‘ஊஹான், ஐரோப்பா, அமெரிக்காவை விட இந்தியாவில் வெவ்வேறு வகை வைரஸ்கள் உள்ளன’

‘ஊஹான், ஐரோப்பா, அமெரிக்காவை விட இந்தியாவில் வெவ்வேறு வகை வைரஸ்கள் உள்ளன’
X

மும்பை: கோவிட் -19 நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் விளைவுகளில் ஒன்று, மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் சுமை, மற்றும் அனைத்து நோயாளிகளையும் - கோவிட் மற்றும் கோவிட் அல்லாதவர்களை - அனுமதிக்க இயலாத நிலை. இதை, மருத்துவமனைகள் எவ்வாறு சமாளிக்கின்றன; நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு மருத்துவமனைகள் எவ்வாறு பதில் அளிக்கின்றன?

இது குறித்து, மும்பையை சேர்ந்த 254 படுக்கைகள் கொண்ட சைஃபி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் வெர்னான் தேசாவுடன் நேர்காணலில் நாம் பேசுவோம்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

உங்கள் மருத்துவமனையில் கோவிட் மற்றும் கோவிட் அல்லாத படுக்கைகளை எவ்வாறு பிரித்துள்ளீர்கள்? நீங்கள் இப்போது என்ன மாதிரியான சுமையுடன் வேலை செய்கிறீர்கள்?

கிரேட்டர் மும்பை மாநகராட்சியின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மருத்துவமனை படுக்கைகளை நாங்கள் பிரித்துள்ளோம். கோவிட் நோயாளிகளுக்கு சுமார் 100 படுக்கைகளை வழங்கியுள்ளோம் - நீண்டகால நோயாளிகளுக்கு 74 மற்றும் மீதமுள்ளவரக்ளுக்கு 26 படுக்கைகள்.எஞ்சியுள்ள படுக்கைகள் அனைத்தையும் நாங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை அல்லது அதற்கான ஆணை இல்லை. கோவிட் அல்லாத நோயாளிகளுக்கு 100 படுக்கைகளை வழங்கியுள்ளோம். ஆனால் இவற்றில், சுமார் 60 முதல் 70 படுக்கைகளே உள்ளன. எனவே, கோவிட் அல்லாதவற்றுக்காக மாற்று படுகைகள் உள்ளன, அவை தேவைக்கேற்ப [பயன்பாட்டிற்கு] வைத்திருக்கிறோம்.

அந்த மாற்று படுக்கைகளை நிர்வகிக்க உங்களுக்கு போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் உள்ளனரா?

ஆமாம். கோவிட் நெருக்கடியால் நாங்கள் மிக மோசமாக பாதிக்கப்படவில்லை, ஏனென்றால் முழு மருத்துவமனைக்கும் நோயாளிகளை நிர்வகிக்க ஊழியர்கள், நர்சிங் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். நாங்கள் அவர்களுக்கு தங்குவதற்கு குடியிருப்புகளை வழங்கியுள்ளோம்; செவிலியர்கள் வெளியேறுவது மற்றும் பிற மருத்துவமனைகளுக்குச் செல்வது அல்லது அவர்களின் சொந்த இடங்களுக்குச் செல்வதில் எங்களுக்கு எவ்விதமான மனநிலையும் இல்லை.மருத்துவமனை கட்டிடத்தில் நாங்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. ஏனென்றால் எங்களிடம் தனிமைப்படுத்தப்பட்ட அணுகல் வாய்ப்புகள், தனி லிஃப்ட் மற்றும் கோவிட் நோயாளிகளுக்கு தனி தளங்கள் உள்ளன. அது, கட்டிடத்தின் வடக்கு பகுதியில் உள்ளது. தெற்குப்புறம், கோவிட் அல்லாத நோயாளிகளுக்கு தனித்தனி அணுகல் வசதிகள் மற்றும் தனி லிஃப்ட் கொண்ட பல்வேறு தளங்கள் இருக்கின்றன.

எங்களது மருத்துவமனைக்கு வந்தால் உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்தினோம். கோவிட் மற்றும் கோவிட் அல்லாத நோயாளிகள் தனித்தனி நுழைவாயில்கள் வழியே வந்து செல்வார்கள். அவசரகால மருத்துவ சேவைக்கு (ஈ.எம்.எஸ்) அடுத்த தரைதளத்தில் பிரத்யேக வார்டு நிறுவப்பட்டுள்ளது. எங்களிடம் ஈ.எம்.எஸ்-இல் முழு அளவிலான ஊழியர்கள் உள்ளனர் - பகல் இரவு எல்லா நேரங்களிலும் வருகை தரும் நோயாளிகளுக்கு முதுகலை மருத்துவர்கள் சிகிச்சை தருவர். மொத்தத்தில் இந்த வழிமுறை எங்களுக்கு நன்கு வேலை செய்தது.

மற்ற நீண்டகால நோயுள்ளவர்களுக்கு 74 படுக்கைகள், சிக்கலான நோயாளிகளுக்கு 26 படுக்கைகள் என்று குறிப்பிட்டீர்கள். அங்கு உள்ளவர்களின் விகிதம் என்ன? உங்களது அவசரகால படுக்கைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா?

அனைத்தும் நிரம்பிவிட்டன. உண்மையில், கடந்த வாரம் அல்லது அதற்கு பிறகு வேறொரு தோற்றத்தை நாங்கள் காண்கிறோம், அதில் எங்களது நிலையான நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, சிக்கலான நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.

ஒருவேளை இப்போது, இந்த தோற்றம் சற்று மாறுபடலாம் தோன்றுகிறது (மற்ற மருத்துவமனைகளின் நிலை எனக்கு தெரியாது) [எங்களுக்கு] நிலையான நோயாளிகள் குறைந்து, மிக சிக்கலான நோயாளிகள் அதிகம் உள்ளனர். எம்.சி.ஜி.எம். இணையதளத்தில் எங்கள் தரவை தினசரி பதிவேற்றுகிறோம்.

சிக்கலான நோயாளிகள் குறித்த சில தகவல்களை எங்களுக்கு வழங்க முடியுமா? அவர்கள் தீவிர சிகிச்சை அல்லது வென்டிலேட்டர் உதவி தேவைப்படுபவர்களா?

கொமொர்பிட் அறிகுறிகள் -அதாவது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், முன்பே இதய நோய் போன்றவை- உள்ள நோயாளிகளின் உடல்நிலை சில நேரம் மோசமடைகிறது; அவர்களை நாங்கள் நீடித்த நோயாளிகள் என்ற பகுதியில் இருந்து, அவசரகால பகுதிக்கு மாற்ற வேண்டும்.சில நேரங்களில், நோயாளிகள் -நலமடைந்து வீட்டிற்கு சீக்கிரம் செல்பவர்கள் என்று எங்களால் கருதப்படுவோர் - கடும் சுவாசப் பிரச்சினைகளை சந்தித்து, அவர்களை BiPAP காற்றோட்டத்தில் வைக்க வேண்டியதாகிறது. பல முறை அவர்கள் அந்த BiPAP இல் இருந்து மீட்கப்படுகிறார்கள்; அல்லது [அவர்கள்] குணமடையவில்லை என்றால், வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. தங்களை இளம் வயதினராக கருதும் நோயாளிகளை கொண்டிருந்தோம்; திடீரென்று சில சிக்கல்களை, கடும் சுவாசிக்கும் சிக்கலை [அவர்கள்] சந்தித்தனர்; நிமிடத்திற்கு 15 லிட்டர் உயர் ஓட்டம் செலுத்தக்கூடிய ஆக்ஸிஜனில் கூட அவர்கள் மீளவில்லை. ஏதேனும் ஒரு வழி அல்லது வேறு, ஒரு சுழலில் சிக்கி, உறுப்புகள் செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு என்பன போன்றவை அவர்களுக்கு உருவாக்குகின்றன. சி.டி ஸ்கேனில் இத்தகைய பிம்ப தோற்றத்தால், அவர்களின் நுரையீரல் முற்றிலும் ஒளிபுகாதாகி, அவை செயலிழக்கின்றன.

எனவே, இது ஒரு முரண்பாடான நிலைமை. இந்த தொற்றுநோயை இளைஞர்கள் அதிகம் எதிர்கொண்டுவிடுவார்கள் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் [சில] இளைஞர்கள் இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தூள்ளனர்; அதேநேரம், கொமொர்பிட் அம்சங்களுடன் [மோசமடையும்] என்று நாங்கள் கருதிய [சில] வயதானவர்கள், குணமடைந்து வீட்டிற்குச் செல்ல முடிந்தது. நாட்கள் செல்லச் செல்ல நாங்கள் பலவற்றை கற்றுக் கொண்டிருக்கிறோம்; ஏனென்றால் இதில் யாரும் தம்மை நிபுணர் என்று யாரும் கூற முடியாது. கோவிட், ஒரு புதியவகை தொற்று.

மீண்டும், நாள்பட்ட அந்த 74 நோயாளிகள் விஷயத்திற்கு வருகிறேன். அவர்கள் உங்கள் மருத்துவமனைக்கு எந்த நிலையில் வருகிறார்கள்?அவர்களிடம் அறிகுறி தென்படுகிறதா? மருத்துவமனைக்கு மக்கள் தாமதமாக வருகிறார்களா?

மக்கள் தாமதமாக வருகிறார்கள் என்று கூற மாட்டேன், ஆனால் பிஎம்சி இப்போது வழிகாட்டுதல்களை மாற்றியுள்ளது. அறிகுறியற்ற நோயாளிகளுக்கு, [ஒரு] பரிசோதனை செய்ய வேண்டாமென்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு அறிகுறி இருக்கும்போது மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஏப்ரல் முதல் வாரத்தில், காய்ச்சலுக்கு கிளினிக் அமைத்தோம், அங்கு நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையின் ஒரு வாயில் வழியாக வருகிறார்கள். அவற்றை ஆராய்வோம். எங்களுக்கு [கோவிட் நேர்மறை என்று]சந்தேகம் இருந்தால், அவர்களை அந்த இடத்திலேயே சோதனை செய்கிறோம்.அதேபோல், [நிலையான] நோயாளிகளின் வருகையும் உள்ளது, ஆனால் நான் முன்பு சொன்னது போல், அந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாங்கள் மிகவும் அவசரகால நோயாளிகளை - முக்கியமான கட்டத்தில் வருவது அல்லது நீடித்த நோய்க்காக வருவது மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிக்கலான நிலைக்கு செல்பவர்களை பெறுகிறோம்.

ஆரம்ப கட்டத்தில் கூட நீங்கள் சில முடிவுகளை எடுக்க முயற்சித்தீர்கள், அதன் முடிவு உங்களுக்கு என்ன சொல்கிறது?

இந்த பிரச்சினையுடன் நாம் வாழ வேண்டும். இது [கோவிட் -19] சமூகம் முழுவதும் பரவுகிறது. நாங்கள் ஒருநாளைக்கு 8 மணி நேரம் மருத்துவமனையில் செலவிடுகிறோம் என்பதால் நாங்களும் ஆபத்தில் இருக்கிறோம்.

எனது கண்ணோட்டம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, இந்த வைரஸ் பிறழ்ந்துவிடும். உஹான் அல்லது ஐரோப்பாவில் இருந்ததை விடவும், தற்போது அமெரிக்காவில் இருப்பதைக் காட்டிலும் வேறு வகையான வைரஸை தான் இந்தியாவில் நாம் காண்கிறோம். மும்பைக்கு, இந்த வைரஸ் குறிப்பிட்ட சில சமூகங்கள் வழியாக நகர்ந்துள்ளது, அதன் ஆற்றல் கணிசமான அளவிற்கு குறைந்துவிட்டது. இது எனது தனிப்பட்ட பார்வை, அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் உள்ள சில நிபுணர்களின் பார்வையும் இதுதான். சிறிது நேரம் கழித்து, இந்த வைரஸ் அதன் ஆற்றலை இழக்கிறது.

மும்பை தனது ஆற்றல் இழப்பை காணும் என்று நீங்கள் ஏற்கனவே நினைத்திருந்தீர்களா?

நானும் அப்படியே உணர்கிறேன். கடந்த இரண்டு மாதங்களில் (ஏப்ரல் மற்றும் மே), எங்களுக்கு பல அழைப்புகள் மற்றும் பல அவசரகால வழக்குகள் இருந்தன. இப்போது கடந்த ஒரு வாரமாக, அந்த இரண்டு மாதங்களில் இருந்ததைப் போன்ற அந்த வகையான பணிகளை நாங்கள் காணவில்லை. இது மெதுவாக தணிகிறது.[நாங்கள்] கட்டுரைகளை படித்து, நிபுணர்களுடன் கலந்துரையாடுகிறோம். எனது மகள் அமெரிக்காவில் ஒரு நிபுணர்; அவர் சான்பிரான்சிஸ்கோவில் இரண்டு ஐ.சி.யு. கவனித்து வருகிறார், நான் அவருடன் தவறாமல் விவாதித்து வருகிறேன். நாங்கள் ஒரு முழுமையான மாற்றத்தைக் காண்கிறோம் என்று அவர் என்னிடம் கூறுகிறார். இப்போது அவரது நோயாளிகளின் சுமை 50 நோயாளிகள் என்பது நான்கு நோயாளிகளுக்கு குறைந்துவிட்டது. எனவே, உயரக்கூடிய விகிதம் சரிந்து அல்லது வளைந்து கீழ் நோக்கி செல்கிறது; ஒருவேளை ஜூன் மாத இறுதியில், மும்பையின் தற்போதைய காட்சியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை காணலாம்.

கோவிட் அல்லாத நோயாளிகளுக்கு இடையே நீங்கள் காணும் வரத்து எந்த வகையானது?பரவலாக, உங்கள் மருத்துவமனையில் சுமை கடந்த ஆண்டு இதே மாதத்துடன் எவ்வாறு ஒப்பிடுகிறது?

ஆண்டுதோறும் உள்ள எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் தற்போது எங்கள் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கையில் சரிவைக் காண்கிறோம். அது மறுக்க முடியாதது. ஏனென்றால், முதலில் நோயாளிகள் மருத்துவமனைக்கு வர பயப்படுகிறார்கள். எனவே, மாரடைப்பு அல்லது முன்கூட்டிய வரும் நோயாளிகள் போன்ற அவசரகால நிகழ்வுகளை மட்டுமே நாங்கள் பெறுகிறோம். முன்கூட்டியே வரக்கூடிய சில நோயாளிகள் இருந்தார்கள், அவர்கள் எங்களால் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் நாங்கள் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் அழைத்துச் சென்றோம்; பின்னர், நாங்கள் அவர்களை சோதித்து, நேர்மறையானவர்கள் என்று கண்டறிந்தோம். எனவே, இந்த வரிசைமாற்றம்-சேர்க்கைகள் அனைத்தும் உள்ளன.

ஆனால் பெரிய அளவில், எங்கள் இதயத்துறை செயல்படுகிறது, எங்கள் ஆய்வகம் செயல்பாட்டில் உள்ளது. தலையீடு இல்லாத இருதயத்துறை செயல்படுகிறது. மற்ற அனைத்து கண்டறியும் சேவைகளும் இயங்குகின்றன.

விபத்துக்குள்ளான நோயாளிகள், எலும்பு முறிவுகள் போன்ற அவசரகால வழக்குகளை மட்டுமே நாங்கள் பெறுகிறோம். எங்களிடம், சராசரியாக, ஒருநாளைக்கு சுமார் 60 கோவிட் அல்லாத நோயாளிகள் வருகிறார்கள். நோயாளி கோவிட் நேர்மறை அல்லது எதிர்மறையாக இருந்தாலும், அவசரகாலத்தில், நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை. நாங்கள் அவர்களை உள்ளே அழைத்துச் செல்கிறோம்.

மருத்துவமனைகளில் நோயாளிகள் திருப்பி விடப்பட்டதாக தகவல்கள் உள்ளன. அது ஏன் நடக்கிறது என்று நினைக்கிறீர்கள்? உதாரணமாக, உங்களிடம் மிகக்குறைந்த சுமை இருப்பதாகவும், உங்களிடம் வரும் ஒவ்வொரு நோயாளியையும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றும் சொல்கிறீர்கள். தெற்கு மும்பையில் நீங்கள் இருக்கும் மிகவும் தீவிரமான இடத்தில்தான் இது இருக்கிறதா?

கோவிட் நோயால் எங்களுக்கு அதிக சுமை உள்ளது. எந்த கோவிட் நோயாளி அல்லது சந்தேகத்திற்குரிய கோவிட் நோயாளியை நாங்கள் மறுக்க மாட்டோம்.நான் உங்களிடம் சொன்னது போல, எங்களிடம் எங்கள் முன்கூட்டியே புற நோயாளிகள் பிரிவு (OPD) உள்ளது. அதற்கு மேல், மருத்துவமனையின் தனி நுழைவாயிலில் ஒரு பொதுமுன்கூட்டியே புற நோயாளிகள் பிரிவை அமைத்துள்ளேன், அதில் நடந்து செல்லும் அனைத்து நோயாளிகளும்பரிசோதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அவசர விசாரணைக்கு வந்திருந்தால், அல்லது சில மருத்துவரைப் பார்க்க, அல்லது சில நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டால், நாங்கள் அவர்களை வேறு அணுகல் மூலம் மருத்துவமனைக்கு அனுப்புகிறோம். அவர்கள் அந்த நடைமுறையைச் செய்கிறார்கள், மருத்துவரைப் பார்க்கிறார்கள், பின்னர் அவர்கள் வெளியேறுகிறார்கள்.ஆனால் அது உண்மையில் எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, ஏனெனில் நாங்கள் நோயாளிகளைப் பிரித்து நிர்வகிக்க முடிந்தது, மேலும் ஒரு சாத்தியமான வழக்கை தவறவிடாமல் பார்த்துக் கொள்கிறோம்.

எந்த நிலையில் அல்லது எந்த நோயை எதிர்கொண்டாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நோயாளிகள் குறித்த செய்திகளை படித்து வருகிறோம். அதுவும் நீங்கள் சந்திக்கும் ஒன்றுதானா? இல்லையென்றால், தெற்கு மும்பையில் நீங்கள் இதை எங்கு கண்டறிகிறீர்கள்?

அந்த வகையான அனுபவத்தை நாங்கள் சந்திக்கவில்லை, ஏனென்றால் நான் சொன்னது போல், நாங்கள் ஒரு பரிசோதனை முறையை அமைத்துள்ளோம், காய்ச்சலுக்கு கிளினிக்கை அமைத்துள்ளோம். எனவே, நோயாளிகள் போதுமான அளவு சோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிசெய்கிறோம், எங்களுக்கு சந்தேகம் இருந்தால், நாங்கள் அந்த இடத்திலேயே சோதனை செய்கிறோம். எனது அறிவு மற்றும் கடந்த இரண்டு மாத அனுபவத்தின் மூலம், நாங்கள் எந்த நோயாளிகளையும் மறுத்ததில்லை.நோய் தீவிரத்துடன் காரில் வந்த நோயாளிகள், காருக்குள் மயங்கி விழுந்தவர்களுக்கு கூட நாங்கள் சிகிச்சை செய்திருந்து இருக்கிறோம், நாங்கள் அவர்களை உள்ளே அழைத்துச்சென்று உதவி செய்தோம், அவர்கள் கோவிட் நேர்மறை அல்லது எதிர்மறையானதா என்பதை பார்க்காமல், ஐ.சி.யுவில் அனுமதித்தோம். பின்னர் தான் நாங்கள் [COVID] பரிசோதனை செய்கிறோம்.

நான்கு நாட்களுக்கு முன்பு, ஐ.சி.யு-வில் இதேபோன்ற பிரச்சனையுடன் ஒரு நோயாளியை அனுமதித்தேன். அவர் மிகவும் மூச்சுத் திணறினார், அவருக்கு ஆக்சிஜன் செறிவு 60 ஆக இருந்தது. அவர் இறந்துவிடுவார் என்று நினைத்தேன். நாங்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்று, ஐ.சி.யு-வில் வைத்தோம். பரிசோதனையில் அவருக்கு கோவிட் எதிர்மறை என்று தெரிந்தது. எனவே, அந்த வகையான மூச்சுத் திணறல் மற்றும் நோயாளி மயங்கி சரியும்போது, நீங்கள் நினைக்கும் முதல் விஷயம் கோவிட் நேர்மறை என்று தான் இருக்கும். ஆனால் மனிதாபிமான அடிப்படையில், நாங்கள் யாரையும் இதுவரை புறந்தள்ளவில்லை. எந்தவொரு நோயாளியையும் ஆம்புலன்சில் இருந்து, மருத்துவமனையின் வாயிலில் இருந்து, ஒருபோதும் அப்படி திருப்பி அனுப்ப சொல்ல மாட்டோம்.

வேறு சில மருத்துவமனைகள் பல லட்சங்களில் முன்பணம் கட்ட சொல்கிறார்கள்; அப்போது தான் அவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்கிறார்களா?

டெல்லி மற்றும் பிற இடங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் பயங்கரமான தகவல்கள் இவை, அங்கு செய்தியாளர்கள் சென்று, “உங்களிடம் படுக்கை இருக்கிறதா? என்ன செலவாகும்? ” என்றெல்லாம் விசாரணை நடத்தி உள்ளனர். இங்கு பி.எம்.சி வரைமுறையின்படி 80% படுக்கைகள் விலை கட்டுப்படுத்தப்பட்டவை, ஒழுங்குபடுத்தப்பட்டவை; மற்ற 20% படுக்கைகளில் அந்த ஒழுங்கு இருக்காது. அந்த ஆணையை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகிறோம்.

வரும் நோயாளிகளிடம் மிகைப்படுத்தப்பட்ட தொகையைச்சொல்லி, பின்னர் அவர்களை வெளியேறச் செய்வதாக கூறப்படும் கேள்வியே இங்கு எழவில்லை. பணத்தை இழப்பதாக நாங்கள் கவலைப்படவில்லை. எங்களது முதல் கவனம் உயிர்களைக் காப்பாற்றுவதாகும். நோயாளிகளைக் காப்பாற்றுவது, அவர்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் உயிர்களைக் காப்பாற்றும் தொழிலில் மருத்துவர்கள் நாங்கள் தான் உள்ளோம்.

கோவிட்டுக்கு முந்தைய நிலைக்கு செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் திரும்பக்கூடிய சூழலை, திறனை நீங்கள் எப்போது பார்க்கிறீர்கள்?

ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாம் இயல்புநிலைக்கு திரும்பலாம். இப்போது, நாம் [கோவிட் வளைவின்] உச்சத்தில் அமர்ந்திருக்கிறோம். விஷயங்கள் எந்த வழியில் திரும்பும் என்பது நமக்கு தெரியாது. அதிகமான சமூக பரவல் மற்றும் கொத்து கொத்தாக பரவல் உருவாகி, மேலும் கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருந்தால், நாம் தொடர்ந்து சென்று கொண்டே இருப்போம், அது முடிவடையாது. ஆனால் மும்பையில் பாதிப்பு கீழே நோக்கி செல்ல நாம் அனுமதிக்க வேண்டும் என்றால், எல்லா விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்; அவை தான் தொலைக்காட்சிகளிலும் எல்லா இடங்களிலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றன.

துரதிர்ஷ்டவசமாக, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செல்ல முனைகிறார்கள், அது அடுத்த இரண்டு மாதங்களில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். ஆகஸ்ட் முதல் வாரம் வரை, மக்கள் ஒழுங்கை கடைபிடித்தால், விஷயங்கள் சரியான வழியில் நடந்தால், நம்முடைய கோவிட் அல்லாத பெரும்பாலானவற்றையும், வழக்கமான வேலைகளையும் திரும்பப் பெறுவோம். ஒருவேளை நாம் சாதாரண வேலைகளைச் செய்யத் தொடங்குவோம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story