நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் நச்சுக்காற்று உஷார், இது புகைபிடிப்பவர்களுக்கான நோய் மட்டுமல்ல!

X

மும்பை: இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோரில், புகைபிடிப்பவர்கள் மட்டுமின்றி, புகை பழக்கம் இல்லாதவர்களும் சம எண்ணிக்கையில் இருப்பது, நுழையீரல் பாதுகாப்பு அறக்கட்டளை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில், புற்றுநோயால் இறப்பவர்களில் அதிகம் பேருக்கு, நுரையீரல் புற்றே காரணமாகிறது. டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில், புற்று நோயாளிகள் 150 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஏறத்தாழ 50% பேருக்கு நுரையீரல் புற்று இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாததும், நோய் வளர்ச்சி பெறாததும் தெரிய வந்துள்ளது.

இளைஞர்கள், பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அதிகரிக்க, காற்று மாசுபாடு காரணம் என்பதற்கான வலுவான சான்று இருப்பதாக, இந்திய சுகாதாரத்துறை நிபுணர்கள் நம்புகின்றனர்.

”நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில், 1:1 என்ற விகிதத்தில் புகைபிடிப்பவர்களும், புகைபிடிக்காதவர்களும் சரிபாதி இருப்பதை இப்போது தான் முதல்முறையாக பார்க்கிறேன்,” என்று, சர் கங்காராம் மருத்துவமனை மார்பு அறுவை சிகிச்சை மைய தலைவர் அரவிந்த் குமார்,
இந்தியா ஸ்பெண்ட்
இணையதளத்திடம் தெரிவித்தார். ”இவ்விவரங்களை பார்க்கும் போது சொல்லத் தோன்றுவது, புகையும், 2.5 பி.எம். நிறைந்த காற்று மாசுபாடே காரணம்,” என்றார்.

இதில், பி.எம். (Particulate Matter) 2.5 என்பது நுண்ணிய அளவான, 2.5 மைக்ரான் அளவுக்கு குறைவானது; அல்லது மனித முடிவை விட 30 மடங்கு பெரிதானது. நச்சுக்காற்று ஆழமாக நுரையீரலில் செல்லும் போது, நுரையீரல் புற்றுநோய், சுவாச, இருதய நோய்கள் ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் ஒரு அங்கமான சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமை, கடந்த 2013ல், வெளிப்புற மாசுவை, புற்றுநோய்க்கான முகவர் என,
வரையறுத்துள்ளது
.

காற்று மாசால் ஏற்பட்ட சுகாதார அவசர நிலை

கடந்த 2017 நவம்பர் மாதம், டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ கூட்டமைப்பு, நாளொன்றுக்கு 50 சிகரெட் புகைப்பதற்கு ஈடாக, காற்றின் தரக்குறியீடு 999-ஐ கடந்ததை அடுத்து, பொது சுகாதார அவசர நிலையை பிறப்பித்தது.

இந்தியாவில் தற்போது, 1000-ல் 5 பேர் உயிரிழக்க, நுரையீரல் புற்றுநோய் காரணமாக உள்ளது. (தொடர்ந்து அதிக காற்று மாசால் பாதிக்கப்பட்டு வரும் டெல்லியில் இது, 1000-ல் 7 ஆகும்). நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவர்,
5 ஆண்டுகளுக்கு
மேல் வாழ்ந்ததில்லை.

காற்று மாசு பாதிப்பால் சுவாச பிரச்சனை, ஆண்டுக்கணக்கில் புகைபிடிப்பது, புகையிலை பயன்பாடு போன்றவற்றின் மீது மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், சுகாதார பணியாளர்களின் பார்வை அதிகரித்து வருகிறது. சுகாதார அபாயங்கள் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு, காற்று மாசுபாட்டால், சீனாவின் முதல் இளம் வயது நபராக, உலகிலும் கூட முதலாவதாக இருக்க வாய்ப்புள்ள, 8 வயது சிறுமிக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. 2.5 பி.எம். காற்று மாசு நிறைந்த, நெரிசலான சாலை ஓரம் அச்சிறுமி வசித்து வந்துள்ளாள்.

நோயாளில் பலர் இளைஞர்கள், பெண்கள், புகைபிடிக்காதவர்கள்

நுரையீரல் பாதுகாப்பு அறக்கட்டளை ஆய்வின்படி, இனி புகைப்பவர்களுக்கான, அல்லது பழங்கால நோயாகவோ, ஆண்களுக்கான நோயாகவோ மட்டும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2018ஆம் ஆண்டு ஆய்வின்படி, நுரையீரல் புற்று நோயாளிகளில், 21% பேர், 50 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில், 31 பேரில் 5 பேர், 21-ல் இருந்த் 30 வயதை சேர்ந்தவர்கள். இது, மொத்த நோயாளிகளில், 3.3% ஆகும்.

இது, 70 ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடும் போது, அதாவது, 1955-59ஆம் ஆண்டில், நாட்டின் 15 மருத்துவமனைகளில் நடந்த ஆய்வின்படி, 30 வயதுக்குட்பட்ட புற்று நோயாளிகளின் விகிதம், 2.5% ஆகும்.

Source: Incidence of Primary Lung Cancer in India and Lung Care Foundation Study

நுரையீரல் புற்று என்பது, பொதுவாக வயதானவர்களுடன் தொடர்புடையது. சிகரெட்டில் உள்ள தீங்கு விளைவிக்கும் ரசாயனம், நாளடைவில் மரபணு செல்லை சேதப்படுத்துகிறது. இதனால், புற்று செல்கள் உருவாவதை தடுக்கும் திறனை, உடல் இழந்துவிடுகிறது. அமெரிக்காவில், நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களில் 82% பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

பெரும்பாலும், 3 அல்லது, 4ம் நிலையில் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை, புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கான ஆண்- பெண் விகிதாச்சாரம், 1958-85ஆம் ஆண்டில், 6.7:1 என்றிருந்தது, 2012-2018ஆம் ஆண்டில், 3.8:1 என்ற நிலையை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக, சுகாதார மற்றும் தர மதிப்பீட்டு நிறுவன (IHME) ஆய்வின்படி, புகைபிடிக்கும் பழக்கம், கடந்த 2012ஆம் ஆண்டில், 3.2% பெண்களிடமும், 23% ஆண்களிடமும் இருந்தது தெரிய வந்துள்ளது. புற்றுநோய் வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும் சுரங்கங்கள், கட்டுமான தளங்களில் பெண்களுக்கான வேலைச்சூழல் குறைவாகவே இருக்கும்.

Incidence of Lung Cancer By Gender According To Three Studies
Year Ratio (Male : Female)
1950 - 1959 6.7 : 1
1986 - 2001 5.8 : 1
2012 - 2018 3.8 : 1

Source: Incidence of Primary Lung Cancer in India, Lung Cancer in India and Lung Care Foundation Study

புகைபிடிக்காதவர்கள், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மற்றொரு குழப்பமான போக்காகும். புகைபிடிப்பதால் புற்றுநோய் வருகிறது என்ற பிரதான காரணத்துக்கு அப்பாற்பட்டதாக இது உள்ளது.

நோயாளிகள், 150 பேரிடம் நடத்திய ஆய்வில், 50% பேர், அல்லது 74 பேர் புகைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் (அதாவது, அவர்களின் வாழ்க்கையில் புகைத்ததே இல்லை). இளைய வயது பிரிவில் (அதாவது, 50 வயதுக்குள்) புகைபிடிக்காமல் பாதிப்புக்குள்ளானவர்களின் விகிதம், 70% ஆக அதிகரித்துள்ளது.

புகைபிடிக்காதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட, சுரங்கங்களில் பணிபுரிவோரை பாதிக்கும், அபாகரமான கதிர்வீச்சு, கடும் காற்று மாசுபாடு போன்றவை காரணமாவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இது, ஆரோக்கியமான மற்றும் நோய்வாய்ப்பட்ட நுரையீரல்களை ஒப்பிட்டுக்காட்டும் படங்கள். டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் 150 நுரையீரல் புற்று நோயாளிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதில், 74 பேர் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் என்று தெரிய வந்தது.

காற்று மாசுபாட்டுக்கு உள்ள தொடர்பு

செதில் புற்று நோயால் (அடேனோ கார்சினோமா) பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையுடன் (80) ஒப்பிடும் போது, காளப்புற்றால் (ஸ்காமஸ் செல் கார்சினோமா) பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை (59) குறைவு. அதிகரிக்கும் புற்றுநோய் மற்றும் காற்று மாசுபாட்டுக்கு இடையிலான தொடர்பை இது சுட்டிக்காட்டுகிறது.

”புகைபிடிக்கும் பழக்கத்தால், காளப்புற்று நோய் உண்டாகிறது. ஆனால், இளைஞர்கள், பெண்களிடையே செதில் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இதற்கு, புகை பிடிப்பது காரணமல்ல; காற்று மாசுபாடே காரணம்,” என்கிறார், சர் கங்காராம் மருத்துவமனை மார்பு அறுவை சிகிச்சை மைய தலைவர் அரவிந்த் குமார்.

ஐரோப்பிய சுவாசம் தொடர்பான இதழில், 2016ஆம் ஆண்டில் வெளியான தகவலின்படி, புகைபிடிக்காதவர்களுக்கான புற்றுநோய் வடிவம், அடினோ கார்சினோமாவாக இருந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு, 2.5 பி.எம்.ஆக அதிகரித்து வருவதே, அடினோ கார்சினோமா அதிகரிக்க காரணம் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில், 24 மணி நேரத்தின் காற்று மாசுபாடு அளவு, 2.5 பி.எம். என்பது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 2018 ஆம் ஆண்டு மார்ச் – மே மாதங்கள் இடையே, ஒருநாள் கூட தூய்மையான காற்றை டெல்லிவாசிகள் சுவாசித்ததில்லை என்று, இந்தியா ஸ்பெண்ட் 2018 ஜூனில் தெரிவித்துள்ளது.

தடுப்பு முறைகளும், தீர்வுகளும்

நுரையீரல் புற்று நோய், 20-30 வயதினரிடையே அதிகரித்துள்ளது. அடினோ கார்சினோமா புற்றுநோயின் தாக்கம் அதிகளவில் உள்ளது. தாமதமாக கண்டறிதல் மற்றும் தவறாக நோயை கண்டறிதல், இதை கூடுதலாக்குகிறது.

எனினும், இதை ஆரம்பத்தில் கண்டறிதலும், தடுப்பதும் சாத்தியமே. தற்போது, 70-80% நோயாளிகள், 3 மற்றும் 4ஆம் நிலைகளில் கண்டறியப்படுகின்றனர். முதல் நிலையிலேயே நோயை கண்டறிவதற்கான வழியை முடுக்கிவிட வேண்டுமென்று சுகாதார நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

புற்றுநோயின் ‘நிலை’, அதன் அளவையும், பரவியுள்ளதையும் குறிக்கிறது. சிகிச்சையை தீர்மானிக்க உதவுகிறது. புற்றுநோயின் முதல் நிலையில், புற்று 3-4 செ.மீ. இருக்கும். இரண்டாம் நிலையில், 5 செ.மீ.ஆக வளரும். மூன்றாம் நிலையில், நிணநீர் முனைகளுக்கு, இது பரவுகிறது (நோய் எதிர்ப்பு செயல் திறன் செயல்பாட்டுக்கு முக்கியமானது). நான்காம் நிலையில், நுரையீரலில் இரு பகுதிகள் அல்லது, உடலின் மற்ற பாகங்களில் புற்றுநோய் பரவியிருக்கும்.

சுகாதார செயல்பாட்டாளர்களுக்கு, காற்று மாசுபாடு முக்கிய பிரச்சனையாக உள்ளது. சுகாதாரம் தொடர்பான கூடுதல் புள்ளிவிவரங்களை கொண்டு, கொள்கை வகுப்பாளர்கள், அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று, அவர்கள் கருதுகின்றனர்.

”இது ஒரு சுகாதார அவசர நிலை என்று அரசை வலியுறுத்த, இதுபோன்ற ஆய்வுகள் உதவும்” என்று கூறும் குமார், “எனினும், மக்களை நோக்கி எங்களின் கவனம் உள்ளது. சுகாதாரமான காற்று வேண்டும் என்று, அவர்கள் உரிமைக்குரல் எழுப்பினால், முக்கியத்துவம் தரக்கூடிய ஒன்றாக அரசுக்கு இது அமைந்துவிடும்,” என்றார்.

காற்று மாசுபாடு அளவு 2.5 பி.எம் என்ற அளவை எட்ட காரணமாக உள்ள தீபாவளி பட்டாசு வெடிப்புகளுக்கு தடை விதிக்கலாமா என, உலக நுரையீரல் புற்றுநோய் தினமான, 2018 ஆகஸ்ட்.1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. புகைபிடிக்காதவரின் நுரையீரல் எவ்வாறு கருப்பாக உள்ளது என்பதற்கு, சர் கங்காராம் மருத்துவமனை நோயாளி ஒருவரின் படத்தையும், டாக்டர் குமார் காண்பித்தார்.

டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில், புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத ஒரு நுரையீரல் புற்று நோயாளின் கருப்பு நிற நுரையீரல் படம் இது. புகைபிடிக்காத போதும் நுரையீரலை அது இவ்வாறு பாதித்துள்ளது.

இவ்வழக்கில், பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பின் முன்வைக்கப்பட்ட வாதத்தில், நுரையீரல் புற்றுக்கு, வாகனங்கள், தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசுபாடு காரணம். அதைவிட, தங்களால் கடும் பாதிப்பு உண்டாகவில்லை. அவைகளே பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து, தீர்ப்புக்கு காத்திருக்கிறது.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 2016 தீபாவளியின் போது, 5 வட இந்திய நகரங்களில் காற்றின் மாசுபாடு, உலக அளவில் மோசமாக, 40% மற்றும் 100% ஆக இருந்தது,
இந்தியா ஸ்பெண்ட்
தேசிய புள்ளிவிவரங்கள் மற்றும் ”பிரீத் நெட் ஒர்க்” 2016 நவம்பர் மாத ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

குறிப்பு: இக்கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள், உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, நுரையீரல் பராமரிப்பு அறக்கட்டளையால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையிலானது. ஆய்வின் முழுவிவரம், விரைவில் வெளியாகும்.

(திஷ் சங்கேரா, லண்டன் கிங்’ஸ் கல்லூரி பட்டதாரி; இந்தியா ஸ்பெண்ட் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.)

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 2016 தீபாவளியின் போது, 5 வட இந்திய நகரங்களில் காற்றின் மாசுபாடு, உலக அளவில் மோசமாக, 40% மற்றும் 100% ஆக இருந்தது, இந்தியா ஸ்பெண்ட் தேசிய புள்ளிவிவரங்கள் மற்றும் ”பிரீத் நெட் ஒர்க்” 2016 நவம்பர் மாத ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

Next Story