ஆரோக்கியமான உடற்குடல் இந்திய வாழ்க்கை முறை -நோய்களுக்கு எதிரான அரண் ஆவது எப்படி?
மவுண்ட் அபு (ராஜஸ்தான்): பதப்படுத்தப்பட்ட உணவு, மிகைப்படுத்தப்பட்ட சுற்றுப்புற சூழல் சுத்திகரிப்பு, நகர்ப்புற வாழ்க்கை முறை உள்ளிட்டவை நமது குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைத்து, இந்திய வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களை பறை சாற்றுகிறது என, அகில இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் இரைப்பை குடலிய துறை பேராசிரியரும், கிராமப்புற இந்தியாவின் ஆரோக்கியம் குறித்த இதழின் இணை ஆசிரியருமான வினித் அகுதா கூறுகிறார்.
நகர்ப்புற இந்தியர்களை விட குறைந்த வாழ்க்கைத்தரத்தில் வாழும் கிராமப்புற இந்தியர்கள், அதிக ஆரோக்கியத்துடன் வாழ்வதாக, இந்திய - பிரிட்டன் விஞ்ஞானிகளின் ஆய்வை மேற்கோள்காட்டி, நேச்சர் சயிண்டிபிக் ரிப்போர்ட்ஸ் இதழ் தெரிவிக்கிறது.
ஆரோக்கியமான குடல் மண்டலமானது, நோயெதிர்ப்பு திறனை அதிகரித்து, என்சைம்கள், வைட்டமின்கள் வாயிலாக, அத்தியாவசிய குடல் செயல்பாடுகளை காக்கிறது. நன்மை பயக்கும் பாக்டீரியாக்களால் உடலின் ரசாயன மற்றும் நச்சுத்தன்மை குறைகிறது; 90% வரை பல்வகை பாக்டீரியாக்கள், இதை பாதுகாக்கின்றன.
ஹரியானா மாநிலம் நகர்ப்புறமான பல்லா பர்க் மற்றும் கிராமப்புறத்தை சேர்ந்த லே பகுதியில், ஆரோக்கியமான மூன்று குழுக்களை விஞ்ஞானிகள் குழு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. ஆய்வில் நகர்ப்புறமயமாக்கல் பகுதிகளை இணைக்காவிட்டால், நாடு முழுவதும் உள்ள உணவு, வாழ்க்கை முறை மற்றும் நோயியல் விவரங்களை, அது பாதிக்கும்.
"சமமானவர்களிடம் இருந்து யார் முதலில் வர வேண்டும் என்பதை நாங்கள் பரிசோதிக்க விரும்பினோம்," என்று, 52 வயதான அஹுஜா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக, இக்குழுவினரின் குடலில் உறுதியான பாக்டீரியாக்கள் (62%) மற்றும் பாக்டீரியாடீஸ்கள் (24%), ஆக்டினோபாக்டீரியா (5.2%) மற்றும் புரோட்டோபாக்டீரியா (4.2%) எனப்படும் சிறிய அளவிலான கெட்ட பாக்டீரியாக்கள் இருந்தன. எனினும், இக்குழுவினரின் நுண்ணுயிரியங்களில் கணிசமான வேறுபாடுகளை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர், இதற்கு, அவர்கள் சார்ந்த பகுதி மற்றும் உணவு முறையே காரணம்.
"புவியியல் மற்றும் இனம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதே நிலப்பகுதி," என்று, அகுஜா தெரிவிக்கிறார்.
நகர்ப்புற மக்களுக்கு குறைவில்லாமல், கிராமப்புற மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ, உடல் சூழல், உணவு மற்றும் வாழ்க்கைமுறை ஆகியன ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரி பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகள் ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், நோயை குணப்படுத்துவதில் குடலில் காணப்படும் பாக்டீரியாக்களின் பங்களிப்பை புரிந்து கொள்ள இது வழிவகுத்துள்ளது.
"குடல் பாக்டீரியாக்கள், குடலை மட்டுமின்றி உடலின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கிறது. நாள்பட்ட நோய்களான நீரிழிவு, தமனி நோய் மற்றும் நரம்பியல் கோளாறுகள் போன்றவற்றின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கிறது” என்று.அஹுஜா கூறினார்.
இந்தியாவில் நீரிழிவு நோய் வேகமாக வளர்ந்து வருகிறது என்று, குளோபல் பர்டன் ஆப் டிஸீஸ் ரிப்போர்ட் -2016 அறிக்கையை மேற்கோள்காட்டி, இந்தியா ஸ்பெண்ட் 2017 செப்டம்பர் மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.
உலக நீரிழிவு நோயாளிகளில், இந்தியாவில், 49% பேர் உள்ளனர்; அதாவது, கடந்த 2017-ன் படி 72 மில்லியன் பேர் உள்ளனர். இந்தியாவில் இறப்புக்கு முக்கிய காரணமாக இருதய நோய் உள்ளது. 2016-ல் 1.7 மில்லியன் பேரின் உயிரை இது குடித்துள்ளதாக, அதே ஆய்வு தெரிவிக்கிறது.
“இதை புரிந்து கொண்டு ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறைக்கு மாற இது உதவும்” என்று கூறும் அஹுஜா, ”அனைத்து நோய்களுமே வயிற்றில் இருந்து தொடங்கும் என்று முன்னோர்கள் பரிந்துரைத்திருந்தனர்” என்கிறார்.
”அதை நாங்கள் முழுமையாக ஏற்கவில்லை; எனினும் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் மாறுபாடுடன் பெரும்பாலான நோய்களுக்கான காரணிகளுக்கு தொடர்புள்ளதை குடலியக்கம் தொடர்பான ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன என்றார்.
அஹுஜா நமக்கு அளித்த பேட்டி:
தொற்று நோயில் இருந்து தொற்றா நோய் குறித்து உங்களின் ஆய்வு குறிப்புகள் உள்ளன. நோய் தொற்று மாற்றத்தை ஏற்படுத்துவதில் குடல் பாக்டீரியாக்களின் பங்கு என்ன?
பொதுவாக, தொற்றாத நோயின் தொடக்கம் என்பது, ஒரு மரபணு முன்கணிப்பு எனலாம். இது, அதிவேகமான நோயெதிர்ப்பு, உடல் மற்றும் சுற்றுச்சூழலை உள்ளடக்கியது. உங்கள் குடல் நுண்ணுயிரிகளின் தரம், நீங்கள் உட்கொள்ளும் உணவு, வாழும் உடல் சூழலையும் சார்ந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவானது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் பரவலுக்கோ, அல்லது நல்ல சூழலில் வாழவோ உதவாது. உடலின் நோயெதிர்ப்பு சூழல் அமைய, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உதவுகின்றன. பால்பார்க் கிராமப்புறவாசிகள் தங்களின் நகர்ப்புற மக்களைவிட நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதாக கருதுகிறோம்.
இந்தியாவில், மேற்கத்திய உணவுப்பழக்கம் மற்றும் நகர்ப்புறமயமாக்கலுடன் தொடர்புடைய வாழ்க்கைமுறை அதிகரித்து வருகிறது இது குடல் நுண்ணுயிரிகளின் மாற்றங்கள் மற்றும் தொற்றா நோய்களின் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாகும்.
குடல் பாக்டீரியாக்களை எப்படி உணவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது? சிறந்த உணவு என்று உங்கள் ஆய்வு எதை கூறுகிறது? ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களை பராமரிக்க, எவ்வகையான உணவு முறை சிறந்தது?
பல்வேறு வகையான உணவுகள், நுண்ணுயிரிகளின் வெவ்வேறு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எங்கள் ஆய்வில் ஒரு எடுத்துக்காட்டு: லே பகுதியில் பால் பொருட்களை தவிர்த்து வந்த ஒருவரின் குடலில், பால் பொருளோடு தொடர்புடைய கெட்ட பாக்டீரியாவின் எண்ணிக்கை குறையவில்லை என்பது தெரிய வந்தது.
தனிப்பட்ட நபரின் தேர்வாக இருந்த சமையல் எண்ணெய்க்கும், குடல் பாக்டீரியாவுக்கும் தொடர்பு இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். ரோஸ்ர்பீயா என்பது ஒரு வகையான பாதுகாப்பு பாக்டீரியா, சூரியகாந்தி எண்ணெயை நுகரும் நபர்களில் மிக அதிகமான அளவு இருந்தது. ஒரு குறிப்பிட்ட வகையான உணவு, ரோபர்பூரியா போன்ற சிலவகை பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக என்பதை என் விளக்கத்துடன் இணைத்திருக்கிறேன். குடலில் உள்ள பாக்டீரியாக்கள், நிறைவற்ற கொழுப்பு அமிலங்கள் (PUFA)ம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. நெய் உட்கொள்ளுவோரின் குடலில் கொலின்செல்லா பாக்டீரியா இருப்பதை கண்டுபிடித்தோம். இதில் சுவாரஸ்யமானது, கொலின்செல்லா முன்பு, அதிக கொழுப்பு அறிகுறிகளுடைய ஆத்தோஸ்லோக்ரோஸிஸ் உடன் இணைக்கப்பட்டிருந்தது என்பதாகும். லே பகுதியினர் சூரியகாந்தியை எண்ணெய்யையும், பல்லாபார்க் பகுதியினர் கடுகு எண்ணெய், சோயா எண்ணெய், நெய்யை பயன்படுத்துவது எமது ஆய்வில் தெரிய வந்தது.
அசைவ உணவு முறையால், குடலில் எந்தவொரு பாதகமான விளைவுகளையும் நாங்கள் கண்டறியவில்லை. உண்மையில் அசைவ உணவு முறை கொண்ட தனிநபரிடம் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதை கண்டுபிடித்தோம். சுவாரஸ்யமான விஷயம், மரபணு ரீதியாகவும், பாரம்பரியமாகவும் நார் நிறைந்த சைவ உணவை கொண்டிருப்பவர்களுடன், இது தொடர்பு கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. லே பகுதியினர் உடலிலும் புரோட்டோ பாக்டீரியா எனப்படும் கெட்ட பாக்டீரியா குறைவாகவும், நன்மை தரும் பெகலிபாக்டீரியாவும், அழற்சியை ஏற்படுத்தும் லுக்னோஸ்பிரெயேசி அதிகளவும் இருந்தது.
பதப்படுத்தப்பட்ட உணவு, குடலில் நல்ல பாக்டீரியா பரவுவதற்கு உதவாது என்பது பொதுவான விதி. நகர்ப்புறமயமாக்கலும், இந்திய நகரங்களில் மேற்கத்திய உணவு வகைகள் ஏற்படுத்தும் தாக்கங்களும் அழற்சி போன்றவற்றுக்கு காரணமாகும். சைவ உணவு, நல்ல பாக்டீரியாவை உண்டாக்குவதாக கருதப்படுகிறது.
நான் கூறுவது என்னவென்றால், எங்கள் ஆய்வு 84 என்ற அளவிலான ஒரு சிறிய மாதிரி ஆய்வாகும். உணவு மற்றும் குடல் தொடர்பான நன்கு புரிந்து கொள்ள பெரிய அளவிலான ஆய்வு நமக்கு தேவைப்படுகிறது.
இந்தியர்களின் குடல்களில், கிராம் எனப்படும் நேர்மறை பாக்டீரியா (உறுதியானது) மிக அதிகமாக இருப்பது இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாகும் என, பரீதாபாத் டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கழகத்தில் இணை ஆசிரியராக உள்ள டாக்டர் பாபாதோஷ் தாஸின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேற்கு பகுதியினரின் குடல்களில் அதிக வளரக்கூடியது, பாக்டிராய்டுகள் ஆகும்.
குடல் நுண்ணுயிரியலில் ஏற்படும் மாற்றம் மனிதர்களின் நோய்களுக்கு ஏன் காரணமாகிறது? நுண்ணுயிரியை குணப்படுத்த முடியாவிட்டால் என்ன நோய்களை எதிர்கொள்ள நேரிடும்?
கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மருத்துவ ஆராய்ச்சிகள், மனித உடலை பற்றிய புரிதலை நமக்க்கு மேலும் விரிவாக்கியுள்ளது. உடலானது, ஒரு சூப்பர் ஆர்கனிசமாக உள்ளதை தற்போது நாம் அறிவோம். ஒவ்வொரு மனிதனின் உயிரணுவும், நம் குடலில் வாழும் ஒன்பது பாக்டீரியா செல்களை உருவாக்குகிறது. நோய்களுக்கும், குடல் பாக்டீரியாக்களுக்கும் இடையே உள்ள ஒருங்கிணைப்பை எப்படி பார்க்க வேண்டும் என்ற புதிய கருத்தை இது ஏற்படுத்தியுள்ளது. குடல் அல்லது குடல் நோய்களுக்கு அங்குள்ள பாக்டீரியாக்களே காரணம் என்ற எண்ணம் இருந்து வந்துள்ளது. ஆனால், விழி வெண்படலம் (ஒரு நரம்பியல் நோய்) அல்லது நீரழிவு (எண்டோகிரைன் அமைப்பின் சீர்குலைவு) போன்றவற்றுக்கும், குடல் பாக்டீரியாக்களுக்கும் வெளிப்படையான தொடர்பு இல்லை என்பதை நாம் இப்போது அறிவோம்.
குடல் பாக்டீரியாக்களினால் ஏற்படும் நோய் என்பது, டைஸ்பியாசிஸ் அதாவது நுண்ணுயிர் சமநிலையின்மையை சார்ந்தது. எப்படியானாலும் நாள் பட்ட நோய்களுக்கு முன்னமே தொற்று அல்லாத அழற்சி குடல் நோய், கல்லீரல் கொழுப்பு, உடல் பருமன், வளர்ச்சிதை மாற்றம், நரம்பு மண்டல நோய்கள், இதய நோய், முடக்கு வாதம் மற்றும் உளவியல் சீர்கேடுகள் போன்றவை ஒரு நபருக்கு ஏற்படலாம்.
கடல் மட்டத்துக்கு இணையாக இருக்கும் பாலபார்க்கின் கிராமப்புற பகுதிகளில் வசிப்போரது குடல்களின் பாக்டீரியாக்களில் அதிக வேறுபாடுகளை காண முடிகிறது. இத்தகைய பாக்டீரியா வேறுபாடு ஏன் முக்கியமானது? லே பகுதி மக்களிடையே குடல் பாக்டீரியாக்களிடையே உள்ளார்ந்த வேறுபாடு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது நமக்கு என்ன சொல்கிறது?
குடல் பாக்டீரியாக்கள் ஜீரணத்திற்கு உதவுவதில்லை. நொதிகள், வைட்டமின்கள், நரம்பியக்கடத்திகள், போலிக் அமிலம் மற்றும் சங்கிலித்தொடர் கொழுப்பு அமிலங்கள் போன்ற பிற வளர்சிதை மாற்றங்களை, இந்த பாக்டீரியாக்கள் உருவாக்குகின்றன.இது ஆரோக்கியத்திற்கு உதவும்; நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும். இந்த பாக்டீரியாக்கள், உடலில் பித்தப்பை உப்புக்கள், குடல் நோய்க்குறிகள் (நோய் விளைவிக்கும் பாக்டீரியாக்கள்) மற்றும் உடலில் உள்ள அமில பொருட்களின் நச்சுத்தன்மையை குறைக்கின்றன. மேலும் பலவற்றை செய்கின்றன. விஷயம் குடல் பாக்டீரியாவின் வெவ்வேறு குடும்பங்கள் பல்வேறு செயல்பாடுகளை புரிகின்றன. எனவே, அதிக மாறுபட்ட, உயரிய மரபணு உடைய பாக்டீரியாக்களுக்கு உகந்த சூழல் உள்ளது. அதனால் பாக்டீரியாக்களால் நடக்கும் அத்தியாவசிய செயல்பாடு வெளியேறவில்லை.
லே பகுதியினரின் மாதிரி பாக்டீரியாக்களில் அதிக ஒத்திசைவு போக்கு, அந்த பகுதிக்கு இடம் பெயர்ந்தவர்கள் இடையே குறைவாக இருப்பதை காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் (அல்லது மிக தனிமைப்படுத்தப்பட்டவர்கள்) ஒத்திசைவான குடல் சூழலை கொண்டுள்ளனர்.புதியதாக இடம் பெயருவோர், அச்சமுதாயத்தில் புதிய பாக்டீரியாக்களை அறிமுகப்படுத்துகின்றனர். இக்காரணத்திற்காக லே பகுதி தற்செயலாக ஆய்வுகு தேர்வு செய்யப்பட்டது. இந்திய முக்கிய நகரங்களில் உள்ளவர்களை பாதிக்கும், உடல் தாங்குதிறன் சீர்குலைவு மற்றும் அழற்சி தடுப்பு சீர்குலைவில் இருந்து, இது பாதுகாக்கப்பட்டுள்ளது.
மலக்குடல் பாக்டீரியா மாற்றுவது என்பது குடல் அழற்சி நோய்க்கான ஒப்பீட்டளவில் புதிய சிகிச்சையாகும். நோயாளியின் உடலில் முழு குடல் சூழலை அறிமுகப்படுத்துவதால், அவருக்கு உதவவோ அல்லது ஒரு ஆரோக்கியமான குடலை மீண்டும் பெற உதவுகிறது. எனவே, இது புரோபயாடிக்குகளை நிர்வகிப்பதில் இருந்து வேறுபட்டிருக்கும்; அல்லது நல்ல பாக்டீரியாவாக இருக்கும். உறுப்பு மாற்றுமுறை என்பது கொடை அளிப்பவரின் கழிவு, உப்பு கரைசலை பெற்று வடிகட்டி, கோலோனோஸ்கோபி, எண்டோஸ்கோபி, சிக்மயோடோஸ்கோபி அல்லது எனிமா மூலம் நோயாளிடம் வைக்க வேண்டும். மேலை நாடுகளில் மலக்குடல் மாற்று அறுவை சிகிச்சையானது தொற்று நோயாளிகளுக்கு பாதுகாப்பு தரமாக உருவாகியுள்ளது ; மற்றும் நோயாளிகளுக்கான நாவல் சிகிச்சையாக உள்ளது. இந்த சிகிச்சை முறை இந்தியாவில் மேற்கொள்ளப்படும் வகையில் இருப்பின், உங்கள் கண்டுபிடிப்புகளின் தாக்கம் என்னவாக இருக்கும்?
இந்தியாவில், சிக்கலான பாக்டீரியாவுடன் க்ளாஸ்டிரீடியம் தொற்றுநோய் ஒப்பீட்டளவில் அசாதாரணமானது. வாழ்க்கை முறை மாறும் வேகத்திற்கேற்ப அதன் நிகழ்வு அமையும். தற்செயலாக இந்தியாவில் குடல் அழற்சி நோய் பொதுவாக உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கையின்படி நாம் கணித்தால், உலகில் அதிகளவு நோயாளிகளை இந்தியா கொண்டிருக்கும். கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து தனிச்சிறப்பு கொண்ட பாக்டீரியாக்கள் மாற்று சிகிச்சையை தொடங்கியுள்ளோம். வழக்கமான சிகிச்சைக்கு பலன் கிடைக்காத 10 குடல் அழற்சி நோயாளிகளில் ஒருவருக்கு இதை செய்யலாம். சிறப்புமிக்க பாக்டீரியா மாற்று சிகிச்சை முறையில் இருந்து எங்கள் நோயாளிகள் இதை ஏற்றுக் கொண்டது எங்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. நோயாளிகளின் துணை அல்லது உறவினர்களிடம் இருந்து அறுவை சிகிச்சைக்கான குடல் பாக்டீரியாக்களை நாங்கள் பெற்று பயன்படுத்தினோம். பொதுவாக அவர்களின் குடல் பாக்டீரியாக்கள், நோயாளிகளுக்கு ஒத்திசைந்து இருந்தது. இது சிகிச்சையின் வெற்றிக்கு இடையூறாக அமைந்தது. எனவே, வெளி நன்கொடையாளர்களிடம் இருந்து அவற்றை பெறும் முறைக்கு நாங்கள் மாறினோம். இந்திய கிராமப்புறத்தில் உள்ள ஆரோக்கியமானவர்கள், இந்த சிகிச்சைக்கு சிறந்த நன்கொடையாளர்கள் என்று எங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளோம்.
(பஹ்ரி, எழுத்தாளர் மற்றும் ராஜஸ்தானின் மவுண்ட் அபுவை சேர்ந்த பத்திரிகை ஆசிரியர்.)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.