சிகிச்சை இலவசம், 4-ல் ஒரு இந்திய காசநோயாளி சொத்தை விற்றோ அல்லது கடன் பெற்றாக வேண்டும்

சிகிச்சை இலவசம், 4-ல் ஒரு இந்திய காசநோயாளி சொத்தை விற்றோ அல்லது கடன் பெற்றாக வேண்டும்
X

புதுடெல்லி: நான்கு காசநோய் நோயாளிகளில் (TB) ஒருவர், தமது மருத்துவ சிகிச்சைக்காக சொத்துக்களை விற்றோ அல்லது பணம் கடன் வாங்க வேண்டியிருந்தது - இது, 'கஷ்டமான நிதியுதவி' - என்பதை புதிய ஆய்வு காட்டுகிறது.

"ஊட்டச்சத்து ஆதரவு வழங்கும் சமூகநலத் திட்டங்களுடன், தகுதியுள்ள காச நோயாளிகளை இணைப்பதன் மூலம் பேரழிவு தரக்கூடிய செலவுகள் நீக்கப்பட வேண்டும்" என்று, தேசிய வழிமுறை திட்டம் (NSP) 2017-2025 ன் ஒரு குறிக்கோள் ஆகும்; இதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் காச நோயை முற்றிலும் நீக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். எனினும், இலவசமாக நோயில் இருந்து பாதுகாப்பு பெற்றவர்கள் மத்தியில், 21.3% நோயாளிகள் நிதியுதவிக்காக மிகவும் கஷ்டப்படுவதாக, இந்திய காசநோய் இதழ் (Indian Journal of Tuberculosis) மார்ச் மாதம் 2019இல் வெளியிட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

காச நோய் சிகிச்சைக்கான செலவுக்காக ஒரு குடும்பமே உழைத்து நிதி திரட்ட வேண்டியிருப்பதை இந்த ஆய்வு கண்டறிந்தது. இது 2014 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) 71 வது சுற்று, 899 காசநோயாளிகளை அடையாளம் கண்டது. இது சுகாதார செலவினங்களைப் பற்றிய தகவலை நிதி ஆதாரங்களுடன் சேர்த்து வழங்குகிறது. நிதியின் ஆதாரங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டு உள்ளன: சொந்த வருமானம் மற்றும் சேமிப்பு, கடன் (வட்டி அல்லது இல்லாமல்), சொத்துக்களின் விற்பனை, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நன்கொடைகள் அல்லது உதவி. இதில் கடன்கள், முக்கியமாக திருப்பிச் செலுத்தும் வட்டியுடன் என்பதை கட்டுரை ஆசிரியர்கள் யூகித்து கொண்டுள்ளனர். இது, சுகாதாரக் கொள்கை மற்றும் திட்டமிடல் (Health Policy & Planning) இதழில் வெளியான 2015 ஆய்வுடன் ஒத்திருக்கிறது.

ஆராய்ச்சி முறை

வயது, கல்வி, பாலினம், திருமண நிலை, மதம் மற்றும் செல்வம் போன்ற நோயாளிகளுடன் தொடர்புடைய பல்வேறு மாறுபாடுகளில், ஆய்வாளர்கள் முதன்முதலில் காச நோய்க்கான புற நோயாளிகள் சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் கை செலவினங்களின் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டனர்.

அதன் பின் திட்டம் செயல்படுத்துவதில் பின்னடைவு தரவை விவரிக்கவும் மற்றும் காச நோய் காரணமாக நிதி துயரங்களுக்கு இது பயன்படுத்தப்பட்டது.

சூழல்சார்ந்த பாக்கெட் செலவினம்

உலகளாவிய சுகாதார பாதுகாப்புக்காக வாதிடும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது: பாக்கெட்டில் செலவினம் மற்றும் சுகாதார செலவினங்கள் வளரும் நாடுகளில் மக்களை தீவிர வறுமையில் தள்ளியுள்ளன.

சுகாதாரத்திற்காக, பாக்கெட்டில் இருந்து ஆகும் செலவினங்கள் (OOP) பாதிக்கப்படும் 5.5 கோடி இந்தியர்களை - இது, தென் கொரியா, ஸ்பெயின் அல்லது கென்யாவின் மக்கள் தொகையை விட அதிகம் - 2011-12ஆம் ஆண்டில் வறுமையில் தள்ளியது. இதில், 3.8 கோடி பேருக்கு (69%) மருந்துகளுக்கு மட்டும் செலவழிக்கப்பட்டதாக, ஜூலை 19, 2018 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

இந்தியாவில் முந்தைய ஆய்வுகள் (இங்கு, இங்கு மற்றும் இங்கு ) குடும்பங்கள் மீதான சுகாதார செலவின நிதி சுமையை அளவிட, 'பேரழிவு சுகாதார செலவு' பயன்படுத்தப்படுகிறது. ஒரு மாதத்தின் வீட்டு நுகர்வுக்கான மொத்த செலவினத்தில் 10% ஐ விட அதிகமாகும், அல்லது உணவு அல்லாத பிற செலவிங்களில் 40%, உடல்நலத்திற்கான எந்தவொரு பாக்கெட்டில் இருந்து ஆகும் செலவும், பேரழிவு செலவு என்றே கருதப்படுகிறது.

பேரழிவு சுகாதார செலவு கணக்கிடுவது கடினம். இந்த அளவீட்டானது, பேரழிவு தரும் சுகாதார செலவினங்களுக்கான ஒரு குடும்பத்தின் (உறுப்பினர்களின் எண்ணிக்கை) சதவீதத்தை பகுப்பாய்வு செய்கிறது. பின்னர், ஒரு செறிவு குறியீட்டு- சி.ஐ. (CI) பணக்கார வசதியான குடும்பங்களை விட, ஏழைக் குடும்பங்கள் இன்னும் பெருமளவு பணத்தை செலுத்துகின்றன என்பதை தீர்மானிக்க கணக்கிடப்படுகிறது. சி.ஐ.யின் எதிர்மறையான மதிப்பு ஏழைக் குடும்பங்களின் வரம்புகளைவிட அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றது.

எனினும், சமீபத்திய ஆய்வில் பயன்படுத்தப்படும் கடினப்பட்டு நிதியளித்தல் மாதிரியானது, பாக்கெட் செலவுகளின் மதிப்பீட்டை கண்டறிய உதவும்.

காச நோய் கட்டுப்பாட்டுத் திட்டங்களின் மேலாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும், காசநோயாளிகளுக்கு ஆய்வு செய்ய, இத்தகைய நிதி திரட்டும் துயரை வரையறையாக பயன்படுத்தலாம். அவர்கள் எப்படி காச நோய்க்கு செலவிடுகின்றனர் மற்றும் நிதியை பயன்படுத்துகின்றனர் என்பதை புரிந்து கொள்ள ஊக்கமளிக்கிறது.

மிகவும் பாதிக்கப்படும் ஏழை இந்தியர்கள்

தேசிய பிரதிநிதி மாதிரி (NSSO) பயன்படுத்தி, மதிப்பிடப்பட்ட ஆய்வில் 26.7% காசநோய் சிகிச்சைக்கான உள்நோயாளி மற்றும் வெளிநோயாளிகள் 3.5% செலவினத்திற்கான நிதி சேகரிக்க கடுமையை அனுபவித்தனர். மொத்தத்தில், 25.9% நோயாளிகள் காசநோய் சிகிச்சை செலவினங்களுக்காக தங்கள் சொத்துக்களை விற்க வேண்டும் அல்லது நிதியை கடனாக வாங்க வேண்டும்.

இதனால், ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்; தங்களது வீட்டுக்கான வருவாயில் 23% மருத்துவமனைக்கே செலவிட்டுள்ளனர்.

How Indians Financed Their Tuberculosis Treatment
Savings Borrowings Sale of physical assets Contributions from Friends Other sources
Household Outpatient Household Outpatient Household Outpatient Household Outpatient Household Outpatient
Poorest 50.6 97 35.1 2.6 3.9 - 10.1 0.1 0.2 0.3
Poorer 62.6 90.3 32.2 8.3 0.5 - 4.6 0.9 0.1 0.5
Middle 68.3 98.5 30.8 0.8 0 - 0.2 0.7 0.6 0
Richer 85.1 99 12 1 0 - 2.9 0 0 0
Richest 80.9 97.4 17.6 1.8 0 - 1.5 0.8 0 0.1

Source: Author’s calculations based on NSSO 71st Round data

சமூக குழுக்களிடையே மாறுபாடுகள் எதுவும் இல்லை: பட்டியலின மற்றும் பழங்குடியின காச நோயாளிகள் மத்தியில் - இவர்கள் இந்திய காச நோயாளிகளில் 34.2% பேர் உள்ளனர்- 35.2% உள் நோயாளிகள் தங்களது சிகிச்சைக்கான பணத்திற்காக சொத்துக்களை விற்பனை செய்தோ அல்லது அதிக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர்.

இந்தியாவின் காசநோய் கட்டுப்பாட்டு இயக்கமானது தீவிர நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது: 2012-2015ல் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ. 1,685 கோடி (254 மில்லியன் டாலர்), இந்திய மற்றும் அதன் கூட்டாளிகளால் அர்ப்பணிக்கப்பட்ட ரூ.2,996 கோடியை விட (452 மில்லியன் டாலர்) குறைவாகும் - ரூ .631 கோடி (95 மில்லியன் டாலர்) பற்றாக்குறை ஆகும். உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, ஆண்டுதோறும் காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு தேவையான மொத்த தொகையில் 37% மட்டுமே இந்தியா பங்களிப்பு செய்கிறது; இது காச நோய்க்காக பிற மானியம் பெறும் நாடுகளுடன் ஒப்பிடுகையில், போதுமானதாக இல்லை.

நிதி மற்றும் ஊட்டச்சத்து துயரங்களை எதிர்கொள்ளும் காச நோயாளிகளுக்காக முன்மொழியப்பட்ட திட்டங்களில் ஒன்று, நேரடி பயனீட்டாளர் பரிமாற்றத்தின் மூலம் (DBT), ஒவ்வொரு காசநோயாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாகும். கடந்த 2018 ஏப்ரலில் இந்த திட்டம் உருவானது என்றாலும், 20.9 லட்சம் பதிவு செய்யப்பட்ட காச நோயாளிகளில் 12 லட்சம் (58%) பேர் தலா 1000 ரூபாய் இரண்டு மாதங்களுக்கு ரொக்கமாக பெற்றனர். முக்கிய காரணம்: பல கிராமப்புற ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு இல்லை.

(ஜான், பொது சுகாதார வல்லுநர் மற்றும் புதுடெல்லியை சேர்ந்த காம்ப்பெல் கூட்டு ஸ்தாபனத்தில் ஆதார தொகுப்பு வல்லுனர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story