'கோவிட் உலகளாவிய கவனத்தைப் பெற்றது, ஏனெனில் இது பணக்கார நாடுகளை பாதித்தது'

கோவிட் உலகளாவிய கவனத்தைப் பெற்றது, ஏனெனில் இது பணக்கார நாடுகளை பாதித்தது
X

புதுடெல்லி:2019ம் ஆண்டில்24 லட்சம்காசநோய் (TB) நோயாளிகளுடன் இந்தியா, உலகிலேயே அதிக எண்ணிக்கையில் (27%) உள்ளது. உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றுநோய் மையம் கொண்டதால், இந்தியா உட்பட உலக நாடுகளின் அரசுங்களின் வளங்கள், காசநோய் திட்டங்களில் இருந்து கோவிட்-19 செயல்பாட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக, காசநோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து செயல்படும் உலகளாவிய அமைப்பான தி யூனியனின்இயக்குனர் கிரானியா பிரிக்டன் கூறுகிறார்.

"விடுபட்ட காசநோய் வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக செய்யப்பட்டுள்ள அனைத்து வேலைகளுக்கும் பிறகு காசநோய்" காணாமல் போன மில்லியன்" எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என்று நான் அஞ்சுகிறேன்" என்று பிரிக்டன் கூறுகிறார். இந்தியாவிலும் பிற நாடுகளிலும் காசநோய் கண்டறியப்படாத மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத பல லட்சம் வழக்குகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கு முன்பு, சுவாசத்துறை மருத்துவராக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகளுடனும், ஆண்டிமைக்ரோபையல் எதிர்ப்பு குறித்து மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸுடனும் பணியாற்றிய பிரிக்டன், இந்தியா ஸ்பெண்டிற்கு கோவிட் -19 காசநோயை எவ்வாறு பாதித்தது, காசநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் என்ன செய்ய வேண்டும், காசநோயை அகற்றுவதில் ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்று விவரிக்கிறார்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

இந்த ஆண்டின் உலகளாவிய காசநோய் அறிக்கையின்படி, கோவிட்-19 தொற்றுநோய் இருந்தபோதும், காசநோய் இன்னும் “உலகின் முதன்மையான கொலைகார தொற்றுநோய்” ஆகும். 2019ம் ஆண்டில் ஒரு கோடி மக்களுக்கு காசநோய் ஏற்பட்டது, அது 14 லட்சம் பேரை கொன்றது. அப்படியானால், இந்த பிரச்சினைக்காக பணியாற்றிய இந்த ஆண்டுகளில், கோவிட் -19 தொற்றுக்கு எதிரான நாம் அணி திரண்டபோல், காசநோய்க்கு ஒருபோதும் பார்த்ததில்லையே?

கடந்த ஐந்து ஆண்டுகளில், குறிப்பாக அனைத்து மட்டங்களிலும் காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மிகப் பெரிய அணிதிரட்டல் மற்றும் அர்ப்பணிப்பைக் கண்டோம். மாஸ்கோவில் நடந்த அமைச்சர்கள் அளவிலான உச்சி மாநாடுமற்றும் 2018 இல் காசநோய் தொடர்பான ஐ.நா உயர்நிலைக்கூட்டம்நடைபெற்றது. கோவிட்-19 தொற்றுக்கான உலகளாவிய பதில் என்பது, குறிப்பாக தடுப்பூசிக்கான பணி எனப்து, கொரோனா வைரஸ் செல்வந்த வளர்ந்த நாடுகளை பெரிதும் பாதிக்கிறது என்ற உண்மையுடன், குறைந்தது ஏதாவது செய்யக்கூடும். சார்ஸ் [தீவிர கடும் சுவாச நோய்க்குறி], மெர்ஸ் [மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி] அல்லது எபோலா ஆகியன, மேற்கில் உள்ள மக்களின் வாழ்க்கையை கோவிட்-19 ஐ போல் உண்மையில் தொட்டதில்லை. தொற்று நோய்களுக்கு மத்தியில் காசநோயை ஏன் ‘ஏழை உறவினர்’ போல தொடர்ந்து காணப்படுகிறது என்ற உண்மையை இது பிரதிபலிக்கிறது - இது வளரும் நாடுகளில் உள்ள ஏழை மக்களை மட்டுமே பாதிக்கிறது. வேறு எந்த தொற்று நோயையும் விட அதிகமான மக்களைக் கொன்ற போதிலும், அதிக சுமை கொண்ட எல்.எம்.ஐ.சி [LMIC: low- and middle-income / குறைந்த மற்றும் நடுத்தர வருமானம்] நாடுகளுக்கு வெளியே, அது பார்வைக்கு வெளியேயும் மனதிற்கு வெளியேயும் இருக்கிறது.

கோவிட்-19 ன் அச்சுறுத்தல், நாம் அனைவரும் இந்த வகையான வைரஸ்கள் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எவ்வளவு வெளிப்படுத்தப்படுகிறோம் என்பதுடன், பிற சாத்தியமான தொற்றுநோய்களுக்கும் வெளிப்படுத்தியுள்ளது. கோவிட் -19 போன்ற ஒரு சுகாதாரப் பிரச்சினை உருவாக்கக்கூடிய சமூக மற்றும் பொருளாதார பேரிடரை மக்கள் தங்களுக்குள் பார்க்க முடியும். இந்த தருணத்தை நாம் கைப்பற்றி, தொற்றுநோய்களின் முக்கியத்துவத்தை அவசரமாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும் மற்றும் முன்னோக்கி செல்லும் தொற்று நோய்களை நிவர்த்தி செய்ய வேண்டும். இதன் பொருள், ஒருவரின் சொந்த குடிமக்களின் ஆரோக்கியத்தில் முதலீடு செய்வது ஏன் , அவை எங்கு, யாராக இருந்தாலும் அவை ஏன் நிகழ்கின்றன, என்பது, அந்த சமன்பாட்டின் ஒரு பகுதியாகும், காசநோய் போன்ற தடுக்கக்கூடிய, சிகிச்சை தரக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய நோய்களில் இருந்து தேவையற்ற துன்பங்களையும் மரணத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவது, தீர்வின் ஒரு பகுதியாக இருக்கிறது.

இந்த ஆண்டு கோவிட்-19 மீதான உலகளாவிய கவனத்தால், கடந்த சில ஆண்டுகளில் காசநோய் பெற்ற லாபங்களில் எதை இழந்துள்ளோம்?

கோவிட் 19 மீதான திடீர் கவனம், காசநோய் மீது குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இது மற்ற நோய்களைக் காட்டிலும் அதிகமாகும். ஏனெனில் பல நாடுகளில் கோவிட் -19 தொற்றுக்கான பதில் நடவடிக்கை கட்டமைக்கப்பட்டு உள்ளது அல்லது காசநோய்க்கான பதில் தரப்பட்டுள்ளது. இரண்டு நோய்களும் ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், பல ஒற்றுமைகள் உள்ளன - நல்ல தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவைப்படும் சுவாச நோய்கள் இவை. இதன் பொருள் என்னவென்றால், இந்தியா உட்பட பல நாடுகளில், காசநோய் திட்டங்கள் கோவிட்-19 தொற்றுக்கான செயலை ஆதரிப்பதற்காக “மறுநோக்கம்” செய்யப்பட்டுள்ளன, காசநோய் திட்ட ஊழியர்கள் மற்றும் மையங்களை பயன்படுத்துகின்றன. இதன் பொருள் காசநோய் உள்ளவர்களுக்கு அல்லது ஆபத்தில் உள்ளவர்களுக்கு இந்த சேவைகள் கிடைக்காது. காசநோயின் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளுடன் கூடிய நபர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் இருப்பதையும், சிகிச்சையைத் தொடங்கும் நபர்கள் குறைவாக இருப்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம். காசநோய் காணாமல் போன வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக செய்யப்பட்டுள்ள அனைத்து வேலைகளுக்கும் பின்னர் காசநோய் "காணாமல் போன மில்லியன்" எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

மேலும், “முக்கிய” நடவடிக்கைகளில் உண்மையில் கவனம் செலுத்துவதற்காக சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன, அதாவது காசநோய் ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பு சிகிச்சையை வழங்குவதில் முன்னேற்றம் ஏற்பட்டுகொண்டிருந்தபோது, காசநோய் தடுப்பு நடவடிக்கைகளில் நிறைய பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. காசநோய் / கோவிட் -19 இணை-தொற்று இரு நோய்களுக்கும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இது கவலை அளிக்கிறது. எனவே, கோவிட் -19 தொற்றுநோய்களின் போது காசநோய் தடுப்பு சிகிச்சையை நாம் தொடர்ந்து அளவிட வேண்டும், ஏனெனில் இது இரட்டை நன்மையைக் கொண்டுள்ளது - காசநோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறது, அதே போல் கோவிட்-19 தொற்றால் கிடைத்தால் மோசமான விளைவுகளில் இருந்தும் காக்கிறது.

அடுத்த ஆண்டின் உலகளாவிய காசநோய் அறிக்கை எண்ணிக்கை வெளியிடப்படும் போது, ​​நிகழ்வு, இறப்பு மற்றும் பிற அளவுருக்கள் எப்படி இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

இவை அனைத்துமே தவறான திசையில் செல்லும் என்று நான் அஞ்சுகிறேன்.

ஒதுக்கப்பட்ட பணம், அல்லது காசநோய் அறிவியல், சோதனை, ஆராய்ச்சி அல்லது கொள்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்; கோவிட்-19 காரணமாக இப்போது அவ்வாறு இல்லை என்று கவலைப்படுகிறீர்களா?

கோவிட்-19 தொற்றானது காசநோய் நிதியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் ஆராய்ச்சி மற்றும் திட்ட நிர்வாகத்திற்கான முதலீட்டின் அளவு காசநோய் முதலீட்டில் குறைப்பு குறித்த அச்சத்திற்கு, கோவிட் வழிவகுக்கிறது. அத்துடன், வரவிருக்கும் ஆண்டுகளில், குறிப்பாக காசநோய் ஆராய்ச்சி மற்றும் திட்டங்களை ஆதரிக்கும் சில நாடுகளில் கணிக்கப்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையைப் பொறுத்தவரை, காசநோய் தொடர்பான நிதியுதவிக்கு குறைந்த தொகையே கிடைக்க வாய்ப்புள்ளது. கூடுதல் சவால் என்னவென்றால், சமீபத்திய நிதி அழைப்புகள் அனைத்தும் கோவிட் தொற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது காசநோயின் நன்மைக்காக இருக்கலாம் - நிதி என்பது கோவிட் பதிலை ஆதரிப்பதாக இருந்தால், கண்டறியும் கருவிகள், தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தொடர்பு தடமறிதல், சுவாச அறிகுறிகளுக்கான கண்காணிப்பு, இவை காசநோய் மற்றும் கோவிட் -19 ஆகிய இரண்டிற்கும் ஒத்திருப்பவை.

ஆனால் காசநோய் அனைத்தும் கோவிட் உடன் இணைக்கப்படவில்லை, எனவே காசநோய்க்கு அர்ப்பணிக்கப்பட்ட நிதி இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இஎன்டி காசநோய் இலக்குகளை அடைய தேவையான முதலீட்டில் பாதிக்கும் குறைவான தொகையை நாம் பெறுகிறோம் என்பது நமக்கு முன்பே தெரியும். தற்போதைய நிதியைப் பராமரிப்பது மட்டுமல்லாமல் அதை அதிகரிப்பதும் நமக்கு தேவை, இது கோவிட்-19ல் கூடுதல் முதலீட்டில் கடினமாக இருக்கும்.

இந்தியாவில், காசநோயை பரிசோதிக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்களான ட்ரூநாட் மற்றும் சிபிநாட் இயந்திரங்கள், கோவிட்-19 ஐ பரிசோதிக்க திசை திருப்பப்பட்டுள்ளன. கோவிட்-19 க்கு முன்னர், காசநோயை பரிசோதிக்கவும் சிகிச்சையளிக்கவும் இந்தியா ஏற்கனவே கொண்டிருந்த முறையான போராட்டங்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இது இந்தியாவில் காசநோய் கண்டறிதலை பாதிக்குமா?

இது ஒரு உண்மையான கவலை. இந்த பரிசோதனைகள் ஒருவருக்கு காசநோய் இருக்கிறதா என்று மட்டும் சொல்ல முடியாது, அவற்றில் காசநோய் உள்ளவர்களுக்கு சரியான சிகிச்சையை நாம் வழங்குகிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய, மருந்து எதிர்ப்பிற்கான பரிசோதனையும் அடங்கும். இருப்பினும், காசநோய் நோயறிதலை வலுப்படுத்த ஒரு உண்மையான வாய்ப்பு உள்ளது. கோவிட்-19ல் முதலீடு செய்யும்போது, ​​இந்த தளங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முதலீடு வழங்கப்பட்டால், இது காசநோய் திட்டம் மற்றும் காசநோய் கண்டறியும் உள்கட்டமைப்பை நீண்ட காலத்திற்கு பலப்படுத்தும். மாதிரி போக்குவரத்து முறை பலப்படுத்தப்படுவதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

மற்ற நன்மை என்னவென்றால், இந்த தளங்களில் காசநோய் மற்றும் கோவிட் -19 ஆகிய இரண்டிற்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றால், இது இரு திசை கண்காணிப்பை அனுமதிக்கும் - இருமல் அல்லது காய்ச்சலுடன் (கால அளவைப் பொருட்படுத்தாமல்) முன்வைக்கும் எவரும் காசநோய் மற்றும் கோவிட் -19 ஆகிய இரண்டுக்கும் பரிசோதிக்கப்படுவார்கள். இந்தியாவைப் போன்ற அதிக சுமை கொண்ட நாடுகளில், இது உண்மையில் காசநோயுடன் தவறவிடப்பட்ட பல லட்சம் பேரை கண்டறிய உதவும். இதற்கு அரசியல் விருப்பமும் வலுவான வாதமும் தேவைப்படும், ஆனால் அவை இருக்கும் இணைதிறனை நாம் காண வேண்டும் மற்றும் கோவிட்-19 இல் ஆர்வமும் முதலீடும் ஒரு நீடித்த மரபை விட்டு வெளியேறுவதை உறுதிசெய்து காசநோய் மீது கோவிட்-19ன் ஆரம்ப எதிர்மறை தாக்கம் தலைகீழாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்திய அரசு இருவழி காசநோய் மற்றும் கோவிட் -19 சோதனைக்கு பரிந்துரை செய்துள்ளது. இது காசநோய் நோய்களைக் கண்டறிய உதவும் நல்ல யோசனையா? அல்லது, கோவிட் -19 மற்றும் காசநோய் பரிசோதனையை இணைப்பது குறைவான நபர்களுக்கு நோய்களைச் சுற்றியுள்ள களங்கம் காரணமாக பரிசோதனை செய்யத் தேர்வுசெய்யுமா? இது கண்டறியும் திறன் பற்றாக்குறைக்கு வழிவகுக்குமா?

இருவழி திரையிடல் பல நன்மைகளைக் கொண்டுள்ளது, ஆனால் களங்கம் பிரச்சினை ஒரு முக்கியமான கருத்தாகும். இருப்பினும், முன்பை விட இப்போது கோவிட்-19 மற்றும் காசநோய் ஆகியவை சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் யாரையும் பாதிக்கக்கூடும் என்று நாம் செய்தி அனுப்புகிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். களங்கம் என்பது, கோவிட்-19 மற்றும் காசநோயின் நண்பன். களங்கம், அவை பரவுவதற்கு உதவுகிறது, எனவே காசநோய் குறைப்பு தொடர்பாக காசநோய் மூலம் நாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் கொண்டு வர வேண்டும் மற்றும் சுவாச அறிகுறிகள் உள்ளவர்களுக்கு களங்கம் இல்லாமல் ஒரு ஆதரவான சூழலில் கண்டறியும் சேவைகளை அணுக முடியும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். களங்கத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம், நாங்கள் காசநோய் மற்றும் கோவிட் -19 உடன் போராடுகிறோம்.

பல ஆண்டுகளாக, இந்தியாவில் காசநோய் அறிவிக்கை [காசநோய் நோயாளிகளை அரசில் பதிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ சொல்] 2013ம் ஆண்டில் 14 லட்சத்தில் இருந்து 2019ம் ஆண்டில் 24 லட்சம் என கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது. உலகில் அதிக அளவில் காசநோய் நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். இருப்பினும், 2019 உடன் ஒப்பிடும்போது 2020 மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் இந்தியாவில் 46% குறைவான காசநோய் வழக்குகளே அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்றுநோய்களின் போது மற்றும் அதற்கு பிறகு இந்தியாவின் காசநோய் நிலைமைக்கான உங்கள் குறிப்பிடத்தக்க குறிப்புகள் என்ன? காசநோய் விவகாரத்தில் இந்தியா சரியாக எதை செய்கிறது? இந்தியா மாற்ற வேண்டியது எதை?

மங்களூருவில் உள்ள யெனெபோயா மருத்துவக்கல்லூரியின் மருத்துவத்துறையை சேர்ந்த அனுராக் பார்கவா மற்றும் தி யூனியனின் ஹேமந்த் தீபக் ஷெவாட் எழுதிய “The potential impact of the COVID-19 response related lockdown on TB incidence and mortality in India” என்ற நூல், மார்ச் 25 முதல் மே 19, 2020 வரை காசநோய் கண்டறிதலில் 59% குறைப்பை காட்டியுள்ளது. இது 2020ம் ஆண்டில் கூடுதலாக 87,711 காசநோய் இறப்புகளுக்கு காரணமாக இருக்கலாம்.

இவ்வாறு நடப்பதைத் தடுக்க, காசநோய் சேவைகளை சீக்கிரம் கோவிட்டுக்கு முந்தைய நிலைகளுக்கு மீட்டெடுக்க வேண்டும் மற்றும் தவறவிட்ட நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சையில் ஈடுபடுத்துவதுடன், செயலில் உள்ள வழக்கு கண்டறியும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுகின்றன. காசநோய் சேவைகளை மீட்டெடுப்பது குறித்து, முந்தைய ஆதாரங்கள் மற்றும் அறிவிப்புத் தகவல்கள், இந்தியா மீண்டும் கோவிட் காசநோய் கண்டறிதல் நிலைகளுக்கு திரும்பவில்லை என்று கூறுகிறது.

காசநோய் விகிதங்களைக் குறைக்கத் தேவையான பிற நடவடிக்கைகளை, குறிப்பாக ஊரடங்குடன் தொடர்புடைய மோசமான வறுமையை, மறுஆய்வு கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. வறுமை மற்றும் மோசமான ஊட்டச்சத்து காசநோய்க்கான ஆபத்து காரணியாகும், எனவே பொது விநியோக முறைகளில் பருப்பு உள்ளிட்ட உணவு வகைகள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு நேரடி பணப்பரிமாற்றம், வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பது உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இது காசநோய் திட்டத்தின் நேரடி வரம்பிற்கு அப்பாற்பட்டது, ஆனால் இந்தியாவில் காசநோய் முடிவுக்கு வரும் போராட்டத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும்.

அறிவிக்கையில், தீவிர காசநோயை கண்டறியும் இந்தியாவின் சில மாநிலங்களில் செயல்பாட்டு ஆராய்ச்சிக்கு தி யூனியன் ஆதரவளிக்கிறது, காசநோயைக் குறைப்பதற்கான காலம் குறைக்கப்படுவதால், காசநோயாளர்களை கண்டறியும் போது காசநோயின் மேம்பட்ட நிகழ்வுகளை காண வாய்ப்புள்ளதாக நாம் கவலைப்படுகிறோம். இந்த வேலை அதிக ஆபத்து உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த கவனிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

காசநோயை அகற்றுவதற்கான உலகளாவிய இலக்கு, 2030ஆம் ஆண்டாக என நிர்ணயிக்கப்பட்டது. 2025 க்குள் காசநோயை அகற்றுவதாக இந்தியா உறுதி அளித்துள்ளது. இந்த இலக்கை அடைய முடியுமா?

கோவிட்-19 காரணமாக காசநோயை ஒழிப்பதற்கான காலக்கெடுவை மாற்றக்கூடாது. காசநோயை விரட்டுவதற்கான நமது முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும். கோவிட்-19 தொற்று தந்த பதிலடி என்னவென்றால், உயிர்க்கொல்லியான சுவாச நோய்க்கிருமியை ஒழிப்பதற்கான வழிமுறைகளும், அரசியல் விருப்பமும் உள்ளன, இத்தகைய ஆற்றலை பன்முக தேசிய செயல்பாட்டில் இருந்து எடுத்து காசநோய்க்கு கொண்டு வரப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தடுக்கக்கூடிய, குணப்படுத்தக்கூடிய நோயால் [காசநோய்] மக்கள் இறப்பதைத் தடுக்கும் அவசரம், இதில் ஒருபோதும் பெரிதாக இல்லை. அரசுகளும், நிதியளிப்பாளர்களும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பார்க்கிறார்கள் மற்றும் சுகாதார அமைப்புகளில் முதலீடு தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வார்கள் என்று நம்புகிறேன். இது காசநோய்க்கும், இந்தியாவுக்கும், கோவிட்-19 ஐ தோற்கடிக்கும் முயற்சி இரண்டு கொடிய சுவாச நோய்களை தோற்கடிக்கும் முயற்சியாக மாறும்: காசநோய் மற்றும் கோவிட்-19.

(பூயான், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.கருத்துகளை respond@indiaspend.org.என்ற முகவரிக்கு அனுப்பலாம்.மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story