இந்திய சுகாதார அமைப்புக்கு ஆபத்து தரும் ஊழியர் பற்றாக்குறை, நிதி நெருக்கடி/தாமதம்
புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பொது சுகாதார செலவினங்கள், 1.28%ஐ கடக்கவில்லை. நோய் தாக்கம் - இந்தியர்கள், தொற்று நோய்களை விட அதிகம் வாழ்க்கை முறையால் ஏற்படும் நோயில் பாதிக்கப்பட்டுள்ளனர் - ஏற்படுவதால், மனித வள பற்றாக்குறை மற்றும் தொடர் நிதி நெருக்கடி, இந்தியாவின் ஆரோக்கிய இலக்குகளை பாதிக்கிறது.
தரவுகள், சுகாதார மற்றும் பொதுக் கொள்கை ஆகியன தொடர்பான இந்தியா ஸ்பெண்ட்-அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை நான்கு பகுதி கொண்ட தொடரின் நிறைவுப்பகுதி இதுவாகும். நரேந்திர மோடி அரசு மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ள சூழலில் இந்தியாவின் சுகாதாரத்தில், புதிதாக மேற்கொள்ள வேண்டிய விவகாரங்களை பற்றி விவாதிக்கின்றோம்.
அதன் கண்டம் போன்ற வேறுபாட்டால், இந்தியா ஒரு தொல்லியல் பாணியில் மிக பெரிய மாநில அளவிலான மாறுபாடுகளோடு தொற்றுநோய், ஊட்டச்சத்து மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது என, அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் சமீபத்திய ஆய்வு காட்டுகிறது.
நாம் ஏற்கனவே கூறியபடி, தொற்றுநோய் அல்லாதவற்றால் ஏற்படும் புதிய சவால்கள், சுகாதார நடைமுறைகள் கூடுதல் சுமையை காட்டுகிறது; இது இன்னும் தாய்வழி, பிறந்த குழந்தை மற்றும் ஊட்டச்சத்து சுகாதார நிலைமைகளில் பரவலாக்கப்படுகிறது. வேகமாக மாறும் நோய்களின் தன்மை, மாற்றத்திற்கு ஏற்றவாறு சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க கூடுதல் நிதி ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) தனது தேர்தல் அறிக்கையில் சுகாதாரம் குறித்த வாக்குறுதிகளை "அனைவருக்கும் சுகாதாரம்" என்ற தலைப்பிலும்; மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சுகாதார வாக்குறுதிகளை "சுகாதார நலன் ஒரு பொது நலம்" என்ற பெயரிலும் வெளியிட்ட நிலையில், கடந்த பத்தாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 2.5ஐ சுகாதாரத்திற்கு செலவிடுவதாக, எந்த கட்சியும் வாக்குறுதி அளிக்கவில்லை.
சுகாதார அமைப்பில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், போதுமான மனித வளங்களைப் பொறுத்தவரையில் வெளிப்படையான தன்மை தெரியவில்லை. இந்தியாவில் சுகாதாரப் பற்றாக்குறையின் மூன்றில் இரண்டு பங்கு மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வருகிறது; இவை, தேசிய சுகாதாரத்தில் பங்களிப்பு செய்யும் முக்கியமானவை.
மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையே கூட்டுறவு மற்றும் போட்டியுடன் கூடிய கூட்டாட்சிக் கோட்பாட்டை உருவாக்குவதற்கு, 2018 ஆம் ஆண்டில் அரசின் கொள்கை சிந்தனைக் குழுவான நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கியது. விளைவுகள், ஆளுமைச் சிக்கல்கள் பற்றி, இந்த தொடரின் முந்தைய கட்டுரைகளில் (இங்கே, இங்கே மற்றும் இங்கே) விவாதிக்கப்பட்டன. முக்கிய உள்ளீடுகள் மற்றும் செயலாக்கங்கள் ஆகியவற்றில் மூன்றாம் துணை களம் குறியீட்டில் ஆய்வு செய்யப்பட்டது. மற்றவற்றுடன், இந்த துணை களம், ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் நிதி பரிமாற்றத்தில் உள்ள தாமதங்கள் குறித்த சிக்கல்களை ஆராய்ந்தது.
பொது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள சுகாதார பராமரிப்பு பணிகளின் விகிதம், இந்த கருத்தின்கீழ் ஆராயப்படும் ஒரு முக்கிய குறியீடாகும். முக்கிய சுகாதார ஊழியர்களின் காலியிடங்கள் சுகாதார சேவைகள் மற்றும் அவற்றின் தரம் ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக, நிதி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது.
துணை சுகாதார மையங்களில் துணை செவிலியர் / துணை மருத்துவர்கள் (ஏஎன்எம்) உள்ளிட்ட பொது சுகாதார வசதிகளில், முக்கிய பதவிகளுக்கான வழக்கமான மற்றும் ஒப்பந்த பராமரிப்பாளர்களுக்கான மொத்த பதவிகளுக்கு காலியிட நிலைப்பாடு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் (PHCs) மற்றும் சமூக சுகாதார மையங்கள் (CHCs), ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ அதிகாரிகள் (MO), மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள நிபுணர்கள் (DHs) ஆகியவற்றில் நிபுணத்துவ நிபுணர்கள் குறியீட்டு பகுதியாக ஆய்வு செய்யப்பட்டது.
ஊழியர்கள் மற்றும் செவிலியர்களிய குறைந்தபட்ச காலிப்பணியிட சதவீதம் கொண்டு ஐந்து சிறந்த செயல்பாடுகள் உள்ள - சட்டசபை கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் - புதுச்சேரி (காங்கிராஸ் மற்றும் பிற ஆட்சியில் உள்ளது), உத்தரப்பிரதேசம் (பா.ஜ.க. மற்றும் பிற), திரிபுரா (பா.ஜ.க. மற்றும் பிற ), ஒடிசா (பிஜு ஜனதா தளம்) மற்றும் நாகாலாந்து (பா.ஜ.க. மற்றும் பிற).
அதிகபட்ச செவிலியர் பணி காலியிடம் உள்ள மாநிலங்களில் ஜார்கண்ட் (75%), அதை தொடர்ந்து சிக்கிம் (62%), பீகார் (50%), ராஜஸ்தான் (47%), ஹரியானா (43%) - இதில், ஒன்றை தவிர (ராஜஸ்தான்) தற்போது பா.ஜ.க. மற்றும் கூட்டணியினரால் ஆளப்படுகிறது. தேசிய தலைநகர பிராந்தியமான (NCT Delhi) தலைநகர் டெல்லி, ஆம் ஆத்மி கட்சியால் ஆளப்படுகிறது. இது காலி பணியிட எண்ணிக்கையில் 41% என, ஆறாவது மோசமான விகிதத்தை கொண்டுள்ளது.
முதன்மை அளவிலான சுகாதார பராமரிப்பு முறைகளில் உள்ள இடைவெளிகளை மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் அழுத்தம் கொடுத்து, பெரும்பாலானா நோயாளிகளை தனியார் துறையில் உதவி பெற கட்டாயப்படுத்தி, அரசு வசதிகளுக்கு எதிராக "தங்கள் கால்களுடன் வாக்களிக்க" நிர்ப்பந்திக்கப்படுவதாக, மே 2015இல் வெளியான ஆக்ஃபாம் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது.
Source: Niti Aayog
Note: Data as of March 31, 2016
இதேபோல், மருத்துவ அதிகாரிகளின் காலியிடம் அதிகளவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களாக பீகார் (64%), அதை தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (58%), ஜார்கண்ட் (49%), சட்டிஸ்கர் (45%), மணிப்பூர் (43%) ஆகியவை உள்ளன. சிக்கிமில் எந்தவொரு காலி பணியிடமும் இல்லை; திரிபுராவில் 2% காலி பணியிடங்களே உள்ளன; இவை இரண்டுமே, தற்போது பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து கேரளா (6%), தமிழ்நாடு (8%) மற்றும் பஞ்சாபி (8%) ஆகியவற்றில் காலி பணியிடங்கள் உள்ளன.
Source: Niti Aayog
Note: Data as of March 31, 2016
பல மாநிலங்களின் மாவட்ட மருத்துவமனைகளில் நிபுணர் பதவி காலி இடங்கள் மிக அதிகளவில் இருப்பதை காட்டுகின்றன: அதிகபட்சமாக அருணாச்சல பிரதேசம் (89%), அதை தொடர்ந்து சத்தீஸ்கர் (78%), பீகார் (61%), உத்தரகண்ட் (60%), குஜராத் (56%) உள்ளன.
சட்டசபை உள்ள 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான, சிறப்பு நிபுணர் பதவி மொத்த காலியிடங்கள் இருந்தன. இவற்றில் ஏழு மாநிலங்கள் தற்போது பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிகளால் ஆளப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகளால் நான்கு, ஆம் ஆத்மி கட்சி மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகியவற்றால் ஒரு மாநிலம் ஆளப்படுகிறது.
Source: Niti Aayog
Note: Data as of March 31, 2016
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையும், தனியாரில் கிடைக்கும் சிறப்பு பராமரிப்பாலும் பெரும்பான்மையான மக்களுக்கு எதிர்மறையான நிதி உட்குறிப்புகளுடன் சேவை வழங்குகிறது.
மருத்துவ செலவினங்களுக்கு பாக்கெட்டில் இருந்து செலவிடுதல் (OOP) மூலம், 2011-12ல் 5.5 கோடி இந்தியர்கள் -இது, தென் கொரியா, ஸ்பெயின் அல்லது கென்யாவின் மக்கள் தொகையை விட அதிகம்- வறுமையில் தள்ளப்பட்டனர் என்று, 2018 ஜூலை 19இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
மாநிலங்கள் செலவிடப்படாத நிதி அவற்றுக்கு தேவையானது
நிதிகளின் பற்றாக்குறை கூடுதலாக, மத்திய அரசால் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட நிதி நேரங்களில் முரண்பாடுகள், நாடெங்கிலும் சேவை வழங்கல் அடிப்படையில், சமத்துவமின்மைக்கு பங்களித்திருப்பதை, அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை பகுப்பாய்வு காட்டுகிறது.
சராசரியாக, அந்த ஆண்டில் மாநிலங்கள் செலவிடாத நிதியே, அவற்றுக்கு மிகவும் தேவைப்பட்ட தொகையாக இருந்தது. நிதியை விடுவிப்பதற்கான வேண்டுகோள் கடிதத்துடன் செல்லும் ஒரு கோப்பு, நிர்வாக ரீதியாக குறைந்தபட்சம் 32 மேசைகளை குறுக்கிட்டும், 25 மேசைகள் வழி வந்தாக வேண்டும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
மத்திய தேசிய சுகாதார இயக்கத்தின் (என்.ஹெச்.எம்.) நிதியானது மாநில கருவூலத்தில் இருந்து திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள், முகமைகளுக்கு (துறை / சமுதாயம்) மாற்றப்படும் காலத்தை, நிதி உடல்நலம் குறியீடானது, 2015-16 நிதியாண்டின் அனைத்து பணிகளை அடிப்படையாக கொண்டு பகுப்பாய்வு செய்தது; இதில் மாநிலங்களுக்கு இடையே பெரிய வேறுபாடு காணப்பட்டது.
p style="text-align: justify;">செயல்பாட்டு நிறுவனங்கள், முகமைகள் நிதியை பெறும் காலம் என்பது, டாமன் & டையு மற்றும் லட்சத்தீவுகளில் பூஜ்ஜியம் என்றும், தெலுங்கானாவில் 287 நாட்கள் என்றும் வேறுபாடு நிலவியது. அரசு கருவூலத்தில் இருந்து திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் முகமைகளுக்கு நிதி போய்ச்சேருவதில் கிட்டத்தட்ட எல்லா இந்திய மாநிலங்களிலுமே தாமதம் - பல சந்தர்ப்பங்களில் 100 நாட்களுக்கு மேல்- நிலவுகிறது; இது, பல்வேறு சுகாதாரத் துறை முயற்சிகள் சரியான நேரத்தில் செயல்படுத்துவதை கடுமையாக பாதிக்க செய்கிறது.Source: Niti Aayog
Note: Data for the financial year 2015-16
மேலும், ஆட்சி மற்றும் தகவல் துணை குறியீடு போலன்றி - மாநிலங்களில் உள்ள ஆளும் கட்டமைப்புகள் மற்றும் தகவல் அமைப்புகளின் நிலைப்பாடு - மாநிலங்களின் ஒட்டுமொத்த செயல்திறன், "முக்கிய உள்ளீடுகள் மற்றும் செயல்முறைகள்" கருப்பொருளுக்குள்ளேயே டொமைன்-குறிப்பிட்ட செயல்திறன் மிகுந்ததாக இருந்தது - இது மனித வளங்கள், சுகாதார மற்றும் செயல்முறைகளின் தரம் ஆகியவற்றைக் கையாளுகிறது.
எனினும், ஒட்டுமொத்த குறியீட்டுடன் ஒப்பிடுகையில் நிதி அமைப்பின் தரவரிசைப்படி, ஒடிசாவும் ராஜஸ்தானும் "முக்கிய உள்ளீடுகளும் செயல்முறைகளும்" துணை டொமைன் சிறப்பாக செயல்பட்டன. அதே நேரத்தில், அனைத்து சிறிய மாநிலங்களும் கோவா மற்றும் மணிப்பூர் போன்றவை - சுகாதார விளைவுகளில் "முக்கிய உள்ளீடுகள், செயல்கள்" ஒப்பிடும்போது சிறந்த செயல்திறன்களை காட்டின. இந்த அம்சம் மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
Source: Niti Aayog
இந்தியாவில் அனைத்து இந்தியர்களுக்கும் நியாயமான சுகாதார நல வசதிகள் கிடைக்க வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய கட்சிகளும் மாநில அளவிலான ஆரோக்கியம் பற்றிய ஒரு பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; ராஷ்டிரீய ஸ்வஸ்திய பீமா யோஜனா - 2008இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் ஏற்படுத்தப்பட்டது - மற்றும் முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 2018இல் உருவாக்கப்பட்ட பிரதமர் ஜன ஆரோக்கிய யோஜனா போன்ற திட்டங்களுக்கு இடையேயான இடைநிலை கால நேரம் இழப்பை தடுக்க வேண்டும்; இத்திட்டங்களில் மத்திய-மாநில ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது.
சுகாதாரம், ஒரு மாநில பொருளாக உள்ள நிலையில், தேசிய சுகாதார கொள்கை- 2017, சுகாதார கட்டுப்பாட்டுடன் ஒரு தர்க்க வழக்கை செய்துள்ளது; "உரிமைகள் சார்ந்த அணுகுமுறையின் திசை நோக்கி நகரும் தேவையை" வெளிப்படையாக ஆதரிக்கிறது; குறிப்பாக நிதி ஒதுக்குவதில் அதிகாரத்துவத்தில் நிலவும் தாமதத்தை குறைக்கவும், பல கட்சி கூட்டாட்சி ஜனநாயக அமைப்பில் மத்திய - மாநில உறவுகளை மேம்படுத்தவும் இந்தியா அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(குரியன், சுகாதார முயற்சியில் ஈடுபட்டுள்ள அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் பணியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.