கோவிட் 19 உங்களது நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது

கோவிட் 19 உங்களது நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது
X

உலகெங்கிலும் கோவிட்19 - கொரோனா வைரஸ் (SARS-CoV-2) தொற்றால் ஏற்படும் நோயானது, நோயாளிகளின் சுவாச அமைப்புகளை பாதிக்கிறது. தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, நுரையீரல் எவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பல அறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி எனப்படும் மெர்ஸ் (MERS) போன்ற வைரஸ்கள் மிகவும் ஆபத்தானவை; அதிக தொற்றுநோயாக இருக்க வாய்ப்பில்லை என்று, அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் கிளினிக்கில் நுரையீரல் நோய்க்குறியியல் அமைப்பின் சஞ்சய் முகோபாத்யாய், இந்த நேர்காணலில் நம்மிடம் பகிர்கிறார். மறுபுறம் சளியை ஏற்படுத்தும் வைரஸ்கள் மிகத்தொற்றாக இருக்கின்றன, ஆனால் அவை ஆபத்தானவை அல்ல. சார்ஸ்-கோவி-2 (SARS-CoV-2) இந்த உச்சநிலைகளுக்கு நடுவே உள்ளது, இது ஏன் வித்தியாசமானது என்பதை முகோபாத்யாய் விளக்குகிறார்.

அமெரிக்காவில், நோயின் ஆரம்பகால போக்குகளை பார்த்தால், சமூக விலகல் நன்கு கடைபிடித்த இடங்களில் குறைவான நோய் பரவல்களை பார்க்க முடிகிறது என்கிறார்; வைரஸை எதிர்த்து செயலாற்ற உடலில் யாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லையோ, அந்த நபரின் உடல்நிலையானது பாதிக்கப்படுவதற்கு முன்பு, எவ்வாறு வைரஸுக்கு எதிராக செயல்படும் என்பதை தீர்மானிக்கிறது.

முகோபாத்யாய், முன்பு அறுவை சிகிச்சை நோயியல் நிபுணராக இருந்தார்; சமூக ஊடகங்களில் உலகளாவிய நோய் இயல் கல்வியின் தலைவராகவும் உள்ளார்.

இந்த வீடியோ நேர்காணலில் இருந்து திருத்தப்பட்ட பகுதிகள்:

கோவிட்19 வைரஸ் ஏன் நுரையீரலை இலக்காக கொள்கிறது? ஒரு நோய்த்தொற்று நபரைத் தாக்கிய பின்னர், அது எவ்வாறு முன்னேறி இயங்குகிறது?

தற்போது உலகளாவிய தொற்றுநோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் -2 (SARS-CoV-2), கொரோனா வைரஸ்களின் குடும்பத்தின் ஒரு பகுதியாகும். கொரோனா வைரஸ்கள் - இதுவும் முந்தைய சார்ஸ் கோவ்-1 அசல் சார்ஸ் [தீவிர கடும் சுவாச நோய்க்குறி] தொற்றுநோயை ஏற்படுத்தியது) ஊரடங்கு என்ற முக்கிய வழிமுறை மூலம் பரவலை தடுக்க நினைக்கிறீர்கள். எனவே, வைரஸ் அதன் சக்தியை பயன்படுத்தி பல்வேறு வகையான செல்களை திறக்க முயற்சிக்கிறது. சார்ஸ் கோவ்-1 மற்றும் சார்ஸ் கோவ்-2 இரண்டும் தங்களிடம் இருக்கும் சாவிக்கேற்ற பூட்டு என்ற செல்களை கண்டுபிடித்துள்ளன. அத்தகைய பூட்டு, மருத்துவச்சொல்லில் “ஏற்பி” என்று அழைக்கப்படுகிறது. உடலில் உள்ள சாதாரண உயிரணுக்களில், இத்தகைய செயல்படும் ஏற்பிகள் உள்ளன; அவை இயல்பான செயல்பாடுகளைக் கொண்டுள்ளன, ஆனால் வைரஸ்கள், அந்த ஏற்பிகளை உடலில் நுழைவதற்காக சுரண்டுகின்றன.

சார்ஸ் கோவ்-2 ஐ பொறுத்தவரை, ஏற்பிகள் உங்கள் தொண்டையின் பின்புறம் மற்றும் மூக்கின் செல்கள் மீது இருக்கும் - இது நாசோபார்னக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. எனவே, வைரஸ் அதில் இணைகிறது. வைரஸ்கள், உங்களுக்கு தெரிந்தவாறு, அதன் சொந்தமாக பிரதியாக மாறாது. அவற்றால் பிரிக்க இயலாது. அவற்றால் பல வைரஸ்களாக பெருகி, உருவாக்க முடியாது. எனவே, அவை ஒரு செல்லுக்குள் சென்றாக வேண்டும்; பின்னர் அவை பல்கிப் பெருக, செல்களை பயன்படுத்துகின்றன. சார்ஸ் கோவ்-2 வைரஸ் செல்லுக்குள் செல்கிறது (அவற்றை மருத்துவ வாசகங்களில் எபிதீலியல் செல்கள் என்று அழைக்கிறோம்) அவை உங்கள் நாசோபார்னெக்ஸின் பின்புறத்தின் உயிரணுக்களுக்குள் சென்று பிறகு, அவை கீழே பயணிக்கின்றன; நுரையீரல் வரை செல்கள் பாதிக்கப்படுகின்றன.

உங்கள் கேள்விக்கான ஒரு சுருக்கமான பதில், சார்ஸ் கோவ்-2 பயன்பாடுகளின் ஏற்பிகள் [சுவாசக் குழாய்] செல்களில் இருப்பதால், அந்த உயிரணுக்களுடன் இணைகிறது. ஏற்பிகளை ஏஸ்-2 (ACE 2) என்று அழைக்கிறார்கள்.

வைரஸின் பாதையை நீங்கள் விவரித்த நிலையில், அது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எவ்வாறு பரவுகிறது?

வைரஸ் உடலை தாக்கும்போது, அது உண்மையில் செல்களுக்குள் நுழைகிறது. நீங்கள் தும்மும்போது அல்லது இருமும்போது, வைரஸ் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது; இது ஒரு துளி என அழைக்கப்படுகிறது. அது காற்றில் உள்ளது; அது காற்றில் தொற்றி பின்னர் ஒரு மேற்பரப்பில் விழுகிறது. தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் மக்கள் இதை பற்றிய பரிசோதனைகளை செய்துள்ளனர். வைரஸ் ஒரு உலோகம் போன்ற கடினமான மேற்பரப்பில் பரவினால், அது ஓரிரு நாட்கள் வரை நீடிக்கும் என்பதை அவர்கள் கண்டிருக்கிறார்கள். நீங்கள் அந்த மேற்பரப்பைத் தொட்டு, பின்னர் உங்களது வாய் அல்லது கண்களைத் தொட்டால், அந்த நீர்த்துளியை நீங்களே உங்களுக்கு கடத்தும் வாய்ப்பாகிவிடுகிறது.

இது, ஒரு வைரஸை விட சற்று வித்தியாசமானது; நீண்ட நேரம் காற்றில் இருக்கும். நீங்கள் அதை காற்றில் இருந்து சுவாசிக்கிறீர்கள். இது மேற்பரப்பில் பரவினால், அதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்று தோன்றும்; ஆனால், நீங்கள் அதை பிறகு மேற்பரப்பில் இருந்து பெறுவீர்கள்.

அந்த வைரஸ், மேற்பரப்பில் இவ்வளவு காலம் எவ்வாறு உயிர் வாழ்கிறது?

இதுபற்றிய வழிகள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் வைரஸ்கள் ஒரு செல்லுக்கு வெளியே (வெளிப்புறமாக) சிறிது நேரம் தங்கலாம். ஆனால் அவை இரண்டு, மூன்று நாட்கள் இருக்கும் என சோதனை முடிவுகள் காட்டுகின்றன. இதற்கு எது சரியான வழிமுறை என்பது எனக்குத் தெரியவில்லை.

சீன ஆராய்ச்சியாளர்களின் ஆரம்பகட்ட ஆய்வை நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள்; இந்த ஆராய்ச்சி, வுஹானில் இருந்த நோயாளிகளை கண்டது. அதன் 54 முடிவுகளில் 50, நோயாளிகளுக்கு கடும் சுவாசக்கோளாறு நோய்க்குறி (ARDS) இருந்ததால் இறந்தனர் என்பதாகும். இந்நோய் அப்படித்தான் ஆபத்தாக மாறியது. இது பற்றி சொல்லுங்கள்.

அந்த ஆய்வில் இடம் பெற்றிருந்தவர்கள் அனைவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் - அவர்கள் நோய்த்தொற்றின் கடுமையில் இருந்தவர்களது முடிவு தான்; அவர்கள் லேசான அறிகுறிகளுடன் வீட்டில் இருப்பவர்கள் அல்ல. எனவே, அவர்கள் மருத்துவமனையில் இருப்பவர்களையும், கடும் சுவாசக்கோளாறு நோய்க்குறி (ARDS) ஐ உருவாக்கிய [அந்த] நபர்களைமே பார்த்தார்கள்.

வைரஸ் நுரையீரலுக்குள் செல்லும்போது, அது சிறிய இரத்த நாளங்களில் (தமனியின் மிகச்சிறிய கிளை என்று நினைக்கலாம்) கசிந்து ஆல்வியோலியை (நுரையீரலில் இருக்கும் நுண் காற்று பைக்கள்) சேதப்படுத்துகிறது. அவ்வகையான சேதத்தை, நெஞ்சக எக்ஸ்ரே அல்லது மார்பு சி.டி.யில் பார்த்தால், அது ஒரு சாதாரண எக்ஸ்ரே அல்லது சி.டி.யை தான் காட்டுகிறது - இது கருப்பு நிறமாக இருக்கிறது, ஏனெனில் அதற்குள் காற்று உள்ளது - இருபுறமும் முற்றிலும் வெண்மையாக மாறும். குறைந்தது தொற்றுநோய் உள்ள சிலரில், ஏ.ஆர்.டி.எஸ். ஏற்பட்ட நோயாளிகள் வென்டிலேட்டரில் இருப்பவர்களாக உள்லனர்; அவர்கள் மிகவும் மோசமான சூழலை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உயிர் பிழைக்க இயலாதவர்களாகவும் இருக்கலாம்.

கோவிட் நோயாளிகளை மருத்துவமனைகள் அனுமதிக்க ஏ.ஆர்.டி.எஸ். காரணமா, ஏனென்றால் அவர்களுக்கு ஏ.ஆர்.டி.எஸ். இருக்க வாய்ப்புள்ளது தானே?

அறிகுறிகள் உள்ளவர்களால் சமூகத்திலும் அது பரவும் என்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆமாம், அவர்களில் கடுமையான அறிகுறிகள் உள்ள சிலரையும் அவர்கள் அனுமதிக்கின்றனர். ஏ.ஆர்.டி.எஸ்.- ஐ உள்ளவர்களுக்கு மிகவும் மூச்சுத்திணறல் இருக்கும். அவர்கள் வென்டிலேட்டரில் இருக்க வேண்டியவர்கள்.

வென்டிலேட்டரில் இருப்பதால் நோயாளி குணமடைந்துவிடுவார் என்பதல்ல. வென்டிலேட்டர் இல்லாமல், அவரால் சுவாசிக்க முடியாது என்பதுதான் பொருள். ஆல்வியோலஸின் சுவர் ஏ.ஆர்.டி.எஸ். ஆல் மிகவும் சேதமடைந்துள்ளது; எனவே, வென்டிலேட்டர் இல்லாவிட்டால் அந்த நோயாளிகள் இறந்துவிடுவர். அவர்களுக்கு சுவாசக்காற்றின் உதவி தேவை. உண்மையில் நாம், அவர்களின் நுரையீரலுக்குள் ஆக்ஸிஜனை தான் செலுத்துகிறோம், இல்லையெனில் அதை செலுத்த இயலாது.

மறுபுறம், நீங்கள் குறைந்த மூச்சுத் திணறல் அல்லது ஆக்ஸிஜன் பெறுவதாக இருந்தால், நீங்கள் கோவிட்19 இன் மேம்பட்ட நிலையை கொண்டிருப்பதாக கருதலாம் அல்லவா

அது ஒரு நல்ல விஷயம். முன்பு நன்றாக இருந்தவர்கள், பின்னர் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால், ஒருவேளை சுய தனிமைப்படுத்தப்படுவதோடு சரி. ஆனால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால், மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும். நோயின் பிந்தைய நிலைமை உங்களுக்கு ஏற்படலாம் என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம்.

நுரையீரல் உண்மையில் மோசமடைந்து வரும் நிலையில் வென்டிலேட்டர் உதவிக்கு, அது வழிவகுக்கிறது; சிகிச்சைக்கு பிறகு நுரையீரலை நம்மால் மீண்டும் வலுப்படுத்த முடியுமா?

இல்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான எந்த வழியையும் நான் அறிந்திருக்கவில்லை. அதனால் தான் சமூக விலகல் மிகவும் முக்கியமானது - ஏனென்றால் இதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள வேறு வழியில்லை. முதலாவது, தொற்றுநோய் பரவலை தடுக்க விரும்புகிறோம். ஏனென்றால் தொற்று நோய் பரவினால் லேசான பாதையில் செல்வீர்களா அல்லது கடுமையான பாதையில் செல்கிறீர்களா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. இது குறித்து நம்மால் கணிக்கவும் இயலாது.

பல இடங்களில் நடந்த ஆய்வுகளில் இருந்து [வயதானவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட வாய்ப்புகள் அதிகம்] என்பது நமக்குத் தெரிகிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், நர்சிங் ஹோம்ஸ் அல்லது நீண்டகால பராமரிப்பு வசதிகளில் ஒரு ஆய்வு நடந்தது. அங்கு வசிப்போர் அனைவரும் நோய்வாய்ப்பட்ட வயதானவர்கள், சராசரி வயது 83 மற்றும் அவர்கள் அனைவருக்கும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற அடிப்படை பிரச்சனைகள் இருந்தன. நீண்டகாலம் பராமரிக்கப்படும் குடியிருப்பாளர்கள், பரிசோதிக்கப்பட்ட அனைவருக்கும், இந்த நோய் இருந்தது மற்றும் அவர்களில் பெரும் பகுதியினர், கிட்டத்தட்ட 33% பேர் இந்த நோயால் இறந்தனர். அவர்களை கவனித்துக் கொண்ட ஊழியர்களை பார்த்தபோது, அவர்களில் சிலருக்கு தொற்று ஏற்பட்டது. ஆனால் அவர்கள் இறக்கவில்லை, ஏனெனில் அவர்கள் இளம் வயதினர் மற்றும் ஆரோக்கியமாக இருந்தனர்.

எனவே இப்போது நன்கு தெரியவந்துள்ள விஷயம் என்னவென்றால், நீங்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால், கொரொனா பாதிப்பில் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு; வயதானவர்களை விடவும், நோயெதிர்ப்பு சக்தி உள்ளவராக இருப்பதால், நோயின் அடிப்படை நிலையில் இருப்பவர்களை விடவும் உங்களுக்கு குறைவாக இருக்கும். எனவே, தொற்றுநோயில் இருந்து குறிப்பாக அதிக ஆபத்தில் உள்ளவர்களிடம் இருந்து நீங்கள் விலக்கியிருக்க விரும்புகிறீர்கள்.

எனவே, இது ஒரு விளையாட்டு வீரராக இருந்தால், எனக்கு வலுவான நுரையீரல், சிறந்த சுவாச திறன் உள்ளது; அல்லது நீச்சல் வீரன் எனில் சுவாசத்தை என்னால் அடக்க முடியும் என்பது பொருளல்ல. கோவிட்19 நுரையீரலை தாக்கும் போது அதை எதிர்க்கும் வகையில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவரா என்பதை குறிப்பதாகும்?

ஆமாம். இங்கே ஒரு வேறுபாடு உள்ளது. உங்களுக்கு தொற்றில் இருந்து விடுபடுவதற்கான எதிர்ப்பு சக்தி இல்லை. உங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம்; எல்லா வயதினருக்கும் மக்கள் தொற்று ஏற்படுகிறது. ஆனால் நீங்கள் ஒருமுறை நோய்த்தொற்றுக்கு ஆளானால், உங்கள் உடல்நலம் எவ்வாறு ஆரம்பத்தில் இருந்தது; பின்னர் நீங்கள் எவ்வாறு இருப்பீர்கள் என்பதை இது தீர்மானிக்கிறது. அதுதான் உண்மையில் முக்கிய வேறுபாடு.

வென்டிலேட்டர் விஷயத்திற்கு வருவோம். உங்கள் நுரையீரல் செயல்படாத நிலையில், நீங்கள் வென்டிலேட்டர் உதவியை பெற வேண்டும் என்றீர்கள். எந்த கட்டத்தில் நுரையீரலும், உடலும் பொதுவாக வென்டிலேட்டர்கள் உதவி தேவைப்படுகிறது? கடைசி கட்டத்தில் இருப்பதானால், அதற்கு காரணமாக வாய்ப்புகள் இருண்டதா?

இது ஒரு நல்ல கேள்வி. இதற்கான பதில், ஆம். வென்டிலேட்டர் தேவைப்படும் நேரத்தில், ஏற்கனவே நோயில் மிகவும் மேம்பட்ட நிலையில் இருக்கிறீர்கள்; அதனால் தான் நீங்கள் வென்டிலேட்டர் பெற்றதும் நீங்கள் குணமடைவீர்கள் (வென்டிலேட்டர் குணப்படுத்தவில்லை, உடல் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் போது இது உங்களுக்கு உதவுகிறது) மற்றும் வென்டிலேட்டர் தேவையில்லை என்ற நிலையில், நீங்கள் நோயில் இருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே, ஒரு சதவீத நோயாளிகள் குணமடைந்து வழக்கமான மருத்துவமனை வார்டுக்குச் செல்வார்கள் அல்லது வீட்டிற்குச் செல்ல டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். அவர்கள் மீண்டு வருகிறார்கள். இது ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பகுதியே. இப்போது, நீங்கள் வென்டிலேட்டரில் எவ்வளவு அதிகமாக இருக்கிறீர்களோ, பிறகு அது கிடைக்காமல் போனால், மீட்கும் வாய்ப்புகள் குறைவு. நேரம் இங்கே ஒரு முக்கியமான காரணியாகும்.

உடலில் மற்ற உறுப்புகள் தோல்வியடைந்தால், குறிப்பாக வயதானவர்களுக்கு இது காரணமாகுமா?

ஆமாம். நுரையீரல் மேலும் மேலும் சேதமடைகிறது. நுரையீரலின் சுவர்கள் - மெல்லியதாக இருக்க வேண்டும் [இதனால்] ஆக்ஸிஜன் முன்னும் பின்னுமாக செல்லக்கூடியது - படிப்படியாக தடிமனாக வருகிறது, மேலும் ஆக்ஸிஜன் இரத்த ஓட்டத்தில் செல்ல, ஒரு தடையை உருவாக்குகிறது.

இந்த நோயைப் பற்றிய சிறந்த புரிதலை அல்லது இது மனிதர்களைப் பாதிக்கும் விதத்தை அல்லது அது ஒரு குறிப்பிட்ட அளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தும் விதத்தை, இதுவரை தரவுகள் உங்களுக்கு அளித்திருக்கிறதா?

ஆமாம். ஆரம்பத்தில், இந்த வைரஸ் இன்ஃப்ளூயன்ஸா அல்லது மற்றவர்களை விட வேறுபட்டது என்று ஏன் புரியாமல் போனது. ஆனால், ஒரு வைரஸாக இருப்பதால், அதை நான் விளக்க விரும்பும் வழி, முக்கியமான இரண்டு விஷயங்கள் உள்ளன: ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு (அதாவது தொற்று நோய்) எடுத்துச் செல்வது எவ்வளவு எளிது? மேலும், அது யாரையாவது பாதிக்கும்போது அது எவ்வளவு ஆபத்தானது? என்பதாகும்.

எனவே, வைரஸ்கள் மிகவும் ஆபத்தானவை… உதாரணத்திற்கு மெர்ஸ் [மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி] எடுத்துக் கொள்வோம். இது பாதித்த தருணத்தில், அப்போது அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் இறந்தனர். எனவே, மற்றவர்களுக்கு தொற்றுநோயாக இருக்க, பாதித்தவர்கள் ஒருபோதும் வாய்ப்பில்லை. ஆகவே, அந்த அளவிலான மரணம், அது ஒருபோதும் பரவுவதில்லை, மேலும் நோய்த்தொற்று வகை தானாகவே இறந்துவிடுகிறது, ஏனெனில் அது தொற்றும் மக்களை கொன்று விடுகிறது. எனவே இது ஒரு பக்கம் உள்ளது. மறுபக்கம், ஜலதோஷத்தை உண்டாக்கும் கொரோனா வைரஸ்கள் உள்ளன; எனவே இது எளிதில் பரவும் தொற்றுநோயாகும்; இது ஒவ்வொருவரிடமும் பரவுகிறது; ஆனால் பலரைக் கொல்லாது, எனவே இது சமூகத்தில் அவ்வளவு பிரச்சினை அல்ல.

சார்ஸ் கோவ்-2 அந்த இரண்டு உச்சநிலைகளுக்கு நடுவே உள்ளது. எனவே, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிது காலம் அறிகுறி தெரியாதவர்களாக உள்ளனர். அவர்கள் நடமாடி மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படுத்துகிறார்கள். பின்னர், சளி இருமலை ஏற்பட்டு அதன் பின்றகு ஏழு நாட்களுக்கு பிறகே அறிகுறிகள் மற்றவர்களுக்கு ஆபத்தான இந்த வைரஸின் அறிகுறி தெரிய தொடங்குகிறது. எனவே, சார்ஸ் கோவ்- 2 இவ்வழியில் செயல்படுவதால், இது தொற்று மற்றும் ஆபத்தானது என்பது இப்போது நன்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வழியில் இதை ஏற்படுத்துவதற்கு வைரஸ் காரணமாகிறது… வைரஸ்கள் மத்தியில் இது தனித்துவமான நிலையை அது ஏன் பிடித்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளத்தொடங்கி விட்டோம்.

நாம் ஒரு தடுப்பூசியை கண்டறியும் போது ( அடுத்து வரும் மாதங்கள் அல்லது ஆண்டில் இதை கண்டுபிடிப்போம்) வாழ்க்கையும் வாழ்க்கை முறைகளும் மாறும். இதை படிப்பவர்கள் / பார்ப்பவர்களுக்கு நீங்கள் ஏதாவது பரிந்துரைக்கிறீர்களா?

திறந்த மனதுடன் இருங்கள் என்பதே என் பரிந்துரை. சந்தேகம் இருப்பது பரவாயில்லை; இதுபற்றி நீங்கள் அனைத்தையும் படிப்பது சரி, ஆனால் செயலாற்றுவதில் நீங்கள் இரு பாதைகளை தேர்வு செய்யலாம்: எனக்கு கவலை இல்லை, நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று நீங்கள் நன்றாக சொல்லலாம். மற்றொன்று அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், வீட்டிலேயே இருங்கள் மற்றும் அனைத்து பரிந்துரைகளையும் பின்பற்ற வேண்டும். எனது பரிந்துரை: அதிக எச்சரிக்கையுடன் இருங்கள். சில விஷயங்கள் தவறானவை என்று ஆகிவிட்டால், நீங்கள் இழக்க எதுவுமிருக்காது. உங்களை, உங்களது குடும்பம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள். எனது பரிந்துரை என்னவென்றால், அதிக எச்சரிக்கையுடன் இருங்கள், சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்; பெரிய கூட்டத்திலும் கூடாதீர். உங்கள் குடும்பத்தினருடன் கூட்டமாக இருக்காதீர்கள்; உங்கள் வீட்டு பெரியவர்கள் மற்றும் பெற்றோர்கள் நீண்ட காலத்திற்கு உங்களுக்கு நன்றி சொல்வார்கள்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story