'உ.பி.யில் திடீர் பருவமழை நோய் பரவலால் நாங்கள் அறியாமல் சிக்குண்டோம்'

தீவிர கோவிட் -19 இரண்டாவது அலைக்குப் பிறகு, உத்தரபிரதேசம் இப்போது டெங்கு மற்றும் பிற பருவமழை தொடர்பான நோய்களைக் கையாள்கிறது. இத்தகைய சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க அரசின் உத்தி என்ன? எங்கள் நேர்காணல்

உ.பி.யில் திடீர் பருவமழை நோய் பரவலால் நாங்கள் அறியாமல் சிக்குண்டோம்
X

மும்பை: இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசம், இதுவரை 1.7 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் -19 நோயாளிகளை கொண்டுள்ளது மற்றும் இந்த நோய் 1.34% அல்லது 22,891 பேரைக் கொன்றது, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து-இந்தியாவை விட சற்று அதிக விகிதம் 1.3%. இரண்டாவது அலையின் உச்சத்தில், மாநிலம் ஒரு நாளைக்கு 300 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்தது. மாநிலத்தில் கோவிட் நோயாளிகள் மற்றும் இறப்புகள் குறைவாக பதிவாகியுள்ளதாகவும், அதன் பஞ்சாயத்து தேர்தலின் போது தொற்றுநோயை தவறாக நிர்வகித்தது, தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் கள அறிக்கை தெரிவிக்கிறது.

பெரும்பாலான மாநிலங்களில், தொற்றின் அலை குறையத் தொடங்கியதும், உ.பி.யும் குறைவான நோயாளிகளை காணத் தொடங்கியது-செப்டம்பர் 28 அன்று, மாநிலத்தில் 14 புதிய நோயாளிகள் மற்றும் 177 செயலில் உள்ள கோவிட் -19 நோயாளிகள் மட்டுமே இருந்தனர். எனினும், இந்த பருவமழை காலத்தில், டெங்கு, மஞ்சள் காமாலை மற்றும் ஸ்க்ரப் டைபஸ் வைரஸ் போன்றவற்றையும் உ.பி.யில் கண்டறியப்பட்டன.

கோவிட் நெருக்கடியில் இருந்து நோய் பரவல் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து, அரசு என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டது? இந்த நேர்காணலில், உ.பி. அரசின் மருத்துவ மற்றும் சுகாதாரம், குடும்ப நலன், தாய் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங், சில நுண்ணிய விஷயங்களை தெரிவிக்கிறார்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

இரண்டாவது அலையின் உச்சத்தின்போது, உத்திரப்பிரதேசத்தில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 350 இறப்புகள் பதிவாகின. அரசு தனது கோவிட் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன? நோய் பரவலை எதிர்கொள்ள உ.பி.யின் சுகாதார அமைப்பு தயார்நிலை உள்ளது பற்றி இப்போது எப்படி விவரிப்பீர்கள்?

நாங்கள் முதன்முதலில் கோவிட்டை எதிர்கொண்டபோது மிகவும் கடினமான நேரம் இருந்தது. எனது நினைவு சரியாக நினைவிருக்குமானால், மார்ச் 8, 2020 அன்று, எங்களுக்கு முதல் நோய் தொற்று - இத்தாலியில் இருந்து ஆக்ராவுக்குத் திரும்பிய மக்களால் வந்தது. அவர்களைப் பராமரிக்க எங்களிடம் அப்போது சிறப்பு இடம் இல்லை, எனவே நாங்கள் அவர்களை, சப்தர்ஜங் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தோம். கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் எங்களிடம் ஒரே ஒரு சோதனை கருவி மட்டுமே இருந்தது, இது ஒரு நாளைக்கு 70 கோவிட் நோயாளிகளை மட்டுமே அதில் பரிசோதிக்க முடியும். அன்று முதல், எங்கள் முதலமைச்சர் எங்கள் பணம் அனைத்தையும் கொண்டு, மாநிலத்தில் உள்கட்டமைப்பு, சோதனை வசதிகள், படுக்கை வசதிகள், படுக்கைகளின் எண்ணிக்கை [மற்றும்] [சமூக] மையங்களில் [அவற்றின்] அதிகரிப்பு ஆகியவற்றை அதிகரிக்கச் செய்ய வலியுறுத்தினார். மேலும் ஒவ்வொரு மருந்தும் அங்கு கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். [இந்த பிரச்சாரம்] நேபாளத்தின் எல்லைகளைச் சரிபார்ப்பது, ரயில்களைச் சரிபார்ப்பது என்று, முடிந்தவரை போர்க்கால அடிப்படையில், 2020 இல் நாங்கள் நன்றாகச் செய்தோம். எங்கள் உள்கட்டமைப்பு உயர்ந்தது - அனைத்து வகைகளின் படுக்கைகளும், அதனுடன், மருந்துகள், மற்றும் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களும், அனைத்தும் மிக குறுகிய, விரைவான நேரத்தில் ஒன்றாக வந்தன. மற்றும் சோதனை, நிச்சயமாக கொஞ்சம் அதிகரித்தது.

அதன் பிறகு உங்களுக்கே தெரியும், 2021 ஆம் ஆண்டில், வைரஸ் ஒரு வித்தியாசமான, உருமாறியதாக மீண்டும் தோன்றியபோது, ​​அது நமது அனைத்து ஆயத்தங்களுக்கும் மொத்தமாக பின்னடையச் செய்தது... இது, உ.பி.யில் அல்லது உலகம் முழுவதும் தான். மேலும், திடீரென ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டோம், ஏனெனில் [வைரஸ்] உடனடியாக நுரையீரலை பாதிக்கும். மேலும், மக்களுக்கு ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையாக இருந்தது. சாதாரண ஆக்ஸிஜன் ஆலைகள், மிக மெதுவான வேகத்தில் இயங்கி, [அறுவை சிகிச்சைகளுக்கு] பயன்படுத்தப்பட்டன… திடீரென அதிக ஆக்ஸிஜனை தேவையை [சமாளிக்க] ஏதுவாக அவை மாற்றப்பட்டன, மேலும் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. உங்களுக்குத் தெரியும், அந்த நேரத்தில் பிரதமரும் அவரது அமைச்சரவையும் இதில் நுழைந்தனர். அனைத்து ஆக்ஸிஜனும் [விநியோகம்] இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எங்களுடையது போகாரோ பகுதியில் இருந்து, ஜாம்நகரில் இருந்து வந்தது மற்றும் போர்க்கால அடிப்படையில் டேங்கர்கள் மருத்துவமனைகள் - 75 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளை அடைவதை உறுதி செய்தோம்.

கோவிட்டுக்கு பிறகு மாநில சுகாதார அமைப்பில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? உங்கள் மாநிலத்தில் சமீபத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டது, அது பலவீனமடையச் செய்து உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும்.

கடந்த 2020 முதல் 21 வரை, கோவிட் [அலைகளுக்கு] இடையில், அனைத்து கிராம பஞ்சாயத்துகள், நகர் நிகாம்கள், நகர் பலிகாக்கள் - நகரங்கள் மற்றும் கிராமங்கள் - வடிகால்கள் மற்றும் வீடுகளில் மருந்து புகை தெளிப்பதை நாங்கள் தொடர்ந்து உறுதி செய்தோம். லார்வாக்களை சமாளிக்க ஒவ்வொரு வருடமும் நாம் செய்யும் வழக்கமான விஷயம் இது. டெங்குவைத் தவிர, மூன்று அல்லது நான்கு நிலைகளில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலைக் கையாண்டோம், அதற்கு குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 100% தடுப்பூசி போடுகிறோம்.

டெங்குவானது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சுழற்சியைக் கொண்டு திரும்புகிறது. 2019 ல் எங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. மேலும் இந்த முறை, திடீரென மீண்டும் மேலே அதிகரித்து வந்ததைக் கண்டோம், ஏனென்றால் எங்கள் மாநிலத்தில் அதிக மழை பெய்தது. நிறைய தண்ணீர் தேங்கியது, குப்பைகளை சுத்தம் செய்வதில் எங்களுக்கு நிறைய சிக்கல்கள் இருந்தன. சமீபத்தில் ஃபிரோசாபாத் மற்றும் மதுராவில் டெங்கு பரவுவதை நாங்கள் கண்டோம். எங்கள் மக்கள் செயலில் இறங்குவதற்குள் ... ஆரம்பத்தில் டெங்கு இருந்தவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வரவில்லை; ஆனால் நேராக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றனர், அங்கு நிறைய இறப்புகள் இருந்தன, மேலும் சில குழந்தைகள் வீட்டிலும் இறந்தனர். நாங்கள் செயலில் இறங்குவதற்குள், சேதம் முடிந்துவிட்டது. நாங்கள் எங்கள் குழுக்களை ஒன்று திரட்டினோம், நாங்கள் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தத் தொடங்கினோம்.

மதுரா சற்று வித்தியாசமாக இருந்தது, ஏனென்றால் திடீரென்று உங்களுக்கு மஞ்சள் காமாலை மற்றும் ஸ்க்ரப் டைபஸ் போன்ற நோய்கள் இருந்தன. இவை எங்களுக்குப் புதிதாக இருந்தன. ஆனால் மீண்டும், அவர்கள் ஐசிஎம்ஆரால் சோதிக்கப்பட்டு, எங்களுக்கு கிடைத்த அறிக்கையைப் பொறுத்து, நாங்கள் மருந்துகளை மாற்றி, எங்களால் முடிந்ததைச் செய்தோம். அதனால் அது அடங்கியது. ஆனால் அது எங்களுக்கு சிறிது சேதத்தை ஏற்படுத்தியது மற்றும் நாங்கள் தயார்நிலை இருந்தபோதும், அங்கு அமைப்புகளில் கொஞ்சம் பற்றாக்குறை இருந்தது.

எனவே, முன்னோக்கி செல்லும் சுகாதார உத்தியை வரையறுக்கும்படி நான் உங்களிடம் கேட்டால், அது என்னவாக இருக்கும்? எவ்வளவு தடுப்பு, எவ்வளவு சிகிச்சை, எவ்வளவு தொடர்பு? உதாரணமாக, நீங்கள் மழையைப் பற்றி பேசினீர்கள், ஆனால் நிர்வாகம் நகரத் தொடங்க இது ஒரு தூண்டுதலாக இருக்கக் கூடாதா?

ஜே.பி.எஸ்: மழைக்கு முன், பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும், மழைக்காலத்திற்கு முன்பு ஒவ்வொரு வடிகாலையும் சுத்தம் செய்ய வேண்டும், மருந்து புகை தெளிக்க வேண்டும் என்று ஒரு உத்தரவு வழங்கப்படுகிறது. இப்போது, ​​உங்களுக்கு தேவையான அளவுக்கும் அதிகமாக மழை பெய்யும் போது - இந்த ஆண்டு நடந்தது - உங்கள் வடிகால்கள் நீங்கள் எவ்வளவு சுத்தம் செய்தாலும் அவ்வளவு தண்ணீரை மட்டுமே எடுக்க முடியும். எனவே அது குறைவான கட்டுமானம் அல்லது கட்டாக்கள் (குழிகள்) இருக்கும் கட்டுமான இடங்களில் உள்நுழைகிறது. ஆனால் சுகாதாரத்துறையில், எங்களிடம் ஏற்கனவே ஒரு அமைப்பு உள்ளது - ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு வகையான திட்டம் உள்ளது, டெங்கு மட்டுமல்ல, சிக்குன்குனியா, எச் 1 என் 1 காய்ச்சல், காலா அசார், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு. இப்போது [சில நேரங்களில்] எல்லாமே ஒன்றாக நடக்கிறது - நீங்கள் கோவிட் தொற்றில் இருந்து வெளியேறுகிறீர்கள், திடீரென்று நீங்கள் டெங்குவைக் கண்டீர்கள், பிறகு உங்களுக்குத் தெரிந்த அடுத்த விஷயம் லக்னோவில் நிறைய வயிற்றுப்போக்கு நோயாளிகள் உள்ளனர். பிறகு திடீரென உ.பி.யில் வேறு ஒரு பகுதியில் ஒருவகை காய்ச்சல் போன்ற சில நோயாளிகளை கண்டீர்கள், பிறகு நீங்கள் அங்கு விரைந்து வருகிறீர்கள். எனவே தயார்நிலை இருந்தபோதும், நாம் தீவிர கோவிட் மேலாண்மை வழியாக சென்றதால், தவறான பாதையில் சிக்கியதை என்னால் ஒப்புக் கொள்ள முடியும். ஆனால் நாங்கள் இப்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம், எந்த பிரச்சனையும் இல்லை மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளும் முற்றிலும் தயாராக உள்ளன.

இந்தியாவின் சுகாதார அமைப்பில் கிட்டத்தட்ட 80% தனியார் மற்றும் 20% பொது அரசு மருத்துவமனை. டெங்குவின் விஷயத்தில் நீங்கள் சொன்னது போல், ஒருவேளை அதிகமான மக்கள் முதலில் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல விரும்பினர், அவர்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்காதபோது பின்னர் , ​​பொது மருத்துவமனைக்கு மிகவும் தாமதமாக திரும்பினர். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தில் இதை எப்படி சமாளிக்க திட்டமிட்டுள்ளீர்கள்?

ஏப்ரல்-மே மாதத்திற்குப் பிறகு, நாங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்ல ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினோம். அவர்கள் அதை 2020 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றின் போதும் மற்றும் 2021 இல் செய்தார்கள். மேலும், கோவிட் குறைந்துவிட்ட பிறகு, அடுத்து எந்த வகையான காய்ச்சல் வரும் என்று ஒவ்வொரு வீட்டிலும் ஆய்வு செய்ய களப்பணியாளர்களைப் பயன்படுத்தத் தொடங்கினோம். இரண்டு அல்லது மூன்று நாட்களாகக் கட்டுப்படுத்தப்படாத உங்களுக்கு ஏதேனும் காய்ச்சல் இருந்தால், நீங்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும், அங்கு நீங்கள் டெங்கு மற்றும் பல்வேறு வகையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவீர்கள். நோய்களுக்கான மருத்துவ வசதிகள் இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளது. விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நாங்கள் [களப்பணியாளர்களின்] சக்தியைப் பயன்படுத்தினோம் - அரசாங்கம் முழுமையாக தயாராக உள்ளது என்று அவர்களிடம் கூறி, உங்கள் எந்த நோய்க்கும் நீங்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். காசநோய் உண்மையைக் கண்டறிய நாங்கள் [களப்பணியாளர்களையும்] பயன்படுத்தினோம். ஆயுஷ்மான் பாரத் கார்டுகள் இல்லாதவர்களுக்காக நாங்கள் இதைப் பயன்படுத்தினோம்.

இரண்டாவது வழி என்னவென்றால், நமது அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களைக் கொண்டு, ஆரம்ப சுகாதார மையங்கள் (PHC) மற்றும் சமூக சுகாதார மையங்கள் (CHC) ஆகியவற்றில் சரியான மருந்துகள் மற்றும் ஆய்வகங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசாங்கத்தை சார்ந்திருப்பது நிறைய உள்ளது மற்றும் மக்கள் எங்களிடம் வரும்போது, ​​அவர்கள் [சுகாதார சேவைகளை] பெற முடியும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மாநிலத்தின் மக்கள்தொகை மிகப்பெரியது மற்றும் நம்மிடம் உள்ள [வசதிகளில்] நமது [பொது] உள்கட்டமைப்பு சுமார் 30-35% உள்ளடக்கியது. 65-70% மருத்துவமனைகள் தனியார் என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் ஆரம்ப மற்றும் சமூக சுகாதார மையங்களைச் சார்ந்து அரசு இருக்கிறது. ஒரு வருடத்தில் சராசரியாக, - நமது ஆரம்ப சுகாதார மையங்களில் இருந்து சமூக சுகாதார மையங்கள் முதல் மாவட்ட சுகாதார மையங்கள் வரை, சுமார் 10 கோடி வெளி நோயாளிகள் உள்ளனர் என்று நான் உங்களுக்கு சொல்ல முடியும். இன்று நாம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் மற்றும் துணை மையங்களின் [நெட்வொர்க்] உருவாகி வருகிறோம், அங்கு குறிப்பாக [குழந்தை] பிரசவத்திற்கான நமது நுட்பங்களை மேம்படுத்தப் போகிறோம். ஏனெனில் சுகாதாரத்துறையின் அடிப்படை முதன்மை நோக்கம் நமது குழந்தை இறப்பு மற்றும் பிரசவத்தில் தாய் இறப்பு ஆகியவற்றைக் குறைப்பதும் ஆகும்.

உ.பி.யில் சுமார் 103 மில்லியன் டோஸ் அல்லது 10.3 கோடி டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்ட உங்கள் மாநில மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80% ஏற்கனவே நோயெதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளன என்று செரோ பிரெவலன்ஸ் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, அது உங்களுக்கு ஆறுதலைத் தருகிறது, இல்லையென்றால், தொற்றுநோயைச் சமாளிக்க உங்கள் திட்டங்கள் என்ன?

நீங்கள் சொன்னது போல், கிட்டத்தட்ட 80% மக்கள், நோயெதிர்ப்பு சக்தி கொண்டுள்ளனர் மற்றும் இலக்காக வைத்துள்ள மக்கள் தொகையில் சுமார் 57.3% பேருக்கு முதல் தடுப்பூசியும், சுமார் 14-15% இரண்டாவது தடுப்பூசியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஐ.சி.எம்.ஆர் (ICMR) கண்டுபிடிப்பு என்னவென்றால், நீங்கள் ஒரு டோஸ் எடுத்தாலும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி 96.6%வரை உயரும். நோயெதிர்ப்பு நன்கு வளர்ந்திருப்பதால் அவர்கள் மிகவும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்பதை மக்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள், அதன்பிறகும் ஒவ்வொருவருக்கும் இரண்டாவது டோஸ் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நாங்கள் அவர்களை எங்கள் கால் சென்டரிலிருந்து -- சனிக்கிழமை இதற்காக ஒரு சிறப்பு நாள் நிர்ணயிக்கப்பட்டு- அழைக்கிறோம் மற்றும் அவர்களின் இரண்டாவது டோசுக்கு வரும்படி அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம், ஏனெனில் அது அவர்களுக்கு நீண்ட காலத்திற்கு கோவிட் தொற்றில் இருந்து சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். நேற்றுதான் நாங்கள் 36 லட்சத்து 88 ஆயிரம் டோஸ் செலுத்தி இருக்கிறோம். மேலும் ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 3 கோடியே 25 லட்சம் செய்துள்ளோம். எனவே எங்கள் இலக்கு 2021 டிசம்பர் மாதத்திற்குள் போதுமான தடுப்பூசிகளைப் பெற வேண்டும்; இந்த முழு மக்களுக்கும் தடுப்பூசி போடுவது. உங்களுக்குத் தெரிந்தபடி, ஐசிஎம்ஆர் இப்போது 12-18 வயதுடையவர்களுக்கு ஜைடஸ் காடிலா தடுப்பூசியை இறுதி செய்து வருகிறது.

ரியர்வியூ கண்ணாடியில், கோவிட் -19 உடன் நீங்கள் எதிர்நோக்கும் போது, ​​பொது சுகாதாரம் பற்றிய உங்கள் முக்கிய கவலைகள் என்ன?

அடிப்படையில், கோவிட் என்ன குறைபாடுகளைக் காட்டினாலும், நமது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். இப்போது உங்களுக்குத் தெரியும், திடீரென்று தொற்றுநோயின் மூன்றாவது கட்டம் வரக்கூடும் என்றும் அது 18 வயதிற்குட்பட்டவர்களைப் பாதிக்கலாம் என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது, ​​செரோ சர்வே மற்றும் இந்தியா முழுவதிலும் மற்றும் உபி யிலும் வேகமாக தடுப்பூசி போடப்பட்ட மக்கள்தொகை மூலம், மூன்றாவது அலைக்கான சாத்தியத்தை நாம் காணவில்லை. ஆனால் அந்த [பயம்] காரணமாக நாங்கள் சுகாதாரத் துறையை மேம்படுத்தினோம். குழந்தைகளுக்கான ஐசியூக்கள் தொடர்பான அனைத்து பாதுகாப்பு [நெறிமுறைகளையும்] நாங்கள் தொடங்கினோம் மற்றும் எங்கள் மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்து ஒவ்வொரு வகை அடிப்படை உள்கட்டமைப்பு - டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட், சிறிய ஐசியு, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் உருவாக்கும் ஆலைகள்-அமைக்கப்படுவதை உறுதி செய்தோம்.

உ.பி. மாநில பணியாளர் சேர்ப்பு வாரியம் மூலம் நாங்கள் ஏற்கனவே நிபுணர்களுக்கான ஒரு வார்த்தையை வைத்துள்ளோம். ஆர்வமுள்ள 1,000 பேருக்கு எங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இது சுகாதார மையங்களில் நிபுணர்கள் இருப்பதை உறுதி செய்யும்.

இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. 1947 மற்றும் 2017 க்கு இடையில், எங்களிடம் 12 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. எங்கள் முதல்வர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார், ஒன்பது ஏற்கனவே பிரதமரால் திறக்கப்பட உள்ளது. மேலும் 12 அல்லது 13 கட்டப்பட்டு, 16 மாவட்டங்கள், பாதுகாப்பு உபகரணங்களின் மாதிரியின் கீழ் செல்கின்றன, அதற்கான டெண்டர் எந்த நாளிலும் தொடங்கும். ஆக மொத்தத்தில் நாம் கிட்டத்தட்ட 45 மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றும் 100 இடங்களைக் கொண்டுள்ளன. இந்த அமைப்பு தொடங்கியவுடன், ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்தது ஐந்து வருடங்கள் வேலை செய்ய ஒப்பந்த முறையின் மூலம் மருத்துவர்களைப் பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால் டாக்டர்கள் பற்றாக்குறை இருக்காது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Next Story