'பெரியம்மைபோல் கோவிட்டை கையாள வேண்டும்: ஒவ்வொரு நோயாளியையும் அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தி, தடுப்பூசி செலுத்துக'

இந்திய கிராமப்புறங்களில் கோவிட் -19 தொற்றை சமாளிக்க, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுடன் செயல்படும், மக்களுக்கு நன்கு அறிமுகமான ஆரம்ப சுகாதார மையங்களை நாம் மேம்படுத்த வேண்டும்; போதுமான பயிற்சி மற்றும் வளங்களை வழங்க வேண்டும்; தேவையற்ற மருந்துகள் மற்றும் விசாரணைகளை களைய வேண்டும். தடுப்பூசிகளை மக்களின் வீடுகளுக்கு அருகே கிடைக்கச் செய்ய வேண்டும் என்று, இந்த நேர்காணலில் சேவாகிராமின் எஸ்.பி.காலந்திரி கூறுகிறார்.;

By :  Baala
Update: 2021-06-18 00:30 GMT

மும்பை: கோவிட் -19 வழக்குகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் குறைந்து வருகிறது. சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கூற்றுப்படி, தொற்றின் இரண்டாவது அலை உச்சக்கட்டத்தில் இருந்த மே 10 அன்றையம் செயலில் உள்ள பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில், 70% சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கோவிட் -19 நிலைமை மேம்பட்டு வருவதாகத் தோன்றினாலும், உண்மையான கோவிட் -19 பாதிப்பு எண்ணிக்கை அறியப்படவில்லை.

கிராமப்புற இந்தியாவில் உண்மையான கோவிட் -19 பெருந்தொற்றின் நிலைமை என்ன? இரண்டாவது அலைகளில் காணப்படும் கிராமப்புற சுகாதார இடைவெளிகளுக்கு, இந்திய அரசு எவ்வாறு பதிலளிக்க முடியும், மேலும் மூன்றாவது அலைக்கு நாம் செல்லும்போது, இதில் இருந்து கற்றவற்றை பயன்படுத்துவது எப்படி? இது குறித்து விவாதிக்க, மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநரும், மற்றும் மகாராஷ்டிராவின் சேவாகிராமின் கஸ்தூரி கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளருமான மருத்துவப் பேராசிரியர் எஸ்.பி. கலாந்திரியுடன் பேசினோம். கலாந்த்ரி நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.டி., மற்றும் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரப்பள்ளியில் பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

கடந்த சில மாதங்களில், கோவிட் -19 இரண்டாவது அலையின் மிக உச்சபட்சமாக இருந்தபோதும், இதை எதிர்கொள்ளும் விதமாக மக்களின் நடத்தையில், செயலில் நீங்கள் பார்த்ததை எங்களிடம் கூறுங்கள்.

மகாத்மா காந்தி ஒரு காலத்தில் வாழ்ந்த சேவாகிராம் என்ற சிறிய கிராமத்தில் கிராமப்புற பாடம் கற்பிக்கும் வைத்தியசாலையில் வேலை செய்கிறேன். எங்களுக்கு ஒரு மருத்துவப்பள்ளி மற்றும் அத்துடன் இணைக்கப்பட்ட 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உள்ளது. இங்கு, முதலாவது கோவிட் -19 நோயாளி கடந்த ஆண்டு மே 10 அன்று எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் ஆறு மாதங்கள் [நாங்கள் பார்த்த] வேலையைக் கற்றுக்கொள்வது, கோவிட் -19 ஐக் கண்டறிய நோயாளிகளை கண்காணிப்பது, அவர்களை அனுமதிப்பதும் என கவனித்துக்கொண்டதால், நோய்த்தன்மையையும் இறப்பையும் எங்களால் முடிந்தவரை குறைத்திருப்பதை உறுதிசெய்தது. 2021 ஜனவரி நடுப்பகுதியில், நாங்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டோம், ஏனென்றால் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை, அதுவரையில்லாதபடி 325இல் இருந்து, வெறும் 28 ஆக குறைந்தது. கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு, கோவிட் -19 உண்மையில் போய்விட்டது நல்லது என்று நாங்கள் ஆச்சரியப்பட்டோம். நாங்கள் கைதட்டி கொண்டாட ஆரம்பித்தோம். ஆனால் பிப்ரவரி நடுப்பகுதியில், எங்கள் கொண்டாட்டங்கள் எல்லாம் முதிர்ச்சியற்றவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். வைரஸின் இரண்டாவது அலையானது, கிராமப்புற இந்தியாவை மிகவும் மோசமாக, இரக்கமின்றி தாக்கி, கிட்டத்தட்ட கீழே தாக்கியது.

இரண்டாவது அலையில் சரியாக என்ன நடந்தது என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். ஒரு காலத்தில், எங்கள் மருத்துவமனையில் 550 கோவிட் -19 நேர்மறை நோயாளிகள் இருந்தனர், கிட்டத்தட்ட அனைவருமே ஆக்ஸிஜன் குறைவு [ஹைபோக்சிக்] உள்ளவர்கள். எங்களிடம் ஐ.சி.யூ படுக்கைகள் காலியாக இல்லை, நாங்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் தீர்ந்துவிட்டன. ஒருநாளில், எங்களிடம் இருந்த ஆக்ஸிஜன், சுமார் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்காது என்ற சூழல் ஏற்பட்டது. முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், இரண்டாவது அலைகளில் உள்ள வைரஸ் அதிதீவிர வைரஸ், அதிக ஆக்ரோஷமானது. இந்த நேரத்தில் அது பெரிய பரிமாற்றத்தை அடைந்தது. எனவே முதல் அலையைப் போலல்லாமல், இரண்டாவது அலையில் முழு குடும்பங்களும் - தாத்தா, பாட்டி, பெற்றோர், வளரிளம் பருவத்தினர் கூட - பாதிக்கப்படுவதைக் கண்டோம். வைரஸ் ஆக்சிஜன் அளவு குறைந்து, ஓரிரு நாட்களில் நோயாளிகள் மிகக்கடுமையான ஹைபோக்சியா மற்றும் ஆக்ஸிஜன் செறிவு அளவு 50 மற்றும் 60 க்குள் என்ற சூழலில் இருந்தார்கள். ஆக்ஸிஜன் தரகூடிய சாதனங்கள் அல்லது வென்டிலேட்டர்கள், எங்கள் ஐ.சி.யுக்களின் எல்லா வளங்களை கொண்டிருக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம், எனினும் இறப்பு மிக அதிகமாக இருப்பதைக் கண்டோம். உண்மையில், ஏப்ரல் 21 அன்று, ஒரு கிராமப்புற மருத்துவமனையில் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒரு நோயாளி இறந்து கொண்டிருப்பதைக் கண்டோம். இந்த நோயாளிகளில் பலர், முதல் அலையின் போது போலல்லாமல், இளம் வயதினராக இருந்தனர். அவர்கள் முப்பது மற்றும் நாற்பது வயது என்று அரிதாகவே இருந்தனர். அவர்களே பிரதானமாக இருந்தனர். அவரிடம் கோவிட் -19 கண்டறியப்பட்ட மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் அவர்கள் மிகமிக விரைவாக மோசமான நிலைக்கு சென்றனர்.

அந்த நேரத்தில் கிராமப்புற இந்தியாவில் முழு சுகாதார முறையும் முற்றிலுமாக முடங்கியிருந்தது. மருத்துவர்கள் சோர்வாக, களைத்து, அசதியுடன் இருந்தனர்; செவிலியர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சிறந்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், எங்கள் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியினரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.

அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களுடன் ஒப்பிடும்போது, திறந்த வெளி உள்ள, அதிக காற்றோட்டமான பகுதிகள் நிறைந்த கிராமப்புறங்களில் வைரஸ் பரவுவதிலும், மக்கள் வேலை செய்வதிலும் ஏதேனும் வித்தியாசம் இருந்ததா?

கோவிட் -19 வைரஸ், நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையே என எந்த எல்லைகளையும் கவனிப்பதில்லை என்று வைராலஜிஸ்டுகள் எங்களிடம் கூறுகிறார்கள். கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் என்ற இந்த செயற்கை இரு பிரிவு, அதற்கு தெரியாது. இந்த முறை, நமது கிராமங்கள் ஒப்பீட்டளவில் காப்பாற்றப்பட்ட முதல் அலையுடன் ஒப்பிடும்போது, வைரஸ் நிச்சயமாக அதிக பரவக்கூடிய சக்தியை அடைந்தது, நமது கிராமங்களை பாதித்தது. நான் சொன்னது போல், இந்த நேரத்தில் வைரஸ் மிகத்தீவிர வைரஸாக இருந்தது.

முதல் அலை போல் அல்லாமல், ஐம்பதுகளின் பிற்பகுதியிலோ அல்லது அறுபதுகளின் பிற்பகுதியை எட்டியவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைப் பார்த்தோம், ஏற்கனவே நோயுள்ளவர்கள், வயதானவர்கள் இறப்பதோடு, இம்முறை இளைஞர்கள் மிகக்கடுமையான ஆக்ஸிஜன் குறைபாட்டுடன் வந்திருப்பதைக் கண்டோம், அவர்கள் மிக விரைவாக இறந்துவிட்டார்கள்.

மக்களின் நடத்தையைப் பார்க்கும்போது, அவர்களிடம் உள்ள ​​மிகப்பெரிய குறைபாடு என்று நீங்கள் எதை கூறுவீர்கள்? இது அறிவின் பற்றாக்குறையா? அல்லது எதுவும் தவறாக நடக்காது என்ற நம்பிக்கை சார்ந்த வேறு ஏதாவது உள்ளதா?

நாம் ஒரு ஆபத்தான மெத்தனத்தில் இருந்தோம் என்று நான் கூறமாட்டேன். ஆனால் பிரச்சனை என்னவென்றால், திடீரென்று உங்கள் மருத்துவமனை சேவைகள் முற்றிலுமாக மூழ்கிவிட்டால், நீங்கள் மருத்துவமனை படுக்கைகள் இல்லாமல் போய்விட்டால், ஐ.சி.யூ படுக்கைகள் இல்லை, உங்கள் நோயாளிகளைப் போட வென்டிலேட்டர்கள் இல்லை, ஆக்ஸிஜன் சப்ளை குறைந்து வருகிறது, அதன் பின்னர் சிறந்த முயற்சிகள் இருந்தபோதும் உங்கள் அமைப்பினை இயக்குவது மிகவும் கடினம்.

எனது கேள்வி நோயாளிகளைப் பற்றியது. கோவிட் -19 பற்றி அவர்கள் அதிகம் அறிந்திருந்தார்களா இல்லையா? கோவிட் -19 இருப்பதை ஏற்றுக்கொள்வதற்கு கிராமப்புற இந்தியாவில் உள்ளவர்கள், நகர்ப்புறத்தில் உள்ளவர்களுடன் வேறுபட்டு இருந்தார்களா?

கிராமப்புற இந்தியாவில் உள்ள முக்கிய சிக்கல் என்னவென்றால், மக்கள் தொற்று நேர்மறை என்று கண்டறிந்தபோது, ​​கடந்த கால அனுபவத்தில் இருந்து அவர்கள் அறிந்த எளிய காரணத்திற்காகவும், தங்கள் சமூகங்களில் அவர்கள் கேள்விப்பட்டவற்றிற்காகவும் அவர்கள் மருத்துவமனையில் -- குறிப்பாக வயதான மக்கள்-- அனுமதிப்பதில் சற்று தயக்கம் காட்டுகிறார்கள். காரணம், ஒருமுறை அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சென்றதும், அவர்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்படுகிறார்கள். அவர்கள் மிகவும் தனிமையில் உள்ளனர். அவர்கள் அங்கே இறந்தால், தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், அன்பானவர்களிடம் இருந்தும் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டு மரணத்தை எதிர்கொண்டு இறக்கிறார்கள். வீட்டில் உள்ள இளைய தலைமுறையினரும், தங்கள் பெற்றோரின்இறுதிக் கட்டத்தில், அவர்களுடன் துணை நிற்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வை உணர்கிறார்கள்.

கிராமப்புறப் பகுதிகளுக்கு படையெடுத்த இரண்டாவது பயம் என்னவென்றால், தொற்றால் மரணம் நிகழ்ந்துவிட்டால், பின்னர் அரசு வழிகாட்டுதல்களின்படி, சம்பிரதாய, இறுதிச்சடங்குகளை செய்ய முடியாது. எனவே, பல கிராமவாசிகள் மருத்துவமனையில் பரிசோதனை, சிகிச்சையை எதிர்கொள்வதை விட, குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மிகவும் தனிமையான மரணம் அடைவதைவிட, வீட்டிலேயே இறந்துவிடலாம் என்றும் சொன்னார்கள். கிராமப்புறங்களில் ஒரு பிரச்சினைக்கு வழிவகுத்த முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

சாத்தியமான மூன்றாவது கோவிட் -19 அலையை எதிர்நோக்குகையில், இந்தியா கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் யாவை? நாம், முயற்சிகளை நாம் எங்கே பயிற்றுவித்து நமது ஆற்றல்களை மையப்படுத்துகிறோம்?

18 ஆம் நூற்றாண்டில் பெரியம்மை நோயை ஒழிக்க பயன்படுத்தப்பட்ட அதே எளிய கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்: ஒவ்வொரு நோயாளியையும் அடையாளம் காணவும், ஒவ்வொரு தொற்ரு நேர்மறை கண்ட நபரை தனிமைப்படுத்தவும் மற்றும் அனைத்து தொடர்பாளர்களை தனிமைப்படுத்தப்பட்டு நோயெதிர்ப்பு அளிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த கோட்பாடுகள், மிகவும் எளிமையானவை, ஆனால் அவை கிராமப்புறங்களில் மிகவும் கடினமானவை, குறிப்பாக சவாலானவை என்றே சொல்லலாம். ஏனெனில் கிராமப்புற மருத்துவமனைகள் குறைவான பணியாளர்கள், குறைந்த உபகரணங்களை கொண்டவை. கோவிட் -19 நோயாளிகளை கவனித்துக்கொள்வதற்கு மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. போலி மருத்துவர்களும் உள்ளனர். அங்கு, பாலிஃபார்மசி என்ற அதிகாரம் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை மையங்கள், சமூக சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பராமரிப்பு மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கிடையேயான இணைப்பு குறைபாடு உள்ளது. இதன் விளைவாக, மருத்துவ பராமரிப்பு மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகள் அதிக சுமைக்கு ஆளாகின்றன. தங்கள் வீட்டின் அருகிலோ அல்லது சமூக மையத்திலோ சிகிச்சை பெற்றிருக்க வேண்டிய நபர்கள் சுமார் 50-100 மைல்களுக்கு அப்பால் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

மக்கள் தங்களுக்கு தொற்று பரிசோதனை செய்ய விரும்பாததற்கு இதுவும் ஒரு காரணம், ஏனென்றால் தொலைதூர மருத்துவமனையில் சிகிச்சை பெற தனது கிராமத்தில் இருந்து 100 மைல் தூரம் பயணிக்க விரும்புவோர், அங்கு மருத்துவர்கள் பரிச்சயம் இல்லாதவர்கள், சூழல் மிகவும் அன்னியமானது, சுகாதாரப் பணியாளர்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாத புதிய இடம் அது. எனவே, நாம் அனைத்தையும் பரவலாக்க வேண்டும். மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் சரியான அறிவியல் சுகாதாரத்தைப் பெற முடிகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். துணை மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்த வேண்டும்; மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்தல்; மருந்துகள் கிடைக்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், ஆதார அடிப்படையிலான சிகிச்சைகள் உண்மையில் இந்த மையங்களின் இதயத்தில் பயணிக்கின்றன என்பதையும், தேவையற்ற மருந்து எடுத்துக் கொள்ளுதல், தேவையற்ற நோய் பற்றிய விசாரணைகள் களையப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பின் இந்த மூன்று அடுக்குகளுக்கு இடையில் சரியான உறவை உறுதி செய்ய வேண்டும்.

மூன்றாவது கோவிட் -19 அலை வரும் மாதங்களில் வரக்கூடும் என்பதால், இதை நாம் எப்படி எதிர்கொள்வது? தகவல் டூல் கிட் பயன்படுத்துவதன் மூலம் நாம் வேகமாக செல்லக்கூடிய பகுதிகள் யாவை?

இந்தியாவில் 70% பேர் கிராமங்களில் வசிப்பதால், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை மையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் உள்ள மருத்துவர்கள் இப்போதே விரைவாக பயிற்சி பெறுவதை உறுதி செய்க வேண்டும். கோவிட் -19 ஒரு எளிய நோய், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் யார் நேர்மறையாளர், யார் எதிர்மறையாளர் என்று கண்காணியுங்கள். ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாதவர்கள், அவர்களுக்குத் தேவையானது பாராசிட்டமால் மாத்திரைகள் மற்றும் ஆக்சிமெட்ரி மூலம் அவர்களின் ஆக்ஸிஜன் செறிவூட்டலைக் கண்காணிக்க வேண்டும். ஆகவே, இந்த இரண்டு எளிய விஷயங்களை நாம் அடைய முடிந்தாலும், பாலிஃபார்மஸியைத் தவிர்த்து, ஆக்ஸிஜன் செறிவு சரியாகக் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்தாலும், நாம் இப்போது என்ன செய்கிறோம் என்பதை விட அதிகமாக சாதித்திருப்போம்.

நோய்த்தடுப்பு மருந்து பற்றி குறிப்பிட்டீர்கள். உங்கள் பகுதியில் தடுப்பூசி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது மற்றும் பெறப்படுகிறது?

யாருக்கு தடுப்பூசி போடுவது என்பது குறித்து நிறைய குழப்பங்கள் உள்ளன. இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களாக இருக்குமா, அது 18 முதல் 45 வயதுக்குட்பட்ட நபர்களுக்கா மற்றும் பல. கிராமப்புறங்களில் உள்ள பிரச்சினை என்னவென்றால், மக்கள் மிகவும் தொழில்நுட்பம் சார்ந்தவர்களாக இல்லை. தங்கள் பகுதிகளுக்கு அருகில் எந்த தடுப்பூசி மையங்கள் உள்ளன என்பது அவர்களுக்குத் தெரியாது. மீண்டும், பிரச்சனை என்னவென்றால், ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள் மற்றும் தடுப்பூசி பெற சுமார் 50 அல்லது 100 மைல்கள் பயணம் செய்ய வேண்டியவர்கள், பயணச்செலவுகள், ஒரு வெளி மருத்துவமனைக்குச் செல்வது, தெரியாத தடுப்பூசி பெறுவது போன்றவை, அவர்களை தடுப்பூசி பெறுவதில் இருந்து தடுக்கிறது. எனவே மீண்டும், நான் முன்பு கூறியது போல், நாம் கோவிட் -19 தடுப்பூசிகள் நமது கிராமங்களில், அவர்களின் சமூகங்களில், அவர்களது வீடுகளுக்கு அருகே கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் ஒரு பெரிய மெகா தடுப்பூசி மையத்தை வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, பின்னர் மக்கள் அந்த தடுப்பூசியைப் பெற நிறைய நேரம், முயற்சி, ஆற்றல் மற்றும் பணம் செலவழிக்க வேண்டும். இது கிராமப்புற இந்தியாவில் வேலை செய்யாது.

இந்தியாவுக்கு போதுமான தடுப்பூசி வழங்கல் இருப்பதாகக் கருதினால், வெவ்வேறு இடங்களில் தடுப்பூசிகளை வழங்கும் நடமாடும் மையங்களால் அந்த சிக்கலை தீர்க்க முடியுமா?

இருக்கலாம். ஆனால் எனது கருத்து என்னவென்றால், மக்கள் ஏற்கனவே அறிந்த கிராமத்தில் ஏற்கனவே அமைந்துள்ள துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களை ஏன் குறிவைக்கக்கூடாது? அங்குள்ள மருத்துவர்களை, கிராம மக்கள் அறிவார்கள், இந்த மையங்களை அவர்கள் அறிவார்கள். இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை மையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் போதுமான பயிற்சி பெற்ற மனிதவளமும், தங்கள் சமூகத்திற்குள் இதைப் பார்த்துக் கொள்ள போதுமான தடுப்பூசிகளும் இருப்பதை உறுதிசெய்வது இதன் யோசனை.

நாடு முழுவதும் வைரஸ் சீற்றத்தை நாம் கண்டிருக்கிறோம், மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வைரஸின் நடத்தை மற்றும் அதன் பாதிப்புக்குள்ளானவர்களிடம் இருந்து, குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் என்ன கற்றல்களை நீங்கள் எடுக்க முடியும்?

உயிரின வைரஸ், அதன் அதிகரித்த பரவுதல், இளைய தலைமுறையையும் பாதிக்கும் என்பது முதல் அலையுடன் [ஒப்பிடும்போது] , இப்போது நாம் கவனித்த மூன்று முக்கியமான விஷயங்கள்.

பரவலை பொறுத்தவரை, இம்முறை, கிராமப்புற இந்தியாவில் மக்கள் முதல் அலையுடன் ஒப்பிடும்போது சற்று பயமாகவும் பீதியுடனும் இருப்பதைக் கண்டோம். ஒருமுறை அவர்கள் தொற்றுக்கான நேர்மறை பரிசோதனை செய்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டால், அவர்கள் அங்கே தனிமையில் இருப்பார்கள் என்ற எளிய காரணத்திற்காக அவர்கள் பயந்தார்கள். அவர்கள் அங்கு சென்றால், அவர்கள் மிகவும் தனிமைப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு மரணத்தை அடைவார்கள்.

மேலும், கிராமப்புற இந்தியாவைப் பொறுத்தவரையில், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின் அடிப்படையில் மரணம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த [நிலைமை] ஆகும். கிராமங்களில் பலரிடம் நாங்கள் பேசியதில், தங்கள் வாழ்க்கையின் மாலை நேரத்தை ஒரு மருத்துவமனையில் மிகவும் தனிமையான மரணத்துடன் கழிக்க விரும்பவில்லை என்று சொன்னார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் மத்தியில் வீட்டிலேயே இருப்பார்கள், மேலும் இந்த வைரஸுக்கு சிகிச்சையளிக்க அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். எனவே இந்த பயம் கிராமவாசிகளை சுகாதாரச் சேவைகளை நாடுவதில் இருந்து தடுத்தது, அவர்களில் பலர், தகுதியற்ற சுகாதார நிபுணர்களிடம் சென்றனர். அவர்கள் போலி மருத்துவர்களிடம் சென்றனர், பாலிஃபார்மசியை நாடினர், அவர்கள் மருத்துவமனையில் இருந்து விலகி இருக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Tags:    
Load more

Similar News