுடன் தொடர்புபடுத்தியுள்ளீர்கள். அப்போது அது என்னவாக இருந்தது, இன்று டெல்லியிலும், மாசு அளவு அதிகரித்து வரும் நாட்டின் பிற பகுதிகளில் நாம் என்ன பார்க்கிறோம்? இரண்டிற்கும் பொதுவானது என்ன?

அப்போது நான் கூறியதைத்தான் இப்போது டெல்லியில் பார்க்கிறோம். அந்த நேரத்தில், நான் இத்தாலியில் இருந்து ஒரு ஆய்வை மேற்கோள் சுட்டிக்காட்டினேன், அது கோவிட்-19 வழக்குகளின் நிகழ்வுகளை இத்தாலி முழுவதும் பி.எம் 2.5 நிலைகளுடன் தொடர்புபடுத்தியது. [பி.எம் 2.5 என்பது மனித தலைமுடியை விட 30 மடங்கு நுண்ணிய காற்றுத்துகள்களைக் குறிக்கிறது, இது நுரையீரலுக்குள் நுழைந்து, சேதப்படுத்தி மக்களை பலி கொள்ளக்கூடும்]. இத்தாலியில், கோவிட்-19 வழக்குகள் மற்றும் பி.எம் 2.5 ஆகியவற்றுக்கான புள்ளி விவர வரைபடங்களை ஏற்படுத்திய போது, இரண்டும் ஒன்றுகொன்று பிரதிநிதித்துவப்படுத்துவதை கண்டறிந்தனர் - பி.எம் 2.5 இன் அதிக செறிவுள்ள பகுதிகள் 100,000 மக்கள்தொகைக்கு கோவிட் -19 வழக்குகள் அதிகமாக இருப்பதாக கண்டன.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஹார்வர்டில் இருந்து மற்றொரு ஆய்வறிக்கைவந்தது, இது இறப்புக்கு பி.எம்2.5 உடன் தொடர்புபடுத்தியது: நாள்பட்ட பி.எம் 2.5 வெளிப்பாட்டில் ஒவ்வொரு 1 மைக்ரோகிராம் உயர்வுக்கும், இறப்பு விகிதத்தில் 8% அதிகரிப்பு இருப்பதாக அது குறிப்பிட்டது. இது அமெரிக்காவில் 3,000 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவு ஆகும்.

கோவிட் நிகழ்வுகள் அதிகரித்து வருவதற்கும், மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் அதிக இறப்பு ஏற்படுவதற்கும் இது சான்றாகும். இப்போது, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக நாம் இதையே காண்கிறோம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வரை, நாடு முழுவதும் மற்றும் டெல்லியிலும் கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் டெல்லியில் மாசு அளவு அதிகரித்தவுடன், சரிவு என்பது குறைந்து செங்குத்தாக உயரத் தொடங்கியது.இன்று நகரத்தில் ஒரு நாளைக்கு அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகி வருவதைக் காண்கிறோம். இது நேரடியாக காற்று மாசுபாட்டின் விளைவு தான்.

மற்ற எல்லா காரணிகளும் நிலையானதாக இருக்கும் போது, குறிப்பாக கோவிட்-19 வழக்குகள் ஏன் இதுபோன்ற நேரத்தில் குறிப்பாக உயர்கின்றன?

அதில் பல கோட்பாடுகள் உள்ளன. ஒன்று, பி.எம் 2.5 [துகள்] இல் வைரஸ் துகள் சுமக்கின்றன; இது பி.எம்.2.5ன் மேற்பரப்பில் உறிஞ்சப்படுகிறது, மேலும் அவற்றின் மேற்பரப்பில் உறிஞ்சப்பட்ட ஏராளமான துகள்களை நாம் உள்ளிழுக்கும்போது, வைரஸ் துகள் மார்பில் ஆழமாகச் செல்கிறது, இதன் மூலம் வழங்கப்பட்ட மொத்த டோஸ் மற்றும் வைரஸ் அங்கு தங்கியிருக்கும் மொத்த கால அளவு அதிகரிக்கும். ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல.

மாசுபாடு நுரையீரலை மோசமாக பாதிக்கிறது என்பதை நாம் அறிவோம். இது காற்று மற்றும் நுரையீரலில் புறணி அழற்சியை ஏற்படுத்துகிறது, அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது மற்றும் தொற்றுநோய்க்கான பாதிப்பை அதிகரிக்கிறது. காயமடைந்த மற்றும் வீக்கமடைந்த நுரையீரலை ஒருவர் கொண்டிருக்கும்போது, ​​நுரையீரலுக்குள் ஒரு குறிப்பிட்ட அளவு வைரஸ் நுழையும்போது, ​​காயமடைந்த, வீக்கமடைந்த நுரையீரல் ஆரோக்கியமான நுரையீரலைக் காட்டிலும் தொற்றுநோயால் பாதிக்கப்படும். [இது] பொதுவாக அறியப்பட்டது.

அத்துடன், மாசுபடுத்தும் பல்வேறு நச்சுகள் காரணமாக இந்த நபர்களுக்கு குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி இருக்கலாம். ஆக மொத்தத்தில், உங்களுக்கு குறைந்த உடல் நோய் எதிர்ப்பு சக்தி, குறைந்த நுரையீரல் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது, அதற்கு மேல், வைரஸின் அதே அளவை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். மருத்துவ தொற்றுநோயாக மாற்றும் முக்கியமான டோஸ் இது என்பதை நிரூபிக்கிறது என்று நினைக்கிறேன்.

இது அதிக நிகழ்வுகளைப் பற்றியது. இப்போது, ​​நமக்கு ஏன் அதிக இறப்பு இருக்கிறது?

இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நுரையீரல் பிரச்சினைகள், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பிற பிரச்சினைகள் அனைத்தையும் கொண்டவர்கள் கோவிட்-19 ஆல் பாதிக்கும் போது இறப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் நிறுவப்பட்ட ஒரு தொடர்பாகும். இவை மாசுபாட்டால் ஏற்படும் நோய்கள் அல்லது பிரச்சினைகள். எனவே நீங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட சமூகத்தைக் கொண்டிருக்கும்போது, ​​அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கும், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மூளைத் தாக்குதல் போன்றவை அதிகமாக இருக்கும் - இந்த பிரச்சினைகள் அனைத்தும் இறப்பு அதிகரிப்பவை . எனவே, இந்த நபர்கள் நோயைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் நோய் வந்தால் மரணத்தை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.

மக்கள் போதுமான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் இது அர்த்தப்படுத்துகிறதா? உதாரணமாக, மக்கள் தொடர்ந்து நல்ல தரமான முகக்கவசங்களை அதாவது என்.95 - து முதலில் மாசுபாட்டிற்காக இருந்தது-- அணிய வேண்டுமா? இது மாசு மற்றும் வைரஸ் இரண்டிற்கும் எதிராக போதுமான பாதுகாப்பா அல்லது தடையா?

இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவது கோவிட்டை தடுப்பது, இதற்காக மூன்று பொன்னான கொள்கைகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம்: முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருத்தல். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும், கோவிட் தொற்றை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதற்கு மேல், மாசுபாட்டின் விளைவுகளால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன், மேலும் கோவிட் தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் புறக்கணித்தால், அதை பெறுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரிக்கும்.

எனவே, முகக்கவசங்களை அணிவது கோவிட்-19 பெறுவதைத் தடுக்கும், மாசுபாட்டில் இருந்து பாதுகாப்பையும் தரும். எனவே நாம் அனைவரும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் கைகளை கழுவுவது கட்டாயமாகும், அதோடு, காற்று மாசுபாட்டின் அளவைக் குறைக்க முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.

காற்று மாசுபாட்டின் இந்த அளவுகள் - 400 இன் காற்றின் தரக் குறியீடு (AQI), மிதமான முதல் தீவிரமானட் காற்று மாசுபாடு என்று வகைப்படுத்தப்பட்டுள்ள -- உடலுக்கு என்ன செய்கிறது? இது பொதுவாக ஏற்படுத்தும் பிற சிக்கல்கள் யாவை?

நாம ஒருநாளைக்கு 25,000 முறை சுவாசிக்கிறோம், 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10,000 லிட்டர் காற்றை உள்ளிழுக்கிறோம். குழந்தைகள் மிக வேகமாக சுவாசிக்கிறார்கள், மற்றும் உடல் மேற்பரப்பு அடிப்படையில் அவர்கள் பெரியவர்களை விட அதிக காற்றை சுவாசிக்கிறார்கள். பெரிய அளவிலான நச்சுகள் தற்போது நமக்கு மத்தியில் இருக்கும்போது -- அது துகள்களாக இருந்தாலும் நச்சு வாயுக்களாக இருந்தாலும் -- உடலுக்குள் செல்லும் போது, ​​அவை முதலில் சேதமடைவது நமது மூக்கு, சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல். ஆனால் கதை அங்கேயே முடிவதில்லை.

இந்த இரசாயனங்கள் பெரும்பாலானவை, அது பி.எம். 2.5 ஆக இருந்தாலும், வாயுக்களாக இருந்தாலும், நுரையீரல் புறணியைக் கடந்து இரத்தத்தில் நுழைந்து,- மூளை முதல் எலும்புகள் வரை இரத்தத்தின் வழியாக ஒவ்வொரு உறுப்புக்கும் செல்கின்றன. அத்துடன் அவை சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பிணி பெண்கள். இந்த சேதம் உண்மையில் கருப்பையக கோட்டில் இருந்து தொடங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த நச்சுக் காற்றை உள்ளிழுக்கும் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தையின் கருப்பையில் வளர்க்கப்படுவதால் ஓரளவு சேதம் ஏற்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு தனது முதல் மூச்சை எடுக்கும்போது, ​​பி.எம். 2.5 இருந்தால் அது 500-600 தரக்கட்டுப்பாட்டுக்கு [AQI] அருகில் எனில் -- இது, சேதத்தின் அடிப்படையில் சுமார் 30 சிகரெட் புகைக்கு சமம் -- பிறந்த அந்த குழந்தை, தனது வாழ்க்கையில் முதலாவது சுவாசத்தில் இருந்து புகையை இழுப்பதாக மாறுகிறது. அதன் நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு ஏற்படும் சேதத்தின் அளவை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். இதேபோல், அதன் குழந்தைப் பருவத்தில் இருந்தும், இளமைப் பருவத்திலும் தொடர்கிறது. வயதானவர்களிடம் மீண்டும் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. எனவே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள். ஆனால் மோசமான விளைவுகளில் இருந்து யாரும் தப்பவில்லை. நீங்கள் மூச்சு விடுவதை நிறுத்தினால் மட்டுமே மோசமான விளைவில் இருந்து தப்பிக்க முடியும்.

கோவிட்-19 மற்றும் தீவிர காற்று மாசுபாடு ஆகிய இரட்டை சிக்கல்களுக்கான தீர்வுகள் ஒன்றா - அதாவது முகக்கவசம் அணிவது? மாசுபாட்டில் இருந்து தூர விலக்க முடியாது என்று நினைக்கிறேன், ஆனால் வீட்டில் தங்கலாம், காற்று சுத்திகரிப்பாளர்கள் வைத்திருக்கலாம் - நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

உடனடி நடவடிக்கை என்னவென்றால், கோவிட்-19 தடுப்புக்கான மூன்று பொன்னான கொள்கைகளை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் - அதாவது ஒருபோதும் முகக்கவசம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம், எப்போதும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நான் மிகவும் எளிமையான விதியைக் கொடுக்கிறேன்: உங்களை சுற்றி எல்லோருக்கும் கோவிட் -19 நேர்மறை என்று தயவுசெய்து கருதுங்கள். எல்லோரிடம் இருந்தும் 1.5 - 2 மீட்டர் தூரம் இடைவெளியை பராமரியுங்கள். உங்களை சுற்றியுள்ள அனைவரையும் முகமூடி அணியச் சொல்லுங்கள். மற்ற நபர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால், குறிப்பாக அது என்.95 ஆக இருந்தால், நீங்கள் ஒரு நல்ல தரமான முகமூடியையும் அணிந்திருந்தால், நீங்கள் 1.5-2 மீட்டர் தூரத்தை பராமரிக்கிறீர்கள், அவர்களில் ஒருவர் நேர்மறையாக இருந்தாலும் கூட, பரவும் வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன. நீங்கள் தொடும் ஒவ்வொரு மேற்பரப்பையும் ஒவ்வொரு பொருளிலும் தொற்று இருப்பதாகக்கருதி அவ்வப்போது கைகளை கழுவி சுகாதாரத்தைப் பின்பற்றுங்கள்.

மாசுபாட்டைப் பொறுத்தவரை, அதை தடுக்கக்கூடிய பகுதி எதுவாக இருந்தாலும், நம் வீதிகளில் இருந்து சிறிய பங்களிப்பு எதுவாக இருந்தாலும், நமது குப்பையை எரித்தல் மற்றும் குடிமக்கள் தங்களது சிறிய செயல்களால் கட்டுப்படுத்தக்கூடிய பிற ஆதாரங்களில் இருந்து வந்தாலும், உடனடியாக அதைச் செய்ய வேண்டும். நாம் அணிந்திருக்கும் என்95 முகமூடி அல்லது வேறு எந்த முகமூடியும் மாசுபாட்டிற்கு எந்த சிறிய பாதுகாப்பையும் கொடுக்கும். ஆனால் நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நச்சு வாயுக்களை எந்த முகக்கவசத்தாலும் தடுக்க முடியாது. எனவே, மாசுபாட்டைக் குறைப்பதில் நாம் பணியாற்ற வேண்டும். ஒரு காற்று சுத்திகரிப்பு அல்லது முகக்கவசம் நமக்கு அனைத்து பாதுகாப்பையும் தரும் என்று கருத முடியாது. நுரையீரல் நோயாளிகள், சிறு குழந்தைகள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கோவிட்டுக்கு பிந்தைய நோயாளிகளுக்கு காற்று சுத்திகரிப்புகளை நாம் பரிந்துரைக்கிறோம்.

கோவிட்டிற்கு பிந்தைய நோயாளிகள் மிகவும் தீவிரமான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும் கூட நுரையீரல் பிரச்சனைய கொண்டிருக்கிறார்கள். அதற்கு மேல், அதில் இவ்வளவு மாசுபட்ட காற்று இருந்தால், பிரச்சினைகள் மேலும் மோசமடைகின்றன. எனவே, அவர்களின் அறையில் செடிகளை வளர்க்கவும், காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை வைத்திருக்கவும் நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம், இதனால் பாதிப்பு ஓரளவிற்கு குறைகிறது. ஆனால் அதனுடன், நாம் அனைவரும் கார்கள் பயன்பாட்டை 20-30% குறைக்க ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் நான் புகை மற்றும் தூசியைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினால், ஒவ்வொருவரும் மாசுபாட்டைக் குறைக்க கொஞ்சம் பங்களிக்கத் தொடங்கினால், மாசுபாட்டின் அளவுகளில் நாம் கணிசமான முன்னேற்றம் காண முடியும் என்று நான் நினைக்கிறேன்.

நாங்கள் கடைசியாக பேசியபோது முதல், உங்களை போன்ற மருத்துவர்கள் கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர், இருப்பினும் நம்மிடம் உரிய சிகிச்சை முறை இல்லை, தடுப்பூசி கண்டுபிடிப்பு கட்டத்தில் உள்ளது. தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்? முன்பை விட வேறு வழியில் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா?

நாம் கடைசியாக கலந்துரையாடியதை விட இன்று மருத்துவமனை சேர்க்கைக்கான அறிகுறிகள் மிகவும் நெறிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, லேசான மற்றும் மிதமான நிகழ்வுகளுக்கு இடையில் தெளிவான இடைவெளிகள் உள்ளன, அவை உண்மையில் ஆக்ஸிஜன் கண்காணிப்புடன் வீட்டில் நிர்வகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், ‘ஹேப்பி ஹைபோக்ஸியா’ என்ற ஆக்சிஜன் குறைபாடு சொல் நன்கு அறியப்படவில்லை. சிலர் தங்கள் நுரையீரல் ஈடுபாட்டின் அடையாளமாக மூச்சுத் திணறலை மேம்படுவதற்காக நாம் காத்திருந்தோம், இது துரதிர்ஷ்டவசமாக உண்மையல்ல, ஏனென்றால் பலருக்கு மூச்சுத் திணறல் இல்லாமல் நுரையீரல் பாதிப்பு இருந்தது, அத்துடன் ஏராளமான உயிர்கள் பறிபோயின. இன்று, நாம் அதை நன்றாக புரிந்துகொள்கிறோம். எனவே, ஆக்ஸிஜன் அளவை முன்கூட்டியே கண்காணித்து வருகிறோம். 95% க்கும் குறைவான வீழ்ச்சி ஏற்பட்டால், நீங்கள் ஒரு மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும், தெளிவான வழிகாட்டுதல்கள் தெரிவிக்க வேண்டும் என்று அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவமனைகளில் அதிக ஆக்ஸிஜன் மையங்கள் உள்ளன, அவற்றுக்கு செல்லலாம். இந்த நோயாளிகளில் அதிக எண்ணிக்கையிலான ஆக்ஸிஜனை மட்டுமே நிர்வகிக்க முடியும், மேலும் இவர்களில் நல்ல எண்ணிக்கையிலானோர் ஆக்ஸிஜன் சிகிச்சையால் மேம்பட்டு வருகின்றனர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் உண்மையில் ஒரு BiPAP அல்லது வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுகிறது, இது நமது கடைசி கலந்துரையாடலின் போது இருந்ததைவிட இன்று மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கிடைக்கிறது.

நாம் நவம்பரில் இருக்கிறோம். ஒரு நீண்ட குளிர்காலத்தை நீங்கள் பார்க்கிறீர்களா?

நிச்சயமாக ஆமாம். ஆனால் நான் பயப்படுவது மற்றும் பார்க்க விரும்பாதது கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஆகும். என் பயம் என்னவென்றால், இந்த கொடிய விருந்துகள் - பண்டிகைகள், மாசுபாட்டில் செங்குத்தாக அதிகரித்து - கோவிட் -19ல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால், நாம் ஒரு பெரிய பரவலை கண்டால், அது மக்களுக்கு பேரழிவு தரும்; சுகாதாரத் துறையிலும் ஐ.சி.யுக்கள் கிட்டத்தட்ட அனைத்து டெல்லி மருத்துவமனைகளிலும் மூச்சுத் திணறுகின்றன. அதற்கு மேல், நோயாளிகளின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு இருந்தால், நமக்கு தீவிரமான பிரச்சினை உள்ளது. துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை எதிர்கொள்வதை விட ஒரு மருத்துவராக நான் அதைத் தடுக்கவே விரும்புகிறேன்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.கருத்துகளை respond@indiaspend.org.என்ற முகவரிக்கு அனுப்பலாம்.மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story