உலக சுகாதார அமைப்பின் கோவிட்-19 இறப்பு மதிப்பீடுகளுக்கு இந்தியாவின் ஆட்சேபனைகள் தவறானவை என்று கூறும் நிபுணர்கள்
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படாத கோவிட்-19 இறப்புகளைக் கணக்கிடும் உலக சுகாதார அமைப்பின் வழிமுறை தவறானது என்று, இந்திய அரசு புகார் தெரிவித்துள்ளது.;
சென்னை: இந்தியாவின் கோவிட் -19 தொற்றால் ஏற்பட்ட அதிகமான இறப்புக்கான மதிப்பீடுகளைத் தயாரிக்க, உலக சுகாதார அமைப்பு (WHO) பயன்படுத்தும் முறையை இந்திய அரசாங்கம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளது அல்லது தவறாகப் கருதுகிறது என்று, இந்த விவகாரம் தொடர்பாக பணியாற்றும், ஆறு உலகளாவிய வல்லுநர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்துள்ளனர்.
தொற்றுநோய் போன்ற சமயங்களில், கோவிட்-19 இலிருந்து ஒரு மரணம் – இது, நோயால் எதிர்பார்க்கப்படும் மற்றும் கவனிக்கப்பட்ட இறப்புக்கு இடையிலான இடைவெளி – நிகழ்ந்தது என்பதை எப்போதும் உறுதிப்படுத்த முடியாமல் போகும்போது, கோவிட்-19 இன் உண்மையான எண்ணிக்கையின் சிறந்த மதிப்பீட்டிற்கு வருவதற்கு சுகாதார நிறுவனங்கள் அதிகப்படியான இறப்பு மதிப்பீடுகளை நம்பியுள்ளன.
உலக சுகாதார அமைப்பு (WHO), அதிகப்படியான இறப்பு பற்றிய உலகளாவிய மற்றும் நாடு அளவிலான மதிப்பீடுகளை, இந்த வாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று, மார்ச் 21 அன்று ஒரு ஆன்லைன் விவாதத்தின் போது, உலக சுகாதார அமைப்பின் தரவு மற்றும் பகுப்பாய்வு இயக்குனர் ஸ்டீவ் மேக்ஃபீலி கூறினார். இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகள், பல்வேறு காரணங்களுக்காக கோவிட்-19 இலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்வதைத் தவறவிட்டதாக எதிர்பார்க்கப்படுவதால், போதிய சோதனைகள் முதல் நோய்களின் உண்மையான எண்ணிக்கையை தீவிரமாக அடக்குதல் வரை, அதிகப்படியான இறப்பு மதிப்பீடுகள் மிகவும் முக்கியமானவை என்று, நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பு, அதன் 194 உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடலை கொண்ட தனது செயல்முறையை, பிப்ரவரி 2021 இல் தொடங்கியது. ஆனால், இந்திய அரசாங்கம் குறைந்தபட்சம் டிசம்பர் 2021 முதல், உலக சுகாதார அமைப்பின் வழிமுறைகளை ஆட்சேபித்து, அந்த நடைமுறைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது; அத்துடன், இன்னும் பகிர்ந்து கொள்ளாத தரவு, ஆவணங்கள் மற்றும் அரசுக்கும் உலக சுகாதார அமைப்புக்கும் இடையிலான தகவல்தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்து, அதை செய்யாத ஒரே நாடு இந்தியா என்று, மேக்ஃபீலி கூறினார். உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகள், இந்தியாவின் ஆட்சேபனை குறிப்புடன் இந்த வாரம் வெளியிடப்படும்.
உலக சுகாதார அமைப்பு, 2021 ஆம் ஆண்டின் இறுதி வரையிலான கோவிட்-19 தொற்று இறப்பை 4 மில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்த்துள்ளது, இது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 480,000 கோவிட் -19 இறப்புகள் என்ற எண்ணிக்கையைவிட எட்டு மடங்கு அதிகம்.
உலக சுகாதார அமைப்புக்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து, நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான கட்டுரையைத் தொடர்ந்து, இந்தியா ஸ்பெண்டின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய செய்திக் குறிப்பை இந்தியா ஸ்பெண்டிடம் சுட்டிக்காட்டினார். அந்த செய்திக்குறிப்பில், உலக சுகாதார அமைப்பின் செயல்முறையுடன் தொடர்புடைய நிபுணர்கள் மற்றும் வெளிப்புற நிபுணர்கள் தவறாக அல்லது முறையின்றி வழிநடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடு தொடர்பான இந்தியாவின் ஆட்சேபனைகளின் மையப்பொருளானது, உலக சுகாதார அமைப்பின் தரவு - அவற்றின் இருப்பு அல்லது இல்லாமை, அந்தத் தரவுகளின் கிடைக்கும் தன்மை மற்றும் அவற்றின் பொருந்தக்கூடிய தன்மை ஆகியனவற்றை சார்ந்ததாகும். இந்தியாவில் கோவிட்-19 இறப்புகள் அனைத்தையும் முழுமையாக கணக்கிடப்படவில்லை என்பது பத்திரிகையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குத் தெளிவாகத் தெரிந்ததும், இந்தியா ஸ்பெண்ட் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள், மாநில அளவிலான சிவில் பதிவு அமைப்பு (CRS) இணையதளங்களை அணுகி, மாவட்ட வாரியான மாதாந்திர இறப்புகளை கணக்கிடத் தொடங்கின. இதில், பல மாநிலங்களில், குறிப்பாக மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், சிவில் பதிவு அமைப்பு (சி.ஆர்.எஸ் - CRS) தரவு முந்தைய ஆண்டுகளுக்கான சி.ஆர்.எஸ் -பதிவு செய்யப்பட்ட இறப்புகளுக்கும், தொற்றுநோய் மாதங்களுக்கான இறப்புகளுக்கும் இடையே பெரிய இடைவெளியைக் காட்டியது, அத்துடன் கோவிட்-19 இறப்புகள் மற்றும் கவனிக்கப்பட்ட இறப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்துள்ளது.
இந்திய பத்திரிகையாளர்கள் 2020 மற்றும் 2021 (அத்துடன் முந்தைய ஆண்டுகளில், கிடைக்கும் இடங்களில்) சி.ஆர்.எஸ். -அடிப்படையிலான மாதாந்திர இறப்புத் தரவை 18 மாநிலங்களுக்கு ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படுத்துவதற்காக வழங்கினர், மேலும் இந்தத் தரவுகள் இப்போது உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகளின் அடிப்படையை உருவாக்குகின்றன. இருப்பினும், இந்தத் தரவுகள் அரசாங்க மூலத்தில் இருந்து வந்திருந்தாலும், இந்திய அரசாங்கம் அவற்றைப் பயன்படுத்துவதை மறுக்கிறது; உலக சுகாதார அமைப்புக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான தகவல்தொடர்புகள், அரசாங்கம் உலக சுகாதார அமைப்புக்கு மாதாந்திர இறப்பு மதிப்பீடுகளை வழங்க முன்வந்தது, ஆனால் பின்னர் அவ்வாறு செய்யவில்லை என்பதைக் காட்டுகிறது.
இது தரவுகளின் அடிப்படையில், உலக சுகாதார அமைப்பால் வகைப்படுத்தப்பட்ட "அடுக்கு- II" நாடுகளில் இந்தியாவை வைக்கிறது, இந்த வகைப்பாட்டினை, இந்திய அரசு எதிர்த்துள்ளது. "அடுக்கு I நாடுகளின் கீழ் நீட்டிக்கப்பட்ட சிக்கலான அவசரநிலைக்கு உட்பட்டிருக்கும் ஈராக் போன்ற ஒரு நாட்டை உள்ளடக்கியது, அடுக்கு I/II என நாடுகளை வகைப்படுத்துவதில் உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டில் சந்தேகங்களை எழுப்புகிறது மற்றும் இந்த நாடுகளில் இருந்து இறப்பு அறிக்கையின் தரம் பற்றிய அதன் வலியுறுத்துகிறது" என்று, அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒரு நாட்டில் உள்ள தரவின் தரம் மற்றும் அவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கான அதன் விருப்பம் ஆகிய இரண்டையும் இந்த வகைப்பாடு பிரதிபலிக்கிறது என்று, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது; "சில நாடுகள் தங்களிடம் நல்ல தரவு இருப்பதாகக் கூறுகின்றன, ஆனால் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டாம் என்று தேர்வு செய்துள்ளன. அது அவர்களின் தனிச்சிறப்பு, ஆனால் அதனால்தான் அவை அதற்கேற்ப வகைப்படுத்தப்படுகின்றன" என்று, மேக்பீலி, இந்தியா ஸ்பெண்ட் இடம் கூறினார்.
இந்தியாவில், நல்ல இறப்புத் தரவுகள் இருந்தாலும், அவற்றைப் பகிர்ந்து கொள்ள மறுத்ததன் விளைவாக, அது அடுக்கு II என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இந்தியாவுடனான கலந்துரையாடல்கள் தொடர்ந்து மற்றும் உணர்திறன் கொண்டதாக பெயரிட வேண்டாம் எனக் கேட்ட, உலக சுகாதார அமைப்பின் அதிகாரி கூறினார். இதன் விளைவாக, உலக சுகாதார அமைப்பு, 18 மாநிலங்களில் இருந்து தரவைப் பயன்படுத்துகிறது மற்றும் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையேயான இறப்புகளின் பொதுவான பங்கின் அடிப்படையில், நாட்டின் மற்ற பகுதிகளுக்கு விரிவாக்கங்களைச் செய்துள்ளது என்று, ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரும் உலக சுகாதார அமைப்பின் கோவிட்-19 இறப்பு, மதிப்பீட்டுக் குழுவின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (TAG) உறுப்பினரும், புள்ளியியல் நிபுணருமான ஏரியல் கார்லின்ஸ்கி விளக்கினார்.
இந்திய அரசு, தனது செய்திக் குறிப்பில் கூறியது போலன்றி, உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகள் வெப்பநிலையில், பருவகால மாறுபாடுகள் போன்ற காரணிகளை உள்ளடக்கிய மாதிரிகளை நம்பவில்லை. மதிப்பீட்டுக் குழுவின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான இந்தியாவுக்கான மாடலிங்கை வழிநடத்திய, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் மற்றும் உயிரியல் புள்ளியியல் பேராசிரியரான ஜான் வேக்ஃபீல்ட் விளக்கினார். அந்த மாதிரிகள் மாதாந்திர இறப்பு தரவு இல்லாத நாடுகளுக்கு மட்டுமே தேவை, அதே நேரத்தில் இந்தியாவைப் பொறுத்தவரை, பத்திரிகையாளர்களின் பணி மூலம் தரவு கிடைத்தது என்று, உலக சுகாதார அமைப்பின் அதிகாரி விளக்கினார்.
ஒரு வருடத்தில், இறப்புக்கான அடிப்படை என்னவாக இருக்க வேண்டும் என்பது மற்றொரு சர்ச்சைக்குரிய விஷயம். தொற்றுநோய் இல்லாவிட்டால் இறப்பு என்னவாக இருந்திருக்கும், அப்போது தொற்றுநோய்களின் போது அதிகமாக இருந்ததை மதிப்பிடுவதற்கான முதல் படியாக இருக்கும். இந்தியாவிற்கான அடிப்படை இறப்புக்கான 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சுகாதார மதிப்பீடுகளின் (GHE 2019) தரவுத்தொகுப்பை, உலக சுகாதார அமைப்பு நம்பியுள்ளது, அதை அரசு தனது செய்திக்குறிப்பில் எதிர்க்கிறது, "இந்தியாவில் தரவு சேகரிப்பு மற்றும் மேலாண்மை ஒரு வலுவான அமைப்பு உள்ளது" என்று, அரசு குறிப்பிடுகிறது.
இருப்பினும், இந்தியாவிற்கான மிக சமீபத்திய தேசிய இறப்பு மதிப்பீடுகள் 2019 ஆம் ஆண்டிற்கான மாதிரி பதிவு அமைப்பு (SRS- 2019) மூலம் மற்றும் அக்டோபர் 2021 இல் மட்டுமே வெளியிடப்பட்டது. அத்துடன் , இந்திய அரசாங்கம் தனது சொந்த வெளியிடப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பிற வேலைகளில், உலகளாவிய சுகாதார மதிப்பீடுகளின் ( GHE 2019) தரவைப் பயன்படுத்தியுள்ளது என்று, டொராண்டோவை சேர்ந்த குளோபல் ஹெல்த் ரிசர்ச் மையத்தின் ஸ்தாபக இயக்குநரும், தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (TAG) உறுப்பினரும், இறப்பு குறித்த முன்னணி உலகளாவிய நிபுணருமான பிரபாத் ஜா, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். "மேலும், மாதிரிப்பதிவு அமைப்பு - 2019, உலகளாவிய சுகாதார மதிப்பீடு (GHE) 2019 ஐ விட குறைவான இறப்புகளை உருவாக்குகிறது, அதாவது, தொற்றுநோய்களின் போது ஏற்படும் அதிகப்படியான இறப்பு, உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டை விட அதிகமாகும்" என்று ஜா தெரிவித்தார்.
"இறப்பு தெரிவிக்கும் அமைப்புக்கு பழுது மற்றும் வெளிப்படைத்தன்மை தேவை, மேலும், உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற பங்குதாரர்கள், இந்திய கொள்கை வகுப்பாளர்களுடன் ஒத்துழைத்து, மக்கள்தொகை கணக்கெடுப்பு, வீட்டு ஆய்வுகள் ஆகியவற்றில் ஒரு கேள்வியைச் சேர்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த தரவைப் பெறுவதற்கான திட்டத்தை பட்டியலிடலாம்" என்று, தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் புள்ளியியல் தலைவரும் தொற்றுநோயியல் பேராசிரியருமான பிரமர் முகர்ஜி, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். இறப்புகள் மற்றும் அதன் காரணங்களைக் கண்காணிப்பது பொது சுகாதாரம் மற்றும் பொதுக் கொள்கைக்கு முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார்.
ஜூன் 2020 மற்றும் ஜூலை 2021 க்கு இடையில், ஜாவின் சொந்த பணியில், 3.2 மில்லியன் இறப்புகள் உருவாக்கியது தெரியவருவதுடன், கல்வித்தாள்களில் உள்ள பிற மதிப்பீடுகள் இதே போன்ற மதிப்பீடுகளை உருவாக்கியுள்ளன.
"பல தரவு மூலங்களைக் கொண்ட பல மாதிரிகள் ஒரே மாதிரியான மதிப்பீடுகளுடன் வந்துள்ளன… அனைத்து முறைகள் மற்றும் மாதிரிகள் மூலம் மூன்று முதல் நான்கு மில்லியன் அதிகப்படியான இறப்புகள் தொற்றுநோயின் உண்மையான எண்ணிக்கையை பிரதிபலிக்கின்றன" என்று முகர்ஜி கூறினார். "மொத்த இறப்புகளின் இந்த அதிகப்படியான இறப்புக் கணிப்புடன் கூட, இந்தியாவில் ஒரு மில்லியனுக்கு இறப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன, மேலும் நாடு அதன் தடுப்பூசி முயற்சிகளை விரைவுபடுத்துவதன் மூலம் மூன்றாவது அலையைச் சிறப்பாகச் சமாளித்தது" என்றார்.
டிசம்பர் 2021 முதல், உலக சுகாதார அமைப்பு, அதன் வழிமுறையை இந்திய அதிகாரிகளுக்கு பலமுறை விளக்கியுள்ளது என்று, பெயர் வெளியிட விரும்பாத உலக சுகாதார அமைப்பின் அதிகாரி கூறினார். "இறுதியில், அடுத்த தொற்றுநோய்க்கான தயார்நிலைக்கு அதிகப்படியான இறப்பு மதிப்பீடுகள் அவசியம்" என்று, மேக்ஃபீலி கூறினார். "இவை மதிப்பீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் நம்பகமான மற்றும் நிறுவப்பட்ட முறைகள். இந்தியா மகிழ்ச்சியாக இல்லை என்பதை நாங்கள் அறிவோம், இறுதி வெளியீடு அதைக் குறிப்பிடும். ஆனால் எல்லா நாடுகளுக்கும், இந்த எண்களை இப்போது வெளியிட வேண்டும்" என்றார்.
குறிப்பு: மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் புள்ளியியல் தலைவரும் தொற்றுநோயியல் பேராசிரியருமான பிரமர் முகர்ஜியின் கருத்துகளுடன் , இக்கட்டுரை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.