பணிபுரியும் இந்தியர்களில் 66% பேர் குறைந்த வருவாய் பெறும் அவலம்! வளர்ச்சியின்மையால் சந்திக்கும் உலகின் மோசமான விகிதம்
மும்பை: இந்தியாவில், உழைக்கும் மக்கள் தொகையில் மூன்றில் இரு பகுதியினர், 13% குறைவாக சம்பாதிக்கின்றனர். குழந்தைத்தனமான, வயது முதிர்ச்சி குறைவால், உலகின் தனிநபர் வருவாய் விகிதங்களில் மிக மோசமானதாக இது உள்ளதாக, உலக வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளி விவரங்களில் தெரிய வருகிறது.
வளர்ச்சி குன்றிய குழந்தைகள், பின்னாளில் கீழ்கண்ட எதிர்மறையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்: மூளை வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர், இது அறிவாற்றல் மற்றும் சமூக உணர்ச்சித் திறன்களை குறைக்கும்; குறைந்த அளவிலான கல்விச் சாதனைக்கே வழி வகுக்கும். இத்தகைய திறன் பற்றாக்குறை என்பது, பணி காலத்தில் குறைந்த சம்பளம் கிடைக்க காரணமாகிறது; இந்தியர்களில், இத்தகையோர், 66% பேர் குறைந்த வருவாய் பெறுகின்றனர்; இது, உலகின் மிகமோசமான வருவாய் விகிதங்களில் ஒன்று என்று 2018 ஆகஸ்டில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்டுள்ள இந்தியாவில், தொழிலாளர்களின் சம்பள விகிதம், ஆப்ரிக்க நாடுகளை விட குறைவாக உள்ளது. முதிர்ச்சியின்மையின் தாக்கம், ஆசிய, ஆப்ரிக்க நாடுகளோடு நின்றுவிடுவதில்லை; பிற கண்டங்களை வெவ்வேறு வகையில் பாதிக்கிறது என்று, உலக வங்கி தெரிவித்துள்ளது.
தென் ஆசியாவின் சராசரி குறைப்பு 10%; வட அமெரிக்காவிற்கு 2% ஆகும். 4% குறைவாக உள்ள மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா ஆகியன, ஐரோப்பா, மத்திய ஆசியாவுடன் (5% குறைவு) இது, மேம்பட்டதாக உள்ளன.
ஆராயப்பட்ட 140 நாடுகளில், ஆப்கானிஸ்தான் (67%) மற்றும் பங்களாதேஷ் (73%) ஆகிய நாடுகள், குன்றிய தொழிலாளர் விகிதத்தில் இந்தியாவை (66%) முந்தி நிற்கின்றன.
Per Capita Impact on GDP of Childhood Stunting
இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி குன்றிய தொழிலாளர் வயதினரின் சதவீதம், வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் விகிதத்தை பிரதிபலிக்கவில்லை. குழந்தை பருவத்திற்கும், பணியிடத்தில் சேருதலுக்கும் இடைவெளி உள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு வரையிலான, 26 ஆண்டுகளில் 5 வயதுக்குட்பட்ட வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் விகிதம், 62.7% என்பதில் இருந்து 38.7% ஆக குறைந்துள்ளது. எனினும், 3-ல் இரண்டு இந்திய குழந்தைகள் இன்னும் வளர்ச்சி குன்றியவர்களாகவே உள்ளனர்.
இந்தியாவில் 5 வயதுக்கு குறைவான வளர்ச்சி குன்றிய குழந்தைகள்
வளர்ச்சியின்மை என்பது பெண்கள், குழந்தைகளின் சிகிச்சையில் எதிரொலிக்கிறது.
இந்தியாவைவிட ஏழ்மை நிலையில் உள்ள நாடுகள் கூட, வளர்ச்சியின்மை பிரச்சனையை நன்கு கையாள்கின்றன. உதாரணத்துக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவைவிட பாதியளவே கொண்டிருக்கும் செனகல் நாடு, 2012 வரையிலான 19 ஆண்டுகளில், குழந்தை வளர்ச்சியின்மை விகிதத்தை பாதியாக குறைத்துள்ளது.
சமூக, பொருளாதார தன்மைகள், வளர்ச்சியின்மையை பாதிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
"இந்தியாவுக்கும், துணை சஹாரா ஆப்பிரிக்காவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து நிறைய எழுதப்பட்டுள்ளது" என்று, சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சியாளர் பூர்ணிமா மேனன் கூறினார். "சப்-சஹாரா ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலும், பெண்களின் நிலை மற்றும் துப்புரவு ஆகியன சிறப்பாக உள்ளன.
இது, பொருளாதார வளர்ச்சியின் நிலைப்பாடு மட்டுமல்ல; எதிர்கால தாய்மார்களான பெண்கள், சமுதாயத்தால் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றியது" என்கிறார்.
மாறுபட்ட சமுதாய, பொருளாதார நிலைகள் இருந்த போதும், தேசிய அளவிலான ஊட்டச்சத்து திட்டத்தால், வளர்ச்சியின்மை குறைபாட்டை கையாள இயலும்.
ஏழ்மை நிறைந்த பகுதிகளை இலக்காக கொண்டு, சுகாதார மற்றும் ஊட்டச்சத்து இடைவெளிகளை போக்கும் வகையிலான திட்டங்களால், பெரு நாட்டில் வளர்ச்சியின்மை குறைபாடு சரிந்ததாக, மேனன் கூறுகிறார். இது மற்ற நாடுகளிலும் காணப்படுகிறது.
உலக வங்கி அறிக்கையும், 10 குறுக்கீடுகளை பயன்படுத்தி, தாய் மற்றும் பிறந்த குழந்தையின் ஆரோக்கியம் தொடர்பாக, தேசிய ஊட்டச்சத்து தொகுப்பு வருமானம், செலவினங்களை விட அதிகம் என்று கணக்கிட்டது.
தேசிய ஊட்டச்சத்து தொகுப்பின் தாக்கம் குறித்த மதிப்பீடு
குழந்தை பருவம் மற்றும் பணியில் சேருவதில் உள்ள பின்னடைவால், வளர்ச்சியின்மையை போக்குவதற்கான ஊட்டச்சத்து திட்டத்தின் பலன்கள், 15 ஆண்டுகளுக்கு பிறகே தொழிலாளர் மத்தியில் ஏற்பட தொடங்கியதாக உலக வங்கி தெரிவிக்கிறது.
ஆரம்ப கட்ட 15 ஆண்டுகளுக்கு பின், செலவு நிலையாக உள்ளது. அதேபோல், தொழிலாளர்கள் நன்மை அடைவதைப் போலவே, திட்டத்தின் நன்மைகளும் அதிகரித்துள்ளன.
இத்திட்டத்திற்கான சராசரி வருவாய் விகிதம், 17% என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்தியாவிற்கு, பொருளாதார பயன், 81 மடங்கு செலவுடன், 23% ஆகும்.
மண்டலம் வாரியாக திரும்பும் விகிதம்
இது போன்ற ஒரு திட்டம் பயனுள்ளதாக இருக்கும் போது, அது போதாது. இந்தியாவில் வளர்ச்சியின்மைக்கு முன்னோடியாக, சமூக சமத்துவமின்மை (அதாவது, பெண்களின் நிலை மற்றும் சுகாதாரம், வீட்டுச்செல்வம், சேவைகளுக்கான அணுகல் ஆகியன) உள்ளன என்று, மேனன் கூறினார்.
"எனவே, ஊட்டச்சத்து திட்டமானது யூகங்களில் இல்லாமல், இந்த அம்சங்களை முழுமையாக தழுவியதாக இருக்க வேண்டும். ஒரு சமூக இயக்கம், நடத்தை மாற்றத்தில் கவனம் செலுத்துமென்று நினைக்கக் கூடாது. சுகாதார சேவைகள் மற்றும் ஐ.சி.டி.எஸ். (ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை) சுகாதார தலையீடுகளி இதை அனைத்தையும் செய்யும்,” என்றார்.
(ஸ்ரேயா ராமன், இந்தியா ஸ்பெண்ட் புள்ளி விவர பகுப்பாய்வாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.