ஒரு கோவிட் -19 பரிசோதனையின் போது என்ன நடக்கிறது: இதோ விளக்கம்

ஒரு கோவிட் -19 பரிசோதனையின் போது என்ன நடக்கிறது: இதோ விளக்கம்
X

மும்பை:கோவிட்-19 பரிசோதனை ‘மறுபக்க டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை’ (ஆர்.டி.- பி.சி.ஆர் - RT-PCR) எனப்படும் தொண்டை, சளி பரிசோதனை நடத்தப்படுகிறது. மாதிரியில் உள்ள ஆர்.என்.ஏ பிரித்தெடுக்கப்பட்டு டி.என்.ஏ. ஆக மாற்றப்படுகிறது; பின்னர் அது “ப்ரைமர்களை” - நியூக்ளிக் அமிலத்தின் குறுகிய ஒருங்கிணைந்த துண்டுகள் - பயன்படுத்தி பெருக்கப்படுகிறது. ஒரு ஃப்ளோரசன்ட் சாயம் (“ஆய்வு” என்று அழைக்கப்படுகிறது) அறிமுகப்படுத்தப்படுகிறது; மேலும் டி.என்.ஏ முன்னிலையில் மட்டுமே மாதிரி பரிசோதனை நடக்கும். இச்சோதனை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ள பெங்களூரு தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ்) மூத்த பேராசிரியரும் பொது சுகாதார வைராலஜி தலைவருமான வி.ரவியுடன் பேசினோம்.

கடந்த மார்ச் 21, 2020 நிலவரப்படி, இந்தியாவில் 258 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் - 19 நோயாளி உள்பட், உலகம் முழுவதும் 2,75,000 க்கும் அதிகமான மக்களை இது பாதித்துள்ளதுடன், உலகளவில் 11,000 க்கும் அதிகமானவர்களைபலி கொண்டது. இந்தியாவில் சுமார் 9% (258 இல் 23) நோயாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்; நான்கு பேர் இறந்துள்ளனர் என்று ஹெல்த் செக் தரவுத்தளமான கொரோனா வைரஸ் மானிட்டர்தெரிவித்துள்ளது.

இந்திய அரசு அதிகாரிகள் 2020 மார்ச் 19 அன்று கூறுகையில், இந்தியாவில் கோவிட்-19 சமூக பரவல் இல்லை; அதாவது பாதிக்கப்பட்ட நாட்டிற்கு பயணம் செய்தவர்கள் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களால் தான் நோய் ஏற்பட்டுள்ளது என்றனர். ஆனால், இந்த நோய் சமூக பரவல் என்ற கட்டத்தை எட்டியுள்ளதா என்பதை அறிய அரசு மிகக் குறைவாகவே சோதனை செய்கிறது என்று வல்லுனர்கள் இந்தியா ஸ்பெண்டிடம்கூறியதை, மார்ச் 19, 2020 கட்டுரையில்நாங்கள் தெரிவித்திருந்தோம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மார்ச் 20, 2020 அன்று, சோதனை அளவுகோல்களை விரிவுபடுத்தியுள்ளது: உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 நோயாளிகளின் அனைத்து அறிகுறியுள்ள தொடர்புகள், அனைத்து அறிகுறியுள்ள சுகாதார ஊழியர்கள், தீவிர சுவாச நோய் (காய்ச்சல் மற்றும் இருமல் மற்றும் / அல்லது மூச்சுத் திணறல்) உள்ள அனைத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளும், மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் அறிகுறியற்ற நேரடி மற்றும் அதிக -ஆபத்து தொடர்புகள் (அவர்களின் தொடர்புக்கு வரும் நாள் 5 முதல் 14 ஆம் நாள் வரை).

கடந்த 14 நாட்களில் சர்வதேச பயணத்தை மேற்கொண்ட அனைத்து நபர்களும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்; காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருப்பின் அவர்களுக்கு மட்டுமே பரிசோதிக்கப்படும் என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்தது. பரிசோதனையில் வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர் வசிக்கும் வீட்டில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

கோவிட்-19 பரிசோதனை எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை இங்கே காணலாம்.

நிலை 1: மாதிரி சேகரிப்பு

தொண்டை மற்றும் மூக்கில் இருந்து சளி மாதிரி எடுக்கப்படுகிறது; பின்னர் வைரஸ் மாற்று முறையில் அது செலுத்தப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

நிலை 2: ஆர்.என்.ஏவை பிரித்தெடுத்தல்

விலங்குகளில் உருவாகும் கொரோனா வைரஸில் உள்ள மரபணு பொருள் ஆர்.என்.ஏ (ரிபோநியூக்ளிக் அமிலம்) மற்றும் மனிதர்களுக்கான டி.என்.ஏ (டியோக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலம்) போன்றதல்ல. அடுத்த கட்டம், அந்த வைரஸ் மரபணுக் குறியீட்டை மெல்லும் மாதிரியில் உள்ள எல்லாவற்றில் இருந்தும் (மனித செல்கள், புரதங்கள், என்சைம்கள்) ஆர்.என்.ஏவை பிரிப்பது. ரசாயனங்களை சேர்ப்பதன் மூலம் இது ஒரு மையவிலக்கு செயல்முறையை பயன்படுத்தி செய்யப்படுகிறது; அங்கு ஆர்.என்.ஏ மாதிரியின் அடிப்பகுதியில் சேகரிக்கிறது. பெரிய மாதிரிகள் சோதிக்கப்படும்போது இந்த செயல்முறை செய்யப்படுகிறது.

நிலை 3: டி.என்.ஏவுக்கு மாற்றம்

ஆர்.என்.ஏ நொதி ஆர்.என்.ஏவை டி.என்.ஏவாக மாற்ற பயன்படுகிறது - ஒரு இழையில் இருந்து இரண்டாக செல்கிறது. இந்த எதிர்வினை அமைக்க, உங்களுக்கு ஒரு “மாஸ்டர் கலவை” தேவை, அதில் (புதிய டி.என்.ஏவை உருவாக்க) பொதுவாக நியூக்ளியோடைடுகள்உள்ளன. டி.என்.ஏ பாலிமரேஸை(டி.என்.ஏவை பெருக்க ஒரு நொதி), பி.சி.ஆர் இடையகங்களும்( டி.என்.ஏ பாலிமரேஸுக்கு உகந்த நிலைமைகளை உருவாக்க) மற்றும் மெக்னீசியம் உப்புகளுடன் சேர்க்க வேண்டும்.

நிலை 4: டி.என்.ஏவை பெருக்குதல்

ப்ரைமர்கள் - நியூக்ளிக் அமிலத்தின் குறுகிய ஒருங்கிணைந்த துண்டுகள் - பெருக்கப்பட வேண்டிய பகுதியை வரையறுக்க உதவும் வகையில் சேர்க்கப்படுகின்றன. இக்கலவை, 15-20 விநாடிகளுக்கு மாறி மாறி வெப்பநிலையை உயர்த்தும் மற்றும் குறைக்கும் பி.சி.ஆர் இயந்திரத்தில் சேர்க்கப்படுகிறது; ஒரு சுழற்சியில், டி.என்.ஏ இழையை பிரித்து அதை குளிர்விக்க வெப்பநிலை உயர்த்தப்படுகிறது. "வழக்கமாக, [வெப்பநிலை 55 முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தப்படுகிறது], இந்நேரத்தில், ப்ரைமர்கள் பிணைக்கப்படும்," என்று ரவி கூறினார். "அடுத்த கட்டமாக வெப்பநிலையை 72 டிகிரி செல்சியஸாக உயர்த்த வேண்டும்; அதில் புதிய இழை ஒருங்கிணைக்கப்படும். இந்த முழு விஷயமும் ஒரு சுழற்சி என்று அழைக்கப்படுகிறது. ஆர்டி-பி.சி.ஆரை பொறுத்தவரை, இதுபோன்ற 40 சுழற்சிகளை ஒருவர் செய்ய வேண்டும்; இது ஏறக்குறைய ஒரு மணிநேரம் ஆகும்; ஒவ்வொரு சுழற்சியும் ஒன்றரை நிமிடங்கள் ஆகும்” என்றார்.

நிலை 5: முடிவுகள்

பி.சி.ஆர் இயந்திரத்தில் போதுமான டி.என்.ஏ தயாரிக்கப்பட்டவுடன், அது பரிசோதனை முடிவை கண்டறிய தயாராக உள்ளது. சோதனைக்குழாயில் ஒரு ஒளிரும் சாயம் அல்லது ‘ஆய்வு’ சேர்க்கப்படுகிறது. டி.என்.ஏ இருந்தால், அது ஒளிரத் தொடங்குகிறது. "டி.என்.ஏவின் நகல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, வெளிச்சத்தின் அளவும் அதிகரிக்கும்" என்ற ரவி "பி.சி.ஆர் இயந்திரத்தில் ஒரு சிறப்பு ஒளி அளவிடும் கருவி, இந்த ஒளிரும் வடிவங்களை படித்து, அவற்றில் எந்த மாதிரிகள் வைரஸ் உள்ளன; அவை இல்லை என்பதை தீர்மானிக்கின்றன" என்றார்.

நிலை 6: துல்லியமாக உறுதி செய்தல்

சோதனை துல்லியமானது என்பதை உறுதிப்படுத்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதில், நேர்மறையான கட்டுப்பாடு (அறியப்பட்ட கோவிட் நேர்மறை மாதிரி), எதிர்மறை கட்டுப்பாடு (அறியப்பட்ட எதிர்மறை மாதிரி) மற்றும் உள்கட்டுப்பாடு ஆகியவை உள்ளன, இவை, வழக்கமாக ஒரு “பராமரிப்பு மரபணு” - அடிப்படை செல்லுலார் செயல்பாட்டை பராமரிக்க தேவையான மரபணுக்கள்.

"மாதிரி சேகரிப்பு சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை உள்கட்டுப்பாடுகள் உறுதி செய்கின்றன" என்று ரவி கூறினார். “உங்கள் தொண்டையை அது சரியாகத் தொடவில்லை என்றால், உங்களுக்கு மனித சுய வடிவம் இருக்காது. பராமரிப்பு மரபணு பி.சி.ஆரில் சாதகமாக வரவில்லை என்றால், சோதனை செல்லுபடியாகாது” என்றார்.

"ஒரு மணி நேரத்தில், பி.சி.ஆர் முடிந்துவிடும்; பின்னர் தேவையான டி.என்.ஏ பெருக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை கருவி கண்டுபிடிக்கும்" என்று ரவி மேலும் கூறினார். “சோதனையை நடத்தும்போதெல்லாம், அது சரியாக இயங்குகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பல கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும். சோதனையின் ஒவ்வொரு செயல்முறையும் செயல்படுகிறது என்பதை அறிவதே கட்டுப்பாட்டின் நோக்கம்” என்றார்.

இந்தியாவுக்கு மேலும் சோதனை ஆய்வகங்கள் தேவைப்படும்

இப்போது, பெரும்பாலான ஆய்வகங்கள் 24 மணி நேரத்திற்கு பிறகு அறிக்கைகளை தருகின்றன என்று ரவி கூறினார். ஒவ்வொரு சோதனைக்கும் ஆறு மணி நேரம் ஆகும். "அவர்கள் ஒரு மாதிரிக்கான சோதனையை நடத்துவதில்லை," என்ற அவர், "ஒரே நேரத்தில் சேகரிக்கப்பட்ட அனைத்து மாதிரிகள், எடுத்துக்காட்டாக மதியம் 12 மணி, சோதனையை நடத்துவதற்கும் தரக் கட்டுப்பாட்டு சோதனை செய்வதற்கும் ஒன்றாகத் திரட்டப்படுகின்றன, பின்னர் அறிக்கை வெளியிடப்படுகிறது" என்றார்.

சோதிக்கப்பட்ட பேட்சுகளின் எண்ணிக்கை என்பது, அது பயன்படுத்தப்படும் இயந்திரம் மற்றும் அதன் திறனை பொறுத்தது. "24 பேட்சுகள் (மாதிரிகள்), 48 மற்றும் 96 பேட்சுகள் என பலவற்றை கொண்ட வெப்ப சுழற்சிகளை இயக்கும் இயந்திரங்கள் நம்மிடம் உள்ளன" என்று ரவி கூறினார். "இந்த சோதனைகளைச் செய்யும் ரோபோ இயந்திரங்களும் நம்மிடம் இருக்கின்றன" என்றார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொறியியல் அறிவியல் துறை மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சிக்கான ஆக்ஸ்போர்டு சுஜோ மையத்தின் விஞ்ஞானிகள், விரைவான சோதனை தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இது ஒவ்வொரு சோதனைக்கும் எடுக்கப்பட்ட நேரத்தை 30 நிமிடங்களாக குறைக்கிறது. நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டங்களில் நோயாளிகளை அடையாளம் காண இச்சோதனை உதவும்; பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி, “ஆர்.என்.ஏ தலைகீழ் டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் டி.என்.ஏ பெருக்கத்திற்கான நிலையான வெப்பநிலையை பராமரிக்கும் ஒரு வெப்ப-தொகுதி மட்டுமே தேவைப்படுகிறது. முடிவுகளை வெறும் கண்ணால் படிக்க முடியும்; இது கிராமப்புறங்களில் அல்லது சமூக சுகாதார மையங்களில் பயனுள்ளதாக இருக்கும்.

கடந்த 2020 மார்ச் 18 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 72 அரசு ஆய்வகங்கள் கோவிட் -19 வைரஸ் சோதனை செய்து வந்துள்ளன. இவை, ஒருநாளைக்கு 9,000 சோதனைகள் செய்யும் திறன் கொண்டவை என்று ஐசிஎம்ஆரைச் சேர்ந்த லோகேஷ் சர்மா, இந்தியா ஸ்பெண்டிடம்தெரிவித்தார் என்பதை, மார்ச் 19 எங்கள் கட்டுரையில்தெரிவித்திருந்தோம். அத்துடன், அரசு இரண்டு புதிய சோதனை இடங்களை அமைத்துள்ளது; ஒன்று தேசிய தலைநகர் பிராந்தியத்தில் மற்றும் புவனேஷ்வரில்; ஒவ்வொன்றும் ஒருநாளைக்கு 1,400 சோதனைகளை செய்யும் திறன் கொண்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார். இது ஒவ்வொரு நாளும் இந்தியாவின் சோதனை திறனை 11,800 ஆக எடுத்துச் செல்கிறது. ஐ.சி.எம்.ஆர் மேலும் 49 ஆய்வகங்களை அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது என்று, 2020 மார்ச் 17 செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியா, 0.9% என்ற குறைந்த இறப்பு விகிதத்துடன், நோயின் பரவலை உறுதிப்படுத்த முடிந்த தென் கொரியா, 2020 மார்ச் 18 வரை 2,95,647 பேரை- அதாவது ஒரு மில்லியனுக்கு 5,729.6 பேரை பரிசோதித்தது மற்றும் ஒவ்வொரு நாளும் 20,000 பேரை இலவசமாக தொடர்ந்து சோதனை செய்து வருகிறது, இலவசமாக, நாங்கள் மேலே சொன்ன கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

அந்த திறனை அடைய இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, இந்தியாவுக்கு தனியார் துறை பங்களிப்புடன் மேலும் பரிசோதனை ஆய்வகங்கள் தேவைப்படும் என்று ரவி கூறினார். "காய்ச்சல் பரிசோதனைக்கு ஏற்கனவே அங்கீகாரம் பெற்ற 50-60 தனியார் ஆய்வகங்களை அரசு கவனித்து வருகிறது," என்ற அவர், "இச்சோதனை காய்ச்சல் பரிசோதனையை போலவே மிக ஒத்திருக்கிறது" என்றார்.

"[சோதனையை அளவிடுவதற்கு] மிகப் பெரிய வரம்பாக இருப்பது, சோதனை செயல்முறையின் செலவாகும்" என்று ரவி கூறினார். மனித முயற்சி அல்லது தற்போதைய மின்னழுத்த வரம்புகள் போன்றவற்றை தவிர்த்து, ஒவ்வொரு பரிசோதனை மாதிரியையும் செயலாக்க தற்போது ரூ. 6,000 செலவாகிறது. "இந்த பரிசோதனைக்கு தனியார் துறை என்று நீங்கள் சென்றால் அங்கு ஒரு சோதனைக்கு ரூ.10,000ஐ நீங்கள் செலவிட வேண்டியிருக்கும்" என்றார்.

"அனைத்து தனியார் ஆய்வகங்களும் இந்த பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன," என்ற ரவி, "இனி, தனியார் துறை தான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

ஆர்டி என்சைம்கள் மற்றும் சரியான பாலிமரேஸை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. "இறக்குமதி செய்யப்பட்ட ஆய்வுகள் நம்மிடம் இல்லை" என்று ஐ.சி.எம்.ஆரில் ஆராய்ச்சி மேலாண்மை, கொள்கை, திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ரஜினிகாந்த் கூறினார். "எல்லாவற்றையும் இந்திய நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தயாரிக்கின்றன" என்றார் அவர்.

(சால்வி, இந்தியா ஸ்பெண்ட்பங்களிப்பாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story