இந்திய இறப்புகளில் தீவிரவாதத்தால் நிகழ்வது 0.007%, நோய், சுகாதாரத்தால் 90%

இந்திய இறப்புகளில் தீவிரவாதத்தால் நிகழ்வது 0.007%, நோய், சுகாதாரத்தால் 90%
X

புதுடெல்லி: "ஒருவர் உயிரோடு இருக்க ஒரு தேசபக்தனாக இருக்க வேண்டும்," என்று, முன்னாள் இந்திய சுகாதார செயலாளர் கே. சுஜாதா ராவ், மே 13, 2019 இல் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்; தேர்தல் நேர விவாதங்களின் கவனம் “தேசியம், தீவிரவாதம் மீது தான்; சுகாதாரம் குறித்து இல்லை” என்பதை சுட்டிக் காட்டி இருந்தார்.

இத்தகைய தவறானவற்றுக்கு முன்னுரிமை தரப்பட்டதாக ராவ் கூறியதை, தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

கடந்த 2017இல், 766 இந்தியர்கள் அல்லது அனைத்து இறப்புகளில் 0.007% பேர் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு இறந்தனர்; அதே நேரம், 90% இறப்புகள் அல்லது 66 லட்சம் இந்தியர்களின் இறப்புக்கு சுகாதாரம் காரணமாக இருந்துள்ளது.

ஒப்பிடுவதற்கு தரவுகள் கிடைத்த கடைசி ஆண்டான 2017இல், பாதுகாப்பு துறைக்கான இந்தியாவின் செலவினம், அதன் சுகாதார செலவினத்தை விட இரட்டிப்பாக இருந்தது என, 2017-18 பட்ஜெட் தெரிவிக்கிறது.

சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் மோசமான முதலீடு நேரடியாக நாட்டின் உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. இந்தியர்கள் உச்ச உற்பத்தித்திறனுடன் ஆறரை ஆண்டுகள் பணியாற்றுகின்றனர்; இது சீனாவில் 20 ஆண்டுகள், பிரேசிலில் 16, இலங்கையில் 13 ஆண்டுகளாக உள்ளது. மனித மூலதன சர்வதேச தரவரிசையில், மொத்தமுள்ள 195 நாடுகளில் இந்தியா 158வது இடத்தைப் பெற்றுள்ளதாக, செப்டம்பர் 2018ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

தீவிரவாதத்தைவிட 8,000 மடங்கு அதிக இறப்பு உடல்நல பாதிப்புகளால்

கடந்த 2017இல் இந்தியாவில் 99 லட்சம் இறப்புக்கள் நிகழ்ந்தன; அதாவது 1,00,000 பேரில் இறப்பு விகிதம், 717.79 என்றிருந்ததாக, 2018 க்ளோபல் பர்டன் ஆப் டிசீஸ் (Global Burden of Disease -GBD) தரவுகள் தெரிவிக்கின்றன. இது, நோய்மற்றும் இறப்பு பற்றிய உலகளாவிய மதிப்பீடு மேற்கொண்டு, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகிறது.

இந்தியாவின் அனைத்து இறப்புக்களில் 26.6% மரணத்திற்கு தொற்று, தாய்வழி நோய் பரவுதல், பிறப்புறுப்பு மற்றும் ஊட்டமின்மையால் ஏற்படும் நோய்கள் காரணமாக உள்ளன; அனைத்து இறப்புகளில் தொற்றா நோய்களின் பங்கு 63.4%; காயங்கள் 9.8% காரணமாகிறது.

மோதல்கள் மற்றும் தீவிரவாதத்தால் "தனி நபர் வன்முறை" பிரிவின் கீழ் ஏற்படும் இறப்புக்கள், அனைத்து இறப்புகளில் 0.007%, அல்லது 766 என்றளவில் மட்டுமே இருப்பதாக, ஜி.டி.பி. தரவுகள் தெரிவிக்கின்றன.

மற்றொரு தரவுத்தளத்தின்படி, தீவிரவாதம், குறைவான உயிர்களையே காவு வாங்கி இருக்கிறது: 2017இல் நாடு முழுவதும் 178 தீவிரவாத சம்பவங்கள் பதிவாகி உள்ளன; இதில் 77 பேர் கொல்லப்பட்டனர்; 295 பேர் காயமடைந்ததாக தெற்காசிய பயங்கரவாத வலைத்தள தரவுகள் கூறுகின்றன.

அதே நேரம், நீரிழிவு நோயால் இறப்பு (254,500), தற்கொலை (210,800),தொற்று நோய்கள் (20 லட்சம்) மற்றும் தொற்றாத பிற நோய்கள் (62 லட்சம்) ஆகியவற்றால் ஏற்பட்ட இறப்புகள், தீவிரவாதத்தால் ஏற்பட்ட இறப்புகளை (766) விட 8000 மடங்கு அதிகமாகும்.

பாதுகாப்பு Vs உடல்நலம் Vs கல்வி செலவு

“சுகாதாரம் [Health] & கல்வி [education] ஆகியவற்றுக்கு முன்னுரிமை தர வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8% இல், அவற்றுக்கு 2% ஒதுக்க வேண்டும்” என்று, தனது டிவிட்டர் பதிவில் ராவ் கூறியிருந்தார்.

இந்தியாவின் பொது சுகாதார செலவினம், உலகளவில் மிகக்குறைவாக உள்ளது. உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவராக இந்தியா உள்ள நிலையில், 2015ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.02% இந்திய பொது செலவினமாக இருந்தது என, ஜூன் 2018ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

இந்தியாவின் பொது சுகாதார செலவினம் 2017-18ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4%; மாலத்தீவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்காக செலவிடப்பட்ட 9.4%; இலங்கையில் 1.6%; பூட்டானில் 2.5% மற்றும் தாய்லாந்தில் 2.9% என்றிருந்தது.

பாதுகாப்புத்துறைக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் உலகில் ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2017-18 பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் ரூ. 4.31 லட்சம் கோடி (72.7 பில்லியன் டாலர், 2017 வீதங்களைப் பயன்படுத்தி), அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% என்று, இன்ஸ்டிடியூட் ஆப் டிபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனாலிஸிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இது, அந்த ஆண்டின் சுகாதார பட்ஜெட்டை விட இரு மடங்கு அதிகம் என்பதை எங்களது பகுப்பாய்வு காட்டுகிறது.

பாதுகாப்புத்துறை பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கு அல்லது 24% ஓய்வூதியங்களுக்காக மட்டுமே செலவாகிறது.

Defence Budget Almost 50% Higher than Health Budget In 2017-18
Sector Budget (Rs lakh crore) Budget (As % Of Gross Domestic Product) Budget (As % Of Total Government Expenditure)
Defence 4.31 2.5 9.8
Education 4.41 2.6 10
Health 2.25 1.4 5.1

Source: Economic Survey 2017-18, Institute of Defence Studies and Analyses

கடந்த 2017இல் மத்திய மற்றும் மாநில செலவினங்களை உள்ளடக்கிய இந்தியாவின் பள்ளி கல்வி செலவினம் 4.41 லட்சம் கோடி ரூபாய் (73.8 பில்லியன் டாலர்) அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.6% ஆக இருந்தது. பாதுகாப்பு மற்றும் சுகாதார விட தனித்தனியானது. இருப்பினும், இந்தியாவின் கல்வித்தரம் மேம்படவில்லை; 5ஆம் வகுப்பு மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோரால், 2ஆம் வகுப்பு பாடங்களை வாசிக்க முடியாது; 70% பேரால், வகுத்தல் கணக்கு மேற்கொள்ள முடியாத நிலையுமே உள்ளது என்று, 2018 கல்வி ஆண்டு அறிக்கையை (ASER) மேற்கோள்காட்டி, 2019 ஜனவரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

தெற்காசிய நாடுகள் மத்தியில் ஒப்பிடும் போது, 2016 ஆம் ஆண்டில் கல்வி தரத்தில் இந்தியா மிகக்குறைவான மதிப்பீட்டையே பெற்றுள்ளது (100 இல் 66வது இடம்; ஆப்கானிஸ்தான் 64ஆம் இடம்). குழுவிற்கு தலைமை வகிக்கும் இலங்கைக்கு (75) பின்னால் உள்ளதாக, செப்டம்பர் 25, 2018இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

சுகாதாரம் மற்றும் கல்விக்கு அதிக பணம் தேவை

இந்தியாவில் சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு உயர்ந்து வருகையில் - 2010இல் இருந்ததைவிட 2018இல் இது இரு மடங்கு - அதிகமாக இருந்து வந்தாலும் அது போதுமானதல்ல என்று, 2019 ஜனவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. உலகின் வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் உள்ளனர்; அதிகளவில் காசநோயாளிகளும் இங்கு தான் இருக்கின்றனர். அத்துடன், பொது சுகாதார தோல்வியின் ஒரு அடையாளமாக, உலகளவில் அதிகபட்சமாக மருத்துவ செலவுக்கு அதிக பணத்தை செலவழிக்கும் சூழலும் இங்கு உள்ளது.

2017 ம் ஆண்டுக்கான தேசிய சுகாதாரக் கொள்கையானது, வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% தொகையை, பொது சுகாதார செலவினங்களுக்கு பயன்படுத்துவது பற்றி பேசியது; ஆனால், 2010ஆம் ஆண்டு இலக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% என்பதையே இந்தியா எட்டவில்லை என, 2017 ஏப்ரலில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

கல்விக்கான இந்தியாவின் அணுகுமுறையை வழிநடத்தும் தேசிய கல்விக் கொள்கை, 1968 ஆம் ஆண்டிலில் இருந்து குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து வருகிறது; ஆனால் அந்த இலக்கை அடையவில்லை. அங்கு, "செயல்படுத்துவதில் பரவலான மற்றும் தொடர் தோல்வியானது

வழங்கப்பட்ட வளங்களை உகந்த துணை பயன்பாட்டிற்கு வழிநடத்தும்" என்று, 2016 ஆவணம் தெரிவித்துள்ளது.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story