17.7 லட்சம் இந்தியர்கள் வீடற்றவர்கள். அவர்களில் 40% பேர் ஊரடங்கு நிவாரணம் பெறவில்லை

17.7 லட்சம் இந்தியர்கள் வீடற்றவர்கள். அவர்களில் 40% பேர் ஊரடங்கு நிவாரணம் பெறவில்லை
X

புதுடில்லி: சுமார் 17.7 லட்சம் இந்தியர்கள் வீடற்றவர்களாக உள்ளனர். ஆனால் 2020 மார்ச் 9 முதல், மே 3ம் தேதி வரை வழங்கப்பட்ட ஏழைகளுக்கான ஊரடங்கு நிவாரணம் தொடர்பான மாநில அரசுகளின் அறிக்கைகளை பகுப்பாய்வு செய்ததில், நாட்டின் 40% வீடற்றவர்களை கொண்டுள்ள 16 மாநிலங்கள், இதுபற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதை காட்டுகிறது. டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கேரளா மட்டுமே, வழக்கமான சுகாதார சோதனைகள் மற்றும் வீடற்றவர்களின் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளன.

உணவு, சுகாதாரம், குடிநீர், தங்குமிடம் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான நிவாரண நடவடிக்கைகளை அணுக, அவர்களுக்கு பணமோ மற்றும் உரிய ஆவணங்களோ எதுவும் இல்லை; கோவிட்-19 நெருக்கடியின் உடனடி தாக்கத்திற்கு பிறகும் வீடற்றவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக மாறியுள்ளதை பகுப்பாய்வு காட்டுகிறது.

கோவிட் -19 நிவாரணம் தொடர்பாக பல்வேறு மாநில அரசுகளின் நூற்றுக்கணக்கான அறிக்கைகள் இதுவரை வெளியாகியுள்ளன. நாங்கள் பகுப்பாய்வு செய்த 28 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசமும் (டெல்லி), கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஆணைகளை பிறப்பித்து வந்திருக்கின்றன. ஆனால், இலாப நோக்கற்ற நிலையான வாழ்வாதாரத்திற்காக பணி புரிந்து வரும் இந்தோ குளோபல் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி (ஐ.ஜி.எஸ்.எஸ்.எஸ்) மேற்கொண்ட இந்த பகுப்பாய்வு, வீடற்றவர்கள் தொடர்பானவர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தியது.

இதில், 16 மாநிலங்கள் வீடற்றவர்களை பற்றி தங்களது பல்வேறு சுற்றறிக்கைகளில் குறிப்பிடாததை கண்டோம். அவை அசாம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பஞ்சாப் (46,714), ஹரியானா (51,871), மேற்கு வங்கம் (134,040), உத்தரப்பிரதேசம் (329,125) மற்றும் குஜராத் (144,306) ஆகியன, இந்தியாவின் வீடற்ற மக்களில் 40% பேரை கொண்டுள்ளன.

குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்துள்ளன: மத்திய அரசின் அளவுகோல்கள் மற்றும் முன்னுரிமை வீடு திட்டத்தின்படி (PHH) குடும்பங்கள் அடையாளம் காணப்படும் அந்தோதயா அன்ன யோஜனா -ஏஏஒய் (AAY) திட்டத்தில் மாநில வழிகாட்டுதல்களின்படி வழங்கப்படுகிறது. இவற்றில், வீடற்றவர்கள் அன்ன யோஜனா திட்டத்தில் மட்டுமே பயனடையக்கூடும், அதில் ‘ஆதரவற்றோர்’ பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், டெல்லி, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் வெளியிட்ட சுற்றறிக்கைகளில் வீடற்றவர்களுக்கு உணவு பற்றி சில தகவல்கள் இடம் பெற்றுள்ளன. சமைத்த உணவை வழங்குவது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் நிறைய தங்குமிடங்களில் சமையலறைகள் இல்லை. தற்போது, சில தங்குமிடங்களில் உலர் ரேஷன் பொருட்களும், மற்றவற்றில் சமைத்த உணவும் வழங்கப்படுகிறது.

"வரவிருக்கும் ஆறு மாதங்களில், வீடற்றவர்களின் வாழ்வாதார நிலைமை மிகவும் மோசமாக, கடினமாக இருக்கும்" என்று வீடற்றவர்கள் நலனில் அக்கறை காட்டி வரும் மகாராஷ்டிரா பெகர் அபியான் திட்டத்தை சேர்ந்த பிரிஜேஷ் ஆர்யா கூறினார். “வீடற்றவர்களில் பெரும்பாலோர் வீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் தினசரி கூலித்தொழிலாளர்கள். ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் அவர்களுக்கு வாழ்வாதாரம் இருக்காது. அப்போது பருவமழை தொடங்கிவிடும்” என்றார்.

வீடற்றவர்களுக்கு தண்ணீரால் நெருக்கடி கடுமையாக இருக்கும், அவர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறைவாக இருப்பதால், அவர்கள் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆர்யா கூறினார்.மே 3, 2020 வரை, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசுகள் மட்டுமே வீடற்றவர்களுக்கு வழக்கமான சுகாதார சோதனைகள் பற்றி பேசியுள்ளன. இதேபோல், வீடற்றவர்களை பாதுகாப்பு விதிகளின் கீழ் கொண்டு வருவதை கேரளா மட்டுமே குறிப்பிட்டுள்ளது.

அடிப்படை துப்புரவு வசதிகளான சானிடிசர்கள், கை கழுவுதல் மற்றும் முகக்கவசம் வழங்குவது பற்றி பேசும் மாநிலங்கள் ஆந்திரா, டெல்லி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா. கேரளாவை போலவே, முகாம்களில் போதுமான தண்ணீர் வழங்குவதன் அவசியத்தை மகாராஷ்டிரா குறிப்பிட்டது, ஆனால் ஒரு பொதுவான நடவடிக்கையாக மட்டுமே அது இருந்தது.ஆந்திரா, டெல்லி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் மட்டுமே வீடற்றவர்களுக்காக கோவிட் -19 இல் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துவதைக் குறிப்பிட்டுள்ளன.

ஓய்வூதிய நிதி, நிவாரண நிதி மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் சுற்றறிக்கைகளை, 14 மாநிலங்கள் வெளியிட்டுள்ளன. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கும் சுமார் 1,000 ஓய்வூதிய நிதி / நிவாரண நிதி அல்லது ஊரடங்கின் போது வேலை நிறுத்தப்படாதது போன்ற பிற சமூக பாதுகாப்புகள் கிடைக்கும் என்று கூறின. ஆனால் இவற்றைப் பெறுவதற்கான நடைமுறைகளுக்கு ஆவணங்கள் இல்லாததால், வீடற்றவர்களுக்கு அவை பயனளிக்காது.

சுகாதார வசதிகள் இல்லை

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 புள்ளி விவரங்கள் இந்தியாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை, நாங்கள் முன்பு கூறியது போல் 17.7 லட்சம் என்று உள்ளது. ஆனால் சிவில் சமூக அமைப்புகளின் கூற்றுப்படி உண்மையான எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

நகர்ப்புற வீடற்றோரின் உரிமைகளுக்கான ஆலோசக அமைப்பான ஐ.ஜி.எஸ்.எஸ்.எஸ்., வீடற்றோரின் பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக பீகார், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு முழுவதும் மே 2019ல் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. வீடற்றவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்களின் வாழ்க்கை தொடர்பான பல்வேறு காரணிகளின் நிலையை - சேவைகள், உரிமைகள், அரசு கொள்கைகள், தங்குமிடம் அணுகல், வன்முறை மற்றும் பெண்களுக்கு குறிப்பிட்ட சவால்களை வெளிப்படுத்த முயன்றது.

வீடற்றவர்களில் கிட்டத்தட்ட 80% பேர் பட்டியலின சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்; இதில் 60%, அவர்கள் கண்டறியப்பட்ட அதே பகுதியில் பிறந்தவர்கள், இது வறுமையின் ஒரு இடைநிலை சுழற்சியை குறிக்கிறது; இந்த ஆய்வு 15 நகரங்களில் 4,382 பேரை உள்ளடக்கி இருந்தது. கணக்கெடுப்பில் வீடற்றவர்களை மட்டுமே கண்டறிய ஏதுவாக, இந்த செயல்பாடு பெரும்பாலும் மாலை மற்றும் இரவில் மேற்கொள்ளப்பட்டது.

வீடற்றவர்களில் சுமார் 41.6% பேருக்கு எந்தவித சுகாதார சேவை பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை, இத்தனைக்கும் வீடற்றவர்களில் 45% பேர் மருத்துவமனை / சுகாதார மையத்திற்கு 1 கி.மீ தூரத்திற்குள் வாழ்ந்து வந்துள்ளதாக, 2019 ஐ.ஜி.எஸ்.எஸ்.எஸ் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல்வேறு நோய்கள், மனநல பிரச்சினைகள் மற்றும் ஆபத்தான கர்ப்ப காலங்களை உடைய வீடற்ற பெண்களுக்கு, இத்தகைய பிரச்சினை கடுமையானது. கோவிட்-19 நோய் தாக்கத்தால் மருத்துவமனைகள் ஏற்கனவே அதிக சுமையை கொண்டுள்ளதால், இவர்களுக்கான அணுகல் என்பது இன்னும் மோசமாக இருக்கும்.

உணவுக்கான அணுகல்

அடுத்து, உணவுக்கான அணுகல் அல்லது பொது விநியோக முறை (பி.டி.எஸ்) மூலம் உணவுப் பொருட்கள் வழங்கல் என்ற கேள்வி உள்ளது. வீடற்றவர்களில் 18% பேர் மட்டுமே பி.டி.எஸ் வாயிலாக உணவுப் பொருட்களை பெற முடியும். இது, அவர்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைப்பதில் ஒரு தடையாக உள்ளது.

"ஊரடங்கு தொடங்கியதில் இருந்து நான் கிச்சடி மட்டுமே சாப்பிட்டு வருகிறேன், ஏனென்றால் எனக்கான உணவு தொகுப்பில் நான் பெறுவது இதுதான்" என்று, மும்பையின் மஹிமில் பணிபுரியும் மவுண்ட் அபுவைச் சேர்ந்த கூடை தயாரிப்பாளரான ராமு பாய், ஏப்ரல் 20, 2020 அன்று ஐ.ஜி.எஸ்.எஸ்.எஸ் அமைப்புக்கு போனில் தெரிவித்தார். "ஆனால் நான் பிழைத்தாக வேண்டுமே. எனவே, நான் அதை சாப்பிடுகிறேன் செய்கிறேன்" என்றார்.

மே 3, 2020 வரை பகுப்பாய்வு செய்யப்பட்ட சுற்றறிக்கைகளில், எந்தவொரு மாநிலமும் வாழ்வாதார மறுசீரமைப்பு அல்லது வீடற்றவர்களுக்கு எந்தவொரு நிதி உதவியையும் வழங்கவில்லை; வீடற்றோரின் வாழ்வாதாரம் முறைசாரா துறையின் மீட்புடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது, இது இந்திய பொருளாதாரத்தின் பெரும் பகுதியை உருவாக்குகிறது.

What can be done

Why are the homeless ignored by all sections of the government? The reason is their invisibility, say experts. “COVID-19 has exacerbated the vulnerabilities of the urban homeless communities and there has been no specific intervention for the urban homeless because of their invisibility,” said Vanessa Peter, a housing rights activist from Chennai who works with the Information and Resource Centre for the Deprived Urban Communities. “Inadequate information about the homeless population and its multi-dimensional socio-economic vulnerabilities is also a contributing factor.”

What kind of strategies can help the homeless deal with the crisis being created by the pandemic and the lockdown? IGSSS spoke to activists and scholars from organisations* that deal with employment, human settlement and marginalised communities to come up with specific recommendations for the short, medium and long term.

Immediate measures

 • Universal provision of nutritional cooked food for six months: Many shelters do not have cooking facilities or have limited capacity during the lockdown. Additional feeding centres should be set up near shelters and food delivery should go beyond known clusters and shelters.
 • Universal provision of PDS, with dry ration for six months: Some states have notified the provision of food to daily-wage earners. In some cases, the homeless have to travel far to access the food and are not allowed by the police. Those who choose to cook should be given dry rations.
 • Revise the circulars for clarity on sanitation facilities: States talk of sanitation facilities for shelters but offer no clarity on who will be responsible for cleaning, washing etc. At the very least, masks, soaps and sanitisers should be provided to everyone.
 • Provision of quarantine, regular medical checks at shelters and hotspots: Some homeless with COVID-19 symptoms have been quarantined on the streets. They should be shifted to government quarantine centres and equipped with facilities, as per the Indian Council of Medical Research guidelines. Currently, the states only mention providing medical kits.
 • Provision of temporary shelters: It is critical that numerous homeless shelters of temporary nature be set up to accommodate the homeless living in crowded shelters.
 • Provision of water, basic services: There are reports of the homeless living in the open having to pay toilet access charges. At many communities and clusters, water is not provided. Access to public toilets should be made free and water provided.

Medium-term measures – Over the next two months

 • Provision of adequate shelters: Shelters should be provided for the homeless as per National Urban Livelihood Mission (NULM) guidelines. The distance between the beds should allow social distancing. States should also pass orders to identify new shelters.
 • Provision of immediate psycho-social counselling support: The homeless have always been victims of violence and harassment. The pandemic would impact them even more acutely. States should offer them psycho-social counselling support.
 • Specific focus on homeless families and women: Homeless women and children are highly vulnerable groups. Children should be provided nutritious food and women connected with police helplines and the women and children welfare department.
 • Address livelihood restoration, financial assistance: Non-payment of wages and the collapse of the informal economy severely affected homeless wage earners. They should be included in safety nets, provided financial aid, especially those with special needs such as women with dependent children, the elderly etc. Shelters can be turned into self-help groups and training initiated.

Long-term measures – Over next six months

 • Allocation of more resources, development of an action plan under NULM: Increased allocation of resources will help set up more shelters and further the livelihood/training that the NULM Shelter for Urban Homeless (SUH) should pursue. Also use this as an opportunity to re-think NULM SUH guidelines to include disasters.
 • Review state, national disaster management plans: Include homelessness in disaster management practices, laws and guidelines and ensure standard operating procedures on handling the crisis of the homelessness during disasters.
 • Formulate policy for homelessness: The Ministry of Urban and Housing Affairs should work on a draft policy like Rajasthan. This can be further linked to housing and other urban development schemes.

*Policy recommendations collated after consultations with Ajay Jaiswal, Association for Social and Human Awareness (ASHA), Ranchi; Brijesh Arya, Maharashtra Beghar Abhiyan, Mumbai; Gautam Bhan, Indian Institute for Human Settlements, Delhi; Ranjeet Kumar, Amartrishla Seva Ashram, Muzaffarpur; Sitaram Shelar, Centre for Promoting Democracy, Mumbai; Indu Prakash Singh, member, Advisory Panel for COViD-19 food relief measures, Delhi Govt, and State Level Shelter Monitoring Committee; Vanessa Peter, Information and Resource Centre for the Deprived Urban Community, Chennai; Aajeevika Bureau; Working People's Charter; Indo-Global Social Service Society; and National Coalition for Inclusive and Sustainable Urbanisation)

(தாஸ், ஜாதி மற்றும் வீட்டுவசதி தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து வரும் ஆராய்ச்சியாளர். அவர், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணி மற்றும் நகரமயமாக்கலுக்கான தேசிய கூட்டணி அமைப்புடன் தொடர்புடையவர்.அவர் தற்போது இந்தோ-குளோபல் சமூக சேவை சங்கத்துடன் பணிபுரிகிறார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story