2025 ஊட்டச்சத்து இலக்குகளுக்கான பாதையில் இந்தியா இல்லை; அல்லது 2030க்குள் பட்டினியை ஒழிக்க வேண்டும்

X

பாங்காக்: உணவு பாதுகாப்பு மற்றும் அணுகுதல் அதிகரிப்பால், இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை நோயாளிகளின் எண்ணிக்கை, முந்தைய பத்தாண்டுகளுன் ஒப்பிடும்போது குறைந்துள்ளன; எனினும், இந்தியா அதன் ஊட்டச்சத்து இலக்கை எட்ட, இன்னும் நிறைய செய்ய வேண்டும் என, 2018 உலக ஊட்டச்சத்து அறிக்கை - ஜி.என்.ஆர். (GNR 2018) தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒன்பது ஊட்டச்சத்து இலக்குகளான குழந்தையின் அதிக எடையை குறைத்தல், மெலிதல், வயதுக்கேற்ற வளர்ச்சியின்மை, பெண் -ஆண் இடையே நீரிழிவு, வீக்கம் குறைப்பு, குறைபாடான முதிர்ச்சி, பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் இனப்பெருக்க வயதில் உடல் பருமன் மற்றும் பெண்களுக்கு ரத்த சோகை, பிரத்தியேக தாய்ப்பால் அதிகரித்தல் ஆகியவற்றை, 2025ஆம் ஆண்டில் அடைதல் என்ற பாதையில் இந்தியா இல்லை என்று, அந்த அறிக்கை கூறுகிறது.

உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள், 2012 மற்றும் 2013-ல், அனைத்து வகையான ஊட்டச்சத்து குறைபாடுகளையும் 2025 ஆம் ஆண்டுக்குள் குறைக்க, ஒன்பது இலக்குகளை ஏற்றுக் கொண்டன.

ஐந்தாவது அறிக்கை, ஜி.என்.ஆர்.-ன் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகளை உள்ளடக்கிய சுதந்திர நிபுணர் குழு தொகுத்த அறிக்கையாகும். 2018 நவ.29-ல் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடந்த ‘பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு முடிவு’ என்ற தலைப்பிலான மாநாட்டில் வெளியிடப்பட்டது. இம்மாநாட்டை, சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) இணைந்து நடத்தின.

குழந்தை வளர்ச்சி குறைபாட்டை போக்குவதில் இந்தியா முன்னேற்றத்தை கண்டாலும், நாட்டில் 5 வயதுக்குட்பட்ட வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை 46.6 மில்லியன் ஆக உள்ளது; இது 30.9% என்ற உலகின் மிக அதிகபட்ச விகிதத்தை கொண்டுள்ளது.

ஆயினும், உலகளாவிய மற்ற ஆறு ஊட்டச்சத்து இலக்குகள் அல்லது அளவீடுகளில் இந்தியா முன்னேற்றத்தை காட்டவில்லை. (இரண்டு இலக்குகள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை).

ஊட்டச்சத்து தொடர்பான ஒன்பது இலக்குகளுக்கான பாதையில், உலகின் 194 நாடுகளில் 94 மட்டுமே உள்ளதாக, அந்த அறிக்கை கூறுகிறது. “(உலக அளவில்) வளர்ச்சி குறைபாட்டை குறைப்பதில் முன்னேற்றம்; பெண்களுக்கு ரத்த சோகை மற்றும் எடை குறைபாட்டை போக்குவது மெதுவாகவும், உடல் பருமனை கட்டுப்படுத்துவதில் மோசமான நிலையும் இருக்கிறது” என்று, அறிக்கையின் இணைத்தலைவரும், உணவு கொள்கை மையத்தின் இயக்குனருமான கொரினா ஹாக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு குறைகிறது; ஆயினும் உலகச்சுமையில் 23.8%ஐ தாங்கி நிற்கிறது

இந்தியாவில், 2015-17ஆம் ஆண்டில், 195.9 மில்லியன் பேருக்கு ஊட்டச்சத்து குறைவு - அல்லது நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு- உள்ளது. இது, 2005-07ஆம் ஆண்டில் 204.1 மில்லியன் என்பதைவிட குறைவுதான் என, உணவு மற்றும் வேளாண் அமைப்பு எப்.ஏ.ஒ. (FAO) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஊட்டச்சத்து பாதிப்பு 2005-07 ஆம் ஆண்டில் 20.7% என்பது, 2015-17 ஆம் ஆண்டில் 14.8% ஆக குறைந்துள்ளது.

இருப்பினும், உலகளவில் ஊட்டச்சத்து குறைபாட்டில் இந்தியாவில் 23.8% பேர் உள்ளனர். மேலும் உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களில், சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என எப்.ஏ.ஒ. அறிக்கை கூறுகிறது.

2015 ஆம் ஆண்டில், இந்தியா உட்பட அனைத்து உலக சுகாதார அமைப்பு உறுப்பினர்களும் ஐ.நா.வின் 17 உறுதியான வளர்ச்சி இலக்குகளை ஏற்றுக் கொண்டனர். இதில், 2030ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் அளவில் பசியின்மை அல்லது பூஜ்ஜியம் நிலை ஊட்டச்சத்து குறைபாடு என்பது அடங்கும்.

வரும் 2030 க்குள் பூஜ்யம் நிலை பசியற்றவர்கள் என்னும் இலக்கை எட்ட, தினமும் 48,370 பேரை கண்டறிந்து உயர்த்த வேண்டும் என்று, இந்தியா ஸ்பெண்ட் பகுபாய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் இருந்து 2017க்குள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை, 3.9 மில்லியன் ஆகும்; இது, நாளொன்றுக்கு ஏறத்தாழ 10,685 நபர்கள் - அதாவது, 2030 ஆம் ஆண்டுக்குள் இலக்கை அடைவதில் நான்கில் ஒரு பங்கிற்கு குறைவாகும். 2006- 2008ஆம் ஆண்டுகளில்,15.2 மில்லியன் என, ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் வெகுவாக குறைந்தது. இந்தியாவில் தினமும் 41,644 பேர் மட்டுமே பசியில் இருந்து காப்பற்ற முடியும்.

உலகளவில் அதிகரிக்கும் பட்டினி

2017ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 821 மில்லியன் பேர் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டனர். இது, 2016-ல் 804 மில்லியனாகவும், எட்டு ஆண்டுகளுக்கு முன் சம நிலையிலும் இருந்தது. உலகளாவிய ஊட்டச்சத்து குறைபாட்டை முடிவுக்குக் கொண்டு வரும் இலக்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என, எப்.ஏ.ஓ. மற்றும் ஐ.எப்.பி.ஆர்.ஐ. இணைந்து, பாங்காக்கில் 2018, நவ.27ல் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. “தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, பட்டினிக்கு எதிரான முன்னேற்றங்கள் தேங்கி நின்றது; தற்போது இது பின்னோக்கி செல்கிறது” என, ஐ.எப்.பி.ஆர்.ஐ. இயக்குனர் ஷெங்கன் பென் தெரிவித்தார்.

ஆப்ரிக்காவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகளவில் உள்ளனர்- அதாவது மொத்த மக்கள் தொகையில் 21% பேர். தென் ஆப்ரிக்காவில் நிலைமை மோசமடைந்து வருகிறது; ஊட்டச்சத்து குறைபாடு குறைவது மந்தமாகிவிட்டது என, எப்.ஏ.ஓ. உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த 2018 உலக அறிக்கை தெரிவிக்கிறது.

மோதல்கள், காலநிலை மாற்றங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவை ஊட்டச்சத்து குறைபாடு உலகளவில் அதிகரிக்கும் போக்குக்கான முக்கிய காரணங்கள் என, எப்.ஏ.ஓ. அறிக்கை தெரிவித்துள்ளது.

"வியாபாரம் வழக்கம் போல் போக முடியாது," என, எப்.ஏ.ஓ. உதவி இயக்குனர் கோஸ்டாஸ் ஸ்டாமொலிஸ், பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார். "பூஜ்யம் நிலை பட்டினி என்ற இலக்கை அடைவதற்கு இன்னும் 12 வருடங்களே உள்ளன (2030 க்குள்); ஒவ்வொரு நாளும் பசியால் பாதிக்கப்படும் 1,85,000 பேரை நாம் மேலேதூக்கி காப்பற்ற வேண்டும். எனவே நாம் வேகமாக செல்ல வேண்டும்” என்றார் அவர்.

ஊட்டச்சத்து குறைபாடு போக்குவதில் இந்தியாவுக்குள்ள சவால்கள்

2017ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக இறப்புக்கு முக்கிய காரணியாக ஊட்டச்சத்து குறைபாடு இருந்தது; அடுத்து ஆரோக்கியமற்ற உணவு முறை என்று, வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் 2017 உலகளாவிய நோய்ச்சுமை என்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன் ஒப்பிடும் போது, 2015-16ல் பார்வை குறைபாடு மற்றும் அதிக எடை பிரச்சனை 9.6 மற்றும் 8% என முறையே ஆண், பெண்களிடையே அதிகரித்தது. 2016-ல் ஏற்பட்ட அனைத்து இறப்புக்களில் 61% க்கு தொற்றா நோய்கள் காரணமாக இருந்தன.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்களைத் தடுப்பதற்கு முந்தைய தலையீடுகளில் ஒன்று தாய்ப்பால் புகட்டுதலாகும்; இன்னும் இந்தியாவில் 54.9% குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் புகட்டப்படுகிறது. பிறந்த முதல் மணி நேரத்தில் பால் புகட்டப்படும் குழந்தைகள் 41.6% என்று, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை-4 (2015-16) தெரிவிக்கிறது. நாட்டில் 10% குறைவான குழந்தைகளே ஊட்டச்சத்து பெறுகின்றனர் என அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.

மேலும், 2020 ஆம் ஆண்டில் பொட்டல உணவுக்கான உலகின் மூன்றாவது பெரிய சந்தையாக இந்தியா இருக்கும்; இந்தியாவின் ஒன்பது முன்னணி நிறுவனங்கள் விற்பனை செய்யும் பானங்களில் 12%, பொட்ட உணவுப்பொருட்களில் 16% மட்டுமே “அதிக ஊட்டச்சத்து தரம்” கொண்டுள்ளன என, ஊட்டச்சத்து குறியீட்டு அணுகல்அமைப்பான, இந்தியா ஸ்பாட்லைட் 2016 அறிக்கை கூறுகிறது.

ஊட்டச்சத்து விகிதம் சரிவதை தடுக்க இந்தியா தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பெண்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதை நோக்கமாக கொண்டு, போஷன் அப்யான் - தேசிய ஊட்டச்சத்து திட்டம் 2018 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இனிப்பு பானங்கள் மீது சர்க்கரை வரி விதிக்கும் 59 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என, ஜி.என்.ஆர். 2018 தெரிவிக்கிறது. 2017ஆம் ஆண்டில் பானங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 32%-ல் இருந்து 40% ஆக மத்திய அரசு உயர்த்தியது.

எனினும், 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகையான ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்குவதில் முன்னேற்றத்தை அதிகரிக்கவும், 2030 ஆம் ஆண்டில் பூஜ்யம் நிலை பட்டினி எனும் இலக்கை தொடவும், எங்கிருந்தாவது வெற்றிகளை இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்.

வங்கதேசம், பிரேசில், சீனாவிடம் இந்தியா பாடம் கற்க வேண்டும்

பொதுக் கொள்கைகள், விவசாய ஆராய்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் கலவையானது பல நாடுகளில் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வழிவகுத்துள்ளது. சீனா, எத்தியோப்பியா, வங்கதேசம் மற்றும் பிரேசில் நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை, ஜி.என்.ஆர். 2018 அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது. "இந்த வெற்றிகள், தற்போது கணிசமான முன்னேற்றம் தேவைப்படும் இடங்களுக்கு முக்கியமான பாடங்களாகும்” என்று பென் கூறுகிறார்.

குழந்தைகளுக்கு எடை குறைவு மற்றும் வளர்ச்சியின்மையை வங்கதேசம் திறமையாக கையாண்டு வேகமாக வளர்ந்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் 55.5% ஆக இருந்த, ஐந்து வயதிற்குட்பட்ட வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் விகிதம், 2014ஆம் ஆண்டில் 36.1% ஆக குறைந்துள்ளது. "பெருமளவில் விவசாயம் மற்றும் ஊட்டச்சத்துகளை மேம்படுத்த புதுமையான பொது கொள்கைகளை பயன்படுத்தப்பட்டது", என ஐ.எப்.பி.ஆர்.ஐ. மற்றும் எப்.ஏ.ஓ. அறிக்கை தெரிவிக்கிறது. ஆதரவான கொள்கைகள் மூலம் விவசாய வளர்ச்சி ஊக்கமளித்தாலும், குடும்பத் திட்டமிடல், வலுவான சுகாதார சேவைகள், பள்ளிக்கு வருகை அதிகரித்தல், குடிநீர் மற்றும் சுகாதார வசதி மற்றும் பெண்களுக்கு அதிகாரம் போன்ற மற்ற கொள்கைகளும் இதில் முக்கிய பங்கு வகித்தன.

சீனாவின் அதிக பொருளாதார வளர்ச்சி (தனிநபர் வருமானம் 2005ஆம் ஆண்டில் 5,060 டாலர்கள் என்பது, 2017ல் 16,760 டாலராக உயர்ந்தது) பசி மற்றும் வறுமை ஆகியவற்றில் இருந்து, பல மில்லியன் மக்களை உயர்த்தியது.

பிரேசில் மற்றும் எத்தியோப்பியா நாடுகள் தங்களது உணவு முறைகளை மாற்றியமைத்து, விவசாய ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் இலக்கு வைத்து முதலீடு மூலம், பட்டினி அச்சுறுத்தல்களை குறைத்ததாக, எப்.ஏ.ஓ. தெரிவித்தது.

“1980களின் மத்தியில், அதை தொடர்ந்து வந்த இருபது ஆண்டுகளில் பிரேசிலின் பயிர் சாகுபடி 7% உயர்ந்தது. 2003 ஏற்படுத்தப்பட்ட போம் ஜீரோ திட்டம் (பூஜ்ஜியம் பட்டினி நிலை) பயனாளிகளுக்கு பரந்த அளவில் பயன் தந்தது. ஏற்படுத்தப்பட்ட பத்து ஆண்டுகளில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து வெகுவாக குறைந்தது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

பாங்காக்கில் நடந்த ‘பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு முடிவு’ என்ற மாநாடு மற்றும் ஊடக பயிற்சிப்பட்டறையில், ஐ.எப்.பி.ஆர்.ஐ.ஏற்பாட்டின் பேரில் யாதவர் பங்கேற்றார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story