தாய்-சேய் நலன் காக்க சான்று பெற்ற மகப்பேறு பணியாளர்களின் புதிய படையுடன் ஆயத்தமாகும் இந்தியா

X

கரீம் நகர் (தெலுங்கானா) மற்றும் டெல்லி: ஒரு நர்சாக நாங்கள் தாய்மார்களை நோயாளிகளாக கருதி வந்தோம்.மகப்பேறு பயிற்சியில் நாங்கள் கற்றுக் கொண்ட முதல் விஷயம், அவர்களை தாயாக கருத வேண்டும்; நோயாளியாக அல்ல என்பது தான்” என்று கூறும் 35 வயது ஜோதிர்மயி அகலா தேவி, ஒரு மகப்பேறு பயிற்சியாளராக பயிற்றுவிக்கப்பட வேண்டிய அனைத்தையும் பட்டியலிட்டார்.

தெலுங்கானா அரசு தொடங்கிய சிறப்பு திட்டமான மகப்பேறு பணியாளர் பயிற்சியில், முதல் குழுவில் இடம் பெற்ற அகலா தேவி, இந்தியாவில் மகப்பேறு குறித்து தொழில்சார்ந்த பயிற்சி பெற்றவர்களில் ஒருவராவார். 2018 நவம்பரில், கரீம் நகர் தாய்-சேய் நல மையத்தில் அவரை நாங்கள் சந்தித்த போது, மகப்பேறு குறித்த ஓராண்டு பயிற்சியை முடித்திருந்தார்.

நாட்டில் மகப்பேறு பயிற்சியாளர்களை அறிமுகப்படுத்துவதற்கு இந்தியா தயாராக இருப்பதால், இந்த திட்டம் தற்போது நெருக்கமாக ஆய்வு செய்யப்படுகிறது. மகப்பேறு பணியாளர் சேவை குறித்த வழிகாட்டுதல்களை இந்திய அரசு அறிவித்துள்ளது; இதில் உலக சுகாதார அமைப்பின் (WHO) தாய்-சேய் மற்றும் குழந்தை நலனுக்கான உலகளாவிய மன்றம் பார்ட்னர்ஸ் போரம் (Partners' Forum), 2018 டிசம்பரில் டெல்லியில் வழங்கிய பயிற்றுவிப்பு பயிற்சி மற்றும் சான்றிதழ் பரிந்துரைகளும் அடங்கும். இந்த முன்னேற்றம், சர்வதேச அழுத்தத்தை தொடர்ந்து நிகழ்ந்துள்ளது; இந்தியாவின் தாய்-சேய் நல சுகாதாரக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை பிரதிபலிக்கிறது.

"இது நாட்டிற்காக ஒரு விளையாட்டு மாற்றீடாக மாறும்," என்று தெரிவித்த மத்திய சுகாதார மற்றும் குடும்பநல நலத்துறை அமைச்சரகத்தின் தாய்-சேய் நலத்துறை துணை ஆணையாளர் தினேஷ் பஸ்வால் “தாய்-சேய் இறப்பு குறைக்கும் பணியை நாம் முடுக்கிவிட வேண்டும்; இதை ஒரு பயனுள்ள தலையீடாக நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.

மகப்பேறு பணியாளர்கள், அதிகம் இல்லாத இரண்டாம்மற்றும் மூன்றாம் நிலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல், குழந்தை மற்றும் தாய்வழி ஆரோக்கியத்துடன் தொடர்புடைய இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளை எதிர்கொள்ள உதவுவார்கள். "இது பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துகிறது; பெண்களுக்கு நேர்மறையான பிரசவ அனுபவத்தை தர உதவுகிறது," என்று பாஸ்வால் கூறினார்.

உலக அளவில் மகப்பேறு பணியாளர்கள் பிரசவத்தின் போது உயிர்களை காப்பாற்றவும், கர்ப்ப காலத்தில் சிறப்பாக பராமரிப்பு செய்பவர்களாகவும் அறியப்படுகிறார்கள் - தங்களின் சிறப்பான பராமரிப்பால் பிரசவ காலத்தில் 83% தாய் மற்றும் சேய் மரணங்களை மகப்பேறு பணியாளர்களால் தடுக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தரவுகள் தெரிவிக்கின்றன.

கர்ப்ப காலத்தின் போது பெண்களை மகப்பேறு பணியாளர்கள் நன்கு கவனித்து பராமரிப்பு வழங்குபவர்களாக இருந்தபோது, பெண்களுக்கு முதிர்வற்ற குழந்தை பிறப்பது அல்லது கருவுற்ற 24 வாரங்களுக்கு முன் குழந்தைகளை இழப்பது குறைந்துள்ளது என்று, உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மகப்பேறு பணியாளர் பராமரிப்பில் உள்ள பெண்ணுக்கு குறைந்த ஈரப்பதம், குறைந்த குறைபிரசவம், குறைந்தளவு பிறப்புறுப்பு திறப்பு, குறைந்தளவே சிசேரியன் வாய்ப்புகள் உள்ளன.

அதிகளவில் சிசேரியன் பிரிவுகள்

தெலுங்கானா அரசு 2017 அக்டோபரில் இந்தியாவின் முதல் மகப்பேறு மருத்துவ பயிற்றுவிப்பாளர் பாடத்திட்டத்தை கரீம்நகர் மாவட்டத்தில் தொடங்கியது. இரு ஆண்டுகளுக்கு பின் 2019ஆம் ஆண்டு மத்தியில், அகலாதேவி மற்றும் 29 பிற பெண்கள், மகப்பேறு சான்றிதழ் பட்டம் பெற்று, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனை தாய்-சேய் நல மையங்களில் பணி புரிவார்கள்.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள தாய்-சேய் நல மையத்தில் பயிற்சி பெறும் பயிற்சி மகப்பேறு பணியாளர்கள். 2017 அக். மாதம் இந்தியாவின் முதலாவதாக மகப்பேறு மருத்துவ பயிற்றுவிப்பாளர் திட்டத்தை மாநில அரசு கரீம்நகர் மாவட்டத்தில் தொடங்கியது.2019ஆம் ஆண்டு மத்தியில் 30 பெண்கள் அரசு மருத்துவமனை தாய்-சேய் நல மையங்களில் பணி புரிவார்கள்.

இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு கரீம்நகர் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு பின்வரும் தகவல்கள் உள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக தெலுங்கானாவில் தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகளவில் நடக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் 74.9%, அரசு மருத்துவமனைகளில் 40.3% என்றளவில் இது உள்ளதாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (2015-2016) தெரிவிக்கிறது. உலகளவில் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, 10-15% என்பது "சிறந்த விகிதம்" என்று கருதப்படுகிறது,

சிசேரியன் பிரசவம் என்பது உலகம் முழுவதும் பொதுவானதாகி வந்தாலும் கரீம் நகர், ஆபத்தான அளவாக 80% சிசேரியன் பிறப்பு பதிவை கொண்டிருக்கிறது.

பி.நந்தினி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய விவரம் இதிய விளக்குவதாக உள்ளது.

நந்தினி 25 வயதுடைய கணக்காளர். கரீம்நகரில் உள்ள லட்சுமிபூர் கிராமத்தை சேர்ந்த அவர், இரண்டு பேருக்கு தாய். அவரது இரண்டு குழந்தைகளும் சிசேரியன் மூலம் பிறந்தவர்கள். அவரது தாய் 42 வயதான நிர்மலாவும், சிசேரியன் மூலம் குழந்தைகளை பெற்றவர். இவர்கள் குடும்பத்தில் சாதாரண பிரசவம் மூலம் குழந்தை பெற்றவர், நந்தினியின் பாட்டி பூதேவி மட்டுமே.

“என் காலத்தில் வேறு மாதிரி இருந்தது. தற்போது எல்லோருமே சிசேரியன் பிரசவம் என்கிறார்கள்” என்று தற்போது 70 வயதாகும் பூதேவி, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். “ஏன் இவ்வாறு மாறிவிட்டது என்று எனக்கு தெரியவில்லை” என்றார்.

கடந்த 2016 உடன் முடிந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சிசேரியன் பிரசவங்கள் 9%ல் இருந்து 18.5% ஆக அதிகரித்துள்ளது என்று, 2018 டிசம்பர் 22ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. சிசேரியன் பிரிவு, உலகளவில் ஒரு பேறுகால சுகாதார கவனிப்பு அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது: சிசேரியன் பிரிவு விகிதங்கள் மக்கள்தொகையில் 10% எனும் போது பிரசவத்தில் தாய் அல்லது சிசு இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இந்த விகிதம் 10% என்பதற்கு மேல் - இந்தியாவை போல்- தாய் அல்லது பிறந்த சிசு இறப்பு விகிதம் முன்னேற்றம் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று உலக சுகாதார அமைப்பின் ஆய்வு அடிப்படையில் 2017 பிப்ரவரி 10ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

மகப்பேறு பணியாளர்களை கொண்டு வருவதே தீர்வுகளில் ஒன்று என்று வல்லுனர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இது சிசேரியன் பிறப்பு விகிதத்தை குறைக்கும்; பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் தேவையற்ற அபாயங்களை தடுக்கும்; ஒட்டுமொத்த தாய்-சேய் நலன் மேம்படும் என்று உலகளாவிய ஆதாரங்கள் காட்டுகின்றன.

மகப்பேறு பணியாளர்கள் எவ்வாறு உதவ முடியும்?

மகப்பேறு பணியாளர் தலைமையிலான தாய்மை பராமரிப்பு என்பது மரியாதைக்குரிய கவனிப்பு, கண்ணியம், தனியுரிமை மற்றும் இரக்கம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டது.

“நான் இந்த படிப்பில் சேர்ந்த போது பிரசவம் பற்றி புதியதாக என்ன கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று நினைத்தேன். மரியாதைக்குரிய பேறுகால கவனிப்பு பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. இப்போது கர்ப்பிணிகளுக்கு ஆபத்து ஏதும் இல்லாதபட்சத்தில் சாதாரண பிரசவத்தை தேர்வு செய்யுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். பிரசவ பெண்ணிய தொடர்பு கொண்டு, அவரது நம்பிக்கையை ஏற்படுத்தி, இது பற்றி தெரியப்படுத்தி, அவரது விருப்பத்தின் பேரில் தான் மேற்கொள்கிறோம், "என்று அகலாதேவி கூறினார்.

தெலுங்கானாவின் கரீம் நகரில் உள்ள தாய்-சேய் நல விடுதியில் பிரசவித்த தாய் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கிறார். தாய்மை பராமரிப்பு என்பது மரியாதைக்குரிய கவனிப்பு, கண்ணியம், தனியுரிமை, இரக்கம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.

தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்ட தாய்-சேய் நல மையத்தில் 14 ஆண்டுகளாக செவிலியராக இருந்து வரும் அகலாதேவி, மகப்பேறு பணியாளர் சான்றிதழ் படிப்பு பற்றி தெலுங்கு நாளிதழில் விளம்பரத்தை பார்த்துள்ளார். 2018 டிசம்பர் கடைசி இரண்டு வாரங்களில், ஓராண்டு பயிற்சியை முடித்து இப்போது பயிற்சி பேறுகால பணியாளராக பணியை தொடங்கியுள்ளார். தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்ட தாய்-சேய் மையத்தில் ஏற்கனவே 12க்கும் மேற்பட்ட பிரசவங்களில் உதவிய அனுபவம் அவருக்கு உண்டு.

"பயிற்சி வேலை தொடங்கியதில் இருந்து நாளொன்றுக்கு ஒரு பிரசவம் வீதம் நான் உதவி செய்திருக்கிறேன்," என்று அகலாதேவி, இந்தியா ஸ்பெண்ட்டிடம் கூறினார்; "ஆரம்பத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் எங்களை தொழிலாளர் அறையில் பார்த்து சந்தோஷப்படவில்லை. இதை நாங்கள் துரதிருஷ்டவசமாக உணர்ந்தோம்; ஆனால் தாய்மார்களிய நாங்கள் கவனித்துக் கொண்ட முறையை பார்த்து, பிரசவ பராமரிப்புகளுக்கு நாங்கள் தேவைப்படுவதாக டாக்டர்கள் கூறினர்” என்றார் அவர்.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் மருத்துவமனை பிரசவங்கள் குறித்து ஒரு தனித்துவமான வலியுறுத்தல் இருந்தது; ஆனால் தாய்மார்களின் பாதுகாப்பு தரம் பற்றிய பேச்சும் கொஞ்சம் எழுந்தது. இந்தியாவில் மருத்துவமனை பிரசவங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, மனிதாபிமான பிரசவத்துடன் தொடர்புடையது. எனவே பெண்கள் கண்ணியமாகவும் தன்னாட்சி கொண்ட தனிநபர்களாகவும் செல்ல முடியும்.

இந்த காரணத்திற்காக, தொழிலாளர் அறைகளில் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்த ஏதுவாக, மத்திய சுகாதார அமைச்சகம், 2018ஆம் ஆண்டில் ‘லக்ஷயா’ (LaQshya) என்ற ஒரு திட்டத்தை தொடங்கியது.

தாய்-சேய் சுகாதார நலங்கள், குறியீடுகளை மேம்படுத்தும் ஒரு நாடு என்ற போதும், மகப்பேறு பணிகளை தொழில் முறை பிரிவாக கொண்டுள்ள இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பின்னால் இந்தியா குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தகுதிவாய்ந்த சுகாதார வல்லுநர்களாக மகப்பேறு பணியாளர்களை பற்றி கொஞ்சம் விழிப்புணர்வு உள்ளது; பாரம்பரிய முறையில் பிரசவம் பார்ப்பவர்கள் (dais), மகப்பேறு துணை செவிலியர் (ANMs), அல்லது பதிவு செய்யப்பட்ட செவிலியர் மற்றும் பதிவு செய்யப்பட்ட பேறுகால பணியாளர் (RNRM) என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியா இதுவரை பயிற்றுவிப்பாளர்களை அங்கீகரிக்கவில்லை; அதன் மகப்பேறு துணை செவிலியர்கள், மற்றும் பதிவு செய்யப்பட்ட செவிலியர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மகப்பேறு பணியாளர்களுக்கு நர்சிங் பயிற்சி மூலம் மட்டுமே மருத்துவ பயிற்சி அளிக்கிறது.

ஒரு சான்றிதழ் பெற்ற மகப்பேறு பணியாளர் -உலக அளவில் ஏற்கப்பட்ட சூழல்; அதாவது ஐரோப்பாவில் 75% பிரசவங்கள் மகப்பேறு பணியாளரால் நடக்கிறது- மகப்பேறு பணியாளர் தரநிலை சர்வதேச மாநாடு அடிப்படையில், தாய்-சேய், பேறுகால கல்வித்திட்டத்தை நிறைவுசெய்த ஒருவர், தேவையான தகுதிகளை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்து, மருத்துவப்பயிற்சி பெற உரிமம் பெற்றவர் ஆவார்.

“மகப்பேறு மருத்துவத்தில் எந்த முன்னேற்றமும் செய்யாத சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நீண்ட காலமாக இதை கருத்தில் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது அதன் வேகம் அதிகரித்துள்ளது," என்று பாஸ்வால் கூறினார். மேற்கு வங்கத்திலும், குஜராத்திலும் மகப்பேறு மருத்துவ பயிற்சி தொடர்பாக முன்பு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

இந்தியாவின் மருத்துவப் பயிற்சிக்கான புதிய வழிமுறைகள் 2018 டிசம்பரில் வெளியிடப்பட்டன. அதில் மகப்பேறு மருத்துவ பயிற்சி செவிலியர் (NPM) என்ற பிரிவு ஏற்படுத்தப்படும்; அது சர்வதேச மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கான தரத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. மகப்பேறு பயிற்சி செவிலியர், 18 மாத பயிற்சிக்கு பிறகு, பதிவு பெற்ற மகப்பேறு பணியாளராக இருப்பார்.

அசாம், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம் ஆகிய ஐந்து இடங்களில் மண்டல அளவிலான மகப்பேறு மருத்துவப் பயிற்சி நிறுவனங்கள் (என்.பி.எம். களுக்கான பயிற்சி தர) அமைக்கப்பட உள்ளன. "முதலில் அனைத்து கர்ப்பிணி பெண்களும் பொது சுகாதார மையங்களில் நிறுவப்படும் மகப்பேறு மருந்தியல் கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்படுவர்," என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தாய்-சேய் நலத்துறை தலைமை ஆலோசகர் சலிமா பாட்டியா கூறினார்.

நன்கு பயிற்சி பெற்ற மகப்பேறு பணியாளர் குழுவை உருவாக்க, என்.பி.எம்.க்கள் பயிற்றுவிக்க நன்கு அனுபவமுள்ள மகப்பேறு பேராசிரியர்கள் கற்பிப்பது முக்கியம். வங்கதேசத்தின் மாதிரி வரம்புகளில், தகுதி வாய்ந்த மருத்துவ பயிற்றுவிப்பாளர்களுக்கு பற்றாக்குறை உண்டானது. இந்தியா, தேசிய அளவிலான மகப்பேறு மருத்துவம் கற்பிக்கும் பயிற்சி நிறுவனத்தை உருவாக்கவும், அதில் தரமான பயிற்றுனர்களை உருவாக்கும் பொருட்டு சர்வதேச கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வல்லுநர்களை கொண்டு பயிற்றுவிக்கவும் திட்டமிட்டுள்ளது.

"இந்தியாவுக்கு நூறாயிரக்கணக்கான மகப்பேறு மருத்துவ பணியாளர்கள் தேவைப்படும்; ஆனால் அது சாத்தியமற்றது. மருத்துவமனை பிரசவ ஊக்கம் எவ்வாறு வெற்றிகரமாக உள்ளது என்பதை நாங்கள் கண்டோம்" என்று இந்தியாவில் குடும்பநல பணியாளர் சங்க நிறுவனரும், மகப்பேறு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வரும் ஆன்ஸர்ஸ் அறக்கட்டளைளையை நடத்தி வருபவருமான மவரப்பு பிரகாசம்மா தெரிவித்தார்.

முன்னே வழி

மகப்பேறு மருத்துவ பயிற்றுவிப்பை இந்தியா முன்னெடுத்துள்ள நிலையில் தெலுங்கானா மாதிரியானது ஒரு முக்கியமானதாக இருக்கும். தெலுங்கானா மாநிலம் மகப்பேறு பணியாளர்களுக்கு 126 புதிய இடங்களை உருவாக்கி,18 மாத பயிற்சி (ஓராண்டுக்கு ஒருங்கிணைந்த வகுப்பு பயிற்சி மற்றும் ஆறு மாதங்கள் மருத்துவமனையில் பயிற்சி) முடித்த செவிலியர்களை இப்பணியில் அமர்த்தி, அவர்களுக்கு ரூ.15,000 கூடுதலாக வழங்குகிறது. இத்திட்டம் ஒரு பொது-தனியார் கூட்டாக உருவாக்கப்பட்டது. மாநில அரசு இதில் யுனிசெப் (UNICEF) மற்றும் 2011 முதல் தொழில் ரீதியாக இந்தியாவில் மகப்பேறு பணிப்பயிற்சி அளித்து வரும் ஐதராபாத்தை சேர்ந்த பெர்னாண்டஸ் மருத்துவனை ஆகியவற்றின் உதவியை நாடியது.

"ஒவ்வொரு பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்ய நாட்டில் தொழில்முறை மகப்பேறு பணியாளர்களை ஈடுபடுத்துவது சில தசாப்தங்களுக்கு முன்பே இருக்கும்" என்று, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எவிதா பெர்னாண்டஸ் தெரிவித்தார். "தற்போதைய வழிகாட்டுதல்கள் மகப்பேறு பணியாளர்களை நேரடியாக அனுமதிக்காது; செவிலியர் மட்டுமே இதை படிக்க தகுதியுள்ளவர்கள். இந்தியாவில் போதிய செவிலியர்கள் இல்லை; எனவே, நேரடியாக இதற்கு அனுமதிப்பது சிறப்பானது; ஆனால் குறைந்தபட்சம் ஒரு ஆரம்பம் தொடங்கப்பட்டது" என்றார் அவர்.

மகப்பேறு பணியாளர் வேலை, நிறுவன ஆதரவு வழங்குவதோடு பெண்கள் ஒரு புதிய தொழிலில் இறங்க அனுமதிக்கிறது, தங்கள் திறன்களை மேம்படுத்த மற்றும் நங்கு சம்பாதிக்க வேலைகளிய உருவாக்குகிறது. ஒரு செவிலியராக பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமுள்ள அகலா தேவி கூறுகையில், "இந்த பாடத்திட்டம் என்னை சிறப்பாக வடிவமைக்க உதவியது, என் வேலையை சிறப்பாக செய்ய உதவுகிறது. செவிலியர் என்பது என் தொழில்; மகப்பேறு பணியாளர் என்பது என் அழைப்பு” என்றார்.

(குமார், டெல்லியை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர் ஆவார்).

இக்கட்டுரை, பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிதி பெறப்படும் ஐரோப்பிய பத்திரிகை மையத்தின் மானிய உதவியோடு அளிக்கப்பட்டுள்ளது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story