மாநிலங்கள் அதிக ஆன்டிஜென் பரிசோதனையைப் பயன்படுத்துகின்றன. இதன் பொருள் என்ன

மாநிலங்கள் அதிக ஆன்டிஜென் பரிசோதனையைப் பயன்படுத்துகின்றன. இதன் பொருள் என்ன
X

டெல்லி: கோவிட் -19 தொற்றுக்கு ஆன்டிஜென் பரிசோதனை தொழில்நுட்பத்தை இந்தியா பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. ஆர்டி-பி.சி.ஆர் தொழில்நுட்ப சோதனையின் “பொன்னான தரத்தை” விட இது வேகமாகவும் மலிவாகவும் இருக்கிறது. இது கோவிட்-19 இன் நேர்மறையான நிகழ்வுகளையும் மிகத்துல்லியமாகக் கண்டறிகிறது. ஆனால் இதில் உள்ள தீமை என்னவென்றால், வைரஸ் தொற்றால் ஒருவர் நேர்மறையாக இருந்தாலும், சோதனையில் ஒருநபரை எதிர்மறை என்று கணிசமான எண்ணிக்கையிலான ‘தவறான எதிர்மறை’ முடிவுகளை தருவதுதான்.

"சோதனையில் ஒரு குறிப்பிட்ட சதவிகித நேர்மறை உள்ளது என்று நாங்கள் சொல்கிறோம்; ஒருவேளை சோதனையில் நேர்மறை குறையும் போது, ​​நாம் சரிவை நிமிர்த்த செய்யத் தொடங்கியுள்ளோம் என்பதை உணரலாம்" என்று புதுடெல்லி தேசிய நோயெதிர்ப்பு நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி சத்யஜித் ராத் கூறுகிறார். “உண்மையில் அப்படித்தானா? ஏனென்றால், ஆன்டிஜென் சோதனை போன்ற குறைவான உணர்திறன் கொண்ட சோதனைக்கு நாம் மாறியிருந்தால், சோதனைகளில் நேர்மறைகளின் சதவீதம் குறைவதற்கு இது காரணமாக இருக்கலாம்” என்றார் அவர்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆன்டிஜென் சோதனை அதிக எண்ணிக்கையிலான நேர்மறையான நிகழ்வுகளை விரைவாக எடுக்கும் போது, ​​ஆன்டிஜென் சோதனைகள் போதுமான அளவு உணர்திறன் இல்லாததால் சில நேர்மறை வழக்குகள் கண்டறியப்படாமல் போகவும் செய்யலாம்.

"ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த நமது கோவிட் நேர்மறை சதவீதம் இன்று நம்முடைய நேர்மறை சதவீதத்துடன் கண்டிப்பாக ஒப்பிடப்படாது" என்று ராத் கூறுகிறார். "எனவே, நாம் ஒருவகையான சோதனையில் இருந்து மற்றொன்றுக்கு மாறினால், ஆன்டிஜென் சோதனையின் மூலம் எவ்வளவு இருக்கிறது என்பதை பிரித்து அறியவில்லை என்றால், அதற்கு நம்மிடம் ஒப்பிடத்தக்க தரவு இருக்காது" என்றார்.

உண்மையில், ஆர்டி-பி.சி.ஆர் மூலம் எத்தனை சோதனைகள், ஆன்டிஜென் சோதனை மூலம் எத்தனை சோதனைகள் என்பதைப் பிரித்து பல மாநிலங்கள் வழங்கவில்லை (மகாராஷ்டிரா அரசின் அறிக்கை இங்கே, தமிழ்நாட்டின் கோவிட் அறிக்கை இங்கே பார்க்கவும்), அதற்கு பதிலாக மொத்த சோதனை புள்ளி விவரங்களை மட்டுமே வெளியிடுகின்றன. மத்திய அரசின் சோதனை புள்ளி விவரங்களும் இந்த விவரத்தைக் காட்டவில்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்படி (ஐசிஎம்ஆர்) ஜூலை 30 வரை கோவிட்-19 தொற்றால் இந்தியாவில் 1.883 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

டெல்லியின் உதாரணத்தை நாம் உற்றுப் பார்க்கலாம். ஆர்டி-பி.சி.ஆர் சோதனையை விட டெல்லி அரசு ஆன்டிஜென் பரிசோதனை மூலம் அதிகமான மக்களை சோதித்து வருகிறது. ஜூன் 18 முதல் ஜூலை 29 வரை 478,000 ஆன்டிஜென் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அரசு ஜூலை மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தது. அதே காலகட்டத்தில் 180,000 ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டன. ஆன்டிஜென் சோதனைகள் மூலம் பரிசோதிக்கப்பட்ட 478,000 பேரில், 2,818 பேர் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் மூலம் மீண்டும் பரிசோதிக்கப்பட்டனர், அவர்களில் 404 பேர் நேர்மறையானவர்களாகக் காட்டப்பட்டனர்.

ஆன்டிஜென் சோதனை என்றால் என்ன?

ஆன்டிபாடி சோதனைகளைப் போலல்லாமல் ஆர்டி-பி.சி.ஆர் சோதனையை போலவே, ஆன்டிஜென் சோதனை உடலில் சார்ஸ்- கோவ்- 2 வைரஸ் இருப்பை தேடுகிறது. ஒரு ஆன்டிஜென் சோதனையில், ஒரு நபரின் நாசியில் இருந்து ஒரு துணியால் மாதிரி எடுக்கப்படுகிறது; அத்துடன் அது சார்ஸ்-கோவ்-2 வைரஸிஸ் அல்லது அதற்குள் காணப்படும் புரதங்களின் துண்டுகளைக் கண்டறிய சோதிக்கப்படுகிறது. ஆர்டி-பி.சி.ஆர் சோதனையும் வைரஸின் இருப்பைத் தேடுகிறது, ஆனால் இங்கே மாதிரிகள் வைரஸின் மரபணுப் பொருள்களுக்காக சோதிக்கப்படுகின்றன. (ஆன்டிபாடி சோதனை வேறுபட்டது - இதில், ஒரு நபர் வைரஸுக்கு ஒருவித நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியிருக்கும்போது அல்லது அதற்குப் பிறகு உருவாகும் ஆன்டிபாடிகள் இருப்பதை இரத்த மாதிரிகள் சோதிக்கின்றன).

ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் “நம்பமுடியாத அளவிற்கு துல்லியமானவை”. ஆன்டிஜென் சோதனைகள் அவ்வளவு உணர்திறன் கொண்டவை அல்ல, மேலும் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, ஆன்டிஜென் பரிசோதனையின் இந்த அம்சத்தை, “ஆன்டிஜென் சோதனைகளின் நேர்மறையான முடிவுகள் மிகவும் துல்லியமானவை, ஆனால் தவறான எதிர்மறைகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது, எனவே எதிர்மறையான முடிவுகள் தொற்றுநோயை நிராகரிக்காது” என்றது; மேலும் ஆர்.சி.- பி.சி.ஆர். சோதனை மூலம் உறுதிப்படுத்துவது அவசியமாகிறது.

^ஆன்டிஜென் சோதனைகள் முடிவுகளை மிக விரைவாக வழங்குகிறது. ஆர்டி-பி.சி.ஆர் சோதனை குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து மணி நேரம் ஆகலாம், ஆன்டிஜென் சோதனை 30 நிமிடங்களில் முடிவைக் கொடுக்கலாம்.“நோய் அறிதலுக்கு ஆன்டிஜென் சோதனை முக்கியமானது; ஏனெனில் இது மலிவான மற்றும் வேகமான துல்லியமான நேர்மறையான முடிவுகளை அளிக்கிறது, ” என்று புனேவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆசிரியர் வினீதா பால் கூறுகிறார். "ஆனால் நேர்மறை சோதனை செய்பவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இந்த சோதனையுடன் அதிக சோதனை போதுமானதாக இருக்காது, இதனால் பரிமாற்ற சங்கிலி உடைக்கப்படலாம்" என்றார்.

^அரசின் நிலைப்பாடு என்ன?

கோவிட்-19 அறிகுறிகள் உள்ளவர்கள் ஆன்டிஜென் பரிசோதனை மூலம் பரிசோதனை செய்யலாம் என்று இந்திய அரசு கூறியுள்ளது. ஆனால் அவற்றின் முடிவு எதிர்மறையாக வெளிவந்தால், ஆர்டி-பி.சி.ஆர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறு சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். இது ஜூன் 23, 2020 அன்று ஒரு சுற்றறிக்கையில் "கோவிட்-19 சோதனைக்கான புதிய கூடுதல் உத்திகள்" வாயிலாக விளக்கப்பட்டது.

ஆன்டிஜென் சோதனை "தொற்றுநோயை விரைவாகக் கண்டறிவதற்கும் விரைவாகக் கட்டுப்படுத்துவதற்கும் கள அளவில்" உதவக்கூடும் என்றும் "கள அமைப்புகளில் சார்ஸ்-கோவ்- 2ஐ விரைவாக கண்டறிய" முடியும் என்றும் அறிக்கை விளக்கியது. இந்த தொழில்நுட்பத்தை கள அமைப்புகளிலும் (ஆய்வகத்திற்கு வெளியே), மருத்துவமனைகளிலும், ஆர்டி-பி.சி.ஆர் சோதனை தொழில்நுட்பத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று அரசு அப்போது கூறியது.

இதுவரை, குறைந்தது மூன்று நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட ஆன்டிஜென் சோதனைகள் இந்தியாவில் பயன்படுத்த, ஐசிஎம்ஆர் அங்கீகாரம் தந்துள்ளது.

என்ன பிரச்சினை?

பல நன்மைகள் இருந்தும், ஆன்டிஜென் சோதனையின் குறைந்த உணர்திறன் அல்லது தவறான எதிர்மறைகளை காட்டும் அதிக வாய்ப்பு என்பதே அதன் பெரிய பிரச்சினையாகும். எடுத்துக்காட்டாக, ஐ.சி.எம்.ஆரால் அங்கீகரிக்கப்பட்ட முதல் ஆன்டிஜென் சோதனை இந்தியாவின் குருகிராம் பகுதியில் தென் கொரிய நிறுவனமான எஸ்.டி. பயோசென்சரால் செய்யப்பட்டது. இந்த சோதனைக்கருவி அதிக விவரக்குறிப்பை (உண்மையான எதிர்மறைகளைக் கண்டறியும் திறன்) காட்டியது; ஆனால் ஒப்பீட்டளவில் குறைந்த உணர்திறன் (உண்மையான நேர்மறைகளைக் கண்டறியும் திறன்) இருக்கும். இதன் தனித்தன்மை 99.3% முதல் 100% வரையிலும், உணர்திறன் 50.6% முதல் 84% வரையிலும் இருந்தது. இதன் பொருள் இது ஒரு நேர்மறையான முடிவைத் தரும்போது, ​​அது 99.3% முதல் 100% துல்லியமானது; ஆனால் அது எதிர்மறையான முடிவைத் தரும்போது, ​​அது 50.6% முதல் 84% வரை மட்டுமே துல்லியமாக இருக்க முடியும்.

இது போக்குகளைத் தவிர்க்கலாம், எடுத்துக்காட்டாக, டெல்லி போன்ற மாநிலங்கள் கோவிட்-19 ஐ கண்டறிய ஆர்.சி.-பி.சி.ஆர். சோதனையை விட ஆன்டிஜென் பரிசோதனையை அதிகம் நம்பத் தொடங்கும் போது, ​​குறைவான நிகழ்வுகளைக் காட்டத் தொடங்கும்.

எனவே கோவிட்-19 இன் புதிய நேர்மறையான நிகழ்வுகளைக் கண்டறிய ஆன்டிஜென் சோதனை மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அதன் பல முடிவுகள் தவறான எதிர்மறைகளாக இருக்கலாம் என்பது கோவிட் -19 அட்டவணையில் ஒரு நகரம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை நேரடியாக பாதிக்கும். இந்த இரண்டு தரவு புள்ளிகளையும் கலப்பது ஒரு மாநிலம் பரவலாக சோதித்து வருவதாகவும், அதன் நேர்மறையான நிகழ்வுகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அல்லது வழக்கு எண்களின் அதிகரிப்பு குறைந்து வருவதாகவும் ஒரு தோற்றத்தை அளிக்கக்கூடும், உண்மையில் அது அவ்வாறு இல்லை.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story