‘குணமடைந்த கோவிட்-19 நோயாளிகள் நுரையீரல், இருதயம், மனநலப் பிரச்சினைகளுடன் திரும்பி வருகிறார்கள்’

‘குணமடைந்த கோவிட்-19 நோயாளிகள் நுரையீரல், இருதயம், மனநலப் பிரச்சினைகளுடன் திரும்பி வருகிறார்கள்’
X

மும்பை: கோவிட்-19 என்ற பயங்கர நோயால் இந்தியாவில் இன்னமும் பெரும்பாலானோர் அதிகம் பாதிக்காத நிலையிலும் கூட, அதன் தாக்கம் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நிலைமைகளுக்கு அப்பாற்பட்டது என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. நுரையீரலுக்கு அப்பால் இருதயம், சிறுநீரகம், மூளை மற்றும் இரைப்பைக் குழாய், சுவாசக்குழாய் என இந்த நோய் இன்னும் பல உறுப்புகளையும் பாதிக்கிறது என்பதும் தெளிவாகிறது. இத்தகைய தாக்கங்கள் நீண்ட காலம் இருக்கக்கூடும் என்பதால், அந்த சூழல் பற்றி நாம் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க முடியும்; நாம் இன்னும் என்ன அறிய வேண்டும்?

இதுகுறித்து, புதுடெல்லி அப்பல்லோ மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவு மூத்த மருத்துவர் எஸ். சாட்டர்ஜி மற்றும் மும்பையில் உள்ள சைஃபி, வோக்ஹார்ட் மற்றும் பாட்டியா மருத்துவமனைகளின் ஆலோசகரும் நெஞ்சக மருத்துவர் மற்றும் நுரையீரல் நிபுணர் ஜீனம் ஷா ஆகியோருடன் கலந்துரையாட இருக்கிறோம்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

டாக்டர் சாட்டர்ஜி, நோயில் இருந்து மீண்டும் வருவதை குறிப்பாக கோவிட்-இல் இருந்து மீண்ட நோயாளிகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்; அவர்கள் மற்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டுமா?

எஸ். சாட்டர்ஜி: இதில் சிறிய சிக்கல்களும் மிதமான பெரிய பிரச்சினைகளும் உள்ளன. கோவிட்- இல் இருந்து மீண்டதாகக் கூறப்படும் நோயாளிகளில் 14 அல்லது 15ம் நாள் சோதனையில் (மீண்டும் சோதனை அனுமதிக்கப்பட்டபோது) கோவிட் எதிர்மறையை நாங்கள் காண்கிறோம்.

அவர்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான விஷயம் என்னவென்றால் (மிகச்சிறிய சிக்கல்), எதிர்பார்த்ததை விட நீண்ட காலத்திற்கு குறைந்தளவு காய்ச்சலுடன் இருப்பதுதான். அவர்களுக்கு சுமார் நான்கு முதல் ஐந்து வாரங்கள் வரை எந்தவொரு காரணமும் இல்லாமல் காய்ச்சல் இருக்கும். இது உண்மையில் நோயாளிகளையும் அவர்களது உறவினர்களையும் தொந்தரவு செய்கிறது, நம்மையும் குழப்புகிறது. ஏனென்றால் காய்ச்சலுக்கான பிற காரணங்களையும் நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம். பலவீனம் என்பது ஒரு அம்சமாகும், இது மாறக்கூடியது; இது ஒருசில நபர்களிடம் காணப்படுகிறது. அவை இரைப்பை குடல் நோய்களைக் கொண்டுள்ளன - தளர்வான இயக்கங்கள் மற்றும் வாந்தியெடுத்தல் போன்றவை தீவிர நோயில் இருந்து மீண்ட பிறகும் தொடர்கின்றன.ஆனால் [நான்] கண்ட முக்கிய விஷயங்களில் ஒன்று இருதய பாதிப்பு. நோயாளிடம் மயோர்கார்டிடிஸ் [இதய திசுக்களின் வீக்கம்] வளர்வதை நான் கண்டிருக்கிறேன். இது, லேசானது முதல் மிதமானது வரை மாறுபடும்; அத்துடன் இருதயத்தின் இடது புறத்தைவிட வலது புறம் அதிகமாக பாதிக்கிறது. நோயாளிகள் யாரும் மாரடைப்பால் மிக கவலைக்கிடமாக மாறவில்லை என்றாலும், பின்தொடரும் நோயாளிகளில் நாம் காணும் அம்சம் இதுவாகும்.

நான் கண்ட மற்ற இரண்டு விஷயங்கள், இரத்த அழுத்தத்தின் ஒருதுளி சரிவு [உடல்வாகு மாற்றத்துடன் இரத்த அழுத்தம் குறையும் போது] மற்றும் பயம் ஆகும். இந்நேரத்தில் நரம்பு பாதிப்பு உண்டான ஒரு நோயாளிக்கு நான் சிகிச்சை அளித்திருக்கிறேன் - இதை நாங்கள் ஜிபி நோய்க்குறி [குய்லின்-பார் சிண்ட்ரோம்] என்று அழைக்கிறோம் - இது கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு வாரங்களுக்குப் பிறகு உருவானது. இது சரியாக கோவிட்டுக்கு பிந்தையதா என்று தெரியவில்லை; ஆனால் சில வாரங்களுக்கு முன்பு நோயாளி கோவிட்டால் அவதிப்பட்டார்; அவர் இப்போது [ஜிபி நோய்க்குறி] உடன் வந்திருக்கிறார். அதற்கான வேறு எந்த காரணத்தை நாங்கள் இன்னமும் கண்டறியவில்லை.

டாக்டர் ஷா, நீங்கள் என்ன காண்கிறீர்கள்? மக்கள் திரும்பி வந்து விட்டார்களா? என்ன மாதிரியுடன்?

ஜீனம் ஷா: எனது வெளிநோயாளிகள் துறை (OPD) பரிசோதனையில் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் [நுரையீரல் திசுக்களுக்கு சேதம்] பாதிப்புள்ள பலரை காண்கிறேன். வென்டிலேட்டரில் இருந்த நோயாளிகள் அல்லது மருத்துவமனையில் தங்கியிருந்த காலத்தில் அதிக ஆக்ஸிஜன் அளவு தேவைப்பட்ட நோயாளிகள் மீண்டும் வெளிநோயாளியாக வரும்போது அவர்களில் பெரும்பாலோர் இயல்பை விட குறைந்த ஆக்ஸிஜனையே கொண்டுள்ளனர். இதற்கு நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் எனப்படும் ஒருநிலை காரணமாகும். எனவே, நுரையீரலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது ஃபைப்ரோஸிசிற்கு வழிவகுக்கிறது; இது மீளமுடியாத சேதமாகும்.ஆக்சிஜன் செறிவு குறைவாக உள்ள பல நோயாளிகள் வெளிநோயாளிகள் பிரிவு ஹைபோக்சிக்கிற்கு வருகிறார்கள்; அவர்களுக்கு வீட்டு ஆக்ஸிஜனும் தேவைப்படுகிறது. எனவே, அவர்கள் வீட்டிற்குச் சென்றால் ஓரளவு படுக்கையில் இருக்கிறார்கள். அதுதான் நான் கண்ட மிக முக்கியமான சிக்கல். இது ஒருசில நோயாளிகளுக்கு நடக்கிறது.வைரஸ் நீங்கி குணமாகிவிட்டாலே, “எப்போதும் மகிழ்ச்சியுடன்” இருக்கிறார்கள் என்பதல்ல. நிறைய நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் காணப்படுகிறது. நான் தற்போது குறைந்தது 20-25 நோயாளிகளுக்கு, வீட்டில் ஆக்ஸிஜன் சிகிச்சையில் வைத்திருக்கிறேன். கவலைக்கு அதுவும் ஒரு காரணம்

இது தவிர, நான் நிறைய மன மாற்றங்களைக் காண்கிறேன். ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்த பெரும்பாலான நோயாளிகள் -- வென்டிலேட்டரில் அல்லது BiAPAP உதவியுடன்-- நிறைய மனச்சிக்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் வெளியே கவலையுடன் செல்கிறார்கள்; நிறைய மன அழுத்தங்கள் உள்ளன. அவர்களால் நன்றாக சாப்பிட முடியவில்லை, எடை குறைந்துவிட்டது. அதனால் அவர்களின் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. எனவே கோவிட் நோய்த்தொற்றின் மீட்டெடுப்புக்கு பின், இத்தகைய உணர்ச்சிபூர்வமான விஷயம் மிக முக்கியமான ஒரு அங்கமாகும்.

அதுமட்டுமின்றி, டாக்டர் சாட்டர்ஜி குறிப்பிட்டுள்ளபடி, மாரடைப்பு [இருதய அடைப்பு] உருவான நிறைய நோயாளிகளுக்கு, கோவிட் நோய்த்தொற்றில் இருந்து விடுபட்ட பிறகும் கூட, சில வகை மயோர்கார்டிடிஸ் போன்ற சில இதய நோய்கள் எஞ்சியிருக்கும்.

இந்த மூன்று விஷயங்களும் நான் கண்ட மிக முக்கியமான சிக்கல்கள். வெளிப்படையாக கோவிட் தொற்றானது ஏராளமான பிற உறுப்புகளையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது - சிறுநீரக பிரச்சினைகள், ஜி.ஐ. பிரச்சினைகள் வைரஸ் நோயில் இருந்து தொடர்ந்து மீட்கப்படுகின்றன.

நீங்கள் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் பற்றி குறிப்பிட்டீர்கள். அது மக்களை ஒரே மாதிரியாக பாதிக்கிறதா? சில சந்தர்ப்பங்களில் இது மிகவும் தீவிரமானது என்று நீங்கள் கூறினீர்கள். எவ்வளவு தீவிரமானது? இது வாழ்க்கையை அல்லது சாதாரண வாழ்க்கையை நடத்துவதற்கான திறனை இக்கட்டத்தில் எவ்வாறு பாதிக்கிறது?

ஜீனம் ஷா: நாம் இன்னும் நோயின் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறோம். அந்த நோயாளிகளை நாம் இன்னும் கண்காணிக்க வேண்டும்; அது எவ்வளவு கடுமையானது [கண்டுபிடிக்க]; இவ்வகையான பிரச்சினைகளை அவர்கள் எவ்வளவு காலம் கொண்டிருந்தார்கள் என்பதை அறிவது பிரச்சனை. ஆனால் ஆரம்பத்தில் [நான் பார்த்தது] எதுவாக இருந்தாலும் (ஒன்று முதல் இரண்டு மாத டிஸ்சார்ஜுக்கு பிறகு) வயதான நோயாளி மற்றும் விரிவான நோய் என்று பார்த்தால், ஃபைப்ரோஸிஸ் ஆகும். நோயாளி வென்டிலேட்டர் வைத்திருந்தால், வயதானவராக இருந்தால், ஃபைப்ரோஸிஸ் மிகக்கடுமையானதாக இருக்கும். மேலும் இதன் தீவிரத்தின் அளவு என்னவென்றால், நோயாளிக்கு ஒருசில படிகள் கூட நடக்க முடியாது; யாருடைய ஆதரவின்றி அல்லது ஆக்ஸிஜன் தேவையில்லாமல் சுயமாக வாஷ்ரூம் கூட செல்ல முடியாது. எனவே, இது மிகக்கடுமையான பலவீனப்படுத்தும் கோளாறு ஆகும், இது கோவிட்டை மீட்டெடுக்கும்.ஆனால் வெளிப்படையாக, இது எல்லா மக்களையும் பாதிக்காது. இது ஏற்கனவே கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் மற்றும் வென்டிலேட்டரில் இருந்த நோயாளிகளை மட்டுமே பாதிக்கிறது.மிகவும் லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் மற்றும் பல பிரச்சினைகள் இல்லாத நோயாளிகள் நுரையீரலில் எஞ்சிய சேதங்களை தொடராமல் வெற்றிகரமாக குணமடைந்துள்ளனர்.

பல்வேறு வயது பிரிவினரில், நீங்கள் சிகிச்சையளித்த 100 நோயாளிகளுக்கு, எத்தனை பேர் முழுமையாக குணமடைந்துவிட்டார்கள், எத்தனை பேர் இப்போது தீவிர அறிகுறி உட்பட எஞ்சிய அறிகுறிகளை கொண்டுள்ளனர்?

ஜீனம் ஷா: நான் பகிரும் தரவு சார்புடையது. ஏனெனில் மருத்துவமனையில் தீவிர நோயாளிகளுக்கு மட்டுமே நான் மிதமான சிகிச்சை அளிக்கிறேன். லேசான நோயாளிகளில் பெரும்பாலோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.ஐ.சி.யு-வில் உள்ள எனது நோயாளிகளில் கிட்டத்தட்ட 10% பேர் ஆக்ஸிஜன் சிகிச்சையுடன் வீட்டிற்குச் சென்றுள்ளனர் என்று கூறுவேன். இது ஐ.சி.யு-வில் உள்ள நோயாளிகளின் கணிசமான எண்ணிக்கையாகும். ஆனால் வார்டில் குணமடைந்த லேசான நோயாளிகளை பற்றி பேசினால், அவர்களில் 99% ஆக்சிஜன் சிகிச்சை தேவையில்லை மற்றும் நுரையீரல் ஃபைப்ரோஸிஸின் எந்த சிக்கல்களையும் உருவாக்கவில்லை.

டாக்டர் சாட்டர்ஜி, நீங்கள் பார்க்கும் எண்ணிக்கை என்ன?

எஸ். சாட்டர்ஜி: இதில் டாக்டர் ஷாவுடன் நான் உடன்படுகிறேன்; ஏனென்றால் நாங்கள் இருவரும் ஒரு மூன்றாம் நிலை மருத்துவமனையில் வேலை செய்கிறோம், ஒரே மாதிரியான நோயாளிகளைக் கையாளுகிறோம். டிஸ்சார்ஜ் ஆகும், வென்டிலேட்டரில் இருந்த அல்லது மீள்வதர்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படும் தீவிர நோயாளிகளிடம் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் - ஹைபோக்ஸியாவை நாங்கள் அடிக்கடி காண்கிறோம் என்பதை குறிப்பிட மறந்துவிட்டேன். ஒரு பெரிய மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்க்கிறோம் என்பதால் அவர் சொன்னது போல சதவீதம் ஒன்றுதான்.

ஆனால் காலம் மட்டுமே நமக்கு இதை சொல்லும்; அத்துடன் நோயாளிகளின் சதவீதம் உண்மையில் குணமடைகிறதா அல்லது நீண்ட கால ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்; ஏனெனில் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் முற்றிலும் மீளமுடியாதது மற்றும் அது நீண்ட காலம் மாற்ற முடியாததாக இருக்கும்.

திரும்பி வந்த நோயாளிகளின் வகைகளைப் பார்த்தால், உதாரணமாக முற்றிலுமாக குணமடைந்துவிட்டதாக நீங்கள் நினைத்தவர்கள் ஆரோக்கியமாக இருந்திருக்கிறார்களா அல்லது நீண்ட கால பாதிப்பின் சில அறிகுறிகளைக் காட்டுகிறீர்களா?

எஸ். சாட்டர்ஜி: வெளிப்படையாக, கொமொர்பிடிட்டிஸ் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் பெரிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளாக உள்ளனர். ஆனால் இளைய நோயாளிகள் கூட [ நாங்கள் பார்த்தோம்]. நோயாளிகள், குறிப்பாக ஆண்கள் 50 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள்; மேலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட இருந்தனர்; அவர்களுக்கு கொஞ்சம் கொமொர்பிடிட்டுகள் இருந்தாலும் கூட அவர்களை அதிக ஆபத்துள்ள வகைப்பாட்டில் தான் சேர்ப்பேன்; ஏனென்றால் அதுதான், அந்த வயதில் இருக்கும் சிலரை நாம் இழக்கிறோம். 50 முதல் 60 வயதிற்குட்பட்ட ஒரு நோயாளியை இழக்கும்போது நான் மிகவும் வருத்தப்படுகிறேன்; ஏனென்றால் அவர்கள் தங்களது தொழில் மற்றும் எல்லாவற்றிலும் கிட்டத்தட்ட முதலிடத்தில் இருக்கும் வயது அது. இந்த வயதில் உள்ள நிறைய நோயாளிகள் கூட இறப்பதை நாம் காண்கிறோம்.

கொமொர்பிடிட்டி கொண்டவர்களில் வயதானவர்களுக்கு அதிக சிக்கல்கள் இருப்பதை நான் முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன்; ஆனால் வென்டிலேட்டர் உதவியுட பல அனுபவ சிகிச்சை அல்லது நடைமுறை தேவைப்படும் எவருக்கும், அனைவருக்கும் லேசான அறிகுறி உள்ளவர்களைக் காட்டிலும் அதிக சிக்கல்கள் உள்ளன. ஆனால் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு பிறகும் பல நரம்பியல் பிரச்சினைகள் (உணர்வின்மை, வலி, கூச்ச உணர்வு, பலவீனம், சோம்பல்) ஆகியவற்றுடன் திரும்பி வருவது கண்டறியப்பட்டபோது அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறிகளாக இருந்தவர்களை நான் கண்டிருக்கிறேன். இது பெரிய பிரச்சினை என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நீண்ட காலத்திற்கு மக்களை தொந்தரவு செய்யும்.

இதை நீங்கள் குணப்படுத்த முடியுமா அல்லது இந்த அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கலாமா?

எஸ். சாட்டர்ஜி: ஒருசிலர் உண்மையில் நேரத்திற்குள்ளாக மீண்டு வருகிறார்கள். ஆனால் நான் சொன்னது போல், நாம் கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக மட்டுமே சிகிச்சை அளிக்கிறோம். எனவே இந்த நபர்களில் எவ்வளவு பேர் மீண்டு வருகிறார்கள் என்பதை காலம் மட்டுமே சொல்லும். பலவீனம் மற்றும் ஜி.ஐ அறிகுறிகள் அல்லது பிற போஸ்ட்ரல் டிராப் போன்றவை மற்றும் இரண்டு முதல் நான்கு வாரங்களில் மீண்டு வருகின்றனர். ஆனால் ஒருசில நபர்கள் மீளவுமில்லை. அவர்களின் நீண்டகால உட்குறிப்பு என்ன என்பதை காலம் மட்டுமே தெரிவிக்கும்.

டாக்டர் ஷா, ஐ.சி.யு-வில் சிகிச்சை பெற்ற கோவிட் மற்றும் கோவிட் அல்லாத நோயாளிகளை ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்களிடம் ஏதேனும் ஒற்றுமை உள்ளதா? அல்லது ஐ.சி.யூ அல்லது இன்டூபேஷனுக்குச் சென்ற கோவிட் நோயாளிகள் தீவிர அறிகுறிகளுடன் வெளியே வருகிறார்களா?

ஜீனம் ஷா: எனது பரிசோதனையில் நான் பார்த்தவரை ஐ.சி.யு-விலும் வென்டிலேட்டரிலும் இருந்த கோவிட் நோயாளிகள் தீவிர அறிகுறிகளுடன் வெளியே வந்திருக்கிறார்கள் என்று நிச்சயமாக கூறுவேன் - ஏனெனில் கோவிட் நோய்த்தொற்று விட்டுச்செல்லும் நுரையீரல் இழைநார்மையின் அளவு நுரையீரல் நோய்த்தொற்றின் எஞ்சியதை விட மிக அதிகமாக உள்ளது. அது ஏன் நடக்கிறது என்பதற்கான சரியான நோயியல் இயற்பியல் எங்களுக்குத் தெரியாது.

இது தவிர, நோயாளிகள் குறைந்தது ஒரு மாதமாவது மருத்துவமனையில் இருப்பதால் நிறைய தசை விரயம் மற்றும் பிற ஜி.ஐ. சிக்கல்களும், எதிர்பார்த்ததை விட அதிக அறிகுறிகளுடன் செல்கின்றனர்.

நீங்கள் மன நலம் குறித்து பேசினீர்கள். மற்ற அனைத்து காரணிகளும் நிலையானவை, கோவிட் அல்லாத நோயாளிகளுடன் ஒப்பிடும்போது கோவிட் சிகிச்சையில் இருந்து விடுபட்ட நோயாளிகளில் இது அதிகமாக உள்ளதா?

ஜீனம் ஷா: ஐ.சி.யு-வில் உள்ள நோயாளிகளுக்கு கொஞ்சம் மனமாற்றங்கள் ஏற்படுகின்றன. ஐ.சி.யு-வில் உள்ள மற்றொரு சிக்கல் என்னவென்றால், எல்லோரும் -- மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் வார்டு நபர்கள்-- ஒரே சீருடையை அணிந்திருக்கிறார்கள் -- எல்லோரும் வெள்ளை [தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண கருவிகள்] உடையில் உள்ளனர். அவர்களின் உணர்ச்சிகளை நீங்கள் பார்க்க முடியாது, அவர்களுடன் பேச முடியாது.

பொதுவாக, ஒரு ஐ.சி.யூ-வில் மிக இணக்கமான சூழல் உள்ளது; நாங்கள் நோயாளிகளுடன் பேச முயற்சிக்கிறோம், அவர்களை உற்சாகப்படுத்த முயற்சிக்கிறோம். ஆனால் கோவிட் போன்ற சூழ்நிலையில், எல்லோரும் (மருத்துவர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் உட்பட) மிகவும் பதட்டத்துடன் உள்ளனர். எனவே, நோயாளிகளுடன் இத்தகைய ஆரோக்கியமான தொடர்பை கொண்டிருக்க முடிவதில்லை. நோயாளிகள் தங்கள் உறவினர்களிடமோ அல்லது அருகில் உள்ள எவருடனோ பேசுவதில்லை. எனவே சாதாரண ஐ.சி.யூ நோயாளிகளிடம் நீங்கள் எதிர்பார்ப்பதை விட மனமாற்றங்கள் அதிகம் உள்ளது.

வார்டில் அல்லது அறைகளில் சிகிச்சை பெறும் மிதமானது முதல் லேசான நோயாளிகளைக்கூட நான் பார்த்திருக்கிறேன், அவர்கள் வழக்கமாக எதிர்பார்க்காத நிறைய மன மாற்றங்களையும் உருவாக்க முனைகிறார்கள்; ஏனெனில் கொரோனா தொடர்பான அதிக பயம் உள்ளது - நோயாளிகள் கொரோனா ஏற்பட்டதும் அது இறுதிநாள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்; அவர்கள் அதில் இருந்து விடுபடப்போவதில்லை. அவர்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லும்போது என்ன நடக்கும் என்று அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள், சமூகம் அவர்களை ஏற்றுக் கொள்ளுமா, அவர்கள் மீண்டும் வீட்டை விட்டு வெளியேற முடியுமா, அவர்கள் மீண்டும் பாதிக்கப்படுவார்களா, அவர்கள் தங்கள் நெருங்கியவர்களையும் குடும்பத்தில் உள்ள முதியவர்களையும் பாதிக்குமா என்பது. நோயாளிகளின் மனதில் பல மனப்போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

எஸ். சாட்டர்ஜி: டாக்டர் ஷா சொன்னது போல் மனநல நோய் என்பது [வார்டுகளில்] கூட நாம் காணும் முக்கிய பிரச்சினையாகும். நான் ஐ.சி.யு-விற்கு அவ்வளவு செல்லவில்லை, ஏனென்றால் நான் ஒரு இன்டர்னிஸ்ட். ஆனால் இந்த லேசான முதல் மிதமான நிகழ்வுகளை நான் காண்கிறேன், அவை மனச்சோர்வு, பதட்டம் ஆகியவற்றிற்குள் செல்கின்றன.

கடந்த இரு வாரங்களில் எங்கள் மருத்துவமனைகளில் உளவியலாளர்கள் நோயாளிகளுடன் பேசுகின்றனர், தொலைபேசியில் ஆலோசனை தருகின்றனர்; ஏனெனில், அவர்கள் கோவிட் வார்டில் இருப்பதால் உறவினர்கள் லேசான மற்றும் மிதமான நோய்வாய்ப்பட்ட நோயாளிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, அவர்கள் அனைவரும் தனியாக இருக்கிறார்கள்; அது அவர்களை கவலை மற்றும் மனச்சோர்விற்குள் தள்ளுகிறது. நாங்கள் நோயாளிகளை பார்வையிடச் செல்லும் போது, ஒரு நோயாளி மனரீதியாகச் சிறப்பாக செயல்படவில்லை என்பதைக் கண்டால், ஒரு உளவியலாளரை அவர்களுடன் பேச வைக்கிறோம், அதன் மூலம் நன்மைகளை நாங்கள் கண்டோம்.

டாக்டர் சாட்டர்ஜி, இவை அனைத்தையும் அறிந்து கொள்வதன் மூலம் நாம் எப்படி இன்னும் கவனமாக இருக்க முடியும்?

எஸ். சாட்டர்ஜி: நாம் மனரீதியாக வலுவாக இருக்க வேண்டும். யோகா மற்றும் தியானம் கூட உண்மையில் மனநிலைத்தன்மையை, உடல் ஆரோக்கியத்தை உருவாக்குகிறது. நாம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, சரியான உணவைக் கொண்டிருக்க வேண்டும், வலுவான மன ஆரோக்கியம் மற்றும் யோகா மற்றும் தியானம் மற்றும் இந்நோயை சமாளிக்க எல்லாவற்றையும் சேர்க்க வேண்டும். நீங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவீனமாக இருந்தால், உங்களுக்கு கொமொர்பிடிட்டிகள் இருந்தால், வெளிப்படையாகவே இது நோயின் பின்விளைவுகள் அனைத்திற்கும் அதிக வாய்ப்புள்ளது, அவை மிகவும் பொதுவானவை.

டாக்டர் ஷா, சாத்தியமான நோயாளிகளாகவோ அல்லது குடிமக்களாகவோ நாம் கோவிட்டுக்கு அப்பாற்பட்டு எவ்வாறு தயாராக இருக்கிறோம்?

ஜீனம் ஷா: இது இந்த விளையாட்டின் முடிவல்ல. நாம் இப்போது வரை கோவிட் ஒழிப்புக்கு எதையும் செய்யவில்லை. நாம் நமது பாதுகாப்பை குறைக்கக்கூடாது. கடந்த நான்கு மாதங்களில் நாம் எடுத்துக்கொண்ட அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இனியும் தொடர வேண்டும். வைரஸ் இன்னும் நமக்கு அருகாமையில் மிகப்பெரியதாக அச்சுறுத்தி வருகிறது.

இதில் நாம் உணராத ஒரு விஷயம் என்னவென்றால், மருத்துவர்கள் படிப்படியாக சோர்வுக்குச் செல்கிறார்கள். நீங்கள் என்னை பற்றி கேட்டால், மூன்று மாத தீவிர சிகிச்சையால் எங்களுக்கும் நிறைய சிரமங்கள் உள்ளன. எனவே, குடிமக்கள் தங்கள் மீது அக்கறை காட்ட வேண்டும், நமது சுகாதார அமைப்பிற்கு அதிக சுமை ஏற்படுத்தக்கூடாது, ஏனென்றால் அதுவும் இப்போது ஆரோக்கியமான நிலையில் இல்லை. உடல்நலம் கூட எந்த நேரத்திலும் சிதையக்கூடும்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story