செயல்திறன் அடிப்படையிலான சுகாதார நிதிகளுக்கு வலுவான சுகாதார பணியாளர்கள், யதார்த்தமான இலக்குகள் தேவை

செயல்திறன் அடிப்படையிலான சுகாதார நிதிகளுக்கு வலுவான சுகாதார பணியாளர்கள், யதார்த்தமான இலக்குகள் தேவை
X

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய பொது சுகாதார திட்டமான தேசிய சுகாதார இயக்கம் (என்ஹெச்எம்) வழங்கும் 2019-20 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் அடிப்படையிலான நிதியைப் பெறும் வாய்ப்பை அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகியன இழந்தன. ஏனெனில் அவை 2018-19 ஆம் ஆண்டில் நோய்த்தடுப்பு இலக்குகளை எட்டத் தவறிவிட்டன. இந்த செயல்திறன் அடிப்படையிலான நிதிகள், மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்ஹெச்எம் நிதிகளில் 20% ஆகும்.

கடந்த 2017-18இல், பட்ஜெட்டில் என்ஹெச்எம் நிதியில் மத்திய அரசின் 90% பங்கு மாநிலங்களுக்கு உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 10% நிதி, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MOHFW) வழங்கி இருந்த மற்றும் கண்காணிக்கப்பட்ட இலக்குகளை நோக்கி ஒவ்வொரு மாநிலத்தின் செயல்திறனைப் பொறுத்ததாகும். இப்போது, 80% நிதி உறுதி செய்யப்பட்டுள்ளது; 20% ஒரு மாநிலத்தின் செயல்திறனை பொறுத்து அமைகிறது.

முன்னரே தீர்மானிக்கப்பட்ட சுகாதார இலக்குகளை அடைவதற்கு மாநிலங்களின் நிபந்தனைக்குட்பட்ட ஆரோக்கியத்திற்கான இத்தகைய செயல்திறன் அடிப்படையிலான நிதி, முடிவுகளை மேம்படுத்த மாநிலங்களை நிர்பந்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், அரசு வளங்களில் - குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள் - அதிக முதலீடு செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு பட்ஜெட் மற்றும் இலக்கு நிர்ணயிப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மை தேவை; அத்துடன் ஊக்கத்தொகைகளுக்கு மாநிலங்கள் போட்டியிட உதவும் வகையில் சிறந்த மற்றும் வெளிப்படையான கண்காணிப்பு தேவை என்று நிபுணர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்துள்ளனர்.

இது பலவீனமான மாநிலங்களுக்கு நியாயமற்ற முறையில் அபராதம் விதிக்கப்படுவதையும் தடுக்கும்.

"தற்போது, மாநிலங்கள் திறனில் மாறுபட்டுள்ளன; இருப்பினும் அனைத்து மாநிலங்களும் ஒரே போட்டியில் ஈடுபட ஆயத்தமாகின்றன" என்று சுகாதார பொருளாதார நிபுணரும் தெலுங்கானா அரசின் மனித வள மேம்பாட்டுக்கான மர்ரி சன்னா ரெட்டி இன்ஸ்டிடியூட்டின் பேராசிரியருமான அமீர் உல்லா கான் கூறினார்.

மாநிலங்கள் இப்போது பின்தங்கியுள்ளன - அதற்கு காரணம் ஊக்கத்தொகை இல்லாததால் அல்ல, மேம்படுத்தும் திறன் அவற்றுக்கு இல்லாததால் தான். முதலில் அரசு, இதேபோன்ற நிலைக்கு மாநிலங்களை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்; அதற்கு வளங்களில், குறிப்பாக மனித வளங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றார் அவர்.

வடகிழக்கு மாநிலங்கள் ஏன் பணத்தை இழந்தன

கடந்த 2018-19 இல், செயல்திறன்-இணைக்கப்பட்ட 2019-20க்கான நிதிகளுக்கு தகுதி பெற, ஜார்கண்ட், உத்தரகண்ட், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மலைப்பாங்கான மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களான குறைந்த வளர்ச்சியடைந்த அதிகாரமளிக்கப்பட்ட நடவடிக்கை குழு (ஈ.ஏ.ஜி) மாநிலங்கள், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் குறைந்தது 75% பேருக்கு நோய்த்தடுப்பு ஊசி போட்டிருக்க வேண்டும்; மற்ற மாநிலங்கள் 80% குழந்தைகளுக்கு முழுமையாக நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கியிருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகியன, இந்த இலக்கை அடையத் தவறிவிட்டன; மேலும் செயல்திறன் சார்ந்த எந்தவொரு நிதியையும் பெற தகுதியற்றவர்களாக இருந்தனர். யூனியன் பிரதேசங்கள் 80% முழு நோய்த்தடுப்புக்கான தகுதி அளவுகோலைக் கொண்டிருந்தன; ஆனால் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MOHFW), அந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட முடியாததால், இது தள்ளுபடி செய்யப்பட்டது.

How public health is funded

As India’s largest public health programme, the NHM is a major instrument through which the central government provides financing and support to the states for strengthening their public health systems. In 2018-19, 55% of funds from the country’s health budget were given to the NHM.

To receive NHM funding, each state must prepare and submit a Programme Implementation Plan, which includes key strategies to address public health challenges in the state and budgetary requirements for the year. The MOHFW then approves the budget and allocates funds based on these plans.

In many cases, states only receive approval for a certain percentage of the funds requested. Two of the disqualified states--Nagaland and Arunachal Pradesh--had the lowest proportion of funds approved for their state budgets in 2018-19, at 55% and 61% respectively, according to Accountability Initiative, a Delhi-based public policy research institute.

Both central and state governments contribute funds to the state NHM budget, but the central government provides the larger portion, according to Accountability Initiative.

யதார்த்தமான இலக்கு அமைத்தல்

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஏழு குறிகாட்டிகளில் அவற்றின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்கள் நிதி ஈட்டுகின்றன அல்லது இழக்கின்றன. இந்த குறிகாட்டிகள் ‘நிபந்தனை கட்டமைப்பை’ உருவாக்குகின்றன.

Conditionality Framework, 2018-19
Indicators Weightage
Improving incremental performance based on NITI Aayog Report 40
Operationalising Health and Wellness Centres 20
Implementing Human Resource Information System 15
Grading of District Hospitals 10
Mental Health Services In Districts As Per The Rights-Based Mental Health Framework 5
Screening of 30+ population for Non-Communicable Diseases 5
Rating of Primary Health Centres on the 12 functionalities 5

Source: Health System Strengthening, Conditionality Report of States, 2018-19

இந்த செயல்முறைகள் முற்றிலும் மேல்நோக்கி இருப்பதால், குறிகாட்டிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்காததால், இலக்குகளைத் தீர்மானிக்கும் இந்த முறை மாநிலங்களுக்கு நியாயமற்றது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

உதாரணமாக, நோய்த்தடுப்பு மருந்துகளை ஒரு தகுதி குறிகாட்டியாகத் தேர்ந்தெடுப்பது, இந்திரதனுஷ் இயக்கம் மற்றும் தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் இயக்கத்தின் மூலம் 2018 டிசம்பர் மாதத்திற்குள் ஒரு வயதுக்குட்பட்ட 90% இந்திய குழந்தைகளுக்கு முழுமையாக நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான மத்திய அரசின் இலக்கை அடிப்படையாகக் கொண்டது.

கடந்த 2018-19இல் தான் இந்த குறிகாட்டி அனைத்து முக்கியமான தகுதி அளவுகோல்களாக மாறின. மேலும், 2015-16 மற்றும் 2016-17 ஆம் ஆண்டுகளில், நோய்த்தடுப்பு என்பது ஐந்து எடையுடன் ஒரு செயல்திறன் குறிகாட்டியாக இருந்தது. 2017-18 ஆம் ஆண்டில், இது ஒரு முழுமையான குறிகாட்டியாக அகற்றப்பட்டது, அதற்கு பதிலாக மற்றொரு செயல்திறன் குறிகாட்டியான நிதிஆயோக் சுகாதார குறியீடு ஒரு பகுதியாகத் தோன்றியது.

இத்தகைய குறிகாட்டிகள், பலவீனமான பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கு, செயல்திறன் அடிப்படையிலான நிதி பெறுவதற்கான தகுதி வரம்பை விடவும் மிகக் குறைவாக இருக்கும்.

வரும் 2020-21 ஆம் ஆண்டில் செயல்திறன் அடிப்படையிலான நிதிகளுக்கு தகுதி பெற, அதிகாரமளிக்கப்பட்ட நடவடிக்கை குழு, வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்கள் 85% முழு நோய்த்தடுப்பு பாதுகாப்பு அடைய வேண்டும்; மற்ற அனைத்து மாநிலங்களும் 90% ஐ அடைய வேண்டும். உதாரணமாக, நாகாலாந்து அதன் நோய்த்தடுப்பு பாதுகாப்பை, ஓராண்டுக்குள் 47% இல் இருந்து 85% ஆக அதிகரிக்க வேண்டும்; இல்லையெனில், செயல்திறன்-இணைக்கப்பட்ட அனைத்து நிதிகளையும் அந்த அரசு இழக்கும்.

நாகாலாந்து அதன் நோய்த்தடுப்பு பணியை ஒரு வருடத்தில்20% புள்ளியில் இருந்து 67% ஆக மேம்படுத்தினாலும், அது எந்தவிதமான சலுகைகளையும் பெற தகுதியற்றதாகவே இருக்கும். மறுபுறம், மிசோரம் தற்போதைய நோய்த்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையான 87% என்பதில் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்றாலும் கூட, அது இன்னும் சலுகை பெறும் தகுதியை கொண்டிருக்கும்.

நிபந்தனை கட்டமைப்பின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தான் மாநிலங்களுக்கு சலுகைகளோ அல்லது அபராதங்களோ விதிக்கப்படுகிறது. அருணாச்சல பிரதேசம் சாத்தியமான 20-ல் 2 (1.8 முதல்) ஊக்கத்தொகையைப் பெற்றிருக்கும்; இது மாநில நிதிகளுக்கு தகுதி பெற்றிருந்தால், செயல்திறன் அடிப்படையிலான நிதிகளில் சுமார் 10% க்கு சமம். இருப்பினும், தகுதி அடிப்படையில் நோய்த்தடுப்புத் தேவையை அது பூர்த்தி செய்ய முடியாததால், அதிகபட்ச அபராதத்தை (-20) பெற்றதோடு, அனைத்து நிதிகளையும் இழந்தது.

மாநிலங்கள் தங்களின் முன்னுரிமைகள் மற்றும் சுகாதாரத் திட்டத்தின் அடிப்படையில் தங்களது இலக்குகளை நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும்; மேலும் அவர்களின் சொந்த தேவைகளுக்கேற்க செலவிட வேண்டும் என்று, கொள்கை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்தவரும், அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் இயக்குனருமான அவானி கபூர் கூறினார்.

நெகிழ்வான பட்ஜெட்

"செயல்திறன் ஊக்கத்தொகை யோசனையை செயல்படுத்தும் வகையில் நமது சமூக கொள்கை நிதியுதவியை நாம் போதுமான அளவு மறுசீரமைக்கவில்லை" என்று கபூர் கூறினார்.மாநிலங்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களின் பட்ஜெட் திட்டங்களை வடிவமைக்கும் நெகிழ்வுதன்மை இல்லை என்று கபூர் விளக்கினார்.

"தேசிய சுகாதார இயக்கத்தில் நமது திட்டமிடல் மற்றும் பட்ஜெட் தன்னியக்கத்திற்கு இடையூறாக இருக்கும் வரி உருப்படி பட்ஜெட்டுடன் தொடர்ந்து மையப்படுத்தப்பட்டு உள்ளது," என்று கபூர் கூறினார். வரி-உருப்படி பட்ஜெட் என்பது வரையறுக்கப்பட்ட நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய ஒரு முறையாகும், இதில் செலவு கண்டிப்பாக வரையறுக்கப்பட்ட பட்ஜெட் வகைகளைப் பின்பற்ற வேண்டும். இதன் விளைவாக, மாநிலங்கள் எப்போதும் தேவைகளுக்கு ஏற்ப செலவிட முடியாது. இத்தகைய சூழ்நிலையில், சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலங்கள் செயல்திறன் மானியத்தில் இருந்து அதிக லாபம் பெறும்” என்று கபூர் விளக்கினார்.

ஒரு மாநிலம் ஒரு வருடத்தில் பணத்தை இழந்தால், அது அடுத்த ஆண்டு மேம்படுவதற்கு அவர்களைத் தூண்டக்கூடும் அல்லது நிதி பற்றாக்குறையால் அவர்களால் மேம்படுத்த முடியாமல் போகலாம் என்று கபூர் கூறினார். அவர்கள் அமைப்பில் விளையாடுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் வெளிப்படையான கண்காணிப்பு

வரையறுக்கப்பட்ட தரவு பொதுவில் கிடைப்பதால் சுகாதார வல்லுநர்கள் மற்றும் சுயாதீன பார்வையாளர்கள் செயல்திறன்-இணைக்கப்பட்ட நிதியை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்ய முடியாது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், 2018-19 நிதியாண்டில் மட்டுமே மாநிலங்களின் முன்னேற்றம் குறித்த விரிவான தரவை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்தின் செயல்திறன் அமலாக்கத் திட்டமும், செயல்திறன் மதிப்பீட்டிற்கு பிறகு மாநிலத்திற்கு உண்மையில் எவ்வளவு நிதி கிடைத்தது என்பதை கூறாமல், ஒரு மாநிலம் ஈட்டுகிற மொத்த ஊக்கத் தொகையை மட்டுமே குறிப்பிடுகிறது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2015-16 மற்றும் 2016-17 ஆகிய ஆண்டுகளில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மாநிலங்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான நிதியை வழங்கியது; ஆனால் அந்த ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட இறுதி சலுகைகள் குறித்த எந்த தகவலும் இல்லை. "2018-19 முதல் செயல்திறன் அடிப்படையிலான நிதியுதவிக்கான நிபந்தனை அறிக்கையை வெளியிடத் தொடங்கினோம்" என்று தேசிய சுகாதார இயக்கத்தின் இணைச் செயலாளர் விகாஸ் ஷீல் கூறினார். செயல்திறன் அடிப்படையிலான நிதி 2017-18 ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டது; ஆனால் அந்த தகவல்கள் பொதுவில் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story