ரூபாய் நோட்டு வழியாக கோவிட்-19 பரவுமா? உறுதியான சான்றில்லை; ஆனால் முன்னெச்சரிக்கையாக இருங்கள் என்கின்றனர் நிபுணர்கள்

ரூபாய் நோட்டு வழியாக கோவிட்-19 பரவுமா? உறுதியான சான்றில்லை; ஆனால் முன்னெச்சரிக்கையாக இருங்கள் என்கின்றனர் நிபுணர்கள்
X

மும்பை: ரூபாய் நோட்டு மூலம் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஐஐடி) சமீபத்தில் எழுதிய கடிதம், தொற்றுநோய்களின் போது பணத்தை கையாள்வது குறித்த கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தைத் தவிர, 50 மில்லியன் சிறு வணிகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பான சி.ஏ.ஐ.டி. (CAIT), மார்ச் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியது; அதில், பாலிமர் செலாவணி முறையை நோக்கி இந்தியாவை நகர்த்துவாறு வலியுறுத்தியது.

தற்போது வரைஅ, அழுக்கான ரூபாய் நோட்டுகள் வழியே கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கான எந்தவொரு உறுதியான விஞ்ஞான ஆய்வும் இல்லை என்றாலும், உலக சுகாதார அமைப்பு (WHO), ரூபாய் நோட்டுகளை சரியான பாதுகாப்பான முறைகளில் கையாள நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது. இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) கூட ரூபாய் நோட்டு பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து எந்தவொரு அறிக்கையையும் வெளியிடாமல் உள்ளது.

கடந்த 2019 மார்ச் 31 நிலவரப்படி நாட்டில் 1,08,759 மில்லியன் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக, 2019 ஆகஸ்ட் 29 அன்று வெளியிடப்பட்ட ஆர்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1,20,324 மில்லியன் நாணயங்களும் புழக்கத்தில் உள்ளன.

"... முன்பின் தெரியாத நபர்களின் கைகளில் இருந்து ரூபாய் விரைவாக மாறிக் கொண்டே இருப்பதால் வெவ்வேறு வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்களை சுமந்து செல்லும் மிகவும் பயமுறுத்தும் ஒன்றாக ரூபய் பயன்பாடு அமைந்துவிடுகிறது. இதனால் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது", என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் சி.ஏ.ஐ.டி. (CAIT) தெரிவித்துள்ளது. பாலிமர் ரூபாயின் பாதுகாப்பு தன்மையை இந்த அமைப்பு சுட்டிக்காட்டி, அந்த முறைக்கு முற்றிலும் மாறியுள்ள 13 நாடுகளை குறிப்பிட்டு, காகித மாறுபாடுகளை விட்டுவிட்டு, பாலிமர் பயன்பாட்டுக்கு மாற முயன்று வரும் 15 நாடுகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஆராய்ச்சிப்பிரிவு, “ஈகோராப்” (ECOWRAP) என்ற அதன் மார்ச் 17 வெளியீட்டில், பாலிமர் அடிப்படையிலான ரூபாய் நோட்டை ஏற்பதை ஆதரிக்கும் சி.ஏ.ஐ.டி-யின் கடிதத்தை மேற்கோள்காட்டி, இந்திய ரூபாய் நோட்டுகளில் நோய்க்கிருமிகள் உள்ளதை, இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டிய முந்தைய நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளது.

  • லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய 2015 ஆம் ஆண்டு ஆய்வில், கிட்டத்தட்ட 96 ரூபாய் நோட்டுகள் மற்றும் 48 நாணயங்களின் முழு மாதிரி வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் மாசுபட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது
  • மருத்துவர்கள், வங்கிகள், சந்தைகள், கசாப்பு கடைக்காரர்கள், மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஆகியோரிடமிருந்து சேகரிக்கப்பட்ட 120 ரூபாய் நோட்டுகளில், 86.4% பல்வேறு நோய்களை உருவாக்கும் நோய்க்கிருமிகளைக் கொண்டிருந்ததாக, 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • கர்நாடகாவில் 2016ல் நடந்த மற்றொரு ஆய்வு, 100, 50, 20 & 10 நோட்டுகளில் 100 நோட்டுகளில் 58 மாசுபட்டுள்ளதாக கூறுகிறது.

உலகளாவிய கவலைகள்

அசுத்தமான பண நோட்டுகளை பற்றிய இந்த கவலைகள் மற்ற நாடுகளிலும் எதிரொலிக்கத்தான் செய்கின்றன. கொரோனா பாதித்த சீனாவில் தற்போது புற ஊதா ஒளிக்கதிர் பாய்ச்சுதல், அதிக வெப்பநிலையில் வைத்தல், 14 நாட்களுக்கு நோட்டுகளை தனிமைப்படுத்துதல் மற்றும் இருக்கும் பணத்தை அழித்தல் ஆகிவ நடவடிக்கைகளின் கீழ் மூலம், பணத்தில் உள்ள கிருமிகளை சீன மக்கள் வங்கி நீக்கி வருகிறது. அமெரிக்காவில் சில வங்கிகள், பாதுகாப்பான காகித பயன்பாட்டுக்கு உறுதியளிக்குமாறு, பெடரல் ரிசர்வ் மற்றும் அமெரிக்க கருவூலத்தை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

கோவிட் - 19 வைரஸ் என்பது கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த சமீபத்திய ஒன்றாகும். கோவிட்- 19, ஒன்றின் மேற்பரப்புகளில் எவ்வளவு காலம் உயிர்வாழ்கிறது என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், "ஆய்வுகள் கொரோனா வைரஸ்கள் (கோவிட்-19 வைரஸ் பற்றிய ஆரம்ப தகவல்கள் உட்பட) சில மணிநேரங்கள் அல்லது பல நாட்கள் வரை மேற்பரப்பில் நீடிக்கக்கூடும் என்று கூறுகின்றன. இது வெவ்வேறு நிலைமைகளின் (உதாரணத்திற்கு, மேற்பரப்பு வகை, வெப்பநிலை அல்லது சுற்றுச்சூழலின் ஈரப்பதம்) கீழ் மாறுபடலாம்" என்றது.

இரண்டு ஜெர்மனி பல்கலைக்கழகங்களால் நடத்தப்பட்டு மற்றும் ஜர்னல் ஆஃப் ஹாஸ்பிடல் இன்ஃபெக்ஷன்களில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வானது, பல்வேறு மேற்பரப்புகளில் கொரோனா வைரஸ் குடும்பங்கள் (கோவிட்-19 அல்ல) தொடர்ந்து வருவதற்கு பின்வரும் நேர-வகுமுறைகளை குறிக்கிறது.

How Long Do Coronaviruses Persist On Different Surfaces
Surfaces Length
Aluminium 2 - 8 hours
Wood 4 days
Plastic 2 - 5 days
Metal 5 days
Paper 3 hours to 5 days
Ceramic 5 days
Steel 2 days to more than 28 days
Glass 4 - 5 days
Surgical glove (latex) 8 hours

Source: Journal of Hospital Infections

Note: Viruses under the coronavirus family may have different persistencies depending on their strain and temperature conditions. These data are not for COVID-19.

டிஜிட்டல் பணப்பறிமாற்றத்தில் முட்டாள்தனம்?

உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் பணத்தை தவிர்க்குமாறு பரிந்துரை செய்வதை நிறுத்திவிட்டாலும், அவர்கள் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தி உள்ளனர்.

"ஆமாம் இது சாத்தியம்; இது ஒரு நல்ல கேள்வி" என்று மார்ச் 2 அன்று டெலிகிராப் இதழிடம் உலக சுகாதார அமைப்பு கூறியது. "பணம் அடிக்கடி பல கைகளுக்கு மாறுகிறது; அனைத்து வகையான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் மற்றும் அது போன்றவை அதில் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ரூபாய் நோட்டுகளைக் கையாண்டபின் கைகளைக் கழுவவும், முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும் நாங்கள் மக்களுக்கு அறிவுறுத்துவோம். தொடர்பற்ற பணபரிமாற்றத்தை பயன்படுத்துவது நல்லது" என்று கூறியது.

கோவிட் - 19ன் பரவலை நிறுத்துவதற்கான வழியாக தொடர்பு இல்லாத பணப்பரிமாற்றத்தை பிரச்சாரம் செய்யவில்லை என்று உலக சுகாதார அமைப்பு, பின்னர் தெளிவுபடுத்தியது; உண்மைகளை சரிபார்க்கும் இணையதளம் ‘ஸ்னோப்ஸ்’ (Snopes), அந்த அமைப்பு பணத்தாள் தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிடவில்லை என்று பின்னர் தெரிவித்தது. எங்களின் நிருபரும் கருத்தை அறிவதற்காக உலக சுகாதார அமைப்பை அணுகியுள்ளார்; அதன் கருத்து கிடைக்கப்பெற்றதும் இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

ரிசர்வ் வங்கி மார்ச் 16ம் தேதி தனது குடிமக்களை பல்வேறு வகையான டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களுக்கு அறிவுறுத்தி, தற்போதைய சூழ்நிலையில் அவை எவ்வாறு பொருத்தமானவை என்பதை தெரிவித்தது. பெயரிட விரும்பாத ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர், நமது நிருபரிடம், “ரூபாய் நோட்டுகள் மூலம் வைரஸ் பரவுவது குறித்து நடுவர்மன்றத்திற்கே இன்னும் கருத்தில்லை.

. எனவே, பணத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை, மாற்று வழிகளை நாங்கள் தெரிந்துகொள்கிறோம், இதனால் மக்கள் நெரிசலான மற்றும் பொது இடங்களைத் தவிர்க்கலாம் " என்று கூறினார்.

"சமூக தொடர்புகளை தவிர்த்து தனித்து இருப்பதன் மூலமும், பொது இடங்களுக்குச் செல்வதன் மூலமும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் குறைப்பதற்கான முயற்சிகளின் பின்னணியில், மொபைல் வங்கி, இணைய வங்கி, டெபிட் அட்டைகள் போன்ற ஆன்லைன் வாயிலாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தலாம். பணத்தை அனுப்புவதற்கு அல்லது பில்களை செலுத்துவதற்கு நெரிசலான இடங்களுக்குச் சென்று , பணத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்," என்று அந்த ஆலோசகர் கூறினார்.

இந்தியாவில், மார்ச் 21 ஆம் தேதி நிலவரப்படி, 258 பேர் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹெல்த்செக்.இன் இணையதளத்தின் கொரோனா வைரஸ் மானிட்டர் தெரிவிக்கிறது.

உலகளவில், 270,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 11,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் வள மைய தகவல் தெரிவிக்கிறது.

தொடர்பு மூலம் இந்த நோய் பரவுவதால், சர்வதேச மற்றும் பிராந்திய சுகாதார நிறுவனங்கள் சமூக பரவல் மற்றும் சுய-தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளன.

இந்த கட்டுரை முதலில் இங்கே பூம் (BOOM) இணையதளத்தில் வெளியானது.

(குத்ராத்தி, பூம் இணையதளத்தில் உண்மை சரிப்பார்க்கும் பணி மேற்கொண்டிருக்கிறார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story