குறையும் எச்ஐவி விகிதம். இந்தியாவின் பாலியல் தொழிலாளர்களுக்கும் ஏதோ கொஞ்சம் செல்கிறது

குறையும் எச்ஐவி விகிதம். இந்தியாவின் பாலியல் தொழிலாளர்களுக்கும் ஏதோ கொஞ்சம் செல்கிறது
X

புதுடெல்லி: எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இந்திய பாலியல் தொழிலாளர்களின் விகிதம் 2017 உடனான நான்கு ஆண்டுகளில் குறைந்துள்ளது. முன் எப்போதையும் விட அதிக ஆணுறை பயன்பாடு மற்றும் நோயைகட்டுப்படுத்த நிதி பங்களிப்பு 21% உயர்ந்துள்ளது என்று தேசிய சுகாதார தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்து தெரிவித்துள்ளது.

எனினும், பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை, களங்கம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றிலும், இந்திய மாநிலங்கள் அவர்களை எப்போது, எங்கு இருக்க வேண்டும் என்பதிலும், அவர்களுக்கான நிதி மற்றும் மருந்துகள் கிடைக்காதது ஆகியவற்றில் சிறிது மாற்றங்கள் இருக்க வேண்டும் தெரிகிறது.

கடந்த 2018இல், 91% க்கும் மேலான இந்திய பாலியல் தொழிலாளர்கள் ஆணுறை பயன்படுத்தியுள்ளனர்; மேலும் 1.6% க்கும் மேலான பெண் பாலியல் தொழிலாளர்கள் 2017 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி (மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ்) மற்றும் எய்ட்ஸ் (தீவிர நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்குறி) கொண்டிருக்கவில்லை. 2013 இல் 2.75% ஆக இருந்த நிலையில், பொது மக்களிடையே இது சரிவை பிரதிபலிப்பதாக, கிடைக்கக்கூடிய சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.

கடந்த 2017 வரையிலான நான்கு ஆண்டுகளில், “எச்.ஐ.வி பாதிப்பு விகிதம்”, பரிசோதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிலும் 4.4% முதல் 2.7% வரை குறைந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின் அமைப்பான யு.என்.எய்ட்ஸ் (UNAIDS)இன் 2018 அறிக்கை மற்றும் இந்தியாவின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு என்.ஏ.சி.ஓ. (NACO) அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 21.7 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது. 2017 வரையிலான ஏழு ஆண்டுகளில், புதிய நோய்த்தொற்று 27% என - அதாவது 120,000 என்றிருந்தது 88,000 ஆக குறைந்துவிட்டது.

"பாலியல் தொழிலாளர்கள் இடையே எச்.ஐ.வி பாதிப்பு குறைந்து வருவதை இது குறிக்கிறது" என்று பெயர் வெளியிட விரும்பாத என்.ஏ.சி.ஓ. பிரதிநிதி கூறினார்.

எச்.ஐ.வி / எய்ட்ஸ் பாதிப்பை தீர்மானிப்பதில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் மற்றும் திருநங்கைகள், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் அதிக ஆபத்துள்ள குழுக்களாக கருதப்படுகிறார்கள்.

"உலகளவில், பொது மக்களுடன் ஒப்பிடும் போது, பாலியல் தொழிலாளர்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து 13 மடங்கு அதிகம். ஏனென்றால் அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள்; நிலையாக ஆணுறை பயன்பாட்டை மேற்கொள்ள இயலாது; மேலும், வன்முறை, குற்றச்செயலுக்கு பொறுப்பு மற்றும் ஓரங்கட்டப்படுதல் ஆகியவற்றையும் அவர்கள் அனுபவிக்கின்றன, ”என்று யு.என்.எய்ட்ஸ்- இன் 2018 ஆய்வு கூறுகிறது.

புதிய தரவானது, பாலியல் தொழிலாளர்கள் இப்போது சிறந்த வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்ற பொருளை தரவில்லை.

சிவப்பு நிற லிப்ஸ் ஸ்டிக் பூசி தனது உதட்டை அலங்கரித்து கொண்டு, பளபளப்பான காதணிகளுடன் நீண்ட பாவாடை அணிந்த, மேற்கு உத்தரபிரதேச நகரமான நொய்டாவை சேர்ந்த திருநங்கைகளில், பாலியல் தொழிலாளியாக இருக்கும் ராம்கலி குமார் (26), அத்துமீறும் வாடிக்கையாளர்களைப் பற்றி பேசினார்.

"நான் ஒரு வாடிக்கையாளருடன் செல்ல ஒப்புக்கொண்டபோது, பல ஆண்கள் இதுபோன்ற மகிழ்ச்சிக்காக காத்திருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன்," என்று அவர் கூறினார். இவர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமது குடும்பத்தினரால் ஒதுக்கிவைக்கப்பட்டு கைவிடப்பட்டவர். இப்போது அவரது ஒரே குடும்பம் பசெராவில் இருக்கிறது. அது அனைத்து பாலின பாலியல் தொழிலாளர்களுக்கும் தங்குமிடம் வழங்குகிறது.

காவல்துறையினரின் அடக்குமுறை, துஷ்பிரயோகம் மற்றும் இடைத்தரகர்கள், வாடிக்கையாளர்களின் வன்முறை பொதுவானது என்று இந்தியா-எச்.ஐ.வி கூட்டணியின் திட்ட அலுவலர் ஷம்னு ராவ் கூறினார். "பாலியல் தொழிலாளருக்கு எதிரான வன்முறை மற்றும் களங்கம், பாலியல் தொழிலாளர் கேட் கீப்பர்களின் ஈடுபாட்டை பொறுத்தது" என்று ராவ் கூறினார். கேட்கீப்பர்கள் என்பது, விபச்சார உரிமையாளர்கள் மற்றும் பிம்ப்ஸ் அல்லது இடைத்தரகர்களை உள்ளடக்கியது.

"பாலியல் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களை தன்னிச்சையாக அணுகும்போது, காவல்துறையினர் அத்துமீறல், மிருகத்தனத்திற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன; அதே நேரம் இடைத்தரகர்களின் ஈடுபாட்டால் மற்றொரு வகையான கட்டமைப்பு வன்முறைக்கு வழிவகுக்கிறது," என்று ராவ் கூறினார்.

வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்ந்தாலும், எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று வீதம் வீழ்ச்சியடைந்து வருகிறது; இதில், பல இந்திய மாநிலங்கள் மற்றவற்றை விட மோசமாக உள்ளன.

எச்.ஐ.வி பரவல் மற்றும் பாதிப்பு

மகாராஷ்டிராவில் சுமார் 82% பெண் பாலியல் தொழிலாளர்கள் “களங்கம், நிதி பாதுகாப்பின்மை மற்றும் சமூக ஆதரவு கிடைக்காதது” ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்; இதை ஒப்பிடும் போது, கர்நாடகாவில் 35% என்று உள்ளதாக, 2018 ஆய்வு கூறுகிறது. இந்த பாதிப்பு பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் எச்.ஐ.வி மதிப்பீடுகளை விட வாழ்க்கை நிலைமைகள், உடல்நலம் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் எச்.ஐ.வி பரவல் அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் 7% எச்.ஐ.வி பரவல் விகிதம், கர்நாடகாவில் 6%, தமிழ்நாடு 1%. இந்த மாநிலங்களில் வாழும் சுமார் 31% பாலியல் தொழிலாளர்கள் நிதி ரீதியாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர், இதனால் அவர்கள் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

மகாராஷ்டிராவின் பாலியல் தொழிலாளர்களில் பாதி பேர், தங்களின் வாழ்வாதாரத்திற்கு பாலியல் தொழிலை மட்டுமே நம்பியிருக்கிறார்கள், அவர்களுக்கு காப்பீடு இல்லை. தமிழ்நாட்டில், ஐந்தில் இரண்டு பகுதியும், கர்நாடகாவில் ஐந்தில் ஒரு பங்கு பாலியல் தொழிலாளர்களும் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இது,பாதுகாப்பற்ற உடலுறவை வலியுறுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, பாலியல் தொழிலாளர்களை பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது.

வன்முறை மற்றும் பாகுபாடு நோயை அதிகரிக்கும்

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் பாகுபாடு ஆகியன, அவர்கள் மத்தியில் நோய்க்கான அபாயத்தை அதிகரித்ததாக, ஆகஸ்ட் 2016 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான களங்கத்தை ஒழிக்கும் திட்டம் என்.ஏ.சி.ஓ.விடம் இல்லை. "பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் களங்கம் பொதுவாக எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான திட்டத்தின் கீழ் அடங்கும்" என்று முன்னர் மேற்கோள் காட்டியதை என்.ஏ.சி.ஓ. பிரதிநிதி தெரிவித்தார்.

ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களும், திருநங்கைகளும் எச்.ஐ.வி பரவலை சரிபார்ப்பதில் முக்கியமானவர்கள்; நாங்கள் சொன்னது போல, மேலும் பாதிக்கப்படக்கூடியவர்கள். ஏனெனில் அவர்களின் உடை மற்றும் உடல் மொழி அவர்களை அதிகமாகக் காணும்.

பல்வேறு மாநில அரசுகளும், பாலியல் தொழிலாளர்களை தங்களது சொந்த குடிமக்கள், அவர்களுக்கும் வாழ்க்கை உள்ளது என்று பார்க்காமல் "ஒடுக்கப்பட்டவர்கள்" என்று முத்திரை குத்தியுள்ளன. "கர்நாடகாவில் பெரும்பாலும் பாலியல் தொழிலாளர்களை தனனிதா மஹிளா அல்லது ஒடுக்கப்பட்ட பெண் என்று அரசே முத்திரை குத்துகிறது," என்று பாலியல் தொழிலாளர்கள் தேசிய வலையமைப்பில் பணிபுரியும் 30 வயதான ராஜேஷ் உமதேவி கூறுகிறார்.

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான களங்கம் சமூக பாதுகாப்பு சேவைகளை அணுக முடியாததாக ஆக்குகிறது. "பாலியல் தொழிலாளர்கள் தங்களது இருப்பிட உரிமையாளர்களால் பாகுபாடு காட்டப்படுகிறார்கள்; ஆதார் அட்டை பெறுவதற்கு தேவையான சான்று அல்லது போதுமான முகவரி ஆதாரங்கள் கூட வழங்க முன்வருவதில்லை" என்று அகில இந்திய பாலியல் தொழிலாளர்களுக்கான ஆலோசனை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அமித் குமார் கூறினார்.

பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் வேலை அபாயங்கள் இருந்தபோதிலும், தரவு குறிப்பிடுவது போல, ஆபத்தான பாலியல் நடத்தை என்பது குறைந்துள்ளது.

இலவச ஆணுறைகள் தீர்வு அல்ல

ஆபத்தான பாலியல் நடத்தை எவ்வாறு குறைக்கப்படுகிறது?

இதற்கான பதில், வேலை செய்வது போல் காட்டும் அரசு திட்டத்தில் இருக்கலாம். என்.ஏ.சி.ஓ. திட்டத்தின் கீழ், அதிக ஆபத்துள்ள குழுக்களுடன் பணிபுரியும் நிறுவனங்களுக்கு, ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

"பாலியல் கல்வியை பார்ப்பதன் மூலம், பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் அது குறித்த ஆரோக்கியம், விழிப்புணர்வு அதிகரித்துள்ளது" என்று இந்தியா-எச்.ஐ.வி குழுவின் ராவ் கூறினார்.

பல பாலியல் தொழிலாளர்கள் இப்போது பாதுகாப்பான பாலியல் பற்றி அறிந்திருக்கிறார்கள், மேலும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் தங்களை பரிசோதித்து கொண்டிருக்கிறார்கள் என்று என்.ஏ.சி.ஓ. பிரதிநிதி கூறினார்.

இருப்பினும், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கு அதிக கட்டணம் செலுத்த தயாராக இருப்பதால் அபாயங்கள் தொடர்கின்றன என்று, திருநங்கை பாலியல் தொழிலாளி ராம்காலி கூறுகிறார்.

"தரவுகள், ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறது; (ஆனால்) புதிய இடங்களில் கவனம் செலுத்துவதற்கும் புதிய எச்.ஐ.வி நோய்த்தொற்றுகளின் காரணம் கண்டறிவதற்கும் இலக்கு தலையீடுகளின் உடனடி தேவை உள்ளது" என்று ராவ் கூறினார். வயதான பாலியல் தொழிலாளர்கள், இளைய சக தொழிலாளர்களை போல், ஆணுறைகளை அணிய வாடிக்கையாளர்களை வற்புறுத்துவதில்லை; ஏனெனில் அவர்கள் குறைவான வாடிக்கையாளர்களை பெறுவதாக, அவர் கூறினார்.

கடந்த 2008இல், என்.ஏ.சி.ஓ. ஆணுறை ஊக்குவிப்பு திட்டத்தை 15 மாநிலங்களில் தொடங்கியது. இத்தகைய திட்டங்கள் பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட, ஆணுறை பயன்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

"என் ஆராய்ச்சியின் போது, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான நிறுவனங்கள், இதில் தங்களுக்கான இலக்குகளை சந்தித்து கொண்டிருப்பதை நான் கவனித்தேன்," என்று மும்பையை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாதா, ஒரு ஆராய்ச்சியாளர் கூறினார். "பாலியல் தொழிலாளர்களிடையே அவர்களின் பாலியல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட, ஆணுறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக ஆணுறை விற்பனை மற்றும் கார்ப்பரேட் மார்க்கெட்டிங் ஆகியவற்றிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்றார்.

எவ்வாறாயினும், பாலியல் தொழிலாளர்களுக்கு பாலியல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட ஆணுறைகளை விற்பது முக்கியமல்ல என்று சங்கிராம் என்ற ஆலோசனை அமைப்பின் நிறுவனர் மீனா சேஷு கூறினார். ஆணுறைகளை "பாலியல் தொழிலாளர்களுக்கான உயிர் காக்கும் கருவி" என்று அவர் விவரித்தார்.

தேவை: ஒரு திட்டம்

தேசிய எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பரவல் (எஸ்.டி.டி) கட்டுப்பாட்டு திட்டங்களுக்கான பட்ஜெட், 2017 உடனான நான்கு ஆண்டுகளில்21% உயர்ந்தது. ஆனால் இது பணம் தேவைப்படும்போது வருகிறது;அது இருக்கிறது என்பதற்காக பயன்படுத்தப்படுகிறது என்ற பொருளல்ல.

"கடந்த ஆண்டு முதல் எச்.ஐ.வி / எய்ட்ஸ் திட்டத்திற்கான நிதி தாமதமாக வந்தது" என்று சங்கிராமை சேர்ந்த சேசு கூறினார். "நாங்கள் எங்கள் சொந்த பணத்துடன் திட்டத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று” என்றார்.

எச்.ஐ.விக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆன்டிரெட்ரோவைரல் தெரபி (ஏ.ஆர்.டி) மருந்துகள் பெரும்பாலும் எச்.ஐ.வி பாதிப்பு நிலைகளில் கூட கண்டுபிடிக்க கடினமாக உள்ளன.

இருப்பினும், ஏ.ஆர்.டி. மருந்துகள் பற்றாக்குறை என்ற நிபுணர்களின் கருத்துடன் என்.ஏ.சி.ஓ. உடன்படவில்லை. "ஏ.ஆர்.டி. ருந்துகளின் பற்றாக்குறை பற்றிய தகவல்கள் எங்களிடம் இல்லை" என்று என்.ஏ.சி.ஓ. பிரதிநிதி கூறினார். "அது நடக்கிறது என்றாலும், அது விநியோக மட்டத்தில் இருக்கலாம்" என்றார்.

மற்றொரு பிரச்சனை என்னவென்றால், எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றி பாலியல் தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. உதாரணமாக, கர்நாடகாவில் பாலியல் தொழிலாளர்களில் கால்வாசிக்கும் குறைவானவர்கள், தங்களிடம் இருந்து தங்கள் குழந்தைகளுக்கு வைரஸ் பரவுவதை தடுப்பது எவ்வாறு என்பது தெரியும் என்று 2018 அறிக்கை தெரிவிக்கிறது.

"களங்கம் கற்பிக்காமல் இருந்தால், பாலியல் தொழிலாளர்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கு அணுகுவதில் ஒரு பரந்த அணுகுமுறை ஏற்படும்" என்று இந்தியா-எச்.ஐ.வி கூட்டணியின் ராவ் கூறினார்.

சமூக நடவடிக்கை

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான களங்கம் மற்றும் அவர்கள் மீதான வன்முறையை சமாளிக்கும் பொறுப்பை, என்.ஏ.சி.ஓ. தங்கள் சமூகங்களுக்கு மாற்றியுள்ளன; அவை உண்மையில் மருத்துவ ஊழியர்களை உணர்ந்து, பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த திட்டங்களைத் தொடங்கின.

சமூகத் தொழிலாளர்கள் பாலியல் தொழிலாளர்களின் பிரச்சினை பற்றி பேச உதவியதுடன், அவர்களை காவல்துறை மற்றும் அரசு வளங்கள் பெற தங்களுடன் இணைத்துள்ளனர். உதாரணமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு தேசிய சட்ட சேவைகள் ஆணையம் துணை சட்ட பயிற்சி அளிக்கிறது.

"பாலியல் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சேவை முகாம்களை அமைக்க சட்ட துணை பயிற்சியாளர்கள் உதவுகிறார்கள்" என்று அகில இந்திய பாலியல் தொழிலாளர்கள் வலையமைப்பின் குமார் கூறினார். "ரேஷன் கார்டு, பஸ் பாஸ், ஆதார் அட்டை, எஸ்.டி.டி.க்கு வழக்கமான பரிசோதனை மற்றும் சுகாதாரப் பணியாளர்களை உணர்த்துவதற்கான முகாம்கள் இதில் அடங்கும்" என்றார் அவர்.

பாலியல் தொழிலாளர்கள் இப்போது மருத்துவ பயிற்சியாளர்களை உணர முயற்சிக்கின்றனர்; ஆனால் அவர்கள் முன்னேறுவது கடினம். "நாங்கள் எத்தனை வாடிக்கையாளர்களை எடுத்துக்கொள்கிறோம் என்று டாக்டர்கள் அடிக்கடி கேட்கிறார்கள்," என்று 38 வயதான குஷும் கூறினார்; அகில இந்திய பாலியல் தொழிலாளர் வலை அமைப்பின் தலைவராக இருக்கும் அவர், தனது முதல் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார். "அவர்கள் எங்கள் மீதானதை உணரவில்லை" என்றார்.

பாலியல்-இனப்பெருக்க சுகாதாரத் திட்டத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, எத்தனை பெண் பாலியல் தொழிலாளர்கள் ஆணுறைகளுடன் ஒரு கிட் மற்றும் கர்ப்ப பரிசோதனைக் கருவியை எடுத்துச் செல்கிறார்கள் என்பதை குஷும் விளக்கினார். பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு காலம் குறித்து அவரது சகாக்கள் தொழிலாளர்களுக்கு ஆலோசனை கூறுகின்றனர்.

(சக்ரா, டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி மாணவர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story