ஏழ்மையான மற்றும் மிகவும் பின்தங்கியவர்களுக்கு மினி அங்கன்வாடிகள் உதவ முடியும்

ஏழ்மையான மற்றும் மிகவும் பின்தங்கியவர்களுக்கு மினி அங்கன்வாடிகள்  உதவ முடியும்
X

ஒடிசாவின் பல்லஹாரா ஒன்றியம் சசகுர்ஜாங் ஊராட்சி கிராம சபா (கிராமக்குழு) கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 5,000 மக்கள்தொகை இந்த ஊராட்சியில், முழு அளவிலான அங்கன்வாடி இல்லாத தொலைதூர குக்கிராமங்களில் மினி அங்கன்வாடி மையங்களை திறக்க வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்லஹாரா, ஒடிசா: அது, 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தினத்தின் காலைப்பொழுது. ஜெயபுரா கிராமத்தைச் சேர்ந்த 30 வயது குணா முண்டா, 30, கிராமவாசிகள் 70 பேருடன் சசகுர்ஜாங் ஊராட்சி கிராம சமுதாய கட்டிடத்தில் கூடியிருந்தனர். 150 முதல் 300 மக்கள் வசிக்கும் குழந்தை பராமரிப்பு மையம் - ஒரு மினி அங்கன்வாடி தங்கள் கிராமத்தில் அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தின் பல்லஹாரா ஒன்றியத்தின் சிறிய குக்கிராமத்தில் வசிக்கும் முண்டா, “கிராமத்தில் அங்கன்வாடி இல்லாததால் எங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து விஷயத்தில் விட்டுக்கொடுத்து போகிறோம் என்றவர், “நாங்கள் அருகில் உள்ள அங்கன்வாடி செல்ல நதியைக் கடக்க வேண்டும். எனது நான்கு வயது மகனை ஒவ்வொரு நாளும் மையத்திற்கு அனுப்புவது எப்படி?” என்றார்.

ஏழ்மையான மக்கள் - "மிகக்குறைந்த செல்வம்" அல்லது 20% குறைந்த அளவு செல்வம் கொண்டவர்கள் - மற்றும் சிறிய குக்கிராமங்களில் வாழும் பட்டியலின சாதியினர் (எஸ்.சி) மற்றும் பட்டியலின பழங்குடியினர் (எஸ்.டி) போன்ற பிற பின்தங்கிய சமூக குழுக்களுக்கு பல்லஹாரா போன்ற கிராமங்கள், அங்கன்வாடி வைகளுக்கு மிகக் குறைந்த அணுகலைக் கொண்டுள்ளதாக, நான்காவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (என்.எஃப்.எச்.எஸ்) தரவுகள் காட்டுகின்றன.

பட்டியலின மக்கள் (எஸ்.டி.) இந்தியாவின் மக்கள்தொகையில் 8% (10.4 கோடி), ஆனால்; பட்டியலின மலைவாழ் மக்களில் (எஸ்.டி) 45.9% பேர் மிகக் குறைந்த செல்வத்துடன் உள்ளனர்; இது வேறு எந்த சமூகக் குழுவையும் விட அதிக விகிதம் என்று பிப்ரவரி 2018 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது. 2015-16 ஆம் ஆண்டில், ஐந்து வயதிற்குட்பட்ட எஸ்.டி குழந்தைகளில் 19.7% பேர் வளர்ச்சி குறைபாடு - வயதுக்கேற்ற உயரமின்மை - கொண்டிருந்தனர். இது, எஸ்சி குழந்தைகளில் 19.0%, இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளில் 16.4% மற்றும் ‘பொது’ சாதிகளில் 11.9% என்று இருந்ததாக, நான்காவது என்.எஃப்.எச்.எஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. எஸ்.டி. போன்ற தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்களுக்க் இந்த அணுகலின்மை என்பது அதிகரிக்கிறது.

பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான மினி அங்கன்வாடிகள்

குறைந்த, நடுத்தர வருவாய் கொண்ட சமூகக் குழுக்கள், துணை உணவுகள், சுகாதார சோதனைகள் மற்றும் பிற ஐ.சி.டி.எஸ் சேவைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று என்.எஃப்.எச்.எஸ்-4 தரவுகள் காட்டுகின்றன. 2015-16இல், 63.3% ஏழை குழந்தைகளுக்கு சுகாதார பரிசோதனை கிடைக்கவில்லை, இதில் இரண்டாம் நிலை செல்வமுள்ள 54.9% குழந்தைகள் (மக்கள் தொகையில் ஏழ்மையான 21% முதல் 40% வரை) என்றுள்ளது. சிறப்பாக உள்ளவர்கள், தனியார் சேவைகளை விரும்புகிறார்கள், எனவே ஐசிடிஎஸ் சேவைகளின் குறைந்த பயன்பாடு உள்ளது.

2015-16 ஆம் ஆண்டில், எஸ்.டி குழந்தைகளின் அதிக விகிதம் மற்ற சமூகக் குழுக்களை விட உணவுச் சத்துக்கள், சுகாதார பரிசோதனைகள் மற்றும் முன்பள்ளி கல்வி ஆகியவற்றைப் பெற்றது, ஆனால் இந்த சேவைகள் தேவைப்படும் எஸ்.டி.க்களைச் சேர்ந்த ஏழை மக்களின் விகிதத்துடன் ஒப்பிடும்போது இது குறைவாக உள்ளது. உதாரணமாக, எஸ்.டி மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி (45.9%) ஏழ்மையானவர்கள் (ஏழ்மையான 20%), மற்றும் 24.8% இரண்டாம் நிலை மிகக்குறைந்த செல்வம் உள்ளவர்கள் என்றாலும், 60.4% குழந்தைகள் ஐ.சி.டி.எஸ் இன் கீழ் துணை உணவுகள் பெற்றதாக என்.எஃப்.எச்.எஸ் தரவு காட்டுகிறது.

இதை, இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருடன் ஒப்பிட்டால்: அவர்களின் மக்கள்தொகையில் 18.3% மிகக் குறைந்த செல்வக்குழுவைச் சேர்ந்தவர்கள், 19.3% இரண்டாவது மிகக் குறைந்தவர்கள், அதே நேரத்தில் 45.6% குழந்தைகள் ஐ.சி.டி.எஸ் இன் கீழ் உணவுப் பொருட்களைப் பெற்றனர் என்று தரவு காட்டுகிறது.

நிர்வாக குறைபாடுகள்

முண்டா பங்கேற்ற கூட்டத்தில் கிராம ஊராட்சி உறுப்பினர்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமக்குழு) மற்றும் சமூகத் தலைவர்களால் மக்களின் குறைகளை கேட்கவும், மினி அங்கன்வாடியின் அவசியம் குறித்து அவர்களுக்குக் கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

"நாங்கள் தொலைதூர குக்கிராமங்களில் இரண்டு மினி அங்கன்வாடி மையங்களை அமைக்க முன்மொழிகிறோம்" என்று சசகுருஜாங்கின் கிராமத்தலைவர் (சர்பஞ்ச்) 47 வயதான சஷாங்க் சேகர் நாயக் கூறினார். "தொலைதூர கிராமங்களில் வசிக்கும் பட்டியலின பழங்குடியினரின் குழந்தைகளுக்கு மினி அங்கன்வாடி மையங்களை கிடைக்கச் செய்வதே எங்கள் முன்னுரிமை. இங்குள்ள குழந்தைகளுக்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லும் உணவுப் பொருள் கிடைப்பதில்லை; பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை அங்கன்வாடி மையத்திற்கு அழைத்துச் சென்று தங்களது தினக்கூலியை இழப்பது என்பதும் சாத்தியமில்லை” என்றார்.

கடந்த 1975 முதல், ஐ.சி.டி.எஸ். திட்டத்தின் கீழ் ஒரு துணை ஊட்டச்சத்து திட்டத்தை அரசு நடத்தி வருகிறது. இது ஒடிசாவில் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் உணவு பொருட்களை - சாதுவா (தானிய மாவு), முட்டை மற்றும் பருப்பு வகைகளை - கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்குகிறது. இது ஆகஸ்ட் 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளபடி, குழந்தைகளுக்கு சூடான, சமைத்த உணவும், மூன்று முதல் ஆறு வயது வரை குழந்தைகளுக்கு முன்பள்ளி கல்வியும் அங்கன்வாடிமையங்களில் வழங்குகிறது.

இது குழந்தையின் முதல் 1,000 நாட்கள் - அதன் வளர்ச்சியும் அறிவாற்றல் வளர்ச்சியும் மிக வேகமாக இருக்கும்போது - அந்த பருவத்திலேயே வாய்ப்பின் பெற்றுத்தரும் ஒரு சாளரமாகும்.

அனைத்து சமூக மேம்பாட்டுத் தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் ஐ.சி.டி.எஸ், 1995-96ல் உலகமயமாக்கப்பட்டது, இப்போது நாட்டின் தொலைதூர மூலைகளை அடைகிறது. இருப்பினும், ஏழைகள், குறிப்பாக பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்தவர்கள், பிப்ரவரி 2018 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது போல், இன்னும் பின்தங்கியுள்ளனர். ஒடிசா போன்ற சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் கூட, சமூக ஏணியில் மிகக் குறைவானது பெரும்பாலும் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பதால் விலக்கப்படுகின்றன.

"அங்கன்வாடி பணியாளர்கள் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; எங்களின் குழந்தைகள் மையங்களுக்குச் சென்றாலும், அவர்கள் கடைசியாக உணவளிக்கப்படுகிறார்கள்" என்று பஞ்சாயத்து உறுப்பினரான 44 வயதான முண்டா சாண்டோ கூறினார். "துணை செவிலியர் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஆஷாக்கள் (அடிமட்ட சுகாதார ஊழியர்கள்) கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக எங்கள் கிராமத்திற்கு வருவதில்லை" என்றார்.

"தொலைதூர குக்கிராமங்களில் இருந்து குழந்தைகள் எனது அங்கன்வாடி மையத்திற்கு வர வேண்டும்; ஆனால் அவர்களின் வருகை மிகக் குறைவு" என்று உதய்பூர் கிராமத்தில் அங்கன்வாடிபணியாளரான, 31 வயது நிருபமா நாயக் கூறினார்; இது ஜெயபூர் கிராமத்தையும் உள்ளடக்கியது. “அவர்கள் தினமும் 3 கி.மீ தூரம் தனியாக மையத்திற்கு செல்ல முடியாது. இதன் விளைவாக, அவர்கள் சூடான சமைத்த உணவை இழக்கிறார்கள்; அவர்களுக்கு பள்ளிக்கு முந்தைய கல்வியும் கிடைக்காது” என்றார்.

கடந்த 2007இல், 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 116,848 மினி அங்கன்வாடி மையங்களை அமைக்க அரசு அனுமதித்தது என தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் தரவுகள் காட்டுகின்றன. ஆனால், அவற்றில் தற்போது எத்தனை மினி அங்கன்வாடிக்கள் செயல்படுகின்றன என்பது குறித்த தரவுகள் இல்லை.

2005 வரை, ஐ.சி.டி.எஸ் இன் கீழ் ஒரு மினி அங்கன்வாடியில் ஆறு சேவைகளில் ஒன்றில் மட்டுமே - சூடான சமைத்த உணவு வழங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில், ஆறு சேவைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் விதிமுறைகள் ஐசிடிஎஸ் வழிகாட்டுதல்களின்படி திருத்தப்பட்டன.

பல்லஹாராவில் உள்ள கிராமவாசிகள் ஒரு அங்கன்வாடியை விரும்பினாலும், நிர்வாக பிரச்சினை உள்ளது: குனா முண்டாவின் கிராமம் ஜெயபூர், மற்றொரு கிராம பஞ்சாயத்துடன் பாதி இணைந்திருக்கிறது; பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அந்த பஞ்சாயத்தின் கீழ் வருகிறார்கள்; அதாவது ஒரு மினி அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான தகுதியான குறைந்தபட்சம் 150 பேர் என்ற எண்ணிக்கை ஜெயபூரில் இல்லை. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஒன்று என இரண்டு மினி அங்கன்வாடிக்களை கிராம மக்கள் முன்மொழிந்துள்ளனர்.

கூட்டம் நடைபெறும் சசகுருஜாங் ஊராட்சியின் கீழ் தான் முண்டாவின் ஜெயபூர் கிராமம் வருகிறதா அல்லது மற்ற ஊராட்சிக்கு அவர் சென்றிருக்க வேண்டுமா என்பது ஊராட்சி உறுப்பினர்களுக்கு கூட தெரியவில்லை.

“ஒரு அங்கன்வாடி கூட இல்லாத குக்கிராமங்களில், மினி அங்கன்வாடி மையம் அமைக்கும் திட்டத்தை அரசிடம் நாங்கள் சமர்ப்பித்துள்ளோம், அங்கு குழந்தைகள் அருகிலுள்ள மையத்தை கால்நடையாக அடைய முடியாது. இது பரிசீலனையில் உள்ளது, அரசு விரைவில் அதை அனுமதிக்கும் ”என்று அங்குல் மாவட்ட ஆட்சியர் மனோஜ் மொஹந்தி கூறினார்.

ஐ.சி.டி.எஸ் சேவைகளை மேற்பார்வையிடும் அங்குல் மாவட்டத்திற்கான குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் ரேணு பதி, மினி அங்கன்வாடி அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த திட்டமும் தனக்கு கிடைக்கவில்லை என்று கூறினார். வேறு எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்க அவள் மறுத்துவிட்டாள்.

அரசு சுமை குறைந்தது; ஆரோக்கியம் மேம்பட்டது

ஊட்டச்சத்துக்கான அணுகல் பற்றாக்குறை பின்தங்கிய சமூகங்களில் மிகவும் தீவிரமாக உணரப்படலாம். உதாரணமாக, 2013 ஆம் ஆண்டில், ஒடிசா அரசு பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் - இது எஸ்.டி.க்கள் இடையே மிகவும் பின்தங்கியவர்கள் - வளர்ச்சிக்காக ஒரு சிறப்புத்திட்டத்தை நடத்தியபோது, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 19 குழந்தைகள் இறந்தனர். இந்த திட்டத்தின் கீழ், 216 குழந்தைகள் கடும் எடை குறைபாடு கொண்டவர்களாகவும், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களாகவும் அடையாளம் காணப்பட்டனர், இவர்களில் 60 பேர், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் இருந்தவர்கள் எந்த மருத்துவமனைக்கும் பரிந்துரை செய்யாதது, சமீபத்திய 2017 தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் கண்டறியப்பட்டது. "ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிக்க மைக்ரோ திட்டங்களால் எந்தவொரு தீர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை" என்று அறிக்கை கூறியது.

குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவுவதோடு மட்டுமின்றி, மினி அங்கன்வாடி மையங்கள், அரசின் சுமையை குறைக்கும். தற்போது, ஊட்டச்சத்து மறுவாழ்வு மையங்கள் அதிக ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களை ஆதரிக்கின்றன, ஒடிசாவில் ஒரு குழந்தை மற்றும் தாய்க்கு ஒரு நாளைக்கு ரூ.125 செலவிடுகின்றன. ஒரு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை, அவர்களின் தாயுடன் சேர்ந்து, குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஊட்டச்சத்து மறுவாழ்வு மையத்தில் நெருக்கமான கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அவர்களின் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துகிறது.

ஜனவரி 2019 இல், அங்கன்வாடி பணியாளர் நாயக், மூன்று குழந்தைகளை கிராமத்தில் இருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள பல்லஹாரா ஒன்றிய சமூக சுகாதார மையத்தின் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பினார். குழந்தைகளில் இருவர், அபாயகரமான சிவப்பு நிறை வகைப்பாட்டில் - உயரத்திற்கேற்ற எடை இல்லாதது; கடும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறிக்கிறது - இருந்தனர்; மூன்றாவது குழந்தை, மிதமான ஊட்டச்சத்து குறைபாட்டை குறிக்கும் ஆரஞ்சு நிற வகைபாட்டில் இருந்தது. அருகாமையில் இருக்கும் அங்கன்வாடி மையம் இருந்திருந்தால், இந்த தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர்களின் ஊட்டச்சத்துக்கு துணைபுரிவதற்கும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டைத் தவிர்ப்பதற்கும் உதவியிருக்க முடியும்.

(அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story