ஜம்மு காஷ்மீருக்கு அதிகபட்ச வரிவருவாயுடன் நுரையீரல் பாதிப்பு தரும் புகையிலை
ஸ்ரீநகர்: நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் -சி.ஓ.பி.டி (COPD) அதிகமாக உள்ள நான்கு இந்திய மாநிலங்களில் ஜம்மு-காஷ்மீரும் (J&K) ஒன்று. மாநில விற்பனை வரி தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் மேற்கோண்ட பிரத்தியேக அணுகலின்படி, 2017-18 ஆம் ஆண்டுடனான ஏழு ஆண்டுகளில் ரூ.5,530 கோடி மதிப்புள்ள புகையிலை விற்பனை நடைபெற்றுள்ளது. ஜம்முவில் அமையவுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் போல், நான்கு அதிநவீன மருத்துவமனைகளை நிர்மாணிக்க தேவையான நிதிக்கு இது சமம்.
இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மூச்சு இறைப்பு என வகைப்படுத்தப்பட்ட சி.ஓ.பி.டி., இந்தியாவில் அடிக்கடி நிகழும் இரண்டாவது ஆட்கொல்லி நோயாகும். இது, 2017ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 லட்சம் இந்தியர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக, அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய நோய்ச்சுமை ஆய்வை மேற்கோள்காட்டி, மார்ச் 2018இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. நுரையீரலின் காற்றுப்பாதைகளின் அழற்சி ஏற்படுகிறது; இது ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றும் காற்றுப்பைகளை அழிக்கிறது.
இந்தியாவில் சி.ஓ.பி.டி.க்கு முதன்மையான காரணங்களாக காற்று மாசுபாடு மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றை, மருத்துவ இதழான தி லான்செட் வெளியிட்ட 2018 ஆய்வு தெரிவிக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் சமைக்கவும், வெப்பமூட்டவும், உயிரி எரிபொருளை எரிப்பதை பரவலாக காண முடிகிறது. அத்துடன் பரவலான புகைக்கும் பழக்கமும் சேர்ந்து, மாநிலத்தில் 16-18% சி.ஓ.பி.டி. பாதிப்ப்பை ஏற்படுத்துகிறது; அதே நேரத்தில் இதில் தேசிய சராசரி 5-7% தான் என்று, புனே சார்ந்த நெஞ்சக ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குனர் சுந்தீப் சால்வி, மார்ச் 3, 2019இல் இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஹரியானா ஆகியன 100,000 மக்கள்தொகைக்கு 4,750 க்கு சமம் அல்லது அதற்கு அதிகமான சிஓபிடி புள்ளிகளை கொண்டுள்ளன உள்ளன - இது இந்தியாவில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
ஜம்மு காஷ்மீரில், ஏறத்தாழ 4,70,000 நாள்பட்ட சிஓபிடி நோயாளிகள் (ஏஇசிஓபிடி) உள்ள நிலையில், இதற்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 210 கோடி ரூபாய் செலவாகிறது; இது நான்கு மகப்பேறு மருத்துவமனைகளை அமைப்பதற்கு போதுமானது என்று ஒரு ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
"வடக்கில் ‘புகைபிடிக்கும் தலைநகராக’ ஜம்மு-காஷ்மீர் வேகமாக வளர்ந்து வருகிறது," என்று, லாபநோக்கற்ற அமைப்பான தன்னார்வ சுகாதார சங்கத்தின் ஆதாரங்களை மேற்கோள்காட்டி, தி எகனாமிக் டைம்ஸ் பிப்ரவரி 2015 இல் செய்தி வெளியிட்டு இருந்தது.
ஜம்மு காஷ்மீர் மக்களில் ஐந்தில் ஒருவர் அல்லது 20.8% பேர் புகைபிடிக்கின்றனர்; இதில் தேசிய சராசரி 10.7% ஆக உள்ளதாக, உலகளாவிய புகையிலை கணக்கெடுப்பு 2016-17 அறிக்கை தெரிவிக்கிறது. இந்த கணக்கெடுப்பின்படி, புகைபிடிக்கும் பழக்கம் அதிகம் உள்ள இந்திய மாநிலங்களில், இது ஆறாவது இடத்தில் உள்ளது. மேகாலயா, திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகியன முதல் ஐந்து இடங்களில் உள்ளதாக, அந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
சிகரெட் மற்றும் பீடி உட்பட - புகையிலை மற்றும் புகையிலை பொருட்களின் பயன்பாடு எவ்வளவு பரவலாக உள்ளது என்பதை அறிய, ஜம்மு காஷ்மீரில் இந்த பொருட்களின் மீது மாநிலத்தில் வசூலான விற்பனை வரி குறித்த 2017-18 வரையிலான ஏழு ஆண்டுகளின் தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் அணுகியது.
மாநிலத்தில் ஆட்டோமொபைல் மற்றும் மின்னணு சாதனங்கள் உட்பட 70 க்கும் மேற்பட்ட பொருட்களில், புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் தான், விற்பனை வரித்துறைக்கு மிக அதிக வருவாயை தந்துள்ளதை நாங்கள் கண்டறிந்தோம்.
Source: Jammu and Kashmir sales tax department
Note: Total consumption of tobacco and tobacco products is our analysis of the data
மாநிலத்தில் உள்ள பயனர்கள், 2017-18 வரையிலான ஏழு ஆண்டுகளில், ரூ. 5,530 கோடி மதிப்புள்ள புகையிலை பொருட்களை நுகர்ந்துள்ளது, அரசு விதித்த 40% விற்பனை வரி அடிப்படையில், எங்கள் மதிப்பீடு ஆகும். (2018-19 ஆம் ஆண்டில் மாநிலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்னர், வரி விகிதம் தற்போது 28% ஆக குறைந்துள்ளது). ஆண்டுதோறும், சராசரியாக ரூ. 800 கோடி (8 பில்லியன்) மதிப்புள்ள புகையிலை பொருட்களை இம்மாநிலம் பயன்படுத்துவது, எங்கள் பகுப்பாய்வில் வெளிப்பட்டது.
இந்த விற்பனை புள்ளி விவரங்களில் இருந்து, ஆண்டு வாரியான தகவல்கள் மாநிலத்தில் புகையிலை பொருட்களின் நுகர்வு அதிகரித்து வருவதே காட்டுகிறது; 2017-18 இல் மட்டுமே சரிவு கண்டது.
28.2% புகைப்பிடிப்பவர்களுக்கு சிஓபிடி உள்ளது
"எங்கள் ஆய்வுகளின்படி காஷ்மீரில் வெப்பத்திற்காக புகைமூட்டுவது மற்றும் புகையிலை பயன்பாடு மிக அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது," என்று, ஸ்ரீநகர் ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (SKIMS) பொது மருத்துவத் துறையின் தலைவர் பர்வைஸ் கவுல் தெரிவித்தார். "அவை இரண்டும் சிஓபிடியை ஏற்படுத்துவதற்கு முக்கிய பொறுப்பாளிகள். புகைபிடிப்பது என்பதும் உயிரி எரியும் ஒரு வடிவமாகும்” என்றார் அவர்.
காஷ்மீரில் வசிப்பவர்கள் மத்தியில் நுரையீரல் செயல்பாடு குறைந்து போவதற்கு, புகைபிடிப்பதும் ஒரு காரணமாகும் என்று கவுல் மற்றும் பிறர் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது; இது, அக்டோபர் 2016 இண்டர்நேஷனல் ஜோர்னல் ஆப் டியூபர்குலொசிஸ் அண்ட் லங்க் டிசீஸ் என்ற சர்வதேச இதழிலில் வெளியிடப்பட்டது. இக்குழுவானது, நுரையீரல் செயல்பாட்டை குறைக்கும், நாள்பட்ட காற்றோட்ட வரம்பு (CAL) நிகழ்வுகளை அளவிடுகிறது.
"எல்லா பருவங்களிலும் நாங்கள் பெறும் பெரும்பாலான நோயாளிகள் சிஓபிடியால் பாதிக்கப்படுபவர்களே அதிகம்," என ஸ்ரீ நகரில் உள்ள மார்பக நோய் மருத்துவமனை (சி.டி.எச்) மூத்த ஆலோசகர் நவீத் நசீர் ஷா கூறினார். "அவர்களில் பெரும்பாலோர் புகையிலை பயன்பாட்டு வரலாற்றை கொண்டிருப்பதை கவனித்திருக்கிறோம்" என்றார் அவர்.
மற்றொரு செப்டம்பர் 2018 ஆய்வானது, காஷ்மீரில் சிஓபிடியின் பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும், இது புகைப்பழக்கத்துடன் தொடர்புடையது என்றும் தீர்மானத்திற்கு வந்தது.
இந்த ஆய்வின்படி, புகைபிடிக்காதவர்கள், முன்பு புகைப்பிடித்தவர்கள் மற்றும் தற்போதைய புகைப்பிடிப்பவர்களில் சிஓபிடி பாதிப்பு முறையே 2.7%, 22% மற்றும் 28.2% ஆகும். மேலும், சிஓபிடி பொருளில் 59.5% பேர் புகையிலை வெளிப்பாட்டின் வரலாற்றைக் கொண்டுள்ளனர்.
ஆபத்துகள் குறித்த குறைந்த விழிப்புணர்வு
புகையிலை பயன்பாடு, குறிப்பாக சிகரெட் புகைத்தல், காஷ்மீரில் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது. காரணம், போதிய விழிப்புணர்வும் உரிய ஆலோசனைகள் இல்லாததும் தான் என்று, ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரி (ஜி.எம்.சி) பேராசிரியரும், மூத்த மனநல மருத்துவருமான அர்ஷத் உசேன் தெரிவித்துள்ளார்.
"புகையிலை பயன்பாட்டின் இத்தகைய பரவலுக்கு, குறிப்பாக புகைப்பழக்கத்திற்கு உதவுவது, காஷ்மீரின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய சவால்கள் மட்டுமல்ல; மக்கள் எதிர்கொள்ளும் மிகுந்த மன அழுத்தமும் காரணமாகிறது; கொந்தளிப்பான பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழ்நிலைகள் முன்வைக்கப்படுவதும் கூட,” என்று உசேன் கூறினார். "மக்கள் கவலை மற்றும் மன அழுத்தத்தை அனுபவிக்கும் போது, புகையிலை போன்ற பொருட்களின் பயன்பாட்டை நாடி, அதன் மூலம் விரும்பத்தகாத உணர்வுகளை நிர்வகிக்க முனைகிறார்கள்" என்றார் அவர்.
ஜம்மு காஷ்மீர் மக்கள்தொகையில் 45% பேர் வரை தீவிர மன உளைச்சலை அனுபவிப்பதாக, காஷ்மீரில் மன ஆரோக்கியம் குறித்த, மெடிசின்ஸ் சான்ஸ் பிரண்டைர்ஸ் (அல்லது டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ், சர்வதேச மருத்துவ மனிதாபிமான அமைப்பு) மேற்கொண்ட ஒரு ஆய்வின் 2016 மே முடிவுகள் கூறுகின்றன.
"காஷ்மீர் பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 18 லட்சம் பெரியவர்கள் (மக்கள் தொகையில் 45%) குறிப்பிடத்தக்க மன உளைச்சலின் அறிகுறிகளுடன் உள்ளனர்" என்று அறிக்கை கூறியுள்ளது.
இப்பகுதியில் புகைபிடிப்பிற்கு எதிராக தீவிர பொது பிரச்சாரம் இல்லாததை உசேன் சுட்டிக்காட்டினார்.“எடுத்துக்காட்டாக, சிறிது காலத்திற்கு முன்பு வரை, அலுவலகங்கள் அல்லது பொது இடங்களில் புகைபிடித்தால் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது- ஆனால் இது எளிதாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது; மக்கள் அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தொடர்ந்து புகைபிடிக்கின்றனர், ”என்றார் அவர்.
புகைபிடித்தல் அதிகரித்து வருவது, சுவாச நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக மட்டுமின்றி, இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டின் நுழைவாயிலாகவும் உள்ளது என்று அர்ஷத் குறிப்பிட்டார். "இந்த சூழ்நிலையைத் தவிர்க்க, விளையாட்டு போன்ற செயல்களில் இளைஞர்களை எவ்வாறு ஈடுபடுத்துவது என்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்," என்றார் மனநல மருத்துவரான அவர்.
இப்பிராந்தியத்தில் ஆயுத மற்றும் அரசியல் மோதலின் புதிய அலைகள், புகையிலை பயன்பாட்டைத் தூண்டுவதாக, ஸ்ரீநகர் மேம்பட்ட கல்வி ஆய்வுகள் நிறுவனத்தின் (IASE) உளவியல் ஆசிரியர் மாலிக் ரோஷன் அரா கூறினார். "தொடர்ச்சியான வன்முறை மற்றும் அரசியல் அமைதியின்மையால், பெரும்பாலும் மக்கள் தங்களது வீடுகளில் அடைந்து கிடக்க வேண்டியுள்ளது. அதுவும் கவலைக்குரிய அம்சம்," என்று அவர் கூறினார். "எனவே, மக்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட புகையிலையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக புகையிலை பயன்பாடு நம் கலாச்சாரத்தில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக கருதப்படுகிறது” என்றார்.
சிஓபிடி நோயாளிகள் மற்றும் உதவியாளர்களுக்கான அதன் அதிக செலவு
2019 ஜனவரி 22 இல், தி அன்னால் ஆப் குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான செலவுகள் மற்றும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் வேலை இழப்பு நாட்கள் பற்றிய தரவுகளை பகுப்பாய்வு செய்தது.
"எங்கள் ஆய்வில் இந்தியாவில் சிஓபிடியின் கடுமையான அதிகரிப்புகள் (AECOPD) செலவுகள், சேர்க்கைக்கு ரூ. 44,390 என்றும் பெரும்பாலும் (71%) நேரடி மருத்துவமனை செலவுகள் தொடர்பானதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது," என்று ஆய்வு தெரிவிக்கிறது. "முக்கியமாக, மொத்த செலவினங்களில் சுமார் 30% போக்குவரத்து, மருந்துகள் மற்றும் கண்டறியும் சோதனைகள் மற்றும் பாக்கெட்டில் இருந்து செலவிடப்படும் வெளி செலவுகள் தொடர்பானவை. இந்த முடிவுகள் ஏ.இ.சி.ஒ.பி.டி. கணிசமான செலவுகளை உருவாக்குகிறது; இது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பெரும் பொருளாதார சுமையாக இருக்கும்” என்று ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வானது, நோயின் நிதிச்சுமையை கணக்கிட்டது: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் மக்கள் தொகை 1.2 கோடிக்கும் அதிகமாக உள்ளது. 40 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் சிஓபிடியின் 19% “எதிர்பார்க்கப்பட்ட பாதிப்பு” காரணமாக, மாநிலத்தில் 470,000 நோயாளிகள் உள்ளனர். "சிஓபிடி நோயாளிகளில் குறைந்தது பாதி பேரின் நிலை வருடத்திற்கு இருமுறை மோசமாகும் என்று கருவதானால், ஜம்மு-காஷ்மீரில் ஏஇசிஓபிடிக்கு சுமார் ரூ .2.1 பில்லியன் செலவிடப்படுகிறது என்று மதிப்பிடலாம்" என்கிறது ஆய்வு.
Given the low level of awareness about the dangers of smoking, most experts suggest a robust campaign against the habit, in which users would also be informed of the high cost of dealing with COPD.
There is an urgent need of starting a robust campaign against smoking and use of other tobacco products. People have to be made aware of the symptoms of diseases like COPD which are directly related to smoking. People should also be informed about the cost of treating COPD - this can act as a deterrent.
-- Parvaiz Koul, Head of General Medicines Department at Sher-e-Kashmir Institute of Medical Sciences (SKIMS)
Even in the 21st century, cigarette smoking and the use of other tobacco products enjoy social acceptable in Kashmir. We have to make people aware about the harmful effects of using tobacco. We also need to tell people that smoking is the gateway for drug addiction; a large majority of drug addicts move on drug addiction from smoking habits. The government should also make sports and other activities attractive for people by creating infrastructure.
-- Arshad Hussain, senior Psychiatrist and a professor at Government Medical College (GMC).
Creating a peaceful atmosphere in the state can solve half of the problem within months. I have no doubts that anxiety is one of the reasons why more and more people resort to smoking or use of other tobacco products. And I think people should be made aware what smoking and tobacco use is potential of doing to their lives.
-- Malik Roshan Ara, Assistant Professor, Institute of Advanced Studies in Education (IASE)
(பர்வேஸ், ஸ்ரீநகரை சேர்ந்த பத்திரிகையாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.