‘உயிர் காக்கும்’ கோவிட்-19 மருந்து குறைவாக வினியோகம், விலையும் அதிகரிக்கிறது

‘உயிர் காக்கும்’ கோவிட்-19 மருந்து குறைவாக வினியோகம், விலையும்  அதிகரிக்கிறது
X

டெல்லி: 2020 ஜூன் 8ம் தேதி இரவு, ஜோயல் பிண்டோ சென்னையில் இருந்து ஹைதராபாத்து 18 மணி நேர பயணமாக புறப்பட்டு சென்று, உடனடியாக திரும்பினார்; காரணம், சென்னை மருத்துவமனையில் கோவிட் -19 உடன் போராடி வரும் அவரது தந்தைக்கு 648 மி.கிராம் மருந்து வாங்கி வருவதற்காக. பிண்டோவின் தந்தையை காப்பாற்ற டோசிலிசுமாப் (Tocilizumab) என்ற மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர்; ஆனால், அவர்களிடம் 800 மி.கி மருந்து குப்பி இல்லாததால் இத்தகைய ஏற்பாடுகளை செய்யுமாறு, அவரிடம் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்த மருந்தை உள்ளூர் விற்பனையாளர் ஒருவரும் வழங்க முன்வந்தார்; ஆனால் அதன் விலை உயர்த்தப்பட்டு ரூ.1.5 லட்சம் என்று கூறப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள விற்பனையாளரோ, அதே மருந்தை ரூ.92,672 என்று கூறினார்; இதனால் பிண்டோ மருந்து வாங்குவதர்கு ஹைதராபாத்தை தேர்வு செய்தார். மருந்தின் மீது அச்சிடப்பட்ட விலையில் அங்கு கிடைத்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 30 நாட்களுக்கு, அவரது தந்தைக்கு ரூ.10.26 லட்சம் பில் வழங்கப்பட்டது. ஆனால், அவர்களின் மருத்துவக்காப்பீடு சிகிச்சை மூலம் கிடைத்தது, ரூ.4.5 லட்சம் மட்டுமே. ரூ.6.6 லட்சம் தொகையை சொந்தக்காசில் பிண்டோ கூடுதலாக செலவிட வேண்டியிருந்தது, இதில் டோசிலிசுமாப் மருந்தின் செலவு காப்பீட்டின் கீழ் வரவில்லை.

நாட்டின் இன்னொரு பகுதியில் அதாவது டெல்லியில், அங்குள்ள தொழிலதிபர் ராஜீவ் தவான், ஆபத்தான நிலையில் இருந்த அகமதாபாத்தில் வசிக்கும் தனது 65 வயது மாமாவுக்கு, மே மாதத்தில் டோசிலிசுமாப் மருந்தை தேடிக் கொண்டு இருந்தார். "விற்பனையாளர்கள் என்று கூறிக்கொண்டு பலர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டர். தங்களிடம் மருந்து இருப்பதாகவும் விலை கூடுதலாக இருக்கும் என்றும் கூறினார்கள். நான் இந்த நபர்களை தொடர்பு கொள்ளவில்லை; அவர்களுக்கு எனது மொபைல்எண் எப்படி கிடைத்தது என்று எனக்குத் தெரியவில்லை,”என்று தவான் கூறினார். "இந்த மருந்து ஊசி கடைகளில் கிடைப்பது போல் தெரியவில்லை; ஆனால், கறுப்புச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது" என்றார். 400 மி.கிராம் டோசிலிசுமாப் மருந்தை ரூ.1.4 லட்சத்திற்கு பெறலாம் என்று தவானிடம் கூறப்பட்டது. அகமதாபாத் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மூன்று வெவ்வேறு விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.25,000 (80 மி.கிராமுக்கு), ரூ.32,000 (400 மி.கி.) மற்றும் ரூ.42,000 (400 மி.கி) என, அவரால் மருந்தை பெற முடிந்தது.

டோசிலிசுமாப் வாங்குவதில் உள்ள சிரமங்கள் குறித்து பல செய்திகள் இருந்தபோதும், "எங்களது கொள்கையின்படி, தயாரிப்பு பொருட்களின் விலை விவரங்களை நாங்கள் பகிர்ந்து கொள்ள மாட்டோம்" என்று, மருந்துகளை தயாரிக்கும் ரோச் பிராடக்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் செய்தித்தொடர்பாளர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

கோவிட-19 தொற்றுநோய் பரவலின்போது மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்த எங்களது தொடரின் நான்காம் பகுதி இது. இந்த கட்டுரையில் கோவிட்-19 தொற்று காலத்தில் மருந்து வழங்கல் விதிமுறைகள் எவ்வாறு மோசமாக உள்ளன என்பதைப் பார்க்கிறோம்.

இதற்காக கோவிட்-19 சிகிச்சைக்கு சோதனை ரீதியாகப் பயன்படுத்தப்படும் டோசிலிசுமாப் என்ற மருந்து வினியோகத்தை நாங்கள் ஆராய்கிறோம். அதேநேரம் இதில் குறிப்பிடப்படும் விநியோகச் சங்கிலிகளின் முறிவு மற்றும் கறுப்புச்சந்தைப்படுத்தல், பிற பல்வேறு மருந்துகளுக்கு பொருந்தும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். எங்கள் அடுத்த கட்டுரையில் கோவிட் அல்லாத மருந்துகளின் விலைகள் எவ்வாறு அதிகரித்துள்ளன என்பதை விளக்க உள்ளோம். (தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்).

டோசிலிசுமாப் மற்றும் கோவிட் -19

டோசிலிசுமாப் என்பது ஒரு புதிய மருந்தல்ல, கோவிட்-19 க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய “அதிசய மருந்து” கிடையாது. இது நீண்ட காலமாக உள்ள மருந்து; பெரும்பாலும் முடக்கு வாத சிகிச்சைக்கு தரப்படுகிறது. இது கோவிட்-19க்கான சிகிச்சைக்கான வாய்ப்பை அறிய தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. இப்போது, உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் தங்கள் மருத்துவ விருப்பத்தின் அடிப்படையில், நோயாளிகளுக்கு இதை வழங்கலாமா என்பது குறித்து பொருளார்ந்த ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது "ஆஃப்-லேபிள் பயன்பாடு" என்று அழைக்கப்படுகிறது.

இது, டோசிலிசுமாபின் விலையை அதிகமாகவும், இந்தியாவில் அதன் விநியோகத்தை இறுக்கமாகவும் வைத்திருக்கிறது; இதனால், துன்பத்தில் இருக்கும் ஏழை குடும்பங்கள் இதை வாங்குகுவதற்கு போராடுகின்றன.

How Tocilizumab Works

While the SARS-CoV-2 virus causes COVID-19, once the virus manifests in the body, it attacks several parts of the body. COVID-19 is predominantly a respiratory tract infection. In its severe form, it escalates to acute respiratory distress syndrome, sepsis, septic shock and multiorgan failure such as of the kidneys and the heart.

In severe cases of COVID-19, the virus also causes an excessive activation of the body’s inflammatory response and an immune system malfunction known as a ‘cytokine storm’. In this situation, there is interference in the body’s normal cell function, which releases an excess of cytokines, causing a disproportionate level of inflammation. Such patients would find it difficult to breathe, despite being given oxygen.

Over the course of the COVID-19 pandemic, scientists began to consider tocilizumab as useful in severe COVID-19 patients who might experience a cytokine storm and to prevent them from deteriorating further. Tocilizumab could block some of this inflammation which causes the cytokine storm.

“If used correctly, tocilizumab could prevent a patient from suffering such serious damage to their lungs that they would need mechanical ventilation,” said Sushmita Roy Chowdhury, a pulmonologist at Apollo Gleneagles Hospital in Kolkata. At least 15 patients have been given tocilizumab at that hospital and the results have been largely positive so far, added Roy Chowdhury.

மட்டுப்படுத்த அளவில் கிடைப்பது

ஜூன் 13 அன்று, இந்திய அரசு அதன் மருத்துவ மேலாண்மை நெறிமுறையை கோவிட்-19 தொற்றுக்காக புதுப்பித்தது. அதன்படி, முதன்முறையாக இது பரிசோதனை சிகிச்சைகள் குறித்த ஒரு பகுதியையும் அதில் சேர்ந்தது; அதாவது, கோவிட் -19 உள்ள சிலருக்கு டாக்டர்கள் டோசிலிசுமாப் மருந்தை ஆஃப் லேபிள் ஆக பரிந்துரைக்க முடியும் என்று கூறியது.

அரசின் வழிகாட்டுதல் கூறுவது: “ஆக்ஸிஜன் தேவைகளை படிப்படியாக அதிகரிக்கும் மிதமான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டோசிலிசுமாப் (ஆஃப் லேபிள்) பரிசிலிக்கலாம்; ஸ்டெராய்டுகளை பயன்படுத்தினாலும் இயந்திரம் வழி காற்றோட்டம் தரப்பட்ட நோயாளிகளின் நிலை மேம்படவில்லை. கோவிட்-19ல் நீண்டகால பாதுகாப்பு தரவு பெரும்பாலும் அறியப்படவில்லை” என்பதாகும்.நோயாளியிடம் அதிகபட்ச அறிகுறி தெரிகிறது என்றால் மருத்துவர்கள் குறிப்பாக கவனிக்க வேண்டும். இந்த நோயாளிகள் இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளையும் கவனமாக கண்காணிக்க வேண்டியிருக்கும், ஏனெனில் டோசிலிசுமாப் அவர்களை இதற்கு ஆளாக்குகிறது.

நாட்டில் டோசிலிசுமாப் மற்றும் ரெம்டெசிவிர் போன்ற பிற மருந்துகளின் பற்றாக்குறை இருப்பதையும் இந்த ஆவணம் ஒப்புக் கொண்டது: "இந்த மருந்துகளின் பயன்பாடு என்பது தற்போது நாட்டில் வரம்புக்கு உட்பட்டு குறைந்தளவே கிடைப்பதை பொறுத்தது".

பிண்டோ மற்றும் தவான் போன்றவர்கள் மருந்து வாங்குவதில் எதிர்கொண்ட பிரச்சனையை கருத்தில் கொண்டு, ரோச் மற்றும் சிப்லா நிர்வாகிகளிடம், இந்தியாவில் நோயாளி ஒருவர் டோசிலிசுமாப் பெறுவதில் உள்ள முறையான நடைமுறைகளை தெரிவிக்கும்படி இந்தியா ஸ்பெண்ட் கேட்டுக் கொண்டது; நோயாளிகள் சிப்லா நிறுவனத்திடம் இருந்து இதை பெறலாம், அவர்கள் இந்த மருந்தை மருத்துவமனைகள், மருந்தகங்கள், அரசு மற்றும் தனிப்பட்ட நோயாளிகளுக்கு சரியான மருந்துடன் விநியோகிக்க வேண்டும் என்று, ரோச் பிராடெக்ட்ஸ் (இந்தியா) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தியா ஸ்பெண்ட் இது தொடர்பான கேள்விகளை சிப்லாவுக்கு அனுப்பியது, அந்த நிறுவனத்திடம் இருந்து இதுவரை பதில் இல்லை.

உள்ளூர் சிப்லா நிர்வாகிகள் மூலம் மருந்து வாங்க முயற்சித்ததாக பிண்டோ கூறினார்; அவர்களின் எண், சென்னையில் உள்ள ஹெல்ப்லைன் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவர்களிடம் இருந்து டோசிலிசுமாப் மருந்து பெற முடியாத நிலையில், அவர் மருந்துக்காக ஹைதராபாத்திற்கு சென்று மீண்டும் உடனே திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.அடுத்த சில மாதங்களில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ள மருந்துகளின் எண்ணிக்கை குறித்த இந்தியா ஸ்பெண்டின் நேரடி கேள்விகளுக்கும் ரோச் செய்தித்தொடர்பாளர் பதில் அளிக்கவில்லை; "நாங்கள் கடந்த சில வாரங்களில் பல்வேறு பொருட்களிய இறக்குமதி செய்துள்ளோம்" என்று மட்டும் கூறினார்.

மருந்து விலை குறைய முடியுமா?

டோசிலிசுமாப் மருந்தின் அதிக விலைக்கு அதன் விநியோகச்சங்கிலி முறிவு காரணம் என்பது தெளிவாக புலப்படும் நிலையில், இந்தியாவில் மற்ற மருந்துகளும் - அது கோவிட்-19 சிகிச்சை அல்லது பிறவற்றுக்கும் கூட - அதேநிலை உள்ளது.புதுப்பிக்கப்பட்ட மருத்துவ மேலாண்மை நெறிமுறையில் பட்டியலிடப்பட்டு உள்ள மற்றொரு பரிசோதனை மருந்து, அமெரிக்க மருந்து நிறுவனமான கிலியட் சயின்சஸ் தயாரித்த நோயெதிர்ப்பு மருந்தான ரெமெடிசிவிர் ஆகும்; இது வளர்ந்த நாடுகளில் ஐந்து நாள் சிகிச்சைக்கு ஒரு நோயாளிக்கு 2,340 டாலர் (ரூ.1.77 லட்சம்) என விலை நிர்ணயித்துள்ளது.

இந்தியாவிலும் இந்த மருந்தை அணுகுவதில் சிரமம் என செய்திகள் கிடைத்துள்ளன. இருப்பினும், பல மாநில அரசுகள், குறிப்பாக தமிழ்நாடு, சமீபத்திய வாரங்களில் இதை வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. மேலும், கிலியட் சயின்சஸ் இந்த மருந்தை ஹெட்டெரோ ஹெல்த்கேர் போன்ற ஒருசில இந்திய மருந்து நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது, இது ஒரு குப்பியை ரூ.5,400 க்கு தயாரித்து விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

மற்றொரு சோதனை மருந்து ஃபாவிபிராவிர்; கோவிட்-19 இன் சாத்தியமான சிகிச்சைக்காக இதற்கு, இந்தியாவின் மருந்துக்கட்டுப்பாட்டாளரால் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் ஒவ்வொரு மாத்திரை விலையும் ரூ.103 ஆகவும், முழு சிகிச்சைக்கு ரூ.12,566 செலவாகும்.

தீவிரமாக நோய்வாய்ப்பட்ட கோவிட்-19 நோயாளிகளுக்கு பெரும்பாலும் இந்த மருந்துகள் பலவும் ஒன்றன்பின் ஒன்றாக அல்லது ஒரே நேரத்தில் வழங்கப்படும்; அப்போது சிகிச்சையின் ஒட்டுமொத்த விலை பலருக்கு மிகப்பெரும் சுமையாக இருக்கும். நோயாளிகளுக்கு டோசிலிசுமாப் வழங்கப்படுகிறது, இதில் பல மருந்துகள் சுவாசக்கோளாறு அதிகரிப்பதை தடுக்கத் தவறிவிட்டன; மேலும் சில வாய்ப்புகளும் போய்விட்டன. அவற்றால் நோயாளிகள் மற்றும் குடும்பங்கள் பெரும்பாலும் மிகுந்த கவலையில் உள்ளனர்.

ஏப்ரல் 2020 இல் Journal of Virus Eradication இதழில் வெளியான ஒரு ஆய்வறிக்கை, டோசிலிசுமாப்பின் (560-மி.கி. ஒரு டோஸ்) அதிகபட்ச விலை அமெரிக்காவில் 3,383 டாலர் (ரூ.2,55,849); குறைந்தபட்சமாக பாகிஸ்தானில் 510 டாலர் (ரூ. 38,570) என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

டோசிலிசுமாப், ரெம்டெசிவிர், ஃபேவிபிராவிர் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உள்ளிட்ட கோவிட் -19 க்கான நம்பிக்கைக்குரிய மருந்துகளின் உற்பத்திச்செலவை இந்த ஆய்வு பகுப்பாய்வு செய்தது. கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக இந்த மருந்துகள் பல மறுஉருவாக்கம் செய்யப்படுவது “மிகக் குறைந்த செலவில் லாபகரமாக தயாரிக்கப்படலாம்” என்று அந்த கட்டுரையின் ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த உண்மைகள் மருந்து நிறுவனங்களுடனான விலை தொடர்பான பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்தவும், உலகெங்கும் அரசுகளுக்கு நிறைய தொகையை மிச்சப்படுத்தவும் முடியும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஆனால் தொற்றுநோய்களின் போது இந்த பரிசோதனை மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த இந்திய அரசுக்கு பல சட்ட வாய்ப்புகள் இல்லை. ரோச் நிறுவனத்துடன் மொத்தமாக கொள்முதல் ஒப்பந்தத்தை மேற்கொள்வதே அரசுக்கு உள்ள சிறந்த வழி. இது விலைகளை சரிசெய்யவும், சுங்க / இறக்குமதி வரிகளை தள்ளுபடி செய்யவும், விலையை மிகக்குறைந்த அளவிற்கு குறைக்கவும் அனுமதிக்கும்” என்று மருந்து நிறுவனங்களில் முறைகேட்டை வெளிப்படுத்திய பொது சுகாதார ஆர்வலர் தினேஷ் தாக்கூர் கூறினார்.

மற்ற மருந்து நிறுவனங்கள் டோசிலிசுமாப்பிற்கான ஒரு பயோசிமிலரை உருவாக்கும் என்று எதிர்பார்ப்பது நடைமுறையில் இல்லை, அது மிகவும் மலிவானதாகவும், இவ்வளவு குறுகிய காலத்திலும் இருக்கும் என்று தாகூர் கூறினார். டோசிலிசுமாப் நிறுவனத்திற்கான கட்டாய உரிமத்தை இந்திய அரசு வெளியிடுவது சாத்தியமில்லை என்றும், இது ஒரு பொதுவான நிறுவனத்தை மலிவான பதிப்பை உருவாக்க அனுமதிக்கும் என்றும் அவர் கூறினார்.

"இப்போது அரசு இந்த மருந்தை ஆஃப்-லேபிள் பயன்பாட்டிற்கான மருத்துவ மேலாண்மை வழிகாட்டுதல்களில் வைத்துள்ளது, இது சுட்டிக்காட்டப்படக்கூடிய தீவிர கோவிட் மருத்துவமனைகளில் கிடைக்க வேண்டும். கோவிட் -19 சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த இந்தியாவின் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணைக்கு அதிகாரம் உள்ளது,” என்று மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் அக்ஸஸ் காம்பெய்ன் (Access Campaign) அணுகல் பிரச்சார குழுவின் லீனா மெங்கானே கூறினார்.

முக்கியமான அல்லது அவசரகால சூழ்நிலைகளில் மருந்துகளின் விலையை நிர்ணயிக்க, மருந்து விலை கட்டுப்பாட்டு உத்தரவானது சில அசாதாரண அதிகாரங்களை அரசுக்கு வழங்குகிறது. மிக சமீபமாக, முழங்கால் எலும்புக்கு வைக்கும் உபகரணத்தின் விலையை சரிசெய்ய, இந்த ஆணை 2017ம் ஆண்டில் அரசால் பயன்படுத்தப்பட்டது.

"இந்த அதிகாரங்கள், முன்எப்போதும் இல்லாத பொது சுகாதார நெருக்கடி காலத்தில் மருந்து நிறுவனங்கள் லாபம் பெறுவதைத் தடுக்காவிட்டால், இந்த அமைப்பு நோயாளிகளையும், சுகாதார அமைப்பையும் தோல்வியடையச் செய்துவிடும்,” என்றார் மெங்கனே.

(பூயான், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story