ஆரம்பகால தாய்ப்பாலை இழக்கும் 10-ல் 6 இந்திய குழந்தைகள்; உயிர்காக்கும் அரு மருந்து

X

புதுடெல்லி: பிறந்த முதல் மணி நேரத்திலேயே தாய்ப்பாலை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் சற்று முன்னேறியுள்ளது. இது, 2005ஆம் ஆண்டில், 23.1% ஆக இருந்தது, 2015ஆம் ஆண்டில், 41.5% ஆக அதிகரித்துள்ளது. எனினும், பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள், ஆரம்பகால தாய்ப்பாலை இழப்பது, அவர்களின் உயிருக்கே அச்சுறுத்தலாக அமையும் என்று, உலகளாவிய புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆரம்ப கட்டத்தில் சுரக்கும் தாய்ப்பாலானது, பிறந்த குழந்தைக்கு மிகவும் இன்றியமையாதது. அந்த தாய்ப்பாலில் இருக்கும் அதிகபட்ச ஊட்டச்சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்திகளும், குழந்தையை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.

இந்தியாவில், பிறந்த முதல் மணி நேரத்தில், 10-ல் 4 குழந்தைகள் தாய்ப்பாலை பெறுகின்றனர். இந்த விகிதம், 10-க்கு 9 என புரூண்டி, இலங்கை மற்றும் வனுவாட்டு நாடுகளில் உள்ளதாக, 2018 உலக தாய்ப்பால் வாரத்தை (ஆகஸ்ட் 1- 7) முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்ட கேப்சர் ஆப் தி மூவ்மெண்ட் என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தாய்ப்பால் கணக்கீட்டின்படி, ஆரம்ப நிலை தாய்ப்பால் வழங்குவதில், 76 நாடுகளில் இந்தியா 56வது இடத்தில் தான் உள்ளது. இந்த அமைப்பு தாய்ப்பால் வழங்கும் திட்டங்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கிறது.

Source: 2018 Global Breastfeeding Scorecard

உலக அளவில், ஐந்தில் 3 குழந்தைகளுக்கு (78 மில்லியன்), பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கிடைப்பதில்லை. ஒருசில மணி நேரத்தில் தாய்ப்பால் கிடைப்பதில் ஏற்படும் தாமதம், குழந்தைக்கு மிக ஆபத்தானது என்று, அறிக்கை தெரிவிக்கிறது.

தாயின் சருமத்தை தொட்டு குழந்தை உறிஞ்சி குடிக்கும் போது, தாய்ப்பால் உற்பத்தியை அது தூண்டுகிறது. தாய்ப்பாலில் உள்ள கால்ஸ்ட்ராம் உள்ளிட்ட அதன் பாதுகாப்பு தன்மையால், குழந்தையின் முதல் தடுப்பூசி என்றும் கூறப்படுவதுண்டு.

“தாய்ப்பால் என்பது குழந்தையின் வாழ்க்கைக்கு சிறந்த தொடக்கத்தை தருகிறது,” என்று, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் ஆத்னான் கோபிரியேசஸ், செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். “தாய்ப்பால் புகட்டும் விஷயத்தில், தாய்மார்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டியது அவசர அவசியம். முதலில் குடும்ப உறுப்பினர்களில் இருந்து தொடங்கி, சுகாதார பணியாளர்கள், தொழில்நிறுவனங்கள், அரசுகள் ஆகியவற்றின் ஆதரவால், குழந்தைகளுக்கு தகுதியான தொடக்கத்தை தர இயலும்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தியாவில், பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம், (1000 பிறப்புகளில், 28 நாட்களில் ஏற்படும் இறப்பு), ஏறத்தாழ 50% குறைந்துள்ளது. அதாவது, 1990ஆம் ஆண்டில் 52 குழந்தைகள் என்று இருந்தது, 2013ஆம் ஆண்டில், 28 ஆக குறைந்துள்ளது. எனினும், 17 என்ற (2016ஆம் ஆண்டு) உலக சராசரியுடன் ஒப்பிடும் போது, இது அதிகம். இதை, 2017, செப்டம்பரில், இந்தியா ஸ்பெண்ட் சுட்டிக் காட்டியிருந்தது.

ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்

பிறந்த 2 மணி நேரத்தில் இருந்து, 23 நேரத்திற்குள்ளாக தாய்ப்பால் கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு, பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளை விட, 33% அதிக ஆபத்து உள்ளதாக, ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பிறந்த ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாளுக்கு பின் தாய்ப்பால் புகட்டப்படும் குழந்தைக்கு, இருமடங்கு அதிகம் ஆபத்து என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. குழந்தைக்கு பிரத்யேகமாக தரப்பட்டதா இல்லையா என்பதை அறியும் ஆரம்பகால பாதுகாப்பு நடவடிக்கையானது என்பது, சுயமானதாக இருக்க வேண்டும்.

சிசேரியனில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரம்பகால தாய்ப்பால் வாய்ப்பு குறைவு

உலகின் 51 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளை விட, சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஆரம்ப கால தாய்ப்பால் கிடைக்கும் வாய்ப்பு, இரு மடங்கு அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கு, மயக்கம் தெளிதல், அறுவை சிகிச்சையில் இருந்து மீள்வது, குழந்தையை பாதுகாப்பாக வைத்திருந்தல் போன்றவற்றால், ஆரம்பகால தாய்ப்பால் புகட்டுவதில் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள், தாயிடமிருந்து கிடைக்கும். அறுவை சிகிச்சையில் பிறக்கும் குழந்தையை, தாயின் சருமத்தை தொட்டு பால் புகட்ட செய்வதன் மூலம், அதன் உற்பத்தியை அதிகரிக்க செய்வது அவசியமானது.

இது, இந்தியா தொடர்புடையது. இங்கு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிப்பது, 2005-2006ல் 8.5% ஆக இருந்தது; 2015-2016ல் இருமடங்கு அதிகரித்து, 17.2% ஆக இருந்தது.

ஆரம்பகால தாய்ப்பால் புகட்டுவதில் வழிகாட்டும் கோவா

கடந்த 2015-2016 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு விவரங்களில் இருந்து, இந்தியா ஸ்பெண்ட், மாநிலங்களின் போக்கை கண்டறிந்துள்ளது.

அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில், பிறந்த குழந்தைக்கு முதல் ஒருமணி நேரத்தில் தாய்ப்பால் புகட்டியதில், 75.4% உடன், கோவா முதலிடத்தில் உள்ளது. மிசோரம் (73.4%), சிக்கிம் (69.7%), ஒடிசா (68.9%) ஆகியன, அதற்கடுத்த இடங்களில் உள்ளன. உத்தரபிரதேசம் (25.4%), ராஜஸ்தான் (28.4%), உத்தரகண்ட் (28.8%) ஆகியன, இதில் பின்தங்கியுள்ளன.

Source: National Family Health Survey, 2015-16

தாய்ப்பால் தாமதமாக புகட்டுவது என்பது, ’இனிப்பு வழங்குதல்’ எனப்படும் குழந்தைக்கு தேன் அல்லது சர்க்கரை நீரை தருவதில் தொடர்புடையது. இது, தாய்ப்பாலுக்கு பதிலாக தரப்படுகிறது.

இத்தகைய பிரசவத்துக்கு பிந்தைய குழந்தைக்கான உணவு, அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 41.5%, உத்தரகண்ட்டில் 39.1%, பஞ்சாப்பில் 32.1% குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் இது, 21.1% ஆக உள்ளது.

திறமையான சுகாதார பணியாளர் விவகாரங்கள்

டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் பிரசவங்களின் போது, பிறந்த ஒருமணி நேரத்தில் தாய்ப்பால் 42.9% குழந்தைகள் புகட்டப்படுகின்றன. இது, பாரம்பரிய கிராமப்புற மருத்துவப் பெண் பார்க்கும் பிரசவங்களில் 34.6%, பயிற்சி பெற்ற பெண் உதவியாளர் பார்க்கும் பிரசவங்களில் 30.9% ஆக உள்ளது.

அதேபோல் சுகாதார மருத்துவ வசதி உள்ள இடங்களில் பிறக்கும் குழந்தைகளில், 43% பேருக்கு முதல் ஒருமணி நேரத்தில் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. இதுவே வீட்டு பிரசவம் எனில் 34.6%, மற்றவை 30.9% ஆக உள்ளது.

ஏழை, செல்வந்தர்களின் குறைவாக உள்ள ஆரம்பகால தாய்ப்பால் புகட்டும் விகிதம்

மிக அதிக மற்றும் மிக குறைந்த வருவாய் உள்ள பிரிவினர் இடையிலும், ஆரம்பகால தாய்ப்பால் புகட்டுவது என்பது, சம அளவில் உள்ளது. அதிக வருவாய் பிரிவினர், 39.9%, குறைந்த வருவாய் பிரிவினர் 38.9% என்று உள்ள நிலையில், மற்ற வருவாய் பிரிவில், 42% மேல் ஆகும்.

அதேபோல், ஆரம்பகால தாய்ப்பால் புகட்டுவதில், கல்வியறிவு குறைந்த பெண்களின் விகிதம், 36.4% எனவும், 10ஆம் வகுப்பு மேல் படித்த பெண்கள் மத்தியில் 45.7% என்றும் இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

(யாதவர் இந்தியாஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story