தூய்மை இந்தியா திட்ட நெருக்கடிகளை வெளிப்படுத்தும் ஜம்மு; குடிநீர் ஆதாரங்களில் கலக்கும் 94% சுத்திகரிக்கபடாத கழிவுநீர்

X

(ஜம்மு) ஜம்மு & காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை திறவெளி கழிப்பிடம் இல்லாத (ODF) மாநிலமாக, 2018 செப்டம்பர் 15ஆம் ஆண்டு, அம்மாநில ஆளுநரால் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பானது மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டக்குழுவால் சரிபார்க்கப்படவில்லை. இருப்பினும் ஜம்மு காஷ்மீர் பெரிய பிரச்சனையில் உள்ளது.

மாநிலத்தின் குளிர்கால தலைநகரான ஜம்முவில், 22,000 தொட்டிகள் (தினமும் 157 மில்லியன் லிட்டர்- எம்.எல்.டி.) சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேறி (இது தினமும் வெளியேற்றும் 167 மில்லியன் லிட்டரில் 94%), திறந்தவெளி சாக்கடையிலும் குடிநீர் ஆதாரங்களிலும் கலக்கிறது; அங்குள்ள 5,50,000 மக்களுக்கு, இதில் ஏற்பனவே 1,10,000 பேர் தண்ணீர் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அச்சுறுத்தலாக உள்ளது என்பது, அரசு அதிகாரிகள் திட்ட அறிக்கைகள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

ஜம்முவின் கழிவுநீர் பிரச்சனை, இந்திய நகர்ப்புறங்களின் கழிவுநீர் பிரச்சனையை, அதாவது இந்தியாவின் 63% கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் கடல், ஏரி, நீர்நிலைகளில் கலந்து ஆறுகளின் 351 நீளத்தை மாசடைய செய்வதாக, மத்திய மாசுகட்டுப்பாடு வாரியம் (CPCB) புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி, பேக்ட் செக்கர், 2018 அக்டோபரில் கட்டுரை வெளியிட்டிருந்தது. நகர்ப்புறங்களில் உருவாகும் கழிவுநீரில் 37% மட்டுமே சுத்திகரிக்கும் திறனை இந்தியா கொண்டிருக்கிறது.

இந்தியாவின் முதல்தர நகரங்கள் (1,00,000 க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்டவை) மற்றும் இரண்டாம் தர நகரங்கள் (50,000 மற்றும் 1,00,000 இடையே மக்கள் தொகை கொண்டவை) இணைந்து நாளொன்றுக்கு மொத்தம் 33,212 எம்.எல்.டி. கழிவுநீரை, அதாவது 5.4 மில்லியன் டேங்கர்கள் (ஒரு டேங்கரின் கொள்ளளவு 7,000 லிட்டர்) உற்பத்தி செய்கின்றன. இதை வரிசையாக நிறுத்தினால் பூமத்தியரேகைவிட 1.3 மடங்கு நீளமாக இருக்கும். ஆனால், இந்நகரங்கள், 24% கழிவுநீரை மட்டுமே சுத்திகரிக்கும் திறன் கொண்டிருப்பதாக, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளம் தெரிவிக்கிறது.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்படை கட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், முறையாக சுத்திகரிப்பு வசதியோடு கழிவுநீர் தொட்டி இணைக்கப்படாதவறை கழிப்பறை கட்டுவது அர்த்தமற்றது ஆகிவிடும் என்று, இத்திட்டத்தை மதிப்பிட்டு, பேக்ட் செக்கர் இணையதளம், 2018 அக்டோபரில் கட்டுரை வெளியிட்டிருந்தது.

ஜம்முவில் இருந்து 167 எம்.எல்.டி. கழிவுநீர் வெளியேற்றப்படும் நிலையில், அங்கு 67 எம்.எல்.டி. கழிவுநீரை (40%) மட்டுமே சுத்திகரிக்கும் வகையில் மூன்று சுத்திகரிப்பு நிலையங்கள் (STPs) உள்ளன. ஆனால் அவற்றிலும் 10 எம்.எல்.டி. கழிவுநீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுவதாக, பொருளாதார மறுசீரமைப்பு முகமையின் (ERA) நிர்வாக பொறியாளர் (கழிவுநீர்) ராகேஷ் குப்தா தெரிவித்துள்ளார். இது, ஜம்மு மற்றும் காஷ்மீர் நகர்ப்புற துறை மேம்பாட்டு முதலீட்டு திட்டத்தை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

"மழைக்காலங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் மற்றும் திடமான கழிவுப்பொருட்களின் கலவை வெளியேற்றப்படுகிறது. இதனால் தண்ணீர் மூலம் நோய்கள் பரவுகின்றன” என்று, ஜம்முவில் உள்ள பாலூரா பகுதியில் வசிக்கும் 42 வயது எஸ். ஹண்டு தெரிவிக்கிறார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள், 2018ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும். இதன் மூலம் நகரின் சுத்திகரிப்பு திறன், 15-20 எம்.எல்.டி. ஆக அதிகரிக்கும். இது, தற்போதுள்ள 10 எம்.எல்.டி. என்பதைவிட அதிகம் என்றாலும் நகரின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது சுத்திகரிப்பு திறன் மிகவும் குறைவு என்று குப்தா கூறினார்.

ஜம்முவில் நிலவும் கழிவுநீர் சுத்திகரிப்பு பிரச்சனையானது, ஒட்டு மொத்த மாநிலத்தின் நிலையை பிரதிபலிக்கிறது. ஜம்மு காஷ்மீரின் நகர்ப்புறங்களில் 547 எம்.எல்.டி. கழிவுநீர் வெளியேற்றப்படும் நிலையில் அவற்றில் 48% மட்டுமே சுத்திகரிக்க இயலும் நிலை உள்ளதாக, 2017 மார்ச் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜம்முவில், தினமும் சுத்திகரிக்கப்படும் கழிவுநீரின் அளவானது உண்மையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட மிகவும் குறைவாக உள்ளது. “ஜம்மு நகரானது நிலையான, பொருளாதார ரீதியாக துடிப்பான ஒரு சுற்றுலா நகரமாகும். அதன் வாழ்க்கை மற்றும் வர்த்தகம் ஆகியன அதன் பாரம்பரியம், இடத்தை சார்ந்துள்ளது”.

பல்வேறு கழிவுநீர் திட்டம் மூலம், ஜம்முவில் உள்ள வீடுகளுக்கு இலவசமாக குழாய்கள் வழங்கி நீர்நிலைகளில் இருந்து கழிவுநீர் திசை திருப்பிவிடப்பட்டுள்ளன.

குளிர்கால தலைநகரில் கழிவுநீர்

காஷ்மீரின் குளிர்கால தலைநகராக நவம்பர் முதல் ஏப்ரல் வரை செயல்படும் ஜம்மு நகரானது, செனாப் ஆற்றின் துணை நதியான தாவி ஆற்றங்கரையோடம் அமைந்துள்ளது. ஆற்றின் வலது கரையோரம் பழைய ஜம்மு நகரும், இடது கரைப்பகுதியில் ஜம்முவின் புதிய பகுதிகளும் அமைந்துள்ளன.

1974 முதல், 1994 வரை 20 ஆண்டுக்களுக்கான, ஜம்முவின் முதலாவது மாஸ்டர் திட்டம், 1978-ல் ஒப்புதல் பெறப்பட்டது. எனினும் நகரின் ஒருபகுதியாக, கழிவுநீர் சாக்கடைகள் இன்னமும் உள்ளன. நகரம் விரிவடைந்த போதும் கழிவுநீரை சேமிக்கவோ, சுத்திகரிக்கவோ எந்தவொரு வழியும் இல்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் திட்டமிடலில் ஏற்பட்ட வெற்றிடமானது, ”நகரின் அத்தியாவசிய நகர்ப்புற ஆற்றல்களை இழக்கச் செய்துவிட்டது” என, ஜம்மு காஷ்மீரின் 2வது மாஸ்டர் பிளான்- 2032 தெரிவிக்கிறது. 2001 முதல் 2021 வரையிலான இத்திட்டத்திற்கு, 2004ல் ஒப்புதல் தரப்பட்டது.

இந்த திட்டங்களுக்கு பிறகு நகரின் மக்கள்தொகையில் 3% மட்டுமே 2011ஆம் ஆண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு திட்ட அமைப்புடன் இணைக்கப்பட்டதாக, மாஸ்டர் பிளானில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2032 ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளானுக்கு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அப்போதைய முதல்வர் மெகபூபா முப்தி தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.

”ஜம்மு நகரில் முழுமையான, திட்டமிடப்பட்ட ஒரு கழிவுநீர் சேகரிப்பு, சுத்திகரிப்பு திட்டம் கிடையாது. தற்போது கழிவுகளை பக்கெட்டுகளில் துப்புரவாளர்கள் சேகரித்து அவற்றை பயன்பாடற்ற நிலத்தில் கொட்டும் நடைமுறை தற்போது உள்ளது. ஜம்முவின் பழைய பகுதிகளில், சாலையோரம், நீர்நிலை ஆதாரங்கள், சாக்கடைகளில் இரவில் பலர் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். கழிவுகள் காற்றில் பறந்து அருவெறுக்கத்தக்க சூழலை ஏற்படுத்துவதற்கு காரணமாகிறது” என்று மாஸ்டர் பிளான் சுட்டிக் காட்டுகிறது.

”கழிவுநீரானது எவ்வித சுத்திகரிப்பும் செய்யாமல் நேரடியாக தாவி ஆற்றிலோ, அல்லது பிற நீராதாரங்களிலோ நேரடியாக கலக்க விடப்படுகிறது. உயர் மற்றும் நடுத்தர வருவாய் உள்ள குடும்பங்களில் கழிப்பறைகளுக்கு செப்டிக் டேங்க் உள்ள நிலையில், மற்ற தரப்பினரின் வீட்டு கழிவுகள் பாதுகாப்பற்ற முறையில் வெளியேற்றுவது இன்னமும் தொடர்கிறது”.

மேலும், "நகர்ப்புற மக்களில் 12% பேர் எந்தவிதமான சுத்திகரிப்பு வசதியுமின்றி, கழிவுநீரை திறந்தவெளியில் விடுகின்றனர்" என்று திட்ட ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத (ODF) பகுதியாக ஜம்மு அறிவிக்கப்பட்டது உண்மையில் தவறானது என்று, பெயர் வெளியிட விரும்பாத மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“மாஸ்டர் பிளான் தவிர்த்து, நகரின் சீரான வளர்ச்சிக்காக எவ்வித விரிவான தொலைநோக்கு திட்டமும் இல்லை. 2003- 04 ஆம் ஆண்டில் இருந்து நகருக்கு எவ்வித கழிவுநீர் வடிகால் திட்டமும் இல்லை” என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 2004க்கு பிறகு தொடங்கப்பட்ட சில திட்டங்கள் இன்னமும் பணி நடைபெற்றவாறே உள்ளன. ஆனால், இத்திட்டங்கள், நகரில் 20-25% பகுதியை மட்டுமே இலக்காக கொண்டிருப்பதால் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது என்று, அவர் மேலும் கூறினார்.

ஜம்முவில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கால்வாயிலேயே குடிநீர் குழாய்களும் செல்கின்றன. இது நோய்க்கு வழிவகுப்பதாக, மக்கள் தெரிவிக்கின்றனர்.

முழுமைபெறாத, போதுமானதாக இல்லாத கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள்

தற்போது ஜம்முவில், முறையே 27 மற்றும் 10 எம்.எல்.டி. சுத்திகரிப்பு திறன் கொண்ட இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் வெறுமனே உள்ளன. இதேபோல் மற்ற சில கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்களும் வெற்றிபெறவில்லை.

கடந்த 2014-15ஆம் ஆண்டில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) நிதி உதவியுடன் ரூ.1498 கோடி மதிப்பிலான திட்டம் வரையப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தின் கீழ் மொத்த நகரமும் வரும் வகையில் ஒரு முன்வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால், மாநில அரசு அதை செயல்படுத்த ஆர்வம் காட்டாமல் கிடப்பில் போட்டது. இத்திட்டத்தின் நிலை குறித்து தற்போது வரை தெரியவில்லை என்று, பெயர் வெளியிட விரும்பாத மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரம், நகரில் மேலும் பல கழிவுநீர் வடிகால் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

கழிவுநீர் திட்ட செயல்பாட்டுக்காக ஜம்மு ஏ, பி மற்றும் சி என்று மூன்று பகுதிகளாக மாநகராட்சி நிர்வாகம் பிரித்துள்ளது. தற்போது ஏ பிரிவு பகுதிகளில், தாவி ஆற்றின் வலது கரைப்பகுதிகள், பழைய பகுதிகளின் பிராதன இடங்களில் கழிவுநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டங்களின் கீழ் வீட்டு சமையலறை, குளியலறை, கழிப்பறைகளில் இருந்து கழிவுநீர் வடிகால் தொட்டிக்கு இணைப்பு தரப்படும்.

பி பிரிவில் தாவி ஆற்றின் வலது கரை, சி பிரிவில் இடது கரைக்காக விரிவான வடிகால் திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. இத்திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை நிதி உதவி அளிக்கிறது. பி பிரிவில் உதேவாலா பகுதியிலும், சி பிரிவில் காதிகார்க் பகுதியிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஏ பிரிவில் நடைபெறும் திட்டங்களுக்கு மூன்று ஏஜென்சிகள் கூட்டாக பொறுப்பு வகிக்கின்றன: பொருளாதார மறுசீரமைப்பு முகமையின் (ERA), நகர்ப்புற சுற்றுச்சூழல் பொறியியல் துறை (யு.இ.இ.டி.) மற்றும் யு.இ.இ.டி.யின் கீழ் இயங்கும் தேசிய கட்டிட கட்டுமான கழகம் லிட் (என்.பி.சி.சி) ஆகியன.

என்.பி.சி.சி.யின் திட்டப்பகுதியானது ஜுவல் சவுக்கில் இருந்து பெர்கோ- பி.சி. சாலை பிரியும் பகுதி வரை. இத்திட்டத்திற்கு, 2006ஆம் ஆண்டில் மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புதுப்பிப்பு திட்டத்தின் கீழ் அனுமதி தரப்பட்டது. இதில், ரூ.130.75 கோடி மதிப்பிலான இத்திட்டம், 32 கி.மீ. பிரதான சாலையில் கழிவுநீர் வடிவால் வசதி, 90.74 கி.மீ.க்கு கழிப்பறை கழிவு செல்லும் பாதை அமைத்து, 30,400 வீடுகளின் 27 எம்.எல்.டி. கழிவுகளை சுத்திகரிக்க திட்டமிடப்பட்டது.

இப்பணியை தொடங்கிய பிறகே கழிவுநீர் செல்லும் திட்டத்தில் சில முக்கிய பாதைகள் விடுபட்டிருப்பது, திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பிற்கு தெரிய வந்தது. விடுபட்டவற்றை சேர்க்கும் வகையில், புதிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, 2012-ல் மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. அதன்படி கூடுதலாக 1.05 கி.மீ.க்கு கழிவு நீர் செல்லும் குழாய்கள், 36.2 கி.மீ. நீளத்திற்கு கழிவறை கழிவுகள் செல்லும் வகையில், ரூ.20.32 கோடி கூடுதலாக கோரப்பட்டது.

ஜம்முவின் ஜுவல் சௌக், ரகுநாத் பஜார், கரன் நகர், அம்பாலா உள்ளிட்ட பழைய பகுதிகளில் கழிவுநீர் பிரதான குழாய்கள் அமைக்கப்பட்டன. எனினும் வீடுகளுக்கான இணைப்பு வழங்கப்படவில்லை. இணைப்பு அளித்திருந்தால் வீடுகளில் சேகரமாகும் 27 எம்.எல்.டி. கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டிருக்கும். தற்போது அது வெறுமனே உள்ளது. மொத்த கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற, உரிய நேரத்தில் நிதி வழங்கப்படவில்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்ற போதும் வீடுகள் அல்லது சுத்திகரிப்பு நிலையங்களை இணைப்பதற்கான குழாய்கள் இல்லை என்று ஜம்மு வழக்கறிஞர் ராகேஷ் ஷர்மா தெரிவித்தார்.

”இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் (27 எம்.எல்.டி). பகவதி நகரில் ஏற்கனவே கட்டப்பட்டு 4 ஆண்டுகளுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. எனினும் அதன் பிறகு, இந்நிலையம் செயல்பாடின்றியே கிடக்கிறது. ஏனெனில், வீடுகள் - சுத்திகரிப்பு நிலையங்களை இணைப்பதற்கு குழாய்கள் முழுமையாக பதிக்கப்படவில்லை” என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணநகர் குடிசைப்பகுதிகளை அகற்ற முடிந்தாலும், கழிவுநீர் குழாய்களை அமைக்க இடம் இல்லாமல் போய்விட்டது என்று அவர் தெரிவித்தார்.

இதேபோன்ற புகார்கள் திட்டத்தின் மற்ற பகுதிகளிலும் எழுந்தன.கழிவுநீர் திட்ட பணிகள் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டதால் இதுபோன்ற புகார்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்று, ஜம்மு வழக்கறிஞர் ராஜேஷ் ஷர்மா தெரிவித்தார். இன்னும் சில பகுதிகளில் வீடு கழிவுநீர் தொட்டிக்கு குழாய் இணைப்பு தந்த நிலையில், பிரதான தொட்டிக்கு குழாய்கள் இல்லை.

யு.இ.இ.டி திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேசத்தின் ஜல் நிகாம் நிறுவனம், தலப் தில்லோ பகுதியில் கழிவுநீர் திட்டத்தை மேற்கொண்டது. ரூ. 34.77 கோடி மதிப்பிலான திட்டத்தில் 1.63 கி.மீ.க்கு பிரதான தொட்டிக்கான குழாய்கள், 31.812 கி.மீ.க்கு 5704 வீடுகளின் கழிப்பறைகளை இணைப்பதே இத்திட்டமாகும். கடந்த 2000 ஆம் ஆண்டில், 10 எம்.எல்.டி. கழிவுகளை கையாளும் வகையில் கட்டப்பட்ட இது, இன்றுவரை பயன்பாடின்றியே உள்ளது.

தற்போது ஜம்முவின் தலப் தில்லோ பகுதியில் யு.இ.இ.டி ரூ.8.17 கோடியில் மற்றொரு கழிவுநீர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது, முந்தைய திட்டத்தின் ஒரு பகுதியல்ல.

மூன்றாவது அமைப்பான ஈ.ஆர்.ஏ. தற்போது ரூ.188 கோடியில் ஜானிபூர், பவானி நகர், பக்‌ஷி நகர், சக்தி நகர், பலோரா உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் திட்டங்களை செய்து வருகிறது. திட்டத்தின் முதல் தொகுப்பு (அதிகாரபூர்வமாக WW05 என்று அறியப்படுகிறது) 98% முழுமையானது, 17 கால்வாய்கள் அமைக்கப்பட்டு அவற்றின் வழியாக பிரதான கால்வாயை கழிவுநீர் எட்டும் வகையில் வழிகள் ஏற்படுத்தப்பட்டதாக, ஈ.ஆர்.ஏ.வின் குப்தா தெரிவித்தார்.

”ஜம்முவில் 35 கால்வாய்கள் உள்ளன; இதில் 15-16 கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் தாவி ஆற்றில் நேரடியாக விடப்படுகிறது. மற்றவை நீர்நிலைகள், தாழ்வான இடங்களில் விடப்படுகிறது. இந்த கால்வாய்கள் அனைத்தும் ஆற்றை நோக்கி திருப்பிவிடாமல், சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும்” என்றார் அவர்.

ஈ.ஆர்.ஏ. திட்டத்தின் இரண்டாம் பகுதி - WW03A என்று அறியப்படுகிறது. இதில், 10,300 வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு வழங்குவதை நோக்கமாக கொண்டு, அதில் 7,200க்கு இணைப்பு தரப்பட்டுள்ளது. திட்டத்தின் மூன்றாவது தொகுப்பு WW07 வாயிலாகவும் ”ஏறத்தாழ பெரும்பாலான வீடுகள்” கழிவுநீர் தொட்டிகளோடு இணைக்கப்பட்டன. ஈ.ஆர்.ஏ.வின் இத்திட்டங்கள் 2018 டிசம்பருக்குள் யு.இ.இ.டி.க்கு மாற்றப்படவுள்ளன. பராமரிப்பு மற்றும் இயக்கத்திற்கு யு.இ.இ.டி.யே பொறுப்பேற்கும்.

”வீடுகளை கழிவுநீர் தொட்டிகளோடு குழாய் மூலம் இணைப்பதோடு மட்டுமின்றி, நாங்கள் 30 எம்.எல்.டி. கழிவுகளை கையாளும் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் 10 எம்.எல்.டி.யை சுத்திகரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தாண்டு இறுதிக்குள் 15-20 எம்.எல்.டி. கழிவுகளை கையாளும் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் ” என்று குப்தா தெரிவித்தார்.

ஈ.ஆர்.ஏ. மற்றும் என்.பி.சி.சி. திட்டப்பணிகள் முடிந்தாலும் கூட, ஜம்மு நகரின் 25% பகுதிகள் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களோடு இணைக்கப்பட வேண்டும்.

(நிதி ஜம்வால், மும்பையை சேர்ந்த பத்திரிகையாளர். சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனம் (IWMI) தலைமையிலான சிந்து படுகை திட்ட ஆதரவுடன் DFID- நிதியளிக்கப்பட்ட தகவல் மாற்றத்தின் கீழ் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எனினும் இதில் கூறப்பட்டுள்ளவை IWMI மற்றும் DFID கருத்துகள் அல்ல.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story