இந்தியாவின் தொற்று, இறப்புகளில் குறைந்த மதிப்பீடு உள்ளதை நகர அளவிலான 1வது கோவிட் தரவு பகுப்பாய்வு காட்டுகிறது

இந்தியாவின் சராசரியான 100 பேரில் 70%-க்கும் அதிகமானோருக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை என்பதுடன் ஒப்பிட்டால், 2020 மே முதல் அக்டோபர் வரையில் மொத்த தொற்றுநோய் எண்ணிக்கையில் மதுரை நகரம், 1.4% மட்டுமே கண்டறிந்துள்ளது என்று, மதுரையின் கோவிட் -19 கண்காணிப்பு மற்றும் சீரோ-சர்வே தரவு காட்டுகிறது;

By :  Rukmini S
By :  Baala
Update: 2021-08-19 00:30 GMT

சென்னை: இந்தியாவில் இருந்து கோவிட் -19 கண்காணிப்பு மற்றும் சீரோ சர்வே தரவின் முதலாவது விரிவான, நகர அளவிலான பகுப்பாய்வானது, சோதனையில் எதை பற்ற முடியும் அல்லது எடுக்க முடியாது என்பதைக் காட்டுகிறது. மதுரை நகரில் கோவிட் -19 முதலாவது அலையின் போது எடுக்கப்பட்ட ஒரு பெரிய தரவுத்தொகுப்பின் பகுப்பாய்வு, இந்திய சராசரியை விட அதிக விகிதத்தில் மதுரையில் பரிசோதனை நடந்திருந்தாலும், நகரம் 1.4% நோய்த்தொற்றாளர்களை மட்டுமே பரிசோதித்தது மற்றும் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களில் 11% இறப்புகள் மட்டுமே என்றது. இது, நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளை தவறவிட்டதையே காட்டுகிறது.

மதுரை நகரில் மரண ஆபத்து என்பது, அமெரிக்கா அல்லது இங்கிலாந்தை விட அதிகமாக இருந்தது, தி லான்செட் வெளியிட்ட ஒரு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது; நகரத்தில் கோவிட் -19 ஆர்டி-பிசிஆர் கண்காணிப்பு மிகவும் கடுமையான நோயாளிகளுக்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டதை காட்டுகிறது.

தென் தமிழகத்தில் உள்ள மதுரை நகரமானது, 1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ளது. 73,700 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் நோயாளிகளுடன், மதுரை மாவட்டம் தமிழகத்தின் எட்டாவது மிகமோசமான கோவிட் -19 பாதிக்கப்பட்ட மாவட்டமாகும், மேலும் இந்தியாவின் முதல் அலையின் போது குறிப்பிடத்தக்க நோய் பரவலை சந்தித்தது.

மே 20 முதல் அக்டோபர் 31, 2020 வரை மதுரை நகரில் நடத்தப்பட்ட 440,000 க்கும் மேற்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனைகளின் அதிகாரப்பூர்வ ஆனால் இதுவரை வெளியிடப்படாத தரவே பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் அக்டோபர்-நவம்பர் 2020 இல் அரசு நிதியுதவியுடன் மாநில அளவிலான சீரோ சர்வே நடத்தப்பட்டது. இதில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ரமணன் லட்சுமிநாராயண் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, வயதானவர், ஆண் மற்றும் புற்றுநோய், நீரிழிவு மற்றும் பிற குறிப்பிட்ட நோய்த்தொற்றின் வரலாறு இருப்பதைக் கண்டறிந்தது. இது, கோவிட் -19 தொற்றால் நோயாளிகள் இறக்கும் வாய்ப்பை அதிகரித்தது.

மதுரை நகரின் கோவிட் -19 கண்காணிப்பு, இந்திய சராசரியை விட சிறப்பாக இருந்தது-மே மற்றும் அக்டோபர் 2020 க்கு இடையில், நகரம் 100 பேருக்கு 13.5 என்ற விகிதத்தில் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை நடத்தியது, இந்தியா முழுவதும் 100 பேருக்கு 7.9 சோதனைகள் என்று அப்போது இருந்தது. ஆனாலும், மதுரையின் சோதனையானது, சீரோ சர்வே மூலம் மதிப்பிடப்பட்ட அனைத்து நோய்த்தொற்றுகளிலும் வெறும் 1.4% மட்டுமே கண்டறியப்பட்டதாகக் கண்டறிந்துள்ளது, மேலும் "நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகள் குறித்த தகவல்கள், மொத்த தொற்றுநோய்களை பெரிய அளவில் குறைத்து மதிப்பிடலாம்" என்று கூறுகிறது.

Full View


Full View

ஆர்டி-பிசிஆர் சோதனையில் நேர்மறையான சோதனைக்கான சாத்தியக்கூறுகள் அறிகுறி இல்லாதவர்களுக்கு (2.5%) எதிராக, பரிசோதனை நேரத்தில் அறிகுறியாக இருந்தவர்கள் (5.4%) எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது, அறிகுறி நபர்களை விட அதிக அறிகுறியற்றவர்கள் இருந்த போதிலும். வயதுக்கேற்ப அறிகுறி நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான ஆபத்து சீராக உயர்ந்தது, ஆனால் அறிகுறியற்ற நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் பூஜ்ஜியத்திற்கும், 44 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு ஒரே மாதிரியாக இருந்தது, அதை விட வயதானவர்களுக்கு மட்டுமே அதிகரித்தது.

Full View


Full View

சீரோ-சர்வே, 1,140 மதுரைவாசிகளின் மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்டது. சீரோ-சர்வே பங்கேற்பாளர்கள் கோவிட் -19 இருப்பது உறுதி செய்யப்பட்ட ஒரு நபருடன் தொடர்பு வைத்திருப்பதாக அறியப்பட்டது, தெரியாத தொடர்பு இல்லாதவர்களைக் காட்டிலும் 2.19 மடங்கு அதிக ஆன்டிபாடிகளைக் காட்டும் வாய்ப்பு உள்ளது. வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட நோய் உள்ளவர்களும் ஆன்டிபாடிகள் இருப்பதைக் காட்ட அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆன்டிபாடிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, இது அதிகாரப்பூர்வ வழக்கு எண்ணிக்கையில் குறைந்த எண்ணிக்கையிலான பெண்களுக்கு கொடுக்கப்பட்ட அதிக அளவு அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளைக் குறிக்கிறது.

சீரோ சர்வே ஆய்வு காலத்தின் முடிவில், 15 வயதுக்கு மேற்பட்ட நகர மக்களில் 40% பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, தென் கொரியா மற்றும் சீனாவை விட, 0 - 60 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு வயதினருக்கான இறப்பு விகிதம் மதுரையில் அதிகமாக இருந்தது, ஆனால் மதுரைக்கும் இந்த நாடுகளுக்கும் இடையில் வயதானவர்களுக்கான விகிதம் ஒத்திருந்தது. கோவிட் -19 நோயாளிகளுக்கு இடையே அறியப்பட்ட நாள்பட்ட நோய்களின் பரவல் அமெரிக்கா மற்றும் இத்தாலியை விட மதுரையில் இளம் வயதிலேயே அதிகமாகவும், வயதான காலத்தில் குறைவாகவும் இருந்ததற்கு இது ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை, இறப்புகள், வயதுக்கேற்ப சரிசெய்தல் ஆகியவற்றின் அடிப்படையில், அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் தென் கொரியாவை விட மதுரையில் உள்ள நோயாளிகள் மத்தியில் கோவிட் -19 இல் இருந்து இறக்கும் ஆபத்து அதிகமாக இருந்தது. இது, மதுரையில் கோவிட் -19 கண்காணிப்பு பரிசோதனை"மிகவும் தீவிர மருத்துவ தேவை உள்ள நோயாளிகளை மட்டுமே கண்டது" என்று ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள் கூறுகின்றனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குறைந்த தொற்று அபாயம் உள்ளவர்கள், இதில் கண்டறியப்படவில்லை.

Full View


Full View

கோவிட் -19 இறப்புகளை கணிசமாக குறைத்து மதிப்பிடுவதற்கான சாத்தியத்தையும் இந்த கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. சீரோ-சர்வே மூலம் அடையாளம் காணப்பட்ட தொற்றுநோய்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, நகரம் அதன் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட அதிக இறப்புகளைக் காணும் என்று எதிர்பார்க்க வேண்டும். கோவிட் -19 இலிருந்து எதிர்பார்க்கப்படும் இறப்புகளில் 11% மட்டுமே அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களால் கண்டறியப்பட்டதாக, ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தற்போது மாநிலத்தின் நிதி அமைச்சர். ஏப்ரல் 2021 தேர்தல் பிரச்சாரத்தின்போது, இந்தியாஸ்பெண்டிடம் பேசிய ​​தியாகராஜன், மதுரையில் உள்ள மயானங்கள், அதிகாரப்பூர்வ எண்ணிக்கைகளை விட அதிக இறப்புகளைப் பதிவு செய்ததாகவும், கோவிட் -19 இறப்புகள் குறித்த சுதந்திரமான தணிக்கைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறினார்.

கணிசமான எண்ணிக்கையிலான கோவிட் -19 இறப்புகள் தவறவிடப்பட்டதாக கூறப்படுவதை, தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை நிர்வாகம் முழுமையாக ஏற்கவில்லை. "தமிழகம், ஒப்பீட்டளவில் அதிக ஆரோக்கியத்தைத் தேடுவோரை கொண்ட, படித்த மாநிலம் என்று நாங்கள் நம்புகிறோம், எனவே கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனைக்குச் சென்றிருப்பார்கள்; அவர்களுக்கு கோவிட் -19 கண்டறியப்பட்டிருந்தால் சிகிச்சை பெற்றிருப்பார்கள்," என்று, மாநில சுற்றுலா அமைச்சகத்தின் முதன்மை செயலாளரும், மதுரை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட கோவிட் -19 கண்காணிப்பு அதிகாரியுமான பி. சந்திர மோகன், இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.

"தொற்று இறப்பு விகிதத்திற்கு (IFR) பயன்படுத்தப்படும் மாதிரிகள், அதிக இறப்புகளை கணிக்கக்கூடும், ஆனால் இது தவறவிட்ட இறப்புகள் என்று நாம் அழைக்கலாம் என அர்த்தமல்ல," என்று அவர் மேலும் கூறினார். உலகெங்கிலும் உள்ள மற்ற சீரோ-சர்வேக்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐஎஃப்ஆர் கணிப்புகள் உண்மையான தோற்றத்தை பிரதிபலிக்காமல் இருக்கலாம் என்ற அவர், விட் -19 இலிருந்து "உண்மையான" எண்ணிக்கையை விட அதிக "எதிர்பார்க்கப்படும்" இறப்புகளை, அவர்கள் உருவாக்க முடியும் என்று மேலும் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Tags:    
Load more

Similar News