ஊட்டச்சத்து பற்றாக்குறை இந்தியாவுக்கு பாதகம், தவிர நமக்கு எவ்வளவு என்று தெரியாது

ஊட்டச்சத்து பற்றாக்குறை இந்தியாவுக்கு பாதகம், தவிர நமக்கு எவ்வளவு என்று  தெரியாது
X

பெங்களூரு மற்றும் டெல்லி: இந்தியாவின் தேசிய ஊட்டச்சத்து-குறிப்பிட்ட திட்டங்கள் பல்வேறு சமூகக்குழுக்களை ஏறக்குறைய சமமாக அடைவதை தரவுகள் காட்டுகின்றன; எடுத்துக்கொள்ளுதல் மற்றும் வழங்குதலுக்கு இடையிலான அனைத்து குழுக்களுக்குமான வேறுபாடுகள் மிகச் சிறியவை. அடுத்தடுத்த தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளபடி, பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த அதிகமான மக்கள், ஊட்டச்சத்து குறைபாட்டில் உள்ளனர்.

தற்போதைய கோவிட்-19 நெருக்கடியின் போது, அமெரிக்காவிலும், பிரேசிலிலும் -- இந்தியாவைத் தவிர அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரு நாடுகள் -- சமூக அடையாளங்கள் மற்றும் சுகாதாரச்சேவைகளுக்கான அணுகல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, அதன்படி சமூக ரீதியாக பாதிக்கப்படக்கூடிய கறுப்பர்கள் மற்றும் பழங்குடி மக்கள் அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில், சாதி என்பது ஒரு தனிநபரின் சமூக அடையாளத்தின் மேலாதிக்க அம்சமாகும், அதேபோல் முக்கியமான சுகாதார மற்றும் ஊட்டச்சத்து சேவைகளுக்கான அணுகலை தீர்மானிக்க முடியும். ஆனால் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS) அறிக்கைகள் போன்ற அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இந்த விவரங்களை வழங்குவதில்லை. தேசிய, மாநில மற்றும் மாவட்ட அள்வில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் உட்பட - தனிப்பட்ட சமூகக்குழுக்களுக்கான ஊட்டச்சத்து திட்டங்களின் முடிவுகளைக் காட்டும் விவரங்கள் உடனடியாக படிக்கக்கூடிய அல்லது பயன்படுத்தக்கூடிய வடிவத்தில் வழங்கப்படவில்லை.

இத்தகைய பிரிக்கப்படாத தகவல்கள் கிடைக்கப்பெற்றால் -- ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள பட்டியல் சாதி குழுக்கள் எவ்வளவு குடிநீர் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் அறிந்திருந்தால், அல்லது ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்த எத்தனை பெண்கள் இரத்த சோகைக்கு ஆளானார்கள் என்பதை நாம் அறிந்துள்ளோமா என்பதை சொல்ல வேண்டும் -- எஸ்சி மற்றும் எஸ்டி ஆதிக்கம் செலுத்தும் மாவட்டங்களில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்லது எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த அதிகமான அங்கன்வாடி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற கொள்கை அளவிலான சீர்திருத்தங்களை செயல்படுத்த முடியும்.

பொதுத்தரவுகளில் உள்ள இடைவெளிகளைப் பற்றிய எங்கள் தொடரின் இந்த முதல் கட்டுரையில், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் ஊட்டச்சத்து அறிக்கைகளில் சமூக அடையாளத்தகவல் இல்லாதது, கொள்கை வகுப்பாளர்களுக்கும் மேம்பாட்டு கூட்டாளர்களுக்கும் ஊட்டச்சத்து திட்டங்களை உகந்ததாக வடிவமைத்து செயல்படுத்துவது, மோசமான ஊட்டச்சத்து குறிகாட்டிகளைக் கொண்ட ஓரங்கட்டப்பட்ட குழுக்களை குறிவைப்பதை எவ்வாறு கடினமாக்குகிறது என்பதை நாங்கள் ஆராயவுள்ளோம். இந்த குறைபாடுகளை ஆராய்வதையும் இது தடுக்கிறது, குறிப்பாக சமூக பின்தங்கிய குழுக்கள் மீது கோவிட்-19 தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட உலகளாவிய ஊட்டச்சத்து நெருக்கடியின் ஏற்றத்தாழ்வான தாக்கத்தை நிவர்த்தி செய்வது முக்கியமானது.

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சமத்துவமின்மை

கோவிட் -19 தொற்று பரவலுக்கு பல மாதங்களுக்கு முன்பே, மத்திய மற்றும் மேற்கு ஒடிசாவில் ஒரு சில மாவட்டங்களில் பயணம் செய்து, அரசு நடத்தும் ஊட்டச்சத்து சேவைகள் எவ்வாறு அணுகப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்காக, நாங்கள் பல பழங்குடி குக்கிராமங்களை பார்வையிட்டோம். அங்கு நாங்கள் கவனித்த முதல் விஷயம் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (NRHM) அங்கன்வாடி, மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இல்லாததை கண்டோம். சில மையங்கள் மக்களின் குடிப்புகளில் இருந்து 8 கி.மீ தூரத்தில் இருந்தன.

எங்களது கலந்துரையாடல்களின் போது, ​​அங்கன்வாடி தொழிலாளர்கள் பயணிக்க வேண்டிய தூரங்களைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பட்டியல் பழங்குடிப் பெண்கள், கிராம சுகாதார ஊட்டச்சத்து நாட்களில் தாய்வழி சுகாதார சேவைகளை அரிதாகவே பெற்றிருப்பதை கண்டறிந்தோம். பல எஸ்சி குடும்பங்களானது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு பற்றிய கதைகளை விவரித்தன, ஊட்டச்சத்தை அணுகுவதற்கான அவர்களின் அனுபவத்தை மிகவும் விரும்பத்தகாததாக ஆக்கியது என்று, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு காட்டியது.

ஊட்டச்சத்து நிறைந்த உணவு, கவனிப்பு நடைமுறைகள் மற்றும் அடிப்படை (‘ஊட்டச்சத்து-உணர்திறன்’) காரணிகள் போன்ற உடனடி (‘குறிப்பிட்ட ஊட்டச்சத்து’) காரணிகள்; வறுமை மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகல் போன்றவை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுகளை தீர்மானிக்கின்றன, இவை 193 நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை-2016 இல் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிகாரப்பூர்வ ஊட்டச்சத்து கணக்கெடுப்பான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS), தேசிய, மாநில அல்லது மாவட்ட அளவில் சமூக குழுக்களால் -- சாதி, பழங்குடி அல்லது மத அடையாளங்கள் போன்றவை-- பிரிக்கப்படாத பல உடனடி மற்றும் அடிப்படைக் காரணிகளின் தரவை வெளியிடவில்லை. அத்தகைய தரவு ஒன்றிணைக்கப்பட்ட இடங்களில், அவை பயன்படுத்தக்கூடிய வடிவத்தில் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை, இது திறனற்ற தன்மையை வெளிப்படுத்தக்கூடிய மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கான அணுகலை மேம்படுத்தக்கூடிய நெருக்கமான பரிசோதனையைத் தடுக்கிறது.

ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுகள்

எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்கள், பிற குழுக்களை விட ஊட்டச்சத்து விளைவுகளில் மோசமாக உள்ளன என்று, 2015-16 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 மட்டுமின்றி தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-2 (1998-99) மற்றும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-3 (2005-06) ஆகியன கண்டறிந்தன. எஸ்.சி மற்றும் எஸ்.டி குழந்தைகள் வளர்ச்சி குறைந்து மெலிந்து மற்றும் எடை குறைவுடன் உள்ளனர் மற்றும் எஸ்.டி குழந்தைகள் அனைத்து குழுக்களின் குழந்தைகளையும் விட அதிகமாக மெலிந்து காணப்படுவதாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 கூறுகிறது. அனைத்து குழுக்களின் பெண்களை விட அதிகமான எஸ்சி மற்றும் எஸ்டி பெண்கள் இரத்த சோகை கொண்டுள்ளனர்.

பிறந்த முதல் 1,000 நாட்களில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தேவைகள் முக்கியமானவை என்பது நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு மதிப்பீடின்படி, குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு (வயதைவிட குறைந்த உயரம்) என்பது, நீண்டகால ஊட்டச்சத்துக் குறைபாட்டின் ஒரு குறிகாட்டியாகும்; இது நீண்ட காலத்திற்கு போதிய ஊட்டச்சத்தை பிரதிபலிக்கிறது; மெலிந்து காணப்படுதல் (உயரத்திற்கேற்ற எடை இல்லாமை), கணக்கெடுப்புக்கு முந்தைய காலகட்டத்தில் போதிய ஊட்டச்சத்தை பிரதிபலிக்கும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் ஒரு குறிகாட்டியாகும்; மற்றும் எடை குறைபாடு(வயதிற்கு குரிய எடையில்லாமை), குழந்தைகளுக்கான கடுமையான மற்றும் நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டை மதிப்பிடும் உயரத்திற்கான வயது மற்றும் உயரத்திற்கான எடை ஆகியவற்றின் கலவையான குறியீடு ஆகும்.

எஸ்சி மற்றும் எஸ்டி குழந்தைகள் மத்தியில் வளர்ச்சிக்குறைபாடு முறையே 42.8% மற்றும் 43.8% என்ற அளவைக் காட்டுகின்றன, அதே நேரத்தில் அனைத்து குழுக்களும் ஒன்றாக 38.4% குறைவாக பதிவு செய்கின்றன, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 தெரிவிக்கிறது. இதேபோல், அனைத்து குழுக்களுடன் (35.8%) ஒப்பிடும்போது எஸ்சி (39.1%) மற்றும் எஸ்.டி (45.3%) குழந்தைகள் அதிக எடைகுறைபாடு கொண்டவர்கள். எஸ்சி குழந்தைகள் அனைத்து குழுக்களைவிட அதிகமாக மெலிந்து (21.2%) 21% ஆகவும், எஸ்.டி குழந்தைகள் 27.4% ஆகவும் உள்ளனர்.

பெண்களிடையே இரத்த சோகை போன்ற தாய்வழி ஊட்டச்சத்து விளைவுகளுக்கு, எஸ்சி மற்றும் எஸ்டி குழுக்கள் முறையே 55.9% மற்றும் 59.9% என்று, அனைத்து குழுக்களின் 53.1% என்ற அளவுடன் ஒப்பிடும்போது, அதிகபட்ச எண்ணிக்கையை காட்டுகின்றன.

ஊட்டச்சத்து குறுக்கீடுகளின் விளிம்புநிலை வேறுபாடு

ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கையாள்வது உடனடியாக இரண்டில் -- ட்டச்சத்து சார்ந்த, நுண்ணூட்டச்சத்து மற்றும் உணவு நிரப்புதல் மற்றும் குழந்தை பருவ நோய்களுக்கான சிகிச்சை போன்றவற்றில் --கவனம் செலுத்த வேண்டும் மற்றும் பெண்களின் கல்வியறிவு நிலைகள் மற்றும் திருமண வயது, சுகாதாரப் பாதுகாப்பு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்ற (ஊட்டச்சத்து உணர்திறன்) காரணங்கள் என்று தி லான்செட் மருத்துவ இதழில் 2013ம் ஆண்டின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் தேசிய ஊட்டச்சத்து-குறிப்பிட்ட திட்டங்கள் - நுண்ணூட்டச்சத்து மற்றும் உணவு வழங்கல் மற்றும் குழந்தை பருவ நோய்களுக்கு சிகிச்சையளித்தல் போன்றவை - பல்வேறு சமூக குழுக்களை கிட்டத்தட்ட சமமாக அடைவதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 கூறியது. எல்லா குழுக்களுக்கும் எடுத்துக்கொள்ள மற்றும் வழங்குவதில் உள்ள வேறுபாடுகள் மிகச் சிறியவை.

உதாரணமாக, 2015-16 ஆம் ஆண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் (IFA) மாத்திரைகளை எடுத்துக் கொண்ட அனைத்து தாய்மார்களின் விகிதமும் 30.3% ஆக இருந்தது; இது எஸ்சி பெண்களில் 28.6% மற்றும் எஸ்.டி பெண்களில் 26.8% என்று, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 கூறியது. வைட்டமின் ஏ-யானது அனைத்து குழுக்களில் இருந்தும் குழந்தைகளுக்கு 59.5% ஆக இருந்தது, எஸ்சி குழந்தைகளுக்கு 60% மற்றும் எஸ்.டி குழந்தைகளுக்கு 59.4% ஆகும்.

வயிற்றுப்போக்கு மற்றும் வாய்வழியே உட்கொள்ளப்படும் தண்ணீர் இழப்பை சரிசெய்யும் உப்பு (ORS) பெற்ற குழந்தைகளின் விகிதம் ஒட்டுமொத்தமாக 50.6% ஆக இருந்தது, இது எஸ்சி குழந்தைகளுக்கு 51.1% மற்றும் எஸ்.டி குழந்தைகளுக்கு 55.3% ஆகும். அனைத்து குழுக்களுடன் ஒப்பிடும்போது எஸ்சி மற்றும் எஸ்டி பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே துணை ஊட்டச்சத்து திட்டங்களுக்கான அதிகரிப்பை, பெண்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் உணவு வழங்கல் குறித்த தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4 தரவு காட்டுகிறது.

பல்வேறு சமூகக் குழுக்களுக்கிடையில் இந்த சிறிய வேறுபாடுகள் இருந்தபோதும், அதிகபட்சநிலை ஊட்டச்சத்து குறைபாடு எஸ்சி மற்றும் எஸ்டி மத்தியில் நீடிக்கிறது, இது சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான குடிநீர் போன்ற அடிப்படை ஊட்டச்சத்து நிர்ணயிப்பவர்களுக்கு தீர்வு காணத் தவறியதைக் காட்டுகிறது.

போதுமான தரவு இல்லை

உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்தின் அடிப்படை நிர்ணயம் -- ஊட்டச்சத்து குறுக்கீடுகளை வடிவமைக்கும்போது கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான முக்கிய குறிப்பு புள்ளி -- உணவுப் பாதுகாப்பு, பெண்களின் கல்வியறிவு நிலைகள், திருமண வயது, சுகாதாரம் & பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான அணுகல் ஆகியன அடங்கும்.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4 தரவை பற்றிய எங்கள் பகுப்பாய்வு வெவ்வேறு சமூகக் குழுக்களின் பெண்களின் கல்வியறிவு மட்டத்தில் ஆறு முதல் 15 சதவிகித புள்ளி வேறுபாட்டைக் காட்டுகிறது, எஸ்சி (62%) மற்றும் எஸ்.டி (53%) பெண்கள் மொத்த அனைத்து குழுக்களில் இருந்தும் பெண்களை விட குறைந்த அளவைக் காண்கின்றனர் ( 68.4%). வெவ்வேறு சமூகக் குழுக்களிடம் இருந்து குறைந்தபட்சம் 10ம் வகுப்பு கல்வி கற்ற பெண்களுக்கு இடையே ஏழு -15 சதவீத புள்ளி வேறுபாடு உள்ளது, எஸ்சி (28.2%) மற்றும் எஸ்.டி (20.2%) பெண்கள் மொத்த அனைத்து குழுக்களில் இருந்தும் (35.7%) பெண்களை விட மிகக் குறைந்த அளவில் உள்ளனர்.

எப்படிப்பார்த்தாலும் தாய்மார்களுக்கான சுகாதாரச்சேவைகள் மற்றும் வீட்டு வேலைவாய்ப்பு நிலை, வறுமை நிலை மற்றும் மின்சாரம், குடிநீர் மற்றும் துப்புரவு வசதிகள் ஆகியவற்றிற்கான பெண்களின் அணுகல் உள்ளிட்ட பிற அடிப்படை காரணிகளுக்காக அகில இந்திய அளவில் சமூக குழுக்களால் பிரிக்கப்பட்ட தரவுகளை தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அறிக்கைகள் வழங்கவில்லை.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அத்தகைய தரவுகளை சேகரிக்கும் அதே வேளையில், அது அதன் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் அவற்றை முன்வைக்கவில்லை. மூலத்தரவு தொகுக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்க சிறப்புமிக்க, விலையுயர்ந்த மென்பொருள் மற்றும் அணுகுவதற்கான தொழில்நுட்ப திறன் தேவைப்படுகிறது, இது பின்தங்கிய குழுக்களிடையே மோசமான ஊட்டச்சத்து விளைவுகளை ஏற்படுத்தும் சிக்கல்களைக் கண்டறிய பரந்த ஆய்வைத் தடுக்கிறது.

Missing Social Group-Wise Disaggregation Of Several Nutrition-Sensitive Indicators In National Family Health Survey Reports
Nutrition-sensitive indicator SCs STs All groups
Women who are literate 62.3 53 68.4
Women with at least 10 years of education 28.2 20.2 35.7
Households with access to electricity NA NA 88.2
Married before 18 NA NA 26.8
Households with improved sanitation NA NA 48.4
Households with improved drinking water NA NA 89.9
Households practising open defecation NA NA 38.9
Women not employed in the 12 months preceding the survey NA NA 69.7
Men not employed in the 12 months preceding the survey NA NA 19.2
All year employment NA NA 58.6
Seasonal Employment NA NA 35.9
Occasional Employment NA NA 5.4
Households having a BPL card NA NA 38.6

*Not available
Source: National Family Health Survey-4, International Institute for Population Sciences 2017
Note: Figures in percentage

மேலாதிக்க சமூக அடையாளம் சாதி, ஆனால் தரவில் சாதி பார்வையில்லை

இந்தியாவில், சாதி என்பது ஒரு தனிநபரின் சமூக அடையாளத்தின் மேலாதிக்க அம்சமாகும், மேலும் முக்கியமான சுகாதார மற்றும் ஊட்டச்சத்து சேவைகளுக்கான அணுகலையும் தீர்மானிக்க முடியும். ஒடிசாவில் எங்கள் கள அனுபவம் சாதி அடிப்படையிலான பாகுபாடு எஸ்சி / எஸ்டி சமூகங்களுக்கு அரசு சேவைகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதை குறிக்கிறது.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-3 கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்ட 2009 அறிக்கை உட்பட பல ஆய்வுகள், பொது சுகாதார சேவைகள் மற்றும் பள்ளி குழந்தைகளின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை அணுகுவதில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை சுட்டிக்காட்டுகின்றன, இது பின்தங்கிய சாதிகளை சேர்ந்த குழந்தைகளிடையே மோசமான ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் இறப்பு குறிகாட்டிகளுக்கு வழிவகுக்கிறது. சில சந்தர்ப்பங்களில், ஒரே கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் கொண்ட குழந்தைகளிடையே, எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் சுகாதார நிலை, உயர் சாதியினரிடம் இருந்து வந்தவர்களை விடவும் குறைவாக உள்ளது.

பின்தங்கிய சாதிகளில் இரத்த சோகையின் ஆபத்து அதிகமாக உள்ளது மற்றும் சாதி என்பது குழந்தை பருவ இரத்த சோகைக்கு ஒரு சுயாதீனமான தீர்மானிப்பதாகும் என்று, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-3 கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. வளர்ச்சி குறைபாடு அதிக அளவில் உள்ள இந்தியாவின் முதல் 10 மாவட்டங்களில், எஸ்சி அல்லது எஸ்.டி.களின் கணிசமான மக்கள் தொகை உள்ளது, இது சமூக அடையாளத்திற்கும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்கிறது என்று, மே 2018 இல் கண்டறியப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4 தரவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.

எவ்வாறாயினும், இந்தியாவின் அதிகாரபூர்வ தகவல்கள் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து சமத்துவத்தை அடைவதில் சமூக அடையாளத்தின் பங்கிற்கு போதுமான முன்னுரிமை அளிக்கவில்லை. பெரும்பாலான வலுவான தரவுத்தொகுப்புகள் பிரிக்கப்படுவதற்கான முக்கிய கேள்விகளைக் கேட்கவில்லை அல்லது பதிலளிப்பவர் அல்லது வீட்டு அளவிலான தரவை சரியான நேரத்தில் வெளியிடவில்லை என்று, ஜூன் 2014 இல் கண்டறியப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவித்தது. உதாரணமாக, தேசிய மாதிரி கணக்கெடுப்பானது சமூக அடையாளத் தரவை சேகரித்தது, அதாவது எஸ்சி மற்றும் எஸ்.டி.களில், ஜூலை 2011 மற்றும் ஜூன் 2012 க்கு இடையில் நடத்தப்பட்ட 68வது சுற்று ஊட்டச்சத்து விளைவுகளின் அடிப்படையில், ஆனால் அதன் கணக்கெடுப்பு அறிக்கையில் சாதி-பிரிக்கப்படாத தரவை முன்வைக்கவில்லை என்று ஆய்வுக் கட்டுரை குறிப்பிட்டது.

அதிகாரத்தில் இருப்பவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் திட்டம் வகுப்பவர்கள், சாதி அடிப்படையிலான தடைகள் மற்றும் ஊட்டச்சத்தில் இதுபோன்ற பிற சமூக மாறுபாடுகள் குறித்து மறந்துவிட்டனர் என்று, ஹைதராபாத்தில் உள்ள மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனமான தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் வீணா சத்ருக்னா எழுதினார். 1990ம் ஆண்டு வரை தேசிய ஊட்டச்சத்து கண்காணிப்பு பணியகம் ( NNMB) அறிக்கையானது, சாதி பார்வையில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். 1994 ஆம் ஆண்டில் சாதித் தரவு முதன்முதலில் தோன்றியபோது, எஸ்சி மற்றும் எஸ்.டி.களின் ஊட்டச்சத்து நிலை குறித்த முழுமையான விளக்கத்தை அது வழங்கவில்லை.

சமூக அடையாளத்தின் தாக்கம் குறித்த இலக்கியத்தைப் பற்றிய நமது சொந்த பகுப்பாய்வு, குறிப்பாக சாதி, சமூகக் குழுவால் பிரிக்கப்பட்ட தரவுகளின் பற்றாக்குறையை காட்டுகிறது; எடுத்துக்காட்டு, மதம் மற்றும் சாதி, இந்த குழுக்களிடையே ஊட்டச்சத்து அளவுகள் மற்றும் அவற்றின் தீர்மானிப்பவர்கள் பற்றிய புரிதலைக் கட்டுப்படுத்துகிறது.

பிரிக்கப்பட்ட தரவு மற்றும் கோவிட்-19

பல்வேறு நாடுகளில் இனம் அடிப்படையில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது கோவிட்-19 தொற்றுநோயின் சமமற்ற தாக்கம் குறித்து, ஜூன் மாதம் இண்டர்நேஷனல் ஜேர்னல் பார் ஈக்விட்டி அண்ட் ஹெல்த் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் ஆராயப்பட்டது. எவ்வாறாயினும், இந்தியாவின் முன்னோக்கு கோவிட்-19ன் பொருளாதார பாதிப்பை மட்டுமே குறிக்கிறது, சாதி போன்ற சமூக அடையாளங்களின் காரணமாக சமத்துவமின்மை குறித்து அல்ல.

கோவிட்-19 தொற்றுநோய் உலகளாவிய ஊட்டச்சத்து நெருக்கடியைத் தூண்டியுள்ளது, சுகாதார அமைப்புகளை சிரமத்திற்குள்ளாகி இருக்கிறது; அத்துடன் வழக்கமான ஊட்டச்சத்து சேவைகளில் இருந்து வளங்களை திசை திருப்புகிறது -- அதாவது பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, நுண்ணூட்டச்சத்து நிரப்புதல் மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை நிர்வகித்தல் போன்றவை -- கோவிட்-19 ஐ சமாளிக்க திருப்பிவிடப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைக்கும் தன்மை மற்றும் மலிவு ஆகியவற்றை உறுதி செய்வது மிகவும் கடினமாகிவிட்டது, வீட்டு வருவாய் குறைந்து, அதிகமான மக்கள் வறுமையில் தள்ளப்படுகிறார்கள். இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகளில் தொற்றுநோயின் தாக்கமானது அதிகளவில் தாய் மற்றும் குழந்தை இறப்புகளையும், மெலிந்து போதல் போன்ற அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று, ஜூலை மாதத்தில் தி லான்செட் இதழில் வெளியான ஆய்வு எச்சரித்துள்ளது.

(சைகல் மற்றும் ஸ்ரீவாஸ்தவா இருவரும், ஐபிஇ குளோபல் நிறுவனத்தின் மேம்பாட்டு ஆலோசகர்கள்; அவர்களது பணி, ஊட்டச்சத்து சமபங்கு மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story