2019ன் சுகாதார திட்டம்: முன்னேற்றம் உண்டு; ஆனாலும் இந்தியாவின் சுகாதார அமைப்புகள் வலுப்பட வேண்டும்

2019ன் சுகாதார திட்டம்: முன்னேற்றம் உண்டு; ஆனாலும் இந்தியாவின் சுகாதார அமைப்புகள் வலுப்பட வேண்டும்
X

புதுடெல்லி: குழந்தை மற்றும் பிரசவ இறப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், சுகாதாரத்துக்கு போதிய நிதி இல்லை; மோசமான ஊட்டச்சத்து முதல் கடுமையான மூளை அழற்சி நோய் வரை மற்றும் மலேரியா தடுப்பு வெற்றியில் தொடங்கி, தொழுநோய் கட்டுப்பாடு மற்றும் காசநோய் ஒழிப்பு ஆகியவற்றில் குறைவான செயல்திறன் வரை, 2019 இன் மிகப்பெரிய சுகாதார கட்டுரைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

பிரசவ இறப்பு, குழந்தை இறப்பு குறைதல்

இந்தியாவின் தாய்வழி இறப்பு விகிதம் (எம்எம்ஆர்) எனப்படும் பிரசவத்தின்போது இறக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை- 100,000 பிரசவங்களுக்கு தாய் இறப்பு - மாதிரி பதிவு முறை அறிக்கையின்படி, 2011-13ஆம் ஆணிட்ல் 167 இல் இருந்து 2015-17ஆம் ஆண்டில் 122 ஆக, அதாவது 27% சரிந்தது.

இருப்பினும், எம்.எம்.ஆர்.-க்கான நிலையான அபிவிருத்தி இலக்கை அடைய இந்தியா இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது: வரும் 2030-க்குள் 100,000 பிரசவங்களுக்கு 70 இறப்பு என்பது இலக்கு. இதை மூன்று இந்திய மாநிலங்கள் - மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கேரளா- ஏற்கனவே அடைந்துள்ளன.

இந்தியாவில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு விகிதம் - 1,000 பிரசவங்களுக்கு - 2012 ஆம் ஆண்டில் 42 ஆக இருந்த இறப்புகள், 2017 இல் 33 ஆக குறைந்ததாக, இந்தியா ஸ்பெண்ட் 2019 ஜூன் கட்டுரை தெரிவித்தது. இந்த விகிதமானது உலக சராசரி (29) மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் (28), பங்களாதேஷ் (27), பூட்டான் (26), இலங்கை (8) மற்றும் சீனா (8) ஆகியவற்றை விட அதிகமாக உள்ளது; பாகிஸ்தான் (61) மற்றும் மியான்மர் (30) ஐ விட குறைவு.

இந்த குறைப்புக்கள் மிகச் சிறந்தவை என்றாலும், இந்த சிக்கல்களின் சமூக காரணங்களை சரிசெய்யாமல் இத்தகைய குறிகாட்டிகளில் தற்காலிக கவனம் செலுத்துவது அர்த்தமற்றது என்று, திருவனந்தபுரத்தில் உள்ள சுகாதார அறிவியல் ஆய்வுகளுக்கான அச்சுதமேனன் மையத்தின் பேராசிரியர் ராகல் கெய்டோண்டே கூறினார். "வறுமை, பசி, வாழ்வாதாரம் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படை பிரச்சினைகளை புறக்கணித்து தொழில்நுட்ப ரீதியிலான திருத்தங்கள், செயல்பாடுகளை நாம் மிக உறுதியாக பற்றி இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களான பீகார், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ஒடிசா மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகியன, 2019 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த சுகாதார செயல்திறன் சரிவைக் கண்ட ஒன்பது மாநிலங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று அரசின் நிதி ஆயோக்கின் சுகாதார குறியீடு தெரிவித்துள்ளது என, 2019 ஜூனில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை கூறியது.

சுகாதார பட்ஜெட் அதிகரிப்பும், ஆயுஷ்மான் பாரத் திட்ட ஓராண்டு நிறைவும்

மத்திய அரசு, சுகாதார அமைச்சகத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரித்து வருகிறது; இந்த ஆண்டின் மொத்த பட்ஜெட்டில் 62,659 கோடி ரூபாய் - 2.25% - என்ற ஒதுக்கீடு இதுவரை அதிகபட்சமாக உள்ளது என, ஜூலை 2019 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை, மாநிலங்களின் சுகாதார நிதியுடன் இணைந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.4% ஆக இருந்தது - இது 2017 ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரக்கொள்கையால் நிர்ணயிக்கப்பட்ட ஜிடிபி இலக்கின் 2.5% க்கு குறைவாகவும், 2010 ஜிடிபியின் 2% என்ற இலக்கைவிட அதிகமாகவும் இருந்தது என, ஏப்ரல் 2017 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (ஏபி-பிஎம்ஜே) என்ற தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம், தனது முதல் ஆண்டு செயல்பாட்டை நிறைவு செய்துள்ளது. டிசம்பர் 20, 2019 க்குள், இது 69 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவமனைகளை சென்றடைந்துள்ளது; மற்றும் 6.94 கோடிக்கும் அதிகமான பயனாளர்களுக்கான மின் அட்டைகளை வெளியிட்டுள்ளது என்று அதன் வலைத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 கோடி இந்திய குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக்காப்பீடு செய்வதே இத்திட்டத்தின் இலக்கு.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்துவதற்கான அமைப்பு சுறுசுறுப்பானது மற்றும் மேம்பட்டு வரும் நிலையில், இந்த திட்டம் எதிர்கொள்ளும் ஒரு சவால், சுகாதார சேவை வழங்குவோருக்கு பணம் செலுத்துவதில் தாமதம் என்பதாகும் என்று, சிந்தனைக்குழுவான அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் சுகாதார முன்முயற்சி பிரிவு தலைவரான உம்மன் குரியன் கூறினார். "மத்திய - மாநில அரசுகள் நிதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்திர்கு ஒன்றையொன்று குற்றம் சாட்டுகின்றன," என்றார் அவர்.

மதிப்பீட்டு ஆய்வுகள் மற்றும் ஆரம்பத்தில் சிக்கல்கள் இருப்பதை அங்கீகரிப்பதற்கான வாய்ப்பு - சமத்துவமின்மை முதல், மோசடி வரை - தரவுகளுடன் வழக்கமான ஈடுபாடு, அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்று சிந்திக்கும் முயற்சி என்பது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமாகும் என்று, ஆராய்ச்சி கொள்கை ஆராய்ச்சி மையமான அக்கவுண்டபிளிட்டி இனிஷியேட்டின் அமைப்பின் இயக்குனர் அவனி கபூர் கூறினார். "கையடக்க பெயர்வுத்திறன், அணுகலை எளிதாக்குவதற்கான ஒரு சிறந்த நடவடிக்கை," என்று அவர் கூறினார்.

பயனாளி தரவுத்தளம் "மிகவும் பழையாதாக" உள்ளது; அரசு "அதை சரி செய்ய வேண்டும். இன்னும் விட்டுச்செல்லப்பட்ட மக்களை சரியாக அடையாளம் காண வேண்டும். அவர்களை எவ்வாறு திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவது" என்று கண்டறிய வேண்டுமென்று, ஆயுஷ்மான் பாரத் திடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்து பூஷண், 2019 டிசம்பரில் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே, இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (கிராமப்புறங்களில் 51.9% மற்றும் நகர்ப்புறத்தில் 61.4%) தனியார் மருத்துவமனைகளை நாடுவதாக, சுகாதார நுகர்வு குறித்த சமீபத்திய தேசிய புள்ளிவிவர அலுவலக அறிக்கையை சுட்டிக்காட்டி, 2019 டிசம்பரில் நாங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் (ரூ.31,845) ஆகும் சராசரி செலவு, அரசு மருத்துவமனையில் ஆகும் செலவை விட (ரூ .4,452) ஏழு மடங்கு அதிகம் என்கிறது அந்த அறிக்கை.

இருப்பினும், ஏழைகளில் 10% க்கும் குறைவானவர்களே, ஏதாவது ஒரு சுகாதார காப்பீட்டை கொண்டிருக்கின்றனர். இது சுகாதார செலவினங்களுக்காக சொந்த பணத்தை செலவிடும் கட்டாயத்தை ஏற்படுத்துகிறது என்பதை எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது.

சுகாதார மையங்களின் விரிவாக்கத்திற்கும் (ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மற்றொரு அம்சம், விரிவான முதன்மை பராமரிப்பை வழங்குவதற்காக தற்போதுள்ள துணை சுகாதார மையங்களை மேம்படுத்துவது) கவனம் செலுத்த வேண்டும் என்று, அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் அமைப்பின் கபூர் மற்றும் ஓ.ஆர்.எப்.- இன் குரியன் இருவரும் தெரிவித்தனர். "சுகாதார மையங்களை வலுப்படுத்து, வளங்கள் முதலீடு ஆகியவற்றில் கவனம் செய்ய வேண்டும்" என்று கபூர் கூறினார்.

லிச்சிஸ், ஊட்டச்சத்து குறைபாடு, அல்லது வெப்பம் மற்றும் ஈரப்பதம்?

கடந்த 2014 முதல், பீகாரில் கடும் மூளைக்காய்ச்சல் நோய்க்குறி (ஏஇஎஸ்) மிக மோசமாக வெளிப்பட்டு இருந்தது; இதற்கு, பீகாரில் (ஜூலை 2, 2019 வரை) 162 குழந்தைகள் இறந்தனர். அதிக காய்ச்சல், வாந்தி மற்றும் வலிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் இந்த நோய், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் போன்ற பல முகமைகள் மூளைக்காய்ச்சலை பரப்புபவை. ஜப்பானிய மூளை அழற்சி, ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல், டெங்கு, அம்மை மற்றும் ஜிகா வைரஸ் கூட மிகவும் பொதுவான காரணங்கள்.

இந்த நோய் பரவியதற்கு காரணம் லிச்சி பழ நுகர்வுடன் தொடர்புடையது என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி சவுபே, 2019 ஜூலை 2இல் மாநிலங்களவையில் தெரிவித்தார். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், லிச்சிகளை சாப்பிடும்போது (உள்ளூர் பழத்தோட்டங்களில் எளிதாகக் கிடைக்கும்), இது இரத்தச் சர்க்கரையை குறைக்கிறது மற்றும் வலிப்புத்தாக்கங்கள், தீவிர மூளைக்காய்ச்சல் நோய்க்கு வழிவகுக்கிறது என்று, சவுபே கூறினார். இது வைராலஜிஸ்ட் டி ஜேக்கப் ஜான் நடத்திய 2014 ஆய்வின் அடிப்படையிலும், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் 2017 ஆய்வின் அடிப்படையிலும் அமைந்தது.

லிட்சி பழங்கள் மட்டுமே இதர்கு காரணம் என்று அனைத்து நிபுணர்களும் ஒப்புக் கொள்ளவில்லை. ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலங்களில் அதிக பகல் வெப்பநிலை (38-40 டிகிரி செல்சியஸ்) மற்றும் அதிக ஈரப்பதம் (50-60%) ஆகியவை குழந்தைகளுக்கு வெப்ப-பக்கவாதத்தை ஏற்படுத்துவதாக, சில மருத்துவர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், இரண்டு கோட்பாடுகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வறுமை ஆகியன முக்கிய பங்கு வகிக்கின்றன: ஒரு குழந்தை பசியுடன் தூங்கும்போது, அதன் இரத்த சர்க்கரை அளவு குறைந்து உடலில் கல்லீரலில் போதுமான இருப்பு இல்லை; இது இரத்தச் சர்க்கரை குறைவுக்கு வழிவகுக்கிறது. சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் கள அளவிலான ஊழியர்களின் பற்றாக்குறை, மற்றும் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வருவதில் தாமதம் ஆகியன இறப்பு எண்ணிக்கையை அதிகரித்தன.

குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு

ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளில் மூன்றில் ஒருவர் (35%), வளர்ச்சி குறைபாடு (வயதுக்கேற்ற உயரம் இல்லாதது) மற்றும் எடை குறைந்தவர்கள்; ஆறில் ஒருவர் (17%) எடை குறைபாடு (உயரத்திற்கேற்ற எடை இல்லாதது), மற்றும் ஐந்து பேரில் இருவருக்கு (41%) இரத்த சோகை இருப்பது, விரிவான தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பு (சி.என்.என்.எஸ்) மூலம் தெரியவதது. இது 5-14 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை பற்றிய அறிக்கையை வழங்கி உள்ளது.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு, 2015-16 இன் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது, குழந்தைகளில் எடைகுறைபாடு, மெலிந்த வளர்ச்சி மற்றும் வளர்ச்சி இன்மை குறைந்துள்ளது: 2.5 2015 முதல் 2018 வரை வளர்ச்சி குறைபாட்டில் 3.8% புள்ளி சரிவு; மெலிந்து காணபடும்வதில் 4% புள்ளி சரிவு மற்றும் எடை குறைபாடு குழந்தைகளில் 2.5 % புள்ளி குறைவு என்று , சி.என்.என்.எஸ். தரவுகள் தெரிவிக்கிறது.

உலகளாவிய பட்டிணிக் குறியீடு - 2019இன் படி 117 நாடுகளில் இந்தியா 104வது இடத்தில் உள்ளது. இந்த கணக்கீடு இது குழந்தை வளர்ச்சியின்மை, எடை குறைவு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குழந்தை இறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதில் பாகிஸ்தான் (94), பங்களாதேஷ் (88) மற்றும் இலங்கை (66) ஆகியவற்றை விட இந்தியா மோசமாக உள்ளது.

ஆயினும் மற்றொரு சவால் உள்ளது - ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தொற்றா நோய்கள்: 5% குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் (5-19 வயது) அதிக எடை கொண்டவர்கள்; 10 குழந்தைகளில் ஒருவர் (5-9 வயது) நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள்; மற்றும் அதே வயதினரில் 1% நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்று, அக்டோபர் 2019 சி.என்.என்.எஸ். அறிக்கையை சுட்டிக்காட்டி இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடையே ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக தேசிய ஊட்டச்சத்து திட்டமான போஷான் அபியான் 2018 மார்ச் மாதம் இந்தியா தொடங்கப்பட்டது. இது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளுக்கு இடையில் சுகாதார மற்றும் பொது விநியோக முறையுடன் ஒன்றிணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நடத்தை மாற்றத்தில் போஷான் அபியன் திட்டத்தின் கவனம் செலுத்துகிறது. திருமண வயது, குழந்தை பெற்றெடுத்தல் மற்றும் சுகாதாரம் போன்ற சமூக நிர்ணயிப்பவர்களை அங்கீகரிப்பதிலும், ஊட்டசத்து துணை உணவு போன்ற முக்கிய இயக்கிகளை மேம்படுத்துவதிலும் வரவேற்கத்தக்கது என்று, சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் பூர்ணிமா மேனன் கூறினார்.

எவ்வாறாயினும், ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அதிக சுமைகளைக் கொண்ட மாநிலங்கள், விரைவாக நகர வேண்டிய சுகாதார அமைப்புகள் குறைந்த நிதி பயன்பாடு மற்றும் மனிதவள இடைவெளி போன்ற நிர்வாக சவால்களுடன் தொடர்ந்து இயங்குகின்றன. இது உண்மையில் தலையீடு அளவிடுவதற்கான திறனைக் குறைக்கும் என்று அவர் கூறினார். மேலும், அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களின் முக்கிய இயக்கி வறுமை, இந்த பணியில் அதிக கவனம் தேவை என்று அவர் கூறினார்.

காற்று மாசுபாடு கொல்கிறதா இல்லையா?

மக்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில் காற்று மாசுபாட்டின் தாக்கத்தைக் காட்டும் இந்திய ஆய்வு எதுவும் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்தேகர் மக்களவையில் டிசம்பர் 6, 2019 அன்று அரசின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி கூறினார். அவரது அறிக்கை பொது சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்களிடம் இருந்து கூர்மையான எதிர்வினைகளை ஈர்த்தது.

இந்தியாவில் எட்டு இறப்புகளில் ஒன்று காற்று மாசுபாட்டால் ஏற்பட்டது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆராய்ச்சியாளர்கள் டிசம்பர் 2018இல் இணைந்து எழுதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில், காற்று மாசுபாடு காரணமாக 12.4 லட்சம் பேர் இறந்துவிட்டனர், மேலும் இந்தியர்கள் சுத்தமான காற்றை சுவாசித்தால் அவர்களின் ஆயுள் 1.7 ஆண்டுகள் கூடும் என்று, இந்தியா ஸ்பெண்ட் டிசம்பர் 2018 கட்டுரை தெரிவித்தது.

"உலகின் ஒவ்வொரு மக்களிடம் இருந்தும் சுகாதாரத்தில் காற்று மாசுபாட்டின் தாக்கத்தை காட்டும் பல்லாயிரக்கணக்கான ஆய்வுகளை நாங்கள் ஒன்றிணைத்து ஆய்வு செய்துள்ளோம்" என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) காலநிலை தொடர்பான டயர்மிட் காம்ப்பெல்-லென்ட்ரம் டிசம்பர் 9, 2019 அன்று டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு தெரிவித்தார். "இந்தியா உட்பட எந்தவொரு நாட்டின் மக்கள்தொகையும் காட்டும் ஒரு ஆய்வை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இது காற்று மாசுபாட்டின் சுகாதார பாதிப்புகளில் இருந்து விடுபட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

ஆண்டு முழுவதும், டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு, தேசிய அளவிலான தரத்தை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. வருடாந்திர செறிவை நாம் கணிசமாகக் குறைக்காவிட்டால், சுகாதாரச் சுமை குறையாது என்று டெல்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் வளிமண்டல அறிவியல் மையத்தின் இணை பேராசிரியர் சாக்னிக் டே, 2019 நவம்பரில் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். காற்று மாசுபாட்டை எதிர்த்து போராட, மாசு அதிகரிக்கும் போது அரசுகளுக்கு அவசர நடவடிக்கைகள் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் காற்று மாசு குறைப்பு துறைகளிலும் உந்துகிறது, என்றார்.

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை பெறும் இந்தியா

தேசிய மருத்துவ ஆணைய மசோதா, 2019 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையம் என்று அழைக்கப்படும் ஒரே குடையில் கீழ் ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இது இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் அதன் ஒழுங்குமுறை மற்றும் ஊழல் பிரச்சினைகளை உள்ளடக்கும்.

மருத்துவ நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மனிதவளத் தேவைகளை மதிப்பிடுவதை தவிர, தனியார் மருத்துவ நிறுவனங்களில் 50% இடங்களுக்கான கட்டணங்களை சட்டம் தீர்மானிக்கிறது. சமூக மருத்துவ வழங்குவோர் ஒரு மருத்துவ பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் நடுத்தர மற்றும் முதன்மை பராமரிப்பு அளிக்க உதவுகிறார்கள். சமூக மருத்துவ வழங்குநர்கள் ஒரு மருத்துவ பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் நடுத்தர மற்றும் முதன்மை பராமரிப்பு அளிக்க உதவுகிறார்கள்.

இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இந்தியாவின் தற்போதைய சுகாதாரப் பணியாளர்களின் - மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவச்சிகள் உட்பட- அடர்த்தி 10,000 பேருக்கு 2016 இல் 20.6 ஆக இருந்தது. இது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையான 22.8 உடன் ஒப்பிடும்போது குறைவு. இந்த தேவையை பூர்த்தி செய்ய, இந்தியாவுக்கு 250,000 சுகாதார ஊழியர்கள் தேவைப்படுவார்கள் என்று இந்தியா ஸ்பெண்ட் 2019 ஜூலை கட்டுரை தெரிவித்துள்ளது.

மலேரியாவில் பெற்ற வெற்றி தொடர்கிறது

உலகளவில் மலேரியா பாதிப்புக்குள்ளான 11 நாடுகளில் இந்தியாவும் ஒன்று; உலகின் மொத்த எண்ணிக்கையில் இங்கு மட்டும் 70% இருந்தது. 2017 ஆம் ஆண்டை விட இந்தியா 26 லட்சம் குறைவான மலேரியா நோயாளிகளை 2018இல் பதிவு செய்தது. இது உலக மலேரியா அறிக்கையின்படி, 2017 ஐ விட 51% குறைவாகவும், 2016 ஐ விட 60% குறைவாகவும் இருந்தது.

இந்தியாவின் உத்திகளில், உட்புற பூச்சிக்கொல்லி தெளித்தல், கொசு வளர்ப்பு இடங்களைக் குறைத்தல் மற்றும் நீண்ட காலமாக நீடிக்கும் பூச்சிக்கொல்லி வலைகள் இலவசமாக விநியோகம் ஆகியன அடங்கும். மலேரியா நோய்த்தொற்றைக் குறைப்பதில் அறிகுறியற்ற அல்லது காய்ச்சலற்ற மலேரியாவுக்கு முக்கிய பங்கு வகித்தது என, நவம்பர் 2018 இல் நாங்கள் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது உலகளாவிய மலேரியா நோயாளிகளில், இந்தியாவில் 3% பேரே உள்ளனர்; இந்தியா 2030 க்குள் இந்நோயை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதேநேரம், 2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொழுநோய் அகற்றப்பட்டதாக அறிவித்த போதும், சுகாதார அமைச்சக மத்திய தொழுநோய் பிரிவு, 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் 135,485 புதிய தொழுநோயாளிகளை கண்டறிந்ததாக கூறியது. அவற்றில் பாதி (67,160) மேம்பட்ட கட்டத்தில் கண்டறியப்பட்டது என, இந்தியா ஸ்பெண்ட் 2019 ஜனவரி கட்டுரை தெரிவித்தது. அதாவது, சராசரியாக, ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் யாரோ ஒருவருக்கு தொழுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

காசநோயை (டிபி ) கையாள்வதுஇதேபோல் சவாலாகவே இருந்தது (2017 ஆம் ஆண்டை விட 2018 இல் குறைவான நோயாளிகள் கண்டறியப்பட்டாலும், 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை அகற்றுவதற்கான இந்தியாவின் இலக்கை அடைவதற்கு வீழ்ச்சி விகிதம் (ஆண்டுக்கு 1.8%) போதுமானதாக இல்லை); இது 2018 இல் ஆறில் ஒருவரைக் கொன்றதாக, உலக சுகாதார அமைப்பின் 2019 உலகளாவிய காசநோய் அறிக்கை தெரிவிக்கிறது.

வரும் 2030 என்ற உலகளாவிய இலக்கை அடைவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், காசநோய் ஒழிப்பு இலக்கை அடைய இந்தியா ஒவ்வொரு ஆண்டும் காசநோய் பாதிப்பை 10% குறைக்க வேண்டும் என்று இந்தியா ஸ்பெண்ட் 2019 அக்டோபர் கட்டுரை தெரிவித்துள்ளது.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் / சுகாதாரம் சரிபார்ப்பு இணையதளத்தின் சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story