‘இந்தியாவில் சார்ஸ் கோவ்-2 போல் அசாதாரணமானது எதுவுமில்லை, இது அதிக அல்லது குறைவாக வைரலாகிறது’

‘இந்தியாவில் சார்ஸ் கோவ்-2 போல் அசாதாரணமானது எதுவுமில்லை, இது அதிக அல்லது குறைவாக வைரலாகிறது’
X

புதுடில்லி: கோவிட் 19 உலகெங்கிலும் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து, ஐந்து மாதங்களில் கிட்டத்தட்ட 280,000 பேரைக் கொன்ற நிலையில், இந்நோய்க்கான தடுப்பூசியோ அல்லது மருந்தோ இதுவரை கண்டறியப்படவில்லை. உலகெங்கிலும், இந்தியாவிலும் விஞ்ஞானிகள் இவற்றை உருவாக்க முயன்று வருகிறார்கள், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் பிற மருத்துவ சாதனங்களுக்கான தொழில்நுட்பங்களை தயாரித்து வருகின்றனர்.

.இந்தியாவின் முதன்மையான அறிவியல் நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்), அதன் பல உப நிறுவனங்களை ஐந்து முக்கிய துறைகளில் கவனம் செலுத்துமாறு பணித்துள்ளது: அவை கண்காணித்தல், நோயறிதல், மருந்துகள், மருத்துவமனை உதவி சாதனங்கள் மற்றும் விநியோகச்சங்கிலி. சி.எஸ்.ஐ.ஆரின் கீழ் 39 ஆய்வகங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் (சி.சி.எம்.பி) ஆகும்.

இந்த மையத்தின் இயக்குனர் ராகேஷ் கே மிஸ்ராவுடன், அவரது நிறுவனத்தின் கோவிட் -19 பணிகள் குறித்து, இந்தியா ஸ்பெண்ட் கலந்துரையாடியது. நிறுவனங்கள் தங்கள் ஆர்டி-பி.சி.ஆர் அல்லது ஆன்டிபாடி சோதனைகளை சரிபார்த்து இந்தியாவில் விற்க சி.சி.எம்.பி ஒரு சரிபார்ப்பு ஆய்வகமாக நியமிக்கப்பட்டுள்ளது.

நேர்காணலில், சி.சி. எம்.பி.யின் அடுத்த தலைமுறை வரிசைமுறை, பரிசோதனை, ஆன்டிபாடி சோதனை, தனியார் நிறுவனங்கள் சி.சி.எம்.பி மேற்கொண்டுள்ள ஆராய்ச்சியை எடுக்க வேண்டிய அவசியம் மற்றும் இந்தியாவில் சார்ஸ் கோவி-2 பற்றி முற்றிலும் வேறுபட்டதாக உள்ளதா என்று பேசினார்.

நேர்காணலில் இருந்து திருத்தப்பட்ட பகுதிகள்:

இப்போது சார்ஸ் - கோவ்- 2 உள்ள நிலையில், சி.சி.எம்.பி தனியார் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் அனைத்து வகையான ஆராய்ச்சி தகவல்களையும் விளக்க முடியுமா?

எடுத்துக்காட்டாக, ஆய்வகங்களில் வைரஸை பெரிய அளவில் உருவாக்கி - தடுப்பூசிகளை தயாரிக்க அல்லது செரோலாஜிக்கல் சோதனை செய்ய பல நிறுவனங்களுக்கு அதை நாங்கள் வழங்குகிறோம். இதேபோல் நம் ஆய்வகங்களில் உள்ள புரதங்களுக்கும் வழங்கப்படுகிறது. நிறுவனங்கள் முன் வந்து அதை எடுத்துக் கொள்ளலாம். மிகக் குறைந்த கட்டணத்தில் அதற்கு உரிமம் பெறலாம். ஒரு அரசு ஆய்வகமாக, இதிலிருந்து நாங்கள் பணம் ஈட்ட வேண்டியதில்லை, எந்த தொழில்நுட்பங்களும் பொதுமக்களை சென்றடைய வேண்டும்; அப்படியானால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

வைரஸ் மற்றும் புரதங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் நாங்கள் சேகரிக்கும் மரபணு தகவல்களை நாங்கள் பகிரங்கப்படுத்துவதில்லை. இது இந்தியாவில் உள்ள எங்கள் ஆய்வகங்களுக்கு மட்டுமே குறிப்பிட்டதல்ல, எல்லா இடங்களிலும் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். போதுமான ஆய்வுகள், விளைவுகள் முடிந்ததும், அதை பொதுவில் வைப்போம், எல்லோரும் அந்த தகவலைப் பயன்படுத்தலாம். இது ஒரு நல்ல மற்றும் திறந்த வேலை வழி. ஏற்கனவே பொது தளத்தில் 12,000 க்கும் மேற்பட்ட விளைவுகளது முடிவுகள் உள்ளன.

வைரஸ் மற்றும் புரோட்டீன்கள் தொடர்பான பணிகள், பேச்சுக்களில் நாங்கள் ஏற்கனவே ஈடுபட்டுள்ளோம், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை தயாரிப்பதற்கு அதை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய வகையில், பல நிறுவனங்களுடன் இறுதி ஒப்பந்தங்களை செய்துள்ளோம். இவை அனைத்தும் பலனளிக்காது, ஆனால் சி.சி.எம்.பி-யில் மட்டும், நாங்கள் தற்போது 675 நிறுவனங்களுடன் தொடர்பு கொள்கிறோம்.

சில காரணங்களுக்காக நிறுவனங்களிடமிருந்து உற்சாகமான பதில் உள்ளது. முதலாவதாக, சுகாதார அமைப்பில் நீண்டகால நிலைப்பாட்டை விரும்பும் எவருக்கும் இது ஒரு சவால். இரண்டாவதாக, இது ஊரடங்கு காலம். எனவே நீங்கள் கோவிட் -19 இல் பணிபுரிகிறீர்கள் என்றால், குறைந்தபட்சம் ஆய்வகத்தை இயக்க, செயல்படுத்த நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள். மூன்றாவதாக, கோவிட்-19 என்பது நாம் சமாளிக்க வேண்டிய நீண்டகால பிரச்சினையாக இருக்கப்போகிறது, எனவே மக்கள் ஈடுபடத் தொடங்குவது நல்லது.

கோவிட்-19 நோய் கண்டறிதல்களை உருவாக்குவதில் சிசிஎம்பி ஈடுபட்டுள்ளதா?

அடுத்த தலைமுறை வரிசை’ என்று அழைக்கப்படும் உண்மையிலேயே வியத்தகு ஒன்றை உருவாக்க பயோகான் மற்றும் சின்கீனுடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். இந்த திட்டத்தின் மூலம், 10,000 அல்லது 20,000 மாதிரிகளை ஒரே நேரத்தில் சோதிக்க முடியும். அந்த தொழில்நுட்பம் அடிப்படையில் பல இடங்களில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து அவற்றை ஒரு சிறப்பு பார்-குறியிடப்பட்ட பாணியில் செய்வதும், அவற்றைத் திரட்டுவதும், அவற்றை ஒரு இடத்திற்கு (சி.சி.எம்.பி அல்லது போதுமான வசதிகள் உள்ள இடங்களில்) கொண்டு வருவதும், பின்னர் நோயறிதலுக்கான வரிசைமுறைகளைச் செய்வதும் அடங்கும். தெளிவுபடுத்த, இது மரபணு வரிசைமுறையாக இருக்கப்போவதில்லை, இது நோயறிதலுக்கான வரிசைமுறையாக இருக்கும். இந்த தொழில்நுட்பத்திற்கு தளவாடங்கள் அளவில் சில கோரிக்கைகள் உள்ளன. அதை பயன்படுத்த அரசுகள் அனுமட்திக்க வேண்டும், ஏனெனில் இது ஆய்வகங்களில் சோதனைச் சாவடியில் மட்டுமல்லாமல் மாதிரி சேகரிப்பு புள்ளியில் இருந்து எல்லா வழிகளிலும் இயங்குகிறது. அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் சோதிக்கப்பட வேண்டும். எனவே பல மக்கள் கவலைப்படும்போது, இந்தியாவில் இதில் நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டும் உள்ளது.

இதற்கான யோசனை அமெரிக்காவின் பிராட் இன்ஸ்டிடியூட், ஒரு சிறந்த மரபியல் நிறுவனத்தில் இருந்து வந்தது. நாங்கள் இதைச் செய்யத் தொடங்கினோம், பொருளாதார ரீதியாக சாத்தியமான வகையில் யோசனையை விவாதித்து, சுத்திகரித்து, மிதப்படுத்தினோம். விஷயங்களை மலிவாகவும் வேகமாகவும் மாற்றும் ஒரு அமைப்பில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இது பற்றி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் இன்னும் உருவாக்கி வருகிறோம் என்றாலும், இப்போது அல்லது எதிர்காலத்தில் கோவிட் -19 அல்லது பிற விஷயங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். கோவிட் -19 என்ற ரீதியில் இதில் சிறப்பு எதுவும் இல்லை, ஒருவர் செய்ய வேண்டிய சோதனை வகை பல நோய்களுக்கு சமம். ஆனால் இங்குள்ள வித்தியாசம் என்னவென்றால், நாம் இவ்வளவு பெரிய எண்ணிக்கையை, மிக வேகமாக சோதிக்க வேண்டும். எனவே நாம் வெற்றி பெற்றால், இத்தொழில்நுட்பத்தால் எதிர்கால தொற்றுநோய்களுக்கு இந்த சிக்கலை தீர்க்க முடியும்.

அரசின் செய்தியாளர் சந்திப்புகளில் ஒரு கேள்வி அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது, இது ஏகப்பட்ட விஷயமாக உள்ளது: இந்திய விஞ்ஞானிகள் சார்ஸ்-கோவ்-2 வைரஸின் பிறழ்வுகளில் ஏதாவது சிறப்பு இயல்பை காண்கிறார்களா? நீங்கள் படிக்கும் விகாரங்களில் ஏதேனும் அப்பட்டமாக இருக்கிறதா? வைரஸ் அடிப்படையில் வேறு ஏதாவது இருக்கிறதா?

‘கொரோனா’ வைரஸ்களின் குடும்பத்தின் மிக அடிப்படையான அம்சம் அவை மிக வேகமாக உருமாறும். இது சாதாரணமானது, எதிர்பார்க்கப்படுவது. சார்ஸ்- கோவ்-2 வைரஸ் மாறி வருகிறது. முழு உலகமும் அதன் வரிசையாக பரவ காரணம் இதுதான். இல்லையெனில் நீங்கள் ஏன் ஒரே வைரஸை 12,000 முறை வரிசைப்படுத்த வேண்டும்? மாறுபாடுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தால், வைரஸை நாம் கண்காணிக்க முடியும். இது அம்புகளால் இணைக்கப்பட்ட நிறைய புள்ளிகள் போன்றது. அம்புகளின் திசை புள்ளிகள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்புடையவை என்பதைக் காட்டுகிறது. இதனால்தான் மிகப் பெரிய எண்ணிக்கையை வரிசைப்படுத்துவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

இந்திய திரிபு மற்றும் தனிமைப்படுத்தல்களில், நாங்கள் அவற்றை பகுப்பாய்வு செய்துள்ளோம். உங்கள் கேள்விக்கு மிகவும் நேரடியான வழியில் பதிலளிக்க, இதுவரை இந்திய தனிமைப்படுத்தல்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வைரஸாக இருப்பதைக் குறிப்பிடுவதில் அசாதாரணமானது என்று எதுவுமில்லை. கவலைப்படவோ அல்லது மகிழ்ச்சி அடையவோ எதுவும் இல்லை. இது உண்மையில் மற்ற விகாரங்களைப் போன்றது. இது அதன் சொந்த அடையாளத்தை கொண்டுள்ளது, இது வைரஸின் பரவலைக் கண்காணிக்க உதவுகிறது. ஆனால் இந்திய விகாரத்தைப் பற்றி மிகவும் வித்தியாசமாக ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து, 500 அல்லது 1,000 மரபணு வரிசைமுறைகள் முடிந்தவுடன் தான், இது குறித்து மிக உறுதியான அறிக்கையை எங்களால் வழங்க முடியும், இது மே மாத வாக்கில் நிகழலாம்.

வைரஸில் நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதை தீர்மானிப்பதில் இந்தியர்களின் மரபணு வேறுபாடு உள்ளதா என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்கிறோம். எனவே கடுமையான அல்லது லேசான அறிகுறிகள் அல்லது அறிகுறியற்ற நோயாளிகளின் மாதிரிகளை எடுத்து அவற்றின் மரபணுக்களைப் பார்க்கிறோம். உதாரணமாக, லேசான சந்தர்ப்பங்களில், இந்த மக்கள் லேசான அறிகுறிகளை மட்டுமே அனுபவித்ததற்கான காரணம் என்ன? இதை சில மாதங்களில் அறிந்து கொள்வோம். இது ஒரு நீண்டகால ஆராய்ச்சி. சில மாதங்கள் நீண்ட நேரம் அல்ல, ஆனால் நிச்சயமாக கோவிட்-19 பரவல் என்ற அவநம்பிக்கையான நேரத்தில், இது ஒரு நீண்ட நேரம் தான்.

உங்கள் நிறுவனம் மேற்கொண்டு வரும் கோவிட் -19 ஐ சுற்றியுள்ள வேறு சில பணிகள் யாவை?

தொகுப்பு மாதிரிகள் சோதனை ண்டுள்ள சில மையங்களில் நாங்கள் ஒன்றாகும். இதை தெலுங்கானா மாநிலத்தில் செய்கிறோம். சோதனை கருவிகளின் பற்றாக்குறை இருப்பதால், தொகுக்கப்பட்ட சோதனைக்கு பயன்படுத்தப்பட்டு வினைபொருளாக சேமிக்கிறது. இது நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது, அதிக எண்ணிக்கையிலான மக்களை சோதிக்க அனுமதிக்கிறது.

தொகுப்பு சோதனை ஒரு சிறிய எண்ணிக்கையிலான சோதனைகளைச் செய்வதன் மூலம் செயல்படுகிறது, இது மக்களுக்கு இடையே நடக்கிறது , இது அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு முடிவுகளை வழங்குகிறது. எனவே, எடுத்துக்காட்டாக, 100 சோதனைகள் செய்வதன் மூலம், 500 பேருக்கு முடிவுகளைப் பெறலாம். அந்த தொகுப்பில் சிலவற்றில் நேர்மறையான வழக்குகள் தோன்றினால், நாம் திரும்பிச் சென்று அந்த பகுதிகளுக்குள் மீண்டும் சோதிக்கலாம். இதை எப்படி செய்வது என்பது குறித்து ஒரு நெறிமுறையை உருவாக்கி அதை மற்ற சோதனை ஆய்வகங்களுடன் பகிர்ந்துள்ளோம்.

இது ஆன்டிபாடி சோதனைகள் அல்ல, ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் மூலம் மட்டுமே செய்யப்பட வேண்டும். ஆன்டிபாடி சோதனைக் கருவிகளை சுற்றியுள்ள சமீபத்திய சிக்கலுக்கு முன்பே, எந்தவொரு ஆன்டிபாடி பரிசோதனையையும் தெலுங்கானா அனுமதிக்கவில்லை.

ஆன்டிபாடி கருவி பிரச்சினையில், அதன் விலை நிர்ணயம் குறித்தும், அதன் தரம் குறித்தும் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன; அரசு இப்போது இரண்டு சீன நிறுவனங்களை தடை பட்டியலில் வைத்துள்ளது. ஆன்டிபாடி பரிசோதனையை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் என்ன?

ஆன்டிபாடி (நோயெதிர்ப்பு) சோதனை மூலம், நோய்த்தொற்றின் முதல் 8-10 நாட்களில் நோயெதிர்ப்பை நீங்கள் கண்டறிய இயலாது. அது தொற்று பரவும் நேரமாகும். ஆகவே, ஒரு நபர் ஆன்டிபாடிகளுக்கு முதல் வாரம் அல்லது 10 நாட்களில் நோய்த்தொற்றுக்கு பரிசோதிக்கப்பட்டால், அவற்றின் முடிவுகள் எதிர்மறையாக வரும்.அவர்களுக்கு தொற்று இல்லை என்ற தவறான எண்ணம் அவர்களுக்கு இருக்கும். எனவே ஆன்டிபாடி சோதனை என்பது, நோய்த்தொற்றின் பரவலை சரிபார்க்க உதவாது. எல்லா பரவல்களும் எங்கிருந்தன என்பதையும், ஒருவர் வைரஸை வெளிப்படுத்தியிருக்கிறாரா என்பதையும் கண்டறிய மட்டுமே இது உதவுகிறது. ஆன்டிபாடிகள் உள்ளவர்கள், வைரஸ் இல்லாதவர்கள், சில பகுதிகளில் யார் பணியில் ஈடுபடலாம், யார் மீண்டும் வேலைக்குச் செல்லலாம் என்ற தொற்றுநோயின் ஒட்டுமொத்த நிர்வாகத்தை தீர்மானிக்க இது உதவுகிறது.

[ஆசிரியரின் குறிப்பு: ஆன்டிபாடி சோதனைகள் ஒரு நபர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர் அல்லது மறுசீரமைப்பில் இருந்து பாதுகாக்கப்படுவார் என்பதை நிரூபிக்க எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது, மேலும் தனிநபர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல அனுமதிக்க “நோய்யெதிர்ப்பு சக்தி சான்றிதழ்களை” குறித்தும் எச்சரித்துள்ளது].

போதுமான நோயெதிர்ப்பு கருவிகள் இல்லாத சூழலில், ஒரு நாடு என்ற அடிப்படையில் நாம் என்ன பிரச்சினைகளை எதிர்கொள்வோம்?

ஆன்டிபாடி சோதனைகளில் நிறைய பலன்பளும் உள்ளன. ஐ.சி.எம்.ஆர் [இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்] சீனாவிலிருந்து தருவித்த சில கருவிகளை தடை செய்துள்ளது, ஆனால் தென் கொரிய கருவிகளும் [கூட] உள்ளன.இத்தருணமானது உள்நாட்டு கருவிகள் வருவதற்கான, பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் இடத்தையும் தருகிறது. சி.சி.எம்.பி.யில் வைரஸை வளர்த்து வருகிறோம், சில நிறுவனங்களின் உதவியுடன் கிட்களை உருவாக்கலாம். இந்த வைரஸின் கிட்டத்தட்ட அனைத்து புரதங்களையும் இப்போது நாம் வெளிப்படுத்த முடிகிறது, அவை அத்தகைய செரோலாஜிக்கல் அல்லது ஆன்டிபாடி அடிப்படையிலான கருவிகளை உருவாக்குவதற்கான சாத்தியமான பொருளாகும்.

சிசிஎம்பி-இல், எங்களால் வணிகம் செய்ய முடியாது, வெகுஜன அளவிலான உற்பத்தியை செய்ய முடியாது. ஆனால் ஆய்வின் ஆரம்ப ஆபத்தான வேலையை நாங்கள் செய்கிறோம். விஷயங்கள் உறுதிப்படுத்தப்பட்டவுடன், தனியார் நிறுவனங்கள் முன்வரலாம். அவை வணிகத்திற்கான நோக்கத்தைக் காண வேண்டும். இப்போது இந்த நெருக்கடியின் காரணமாக, நோக்கம் அதிகரித்துள்ளது. எங்களிடம் விரைவில் உள்நாட்டு கருவிகள் இருக்கலாம்.

(பூயான், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story