ராஜஸ்தானில் வடிவம் பெற்ற இந்தியாவில் முதலாவது சுகாதார உரிமை சட்டம்

ராஜஸ்தானில் வடிவம் பெற்ற இந்தியாவில் முதலாவது சுகாதார உரிமை சட்டம்
X

புதுடெல்லி மற்றும் ஜெய்ப்பூர்: உள்ளூர் அரசு மருத்துவமனையில் மனைவியின் சடலத்தை எடுத்து செல்ல வாகன வசதி செய்யப்படாததால், 12 கி.மீ. தொலைவுக்கு சடலத்தை தோளில் சுமந்து சென்ற பழங்குயினத்தவரின் படம், 2016ஆம் ஆண்டில் தேசிய அளவில் தலைப்புச் செய்தியானது.

கடந்த 2016 ஆகஸ்ட் 25இல், ஒடிசாவின் கலாஹந்தி மாவட்டத்தில், அழுத மகளுடன், காசநோயால் இறந்த மனைவியின் சடலத்தை நீலத்துணியால் போர்த்தியபடி சுமந்து நடந்து சென்றார் தினக்கூலி தொழிலாளி தனா மஞ்சி; இத்தனைக்கும் சடலங்களுக்கு இலவச போக்குவரத்து வசதி திட்டம், அந்த மாநிலத்தில் உள்ளது.

மஞ்சி அரசுக்கு எதிராக வழக்குத் தொடர முடியுமா? தற்போதைய அமைப்பில், இது சாத்தியமில்லை. ஆனால் சுகாதார விவகாரங்கள் அதிகம் விவாதிக்கப்படும் உரிமையாக, யதார்த்தமாக மாறியால் சாத்தியமாகும்.

உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு மற்றும் அதன் ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரம் இந்தியாவைப் பொறுத்தவரை, ஏழ்மையான நாடுகளை விடவும் சுகாதாரத்திற்கு குறைவாகவே நிதி செலவழிக்கிறது. 2011-12 ஆம் ஆண்டில், 55 மில்லியன் இந்தியர்கள் வறுமையில் தள்ளப்பட்டனர், ஏனெனில் "பாக்கெட்டில் இருந்து பணம் வெளியே" எடுத்து சுகாதாரத் தொடர்புடைய செலவினங்களுக்கு அவர்களே தொகை செலுத்த வேண்டியிருந்தது. நமது மக்களில் பாதிக்கும் (51%) மேலானவர்கள் தனியார் துறை மருத்துவனைகளை சிகிச்சைக்கு நாடுகின்றனர். ஏனென்றால் அரசு பொது அரசு காதார அமைப்புகள் மோசமான கவனிப்பை, சேவையை வழங்குகிறது.

ஆயினும்கூட, அதிக செலவிட்டு சுகாதார பராமரிப்பு செய்தும் கூட அது சுகாதார, ஆரோக்கியமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை; 1.6 மில்லியன் இந்தியர்கள் மோசமான உடல்நலக் குறைவால் இறந்துவிட்டனர். 2018 ஆம் ஆண்டில் உலகளாவிய சுகாதாரத் தரம் மற்றும் அணுகல் குறியீடு ஆகியவற்றில் இந்தியா மிக மோசமாக மொத்தமுள்ள 195 நாடுகளில் 145 வது இடத்தில் உள்ளது.

ஆனால் சுகாதாரப் பிரச்சினைகள் ஒரு அரசியல் பிரச்சினையாக மாறி வருகின்றன.

கடந்த 2018 செப்டம்பரில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய சுகாதார காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் என்ற பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா எனப்படும் 500 மில்லியன் இந்தியர்களுக்கு ரூ .5 லட்சம் மருத்துவ காப்பீட்டை வழங்க இலக்கு கொண்டுள்ள திட்டத்தை தொடங்கி வைத்தார். 2019-20ஆம் நிதியாண்டில் அரசு இதற்கு ரூ .6,400 கோடி செலவிட்டது. இது, முந்தைய ஆண்டில் செலவிட்ட ரூ. 2,000 கோடியை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

எதிர்க்கட்சிகளும் தற்போது சுகாதாரம் பற்றி பேசுகின்றன. ஏப்ரல் 2019இல் வெளியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், 2023-24 ஆம் ஆண்டிற்குள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3% என்று, சுகாதார செலவை இரட்டிப்பாக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. மேலும், "ஒவ்வொரு குடிமகனும் சுகாதார சேவைகளை வழங்குவதற்கான உரிமைக்கான சரியான சுகாதாரத்திற்கான செயல் சட்டத்திற்கும் அது உறுதியளித்தது. இதில், பொது நோயாளிகளின் அமைப்பு மூலம் இலவச நோயறிதல், வெளிநோயாளி பராமரிப்பு, மருந்துகள் மற்றும் மருத்துவமனையை ஆகியவற்றை இது உள்ளடக்கியது மற்றும் தனியார் மருத்துவமனைகளும் இதில் சேர்க்கப்பட்டன”.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சி.பி.ஐ.-எம் கட்சியில் தேர்தல் அறிக்கையும் இதே போன்ற மாற்றங்களை உறுதி செய்தது: மொத்த உள்நாட்டு உற்பத்தியில்சுகாதார செலவினம் ‘குறுகிய காலத்திற்கு’ 3.5% மற்றும் ‘நீண்ட காலத்திற்கு’ 5% என்று அதிகரிக்கப்படும் என்றது. “சட்டம் வாயிலாக மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் இலவச உடல்நல பரிசோதனை" என்றும் அது கூறியது.

இரு தேர்தல் அறிக்கைகளுமே, பொது மற்றும் தனியார் சுகாதார மையங்களை ஒழுங்குபடுத்தும் மருத்துவ நடைமுறை சட்டம் பற்றி பேசி உள்ளன. காப்பீடு மாதிரியான திட்டம், உலகளாவிய சுகாதார பராமரிப்புக்கு சரியான வழியாக இருக்காது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. ஆயுஷ்மன் பாரத் திட்டத்தை அகற்றுவதாக சிபிஐ (எம்) கூறியுள்ளது. ஏனெனில் இது "ஒரு குறைபாடுள்ள காப்பீடு மாதிரியான " திட்டத்தை அடிப்படையாக கொண்டுள்ளதாக அது தெரிவிக்கிறது.

இப்பார்வைக்கு அப்பால்

"சுகாதார உரிமை பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவது நோயாளிக்கு முக்கிய மாற்றமாக, தெளிவான உரிமை தொகுப்பை கொண்டிருக்கும்" என்று, லாப நோக்கற்ற அமைப்பான சதீ-யின் மூத்த நிரல் ஒருங்கிணைப்பாளரும், சுகாதார சேவைகளுக்கு இயங்கி வரும் ஜன் ஸ்வஸ்த்ய அப்யான் அமைப்பாளர்களில் ஒருவருமான அபய் சுக்லா தெரிவித்தார்.

உடல்நல பராமரிப்பு உரிமை சட்டத்தால் இலவசமாக நோய் கண்டறிதல், மருந்துகள் பெறுதல் மற்றும் குறைகளை சரிசெய்தல், வெளியீடு அனுமதிக்கப்பட வேண்டும் மற்றும் சுகாதார அமைப்புக்குள்ளே அடிப்படை சேவைகளின் தொகுப்பை வழங்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

"இப்போது, ​​நோயாளி ஒருவர் பொது சுகாதார அமைப்புக்கு செல்லும் போது, ​அங்கு ​அவர் பெறும் சேவைகளின் தன்மை பற்றி அவருக்குத் தெரியாது" என்று சுகாதார உரிமை சட்டத்திற்காக 2004 முதல் பணியாற்றி வந்த சுக்லா கூறினார். "சமுதாய சுகாதார மையத்தில் ஒரு சிசேரியன் பிரிவை நடத்தலாமா? மருந்துகள் இலவசமாக வழங்கப்படுமா? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சுகாதாரத்திற்கான உரிமை என்பது உலகளாவிய சுகாதாரத்திற்கான ஒரு படியாகும், இது ஒரு "முற்போக்கான உணர்தல்" ஒரு நாட்டின் "சுகாதாரப் போக்கு மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும்" மற்றும் விரிவானது என்று, புதுடெல்லியை சார்ந்த பொது சுகாதார மற்றும் கொள்கை நிபுணர் சந்திரகாந்த் லஹரியா தெரிவித்தார். இந்த விவரங்கள் இப்போது முன்கூட்டியே கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் குறுகலானதாக இருப்பதாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார் அவர்.

இந்தியாவின் அரசு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.18% தொகையை சுகாதாரத்திற்கு செலவிடுகிறது; மற்றும் கூடுதல் நிதியானது பணியிடம் நிரப்புதல், ஊழியர்களை சேர்ப்பது உட்பட; தொற்றுநோயற்ற நோய்களுக்கான மருந்துகள் (மருந்துகள் மற்றும் நோய் கண்டறிதல்) போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு செலவிடலாம் என்றார் லகாரியா.

"ஆயினும்கூட, இந்த முறை வழங்குவதைத் தொடங்கும் வரையில் அதிக செலவு செய்வது சவாலாக இருக்கும்," என்ற லஹரியா, “மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% இருந்து சுகாதார செலவை 3.0% என்று அதிகரிக்க தாய்லாந்து அரசுக்கு 13 ஆண்டுகளாகின" என்றார்.

ராஜஸ்தான் இத்தகைய போக்கை ஏற்படுத்தலாம்

கடந்த 2018 டிசம்பரில் ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டபோது, இலவச நோயறிதல், சிகிச்சை மற்றும் மருந்துகள் உள்ளிட்ட சுகாதார நலனுக்கு வாக்குறுதி அளித்தது. அதன் பிறகு முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றதும், அந்த உறுதியை மார்ச் 2019 இல் மீண்டும் வலியுறுத்தி, தனது அரசு விரைவில் சட்டம் கொண்டுவரும் என்றார்.

கடந்த 2011இல், முன்பு முதலமைச்சராக இருந்த போது கெலாட் ஒரு திட்டத்தை தொடங்கினார்; அது, 606 அத்தியாவசிய மற்றும் உயிர்வாழும் மருந்துகள், 137 அறுவை சிகிச்சை பொருட்கள் மற்றும் 77 வகையான ஊசிகள் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டன.

மருந்துகளில் 72% கிராமப்புற மருந்து செலவுகளுக்கும், மற்றும் 68% நகர்ப்புற பகுதிகளில் "மருத்துவமனையில் அல்லாத சிகிச்சை"க்கும் என்று, சமீபத்தில் கிடைத்த 2016 அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

இலவச மருந்துகள் திட்டம் உலக சுகாதார அமைப்பு உட்பட பரவலான அங்கீகாரத்தை ஈர்த்தது. அரசு சுகாதார நிலையங்களில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் 81% அதிகரித்து, 2016 ஆம் ஆண்டில் 8 மில்லியன் என்று உயர்த்தது என, 2018 ஜூனில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. புற நோயாளிகளின் எண்ணிக்கை 2.6 முறை, மருத்துவமனை உள்நோயாளிகள் எண்ணிக்கை 1.5 முறை அதிகரித்தது.

இலவச மருத்துவம் திட்டம், தேவையற்ற பரிந்துரைகளை ஒழுங்கமைக்க உதவியது- அதாவது, பொருத்தமற்ற மருந்து முறைகளை அகற்றியதாக, இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளை மற்றும் லாப நோக்கமற்ற அமைப்பான பிரயாஸ் ஆகியவற்றின் 2013 ஆய்வு தெரிவிக்கிறது.

'அதை தயார்படுத்த கொஞ்சம் நேரம் கொடுங்கள்'

ராஜஸ்தானின் மருத்துவ உரிமை சட்டம் தயாராகிவிட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.

"அரசியலமைப்பு இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்களை எடுத்தது, இந்த மசோதா கிட்டத்தட்ட வரைவு அரசியலமைப்பைப் போலவே உள்ளது" என்று ராஜஸ்தான் மருத்துவ சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு செயலாளரும், இலவச மருந்து திட்டத்தை செயல்படுத்திய அதிகாரியுமான சமித் ஷர்மா தெரிவித்தார். "அதை தயார்படுத்த கொஞ்சம் நேரம் கொடுங்கள்" என்றார் அவர்.

அவர் விவரமாக தெரிவிக்கவில்லை என்ற ஷர்மா, சுகாதார உரிமை பாதுகாப்பு மசோதா சேவைகளின் குறைந்தபட்ச உத்தரவாதம் வழங்கும் என்றார்.

எடுத்துக்காட்டாக, அரsu சுகாதார துணை மையம், சட்டப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும்; ஒவ்வொரு துணை மையத்திலும் ஒரு துணை செவிலியர் இருப்பார் என்று அவர் விளக்கினார்.

சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு மட்டும் மேம்பட்ட சுகாதாரத்தை உத்தரவாதம் செய்ய முடியாது என்ற ஷர்மா, ஆனால் இது தற்போதைய முறைமை அளவிட முடியாத சேவைகளின் சிறந்த விநியோகத்தை உறுதி செய்ய முடியும் என்றார்.

இதற்கிடையில், ராஜஸ்தானில் சுகாதார உரிமை சட்டத்திற்கு தொடர்ந்து அழுத்தம் தந்து வந்த லாப நோக்கமற்ற அமைப்பான பிரயாஸ், பல்வேறு சமூக குழுக்களுடனும், அரசுடனும் கலந்தாலோசித்து, தனது முதல் வரைவு வெளியிட்டது.

புதிய அம்சங்கள்

பிரயாஸ் வரைவுகளில் முக்கியமான சில அம்சங்கள்: தனிநபருக்கான செலவு ரூ. 3,000 ஆக அதிகரித்தல் (தற்போது, ராஜஸ்தான் அரசு ஒருவருக்கு ரூ.1,600 செலவழிக்கிறது); எந்தவொரு தொகையும் செலவிடாமல் சுகாதார சேவை வழங்குவதில் உத்தரவாதம்; 3 கி.மீ. தொலைவுக்குள் அடிப்படை சேவைக்கான உத்தரவாதம்; ஆரம்பகட்ட சிகிச்சை 12 கி.மீ. தொலைவுக்குள்; புகார்கள் மற்றும் சட்டரீதியான தீர்வுகளுக்கான தெளிவான நடைமுறைகள்.

"ராஜஸ்தானில் சுகாதார உரிமை பாதுகாப்பு சட்டம் வரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்; எந்த வடிவத்தில் என்பதை பார்க்க வேண்டும்" என்று, பிரயாஸின் மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளர் சாயா பச்சோலி தெரிவித்தார். "இதற்கு நேரம் எடுக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மருந்துகளின் விஷயத்தில் நீங்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்திற்கான ஒரு அமைப்பை அமைக்க வேண்டும்; ஆனால், சட்டம் அனைத்தையும் பற்றியது: மனித வளங்கள், உள்கட்டமைப்பு மற்றும் அணுகல்” என்றார்.

ராஜஸ்தான் அரசுடன் இணைந்து பணியாற்றும், லாப நோக்கற்ற அமைப்பான பிரயாஸின் மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளர் சாயா பச்சோலி, ராஜஸ்தானில் சுகாதார உரிமை பாதுகாப்பு சட்டம் வரும் என்று நாங்கள் நம்புகிறோம்; "எந்த வடிவத்தில் நாம் பார்க்க வேண்டும்" என்றார்.

ஒரு சரியான சுகாதார உரிமை சட்டம் என்பது, வீட்டுவசதி, துப்புரவ போன்றவை, தற்போதைய சுகாதார கவனம் பெறும் தடுப்பு அம்சங்கள் என, அது தொடர்பான பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க வேண்டும் என்றார் அவர்.

“ஏற்கனவே பல மாநிலங்களை விட ராஜஸ்தான் சிறந்ததுள்ளது; மகாராஷ்டிராவும் (வளர்ச்சி பெற்றது மற்றும் மேம்பட்டதாக கருதப்படுகிறது), பொது சுகாதாரத்திற்கு நிதி செலவிடும் போது இன்னும் முன்னேற்றம் காணும்," பச்சோலி கூறினார். “இந்த நடவடிக்கை அரசு எதிர்பார்ப்பது போல் ஒரு சுமையாகவே இருக்காது என்று நாங்கள் அவர்களை நம்ப வைக்க வேண்டும்." என்று மேலும் கூறினார்.

இந்த விரிவாக்கமானது, பரந்த அளவிலான அதிகாரிகளில் சுகாதாரப் பொறுப்பை அளிக்கிறது. "தற்போது, எந்த சம்பவம் நடந்தாலும், கடைநிலை சுகாதார ஊழியர் மீது குற்றம்சாட்டி அவரை இடைநீக்கம் செய்கின்றன" என்ற பச்சோலி, "ஆனால் சட்டம் வந்தவுடன், மூத்த அதிகாரி கூட பொறுப்பேற்கப்படுவார்" என்றார்.

உலகளாவிய ஒப்பீடு

ஐக்கிய நாடுகளின் (ஐ.நா.) உறுப்பினர்கள் சர்வதேச ஒப்பந்தங்களில் சுகாதாரம் என்பதை உரிமையாக உலகளாவிய அங்கீகாரம் செய்கின்றனர்; இதை ஒரு தேசிய உரிமை என்று அங்கீகரிக்கவில்லை.

73 ஐ.நா. உறுப்பினர் நாடுகள் (38%) மட்டுமே மருத்துவ பராமரிப்பு சேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கின்றன; அதே நேரம் 27 (14%) நாடுகள் 2011இல் இந்த உரிமையை பாதுகாக்க விரும்பின; 27 நாடுகள் (14%) சுகாதார உரிமைக்கு உத்தரவாதம் தந்தன; இதனால் 21 (11%) நாடுகள் தூண்டப்பட்டதாக, உலகளாவிய பொது சுகாதாரம் (Global Public Health) இதழில் வெளியான 2013 பகுப்பாய்வு காட்டியது.

நல்ல சுகாதார அமைப்புகளுக்கு சிறந்த உதாரணங்களாக, உலகளாவிய சுகாதார வழங்கும் நாடுகளாக தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் சீனா போன்றவை உள்ளன.

"பெரிய பங்களிப்புக்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன; உலகளாவிய சுகாதாரம் (UHC) மக்களுடைய வாழ்க்கையை முன்னேற்ற செய்யலாம். மேலும் பொருளாதார மற்றும் சமூக வாய்ப்புகளை மேம்படுத்தும் - தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்கும் " என்று பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், ஹார்வர்டு பப்ளிக் ஹெல்த் ரிவ்யூ 2015 இதழில் எழுதினார்.

ஒரு உலகளாவிய சுகாதாரம் என்பது, முதன்மையான உடல்நல பராமரிப்பு, விலையுயர்வு சிகிச்சைக்கான செலவை குறைத்தல் அல்லது நீக்குதல் மற்றும் "உயர்ந்த் பங்கீடு" வழங்கியது; 1970 களில் உலகளாவிய சுகாதாரத்தை தத்தெடுத்த பின்னர் கேரளா நிறைய சாதித்தது; இப்போது உலகின் சிறந்த சுகாதார குறிகளுக்கு சிலவற்றைக் கொண்டுள்ளது.

சுகாதாரம் சரிபார்ப்பு பிரிவுக்காக இங்கு இக்கட்டுரை முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

(யாதவர், சுகாதாரம் சரிபார்ப்பு.இன் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story