அதிக கோவிட்-19 உள்ள மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இமயமலை பகுதியில் உள்ளவை
ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கோவிட் -19 நேர்மறை விகிதம் 10% ஐ விட அதிகமாக உள்ள இந்தியாவின் 83 மாவட்டங்களில், 54% இமயமலைப் பகுதியில் உள்ளன. சமவெளிகளைக் காட்டிலும் மலைப்பாங்கான பகுதிகளுக்கு தாமதமாக செல்வதும், அங்கு குறைந்த மற்றும் தாமதமான பரிசோதனைகளுமே இதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்;
மும்பை: இந்தியாவின் பல பகுதிகளிலும் தொற்றின் இரண்டாவது அலை குறைந்து வரும் நேரத்தில், இந்தியாவின் இமயமலைப் பகுதியானது, அதிகளவு கோவிட் -19 நேர்மறைத் தன்மையைக் கொண்டுள்ளதை, குடும்ப மற்றும் சுகாதார நல அமைச்சகத்தின் தரவுகளை இந்தியாஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரியவருகிறது. ஜூன் 30 நிலவரப்படி, நேர்மறை விகிதம் 10% க்கும் அதிகமான 83 மாவட்டங்களில், 54% இமயமலை மாவட்டங்கள் ஆகும்.
இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள 137 மாவட்டங்கள், இந்தியாவின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளன. இந்த பட்டியலில் அருணாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், அசாம் மாநிலத்தின் திமா ஹசாவோ மற்றும் கர்பி அங்லாங்; மேற்கு வங்கத்தின் டார்ஜீலிங் மற்றும் கலிங்போங் மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன. இவற்றில், ஜூன் மாத இறுதியில் அதிக கோவிட் -19 நேர்மறை பாதிப்புகளை கொண்ட 15 மாவட்டங்களில், 12 அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மேகாலயாவில் உள்ளன.
இமயமலைப் பிராந்தியத்தில், தொற்றின் அதிக நேர்மறை தன்மை இருக்கக்கூடும், ஏனென்றால் மலைகளுக்கு முன்பாக சமவெளிப் பகுதிகளில் நோய்த்தொற்றுகள் பரவுவது பொதுவானது மற்றும் குறைந்த சோதனை விகிதங்கள் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எங்களிடம் தெரிவித்தனர். நேபாளத்திலும், இமயமலை அடிவாரத்திலும், பெரிய இமயமலை எல்லையிலும் உள்ள மாவட்டங்களுக்கு வடக்கே பரவும் முன்பாக, கோவிட் -19 தொற்று, இந்திய எல்லையில் உள்ள சமவெளி மாவட்டங்களில் முதன்முதலில் பரவியது. ஒட்டுமொத்த இமயமலை மாநிலங்களிலும் 100,000 மக்கள்தொகைக்கு பரிசோதனை செய்வதில், இந்திய சராசரியை விட பின்தங்கியிருப்பதாக தரவு காட்டுகிறது.
தரவு என்ன சொல்கிறது
இந்தியாவின் 732 மாவட்டங்களில், 83 கோவிட் -19 சோதனைகளில் 10% க்கும் அதிகமானவை ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நேர்மறையான முடிவைக் காட்டுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை அல்லது 45, இமயமலைப் பகுதியைச் சேர்ந்தவை. அத்தகைய மாவட்டங்களின் பங்கு, நேர்மறை விகிதங்கள் குறித்த தினசரி தரவை சுகாதார அமைச்சகம் வெளியிடத் தொடங்கியபோது, 2021 மே 10 அன்று 14% ஆக இருந்தது, ஜூன் 30 க்குள் 54% ஆக அதிகரித்துள்ளது.
அதிகமான, தொற்றின் நேர்மறை விகிதங்களைக் கொண்ட முதல் 15 மாவட்டங்களும் இந்த பிராந்தியத்தைச் சேர்ந்தவை. அருணாச்சல பிரதேசத்தில், கிழக்கு காமெங் மற்றும் அப்பர் சுபன்சிரி ஆகிய இரண்டு மாவட்டங்கள் தலா 90% க்கும் அதிகமான நேர்மறை விகிதத்தைக் கொண்டுள்ளன. இந்த மாவட்டங்களுடன், திபாங் பள்ளத்தாக்கு, கம்லே, டிராப் மற்றும் நம்சாய் ஆகியன, நாட்டில் அதிக நேர்மறை விகிதங்களைக் கொண்டுள்ளன.
இந்த மாவட்டங்களில், சராசரி நேர்மறை விகிதமும் மெதுவான வேகத்தில் குறைந்து வருகிறது. மே 10 அன்று, நாடு முழுவதும் சராசரி நேர்மறை விகிதம் 24% ஆகவும், 137 இமயமலை மாவட்டங்களில் சராசரி 23% ஆகவும் இருந்தது. ஜூன் 30 நிலவரப்படி, நாடு தழுவிய சராசரி 4.2% ஆகவும், இமயமலை மாவட்டங்களில் சராசரியாக நேர்மறை விகிதம் 12% ஆகவும் உள்ளது.
குறைந்த சோதனை, தாமதமாக பரவும் வைரஸ்
"இந்த அதிக நேர்மறை விகிதங்களுக்கு பின்னால் இரண்டு காரணங்கள் இருக்கலாம். இமயமலைப் பகுதிகளுக்கு தாமதமாக பரவிய தொற்றுநோய் அல்லது சோதனை குறைவாக இருப்பது மற்றும் மிகவும் நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறார்கள், " என்று, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸின் ஸ்கூல் ஆஃப் ஹெல்த் சிஸ்டம் ஸ்டடீஸின் முன்னாள் டீன் டி.சுந்தரராமன், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
புனேவைச் சேர்ந்த உலக சுகாதாரம், உயிர்வேதியியல் மற்றும் சுகாதாரக் கொள்கை அமைப்பினை சேர்ந்த ஆய்வாளர் அனந்த் பன், இந்த காரணங்களுடன் உடன்பட்டார், மலைப்பாங்கான பகுதிகளுக்கு முன்பே, சமவெளிப் பகுதிகளில் நோய்த்தொற்றுகள் பரவுவது மிகவும் பொதுவானது என்று கூறினார்.
இந்தியாவில் தொற்றுநோயின் முதல் அலைகளில், 2020 ஜூன் நடுப்பகுதியில் முதல் அலையின் உச்சத்தை நோக்கி பரவல் நாடு முழுவதும் ஏறத் தொடங்கினாலும், ஒரு மாதத்திற்குப் பிறகு அருணாச்சல பிரதேசத்தில் ஜூலை நடுப்பகுதியில் இந்த உயர்வு தொடங்கியதை, ஜூலை 2020 இல் மாநிலத்தின் தொற்றுநோய் தயாரிப்பு குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டது. அருணாச்சலின் புவியியல் தனிமை மற்றும் போதிய போக்குவரத்து வழிமுறைகள் காரணமாக, கிழக்கு இமயமலைக்குள் அமைந்துள்ளது, ஆய்வின்படி, அருணாச்சலப்பிரதேசத்தின் வட கிழக்கு உட்பட பிற இமயமலை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அம்சங்கள். இரண்டாவது அலைகளில், 2021 பிப்ரவரி நடுப்பகுதியில் நாடு முழுவதும் வழக்குகள் உச்சத்தை அடையத் தொடங்கியபோது, அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஏப்ரல் நடுப்பகுதியில் இந்த உயர்வு தொடங்கியது. இமயமலை நேபாளம் மற்றும் பூட்டானின் முதல் மற்றும் இரண்டாவது பரவலில், இந்தியாவையும் பின்னுக்குத் தள்ளின.
இந்த மாநிலங்கள் அனைத்தும் ஜூன் மாதம், 100,000 மக்கள்தொகைக்கு இந்திய சராசரி கோவிட் -19 சோதனைகளில், பின்தங்கியுள்ளன. மேலும், ஜூன் 30 க்குள் அதிக தொற்றின் நேர்மறை கொண்ட மாவட்டங்களில், மேலும் நாகாலாந்து மற்றும் சிக்கிம் தவிர, பெரும்பாலான சோதனைகள் விரைவான ஆன்டிஜெனாக இருந்தன, நம்பகமான ஆர்டி-பி.சி.ஆர் அல்ல.
ஆனால், அதிக நேர்மறை தொற்று விகிதங்கள் ஆபத்தானவை, அரசாங்கங்கள் நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். "நிலைமையை மதிப்பிடுவதற்கும் உள்ளூர் நடவடிக்கைக்கு வழிகாட்டுவதற்கும் குழுக்கள் அனுப்பப்பட வேண்டும்" என்று சுந்தரராமன் கூறினார். "தேவைப்பட்டால், தரவு சேகரிப்பு, கண்காணிப்பு, குடும்பங்கள் அல்லது முழு கிராமங்களையும் தனிமைப்படுத்துவதன் மூலம் உள்ளூர் நடவடிக்கை எடுக்க முடியும். குக்கிராமங்கள் மிகவும் தள்ளித்தள்ளி உள்ளன.இரண்டு குக்கிராமங்களுக்கு இடையில் மைல்கள் உள்ளன. எனவே வைரஸ் பரவுகிறது என்றால், உள்ளூர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
"முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் - முன்பே சோதிக்கவும், தடுப்பூசி போடுவதைப் போலவே பரிசோதனையையும் செய்ய வேண்டும். ஏதேனும் இருந்தால் பரவல் தொகுப்பை அடையாளம் காண வேண்டும், மக்களை தனிமைப்படுத்துங்கள், "என்றார் பன், "பொது சுகாதார அமைப்புகள் நோயைப் பற்றிய அறிவை சிறப்பாக தொடர்பு கொள்ள வேண்டும், செய்தி அனுப்புவது மிகவும் முக்கியமானது" என்றார்.
ஜூன் 29 நிலவரப்படி, மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகாலாந்தில் தடுப்பூசிகள் நாட்டின் பிற பகுதிகளை விட பின்தங்கி இருந்தன, மற்ற இமயமலை மாநிலங்கள் நாடு தழுவிய சராசரியை விட முன்னிலையில் உள்ளன.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.அதிக கோவிட்-19 உள்ள மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இமயமலை பகுதியில் உள்ளவை