அதிக செலவாகும் சிசேரியன் பிரசவங்கள், ஆபத்தில் குழந்தைகள், இந்திய கிராமப்புற மருத்துவமனைகளில் இரட்டிப்பாக அதிகரிப்பு
மும்பை: கடந்த 2016ஆம் ஆண்டுடன் முடிந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை பிரசவங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக, தி லேன்செட் இதழ் 2018 அக்.13-ல் செய்தி வெளியிட்டுள்ளது. சிசேரியன் பிரசவமானது 9%ல் இருந்து 18.5% ஆகவும், உலகளவிலும் (21%) அதிகரித்துள்ளது. இப்போக்கு கவலை அளிக்கக்கூடியது என்று, அந்த இதழ் மேலும் தெரிவித்துள்ளது.
சாதாரண சுகப்பிரசவத்திற்கு எதிரான சிசேரியன் அறுவை சிகிச்சை பிரசவத்தில், தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றும் ஒரு நடைமுறையாக, பெண்ணின் அடி வயிற்றுப்பகுதியில், கர்ப்பப்பை கீறப்பட்டு, பிரசவம் பார்க்கும் சிக்கலான செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது. இது, கருச்சிதைவு, நீண்ட உழைப்பு, அதிக ரத்தப்போக்கு, நீரிழிவு நோய் அல்லது எச்.ஐ.வி. உடன் கருவுற்றிருத்தல் போன்ற மருத்துவத்துறை அவசரங்களை உள்ளடக்கியது.
தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவம் என்ற போக்கு பெருகி வருவதே இதற்கு காரணம் என்று, தி லேன்செட் இதழ் கூறுகிறது. இவ்வாறு தேவையின்றி சிசேரியன் செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது; சாதாரண பிரசவம் ஆபத்தான சூழலில் மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுதோறும் உலகில் மேற்கொள்ளப்படும் 64 லட்சம் தேவையற்ற சிசேரியன் பிரசவங்களில் 50%, சீனா மற்றும் பிரேசிலில் நடக்கிறது.
தவிர்க்க வேண்டிய இந்த சிசேரியன் பிரசவ முறையால், தாய்- குழந்தை இருவரின் உயிருக்கு ஆபத்தையோ அல்லது செயல்படாத நிலையையோ ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது 2015 அறிக்கையில் எச்சரித்திருந்தது. இதில் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட உண்மை என்னவென்றால், சிசேரியனுக்கு பிறகு குணமடைவது என்பது ஒப்பீட்டளவில் மிகவும் தாமதமாக இருக்கும்; அதிர்வு தான் இதற்கு காரணமாகிறது. மேலும், தாய் அவரது குடும்பத்திற்கும் இது நிதிச்சுமையை உண்டாக்குகிறது.
“சிசேரியன் அறுவை சிகிச்சை பிரசவத்திற்காக ரூ. 1 லட்சம் செலவாகியுள்ளது. இரண்டாவது குழந்தை பெறுவதை இனி நாங்கள் யோசிக்க வேண்டியுள்ளது” என்று, 2018 ஏப்ரலில் சிசேரியன் மூலம் பெண்ணை பெற்ற அபூர்வா பன்வார் (23) தெரிவிக்கிறார்.
சிசேரியன் முறையில் குழந்தையை பெற்ற பெண்ணுக்கு அடுத்த பிரசவத்தின் போது சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக, தி லேண்ட்செட் 2014 அறிக்கை தெரிவிக்கிறது.
சண்டிகரில் 98% சிசேரியன் பிரசவங்கள்
சிசேரியன் பிரசவத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய சதவீதம் ஏதேனும் உள்ளதா? ஒரு நாட்டில் 10-15% பிரசவங்கள் சிசேரியனாக இருக்கலாம் என்று, 1985 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வாதிட்டிருந்தது. ஆனால், 2015ல் வெளியிட்ட அறிக்கையில், தேவைப்படும் பெண்ணுக்கு மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும் என்று அது தெளிவுபடுத்தியது. ஒரு நாட்டில், 10 சதவீதத்திற்கு மேல் சிசேரியன் அதிகரிப்பதுடன், தாய்-சேய் இறப்பு விகிதம் குறைவதற்கு தொடர்பு இருப்பதாக, அது கூறியிருந்தது. ஆனால், 10%-ஐ கடந்த பிறகும் பிரசவத்தில் தாய்-சேய் இறப்பு விகிதம் குறைந்ததற்கு எந்த ஆதாரம் இல்லை.
சிசேரியன் பிரசவங்கள் 10-15% க்கு மேல் நடைபெறுகிறது என்றால், அங்கு தவறான பயன்பாடு நடப்பதாக பொருள் கொள்ள முடிகிறது என்று, தி லேன்செட் தெரிவிக்கிறது.
இந்தியாவில் சிசேரியன் பிரசவங்கள் விகிதம் பரவலாக வேறுபடுகிறது. இது நாகாலாந்து மற்றும் பீகாரில் 6% மற்றும் தெலுங்கானாவில் 58% என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்.எப்.எச்.எஸ்.) - 4 (NFHS-4) புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. "சிசேரியன் விகிதங்கள் 50% கடந்துவிட்டன என்பதை வெறுமனே ஏற்றுக்கொள்ள முடியாதது" என புனேயை சேர்ந்த பெண் நோய்இயல் நிபுணரும், சுகாதார திட்ட பயிற்சி ஆலோசனை மற்றும் ஆதரவு (SATHI) அமைப்பின் மூத்த ஒருங்கிணைப்பாளருமான அருண் காத்ரே தெரிவிக்கிறார்.
நாட்டில் அதிகபட்சமாக சிசேரியன் பிரசவங்களை கொண்டிருப்பது சண்டிகர் (98%) ஆகும். இது காத்ரே கூறியதைவிட மோசமான, ஏற்க முடியாத விகிதமாக உள்ளது. ஒரு குழந்தை சாதாரண பிரசவத்திலும், 60 குழந்தைகள் சிசேரியன் பிரசவத்திலும் பிறக்கின்றன. டெல்லியில் இந்த விகிதம், 67.83% என்ற அளவில் உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் தெற்காசிய நாடுகளில் சிசேரியன் பிரசவங்கள் எண்ணிக்கை, 6.1% என்ற அளவில் அதிகரித்து வருவதாக, தி லேன்செட் தெரிவிக்கிறது.
துணைக்கண்டத்தில் எடுத்துக் கொண்டால், வங்கதேசம் (30.7%) மற்றும் இலங்கை (30.5%) ஆகியவற்றை விட இந்தியா குறைந்த விகிதத்தையும், ஆனால் நேபாளம் (9.6%) மற்றும் பாகிஸ்தான் (15.9%) நாடுகளைவிட அதிக விகிதத்தையும் கொண்டுள்ளது.
தனியாரால் சிசேரியன்: நகர்ப்புறத்தில் 45%; கிராமப்புறங்களில் 38%
சிசேரியன் பிரசவங்கள் தனியாருக்கு ஏற்றத்தையும் ஆதாயத்தையும் தருவதாக, சுகாதார ஆர்வலர்கள் நம்புகின்றனர். ”அரசின் பொது சுதாதார நிலையங்களில் குறைந்து வரும் பராமரிப்பால், சிறந்த சேவை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு பொதுமக்களை தனியார் பக்கம் திரும்பச் செய்கிறது” என்று காத்ரே தெரிவித்தார். “இந்திய சுகாதாரத்துறையை பீடித்த நோய் இதுதான். கடந்த 14 ஆண்டுகளில் முறையற்ற சிசேரியன்களுக்கு தனியாரை பொறுப்பேற்க செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; சிசேரியன் பிரசவங்களால தனியார் துறை லாபம் ஈட்டி வருகின்றன” என்றார் அவர்.
இந்தியாவில், நகர்ப்புறங்களில் 45% சிசேரியன் பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளாலும், கிராமப்புறங்களில் 38% என்று மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசின் சுகாதார திட்டம் சி.ஜி.எச்.எஸ். (CGHS)சுகாதார நிலையங்களில் 56% சிசேரியன் மூலம் பிரசவங்கள் நடைபெறுவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, 2017-ல் அளித்த பதிலில் தெரிவித்தார். 31 நகரங்களில் (64.5%) 20 இல் இருந்து சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி சி.ஜி.எச்.எஸ். கீழ் உள்ள தனியார் மருத்துவமனைகளின் சிசரியன் பிரசவங்களை பொறுத்தவரை விகிதாச்சார ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளன.
இளம் புதிய தாய்மார்கள் உள்ள இந்திய நகரங்களில் பலர் சிசேரியன் பிரசவம் என்பது “சாதாரணம்” என்று இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். தனது அலுவலகத்தில் உள்ள பெரும்பாலான பெண்களுக்கும் சிசேரியன் நடந்ததாக, சிசேரியன் முறையில் குழந்தை பெற்ற ரேஷ்மா குக்யன் (29) தெரிவித்தார்; அவரது குழந்தை தற்போது வளர்ச்சியின் பின்தங்கியுள்ளது. “சிசேரியன் பிரசவத்தால் ஒன்றுமாகாது, நன்றாகவே இருக்கும் என்று என் நண்பர்கள் கூறினர்; அவர்களில் 90% பேர் நன்றாக இருப்பதாக நினைத்து, நானும் சிசேரியன் பிரசவத்திற்கு தயாரானேன்” என்று அவர் கூறினார்.
சிசேரியன் பிரசவங்களில் நகரங்களை எடுத்துக் கொண்டால் புனே 38% சதவீதம் என்ற குறைந்த விகிதத்தை கொண்டிருக்கிறது; இது ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவை விட அதிகம்.
கடந்த 2005- 06ஆம் ஆண்டு முதல் 2015-16க்கு இடைப்பட்ட காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் 28%-ல் இருந்து 41% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் அரசு பொது மருத்துவமனைகளில், இந்த விகிதம் குறைந்துள்ளதாக, என்.எப்.எச்.எஸ்.-4 புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வசதி படைத்த பெண்களில் அதிகம் பேர் நாடும் சிசேரியன்
சிசேரியன் என்பது இன்று ஏன் பொதுவாகிபோனது? உணவு பழக்கங்களில் மாற்றம், தாமதமாக கருவுறுதல், பணி வலி பற்றிய பயம் உள்ளிட்ட சில காரணங்கள் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
“என்னிடம் பிரசவத்துக்கு வரும் பெண்களில் பலர், இந்த நேரத்தில் குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்” என்று, மும்பை சூர்யா குழும மருத்துவமனைகளின் இயக்குனர் மற்றும் மகப்பேறு ஆலோசகரான சுசித்ரா பண்டிட் தெரிவிக்கிறார். ”பிரசவத்துக்கு வந்த ஒரு தொழிலாளி, தனக்கு மாலை 5 மணிக்கு பிறகே குழந்தை பிரசவிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கேட்டார்” என்று கூறினார்.
பிரசவத்தை தள்ளிப்போடுவது மிகவும் ஆபத்தானது என்று அந்த பெண்ணிடம் கூறியபோது, இதுதொடர்பாக எழுத்துபூர்வ சம்மதத்தை தர தயாராக இருப்பதாக, அவளின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பணக்கார பெண்களில் ((வருவாய் அடிப்படையில் மக்கள் தொகையின் அதிக 20%) சிசேரியன் பிரசவத்தை தேர்வு செய்வோர் விகிதம், 2014 ஆம் ஆண்டுடனான 20 ஆண்டுகளில் 10%-ல் இருந்து 30% ஆக அதிகரித்துள்ளது என, 2017-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.
சிசேரியன் பிரசவ விகிதம் அதிகரிப்பு என்பது மருத்துவ முன்னேற்றங்களை பிரதிபலிக்கிறது; அது அவசிய அவசரத்தேவைகளுக்காக அனுமதிக்கப்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். வண்ண டாப்ளர் அல்ட்ராசவுண்ட்ஸ் மற்றும் பிறந்த குழந்தையின் தீவிரமாக கண்காணிக்கும் அலகுகள் (NICU) போன்றவை, கருவின் வளர்ச்சியை மருத்துவர்கள் மதிப்பீடு செய்வதை எளிதாக்கியுள்ளன.
"மூன்றாம் நிலை அமைப்புகளில் உயர் திறனுள்ள என்.ஐ.சி.யு. வாயிலாக பல குறைப்பிரசவ குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடியும். சிக்கலான தருணத்தில் நாம் ஒரு உயிரைக் காப்பாற்றியாக வேண்டிய சூழலில் சிசேரியன் பிரசவத்தை தவிர வேறு வழியில்லை " என்று பண்டிட் கூறினார்.
உலக சுகாதார அமைப்பு மேற்கோள் காட்டும் கணக்குப்படி, உலகில் அதிகபட்ச அளவாக இந்தியாவில் 35 லட்சம் குறைப்பிரசவ குழந்தைகள் உள்ளன.
எண்களை பரிசோதிக்க வேண்டும்
சிசேரியன் பிரசவம் அவசியமா என்பதை தீர்மானிக்க, 10 மகப்பேறு அளவீடுகள் கொண்ட ராப்சன் வகைப்பாட்டை, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. இது பெண்ணின் கர்ப்பகால வரலாறு, பெண்ணின் கர்ப்ப வயது உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.
இந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, 2017ஆம் ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆன்-லைன் மனுவில் கையொப்பமிட்டனர். மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சகம் தனியார் மருத்துவமனைகள் மூலம் மேற்கொள்ளப்படும் சிசேரியன்களின் எண்ணிக்கையை வெளியிட்டு வருவதாக, 2017, ஜூலை 4-ல் தி இந்து செய்தி வெளியிட்டிருந்தது.
"நீங்கள் மேற்கொள்ளும் பிரசவங்கள் மற்றும் அறுவை சிகிச்சையின் எண்ணிக்கையை நீங்கள் இழக்க நேரிடும். ஆனால் எண்களை நீங்கள் பார்க்கும் போது, ஒரு பரிசோதனையாக அது செயல்படுகிறது” என்று டெல்லியை சேர்ந்த மயக்கவியல் நிபுணர் சீமா ஜெயின் கூறுகிறார்.
(சேத்ரி, லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி பட்டதாரி).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.