கோவிட் ஊரடங்குகளானது சுகாதாரம், தடுப்பூசிக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திண்டாடச் செய்கிறது

முதலாளிகளால் கைவிடப்பட்டு, நகர்ப்புற சுகாதார வசதிகள் கிடைக்காததால், இரண்டாவது கோவிட் பரவலின் போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட அவர்களது குடும்பங்களுக்கு, இருப்பு என்பதே ஆபத்தாக மாறியது. வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையில் தவறான தேர்வு செய்ய பலரும் நிர்பந்தப்படுத்தப்பட்டனர்.

By :  Baala
Update: 2021-07-06 00:30 GMT

அகமதாபாத்: நகர்ப்புற சுகாதார அமைப்புகளில் இருந்து வழக்கமாக விலக்கப்பட்ட, இந்தியாவின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கோவிட் -19 மற்றும் பிற நோய்களுக்கான மருத்துவ உதவியைக் கண்டுபிடிக்க போராடினர். இலவச கோவிட் -19 தடுப்பூசிகளை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டது.

கடந்த 2021 மே முதல் வாரத்தில் நேர்காணல் செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களில், 27% பேர் இரண்டாவது எழுச்சியின் போது கோவிட் -19 அல்லது பிற நோய்களைக் கொண்டிருந்தனர். அவர்களில், 70% பேர் சிகிச்சை பெற போராடினார்கள், 58% பேர் தங்கள் முதலாளிகளிடmமிருந்து எந்த ஆதரவும் பெறவில்லை, 62% பேர் சுகாதார செலவினங்களை ஈடுசெய்ய பெருமளவில் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று, அகமதாபாத்தில் உள்ள 195 புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றிய, அஜீவிகாவின் தொலைபேசி கணக்கெடுப்பு காட்டுகிறது.

கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்ட இரண்டு பகுதிகள் கொண்ட தொடரில், நகரங்களில் தங்குவதற்கு தேர்வு செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் மாநில ஊரடங்குகள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்வோம். முதல் பகுதியானது, வேலை மற்றும் ஊதிய இழப்புகளை விவரித்தது. இந்த இறுதி பகுதியில், நெருக்கடியின் சுகாதார பாதிப்புகளை நாங்கள் ஆராய்ந்து, நகர்ப்புற சுகாதார அமைப்புகளில் இருந்து, புலம்பெயர்ந்தவர்களை கட்டமைப்பு ரீதியாக விலக்குவது, முதலாளிகளின் ஆதரவின்மை மற்றும் பொது சுகாதார அமைப்பின் மீது ஆழமான அவநம்பிக்கை ஆகியவற்றைக் கண்டறிகிறோம்.

நோய்பாதித்த தொழிலாளர்களில் 32% பேர் பணிநீக்கம்

அகமதாபாத்தில், பழங்குடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் பணிபுரியும் சமூகத் தலைவரான சுவாதி சாக்தவத், 2021 ஏப்ரல் மாதம் கிழக்கு குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தில் இருந்தபோது, கோவிட் -19 நோய்த்தொற்று பாதித்த ஷாம்லிபனின் அனுபவத்தை விவரித்தார். அவர் பணிபுரியும் அகமதாபாத்தில் அவருக்கு இது கண்டறியப்பட்ட போதும், நகரத்தில் உள்ள அரசு சுகாதார வசதிகளை நம்பாததால், உடல்நிலை மோசமடைந்தபோது, ஷாம்லிபென் தனது கிராமத்திற்குத் திரும்பும் வாய்ப்பை தேர்வு செய்தார்.

"கிராமத்தில் மருத்துவமனையில் சேருவதற்கு ரூ .25,000 வரை செலவழித்த அவர், கடனை திருப்பிச் செலுத்த போராடினார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, தொழிலாளர் நாகா பகுதியில் வேலைகளைக் கண்டுபிடிப்பார் என்ற  நம்பிக்கையில், அவர் இரண்டாவது அலையின் போது, நகரத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, "என்றார் சாக்தவத்.

எங்கள் கணக்கெடுப்பு, முதலாளிகளின் ஆதரவு இல்லாததையும் வெளிப்படுத்தியது. கோவிட் -19 - அல்லது பிற நோய்களைக் கொண்டிருந்த தொழிலாளர்களில் 58% வரை, அவர்கள் நோய்வாய்ப்பட்ட காலத்திற்கு சம்பளம் வழங்கப்படவில்லை; 32% தள்ளுபடி செய்யப்பட்டனர்.

Full View


Full View


பாதுகாப்புக்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையே ஒரு வாய்ப்பை தேர்வு செய்தல்

அகமதாபாத்தில் உள்ள தொழிலாளர் கூட்டணியின் தலைவரான ராஜன்பென் பர்மர் கூறுகையில், 2020 ஆம் ஆண்டு கோவிட்-19 பரவலை போல் அல்லாமல், ஏப்ரல் 2021 இல் நரோலில் உள்ள அவரது கட்டிட வளாகத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒரு தொற்று நேர்மறை கண்டவர்கள் இருந்தனர், மேலும் தொற்று பயம் பரவலாக இருந்தது. அஜீவிகாவின் கணக்கெடுப்பில், 73% புலம்பெயர்ந்தோர் இரண்டாவது அலைகளின் போது கோவிட் -19 ஐ எதிர்கொள்வோமோ என்று அஞ்சினர், ஏனெனில் இது வருமான இழப்பு மற்றும் அதிக மருத்துவச்செலவுகள் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

தனது கட்டிடத்தில், ஒரு புலம்பெயர்ந்த குடும்பத்தினரின் சோகத்தையும் அவர் விவரித்தார். அங்கு ஒரு தாயும் மகளும் ஒருநாள் முழுவதும் மருத்துவமனை படுக்கையைத் தேடினர், அந்த நபர் குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் நபராக இருந்தனர். இறுதியில், தொற்று நோயால் பாதிக்கப்பட்டார், நகரத்தில் எந்த ஆதரவு முறையும் இல்லாமல், குடும்பம் தங்கள் கிராமத்திற்கே திரும்பியது.

ஊதியப் பாதுகாப்பு இல்லாத நிலையில், தொழிலாளர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக தாங்களே வேலைக்கு செல்வதை காண முடிந்தது. "கர் சே ஆத்மி ந au க்ரி பர் ஜா ரஹே ஹை. தார் பி லக் ரஹா தா. கர் சே நிக்லே யா நஹி? (என் கணவர் வெளியே வேலைக்குச் செல்கிறார். நானும் பயப்படுகிறேன். ஒருவர் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டுமா, வேண்டாமா?)," என்று, புலம்பெயர்ந்த குடும்பங்கள் எதிர்கொள்ளும் அச்சங்கள் குறித்து, பர்மர் கூறினார்.


புலம்பெயர்ந்த ஆண் தொழிலாளர்கள் தற்காலிக தங்குமிடங்களான, வீடற்ற தங்குமிடத்தில் கோவிட் -19 தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.


பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ .5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கு அனுமதிக்கும், மத்திய அரசின் முதன்மை சுகாதாரக்காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் அரோக்யா யோஜனா (PMJAY - பி.எம்.ஜே.ஏ) 2020 ஆம் ஆண்டில், கோவிட் -19 சிகிச்சைக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், ஜூன் 16, 2021, இந்தியா டுடே இதழின் விசாரணையில், குஜராத்தில் ஒரு கோவிட் -19 நோயாளி கூட இந்த திட்டத்தின்கீழ் சிகிச்சையை அணுக முடியவில்லை என்று கண்டறியப்பட்டது.

மஹிதி ஆதிகர் குஜராத் பஹேல் என்ற அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பங்க்தி ஜோக், பி.எம்.ஜே.கே திட்டம் அல்லது, குஜராத்தின் சொந்த சுகாதார காப்பீட்டுத் திட்டமான முதலமைச்சர் அம்ருதம் யோஜனாவின் கீழ், கோவிட் சிகிச்சை அளிக்கும் பல மருத்துவமனைகள் சேர்க்கப்படவில்லை என்றும், இத்திட்டங்கள் ஏழைக் குடும்பங்களுக்கானது என்றும் விளக்கினார். இந்த இரு திட்டங்களுக்குமே, அதன் காப்பீடுதாரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு எந்த உத்தரவும் வழங்கவில்லை.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், தனியார் சுகாதார உள்கட்டமைப்பை பிரத்தியேகமாக நம்பியிருப்பதன் செயல்திறனைப் பற்றி பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். 2020 ஆம் ஆண்டின் அரசு தகவல்கள் கூட இதையே காட்டுகின்றன.

'சிகிச்சைக்காக கடன் வாங்க வேண்டியிருந்தது'

தொற்றுநோயின் இரண்டாவது அலை, அகமதாபாத்தின் சுகாதார அமைப்பில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது, இது தொழிலாளர்கள் உடல்நல அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. 68% வரை அதிகப்படியான மருத்துவச்செலவுகள் மற்றும் 62% பேர் மருத்துவச்செலவுகள் மற்றும் சிகிச்சைக்காக கடன் வாங்கியதாக தெரிவித்தது, எங்களது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆசிரியர்களுடனான நேர்காணல்களில், சில தொழிலாளர்கள் இரண்டாவது அலைகளின் போது தனியார் கிளினிக்குகள் மற்றும் மருந்தாளுனர்கள், வழக்கமான ஆலோசனைக் கட்டணத்தை விட 2-3 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர், இது அவர்களின் நிதிச் சுமைகளை அதிகரித்தது.

அகமதாபாத்தில் வீட்டு வேலை செய்யும் மஞ்சு மேக்வால்*, அவர் சமைத்துக் கொடுத்த குடும்பத்தின் மூலம், தொற்றுநோய் பாதிப்புக்குள்ளானார். எனினும், தனக்கு வேலை செய்யும் வீடுகளில் இருந்து, அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை மற்றும் சுமார் ரூ.20,000 மருத்துவச்செலவுக்கு ஆளானார், , அது அண்டை வீட்டாரிடம் இருந்து கடன் வாங்கி செலுத்தப்பட்டது.

நகர்ப்புற சுகாதார அமைப்பில் புறக்கணிப்பு

குடியேற்றத் தேவைகள், மொழித்தடைகள், அவதூறுக்கு ஆளாகுதல் ஆகியன நகரத்தில் உள்ள உள்ளூர் பொது சுகாதார அமைப்புகளை அணுகுவதில் இருந்து புலம்பெயர்ந்தோரைத் தடுத்துள்ளன. புலம்பெயர்ந்த குடியேற்றங்களை, உள்ளூர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாததால், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா) மற்றும் பிற சுகாதாரத் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த வீடுகளுக்குச் செல்வதும் ஒழுங்கற்று உள்ளது.

"நகரத்தில் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அகமதாபாத்தில் அரசு மருத்துவ உதவியை அணுக முடியாது," என்று, அஜீவிகாவின் அகமதாபாத் மையத்தைச் சேர்ந்த மகேஷ் கஜேரா கூறினார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட, நகர்ப்புற நிர்வாக முறைக்கு புலம்பெயர்ந்தோரின் அணுகல் குறித்த, தொற்றுநோய்க்கு முந்தைய ஆய்வு, நேர்காணல் செய்தவர்களில் 90% பேர் தனியார் கிளினிக்குகளை விரும்பினர்; அத்துடன், நகர்ப்புற சுகாதார மையங்கள் (இலவச ஆரம்ப சுகாதார சேவையை வழங்கும் சிறிய கிளினிக்குகள்) அல்லது பொது மருத்துவமனைகள் (இரண்டாம் நிலை சிகிச்சைக்காக), மற்றும் போலி மருத்துவரை அணுகுதல் மற்றும் மருந்தாளுநர்களுடன் ஆலோசனைகளும் இதில் அடங்கும். இந்த ஆலோசனைகளுக்காக அவர்கள் தங்கள் சொந்த செலவில் பைகளில் ரூ .100 முதல் ரூ .3 லட்சம் வரை செலுத்தினர்.

அரசின் பொது சுகாதாரத்தில் அவநம்பிக்கை

தொற்றின் இரண்டாவது அலைகளின் போது, அரசு சுகாதார ஊழியர்கள், ஒவ்வொரு நாளும் நரோலில் குடியேறிய பகுதிகளுக்குச் செல்லத் தொடங்கினர் என்று ரஞ்சன்பென் பர்மர் மேலும் கூறினார். ஆனால் புலம்பெயர்ந்தோர் அவநம்பிக்கை மற்றும் மருத்துவமனைகளில் கட்டாயமாகக் கட்டுப்படுத்தப்படுவார்கள் மற்றும் குடும்பங்களில் இருந்து பிரிந்து செல்வார்கள் என்ற பயம் காரணமாக அவர்களுடன் ஆலோசிக்க தயங்கினர்.

இந்த அவநம்பிக்கை, கிராமப்புறங்களில் பலவீனமான பொது சுகாதார அமைப்புகளில் காணப்படுகிறது என்று, தெற்கு ராஜஸ்தானில் லாப நோக்கற்ற நிறுவனமான பேசிக் ஹெல்த்கேர் சர்வீசஸின் இணை நிறுவனர் பவித்ரா மோகன், இந்தியாஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு நகரங்களில் இருந்து திரும்பிய புலம்பெயர்ந்தோரை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய சோதனை பற்றிய தகவல்களால், இதுபற்றிய கவலை அதிகரித்தது என்று அவர் மேலும் கூறினார்.

தடுப்பூசி: விலக்கலும் தயக்கமும்

இரண்டாவது அலை தொடங்கியவுடன், குஜராத்தில் பெரிய அளவிலான தடுப்பூசி போடுவதை நோக்கி வேகப்படுத்தப்பட்டு, கவனம் செலுத்தப்பட்டது. ஜூன் 30 நிலவரப்படி, குஜராத்தின் 18+ தகுதி வாய்ந்த 19.8 மில்லியன் மக்கள்தொகையில், அகமதாபாத்தில் 2.3 மில்லியன் மக்கள் வரை முதல் டோஸை போட்டுள்ளனதாக, அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

அஜீவிகா கணக்கெடுப்பின் போது, ​​18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கான பட்டியல் இப்போதே தொடங்கிவிட்டது, அந்த வயதிற்குள் குடியேறிய தொழிலாளர்கள் யாரும் தடுப்பூசி எடுக்கவில்லை. அவர்களில் 60% பேர் தடுப்பூசி போட தயாராக இருப்பதாக எங்கள் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. இருப்பினும், விருப்பமுள்ளவர்களில் பலர் கூட, தடுப்பூசி மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினர்.

"இப்போது தொற்றுநோய் நிலைமை சிறப்பாக வருவதால், தொழிலாளர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறி தடுப்பூசி போட இன்னும் தயக்கம் காட்டுகிறார்கள், மேலும் தடுப்பூசி தேவையில்லை" என்று மகேஷ் கஜேரா கூறுகிறார்.

புலம்பெயர்ந்தோரில் 40% பேர் தாங்கள் தடுப்பூசி போடத் தயாராக இல்லை என்று கூறியுள்ளனர், தொலைதூர உறவினர்கள் மத்தியில் மோசமான அனுபவங்களைக் கேட்டது மற்றும் பக்க விளைவுகள் பற்றிய தவறான எண்ணங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே தடுப்பூசி மீதான அவநம்பிக்கை அதிகரித்து வருவதாக, சூரத் பதிவு செய்துள்ளது.

தடுப்பூசிக்கு டிஜிட்டல் பதிவு செய்வதற்கான தேவையும் நோய்த்தடுப்பு மருந்துகள் தயாரிக்க விரும்பும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தடைகளில் ஒன்றாகும். இந்தக் கொள்கையை மறுஆய்வு செய்வதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவும், நிகழ்விடத்தில் பதிவுடன் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இலவச-தடுப்பூசி இயக்கமும் இதை மாற்றக்கூடும்.

இருப்பினும், வரையறுக்கப்பட்ட ஒதுக்கீடு நேரங்கள், 12 மணி நேர ஷிப்டுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு தளவாட தடைகளை உருவாக்கக்கூடும். மேலும், 62% தொழிலாளர்கள் தாங்கள் ஒரு நாளின் வேலையையும் ஊதியத்தையும் இழக்க நேரிடும் என்று கூறி, ஜப்பை எடுத்துக் கொள்வதில் இருந்தும், அதன் பக்க விளைவுகளில் இருந்து மீளலாம்.

Full View


Full View

தொழிலாளர்கள் ஊதியமின்மைக்கு இழப்பீடு மற்றும் இலக்கு நிர்ணயித்துடன் ஊக்கத்தொடை செலுத்தப்படுத்தப்பட வேண்டும் என்று கஜெரா பரிந்துரைத்தார். முதல் ஊரடங்கின்போது, திரும்பி வந்த புலம்பெயர்ந்தவர்களுக்கு, 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் ரூ.2,000 இழப்பீடாக வழங்கியஒடிசாவின் திட்டம் ஒரு பயனுள்ள ஊக்க நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

* அடையாளங்கள் வெளிப்படுத்தாமல் இருக்க, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் திப்தி மக்வானா, துர்காரம், கீதா பர்மர், முகேஷ் பர்மர், பன்னலால் மேக்வால், ராஜேந்திர குமார் பாலாய், ரஞ்சீத் கோரி மற்றும் அஜீவிகா பணியகத்தின் அகமதாபாத் மையத்தின் சுவாதி சாக்தவத் ஆகியோருக்கு நேர்காணல்கள் மற்றும் கணக்கெடுப்புக்கான நுண்ணறிவு மற்றும் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.orgஎன்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Load more

Similar News