ஆக்ஸிஜன் தொட்டியுடன் ஒரு மனிதரும், இந்தியாவின் அதிகரித்து வரும் இறப்பும்

ஆக்ஸிஜன் தொட்டியுடன் ஒரு மனிதரும், இந்தியாவின் அதிகரித்து வரும் இறப்பும்
X

கடந்த 2008இல், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் கண்டறியப்பட்ட முன்னாள் ஆலோசகர் ராஜ் ஐயர், 69, தான் பயணித்த வாழ்க்கை, கிழக்கு பெங்களூருவில் உள்ள தனது படுக்கையறைக்குள் சுருங்கிவிட்டதை கண்டார். அங்கு அவர் 24 மணி நேர ஆக்ஸிஜன் வழங்கல் உட்பட உயிர்காக்கும் உபகரணங்களின் உதவியோடு வாழ்கிறார்.

பெங்களூரு: இந்தியாவின் பொருளாதாரம் விரிவடைந்து, செழித்து வளர்ந்து வரும் நிலையில், ராஜ் ஐயர், 34 ஆண்டுகளுக்கும் மேலாக, மாதத்திற்கு குறைந்தது 14 நாட்களாவது லாப நோக்கற்ற மற்றும் அரசு நிறுவனங்களின் ஆலோசகராக பயணம் செய்தவர்.

அவரது பயணம், நிறைவான வாழ்க்கையானது, 11 வருடங்களுக்கு முன் அவருக்கு மீண்டும் மீண்டும் ஏற்பட்ட மூச்சுத் திணறலை தொடர்ந்து மாறிப்போனது. அவருக்கு, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் - சிஓபிடி (COPD) கண்டறியப்பட்டது; இது அவரது நுரையீரலையும், சுவாசிக்கும் திறனையும் பலவீனப்படுத்தியது.

கடந்த 40 ஆண்டுகளாக, நாளொன்றுக்கு 60 சிகரெட்டுகளை புகைத்தது இதற்கு உடனடி காரணமாக இருக்கலாம்; இருப்பினும் மோசமடைந்து வரும் காற்று மாசுபாடும் இதில் ஒரு பங்கைக் கொண்டிருந்திருக்கக்கூடும். "எனது சுவாச நோய் அறிகுறிகள் எனக்கு தெரியும்; ஆனால் அது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் - சிஓபிடி என்று எனக்குத் தெரியாது," என்று ஐயர் கூறினார். "இது எவ்வளவு மோசமானது அல்லது குணப்படுத்த முடியாதது என்று எனக்குத் தெரியாது" என்று அவர் கூறினார்.

இன்று, ஐயருக்கு 69 வயதாகிறது; அவரது பரந்து விரிந்து கிடந்த வாழ்க்கை பெங்களூருவின் கிழக்கு பை லே-அவுட்டில் உள்ள வீட்டின் ஒரு அறைக்குள் சுருங்கிவிட்டது; அங்கு அவர் தனது முதன்மை பராமரிப்பாளர்களுடனும், அவரது 34 வயது மகனுடனும், 27 வயது மருமகளுடன், வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். நாம் பின்னர் விளக்குவது போல், நோயால் அவரது வாழ்க்கிய சுற்றப்பட்டுள்ளது.

"நான் முதன்முதலில் திருமணம் செய்துகொண்டபோது (2012 இல்), அவரது சிஓபிடி அவ்வளவு மோசமாக இருந்ததில்லை. அவருக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் உதவி தேவைப்படவில்லை," என்று, ஐயரின் மருமகளும், மழலையர் பள்ளி ஆசிரியருமான அந்தாரா கார்த்திகேயன் கூறினார்.

சிஓபிடி அதிகரித்த போது, ஐயருக்கு ஆக்ஸிஜன் உதவி தேவைப்பட்டது. அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு - இது உடலுக்கு நச்சுத்தன்மையுடையது மற்றும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும் நுரையீரலின் திறனை சிஓபிடி பாதிக்கும்போது குவிந்து கிடக்கிறது - இதன் காரணமாக மூச்சுத் திணறலுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் அவரது எலும்புகள் மேலும் பலவீனமடைந்தன.

ஐயரின் அறையானது, அவரது உயிர்வாழ்வதற்கான சாதனங்களால் கையகப்படுத்தி காணப்படுகிறது. ஒரு “பீ-பாப் (BiPAP) இயந்திரம்”, இது அவரது சுவாசத்தை சீராக்கும் சுவாசக் கருவியாகும். பயணம் செய்யும் போது எடுத்துச் செல்லக்கூடிய சிறிய ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி. ஒரு பெரிய ஆக்ஸிஜன் செறிவு இயந்திரம் காற்றில் இருந்து நைட்ரஜனை பிரித்து, 7 மீட்டர் நீளமுள்ள பிளாஸ்டிக் குழாய் வழியாக தூய்மையான ஆக்ஸிஜனை தருகிறது; அது வீட்டைச் சுற்றி செல்ல அனுமதிக்கிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரில் மின்சாரம் துண்டிக்கப்படும்போது கூட, உயிர் காக்கும் வாயுவை செலுத்துவதற்காக, அதிர்வூட்டும் மின் தொகுப்புக்கு பதில், ஆக்ஸிஜன் செறிவு கருவி, இன்வெர்ட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஐயரின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையானது, இந்தியாவின் உடல் மற்றும் பொருளாதார மாற்றத்தின் விளைவை காட்டுகிறது. அவரது உடலை அழிக்கும் சிறிய-அறியப்படாத, மோசமாக நிர்வகிக்கப்படும் நோயின் போக்கு - வளர்ந்து வரும் காற்று மாசுபாடு உள்ள ஒரு நாட்டில் முன்பை விட அதிகமான இந்தியர்களைக் கொன்று வருகிறது. புகைபிடித்தல் இளைஞர்கள் மற்றும் வயதானவர்களை பாதிக்கச் செய்கிறது.

குணப்படுத்த முடியாத நோயான சிஓபிடி, இந்தியாவில் இறப்புக்கு வழிவகுக்கும் முன்னணி நோய்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது; இது 2016 (சமீபத்திய தரவு கிடைக்கக்கூடிய ஆண்டு) உடன் முடிந்த 26 ஆண்டுகளின் கணக்கீடு. 2016 இல் சாலை விபத்துக்கள் அல்லது தற்கொலைகளை விட அதிகமான பாதிக்கப்பட்டவர்கள், சிஓபிடி பாதிப்பால் தான்.இது 2016 இல் இணைந்த நீரிழிவு, மலேரியா, காசநோய் மற்றும் மார்பக புற்றுநோயை விட அதிகமான உயிர்களைக் கொன்றது. இது, இந்தியர்களை அதிகம் கொல்லும் இருத நோய்க்கான எண்ணிக்கையில் மட்டுமே பின்தங்கி உள்ளது.

இந்தியா ஸ்பெண்ட் மார்ச் 2019இல் வெளியிட்ட இத்தொடரின் முதல் பகுதியில் குறிப்பிட்டபடி, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் இறப்புகளுக்கு சிஓபிடி பொறுப்பாகிறது. இத்தொடரின் இரண்டாவது பகுதி இந்தியாவில் சிஓபிடி-க்கு நிலக்கரி, மரம் மற்றும் சாணத்தை எரிக்கும் பாரம்பரிய அடுப்புகள் எவ்வாறு பொறுப்பாகின்றன என்பதை விளக்கியது. இந்த மூன்றாம் பாகத்தில், ஒரு நாட்டின் நச்சுக் காற்று, ஆபத்தான பழக்கம் மற்றும் ஒரு மனிதன் மெதுவாக ஒரு நோயால் கொல்லப்படுவது, முன்பை விட அதிகமான இந்தியர்களை கொன்றிருப்பதை விளக்குகிறது.

இத்தொடரின் நான்காவது பகுதி, இந்தியா தனது சிஓபிடி நெருக்கடிக்கு எவ்வாறு தயாராக இல்லை என்பதை விளக்கும்.

காற்று மாசுபாடு, புகைத்தல் மற்றும் வயோதிகம்

உலகளவில் சிஓபிடி-க்கு புகையிலை புகைப்பதே முதன்மைக் காரணம், இது இந்தியாவில் நிகழும் அனைத்து நிகழ்வுகளிலும் நான்கில் ஒரு பங்காகும். ஆனால் காற்று மாசுபாடு - எரிதல் காரணமாக சுற்றுப்புற மற்றும் வீட்டில் ஏற்படும் மாசுபாடு உட்பட - இந்தியாவில் சிஓபிடி-க்கு முதன்மைக் காரணம் மற்றும் எல்லா நிகழ்வுகளிலும் பாதிக்கும் மேற்பட்ட (53%) காரணமாக உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்புற துகள் மாசுபாடு, 2017 உடன் முடிந்த 27 ஆண்டுகளில் 12.5% உயர்ந்துள்ளது; அதாவது, 1990 இல் 80 μg / m3 (ஒரு கன மீட்டருக்கு மைக்ரோகிராம்) என்று இருந்தது, 2017 இல் 90 μg / m3 ஆக அதிகரித்தது. அதே நேரம் சீனா அதன் சுற்றுப்புற துகள் மாசுபாட்டை 58 μg / m3 இல் இருந்து 53 μg / m3 ஆக குறைத்துள்ளது.

இவை “மக்கள்தொகை எடை கொண்ட வருடாந்திர வழிமுறைகள்”, நுரையீரலின் உட்புற இடைவெளிகளில் ஊடுருவும் தூசி அல்லது புகை போன்ற நுண்ணிய துகள்களை அளவிடுகின்றன. நாடு முழுவதும் சராசரியாக, இந்தத் தகவல்கள் அவற்றின் மக்கள்தொகைக்கு ஏற்ப பகுதிகளுக்கு எடையைக் கொடுக்கின்றன, இதனால் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அதிக எடை வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சராசரிகள் நச்சுக் காற்றின் உள்ளூர் செறிவுகளை மறைக்கின்றன, அவை சராசரியை விட பல மடங்கு அதிகமாக இருக்கலாம்.

அத்துடன், 2018 உலக சுகாதார அமைப்பின் உண்மை அறிக்கையின்படி, 26.6 கோடிக்கும் மேலான இந்தியர்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர்; மேலும் புகையிலையால் இறப்பதற்கான பொதுவான வழி இருதய நோய் (48%), அடுத்தது நாள்பட்ட சுவாச நோய் (23%), இதில் சிஓபிடி-யும் அடங்கும்.

இந்தியாவில் 15 முதல் 69 வயதுடைய ஆண்கள் மத்தியில் புகைக்கும் பழக்கம் 2010 வரையிலான 12 ஆண்டுகளில் 27% வீழ்ச்சியடைந்தாலும், சிகரெட் புகைத்தல் அந்த வயதினர் இடையே இரண்டு மடங்கு மற்றும் 15-29 வயதுக்குட்பட்டவர்களில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்று மருத்துவ இதழான பி.எம்.ஜே. குளோபல் ஹெல்த் அறிக்கை தெரிவிக்கிறது.

"புகைபிடிப்பதில் மிதமான குறைவு இருந்தபோதிலும், 15-69 வயதுடைய ஆண் புகைப்பிடிப்பவர்களின் முழுமையான எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது" என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஐயர் 17 வயதில் புகைபிடிக்கத் தொடங்கினார்; மேலும் அவருக்கு சிஓபிடி கண்டறியப்படும் ஒரு வருடம் முன்பு வரை, அதை அவர் கைவிடவில்லை.

இந்தியாவில் சிஓபிடியின் உயர்வுக்கு ஒரு கூட்டு காரணி அதன் வயதான மக்கள்தொகை ஆகும், ஏனெனில் வயதுக்கு ஏற்ப எளிதில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

கடந்த 2011 வரையிலான 21 ஆண்டுகளில், 60 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 93% உயர்ந்து 5.37 கோடியில் இருந்து 10.38 கோடியாக உள்ளது. 2001 மற்றும் 2011க்கு இடையில் முதியோர் மக்கள்தொகையில் தசாப்த வளர்ச்சி, பொதுமக்களில் 17.7% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 35.5% ஆக இருந்தது.

நாட்டின் வயது மற்றும் காற்று மாசுபாடு அதிகரிக்கும் போது, சிஓபிடி இந்தியாவில் அதிகமாக காணப்படக்கூடும் என்று, இந்தியா ஸ்பெண்டிடம் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

உலகளாவிய சிஓபிடிக்கு, இப்போது இந்தியாவின் அனைத்து இயலாமை சரிசெய்யப்பட்ட ஆயுட்காலங்களில் (தினசரி) மூன்றில் ஒரு பங்கு (32%) - ஒட்டுமொத்த நோய் சுமையின் குறிகாட்டியாகும். 2016 வரையிலான 26 ஆண்டுகளில், இந்தியாவின் மொத்த நோய் சுமையில் சிஓபிடியின் பங்கில் 54% என்ற உயர்வு ஏற்பட்டுள்ளது; ஏனெனில் சிஓபிடி மரணத்திற்கு எட்டாவது முக்கிய காரணியாக இருந்து, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியதாக 2017 இந்தியா: ஹெல்த் ஆஃப் தி நேஷன்ஸ் ஸ்டேட்ஸ் என்ற அறிக்கை மற்றும் இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (PHFI), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், அரசால் நடத்தப்படும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் கூறுகிறது. சிஓபிடி-யின் இந்த உயர்வுக்குள், மருத்துவர்களால் கூட இந்த நோய் ஏன் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை; மோசமாக நிர்வகிக்கப்படுகிறது. அதைவிட அதிகமான இந்திய உயிர்களைக் கோருகிறது என்பதை விளக்கும் மருத்துவ நுணுக்கங்கள் உள்ளன.

சிஓபிடி -ஆல் ஏன் பல இந்தியர்கள் இறக்கின்றனர்

கடந்த 2006இல், முதல்முறையாக மூச்சுத் திணறல், நிலையான இருமல் மற்றும் சோர்வை ஐயர் உணர்ந்தபோது, இருதயநோய் மருத்துவரிடம் சென்றார். அது சுவாசம் மற்றும் இருதய சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் சந்தேகிக்கப்பட்டது. மருத்துவர் இரண்டுக்கும் மருந்துகளை பரிந்துரைத்தனர்; அறிகுறிகள் மோசமடைந்து வந்தாலும், ஐயர் வேலை மற்றும் பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனியாக இருந்த தருணத்தில், ஐயரின் இரத்த சர்க்கரை அளவு குறைந்தது; தம்மை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தனது டிரைவரிடம் கேட்டார். அங்கு நடந்த பல சோதனைகளுக்கு பிறகு, அவருக்கு சிஓபிடி இருப்பது கண்டறியப்பட்டது.

நோய் அறிதலுக்கு இரண்டு ஆண்டுகள் ஆகக்கூடாது; ஏனென்றால் ஐயர் 17 வயதில் இருந்தே புகைப்பிடிப்பவர்; நாம் சொன்னது போல், 40 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 60 சிகரெட்டுகள் என்று புகைபிடித்து வந்தார்.

ஐயரின் விஷயத்தில், சிஓபிடி அறிகுறி மூச்சுத் திணறல் ஆகும். இருப்பினும் மற்ற அறிகுறிகளில் சோர்வு, இருமல் மற்றும் மார்பின் இறுக்கம் ஆகியவை அடங்கும். நுரையீரலில் காற்றுப்பைகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் குழாய்கள் வீக்கமடைந்துள்ளன - நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி - அல்லது இந்த பைகளை புகை சேதப்படுத்துகிறது, இது எம்பிஸிமா ஆகும்.

எந்த வகையிலும், நுரையீரல் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதில்லை அல்லது ஆக்சிஜனை உறிஞ்சுவதில்லை, காற்றுப்பாதைகளில் வீக்கம் ஏற்பட்டு அடைத்து, சுவாசத்தை கடினமாக்குகின்றன. வயதான நோயாளிகளுக்கு இது மிகவும் கடினம்.

"25 வயதில் நம் நுரையீரல் அவற்றின் உகந்த செயல்திறனில் [நான்கு] ஆறு லிட்டர் [ஒவ்வொரு சுவாசத்துடனும் காற்று] எடுத்துக்கொள்கிறது; அப்போது இருந்து, இது படிப்படியாக ஆண்டுக்கு 25-30 மில்லி குறைகிறது,” என்று, பெங்களூரு பகவான மகாவீர் சமண ஜெயின் மருத்துவமனை நுரையீரல் மற்றும் தூக்க மருத்துவ இயல் துறை இயக்குனர் எச் பி சந்திரசேகர் கூறினார். "புகைப்பிடிப்பவர்களுக்கு இது இரண்டு அல்லது மூன்று மடங்கு வேகமானது, எனவே ஒவ்வொரு ஆண்டும் 80-90 மில்லி குறைகிறது," என்று எச் பி சந்திரசேகர் கூறினார்.

எனவே, புகைப்பிடிப்பவர் 45 வயதை எட்டும் நேரத்தில், அவரது நுரையீரலின் திறன் 75 வயதுக்கு சமமானதாகும் என்று அவர் கூறினார். நாம் சொன்னது போல் ஐயருக்கு நோய் கண்டறியப்பட்டபோது அவரது நுரையீரல் 58 வயது போல் இருந்தது.

ஐயரின் தாயும் நண்பர்களும் புகைபிடிப்பதை விட்டுவிடும்படி, அவரிடம் கூறினார்கள். அவர் இதை இறுதியாக, 2007 இல் செய்தார். ஒரு வருடம் கழித்து, அவருக்கு சிஓபிடி இருப்பது கண்டறியப்பட்டது. அதற்குள், அவர் நோயின் இரண்டாம் கட்டத்தில் இருந்தார்; அதாவது அவரது சிஓபிடி மிதமானதாக இருந்தது; அறிகுறிகள் மோசமடைகின்றன.

சிஓபிடி நோயாளிகள் இதற்கு முன்பு மிகவும் இயல்பானவர்கள். ஆனால் வயோதிகம் காரணமாக நுரையீரல் செயல்பாடு குறைந்து வருவது உண்மைதான் என்று, ஐயருக்கு எட்டு ஆண்டுகளாக சிகிச்சையளித்த ஆலோசகர் மருத்துவரும், நுரையீரல் நிபுணரும், ஆபத்துகால பராமரிப்பு மருத்துவ நிபுணருமான ரஜனி பட் கூறினார்.

"பொதுவாக சிஓபிடி உடன் வரும் நோயாளிகள் மோசமான நுரையீரல் தொற்றுநோய் அதிகமாக இருக்கும் " என்று, ஐயருக்கு எட்டு ஆண்டுகளாக சிகிச்சையளித்த ஆலோசக மருத்துவரும், நுரையீரல் நிபுணரும், ஆபத்துகால பராமரிப்பு மருத்துவ நிபுணருமான ரஜனி பட் கூறினார். "முன்பு மிக இயல்பாக இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் உண்மை என்னவெனில் அவர்களின் நுரையீரல் செயல்பாடு, சில காலமாக குறைந்து வருகிறது; வயதானதால் மட்டுமே அவர்கள் அதை உணர்ந்தனர்" என்றார்.

பெரும்பாலான இந்திய மருத்துவர்களால் சிஓபிடி ஆரம்பத்தில் கண்டறியப்படவில்லை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன:

  • இது பெரும்பாலும் ஆஸ்துமா அறிகுறி போல் இருந்து, குழப்பம் உண்டாக்குகிறது. சில ஒத்த அறிகுறிகள்: மூச்சுத் திணறல், மூச்சு வாங்குதல், இருமல் மற்றும் நெஞ்சு இறுக்கம் போன்றவை.
  • ஸ்பைரோமெட்ரி எனப்படும் ஒரு சோதனை மூலம் நோய் கண்டறிதல் உறுதிப்படுத்தப்படுகிறது - இது, நுரையீரல் எவ்வளவு விரைவாக வெளியேறுகிறது என்பதை அளவிடுவது - பொதுவாக இந்தியாவில் கிடைப்பதில்லை.
  • பெரும்பாலான மருத்துவர்கள் புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமே ஆபத்து இருப்பதாக கருதுகின்றனர். இதனால் புகைபிடிக்காதவர்களுக்கான ஆபத்து குறைத்து மதிப்பிடப்படுகிறது. எரிதல் மற்றும் சுரங்க, ஜவுளி, வெல்டிங், ஃபவுண்டரி மற்றும் வேளாண்மை போன்ற தொழிலில் உள்ள ஆபத்துகள் காரணமாகவும் இந்த பாதிப்பு உண்டாகிறது.
  • சிஓபிடி நோயாளிகள் பெரும்பாலும் ஆஸ்துமா நோய் இருப்பதாக தவறாக கண்டறியப்படுகிறார்கள் மற்றும் ஆஸ்துமாவுக்கு இன்ஹேலர்கள் வழங்கப்படுகிறது. இதில், கார்டிகோஸ்டீராய்டு இன்ஹேலர்கள் வேலை செய்யாது.
  • சிஓபிடி பெரும்பாலும் இதய நோயாக முன்னேறுகிறது, இது சிகிச்சையளிக்கப்படலாம்; ஆனால் நுரையீரல் நோய்க்கான அடிப்படை கண்டறியப்படவில்லை.

"எங்கள் சொந்த ஆய்வில், மாரடைப்பு [ஹார்ட் அட்டாக்] உடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 25% பேருக்கு அடிப்படை நுரையீரல் நோய் இருந்தது; ஆனால், அது இருந்தது தெரியவில்லை," என்று, பெங்களூரு நாராயணா ஹெல்த் நுரையீரல் மற்றும் உள் மருத்துவ ஆலோசகர் பி வி முரளி மோகன் கூறினார்.

இந்தியாவில் முதலாவது ஆட் கொல்லியாக இருதய நோய் பற்றிய பொதுவான விழிப்புணர்வை இருப்பது போல் அல்லாமல், சிஓபி பற்றி பிரபலமான ஊடகங்களில் அரிதாகவே எழுதப்படுகிறது.

"இது (சிஓபிடி) வாசகர் அல்லது பார்வையாளர்களின் விருப்பத்திற்கான ஒன்றாக கருதப்படவில்லை," என்று பி.எச்.எப்.ஐ. தலைவர் ஸ்ரீநாத் ரெட்டி கூறினார். முதன்மை பராமரிப்பில் மோசமான நோயறிதல், பிற சுவாச நோய்களுடன் ஒத்துப்போவதால் குழப்பம் மற்றும் நோயாளிகளால் "குறைந்த சுய பரிந்துரைகள்" ஆகியன, சிஓபிடி ஒரு தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நோய் என்று ரெட்டி கூறினார்.

சிஓபிடியுடன் வாழ்க்கை

சிஓபிடி உடனான தனது வாழ்க்கையை, ஐயர் படிப்படியாக ஏற்றுக் கொண்டார்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்டத்தில் இருந்து, அவருக்குள் இருந்த நோய் நான்காம் கட்டத்திற்கு முன்னேறியுள்ளது; அதாவது இப்போது மருத்துவமனைக்கு அடிக்கடி வருவது மற்றும் நுரையீரல் செயல்பாடு குறைவாக இருக்கும் மிகக் கடுமையான கட்டத்தில் அவர் உள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில், பெரும்பாலும் நுரையீரல் தொற்று அல்லது இரத்தத்தில் குறைந்த ஆக்ஸிஜன் செறிவு காரணமாக அவர், 10 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு 2019 ஆம் ஆண்டில், ஐயர் ஜனவரி மாதத்தில் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"நீங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்றால், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று அவர்கள் கூறினார்கள்," என்று ஐயர் கூறினார். அவர் தனது நோயை வீட்டில் இருந்தவாறே நிர்வகிப்பதில் திறமையானவர். தனது பிபாப் (BiPAP) இயந்திரத்தை சரிசெய்தல், தனது துகள் தெளிப்பானை இயக்குவது, நல்ல மூடுபனியில் காற்றுப்பாதையை திறந்து மருந்துகளை வழங்குவது என்ற செயல்பாடுகள் மூலம் மருத்துவமனைக்கு செல்வதைத் தவிர்த்துவிட்டார்.

"பெரும்பாலான நோயாளிகள், குறிப்பாக பெண்கள், தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு இந்த நோயை சுமக்க விரும்பவில்லை; (எனவே) ஒரு மருத்துவரைப் பார்ப்பது தாமதமாகும் வரை காத்திருங்கள்" என்று ஐயரின் மருத்துவர் பட் கூறினார்.இது பைசா புத்திசாலித்தனமாகவும், பவுண்டு முட்டாள்தனமாகவும் உள்ளது; ஏனெனில் வழக்கமான பின்தொடர்வுகள் நோயாளிகளை அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதி செய்கிறது.

இந்தியாவில் பெரும்பாலான சிஓபிடி நோயாளிகள் தாமதமாகவும், நிலை 2 மற்றும் அதற்கு அப்பாலும் கண்டறியப்படுவதால், அவர்களுக்கு அடிக்கடி மருத்துவமனையில், குறிப்பாக குளிர்காலத்தில் அனுமதிக்க வேண்டும்.

சிஓபிடியை நிர்வகிக்க ஐயர் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதல் 15,000 வரை செலவிடுகிறார்; ஆனால் வழக்கமாக மருத்துவமனையில் தங்கி ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக் கொண்டால், ரூ.60,000 முதல் ரூ. 1,00,000 வரை செலவாகும்.

அவரை உயிருடன் வைத்திருக்கும் மருத்துவப் பொருள்களைத் தவிர, அவரது படுக்கைக்கு எதிரே ஒரு கரும்பலகை உள்ளது, அதில் மருமகள் அன்டாரா கார்த்திகேயன் ஒவ்வொரு நாளும் மற்றும் அவசர காலங்களில் எடுக்க வேண்டிய மருந்துகளின் பட்டியலை எழுதியுள்ளார்.

ராஜ் ஐயரின் சிஓபிடி முதலில் கார்டியோ-சுவாச பிரச்சனை என்று கருதப்பட்டது. அவர் சிஓபிடியால் கண்டறியப்பட்ட நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு - அதாவது, அவர் புகைபிடிப்பதை விட்ட ஒரு வருடம் கழித்து - இந்த நோய் இரண்டாம் கட்டத்தில் இருந்தது; அந்த நேரத்தில் மிதமான அறிகுறிகள் இருந்தன.

அவரது ஆராய்ச்சி பின்னணியைப் பொறுத்தவரை - அவர் சமூக மானுடவியலில் தத்துவ பட்டம் பெற்றவர் - ஐயரது நோயின் பொறிமுறையை விரிவாகப் படித்து சிகிச்சை மற்றும் மருந்துகள் குறித்த கேள்விகளுக்கு எளிதில் பதிலளித்தார்.

"சிஓபிடி-க்கு சிகிச்சையளிக்க, மருத்துவர்கள் ஸ்டெராய்டுகளை பரிந்துரைத்தனர், இது நீரிழிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் கொண்டு வருகிறது" என்று ஐயர் கூறினார். "சிஓபிடி உங்களை மூச்சுத்திணறச் செய்வதால், நீங்கள் குறைவான செயலில் இருக்கிறீர்கள். இது எலும்பு மற்றும் தசைகளை மேலும் பலவீனப்படுத்துகிறது" என்று அவர் கூறினார்.

இன்ஹேலர் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது; வாய்வழியான மருந்துகள் மட்டுமே என்று அவரது மருத்துவர் பட் கூறினார். "ஐயர் தனது அதிகரிப்புகளுக்கு வாய்வழி ஊக்க மருந்துகளை எடுக்க வேண்டும், மேலும் அவர் அவற்றை நீண்ட காலத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது" என்று அவர் மேலும் கூறினார். "இருப்பினும் அவர் அந்த மருந்துகளுக்கு இல்லாவிட்டால் அவர் உயிருடன் இருக்க மாட்டார்" என்றார் அவர்.

இருப்பினும், ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட சிஓபிடி-யை எளிதாக நிர்வகிக்க முடியும், மேலும் நோயாளிகள் சிறந்த வாழ்க்கைத் தரத்தை எதிர்பார்க்கலாம்.

நுரையீரல் மறுவாழ்வு

சிஓபிடிக்கான மருந்துகளை விட திறம்பட செயல்படுவது நுரையீரல் மறுவாழ்வு ஆகும். இதில் மருத்துவ மேற்பார்வை, ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் சுவாச நுட்பங்களின் கீழ் நாள்பட்ட நுரையீரல் நோயாளிகளுக்கு, 12 வார பயிற்சிகள் உள்ளன.

உடற்பயிற்சி செய்வதால் தசைகள் நன்கு வேலை செய்து, அதன் மூலம் நோயாளியின் சுவாச திறனை அது மேம்படுத்துகிறது; இது நோயாளிகளுக்கு “பலத்தை அளிக்கிறது”, அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது. எனவே அவர்கள் சுயாதீனமாக இருக்க முடியும் என்று பெங்களூருவில் முதன்முதலில் அமைக்கப்பட்ட பகவான் மகாவீர் ஜெயின் மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் எச் பி சந்திரசேகர் கூறுகிறார். 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை, இந்தியாவின் முதலாவது நுரையீரல் மறுவாழ்வு மையங்களில் ஒன்றாகும்.

பெங்களூரு பகவான் மகாவீர் ஜெயின் மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் எச் பி சந்திரசேகர் கூறுகையில், “உடற்பயிற்சியை அதிகரிப்பதால், மருத்துவமனையில் சேருவதற்கான வாய்ப்பை குறைகிறது; நோய் அறிகுறிகளை மேம்படுத்துகிறது, மேலும் இறப்பைக் குறைக்கலாம்” என்றார். அவர் நகரின் மற்றும் இந்தியாவின் முதலாவது நுரையீரல் மறுவாழ்வு மையத்தை, 2012 இல் அமைத்தார்.

“உடற்பயிற்சியை அதிகரிப்பதால், மருத்துவமனையில் சேருவதற்கான வாய்ப்பை குறைகிறது; நோய் அறிகுறிகளை மேம்படுத்துகிறது, மேலும் இறப்பைக் குறைக்கலாம்” என்று சந்திரசேகர் கூறினார். பெரும்பாலான நோயாளிகள் மறுவாழ்வு மையத்திற்கு செல்ல தயங்குகிறார்கள். அது தேவையற்றது என்று கருதுகின்றனர்.மேலும் பெரும்பாலான மருத்துவமனைகளில் அத்தகைய மையம் இல்லை; காரணம், இது மருத்துவமனைகளை போல் அதிக வருவாய் தருவதில்லை என்றார் அவர்.

பெங்களூரில் வசிப்பது ஐயரின் ஆரோக்கியத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். பெங்களூரின் தனித்துவமான வானிலை மற்றும் புவியியல் நிலைமைகள், அங்கு வசிப்போருக்கு குறிப்பாக சுவாச நோய் இருப்போருக்கு பாதிப்பை தரலாம் என்று நுரையீரல் நிபுணர்கள் விளக்கினர்.

புதுடெல்லி அல்லது பிற வடக்கு நகரங்களில்- உலகின் மிக மாசுபட்ட 20 நகரங்களில் 15ஆம் இடத்தில் உள்ளது - இங்கு காற்று மாசுபாடு அதிகமாக இல்லை என்றாலும் பெங்களூரு கடல் மட்டத்தில் இருந்து 3,020 அடி அல்லது 920 மீ உயரம், சமமான காலநிலை மாசுபாடு உயராமல் இருப்பதை உறுதி செய்கின்றன; அவை வெப்பமான காலநிலையில் இருப்பதை போல, ஆனால் நிலத்திற்கு அருகில் இருக்கும்.

"நகரத்தில் சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள், பசுமை பரப்பு, நகரத்தின் நுரையீரல் [ஆனால்]; ஆனால், மாசு பொருட்கள் சுவாச மண்டலத்தில் சிக்குகின்றன" என்று பட் கூறினார். நகரத்தின் அதிக மகரந்தச் செறிவு குடியிருப்பாளர்களுக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் சிஓபிடிக்கு ஆளாக்குகிறது.

கடந்த 2008இல், ஆண்டில் ஐயர் முதன்முதலில் நுரையீரல் மறுவாழ்வுக்கு பரிந்துரைக்கப்பட்டபோது, அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், 2015 ஆம் ஆண்டில் அவரது உடல்நிலை மோசமடைந்தபோது, அவர் மகாவீர் ஜெயின் மருத்துவமனைக்குச் சென்று மறுவாழ்வு சிகிச்சையை ஏற்றுக் கொண்டார்.

ஆக்ஸிஜன் உதவியுடன் சக்கர நாற்காலியில் அவர் மருத்துவமனைக்குச் சென்றார்; மெதுவாக அவர் சக்கர நாற்காலி மற்றும் நிலையான ஆக்ஸிஜன் ஆதரவில் இருந்து தன்னை விடுவிக்கலானார். 2015இல், தாம் நன்றாக இருந்ததை அவர் உணர்ந்தார்; மேலும் உடல் ரீதியாக அதிக திறன் கொண்டவர்.

காப்பீட்டு நிறுவனங்கள், நுரையீரல் மறுவாழ்வு சிகிச்சையை தங்களுக்குள் உள்ளடக்குவதில்லை என்று ஐயர் சுட்டிக்காட்டினார். "நீங்கள் காப்பீட்டைக் கோரினால், அவர்கள் சிஓபிடியை ஈடுகட்டவும், டன் கணக்கில் பணத்தை செலுத்தவும் தயாராக உள்ளனர்," என்று அவர் கூறினார். "ஆனால் (அவர்கள்) மறுவாழ்வுக்கு பணம் செலுத்த மாட்டார்கள்; அது மருத்துவமனையில் சேருவதை தடுக்கும் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தும்" என்று அவர் கூறினார்.

மறுவாழ்வு சிகிச்சைக்கு ஒரு வாரத்திற்கு ரூ.1,000 செலவாகிறது; அப்போது, மூன்று ஒருமணி நேர அமர்வுகள் உள்ளன. ஐயர் ஒரு வருடம் மறுவாழ்வு அமர்வுகளுக்கு பணம் கொடுத்தார் மற்றும் அதை தொடர்ந்தார். இது, முக்கியமான மைல்கற்களை அதாவது அவரது மகனின் திருமணம், சொத்து வாங்குவது மற்றும் பயணம் செய்வது ஆகியவற்றை அடைய போதுமானதாக இருந்தது.

இருப்பினும், தொடர்ந்து விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, 2017க்கு பிறகு அவரால் மறுவாழ்வு சிகிச்சையை தொடர முடியவில்லை. அவரது நிலை மோசமடைந்து, அவரது குடும்பத்தின் மீது அதிக சுமை வெளிப்படுத்தியது.

குடும்பங்கள் சிஓபிடியை எவ்வாறு சமாளிக்கின்றன

ஐயரின் குடும்ப வாழ்க்கை முறையை சிஓபிடி மாற்றியுள்ளது.

உதாரணமாக, அவரது மகனும் மருமகளும் ஒரே நேரத்தில் நகரத்தை விட்டு வெளியேற முடியாது.

மருமகள் அந்தாரா கார்த்திகேயன், ஒரு காலத்தில் நீண்ட வேலை நேரங்களைக் கொண்ட சில்லறை விற்பனை மேலாளராக இருந்தார்; ஆனால் தொடர்ந்து வீட்டில் தனியாக இருக்கும் ஐயர் பற்றி அவர் கவலைப்பட்டார்.

"எனது முதலாவது கவலையெல்லாம், அவர் நடமாடும் போது விழுந்தால் என்ன ஆகும் என்பது தான்" என்று அந்தரா கார்த்திகேயன் கூறினார். “அவரால் சுயமாக எழுந்திருக்க முடியாது எனும் போது, அவர் எங்களை எப்படி அழைப்பார்?” என்று அவர் கேட்டார்.

மழலையர் பள்ளி ஆசிரியராக வேண்டும் என்பது அவரது முடிவு; இதனால் அவர் பிற்பகலுக்குள் வீட்டிற்கு திரும்ப முடியும் என்பது தனிப்பட்ட விருப்பம் என்று அவர் கூறினார். அந்தாராவும் அவர் கணவர் கார்த்திகேயனும் பணியில் இருக்கும்போது, தங்களது நான்கு வயது மகள் தன்யாவை கவனித்துக் கொள்ள உதவியாளரை அமர்த்தியுள்ளனர்.

சிஓபிடி நுரையீரலை மட்டும் பாதிக்காது; வீக்கம் காரணமாக பரவலாக சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்த நோய் இரைப்பை அழற்சி, நீரிழிவு நோய், எடிமா, தூக்கக் கலக்கம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை ஐயருக்கு கொண்டு வந்துள்ளது; அவர் இசையை கேட்கிறார்; புத்தகங்களைப் படிக்கிறார். ஆவணப்படங்கள் மற்றும் தியானத்தை மேற்கொண்டு தனது உடலின் மெதுவான சீரழிவை சமாதானம் செய்கிறார்.

இது, நான்கு பகுதிகள் கொண்ட தொடர்களில் மூன்றாவது ஆகும். முதல் பகுதியை இங்கே, இரண்டாவது பகுதியை இங்கே படிக்கலாம்.

இக்கட்டுரை, தொற்றா நோய் குறித்த ரிச் லில்லி மீடியா பெலோஷிப் திட்டத்தின் ஆதரவோடு எழுதப்பட்டது.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story