அஸ்ஸாமின் உலக புகழ் பெற்ற தேயிலை தோட்டங்கள் கர்ப்பிணிகளுக்கு கொடியது

அஸ்ஸாமின் உலக புகழ் பெற்ற தேயிலை தோட்டங்கள் கர்ப்பிணிகளுக்கு கொடியது
X

அஸ்ஸாம் தேயிலை தோட்டத்தில் பணியும் பிலாசி உரவ்(32), கர்ப்பம் தரிக்க அஞ்சுகிறார். “கர்ப்ப காலத்தில் இறந்த சிலரை எங்கள் எல்லோருக்கும் தெரியும்; இங்குள்ள சூழ்நிலை, குழந்தைகள் இல்லாமல் இருப்பதே நல்லது என்ற எண்ணத்தை எங்களுக்கு ஏற்படுத்திவிட்டது” என, 10 வயது குழந்தையின் தாயான அவர் கூறுகிறார்.

சோனித்பூர், அஸ்ஸாம்: "மழைக்காலத்தில் கூட தாய்மார்கள் எங்களை நாடி வர முடிகிறது," என 52 வயதான அருந்ததி தாஸ் கூறுகிறார். போஜ்கோவா கிராம அரசு துணை சுகாதார மையத்தின் அறை வெளியே நின்றபடி சாலையை சுட்டிக்காட்டி, அவர் இவ்வாறு கூறினார். அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சோனீத்பூர் மாவட்டத்தில் 10,000 மக்களுக்கு இந்த மையம் உதவுகிறது. 2001 ஆம் ஆண்டு முதல் தாஸ் பொறுப்பேற்றுள்ளார். மையத்தின் ஒரு மூலையில் ஒரு படுக்கை இருக்கிறது; மற்றொரு பக்கம், குழந்தையை எடை போடும் கருவி உள்ளது. சுவரில் தடுப்பூசிகளை கண்காணிப்பு குறித்த அட்டைகள், நோய்த்தடுப்பு துணி பைகள் தொங்குகின்றன.

முதன்மை சுகாதாரச் சேவைகள் - இருப்புச்சத்து மாத்திரைகள், அரசு திட்டங்கள் பற்றிய தகவல்கள், நோய் தடுப்பு மற்றும் கருத்தடை சிகிச்சை- வழங்கும் இந்த துணை மையம், ஆண்டுதோறும் மழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. "இதனால், தாய்மார்கள் வீட்டிலேயே தங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்," என்றார் தாஸ். அசாமின் 33 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள், ஆண்டு தோறும் பிரம்மபுத்திராவின் சீற்றத்தால் பயிர்கள் அழிந்து, மாநிலத்தின் கிராமப்புற பொருளாதாரத்தை அது முடக்குகிறது.

துணை சுகாதார மையத்திற்கு வெளியில் சாலைகள் எப்போது போடப்பட்டது என்று தமக்கு நினைவில்லை என்று கூறிய தாஸ், ஆனால் அது சுகாதார பராமரிப்பு மற்றும் தட்டம்மை ஊசி - இது பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களுக்கு தொற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது - இதை போடுவதற்காக அவர்கள் வந்து செல்வதை சாலைகள் அனுமதிக்கிறது என்றார். "சாலைகள் உயிர்களை காப்பாற்ற உதவுகின்றன," என்கிறார் தாஸ்.

இந்தியாவில் நிகழும் 1,00,000 பிரசவங்களில், கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக, 130 பெண்கள் இறக்கிறார்கள் என, அரசின் நிதி ஆயோக் அமைப்பு தரவுகள் கூறுகின்றன. கேரளா 46 என்ற குறைந்த குழந்தைகள் இறப்பு விகிதம் -எம்.எம்.ஆர் (MMR), அதிகபட்சமாக அஸ்ஸாமின் எம்.எம்.ஆர் 237 என்றுள்ளது. இது தேசிய சராசரியைவிட இரு மடங்கு அதிகம்; ஜாம்பியா நாட்டை (224) விட அதிகமாக உள்ளது என்று, உலக வங்கி தரவுகள் கூறுகின்றன. (உலகில் மிகக்குறைவான எம்.எம்.ஆர். போலந்தின் மூன்று என்றுள்ளது).

அஸ்ஸாமின் தற்போதைய எம்.எம்.ஆர். விகிதம், அது இதுவரை தாய்மார்கள் நலனுக்கு செய்த பணிகளை மறைக்க கூடும். கடந்த 10 வருடங்களில் அஸ்ஸாம் 480 எம்.எம்.ஆர். என்பதை 237 வரை குறைத்துவிட்டது - இது 50% வரை குறைவாகும்.

திறமையான மற்றும் அவசர சிகிச்சைக்கான அணுகல் இல்லாத இடங்கள் அல்லது வரம்புக்குட்பட்டு கிடைக்கும் இடங்களில் தாய்மார்கள் இறப்பு அதிகமாக உள்ளது என்று, காந்தி நகரில் உள்ள பொது சுகாதார இந்திய நிறுவனம் (IIPH) இயக்குனர் திலீப் மவலங்கர் தெரிவித்தார். "அந்த சூழ்நிலையானது அரசு அல்லது தனியார் மருத்துவத்துறையில் முன்னேற்றம் அடைந்திருந்தால் இறப்பு வீதம் குறைந்து இருக்கும்" என்றார் அவர்.

(இடமிருந்து வலம்) அருந்ததி தாஸ் (52), போஜ்கோவா துணை துணை சுகாதார மைய சுகாதார பணியாளர். உடன், அவரது சக ஊழியர் மீரா பூயா, 31. தனது பகுதி சுகாதார மேம்பாட்டுக்கு, துணை சுகாதார மைய பகுதிகளில் உள்ள சாலை வசதிகளே காரணம் என்கிறார்.

கடந்த 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் அஸ்ஸாமில் போடப்பட்ட 15,000 சாலைகள் சுகாதார பராமரிப்பு அணுகலை மேம்படுத்த உதவியுள்ளது என்று, சோனிபூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து கிராமங்களை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள், இந்தியா ஸ்பெண்ட் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், அஸ்ஸாமில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன.

கர்ப்பிணிகள் மத்தியில் ரத்த சோகை

ருகியா பேகம் (44), சோனிபூர் மாவட்டத்தில் உள்ள தெங்கபஸ்தி கிராமத்தில் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர் (ஆஷா) ஆவார். கிராமத்திற்கு அருகே இருக்கும் அவரது துணை மையம் பழுது நீக்கப்பட்டு வருகிறது. சுகாதார அதிகாரிகள், செங்கல் மூலம் அறையை கட்டியுள்ளன.ர் ஒரு பிளாஸ்டிக் நாற்காலி மற்றும் பச்சை நிற விரிப்பால் மூடப்பட்ட ஒரு மேஜை உள்ளது. மேஜை மீதுள்ள பெட்டியில் இரும்புச்சத்து மாத்திரைகள் உள்ளன. இரத்த சோகை தடுக்க கர்ப்பிணிகளுக்கு அவற்றை வழங்க்க ருகியாவுக்கு பயிற்சி தரப்பட்டு உள்ளது.

இரத்தசோகை உள்ள பெண்களுக்கு கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் வரும் ஆபத்து உள்ளதாக, அஸ்ஸாமில் ஐந்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிறந்த குழந்தைகளை கண்காணித்ததன் அடிப்படையில் வெளியான 2016 ஆய்வு கூறுகிறது. இரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பிறகு தொற்றுநோய்கள் உருவாக வாய்ப்பு அதிகம்; அவர்களின் குழந்தைகள் வளர்ச்சி குறைந்து காணப்படலாம். இந்தியாவின் பிற பகுதிகளை போன்றே, அஸ்ஸாமில் 15-49 வயதிற்கு உட்பட்ட கர்ப்பிணிகளில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு இரத்த சோகை உள்ளது.

இரத்த சோகை உள்ள கர்ப்பிணி பெண் பிரசவத்தின் போது இறக்க இரு மடங்கு வாய்ப்பு அதிகமாகும் என, மருத்துவ பத்திரிகையான லான்செட் வெளியிட்ட 2018 ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த 2007ல் பிரசவத்தில் இறந்த, தனது 18 வயது மைத்துனர் பற்றி ருகியா நினைவு கூர்கிறார். "அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதால், அவளிய மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் சிலமணி நேர தாமதம் ஏற்பட்டது. பிரசவத்திற்கு பின்னர் இரத்தப்போக்கு அதிகரித்து அவர் மரணமடைந்தார், "என ருகியா கூறினார். அப்போது தான் ருகியா ஒரு ஆஷா தொழிலாளியாக சேர்ந்து இருந்தார் என்பதால், குறைந்தளவே பயிற்சி பெற்றிருந்தார்.

இரத்தசோகை உள்ள பெண்ணுக்கு ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்; இது, அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் உடலின் திறனை குறைக்கிறது. கடும் இரத்தசோகை உள்ள பெண்ணுக்கு பிரசவத்தின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டால், அவரது இதயம் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் குறைக்கப்பட்ட நிலையில், செறிவூட்டலுக்காக வேகமாக இயங்குகிறது. இதனால், இதயக் கோளாறுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது."அவருக்கு ரத்தம் கொடுக்க டாக்டர்களுக்கு கொஞ்சம் அவகாசமே இருக்கும்" என்று, பொது சுகாதார நிபுணரும், இந்தியா முழுவதும் அசாம் உட்பட 12 மாநிலங்களில் செயல்படும் ஒரு அரசு சாரா அமைப்பான, டாக்டர்ஸ் பார் யூ (Doctors for You) என்ற அரசுசாரா அமைப்பின் நிறுவனருமான ரவிகந்த் சிங் தெரிவித்தார்.

அஸ்ஸாமின் 33 மாவட்டங்களில், 10இல் இரத்த வங்கிகளே இல்லை; ஒரு பெண் சி-பிரிவைத் தொடர்ந்து இரத்தம் தேவைப்பட்டால், அங்கு இல்லை.

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு

அஸ்ஸாமின் சோனிபூர் மாவட்டத்தில் உள்ள தெங்கபஸ்தி கிராமத்தில் ருக்கியா பேகம் ஒரு ஆஷா பணியாளர். கிராமத்து பெண்களுக்கு கர்ப்பம் தொடர்பான மருந்துகளை விநியோகிப்பது அவரது பொறுப்பு; ஆனால், கடந்த மூன்று மாதங்களாக பொருட்கள் வரவில்லை என்று அவர் கூறுகிறார்.

ஒரு ஆஷா பணியாளராக, ருகியாவின் வேலைகளில் மருந்துகளை விநியோகித்தலும் அடங்கும். மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பொருட்களை அவர் வினியோகித்து வந்தார். ஆனால் இவ்வாறு நடந்தது இது முதல்முறை என்றார்.

கர்ப்ப கால அணுகல்கள் மற்றும் பிரசவ மரணங்கள் இடையே தொடர்பு இருப்பதை, 2016 ஆய்வு உறுதி செய்தது. பெண்கள் தங்கள் குடும்ப கட்டுப்பாடு திட்ட விருப்பங்களை வழங்குவதன் மூலம் உலகளாவிய மரணங்கள் 32% மற்றும் 10% குழந்தை இறப்பு ஆகியவற்றைத் தவிர்க்கும். திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தவிர்க்க, கர்ப்பத்தடை மேற்கொள்ள ஒரு பெண்ணை அனுமதிக்கிறது.

அஸ்ஸாமில், 22% பெண்கள் வாய்வழி கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர் - இது, தேசிய சராசரியை விட ஐந்து மடங்கு அதிகம். எனினும், அஸ்ஸாமில் குடும்ப திட்டமிடல் முறைகள் குறைவாக உள்ளது. 15-49 வயது பிரிவில், 37% திருமணமான பெண்கள் மட்டுமே குடும்ப கட்டுப்பாடு திட்டத்தின் புதிய வழிமுறையைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு இந்த எண்ணிக்கை 47.8% ஆகும்.

"வாய்வழி கர்ப்பத்தடை மற்றும் ஊசி மருந்துகளை எடுத்துக்கொள்ள பெண்கள் மறந்துவிடக்கூடும் என்பதால், இதில் அதிகளவு குறைபாடு ஏற்படும்" என்று, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) இனப்பெருக்க சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனரும், எமோரி பல்கலைக்கழகத்தின் ரோலின்ஸ் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் துறை பேராசிரியருமான ரோஜர் ரொசட் தெரிவித்தார்.

தேவையற்ற கர்ப்பத்தை தடுக்க பெண்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளாக கருத்தடை மாத்திரைகள் அல்லது போலியானவை உள்ளது. திறன் குறைந்தவர்கள் மேற்கொள்ளும் கருச்சிதைவு, தொற்று நோயை அதிகரிக்க செய்கிறது.

"சில மாதங்களுக்கு முன்பு பக்கத்து கிராமத்தில் ஒரு பெண், கருக்கலைப்பு மாத்திரைகள் உட்கொண்ட பிறகு இறந்துவிட்டார்," என்று ருயா கூறினார்.

இந்த மாத்திரைகளை பெறுவது எளிதானதா?

“ஆமாம், மருந்து கடைகளில் அவை இருக்கும். ஆனால், அவற்றை பற்றி எனக்கு தெரியாது” என்ற அவருக்கு, இது குறித்த விவரங்களை கூற விருப்பமில்லை.

தெங்கபஸ்தி போன்ற கிராமப்புற பகுதிகளில், கர்ப்பம் கண்டறியும் ஆய்வகங்கள் போதுமானதாக இல்லாத நிலையில், கண்டறிவதற்கு முன்பே பெண் கர்ப்பமாக இருக்க வாய்ப்புள்ளது. கர்ப்பம் 20 வாரங்களுக்கும் மேலாகிவிட்டால், ஒரு மருத்துவர் அதை சட்டரீதியாக கலைக்க முடியாது. இதனால் அந்த பெண் கருக்கலைப்பு அல்லது தனியாரை நாடுகிறார்.

"சிறந்த சுகாதார வசதிகள் இருந்தாலும் கூட, கருக்கலைப்பு என்பது ஆபத்தானது; சில நேரம் மரணமும் ஏற்படலாம்" என்று, மும்பை சார்ந்த மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவரும், பல மருத்துவ நூல்களை எழுதியவருமான அஜித் விர்குட் தெரிவித்தார். "கிராமப்புறங்களில், பெரும்பாலான கருக்கலைப்புகள் பாதுகாப்பற்றவை; குறிப்பாக தகுதியற்றவர்களால் அவை செய்யப்படுகின்றன" என்றார் அவர். இது சட்டவிரோத நடைமுறைகள் என்பதால், இந்த மரணங்கள் ஒருபோதும் வெளிச்சத்துக்கு வருவதில்லை.

பிரச்சனைக்கான தீர்வுகளில் ஒன்று, மக்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தடைத் தேர்வுகள் (ஊசி மற்றும் உட்புற கருத்தடிய சாதனம் அல்லது IUD) வழங்குவதாகும் என்று, ரொசட் தெரிவித்தார். "மற்றொரு கருக்கலைப்பு சேவைகளை மேற்கொள்ள, திறமையான பயிற்சிகள் வழங்க வேண்டும்" என்றார் அவர்.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் தாயின் மரணங்களுக்கு, குழந்தைகள் இறப்பு விகிதம் எம்.எம்.ஆர் (MMR) ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் புறக்கணிப்பு

அஸ்ஸாமின் கர்ப்பகால சுகாதாரத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று, அங்குள்ள தேயிலை தோட்டங்களில் பணி புரியும் பெண்கள் - 27 மாவட்டங்களில் 803 - புறக்கணிப்பது ஆகும்; அந்த அளவுக்கு அதிகமான தாய்மார்களின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அசாமின் தேயிலை தோட்டங்களில், பெண்கள் மத்தியில் இரத்த சோகை கிட்டத்தட்ட உலகளாவியதாக இருந்தது என்று, 2017 ஏப்ரலில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

அஸ்ஸாமில் உள்ள பழமையான தேயிலை தோட்டம் ஒன்றில், இனிமையான மே மாத நாள் அது. மழை காரணமாக அங்கு பகல் நேரத்திலேயே வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்றுதான் இருந்தது. அஸ்ஸாமின் பாரம்பரிய மெகேலா சதோ (ஒருவகை புடவை) அணிந்த பெண்கள் குழு, மண் சாலையில் பிளாஸ்டிக் தாள்கள் பரப்பி, தேயிலைகளை பறித்துக் கொண்டிருந்தது. ஒருசிலர் கைக்குழந்தைகளை தங்களுடன் வைத்துக் கொள்ள, மற்றவர்களின் குழந்தைகள் அங்குமிங்குமாக திரிந்து கொண்டிருந்தன. காலை 8 மணி முதல் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள், தங்களது முதலாவது இடைவேளையில் அப்போது ஆஸ்வாசப்படுத்திக் கொண்டிருந்தனர்.

அஸ்ஸாமின் தேயிலை தோட்டங்களில், தேயிலை இலைகளை பெண்கள் பறிகொடுப்பது கடினமான ஒரு செயல். ஆண்கள், தாவர நடவு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர்.

பிலாசி உரவ் (32), தேயிலை தோட்டத்தில் வளர்ந்தவர். இப்போது தேயிலை பறித்து வரும் அவர், மதிய உணவுக்காக சக பெண்களுடன் அமர்ந்திருந்தார். அவர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள கிராமங்களில் வசிக்கின்றனர். கர்ப்ப காலத்தில் இறந்த, தங்கள் கிராமத்திய சேர்ந்த சிலரை அவர்கள் எல்லோருக்கும் தெரியும்.

பெண்களுக்கு சுகாதார வசதி இருக்கிறதா?

"ஆம், எங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால், நாங்கள் சர்தாருக்கு [மேற்பார்வையாளர்] தெரிவிக்க வேண்டும். அவர் எங்களை [மருத்துவமனை அல்லது மருத்துவரிடம்] அழைத்து செல்வார்" என்று உரவ் கூறினார்.

அனுமதி இல்லாமல் அவர்கள் வெளியே செல்ல முடியுமா?

"எங்களால் முடியும். எவ்வாறாயினும், நாங்கள் திரும்ப அனுமதிக்கப்படுவோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை; எனவே நாங்கள் வெளியே செல்லவில்லை. நாங்கள் வெளியே செல்வதானால், பயணம் செய்யக்கூடிய இடத்தின் முகவரியை வழங்க வேண்டும், "என்றார் அவர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் தாய்மார்களை காப்பாற்ற, சுகாதார மையங்களில் சிகிச்சை, கருத்தடை மற்றும் தட்டம்மை ஊசி போடுதல் என்று அவர்கள் அணுகுவதற்கு சாலைகள் உதவுகின்றன. இருப்பினும், இந்த பயன் தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களை இன்னும் சென்றடையவில்லை.

இந்தியா ஸ்பெண்ட் குழு பார்வையிட சென்ற போது, ஒரு மேற்பார்வையாளர் தொழிலாளர்கள் பணி புரிகின்றனரா என்று தேயிலை தோட்டங்களை சுற்றி பார்த்து கொண்டிருந்தார்.

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில், பிரசவத்தின் போது தாய் இறப்பு அதிக விகிதத்தில் உள்ளதாக, இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான ஆய்வு முடிவு கண்டறிந்துள்ளது. 150 தாய்மார்களின் இறப்புக்களை ஆய்வு செய்ததில் அதில், 69% தேயிலை தோட்டத்தில் சமூகத்தில் என்பது தெரிய வந்தது. இறந்தவர்களில் பாதி பேர் முதல்முறையாக கர்ப்பம் தரித்தவர்கள்; இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் கணவர், தற்காலிக தொழிலாளர்களாக இருந்தனர்.

இந்த இறப்பு விகிதம், தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் மத்தியில் (குறிப்பாக, மலைவாழ் மக்கள் - பழங்குடியினத்தவர்) அதிகளவில் இருந்தது என்று, சட்ட அதிகாரம் கொண்ட அமைப்பான நஸ்தீக் 2018 அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

தேயிலை தோட்டங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலான தொழிலாளர்கள், மத்திய இந்தியாவை சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது, 1900களின் முற்பகுதியில் அவர்கள், அஸ்ஸாமிற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சமூகத்தவர்கள், மாநிலத்தின் குறைந்தபட்ச ஊதியத்தைவிடவும் மிகக்குறைந்த சம்பளத்தையே பெறுகின்றனர்; மேலும், 60-70% தொழிலாளர்கள் குறைந்தபட்ச பலன்களே கிடைக்கும் வகையில் பணியமர்த்தப்பட்டு இருப்பதாக, நஸ்தீக் அறிக்கை தெரிவிக்கிறது.

"தேயிலை தோட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள், வெளியே செல்வதற்கு யாரையாவது நம்பித்தான் இருக்க வேண்டும். சிக்கலான தருணங்களில் இதில் ஏற்படும் தாமதம், உயிருக்கு ஆபத்தாக முடியும். இரத்த சோகையும், அதிக விகிதத்தில் மரணங்கள் ஏற்பட மற்றொரு காரணம்," என்று, கவுஹாத்தி இந்திய தொழில்நுட்பக் கழகத்தை சேர்ந்த, அஸ்ஸாமின் நான்கு மாவட்டங்களில் தாய்வழி மரபணுக்களை பி.எச்.டி. படிப்புக்காக ஆய்வு செய்த பிணந்தி தத்தா கூறினார்.

எங்கள் நிருபரும் அவரது மொழிபெயர்ப்பாளரும் வெளியே செல்லத் தயாராக இருந்தபோது, பெண்கள் உணவு - அரிசி மற்றும் பச்சை மிளகாய் சட்னி - சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பணி புரியும் பெண்கள் இந்த ஒருவேளை உணவு மட்டுமே உட்கொள்கின்றனர். "மோசமான பொருளாதார நிலைமை மட்டுமே தேயிலை தோட்டங்களில் பணி புரியும் பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கு காரணமல்ல; ஊட்டச்சத்து உணவு கிடைக்காததும் தான்” என்று, முந்தைய டாடா டீ லிமிடெட்டில் இருந்து உருவான, அமல்கெமேடெட் பிளான்டேஷன் பி.லிமிடெட் நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி பூர்ணானந்தா குந்த் ஒப்புக் கொண்டார்.

கடந்த ஆண்டு அஸ்ஸாம் அரசு, தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊதிய இழப்பீட்டு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது என, அக்டோபர் 2, 2018 அன்று இந்தியா டுடே செய்தி தெரிவித்தது. இந்த பண பரிமாற்ற திட்டத்தின் கீழ், தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு ரூ.12,000 வழங்குகிறது. "பெண்கள் கர்ப்ப காலத்தில் தொடங்கி, பிரசவம் முடிந்த பிறகு என, தவணைகளில் இந்த தொகையை பெறுவார்கள்," என்று, சோனித்பூர் மாவட்ட சுகாதார சேவைகள் இணிய இயக்குனர் கிருஷ்ணா கெம்ப்ராய் தெரிவித்தார். பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.167 மூலம் ஊட்டச்சத்துணவு வாங்கி குறைந்தபட்சமாவது சுகாதார அளவை மேம்படுத்த முடியும்.

ஆங்கிலேயர்களால் அஸ்ஸாமில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களில் எட்டு தலைமுறைகள் கடந்துவிட்டன. கிராமங்கள் தற்போது வளர்ந்துவிட்டன; சில கிராமங்களில் தேயிலை தோட்டம் சாராத பணிகள் கிடைக்கிறது; ஆனால் அனைவருக்கும் கிடைப்பதில்லை. "தேயிலை தோட்டங்களில் தான் அதிகளவில் உள்ள தொழிலாளர்கள் உறிஞ்சப்படுகின்றனர். இந்நிலைமை மிகவும் முக்கியமானது மற்றும் ஒரு உண்மையான அரசியல் தீர்வு இதற்கு தேவைப்படுகிறது, "என்று குந்த் கூறினார்.

பிரசவ இறப்பு பற்றி காரணங்களை ஆராய, மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டிருக்கிறது. எனினும் அதன் செயல்முறை திறன் போதுமானதல்ல. தேஜ்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (மேலே படம்) போன்ற மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் இதுபோன்ற ஒருசில இறப்புகளே பதிவாகியுள்ளன. அனேக இறப்புகள் பதிவாகவில்லை.

பதிவுசெய்யப்படாத இறப்புகள்

இந்தியா, பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார்களை காப்பாற்றும் முன், அதற்கான காரணங்களை அடையாளம் காண வேண்டும். சிவில் பதிவு மற்றும் முக்கிய புள்ளியியல் இணையதளத்தில் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்வதில் இந்தியாவில் பின்தங்கியுள்ளது. இந்தியாவில் 83.60% பிறப்பு மற்றும் 67.40% இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பிடம் இருந்து பெற்ற தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் 90% பிறப்புக்கள் மற்றும் இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன மற்றும் இந்தியா போன்ற ஒரு வளரும் நாடானா பிரேசில், 99% வரை பதிவு செய்கிறது.

வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது அல்லது முறையற்ற கருக்கலைப்பு போன்றவற்றின் போது ஏற்படும் பிரசவ மரணங்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். "முதன்மை சுகாதார மையம் அல்லது கிராமப்புற மருத்துவமனைக்கு உட்பட்ட பகுதியில் அதிக எண்ணிக்கையில் பிரசவ மரணம் பதிவானால், நிர்வாகம் குறைகூடும் என்று கருதி, பல பிரசவ இறப்புகளை பதிவு செய்யாத போக்கு உள்ளது” டாக்டர் பார் யூ அமைப்பின் சிங் தெரிவித்தார்.

பிரசவத்தின் போது தாய் இறப்புகள் குறித்து விசாரிப்பதற்கான எந்தவிதமான முறையும் இல்லை என்று சொல்ல முடியாது. கோட்பாட்டின்படி, ஒவ்வொரு மரணமும்ம் விசாரிக்கப்பட வேண்டும் மற்றும் மாவட்ட மட்டத்தில் குழுக்கள் அமைக்க வேண்டும்.

"நாங்கள் பிரசவத்தின் போது தாய் மரணம் குறித்தும், காரணங்கள் பற்றியும் விவாதிக்க மற்றும் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க, ஒரு கூட்டத்தை நடத்திறோம்" என்று, சோனித்பூரில் உள்ள தேஜ்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் பெண்களுக்கான நோய்கள் துறை இணை பேராசிரியர் ஜெகன்நாத் பட்டர் தெரிவித்தார். எனினும், இத்தகைய விசாரணைகளுக்கு வரம்புகள் உள்ளன. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதிகளோ, பணியாளர்களோ கூட இல்லை. “நாங்கள் அளித்த அறிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றோ அல்லது கருத்துரைகள் முதன்மை சுகாதார மையங்களில் உள்ளவர்களை சென்றடையும் என்பதிலோ நாங்கள் நிச்சயம் கருதவில்லை” என்று பட்டர் கூறினார்.

இக்கருத்துகள் சம்மந்தப்பட்டவர்களை போய்ச் சேரவில்லை என்று, நஸ்தீக் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

பிரசவத்தின் போது தாய் இறப்பை துல்லியமாக பதிவு செய்யப்படுவதற்கு இன்னொரு வழி உள்ளது. "15 முதல் 49 வயது வரையிலான பெண்களில் அனைத்து இறப்புக்களையும் பதிவு செய்யுங்கள்; அந்த பெண் கர்ப்பமாக இருந்தாரா அல்லது சமீபத்தில் குழந்தையை பெற்றாரா என்பதை விசாரிக்க வேண்டும். அப்படி செய்தால், எந்த வகையிலும் பிரசவ இறப்பை நாம் தவறவிட மாட்டோம்” என்று, ஐ.ஐ.பி.எச். மவலங்கர் அறிவுறுத்தினார்.

இந்த செயல்முறையில் அதிகம் செலவும் ஆகாது. இலங்கை போன்ற நாடுகளில் அனைத்து தாய்வழி இறப்புகளும் குறைந்த செலவில் விசாரிக்கப்படுகின்றன. அத்தகையதை நாம் பிரதிபலிக்க வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது. "பிரசவத்தில் தாய் இறப்பு உட்பட அனைத்து இறப்புக்களையும் பதிவு செய்வதில் இந்தியா கவனம் செலுத்தவில்லை," என்று மவலங்கர் கூறினார். ஒவ்வொரு மரணத்தையும் பதிவு செய்வதால், அதன் பின்னால் உள்ள காரணத்தை விசாரித்து பிரச்சினைகளை அடையாளம் காணலாம். அத்தகைய தீர்வுகள், தாய்மார்கள் வாழ்வதற்கு மேலும் உதவும்.

(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்தி அளிப்பவர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story